clone demo
ராஜதர்மாநுசாஸன பர்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜதர்மாநுசாஸன பர்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 28, 2017

ஆசிரமதர்மம்! - சாந்திபர்வம் பகுதி – 61

The duties in modes of life! | Shanti-Parva-Section-61 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 61)


பதிவின் சுருக்கம் : நான்கு வகை வாழ்வுமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டோனே {யுதிஷ்டிரா}, நான்கு வாழ்வு முறைகளின் பெயர்களையும், அவை ஒவ்வொன்றின் கடமைகளையும் இப்போது சொல்கிறேன், கேட்பாயாக.(1) பிராமணர்களால் பின்பற்றப்படுவது, வானப்ரஸ்தம், பைக்ஷ்யம் {சந்நியாசம்}, பெரும் தகுதியைத் தரும் கார்ஹஸ்த்யம் {இல்லறம்} மற்றும் பிரம்மச்சரியம் ஆகிய நான்கு வாழ்வு முறைகளாகும்.(2) சடாமுடி தரிப்பதைப் பொறுத்தவரையில், தூய்மைச் சடங்கைச் {சௌளம்} செய்து, {உபநயனவிதியைக் கொண்டு} மறுபிறப்புக்கான சடங்கையும் செய்த பிறகு, சில காலம், புனித நெருப்புக்குச் சில சடங்குகளைச் செய்த பிறகு, வேதங்களைக் கற்று,(3) தூய ஆன்மாவுடனும், புலனடக்கத்துடனும், கார்ஹஸ்த்யம் {இல்லறம்} என்றழைக்கப்படும் வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் முதலில் கவனமாகச் செய்த பிறகு, மனைவியுடனோ, மனைவியில்லாமலோ, வானப்ரஸ்தம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைப் பின்பற்ற கானகம் செல்ல வேண்டும்.(4) ஆரண்யகங்கள் என்றழைக்கப்படும் {வானப்ரஸ்த வாழ்வுமுறைக்குரிய} சாத்திரங்களைக் கற்றுத் தன் உயிர் நீரை மேலிழுத்து, உலகக் காரியங்கள் அனைத்தில் இருந்தும் ஓய்ந்த அறம் சார்ந்த துறவி ஒருவன், அழிவில்லா நித்திய ஆன்மாவில் ஒன்றிய நிலையை {பிரம்மஸ்வரூபத்தை} அடையலாம்.(5) இவையே தங்கள் உயிர் நீரை மேலிழுத்த முனிவர்களின் குறியீடுகளாகும். ஓ! மன்னா, கல்விமானான ஒரு பிராமணன் முதலில் அவற்றைப் பயன்று, அவற்றில் ஈடுபட வேண்டும்.(6)

புதன், டிசம்பர் 27, 2017

சதுர்வர்ணதர்மம்! - சாந்திபர்வம் பகுதி – 60

The duties of four classes! | Shanti-Parva-Section-60 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 60)


பதிவின் சுருக்கம் : பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகிய நான்கு வர்ணங்களின் தனிப்பட்ட கடமைகளைப் பட்டியலிட்ட பீஷ்மர்; பிராமணர்களின் பெருமையையும், வேள்விகளின் பயனையும் சொல்லி, வேள்விகள் அனைவரும் செய்யத்தக்கதே என்று சொன்னது...


வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} சொன்னார், "இதன்பிறகு யுதிஷ்டிரன் தன் கரங்களைக் கூப்பித் தன் பாட்டனான கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} வணங்கி, குவிந்த கவனத்துடன் மீண்டும்,(1) "நால்வகை மனிதர்களின் பொதுவான கடமைகள் எவை? ஒவ்வொரு வகையின் குறிப்பிட்ட கடமைகள் எனென்ன? எவ்வகை மனிதரால் எவ்வகை வாழ்வு முறை நோற்கப்பட வேண்டும்? மன்னர்களின் கடமைகள் எனக் குறிப்பாகச் சொல்லப்படுபவை எவை?(2) எந்த வழிமுறைகளால் ஒரு நாடு வளர்ச்சியை அடையும்? மன்னன் வளர்ச்சியடைவதற்கான வழிமுறைகள் என்ன? ஓ! பாரதக் குலத்தின் காளையே {பீஷ்மரே}, மன்னனின் குடிமக்களும், அவனது பணியாட்களும் வளர்ச்சியடைவது எவ்வாறு?(3) என்ன வகைக் கருவூலங்கள், தண்டனைகள், கோட்டைகள், கூட்டாளிகள், அமைச்சர்கள், புரோகிதர்களை ஒரு மன்னன் தவிர்க்க வேண்டும்?[1](4) எந்தெந்த வகைத் துயரம் மற்றும் ஆபத்துகளில் மன்னன் யாரை நம்ப வேண்டும்? எந்தத் தீமைகளில் இருந்து மன்னன் தன்னை உறுதியாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(5)

