clone demo
ஆதிசேஷன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதிசேஷன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 27, 2013

உலகைத் தாங்கு ஆதிசேஷா! | ஆதிபர்வம் - பகுதி 36

Bear the earth Adisesha! | Adi Parva - Section 36 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 24)

பதிவின் சுருக்கம் : தாயை விட்டுப் பிரிந்து கடுமையான தவமியற்றிய சேஷன்; சேஷன், பிரம்மன் உரையாடல்; உலகைச் சுமக்கப் பணிக்கப்பட்ட சேஷன்...

உலகைத் தாங்கும் ஆதிசேஷன்
சௌனகர், "ஓ குழந்தாய் {சௌதியே}, பெரும் சக்தியுடனும், எளிதில் வெல்லப்பட முடியாதவர்களுமாக வரம் அருளப்பட்ட, பல பாம்புகளின் பெயர்களைக் குறிப்பிட்டாய். {கத்ரு தந்த} அந்தச் சாபத்தைக் கேட்ட பிறகு அவர்கள் என்ன செய்தார்கள்?" என்று கேட்டார்.

"சௌதி சொன்னார், "அவர்களில் புகழ் வாய்ந்த, சிறப்பு மிக்கச் சேஷன், தனது தாயை விட்டுக் கடுமையான விரதங்களை நோற்றுக் காற்றை மட்டும் உண்டு, கடுந்தவம் செய்தான். அவனது ஆன்ம வழிபாடுகளைக் கந்தமாதன மலையிலும், பதரி, கோகர்ண மலைகளிலும், புஷ்கர வனத்திலேயும், இமாலய மலையின் அடிவாரத்திலேயும் மேற்கொண்டான்.

அவன் {சேஷன்} தனது காலத்தை அந்தப் புனிதமான இடங்களிலேயே உறுதியாக விரதங்களை நோற்றுக் கழித்தான். சில இடங்கள் தனது நீருக்காகவும், சில இடங்கள் தனது மண்ணுக்காகவும் புனிதத்தன்மை வாய்ந்ததாகவும் இருந்தன. அந்த இடங்களில் ஒரே குறிக்கோளுடன், தனது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கடும் தவம் இருந்தான். தலையில் சடை தரித்தவனும், கந்தல்துணியை உடுத்தியவனும், கடுந்தவம் பயின்றதால் தனது சதைகளும், தோலும், சதை நார்களும் வற்றிப் போய் இருந்தவனுமான அந்தத் துறவியை {சேஷனை}, எல்லோருக்கும் பெருந்தகப்பனான பிரம்மன் கண்டான். பெருந்தகப்பன் {பிரம்மன்}, தவம் பயிலும் பெரும் உறுதி கொண்ட அவனிடம் {சேஷனிடம்}, "ஓ சேஷா, நீ என்ன இன்னலைச் செய்து கொண்டிருக்கிறாய் [1]? உலகங்களில் வாழும் மற்ற உயிர்களின் நன்மையும் உனது எண்ணத்தில் இருக்கட்டும். ஓ பாவங்களற்றவனே, உனது கடுந்தவத்தால் நீ மற்ற உயிரினங்களை வருத்திக் கொண்டிருக்கிறாய். ஓ சேஷா, உனது இதயத்தில் குடிகொண்டிருக்கும் விருப்பத்தை என்னிடம் சொல்வாயாக" என்றான் {பிரம்மன்}.

[1] மனதில் குறிக்கோள் கொண்டு யாராவது தொடர்ந்து தவம் செய்தால் அதனால் மூவுலகத்தினரும் இன்னலை அடைவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் வேண்டும் வரம் தந்து தெய்வங்கள் அவர்களைத் திருப்தி செய்ய வேண்டும். தவத்திற்கு அவ்வளவு சக்தி உண்டு.

அதற்குச் சேஷன், "என்னுடன் கருவில் பிறந்தவர்கள் {மற்ற பாம்புகள்} அனைவரும் இதயத்தால் தீயவர்களாக இருக்கிறார்கள். நான் அவர்களுடன் வாழ விரும்பவில்லை. இஃது உம்மால் அங்கீகரிக்கப்படட்டும். பகைவர்களைப் போல், ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டுள்ளனர். அதனால், நான் தவத்துறவுகளில் ஈடுபட வந்துவிட்டேன். நான் அவர்களைப் பார்க்க கூட மாட்டேன். வினதையிடமும், அவளது மகனிடமும் {கருடனிடமும்} அவர்கள் அன்புடன் இருப்பதில்லை. விண்ணை அதிகாரம் செய்யும் வல்லமை பெற்றிருக்கும் வினதையின் மைந்தன் {கருடன்} எங்களுக்கு மற்றுமொரு சகோதரனே. அவனை எப்போதும் பகைக்கிறார்கள். எங்கள் தந்தை உயரான்ம கசியபரின் வரத்தால், அவன் {கருடன்} பெரும் பலத்துடன் இருக்கிறான். அடுத்தப் பிறவியிலும் எனக்கு அவர்கள் உறவு இல்லாதபடி தவம் செய்து நான் என் உடலை விடப்போகிறேன்" என்றான். {சேஷன்}

அப்படிச் சொன்ன சேஷனிடம் பெருந்தகப்பன், "ஓ சேஷா, உன் சகோதரர்களின் நடத்தையையும், தங்கள் தாயை {கத்ருவை} மறுத்துப் பேசியதால் அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தையும் நான் அறிவேன். ஆனால் அதற்கு முன்பே, ஓ பாம்பே {சேஷனே}, (அதற்கான) பரிகாரத்தை நான் கொடுத்திருக்கிறேன். அதனால் நீ உனது சகோதரர்களைக் குறித்து வருந்தாதே. ஓ சேஷா, நீ விரும்பும் வரத்தைக் கேள். நான் உன்னால் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். ஆகையால் இன்று உனக்கு ஒரு வரம் தருகிறேன். ஓ பாம்புகளில் சிறந்தவனே {சேஷனே}, உனது மனம் அறத்தில் நிலைத்திருப்பது நல்லதே. உனது மனம் மேலும், மேலும் அறம் சார்ந்தே இருக்கட்டும்" என்றான். {பிரம்மன்}.

