clone demo
சபா பர்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சபா பர்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 11, 2014

ஆடியோ கோப்பு - சபா பர்வம் பகுதி 13 -14

சபா பர்வம் பகுதி 13 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அனைவரையும் தனது குடும்பத்தில் ஒருவரைப் போலப் பாதுகாத்தான். பீமன் அனைவரையும் நீதியுடன் ஆண்டான். அர்ஜுனன் தனது இரு கரங்களையும் பயன்படுத்தி, மக்களை (வெளிப்புற/வெளிநாட்டு) எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தான். ஞானம் கொண்ட சகாதேவன் நடுநிலையாக {பாரபட்சம் இல்லாமல்} நீதியுடன் நிர்வாகம் செய்தான். நகுலன் அனைவரிடமும் பணிவான தனது இயற்கை குணத்துடன் நடந்து கொண்டான். மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும்  கலகங்களிலும், அனைத்துவிதமான பயங்களில் இருந்தும் நாடு விடுபட்டது. அனைத்து மக்களும் தங்களுக்குரிய தொழிலில் கவனம் செலுத்தினர். மேலும் வேண்டும் என்று விரும்பாத அளவுக்கு மழை நிறைந்திருந்தது. நாடும் வளமையில் வளர்ந்தது. மன்னனின் அற ஒழுக்கத்தால், கடன் கொடுப்பவர்களும்,  வேள்விக்குத் தேவையான பொருட்களும், கால்நடை வளர்த்தலும், உழுதலும், வணிகமுமான அனைத்துத் தொழில்களும் வளம் பெற்றன. உண்மையில், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் ஆட்சிகாலத்தில், அச்சுறுத்திப் பணம் பறித்தலோ, வாடகை பாக்கிக்காகத் துன்புறுத்துதலோ, நோய், நெருப்பு, விஷம் அல்லது மந்திரத்தால் உண்டாகும் மரணத்தைக் குறித்த பயமோ, அந்த நாட்டில் இல்லாதிருந்தது. திருடர்களோ, ஏமாற்றுப் பேர்வழிகளோ, அரசுகுல நண்பர்கள் மன்னிடமோ அல்லது தங்களுக்குள்ளோ தவறாக நடந்து கொண்டார்கள் என்று, யாரும் எப்போதும் கேள்விப்படவில்லை. - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section13.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க சபா பர்வம் பகுதி 14அ - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: இருப்பினும், தற்போது, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, மன்னன் ஜராசந்தன், அவர்கள் அனைவரையும் விட வளமையில் அதிகரித்தும், பலத்தில் அதிகரித்தும், அனைத்து மன்னர்களுக்கும் தலைவனாகத் தன்னை நிறுவிக் கொண்டான். மேலும் ஜராசந்தன் பூமியின் மத்தியப் பகுதியை {மதுராவை} ஆட்சி செய்து நமக்குள் ஒற்றுமையின்மையைத் தோற்றுவிக்கிறான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அந்த மன்னன் {ஜராசந்தன்}, மன்னர்களில் உயர்ந்த மன்னாக இருந்து, இந்த அண்டத்தின் ஆட்சியே அவனை மையப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அவன் {ஜராசந்தன்} மாமன்னன் {சக்கரவர்த்தி} என்று அழைக்கப்படக்கூடிய தகுதியுடன் இருக்கிறான். மேலும், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி படைத்த மன்னன் சிசுபாலன் {Sisupala}, அவனது {ஜராசந்தனின்} பாதுகாப்புக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு, அவனது {ஜராசந்தனது} படைகளுக்குத் தளபதியாகச் செயல்படுகிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section14.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க 


சபா பர்வம் பகுதி 14ஆ - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்களது பெரும் செல்வத்தைப் பிரித்து, சிறு சிறு பகுதிகளாக்கி, ஒவ்வொரு பகுதியையும் எளிதாக சுமந்து செல்லும்படியாக்கி, ஜராசந்தனுக்குப் பயந்து மதுராவை விட்டு எங்கள் மைத்துனர்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு ஓடினோம். அனைத்தையும் சிந்தித்து நாங்கள் மேற்கு நோக்கி ஓடினோம்.

மேற்கில் ரைவத மலைகளால் அலகங்கரிக்கப்பட்டிருந்த குசஸ்தலி {Kusasthali} என்ற அழகான நகரத்தை அடைந்தோம். அந்த நகரத்தில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டோம். நாங்கள் அதன் கோட்டைகளை தேவர்களும் புகமுடியாதபடி மறுபடி கட்டினோம். அதன் உள் இருந்து பெண்கள் கூட சண்டையிடமுடியும் எனும் போது, அச்சமற்ற யாதவ வீரர்கள் எப்படிப் போரிடுவார்கள்? ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் இப்போது அந்த நகரத்தில்தான் வாழ்கிறோம். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section14b.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

வெள்ளி, ஆகஸ்ட் 22, 2014

ஆடியோ கோப்பு - சபா பர்வம் பகுதி 10 -12

சபா பர்வம் பகுதி 10 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: மேலும், ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரா}, உமையின் சிறப்புவாய்ந்த கணவனும் , படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் தலைவனுமான திரிசூலத்தைத் தாங்கி பாகநேத்ரன் என்ற அசுரனைக் கொன்றவனும், கடுமையான வில்லைக் கொண்ட வலிமை மிக்க தெய்வமுமான முக்கண் மகாதேவன் {சிவன்}, குள்ளமான உருவம் கொண்டவையாக சிலவும், கடுமையான முகம் கொண்டவையாக சிலவும், கூன் முதுகு கொண்டவையாக சிலவும், சிவந்த கண்கள் கொண்டவையாக சிலவும், பயங்கர ஓலமிடும் சிலவும், கொழுப்பையும் சதையையும் {இறைச்சியையும்} உண்ணும் சிலவும், காண்பதற்கு பயங்கரமான சிலவும் என நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆவிகளால் சூழப்பட்டு, பலவகையான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, காற்றின் {வாயு} வேகம் கொண்டு, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண் தெய்வத்துடன் {பார்வதியுடன்}, களைப்பறியாது, அங்கே தனது நண்பனான கருவூலத் தலைவன் குபேரனுக்காகக் காத்திருக்கிறான்.