செவ்வாய், டிசம்பர் 26, 2017

வேனனின் மகன் பிருது! - சாந்திபர்வம் பகுதி – 59ஆ

Vena's son Prithu! | Shanti-Parva-Section-59b | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 59)


பதிவின் சுருக்கம் : சிவன், இந்திரன், பிருஹஸ்பதி மற்றும் சுக்கிராச்சாரியரால் சுருக்கப்பட்ட பிரம்மனின் தண்டநீதி; உலகில் உள்ள மனிதர்களை ஆள ஒரு மன்னனைக் கொடுக்கும்படி விஷ்ணுவிடம் வேண்டிய தேவர்கள்; விரஜஸை உண்டாக்கிய விஷ்ணு; அதிபலனுக்கும், மிருத்யுவின் மகளான சுநீதைக்கும் பிறந்த வேனன்; வேனனைக் கொன்ற முனிவர்கள்; வேனனின் தொடையில் இருந்து உண்டான நிஷாதர்களும், மிலேச்சர்களும்; வேனனின் வலக்கரத்தில் இருந்து உண்டான பிருது; பூமியைச் சமமாக்கிய மன்னன் பிருது; ராஜன், க்ஷத்திரியன் ஆகிய சொற்கள் உண்டானதன் வரலாறு; பிருதுவின் பெருமை; தேவர்களுக்கு நிகராக மன்னன் மதிக்கப்படுவதற்கான புதிராதிக்கம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, "அதன் {பிரம்மன் தண்ட நீதியைத் தொகுத்த} பிறகு, தெய்வீகமானவனும், அகன்ற கண்களைக் கொண்டவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், அருள் அனைத்தின் இருப்பிடமும், உமையின் தலைவனுமான சிவன், அதை முதலில் கற்று, தேர்ச்சி பெற்றான்.(80) இருப்பினும், அந்தத் தெய்வீக சிவன், படிப்படியாகக் குறைந்து வந்த மனிதனின் வாழ்நாளைக் கருத்தில் கொண்டு, பிரம்மனால் தொகுக்கப்பட்டதும், முக்கியமான கருத்துகளைக் கொண்டதுமான அந்த அறிவியலைச் சுருக்கினான்[1].(81) பத்தாயிரம் {10,000} பாடங்களைக் கொண்ட வைசாலாக்ஷம் என்றழைக்கப்பட்ட அந்தச் சுருக்கம், பிரம்மனுக்கு அர்ப்பணிப்புள்ளவனும், பெரும் தவத்தகுதி கொண்டவனுமான இந்திரனால் பெறப்பட்டது.(82) அந்தத் தெய்வீக இந்திரனும் அந்த ஆய்வை ஐயாயிரம் {5,000} பாடங்களைக் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பாஹுதந்தகம் என்று அழைத்தான்.(83) அதன்பிறகு பலமிக்கவரும், நுண்ணறிவு கொண்டவருமான {தேவகுரு} பிருஹஸ்பதி, அந்த ஆய்வைக் கொண்ட படைப்பை மூவாயிரம் {3,000} பாடங்கள் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பார்ஹஸ்பத்தியம் என்றழைத்தார்.(84) அடுத்ததாக, யோகத்தின் ஆசானும், பெரும் புகழைக் கொண்டவரும், அளவிலா ஞானம் கொண்டவருமான {அசுர குரு} கவி {சுக்கிரன்}, அந்தப் படைப்பை ஆயிரம் {1000} பாடங்களைக் கொண்டதாக மேலும் சுருக்கினார்.(85) மனிதனின் வாழ்நாள் காலத்தின் குறைவையும், (அனைத்திடமும் காணப்படும்) பொதுவான குறைவையும் கருத்தில் கொண்டே அந்தப் பெரும் முனிவர்கள் அந்த அறிவியலை இவ்வாறு சுருக்கினர்.(86)

திங்கள், டிசம்பர் 25, 2017

பிரம்மனின் தண்டநீதி! - சாந்திபர்வம் பகுதி – 59அ

Brahma's science of chastisement! | Shanti-Parva-Section-59a | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 59)