"சேஷன், "ஓ தெய்வீகமானவரே, பெருந்தகப்பனே, ஓ அனைவருக்கும் தேவனே. எனது இதயம் எப்போதும் அறத்திலும், அருள் நிறைந்த ஆன்ம தவத்திலும் இன்பம் அடையட்டும். இவ்வரத்தையே நான் விரும்புகிறேன்" என்று கேட்டான். {சேஷன்}

"பிரம்மன், "ஓ சேஷா, உனது தன்னலமற்ற தன்மையையும், அமைதிக்கான விருப்பத்தையும் அறிந்து நான் பெருமகிழ்வு கொள்கிறேன். ஆனால் என்னுடைய ஆணைக்கிணங்க, என் படைப்புகளின் நன்மைக்காக நீ இந்தச் செயலை செய்யவேண்டும். இதுமுதல், ஓ சேஷா, மலைகளுடனும், கானகங்களுடனும், கடல்களுடனும், நகரங்களுடனும், தோட்டங்களுடனும் இருக்கும் இந்த உறுதியற்ற பூமியை, சரியாகவும் சிறப்பாகவும் தாங்கிக் கொள்வாயாக. அதனால் அவள் {பூமாதேவி} உறுதியுடன் இருப்பாள்" என்றான் {பிரம்மன்}.

"சேஷன், "ஓ அனைத்து உயிர்களுக்கும், பூமிக்கும், படைக்கப்பட்ட அனைத்து பொருள்களுக்கும், அண்டத்திற்கும் தேவனே, அனைத்து வரங்களையும் அளிப்பவரே, நீர் சொல்வது போலவே, நான் இந்தப் பூமியை உறுதியாகத் தாங்கிக் கொள்வேன். அதனால் ஓ அனைத்து உயிர்களுக்கும் தலைவரே, அவளை {பூமியை} என் தலையில் வையும்" என்றான். {சேஷன்}

"பிரம்மன், "ஓ பாம்புகளில் சிறந்தவனே {சேஷா}, பூமிக்கடியில் செல்வாயாக, நீ உள்ளே கடந்து செல்வதற்காக அவளே தன்னுள் பிளவு ஏற்படுத்தி வழி தருவாள். ஓ சேஷா, நீ பூமியைத் தாங்கி, என்னால் பெரிதும் மதிக்கப்படும் செயலைச் செய்வாயாக" என்றான். {பிரம்மன்}

சௌதி தொடர்ந்தார், "பாம்புகள் மன்னனின் {வாசுகியின்} அண்ணன் {சேஷன்}, ஒரு பொந்துக்குள் புகுந்து, பூமியின் மறுபுறம் சென்று, அவளை, எங்கும் பரவியிருந்த கடல் என்னும் கச்சையுடன் சேர்த்து, தனது தலையால் முட்டுக் கொடுத்துத் தாங்கினான்"

பிரம்மன், "ஓ சேஷா, ஓ பாம்புகளில் சிறந்தவனே, நீயே தர்ம தேவன், ஏனெனில், என்னை அல்லது வாலவிட்டைப் (இந்திரன்) [2] போலத் தனியாளாக, உன் பெரும் உடலுடன், இந்தப் பூமியை அதன் எல்லாப் பொருளுடனும் சேர்த்துத் தாங்குகிறாய்" என்றான்.

[2] வலவிட் Valavit என்று ஒரு பெயர் இருப்பதாகத் தெரியவில்லை. Mighty என்னும் பொருள்படப் பலவத் என்ற பெயர் உள்ளது. இஃது அச்சுப்பிழையாக இருக்க வேண்டும்.

"சௌதி தொடர்ந்தார், "அந்தப் பாம்பு, சேஷன், தேவன் ஆனந்தன், அந்தப் பெரும் ஆற்றல்மிக்கவன், பிரம்மனின் கட்டளையால், அன்று முதல் பூமிக்கடியில் தனியாக உலகத்தைத் தாங்கிக் கொண்டு நிற்கிறான். அந்தப் புகழ்மிக்கப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, இறவாதவர்களில் சிறந்தவன், ஆனந்தனின் {சேஷனின்} உதவிக்காக அழகான இறகுகள் கொண்ட வினதையின் மைந்தனை {கருடனை} நியமித்தான்" {என்றார் சௌதி}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திர்கதமஸ் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 
Creative Commons License
முழுமஹாபாரதம் by முழுமஹாபாரதம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
Based on a work at http://mahabharatham.arasan.info.
Permissions beyond the scope of this license may be available at http://mahabharatham.arasan.info.
mahabharatham.arasan.info. Blogger இயக்குவது.
Back To Top