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க சபா பர்வம் பகுதி 11 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த சபை விவரிக்க இயலாதது. நாம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அது வேறு உருவை எடுக்கும். அதை வார்த்தைகளால் விவரிப்பது முடியாதது. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அதன் நீள அகலங்களையும், உருவத்தைக் குறித்துச் சொல்வதும் இயலாது. நான் அதுபோன்ற ஒன்றை என்றும் கண்டதில்லை. அதற்குள் இருப்பவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பர். அங்கே குளிரும் இல்லாமல், வெப்பமும் இல்லாமல் ரம்மியமான சூழ்நிலை இருக்கும். பசி, தாகம், களைப்பு ஆகியவை அங்கு சென்றாலே காணாமல் போய்விடும். அந்தச் சபை பலவகைப்பட்ட பிரகாசமான ரத்தினங்களால் ஆனது. அது தூண்களால் தாங்கப்படுவதாகத் தெரியவில்லை. அது அழிவற்ற நிலைத்த தன்மை கொண்டது. அந்த சுய ஒளி கொண்ட மாளிகை, தனது பல எண்ணற்ற பிரகாசிக்கும் தன்மைகளாலும், ஒப்பற்ற பிரகாசம் கொண்ட தெய்வீகத்தன்மையாலும் சந்திரன், சூரியன், மற்றும் நெருப்பையே விஞ்சி நிற்கிறது. விண்ணுலகில் நிலைத்து, பகலை உண்டாக்குபவன் {சூரியனைப்} போல எரிந்து கொண்டிருக்கிறது. அந்த மாளிகையில் ஓ மன்னா, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெருந்தகப்பன், மாயையினால் தன்னை உருவாக்கிக் கொண்டு அனைத்தையும் உருவாக்கி அங்கே நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்.

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க 


சபா பர்வம் பகுதி 12 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உனது தந்தையின் {பாண்டுவின்} விருப்பத்தை நிறைவேற்று. நீ அந்த வேள்வியைச் செய்தாயானால், நீயும் உனது இறந்த முன்னோர்களுடன் சேர்ந்து இறவாதவர்கள் தலைவனின் {இந்திரனின்} பகுதியில் மகிழ்ச்சியுடன் இருப்பாய். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் தடைகளுக்குப் பிறகே அந்த வேள்வியைச் செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. ஒரு வகை ராட்சசர்களான பிரம்ம ராட்சசர்கள் என்போர், இது போன்ற வேள்விகளைத் தடைசெய்ய எப்போதும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து, அந்தப் பெரும் வேள்வியில் ஏதாவது குறையைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அது போன்ற ஒரு வேள்வியை நடத்துவதால் பெரும் போர் ஏற்பட்டு க்ஷத்திரிய குலமே உலகத்திலிருந்து அழியும் நிலை ஏற்படலாம். ஒரு சின்ன தடை கூட உலகத்தைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும். இதையெல்லாம் சிந்தித்து, ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, உனது நன்மைக்கான செயலைச் செய்.

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

ஞாயிறு, ஆகஸ்ட் 10, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 8 & 9

சபா பர்வம் பகுதி 8 | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: அந்தச் சபா மண்டபத்தில், துக்கமோ, வயதால் ஏற்படும் பலவீனமோ, தாகமோ, பசியோ ஏற்படாது. ஏற்றுக் கொள்ள முடியாத எந்தப் பொருளுக்கும் அங்கே இடம் கிடையாது. எந்த வகையான தீய உணர்வுகளும் அங்கே எழாது. தேவர்களாலும், மனிதர்களாலும் விரும்பப்படும் அனைத்துப் பொருட்களும் அந்த மாளிகையில் உள்ளன. ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரனே}, இனிப்பான, நீர்த்தன்மையுள்ள, ஏற்புடைய, நக்கி, உறிஞ்சி, குடிக்கக்கூடிய ருசியான உணவு வகைகளும், சுவை மிகுந்த இன்பத்துக்குகந்த அனைத்துப் பொருட்களும் அபரிமிதமாக அங்கே இருக்கின்றன. அந்த மாளிகையை அலங்கரிக்கும் மலர் மாலைகளின் நறுமணம் அலாதியானது. அங்கே அந்த மண்டபத்தைச் சுற்றி நிற்கும் மரங்கள் விரும்பும் கனியைக் கொடுக்கவல்லவை. அங்கே இனிமையான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க குளிர்ந்த மற்றும் வெப்ப நீர்கள் உள்ளன. அந்த மாளிகையில் புனிதம் மிகுந்த அரச முனிகளும், தூய்மை மிகுந்த பிரம்ம முனிவர்களும் மகிழ்ச்சியுடன் காத்திருந்து, விவஸ்வத்தின் மகனான யமனை வழிபடுகின்றனர். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section8.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காணமேற்க்கண்ட வீடியோ கோப்பில் சபாபர்வப் பகுதியின் எண் தவறாக இருக்கிறது. இருப்பினும் அதில் உள்ள ஒலிப்பதிவு பகுதி 8 தான்.

எம.பி.3-ஆக பதிவிறக்கசபா பர்வம் பகுதி 9 | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: வருணனின் தெய்வீக சபை பிரகாசத்தில் இணையற்றதாக உள்ளது. அது நீள அகலங்களில் யம சபையைப் போன்றே உள்ளது. அதன் சுவர்களும், வளைவுகளும் தூய வெள்ளை நிறத்தில் உள்ளன. அது விஸ்வகர்மனால் (தேவ தச்சன்) நீருக்குள் கட்டப்பட்டது. அது சுற்றிலும் அற்புதமான கனிகளையும் மலர்களையும் கொடுக்கவல்ல தங்கத்தாலும் ரத்தினங்களாலும் ஆன மரங்களால் சூழப்பட்டுள்ளது. நீலமும் மஞ்சளும், கருப்பும் கருமையும், வெள்ளையும் சிவப்பும் ஆகிய நிறங்களில் பூங்கொத்துகள் மிகுந்து இருக்கும் பல மரங்கள் அங்கே இருந்தன. அந்த மரங்களில், பல வண்ணங்களில் அழகாக இருக்கும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள், தங்கள் இனிய இசையை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த மாளிகை குளிர்ச்சியாகவும் இல்லாமல், வெப்பமாகவும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சிகரமான சூழ்நிலை கொண்டதாக இருந்தது. வருணனுக்குச் சொந்தமான அந்த சபா மண்டபத்தில் பல இருக்கைகளுடன் கூடிய, பல வெண்ணிற அறைகளும் இருக்கின்றன. அங்கே வருணன் தெய்வீக ஆடைகள் உடுத்தி, தெய்வீக ஆபரணங்களும், நகைகளும் பூண்டு, தெய்வீக வாசனைப் பொருட்களை மேனியில் தரித்து, தனது ராணியுடன் அமர்ந்திருக்கிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section9.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க

சபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

புதன், ஆகஸ்ட் 06, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 6 & 7

சபா பர்வம் பகுதி 6 | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: தனது தம்பிகளுடனும், (தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும்) அந்தணர்களில் முதன்மையானவர்களுடனும் (பிரார்த்தனை செய்யும் வகையில்) கரங்கள் கூப்பினான். அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், "அந்தச் சபாமண்டபங்களைக் குறித்து எங்களுக்கெல்லாம் விளக்குங்கள். நாங்கள் நீர் சொல்வதைக் கேட்க விரும்புகிறோம். ஓ அந்தணரே {நாரதரே}, எந்தப் பொருட்களைக் கொண்டு அந்த சபைகள் கட்டப்பட்டிருக்கின்றன? ஒவ்வொன்றின் பரப்பளவு என்ன? அவை ஒவ்வொன்றின் நீளங்களும் அகலங்களும் எவ்வளவு? பெருந்தகப்பனுக்காக அவரது சபாமண்டபத்தில் யார் காத்திருக்கிறார்கள்? {அவருக்கு சேவை செய்பவர்கள் யார்?}, தேவர்கள் தலைவன் வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்} விவஸ்வானாவின் {சூரியனின்} மகன் யமனுக்காகவும் யார் காத்திருக்கிறார்கள்? வருணன் மற்றும் குபேரனுக்காக அவரவர் சபா மண்டபங்களில் யார் காத்திருக்கிறார்கள்? ஓ அந்தண முனிவரே {நாரதரே}, இவை எல்லாவற்றையும் எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து, நீர் விவரிப்பதைக் கேட்க விரும்புகிறோம். உண்மையில் எங்களது ஆவல் அதிகமாக இருக்கிறது", என்றான் யுதிஷ்டிரன். பாண்டுவின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட நாரதர் அவனுக்கு மறுமொழியாக, "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தெய்வீக சபா மண்டங்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக சொல்கிறேன். அனைவரும் கேளுங்கள்," என்றார் {நாரதர்}. see more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section6.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்கசபா பர்வம் பகுதி 7 | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: பராசரர், பர்வதர், சவர்ணி, கலவா, சங்கா, யக்ஞவல்கியா பாலுகி, உத்யலகா, ஸ்வேதகேடு, தண்டியா, பாண்டாயணி, ஹவிஸ்மத், கரிஷ்டா, மன்னன் ஹரிச்சந்திரன்; ஹிருதியன், உதர்ஷண்டில்யா, பராசரியா, கிருஷிவலா, வதஸ்கந்தா, விசாகா, விதாதா, கலா, காராலதண்டா, தஸ்த்ரி, விஸ்வகர்மா, தும்புரு, மேலும் மற்ற முனிவர்கள், சிலர் பெண்கள் மூலம் பிறந்தவர்கள், மற்றவர்கள் காற்றின் மூலம் வாழ்பவர்கள், நெருப்பின் மூலம் வாழ்பவர்கள் ஆகியோர் இடியைத் தாங்கும் உலகங்களின் தலைவன் இந்திரனை சேவிக்கத் தயாராக நிற்கின்றனர். சகாதேவன், சுனிதன், பெரும் ஆன்மத் தகுதியுடைய வால்மீகி, உண்மை பேச்சு கொண்ட சமீகர், சத்தியங்களை நிறைவேற்றும் பிரசேதகர்கள், மேதாதிதி, வாமதேவர், புலஸ்தியர், புலாஹர், கிராது, மருதர், மரீச்சி, பெரும் ஆன்மத்தகுதியுடைய ஸ்தானு, காக்ஷிவத், கௌதமர், தார்கியர், வைஸ்ராவனா, காலகவ்ரிகிய முனிவர், அஸ்ரவ்யர், ஹிரண்மயர், சம்வர்த்தர், தேஹாவ்யர், பெரும் சக்தி கொண்ட விஸ்வக்ஷேனா, கண்வர், கத்யாயணா, ஆகியோரும் ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கர்கியா, கௌசிகா, ஆகியோர் அனைவரும், தெய்வீக நீர்நிலைகள் மற்றும் தாவரங்கள், நம்பிக்கைகள், புத்திசாலித்தனங்கள், கற்றலின் தேவதை, செல்வம், அறம், இன்பம், மின்னல் ஆகியவற்றுக்கு அதிபதிகளும் அங்கே இருந்தனர். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section7.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க

சபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல

-

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

திங்கள், ஆகஸ்ட் 04, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 5உ | நாரதர் விசாரணை

சபா பர்வம் பகுதி 5உ | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: மன்னர்கள் ஆட்படக்கூடாத பதினான்கு{14} தீமைகளான நாத்திகம் {1}, பொய்மை {2}, கோபம் {3}, விழிப்பற்ற நிலை {அஜாக்கிரதை} {4}, காலம் கடத்துதல் {5}, ஞானமுள்ளோரை சந்திக்காமலிருத்தல் {6}, ஒன்றும் செய்யாது சும்மா இருத்தல் - சோம்பல் {Idle} {7}, மன அமைதியின்மை {ஐம்புலன்களுக்கு உட்படுதல்} {8}, ஒரே மனிதரிடம் {தான் மட்டும்} மட்டும் ஆலோசனை செய்வது {9}, பொருள் குறித்த அறிவியலை அறியாதவர்களிடம் ஆலோசனை பெறுவது {10}, ஒரு தீர்க்கப்பட்ட திட்டத்தைக் கைவிடுவது {11}, ஆலோசனையை ரகசியமாக வைத்துக் கொள்ளாது வெளிப்படுத்துதல் {12}, நன்மைக்கான மங்கள காரியங்களைச் செய்யாமை {13}, எதையும் சிந்திக்காமல் செய்வது {14} - ஆகியவற்றில் இருந்து நீ விடுபட்டு இருக்கிறாயா? ஓ மன்னா இவற்றால், ஏகாதிபதிகள் பாழடையாமல் தங்கள் அரியணையில் நிலைத்தும் இருப்பார்கள். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section5e.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க

சபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல

http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section3.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 5ஈ | நாரதர் விசாரணை

சபா பர்வம் பகுதி 5ஈ | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: நீ எதிரியை நோக்கி படையை நடத்திச் செல்லும் முன், நான்கு கலைகளான {1}வேற்றுமையை அகற்றல், {2}பரிசளித்தல், {3}ஒற்றுமையின்மையை விளைவித்தல், {4} பலத்தைப் பிரயோகம் செய்வது போன்ற உபாயங்களைக் கடைப்பிடிக்கிறாயா? ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முதலில் உனது நாட்டைப் பலப்படுத்திய பிறகு நீ எதிரி நாட்டின் மீது படையெடுக்கிறாயா? அப்படி எதிரியை நோக்கி படையெடுத்து சென்ற பிறகு, மிகுந்த சக்தியைப் பயன்படுத்தி வெற்றியை அடையப் பாடுபடுகிறாயா? அவர்களை வெற்றி கொண்ட பிறகு, அவர்களை கவனத்துடன் பாதுகாக்கிறாயா? உனது படைகள், வழக்கமான துருப்புகள் {1}, கூட்டணி துருப்புகள் {2}, கூலிப்படையினர் {3}, வழக்கமில்லாத ஒழுங்கற்ற படைகள் {4} என நான்கு வகை துருப்புகளையும், ரதங்கள் {1}, யானைகள் {2}, குதிரைகள் {3}, அதிகாரிகள் {4}, காலாட்படை {5}, பணியாட்கள் {6}, நாட்டைப் பற்றிய தெளிந்த ஞானம் கொண்ட ஒற்றர்கள் {7}, மேன்மையான அதிகாரிகளால் நன்கு பழக்கப்பட்டு எதிரிகளிடம் கொடிகளைச் சுமந்து செல்வோர் {8} ஆகிய எட்டு அங்கங்களையும் கொண்டிருக்கிறதா? - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section5d.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க

சபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல

http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section3.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

சனி, ஆகஸ்ட் 02, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 5இ | நாரதர் விசாரணை

சபா பர்வம் பகுதி 5இ | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: உனக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் மற்றும் உனது காரியத்தைச் செய்யப்போய் துன்பத்துக்குள்ளானவரின் மனைவிமாரையும், பிள்ளைகளையும் தாங்கி வருகிறாயா? ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, போரில் உன்னால் வீழ்த்தப்பட்ட எதிரி, பலவீனப்பட்டோ அல்லது உனது பாதுகாப்பை நாடியோ வந்தால், அவனை தந்தையின் பாசத்துடன் பேணிப் பாதுகாக்கிறாயா? ஓ பூமியின் தலைவனே {யுதிஷ்டிரனே}, அனைத்து மனிதர்களுக்கும் சமமானவனாக இருந்து, அவர்கள் எளிதாக பயமற்று, ஒரு தாயையோ அல்லது தந்தையையோ அணுகுவது போல உன்னை அணுகும் வகையில் நீ நடந்து கொள்கிறாயா?

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க

சபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல

http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section3.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

ஆடியோ கோப்பு - சபாபர்வம் 5ஆ | நாரதர் விசாரணை

சபா பர்வம் பகுதி 5ஆ | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: பாரத குலத்தில் வந்த காளையே {யுதிஷ்டிரா}, உனது நாட்டின் ஏழு{7} முக்கிய அதிகாரிகள் (கோட்டையின் ஆளுநர், படைகளின் தளபதி, தலைமை நீதிபதி, உள்துறை தளபதி, தலைமைப் பூசாரி, தலைமை மருத்துவர், தலைமை சோதிடர் ஆகியோர்) யாரும் உனது எதிரியின் செல்வாக்கின் காரணமாக இறக்கவில்லை என நம்புகிறேன். மேலும் அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} தாங்கள் சம்பாதித்த செல்வத்தால், சோம்பேறிகள் ஆகவில்லை எனவும் நம்புகிறேன். அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்த நடக்கிறார்கள் என்றும் நம்புகிறேன். மாறுவேடத்தில் இருக்கும் உனது நம்பிக்கைக்குரிய ஒற்றர்களோ, நீயோ, அல்லது உனது அமைச்சர்களோ உனது ஆலோசனைகளை பகிரங்கப்படுத்துவதில்லை என நான் நம்புகிறேன். உனது நண்பர்கள், எதிரிகள், அந்நியர்கள் ஆகியோர் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறாயா? அமைதியையும் போரையும் சரியான நேரங்களில் செய்கிறாயா?

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்கhttp://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section3.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி5அ

சபா பர்வம் பகுதி 5அ | அசல் பதிவுக்குச் செல்ல

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்கhttp://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section3.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

திங்கள், ஜூலை 28, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 4

சபா பர்வம் பகுதி 4

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section3.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

ஞாயிறு, ஜூலை 27, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் 3

சபா பர்வம் பகுதி 3

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section2.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

வெள்ளி, ஜூலை 25, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 2 | முழு மஹாபாரதம்

சபா பர்வம் பகுதி 2

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section1.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

புதன், அக்டோபர் 30, 2013

அந்தணர்கள் செய்த வேலைநிறுத்தம் - சபாபர்வம் பகுதி 80

Brahmanas on strike | Sabha Parva - Section 80 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்கள் சென்ற பிறகு துயரத்தில் இருக்கும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் வருவது; திருதராஷ்டிரன் பாண்டவர்கள் குறித்த பயத்தை சஞ்சயனிடம் தெரிவிப்பது; சஞ்சயன் அனைத்துக்கும் காரணம் உமது மகனே என்று சொல்லுவது; சில விஷயங்களை விதுரன் சொன்னதாக திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது.


வைசம்பாயனர் சொன்னார், "பகடையில் தோற்று பாண்டவர்கள் வனம் சென்ற பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் துயரத்தில் மூழ்கினான். அவன் அமைதியற்று கவலையுடன் அமர்ந்து துயரத்தால் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அப்போது சஞ்சயன் அவனை {திருதராஷ்டிரனை} அணுகி, "ஓ பூமியின் தலைவா, முழு பூமியையும், அதன் செல்வங்களையும் பெற்று, பாண்டவர்களையும் நாடு கடத்திய பிறகு இன்னும் ஏன் துயரத்தில் இருக்கிறீர்?" என்று கேட்டான்.


திருதராஷ்டிரன், "கூட்டணி படைகளின் துணையுடன் பெரும் ரதங்களில் போர் புரியும் வீரர்களில் காளைகளான பாண்டுவின் மகன்களைப் போரில் சந்திக்க வேண்டிய ஒருவன் எப்படி துக்கப்படாமல் இருக்க முடியும்?" என்று கேட்டான்.