பதிவின் சுருக்கம் : இரண்டாவது நாளாக பீஷ்மரிடம் போதனை கேட்கச் சென்ற பாண்டவர்களும், யாதவர்களும்; அரசன் என்ற சொல் உண்டானது எவ்வாறு, அரசனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அரசோ மன்னனோ அற்றிருந்த உலகில் மெல்ல அறம் வீழத் தொடங்கியது; அதை நிலைநிறுத்த தண்ட நீதியைத் தொகுத்த பிரம்மதேவன்; பிரம்மதேவன் தொகுத்த தண்டநீதியின் உள்ளடக்கங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் விவரித்த பீஷ்மர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அடுத்த நாள் தங்கள் படுக்கையில் இருந்து எழுந்து, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி காலைச் சடங்குகளைச் செய்த பாண்டவர்களும், யாதவர்களும், கோட்டைகளுடன் கூடிய நகரங்களுக்கு ஒப்பான தங்கள் தேர்களில் ஏறி (பீஷ்மர் கிடந்த இடத்திற்குப்) புறப்பட்டுச் சென்றனர்.(1) குருவின் களத்திற்கு {குருக்ஷேத்திரத்திற்குச்} சென்று, பாவமற்ற பீஷ்மரை அணுகிய அவர்கள், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} இரவை மகிழ்ச்சியாகக் கழித்தாரா என்பதை விசாரித்தனர்.(2) முனிவர்கள் அனைவரையும் வணங்கி, பதிலுக்கு அவர்களால் ஆசி கூறப்பட்ட இளவரசர்கள், பீஷ்மரைச் சுற்றி அமர்ந்தனர்.(3) அப்போது பெரும் சக்தி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், முறையாகப் பீஷ்மரை வணங்கிய பிறகு, கூப்பிய கரங்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(4)

சனி, டிசம்பர் 23, 2017

பாதுகாப்பின் வழிமுறைகள்! - சாந்திபர்வம் பகுதி – 58

Means of Security! | Shanti-Parva-Section-58 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 58)


பதிவின் சுருக்கம் : நாட்டைப் பாதுகாக்கும் வழிமுறைகள்; முயற்சியின் முக்கியத்துவமும், அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டிய அவசியமும்; மன்னனால் சமயத்திற்கேற்றவாறு கபடமும், கபடமற்ற நிலையும் ஏன் கைக்கொள்ளப்பட வேண்டும் என்பனவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சூரியன் மறையப்போவதால் தன் ஐயங்களை அடுத்த நாள் கேட்பதாகச் சொன்ன யுதிஷ்டிரன்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, குடிமக்களைப் பாதுகாப்பதே அரச கடமைகளில் முக்கியமானது. தெய்வீகமான பிருஹஸ்பதி வேறு எந்தக் கடமையையும் (இந்த ஒன்றைப் போல்) மெச்சவில்லை.(1) அகன்ற கண்களைக் கொண்டவரும், கடுந்தவங்களைக் கொண்டவருமான கவி (உசானஸ் {சுக்கிரன்}), ஆயிரங்கண் இந்திரன், பிரசேதஸின் மகன் மனு,(2) தெய்வீக பரத்வாஜர், தவசி கௌரசிரஸ் மற்றும் பிரம்மத்தை ஓதி, பிரமத்துக்கு அர்ப்பணிப்புடன் கூடிய அனைவரும் மன்னர்களின் கடமைகளைக் குறித்து உடன்படிக்கைகளைத் தொகுத்திருக்கிறார்கள்.(3) ஓ! அறவோரில் முதன்மையானவனே, அவர்கள் அனைவரும், மன்னர்களைப் பொறுத்தவரையில், பாதுகாப்பை வழங்கும் கடமையையே புகழ்ந்திருக்கின்றனர். ஓ! தாமரை இதழ்களைப் போன்றதும், தாமிர வண்ணம் கொண்டதுமான கண்களைக் கொண்டவனே, பாதுகாப்பை முயன்றடையும் வழிமுறைகளைக் குறித்துக் கேட்பாயாக.(4)

எவன் சிறந்த மன்னன்? - சாந்திபர்வம் பகுதி – 57

Who is the best of kings? | Shanti-Parva-Section-57 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 57)


பதிவின் சுருக்கம் : மன்னன் என்பவன் செயல்பட ஆயத்தமாக இருக்க வேண்டும்; குடிமக்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும்; அரச காரியங்களில் பணியில் அமர்த்தப்பட வேண்டியவர்களின் பண்புகள்; சிறந்த மன்னனுக்குரிய அடிப்படை தேவைகள்; எவன் ஆளத்தகுந்த மன்னன்; தவிர்க்கப்பட வேண்டிய ஆறு மனிதர்கள் ஆகியன குறித்து யுதிஷ்டிரனிடம் உரையாடிய பீஷ்மர்....


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, ஒரு மன்னன் எப்போதும் செயல்பட ஆயத்தமாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணைப் போல முயற்சியற்றிருக்கும் மன்னன் புகழத்தகாதவனாவான்.(1) ஓ! ஏகாதிபதி, இது தொடர்பாக, புனிதமான உசானஸ் {சுக்கிரன்} ஒரு சுலோகத்தைப் பாடியிருக்கிறார். ஓ! மன்னா, அதை நான் உரைக்கிறேன் கவனமாகக் கேட்பாயாக.(2) "போரில் வெறுப்புள்ள மன்னன், மனைவியர் மற்றும் பிள்ளைகளிடம் பெரும்பற்றுக் கொண்ட பிராமணன் ஆகிய இருவரையும், எலியை விழுங்கும் பாம்பைப் போலப் பூமியானவள் விழுங்குகிறாள்".(3) ஓ! மன்னர்களில் புலியே இதை நீ எப்போதும் உன் இதயத்தில் தாங்குவதே உனக்குத் தகும். (விதிப்படி) யாருடன் அமைதி பேணப்பட வேண்டுமோ அந்த எதிரிகளிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, யாருடன் போர்தொடுக்கப்பட வேண்டுமோ அந்த எதிரிகளிடம் போர் தொடுப்பாயாக.(4) ஏழு அங்கங்களுடன்[1] கூடிய உன் நாட்டிடம் பகைமை பாராட்டுபவன் உன் ஆசானோகவோ, உன் நண்பனாகவோ இருந்தாலும் கூட, அவன் உன்னால் கொல்லப்பட வேண்டும்.(5)

வியாழன், டிசம்பர் 21, 2017

ராஜநீதியுரைக்கத் தொடங்கிய பீஷ்மர்! - சாந்திபர்வம் பகுதி – 56

Bhishma began to disclose kingly duties! | Shanti-Parva-Section-56 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 56)


பதிவின் சுருக்கம் : ராஜநீதியை உரைக்குமாறு பீஷ்மரிடம் கேட்டுக் கொண்ட யுதிஷ்டிரன்; முயற்சி, விதி, உண்மைக்கு அர்ப்பணிப்பு, மென்மை மற்றும் கடும் நடத்தை ஆகியவற்றைச் சொல்லி, மனு, சுக்ரன் மற்றும் பிருஹஸ்பதி ஆகியோர் பழங்காலத்தில் பாடிய சுலோகங்களைச் சொன்னது; ஒரு மன்னன் தன் குடிமக்களை எவ்வாறு நடத்த வேண்டும்; பணியாட்களிடம் நடந்து கொள்ளக்கூடாத முறை ஆகியவற்றைச் சொன்ன பீஷ்மர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ரிஷிகேசனைப் {கிருஷ்ணனைப்} பணிந்து, பீஷ்மரை வணங்கி, அங்கே கூடியிருந்த பெரியோர் அனைவரிடமும் அனுமதியைப் பெற்றுக்கொண்டு பீஷ்மரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான் யுதிஷ்டிரன்.(1)

புதன், டிசம்பர் 20, 2017

போரில் கொலையே அறம்! - சாந்திபர்வம் பகுதி – 55

Slaughter is war virtue! | Shanti-Parva-Section-55 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 55)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைக் கொண்டாடிய பீஷ்மர்; உறவினர்களின் கொலைக்குக் காரணமாக அமைந்ததால் யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் பேச நாணுவதாகத் தெரிவித்த கிருஷ்ணன்; போரில் கொலையே அறமெனச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மரை வணங்கிய யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் சக்தியுடன் கூடியவரும், குருக்களைத் திளைக்கச் செய்பவருமான அவர் (பீஷ்மர்), "கடமைகள் {தர்மங்கள்} குறித்து நான் உரையாடப் போகிறேன். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அனைத்துப் பொருளின் நித்திய ஆன்மாவாக நீயே இருப்பதால், உன் அருளின் மூலம் என் பேச்சும், மனமும் உறுதியடைந்திருக்கின்றன.(1) அற ஆன்மாவான யுதிஷ்டிரன், அறநெறி மற்றும் கடமை குறித்து என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும். அதனால் நிறைவடைந்து கடமைகள் அனைத்தையும் குறித்து நான் பேசுவேன்.(2)

அறம் போதிப்பீராக! - சாந்திபர்வம் பகுதி – 54

Discourse on morality! | Shanti-Parva-Section-54 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 54)


பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் அறம் வினவும்படி யுதிஷ்டிரன் மற்றும் பிறரிடம் கேட்டுக் கொண்ட நாரதர்; கிருஷ்ணனே முதலில் கேட்க வேண்டும் என்று சொன்ன யுதிஷ்டிரன்; மன்னர்களுக்கு அறம்போதிக்கப் பீஷ்மரைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பெரும் தவசியே {வைசம்பாயனரே}, அற ஆன்மாவும், பெரும் சக்திகொண்டவரும், உண்மையை உறுதியுடன் பின்பற்றுபவரும், ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவரும், மங்காமகிமை கொண்டவரும், சந்தனு மற்றும் கங்கையின் மைந்தரும், தேவவிரதன், அல்லது பீஷ்மர் என்ற பெயரைக் கொண்டவருமான அந்த மனிதர்களில் புலி, தம்மைச் சுற்றி பாண்டு மகன்கள் அமர்ந்திருக்க, வீரர்களின் படுக்கையில் கிடந்தபோது, துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு நேர்ந்த அந்த வீரர்களின் சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1-3)

செவ்வாய், டிசம்பர் 19, 2017

துயிலெழுந்த கிருஷ்ணன்! - சாந்திபர்வம் பகுதி – 53

Krishna awoke! | Shanti-Parva-Section-53 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 53)


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் திருப்பள்ளியெழுச்சி; அதிகாலையில் விழித்தெழுந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனிடம் சாத்யகியை அனுப்பிய கிருஷ்ணன்; கிருஷ்ணன் பீஷ்மரிடம் செல்லக் காத்திருப்பதாக யுதிஷ்டிரனிடம் சொன்ன சாத்யகி; பாதுகாவலர்கள் வேண்டாம் என அர்ஜுனனிடம் மறுத்த யுதிஷ்டிரன்; பீஷ்மரை அடைந்து முனிவர்களை வணங்கிய கிருஷ்ணன், சாத்யகி மற்றும் பாண்டவர்கள் ஆகியோர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மதுசூதனன் {கிருஷ்ணன்} தன் படுக்கைக்குச் சென்று மகிழ்ச்சியாக உறங்கினான்.(1) பொழுது விடிய அரை யாமம் {ஜாமம்} இருக்கும்போது, அவன் ஆழ்ந்த தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். அவன் {கிருஷ்ணன்}, தன் புலன்கள் அனைத்தையும் நிலைநிறுத்தி, அழிவற்ற பிரம்மத்தைத் தியானித்தான்.(2) நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களும், பாடல்கள் மற்றும் புராணங்களை அறிந்தவர்களுமான ஒரு குழுவினர், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், அண்டத்தின் படைப்பாளனுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} புகழைச் சொல்லத் தொடங்கினர்.(3) வேறு சிலர் கைகளைத் தட்டிக் கொண்டு இனிய பாடல்களைப் பாடத் தொடங்கினர். வாய்ப்பாட்டுக்காரர்களும் பாடத் தொடங்கினர். சங்குகளும், பேரிகைகளும் ஆயிரக்கணக்கில் முழக்கி இசைக்கப்பட்டன.(4) வீணைகள், பணவங்கள், மூங்கில் புல்லாங்குழல்கள் ஆகியவற்றின் இனிய ஒலியும் கேட்கப்பட்டது. இவற்றின் விளைவால் கிருஷ்ணனின் அகன்ற அறையானது, இசையால் சிரிப்பது போலத் தெரிந்தது.(5)

வெள்ளி, டிசம்பர் 15, 2017

பீஷ்மருக்கு வரமளித்த கிருஷ்ணன்! - சாந்திபர்வம் பகுதி – 52

Krishna's boon to Bhishma! | Shanti-Parva-Section-52 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 52)


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனை மீண்டும் துதித்து, அவன் கேட்டதைச் செய்ய இயலாத தமது பலவீனத்தைச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மரின் களைப்பகற்ற அவருக்கு வரமளித்த கிருஷ்ணன்; சூரியன் மறைந்ததும் பீஷ்மரை விட்டகன்று தங்கள் மாளிகைகளுக்கு வந்த பாண்டவர்களும் கிருஷ்ணனும்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அறம் மற்றும் பொருள் நிறைந்த கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மைந்தர் பீஷ்மர் பின்வரும் வார்த்தைகளில் அவனுக்குப் பதிலளித்தார்.(1)

வியாழன், டிசம்பர் 14, 2017

மன்னரின் மயக்கத்தை விலக்குவீராக! - சாந்திபர்வம் பகுதி – 51

Dispel the clouded learning of the King! | Shanti-Parva-Section-51 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 51)


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனைத் துதித்த பீஷ்மர்; பீஷ்மரின் துதிகளை ஏற்று, அவரைப் புகழ்ந்து, மன்னன் யுதிஷ்டிரனின் அறிவு மயக்கத்தை விலக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர், தன் சிரத்தை சற்றே உயர்த்தி, கூப்பிய கரங்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)