சஞ்சயன், "ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உமது தவறான செயலாலேயே இந்தப் பெரும் பகைமை தவிர்க்க முடியாததாகிவிட்டது. இது நிச்சயம் மொத்த உலகிற்கும் அழிவைக் கொண்டு வரும். பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோரால் தடுக்கப்பட்டும், தீய மனம் கொண்ட உமது வெட்கங்கெட்ட மகன் துரியோதனன், தனது சூத தூதுவனிடம் {பிராதிகாமினிடம்}, பாண்டவர்களின் அன்புக்குரிய அறம்சார்ந்த மனைவியை {திரௌபதியை} சபைக்கு அழைத்து வரக் கட்டளையிட்டான். யாருக்கு தோல்வியையும் அவமானத்தையும் தேவர்கள் கொடுக்கப்போகிறார்களோ, அவர்களுக்கு முதலில் மதிமயக்கத்தை {தேவர்கள்} ஏற்படுத்திவிடுவார்கள். இதன் காரணமாகத் தான் அப்படிப்பட்ட மனிதன் அனைத்தையும் வித்தியாசமாகப் பார்க்கிறான். அழிவு அருகில் இருக்கும் போது, தீமையையும், அடக்கமின்மையையும், நேர்மையின்மையையுமே அவன் விரும்புவான். அழிவைக் கொண்டு வரும் காலம் கைகளில் தண்டத்தைக் கொண்டு வந்து தலையில் அடிப்பதில்லை. மாறாக, அந்த குறிப்பிட்ட காலத்தில், தீமையை நன்மையாகவும், நன்மையைத் தீமையாகவும் அந்த மனிதனைக் காண வைக்கும். ஆதரவற்ற பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} சபையின் நடுவே இழுத்து வந்து அந்தப் பாவிகள் பயங்கரமான கொடூரமான அழிவை மொத்தமாகப் பெற்றுக் கொண்டனர். *பெண்ணின் கருவில் பிறக்காமல் புனித நெருப்பில் பிறந்து, கடமையையும், அனைத்து அறநெறிகளையும் அறிந்து, அழகும் புத்திசாலித்தனமும் கொண்ட துருபதன் மகளை {திரௌபதியை}, போலிப் பகடையாட்டம் {பொய்யாட்டம்} ஆடும் துரியோதனனைத் தவிர வேறு யாரால் இப்படி அவமதித்து சபைக்குக் கொண்டு வர முடியும்? கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தி மாதவிலக்காக இருந்த அந்த அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, சபைக்குக் கொண்டு வரப்பட்ட போது, பாண்டவர்களின் மேல் பார்வையைச் செலுத்தினாள். செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு, நாடு பிடுங்கப்பட்டு, ஆடைகளும் களைந்து, அழகிழந்து, அனைத்து மகிழ்ச்சியையும் தொலைத்து, அடிமை நிலையில் இருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்டாள் {திரௌபதி}. அறத்தின் முடிச்சுகளால் கட்டப்பட்ட அவர்கள் தங்கள் வீரத்தைக்காட்ட இயலாமல் இருந்தனர். அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கு மத்தியில் துரியோதனனும் கர்ணனும் கொடுமையான மற்றும் கடுமையான வார்த்தைகளை, அப்படி நடத்தப்படத் தகாதவளான கோபம் கொண்ட கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} பேசினர். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தும் அச்சமூட்டும் தீமையின் முன் அறிகுறி என எனக்கு படுகிறது" என்றான்.

திருதராஷ்டிரன், "ஓ சஞ்சயா,துயரத்தில் இருக்கும் துருபதன் மகளின் {திரௌபதியின்} பார்வையே முழு உலகத்தையும் எரித்துவிடும். அப்படியிருக்கும் போது எனது ஒரு மகனாவது உயிருடன் இருக்க வாய்ப்பிருக்கிறதா? பாண்டவர்கள் மணந்த மனைவியான அழகும் இளமையும் கூடிய அறம்சார்ந்த கிருஷ்ணை {திரௌபதி} சபையில் இழுத்து வரப்பட்ட போது, பாரதர்களின் {துரோணாதிபதிகளின்} மனைவிகள் காந்தாரியுடன் கூடி பயத்தால் ஓலமிட்டு அழுதனர். இப்போது கூட அவர்கள் தினமும் அழுது கொண்டுதான் இருக்கின்றனர். திரௌபதி இப்படி அவமதிக்கப்பட்ட கோபத்தால் அந்தணர்கள் அன்று மாலை செய்ய வேண்டிய அக்னிஹோத்திரச் சடங்கைச் செய்யவில்லை. பிரளய காலத்தில் நடப்பது போல காற்று கடும்பலத்துடன் வீசியது. அங்கே கடும் இடியுடன் கூடிய புயலும் ஏற்பட்டது. எரிகற்கள் விண்ணிலிருந்து விழுந்தன. காலமற்ற காலத்தில் சூரியனை ராகு விழுங்கி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தினான். நமது போர் ரதங்கள் திடீரென எரிந்தன. அவற்றின் கொடிக் கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. இவை அனைத்தும் பாரதர்களுக்கு {துரோணாதிபதிகளுக்கு} நேரப்போகும் தீங்கினைப் பகன்றன. துரியோதனனின் வேள்வி அறையில் இருந்து நரிகள் ஊளையிட்டன. எல்லாபுறத்திலிருந்தும் கழுதைகள் பதிலுக்கு கத்த ஆரம்பித்தன. பிறகு, பீஷ்மர், துரோணர், கிருபர், சோமதத்தன், உயர் ஆன்ம பாஹ்லீகன் ஆகியோர் சபையை விட்டுச் சென்றனர். இதன்பிறகுதான் நான் விதுரனின் ஆலோசனையின் பேரில், கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, "ஓ கிருஷ்ணா {திரௌபதி} நான் உனக்கு வரங்களை வழங்குகிறேன். நீ என்ன கேட்கிறாயோ அதை நிச்சயம் கொடுக்கிறேன்" என்றேன். பாஞ்சால இளவரசி பாண்டவர்களின் விடுதலையைக் கோரினாள். எனது சுய விருப்பத்தின் பேரில் நான் பாண்டவர்களை விடுவித்து, அவர்களை {பாண்டவர்களை} அவர்களது ரதங்கள் விற்கள் மற்றும் அம்புகளுடன் {அவர்களது தலைநகருக்கு-காண்டவப்பிரஸ்தத்திற்கு/ இந்திரப்பிரஸ்தத்திற்குத்} திரும்பிப் போக கட்டளையிட்டேன். அதன் பிறகு தான் விதுரன் "சபைக்குள் கிருஷ்ணையை இழுத்து வந்தது நிச்சயம் பாரத குலம் அழிய வழிவகுக்கும். இந்தப் பாஞ்சால மன்னனின் மகன் {திரௌபதி} களங்கமற்ற ஸ்ரீ ஆவாள். தெய்வீகப் பிறவியான அவள் {திரௌபதி} பாண்டவர்கள் மணந்த மனைவியாக இருக்கிறாள். இவளுக்கு நேர்ந்த அவமதிப்பைப் பாண்டுவின் கோபக்கார மகன்கள் மன்னிக்க மாட்டார்கள். விருஷ்ணி குல வில்லாளிகளும் மன்னிக்க மாட்டார்கள். பெரும் பலம் வாய்ந்த வீரர்களான பாஞ்சாலர்களும் அமைதியாகப் பொறுத்துக் கொள்ள மாட்டர்கள். தடுக்க முடியாத வீரம் கொண்ட வாசுதேவனின் {கிருஷ்ணனின்} துணை கொண்டு, நிச்சயம் அர்ஜுனன் பாஞ்சாலப் படையுடன் திரும்பி வருவான். பெரும் பலம் வாய்ந்த பீமசேனனும் தனது கதாயுதத்தை யமனைப் போலச் சுழற்றிக் கொண்டு வருவான். பீமனுடைய கதாயுதத்தின் பலத்தை இந்த மன்னர்களால் தாங்க முடியாது. ஆகையால், ஓ மன்னா, பாண்டவர்களிடம் பகைமையில்லாமல் எப்போதும் அமைதியும் சமாதானமுமாக இருப்பதே சிறந்ததாகப் படுகிறது. பாண்டுவின் மகன்கள் எப்போதுமே குருக்களைவிட {கௌரவர்களைவிட} பலசாலிகள்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, **சிறப்பும் பெரும் பலமும் வாய்ந்த மன்னன் ஜராசந்தனை பீமன் தனது வெறும் கைகளால் மட்டுமே கொன்று போட்டான் என்பதை நீர் அறிவீர். ஆகையால், ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களோடு சமாதானம் செய்து கொள்வதே உமக்குத் தகும். எந்த விதமான மனவுறுத்தலுமின்றி, ஓ மன்னா, இருகட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தும். ஒ மன்னா, நீர் இந்த வழியில் நடந்து கொண்டால், நிச்சயம்  நற்பேறைப் பெறுவீர்." என்றான். இவ்வாறே கவல்கனின் மகனான விதுரன் அறமும் பொருளும் சார்ந்த வார்த்தைகளில் என்னிடம் பேசினான். எனது மகன் மீது நான் கொண்ட பாசத்தினால், நான் அவனது {விதுரனது} ஆலோசனையை ஏற்கவில்லை" என்றான் {திருதராஷ்டிரன் சஞ்சயனிடம்}.

************ சபாபர்வம் முற்றும் ************

*பெண்ணின் கருவில் பிறக்காமல் புனித நெருப்பில் பிறந்த திரௌபதி,

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
அமானுஷ்ய பிறப்புகள் - ஆதிபர்வம் பகுதி 167
அந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை - ஆதிபர்வம் பகுதி 168
திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 169

--------------------------------------------------------------------------------------
**சிறப்பும் பெரும் பலமும் வாய்ந்த மன்னன் ஜராசந்தனை பீமன் தனது வெறும் கைகளால் மட்டுமே கொன்று போட்டான் 

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:

ஊரைவிட்டு ஓடிய கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 14 ஆ
எண்பத்தாறு மன்னர்கள் சிறையில்! - சபாபர்வம் பகுதி 15 
அர்ஜுனன் கொடுத்த ஊக்கம்! - சபாபர்வம் பகுதி 16
ராட்சசி ஜரையால் உயிர்பெற்ற ஜராசந்தன் - சபாபர்வம் பகுதி 17
சுயம்புவால் உருவாக்கப்பட்ட கிரகதேவி ஜரை - சபாபர்வம் பகுதி 18
ஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பகை - சபாபர்வம் பகுதி 19
எதிரியை அழிக்க கிளம்பிய மூன்று வீரர்கள் -சபாபர்வம் பகுதி 20
ஜராசந்தனை எதிர்கொண்ட கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 21
"அடப்பாவி! நீயா அப்பாவி?" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 22 
பதினாலாவது நாளில் ஓய்ந்த ஜராசந்தன் - சபாபர்வம் பகுதி 23
ஜராசந்தனை இரண்டாக உடைத்த பீமன் - சபாபர்வம் பகுதி 24

செவ்வாய், அக்டோபர் 29, 2013

துரோணர் பயந்தாரா? - சபாபர்வம் பகுதி 79

Did Drona fear? | Sabha Parva - Section 79 | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

விதுரன் பாண்டவர்கள் எப்படிச் சென்றார்கள் என்பதை திருதராஷ்டிரனுக்குச் சொல்வது; தொடர்ந்து துர்சகுனங்கள் தோன்றுவது; நாரதர் தோன்றி பதினான்காம் வருடம் கௌரவர்கள் அழிவார்கள் என்று எச்சரிப்பது; துரியோதனன், கர்ணன், மற்றும் சகுனி ஆகியோர் துரோணரிடம் தஞ்சம் புகுவது; துரோணர் தன்னால் இயன்றவரை காப்பதாக உறுதியளிப்பது; திருதராஷ்டிரன் விதுரனிடம் மறுபடியும் பாண்டவர்களை அழைத்துவரும்படி சொல்வது....

வைசம்பாயனர் சொன்னார், "பெரும் முன்னறியும் திறன் {Foresight} கொண்ட விதுரன் வந்தவுடன், அம்பிகையின் மகன் மன்னன் திருதராஷ்டிரன் தனது தம்பியிடம் {விதுரனிடம்}, "தர்மனின் மகன் யுதிஷ்டிரன் எப்படிச் சென்றான்? அர்ஜுனன் எப்படிச் சென்றான்? மாத்ரியின் மகன்களான அந்த இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} எப்படிச் சென்றனர்? ஓ க்ஷத்தா {விதுரா} தௌமியர் எப்படிச் சென்றார்? சிறப்பு வாய்ந்த திரௌபதி எப்படிச் சென்றாள்? நான் அனைத்தையும் கேட்க விரும்புகிறேன். ஓ க்ஷத்தா, அவர்களது செயல்களை எனக்கு விளக்கிச் சொல்" என்றான்.

விதுரன், "குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது முகத்தைத் துணியால் மூடிச் சென்றான். ஓ மன்னா, பீமன், தனது பெரும் கரங்களைப் பார்த்துக் கொண்டே சென்றான். ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மன்னனைத் தொடர்ந்து சென்று மண்ணை சுற்றிலும் வீசிச் சென்றான். மாத்ரியின் மகனான சகாதேவன், தன் மேனியில் வண்ணம் பூசிச் சென்றான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே} மனிதர்களில் அழகான நகுலன் தன் மேனியில் அழுக்கு பூசிக் கொண்டு பெரும் துயரத்துடன் சென்றான். பெரிய கண்களை உடைய அழகான திரௌபதி, கலைந்திருந்த தனது முடியால் தனது முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டே கண்ணீருடன் சென்றாள். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தௌமியர் தனது கையில் குசப் {தர்ப்பைப்} புல்லை வைத்துக் கொண்டு சாமவேதத்தில் இருந்து யமனைக் குறிக்கும் பயமூட்டும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே சாலை வழி சென்றார்" என்றான்.


திருதராஷ்டிரன், "ஓ விதுரா, பாண்டுவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லும்போது ஏன் இப்படி வித்தியாசமான கோலத்தில் சென்றனர்?" என்று கேட்டான்.