புதன், டிசம்பர் 13, 2017

பீஷ்மரின் மகிமை! - சாந்திபர்வம் பகுதி – 50

The glory of Bhishma! | Shanti-Parva-Section-50 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 50)


பதிவின் சுருக்கம் : பீஷ்மரின் அருகாமையை அடைந்து அவரைச் சுற்றி அமர்ந்து கொண்ட கிருஷ்ணன், யுதிஷ்டிரன் மற்றும் பிறர்; பீஷ்மரைப் புகழ்ந்த கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ராமரின் {பரசுராமரின்} சாதனைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஆச்சரியத்தால் நிறைந்து, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்},(1) "ஓ! விருஷ்ணி குலத்தோனே, கோபத்தில் க்ஷத்திரயர்களிடம் இருந்து பூமியை விடுவித்த உயர் ஆன்ம ராமரின் {பரசுராமரின்} ஆற்றல் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானது.(2) க்ஷத்திரிய குலக்கொழுந்துகள், ராமர் {பரசுராமர்} மீது கொண்ட அச்சத்தால், பசுக்கள், பெருங்கடல், சிறுத்தை புலிகள் கரடிகள், குரங்குகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டனர் (மறைக்கப்பட்டு வளர்த்து வரப்பட்டனர்).(3) ஒரு பிராமணரால் அறச்சாதனை நிறைவேறும்போது, இவ்வுலகில் வசித்த மனிதர்கள் அனைத்துப் புகழுக்கும் தகுந்தவர்களாவர்" என்றான்.(4) இந்த உரையாடல் முடிந்த போது, மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய அந்தச் சிறப்புமிக்க மனிதர்கள், பலமிக்கக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} கணைகளின் படுக்கையில் கிடக்கும் இடத்திற்குச் சென்றனர்.(5)

செவ்வாய், டிசம்பர் 12, 2017

பரசுராமர்! - சாந்திபர்வம் பகுதி – 49

Parasurama! | Shanti-Parva-Section-49 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 49)


பதிவின் சுருக்கம் : பரசுராமரின் கதையைச் சொன்ன கிருஷ்ணன்; காதிக்குப் பிறந்த விஷ்வாமித்திரர்; காதியின் மகள் சத்தியவதிக்குப் பிறந்த ஜமதக்னி; ஜமதக்னிக்குப் பிறந்த பரசுராமர்; ஹைஹய குல க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்ட ஜமதக்னி; கோபத்தால் க்ஷத்திரிய குலத்தை அழித்த பரசுராமர்; கசியபருக்குப் பூமியைத் தானமளித்த பரசுராமர்; கசியபரிடம் இரந்து கேட்ட பூமாதேவி; பூமாதேவி குறிப்பிட்ட மன்னர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை மன்னர்களாக்கிய கசியபர்...


வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குந்தியின் மகனே, ராமரின் {பரசுராமரின்} சக்தி, ஆற்றல் மற்றும் பிறப்பைக் குறித்துப் பெருமுனிவர்களுடன் உரையாடும்போது நான் கேட்டவாறே சொல்கிறேன்; கேட்பீராக.(1) ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கோடிக்கணக்கான க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு? மேலும், பல்வேறு அரச குலங்களில் மீண்டும் பிறந்தவர்கள் எவ்வாறு மீண்டும் கொல்லப்பட்டனர்? என்பதைக் கேட்பீராக.(2) ஜாஹ்னுவுக்கு, ரஜன் {அஜன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். ரஜனுக்குப் பலாகாஸ்வன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். மன்னன் பலாகாஸ்வனுக்கு, நன்னடத்தைக் கொண்டவனாகக் குசிகன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான்.(3) பூமியில் ஆயிரங்கண் இந்திரனுக்கு ஒப்பானவனாக இருந்த குசிகன், மூவுலகங்களுக்குத் தலைவனாகும் மகனை விரும்பி கடுந்தவங்களைச் செய்து வந்தான்.(4)

ஞாயிறு, டிசம்பர் 10, 2017

க்ஷத்திரியர்கள் மீண்டதெவ்வாறு? - சாந்திபர்வம் பகுதி – 48

How were Kshatriyas revived? | Shanti-Parva-Section-48 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 48)