விதுரன், "உமது மகன்களால் துன்புறுத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து நாடும் செல்வமும் திருடப்பட்டு இருந்தாலும், ஞானமும் நீதியும் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனின் மனம் அறத்தின் பாதையில் இருந்து வழுவவில்லை. ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரன் எப்போதும் உனது பிள்ளைகளிடம் அன்புடனேயே இருக்கிறான். நியாயமற்ற முறையில் அனைத்தையும் இழந்தாலும், அவன் {யுதிஷ்டிரன்} பெரும் கோபம் கொண்டிருந்தாலும், "எனது கோபப்பார்வையால் மக்களைப் பார்த்து அவர்களை எரித்துவிடக் கூடாது" என்று கண்களைத் திறக்காமல் செல்கிறான். அதனாலே அவன் {யுதிஷ்டிரன்} முகத்தை மூடிச் செல்கிறான்.

ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீமன் ஏன் அப்படிச் செல்கிறான் என்பதைச் சொல்கிறேன் கேளும். "எனது கரங்களின் பலத்திற்கு நிகரானவர் யாருமில்லை" என்று நினைத்துக் கொண்டு தனது பெரும் கரங்களை அடிக்கடி விரித்துப் பார்த்துக் கொண்டே செல்கிறான். ஓ மன்னா, தனது கரத்தின் வலிமையில் கர்வம் கொண்ட விருகோதரன் {பீமன்}, அந்தக் கரங்களைக் கொண்டு எதிரிகளின் செயல்களுக்காக அவர்களை அவன் {பீமன்} என்ன செய்யப் போகிறான் என்பதைக் காட்டிக் கொண்டு செல்கிறான்.

இரண்டு கரங்களையும் (காண்டீவத்தைத் தாங்கிப்} பயன்படுத்தவல்ல குந்தியின் மகனான அர்ஜுனன் யுதிஷ்டிரனின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி சென்று, மணல் துகள்களை தூவி, போர்களத்தில் தனது கணைகளின் மழையைக் குறிப்பால் உணர்த்துகிறான். ஓ பாரதா, மணற்துகளை எப்படி எளிதாக அவனால் வீச முடிகிறதோ அப்படித் தனது அம்புகளின் மழையை (போர்க்களத்தில்) எளிதாக எதிரிகள் மீது பொழிவேன் என்று குறிப்பிட்டுச் செல்கிறான்.

சகாதேவன் தனது முகத்தில் வண்ணம் பூசி, "இந்த துயர் நிறைந்த நாளில் என்னை யாரும் அறிந்து கொள்ள வேண்டாம்" என்று நினைத்துக் கொண்டு செல்கிறான். ஓ மேன்மையானவரே,  நகுலன் தனது மேனியை புழுதியால் கறைபடுத்தி, "இப்படிச் செய்யவில்லை என்றால், என்னைப் பார்க்கும் பெண்களின் இதயங்களைக் கொள்ளையிடுவேன்" என்று நினைத்துக் கொண்டு செல்கிறான்.

கேசம் கலைந்து, கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தியிருக்கும் திரௌபதி, அழுது கொண்டே, "என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் மனைவிமார், இன்றிலிருந்து பதினான்காவது ஆண்டு, தங்கள் மாதவிலக்கு காலத்தில், தங்கள் கணவர்களையும், மகன்களையும், உறவினர்களையும், அன்பானவர்களையும் இழந்து, இரத்தம் படிந்து, தலை முடி கலைந்து உடலெல்லாம் புழுதி படிந்து, (தாங்கள் இழந்தவர்களின் ஆவிக்கு) நீரால் தர்ப்பணம் செய்த பிறகு ஹஸ்தினாபுரத்துக்குள் நுழைய வேண்டும்" என்று குறிப்பால் உணர்த்தி செல்கிறாள்.

ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, உணர்ச்சிகளைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் கற்ற தௌமியர், தனது கையில் தெற்மேற்கு நோக்கிய குசப்புல்லை கொண்டு, முன்னணியில் நடந்து, யமனைக் குறிக்கும் சாம வேத மந்திரங்களை உரைத்துச் செல்கிறார். ஓ ஏகாதிபதி, அந்த கற்ற அந்தணரும், "போர்க்களத்தில் பாரதர்கள் கொல்லப்படும் போது, குருக்களின் புரோகிதர்கள் இப்படியே (இறந்தவர்களின் நன்மைக்கான} சோம மந்திரங்களைப் பாடிச் செல்வர் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.

பெரும் துயரத்தில் இருந்த குடிமக்கள் அனைவரும், "ஐயோ, ஐயோ, எங்கள் தலைவர்கள் செல்கிறார்களே. ச்சீ… ச்சீ… பேராசை கொண்ட குருகுலத்தின் மூத்தவர்கள் சிறுபிள்ளைகள் போல் நடந்து கொண்டு பாண்டுவின் வாரிசைகளை ஒதுக்கினரே. ஐயோ, பாண்டுவின் மகனிடம் இருந்து பிரிக்கப்பட்ட நாங்கள், தலைவன் இல்லாமல் இருப்போமே. தீய, பேராசை கொண்ட குருக்களிடம் நாங்கள் எப்படி அன்புடன் இருக்க முடியும்?" என்றனர்.

ஓ மன்னா இப்படியே பெரும் மனோ சக்தி கொண்ட குந்தியின் மகன்கள், தங்கள் இதயத்தில் இருந்த தீர்மானங்களைக் குறிப்புகளாலும், நடத்தையாலும் குறிப்பிட்டு சென்றனர். அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றதும், வானத்தில் மேகமில்லாது இருந்த போதே மின்னல் வெட்டியது, பூமி நடுங்கத் தொடங்கியது. அமாவாசை இல்லாத போதே சூரியனை ராகு விழுங்க வந்தான். நகரத்தை வலப்புறம் கொண்டு {இடப்புறமாக} எரிகற்கள் விழுந்தன. {ஊரை அபஸவ்யமாகச் சுற்றி எரிகொள்ளி விழுந்தது என்கிறது ம.வீ.ரா. பதிப்பு}. நரிகளும், கழுகுகளும், காக்கைகளும், மற்ற இறைச்சி உண்ணும் விலங்குகளும் பறவைகளும், தேவர்களின் கோவில்களில் இருந்தும், புனிதமான மரங்களின் உச்சியிலிருந்தும், சுவர்கள் மற்றும் வீடுகளின் மேலிருந்தும் உரக்க கத்த ஆரம்பித்தன. ஓ மன்னா, உமது தீய ஆலோசனைகளின் விளைவால் இந்த இயல்புக்கு மிக்க பேரிடர் அறிகுறிகள், பாரதர்களின் அழிவைக் குறிக்கும்படி காணப்படவும் கேட்கப்படவும் செய்தன.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, இப்படி மன்னன் திருதராஷ்டிரனும், ஞானமுள்ள விதுரனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்த போது, அந்த கௌரவர்கள் சபையில், அனைவரின் கண்களுக்கும் முன்னால், தேவலோக முனிவர்களில் சிறந்தவர் {நாரதர்} தோன்றினார். அவர்கள் அனைவருக்கும் முன்னால் தோன்றிய அவர் {நாரதர்}, பயங்கரமான வார்த்தைகளால், "இன்றிலிருந்து பதினான்காவது வருடம், துரியோதனனின் பிழையின் காரணமாக பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தால் கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள்" என்று சொன்னார். வேத அருளைத் தன்னகத்தே கொண்ட அந்த முனிவர்களில் சிறந்தவர் {நாரதர்}, இப்படிச் சொல்லிவிட்டு, வானத்தில் கடந்து, காட்சியில் இருந்து மறைந்தார்.