பதிவின் சுருக்கம் : பீஷ்மரைக் காணச் சென்ற கிருஷ்ணனும், யுதிஷ்டிரனும் வழியில் பேசிக் கொண்டது; பரசுராமரால் உண்டாக்கப்பட்ட தடாகங்களை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணன்; பரசு ராமர் க்ஷத்திரியர்களை இருபத்தோரு முறை அழித்ததும், க்ஷத்திரியர்கள் மீண்டும் வளர்ந்ததும் எவ்வாறு என்று கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு, ரிஷிகேசனும் {கிருஷ்ணனும்}, மன்னன் யுதிஷ்டிரனும், கிருபரின் தலைமையிலானவர்கள் அனைவரும், நான்கு பாண்டவர்களும், கொடிகள், கொடிமரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், அரணமைக்கப்பட்ட நகரங்களைப் போலத் தெரிந்தவையுமான தங்கள் தங்கள் தேர்களில், வேகமான குதிரைகளின் உதவியுடன் குருக்ஷேத்திரத்தை நோக்கி வேகமாகச் சென்றனர்.(1,2) மயிர், ஊனீர், எலும்புகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டதும், உயர் ஆன்மாக்களைக் கொண்டோரான லட்சோபலட்சம் க்ஷத்திரியர்கள் தங்கள் உடல்களை விட்ட இடமுமான அந்தக் களத்தில் இறங்கினர்.(3) மேலும் அது {அந்தக் களம்}, யானைகள், குதிரைகளின் எலும்புகளாலும் அமைந்த பல மலைகளாலும், சங்குகளைப் போலச் சிதறிக் கிடக்கும் மனிதத் தலைகளாலும், மண்டை ஓடுகளாலும் நிறைந்திருந்தது.(4) ஆயிரக்கணக்கான ஈமச்சிதைகளாலும், கவசங்கள் மற்றும் ஆயுதங்களின் குவியல்களாலும் நிறைந்திருந்த அந்தப் பரந்த களம், குடிப்பதற்காக அந்தகனால் பயன்படுத்தப்பட்டதும், அண்மையில் கைவிடப்பட்டதுமான அவனுடைய பானசாலையைப் போலத் தெரிந்தது.(5)

சனி, டிசம்பர் 09, 2017

பீஷ்மரின் துதி - ஸ்ரீ விஷ்ணு ஸ்தவராஜம்! - சாந்திபர்வம் பகுதி – 47

Bhishma's hymn - Shri Vishnu Stavraj! | Shanti-Parva-Section-47 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 47)


பதிவின் சுருக்கம் : பீஷ்மர் எவ்வாறு உயிர்துறந்தார் என வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; பாவங்களை அழிக்கும் ஸ்ரீவிஷ்ணுஸ்வராஜம் என்ற பீஷ்மரின் துதியை ஜனமேஜயனுக்கு உரைத்த வைசம்பாயனர்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "கணைப்படுக்கையில் கிடந்தவரான பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்} எவ்வாறு தன் உடலை விட்டார்? அவர் என்ன வகை யோகத்தைப் பின்பற்றினார்?" என்று கேட்டான்.(1)

வியாழன், டிசம்பர் 07, 2017

பீஷ்மரை நினைத்துக் கொண்டிருந்தேன்! - சாந்திபர்வம் பகுதி – 46

I was thinking of Bhishma! | Shanti-Parva-Section-46 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 46)


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டு வியந்து, அவனைத் துதித்த யுதிஷ்டிரன்; பீஷ்மர் தன்னை நினைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்ன கிருஷ்ணன்; பீஷ்மர் மறைவதற்குள் அவரிடமிருக்கும் அறிவுக்களஞ்சியத்தை அவரிடம் கற்றுப் பெறுமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்; இருவரும் சேர்ந்து செல்லலாம் என்று சொன்ன யுதிஷ்டிரன்...


யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! அளவிலா ஆற்றல் கொண்டோனே, நீ ஆழ்ந்த தியானத்தில் இருப்பது அற்புதம். ஓ! அண்டத்தின் பெரும்புகலிடமே, மூவுலகங்களும் நலமா?(1) ஓ! தேவா, ஓ! மனிதர்களில் காளையே, (இவ்வுலகில் இருந்து) நான்காம் நிலையைப் பின்பற்றி நீ உன்னை விலக்கிக் கொள்ளும்போது, என் மனம் ஆச்சரியத்தால் நிறைகிறது[1].(2) உடலுக்குள் செயல்படும் ஐந்து உயிர் மூச்சுகள் அசைவில்லாத உன்னால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இன்பத்தில் திளைத்திருக்கும் உன் புலன்கள் உன் மனத்திற்குள் உன்னால் குவிக்கப்படுகின்றன.(3) ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பேச்சும், மனமும் உன் புத்திக்குள் குவிக்கப்படுகின்றன. உண்மையில் உன் புலன்கள் அனைத்தும் உன் மனத்திற்குள் இழுக்கப்படுகின்றன[2].(4) உன் உடலில் உள்ள மயிர் சிலிர்த்திருக்கிறது. உன் மனமும், புத்தியும் அசைவற்றிருக்கின்றன. ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு மரத்தைப் போலவோ, பாறையைப் போலவோ நீ அசைவற்றவனாக இருக்கிறாய்.(5)

புதன், டிசம்பர் 06, 2017

ஆழ்தியானத்தில் கிருஷ்ணன்! - சாந்திபர்வம் பகுதி – 45

Krishna in rapt meditation! | Shanti-Parva-Section-45 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 45)


பதிவின் சுருக்கம் : பிராமணர்களுக்கும், குடிமக்களுக்கும் பெரும் தானங்களைச் செய்த யுதிஷ்டிரன்; கிருஷ்ணன் இருந்த இடத்திற்குச் சென்று அவனைத் துதித்தது; ஆழ்ந்த தியானத்தில் இருந்த கிருஷ்ணன்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! கற்ற பிராமணரே, தர்மனின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன் தன் நாட்டை மீட்ட பிறகு என்ன செய்தான் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்.(1) ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, மூவுலகங்களின் உயர்ந்த தலைவனான வீர ரிஷிகேசன் {கிருஷ்ணன்} இதன் பிறகு என்ன செய்தான் என்பதையும் எனக்கு நீர் சொல்ல வேண்டும்" என்று கேட்டான்.(2)

ஞாயிறு, டிசம்பர் 03, 2017

அரண்மனைகள் ஒதுக்கீடு! - சாந்திபர்வம் பகுதி – 44

Palace assigned! | Shanti-Parva-Section-44 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 44)


பதிவின் சுருக்கம் : போரில் கொல்லப்பட்ட குரு இளவரசர்களின் அரண்மனைகளைத் தன் தம்பிகளின் முறையான வசிப்பிடங்களாக ஒதுக்கிக் கொடுத்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனின் அரண்மனையில் தங்கிய கிருஷ்ணனும், சாத்யகியும்; தங்கள் தங்கள் வசிப்பிடங்களில் இரவைக் கழித்த இளவரசர்கள்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னன் {யுதிஷ்டிரன்} தன் குடிமக்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பினான். அவர்களும் அந்த ஏகாதிபதியின் ஆணைக்கிணங்க தங்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர்.(1) சுடர்மிகும் அழகு கொண்ட யுதிஷ்டிரன், பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகிய தன் தம்பியரிடம், அவர்களுக்கு ஆறுதலிக்கும் வகையில் (2) "இந்தப் பெரும்போரில் எதிரியின் பல்வேறு வகை ஆயுதங்களால் உங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் களைப்பை அடைந்திருக்கிறீர்கள். உங்கள் இதயங்கள் துயரத்தாலும், கோபத்தாலும் எரிகின்றன.(3) பாரதக் குலத்தின் காளைகளே, நான் செய்த குற்றத்தால், நீங்கள் இழிந்த மனிதர்களைப் போல நாடுகடத்தப்பட்டுக் காடுகளில் பேரிடரை அனுபவித்தீர்கள்.(4) (வெற்றியடைந்தவர்களான நீங்கள்) இப்போது இந்த வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடித் திளைப்பீராக. ஓய்வையும், உங்களுக்குத் தேவையானவற்றின் முழுப் பயனையும் அடைந்த பிறகு, காலையில் மீண்டும் என்னைச் சந்தியுங்கள்" என்றான்.(5)

சனி, டிசம்பர் 02, 2017

சதநாமாவளி! - சாந்திபர்வம் பகுதி – 43

Adoration by Hundred Names! | Shanti-Parva-Section-43 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 43)


பதிவின் சுருக்கம் : நூறு பெயர்களால் கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்; மனம் நிறைந்த கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் ஞானியும், தூய்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், நாட்டை மீண்டும் அடைந்து, முடிசூட்டுவிழாவும் முடிந்த பிறகு, தாமரைக் கண்ணனும், தசார்ஹ குலத்தோனுமான கிருஷ்ணனிடம் கரங்களைக் கூப்பி,(1) "ஓ! கிருஷ்ணா, ஓ! யதுக்களில் புலியே, உன் அருளாலும், உன் கொள்கை, வலிமை, நுண்ணறிவு, ஆற்றல் ஆகியவற்றாலுமே நான் என் மூதாதையரின் நாட்டை மீண்டும் அடைந்தேன். ஓ! தாமரைக் கண்ணனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே நான் உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.(2,3) நீயே ஒரே தலைவன்[1] என்று அழைக்கப்படுகிறாய். மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} உன்னை எண்ணற்ற பெயர்களால் அழைக்கின்றனர்.(4)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Blogger இயக்குவது.
Back To Top