பிறகு, துரியோதனன், கர்ணன் மற்றும் சுபலனின் மகன் சகுனி ஆகியோர் துரோணரைத் தங்கள் ஒரே தஞ்சமாகக் கருதி, நாட்டை அவரிடம் {துரோணரிடம்} ஒப்படைத்தனர். பிறகு துரோணர், பகைமையும் கோபமும் கொண்ட துரியோதனன், துச்சாசனன், கர்ணன் மற்றும் அனைத்து பாரதர்களிடமும், "பாண்டவர்கள் தெய்வீக மூலம் கொண்டவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்பட முடியாதவர்கள் என்று அந்தணர்கள் சொல்லியிருக்கிறார்கள். இருப்பினும் திருதராஷ்டிரனின் மகன்கள், அனைத்து மன்னர்களுடன் சேர்ந்து, மரியாதையுடன் இதயப்பூர்வமாக என்னிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றனர். என்னால் முடிந்ததில் சிறந்ததை செய்து நான் அவர்களைப் பார்த்துக் கொள்வேன்.

ஆனால் விதி வலியது, அதை என்னால் மீற முடியாது. பகடையில் தோற்ற பாண்டுவின் மகன்கள், தங்கள் ஏற்ற உறுதிக்கு ஏற்றவாறு நாடு கடந்து செல்கிறார்கள். அவர்கள் கானகத்தில் பனிரெண்டு வருடங்கள் வாழ்வார்கள். இந்த காலத்தில் அவர்கள் அங்கே பிரம்மச்சரிய வாழ்முறையைக் கைக்கொண்டு, பெரும் துயரத்துடனும் கோபத்துடனும் திரும்பி தங்கள் எதிரிகளை வஞ்சம் தீர்க்கப் போகின்றனர். முன்பு நடந்த ஒரு நட்பு ரீதியான சச்சரவில் நான் துருபதனை நாட்டை இழக்கச் செய்தேன். ஓ பாரதா {துரியோதனா} என்னால் அவனது நாடு கவரப்பட்டதால், அவன் ஒரு வேள்வி செய்து, {என்னைக் கொல்வதற்காக} ஒரு மகனைப் பெற்றான். யாஜர் மற்றும் உபயாஜரின் தவ வலிமையில், துருபதன் {வேள்வி} நெருப்பிலிருந்து திருஷ்டத்யும்னன் என்ற பெயர் கொண்ட மகனையும், களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி} என்ற மகளையும் பெற்றான். அவர்கள் இருவரும் வேள்வி மேடையில் எழுந்தவர்கள்.

பாண்டுவின் மகன்களுக்கு நடந்த திருமணத்தால் அந்தத் திருஷ்டத்யும்னன் அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} மைத்துனனாகி, அவர்களிடம் அன்புடன் இருக்கிறான். ஆகையால், அவனைக் {திருஷ்டத்யும்னன்} குறித்தே நான் அச்சப்படுகிறேன். தெய்வீகப் பிறப்பு பிறந்து, நெருப்பு போல பிரகாசிக்கும் அவன் {திருஷ்டத்யும்னன்} பிறக்கும்போதே வில், அம்பு மற்றும் கவசத்துடன் பிறந்தான். நானோ இறப்பு உள்ள மனிதன். ஆகையால், அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} நான் மிகவும் அச்சம் கொள்கிறேன். அந்த எதிரிகளைக் கொல்லும் பர்ஷத்தனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, பாண்டவர்கள் பக்கம் இருக்கிறான். நானும் அவனும் {திருஷ்டத்யும்னனும்} நேரடியாகப் போர்க்களத்தில் மோதும் நிலை வந்தால், நான் எனது உயிரை இழக்க நேரிடும்.

கௌரவர்களே, *திருஷ்டத்யும்னன் தான் துரோணரைக் கொல்வான் என்ற பொது நம்பிக்கை இருக்கும் போது, இதை விட  பெரிய துன்பம் எனக்கு என்ன இருக்க முடியும்? அவன் {திருஷ்டத்யும்னன்} என்னைக் கொல்லவே பிறந்திருக்கிறான் என்று நான் கேள்விப்படுகிறேன். இதுவே உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டிருக்கிறது. ஓ துரியோதனா, உன்னால் அந்தக் கொடுமையான அழிவுக்காலம் நெருங்கி வந்துவிட்டது. உனக்கு நன்மை பயக்கும் செயல்களை நேரம் கடத்தாமல் செய். பாண்டவர்களை நாடு கடத்திவிட்டதால், அனைத்தையும் சாதித்து விட்டதாக நினைத்துக் கொள்ளாதே. இந்த உனது மகிழ்ச்சி, பனிக்காலத்தில் பனை மரத்தின் அடியில் (குறுகிய காலம்) ஓய்வெடுப்பதைப் போலத்தான் நீடித்திருக்கும். ஓ பாரதா {துரியோதனா} பலதரப்பட்ட வேள்விகளைச் செய்து மகிழ்ந்து, நீ விரும்பு அனைத்தையும் கொடு. இன்றிலிருந்து பதினான்காவது வருடம் பேரிடர் உன்னை மூழ்கடிக்கும்" என்றார் {துரோணர்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "துரோணரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், "ஓ க்ஷத்தா {விதுரா}, ஆசான் உண்மையைச் சொல்கிறார். நீ சென்று பாண்டவர்களை அழைத்து வா. அவர்கள் திரும்பி வர வில்லை என்றால், அவர்கள் மரியாதையுடனும், பாசத்துடனும் செல்லட்டும். அந்த எனது மகன்கள் {பாண்டவர்கள்} ஆயுதங்களுடனும், ரதங்களுடனும், காலாட் படையுடனும் சென்று அனைத்து நல்ல பொருளையும் பெற்று மகிழட்டும்" என்றான் {திருதராஷ்டிரன்}.
------------------------------------------------------------------------------------------
*திருஷ்டத்யும்னன் தான் துரோணரைக் கொல்வான்........

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Blogger இயக்குவது.
Back To Top