நண்பர்களே!
இது இப்போதைக்கு முடியாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நடந்து விட்டது. நான் தட்டச்சு செய்யும் என்னிடம் இருக்கும் கோப்பையே பிடிஎப் ஆக்கி மென்நூலாக வெளியிடலாம் என்றால், அது நிறைய பிழைகளுடன் இருக்கும். அந்தக் கோப்பை அப்படியே வெளியிட எனக்கு மனம் வரவில்லை. தட்டச்சு செய்து வலையேற்றிய பிறகு அனைத்து பிழை திருத்தங்களும் ஆன்லைனிலேயே செய்யப்பட்டது. நானும் எனது நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களும் சேர்ந்து பல திருத்தங்களைச் செய்திருந்தோம். திருத்திய பதிப்பு மென்நூலாக வேண்டும் என்றால், வலைப்பூவில் இருக்கும் ஒவ்வொரு பதிவையும் MS Wordல் காப்பி செய்து, பிறகு மென்புத்தகமாக்க (E-book) வேண்டும். முழு ஆதிபர்வத்தையும் ஒவ்வொரு பதிவாகக் காப்பி செய்து, அதைத் தொகுத்து பிடிஎப் கோப்பாகத் தயாரித்து வெளியிடுவதற்கு அதிகம் நேரம் இருக்காது. மேலும் அவற்றைக் காப்பி செய்தாலும், அவை சரியாக காப்பி ஆகவில்லை. ஆகையால், முழு ஆதிபர்வ மென்நூல் வெளியிட மிகத் தாமதம் ஆகும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
இந்த நேரத்தில் பலர் 001-150க்குப் பிறகு இன்னும் மென்நூல் வரவில்லையே என்று மின்னஞ்சல்கள் அனுப்பிக் கொண்டிருந்தனர். ஆகையால், நமது வலைப்பூவின் விவாதமேடை பகுதியில் ஒரு கோரிக்கை வைத்தேன். வாசக நண்பர்கள் யாரேனும் தன்னார்வத்துடன், இந்த வலைப்பூவில் இருக்கும் பதிவுகளைக் காப்பி செய்து கொடுத்தால், நான் மென்புத்தகமாக வெளியிடுவேன் என்று கூறியிருந்தேன்.
நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் அனைத்துப் பதிவுகளையும் MS Word-ல் காப்பி செய்தது மட்டுமல்லாமல், அழகாக Formatting-ம் செய்து அதை எனக்கு அனுப்பி வைத்து உதவினார். நான் முகப்பு அட்டையை மட்டும் தயார் செய்து அதனுடன் இணைத்து இந்தப் பிடிஎப் கோப்பை வெளியிடுகிறேன்.
வாசக நண்பர்கள் அனைவரும் உங்கள் நண்பர்களுக்கும் முகநூல் (Facebook), கீச்சு (Twitter), Google+ மூலம் இந்தக் கோப்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தக் கோப்பு கோடிக்கணக்கான தமிழர்களுக்கு இலவசமாகச் சென்றடைய வேண்டும் என்பதே நம் நோக்கம்
மேலிருக்கும் படத்தைக் கிளிக் செய்யுங்கள். பதிவிறக்கப் பக்கம் திறக்கும். அதில் Download என்ற பச்சை நிற பட்டனைக் கிளிக் செய்தால், கோப்பு பதிவிறங்கும், View என்ற பட்டனை கிளிக் செய்தால் கோப்பை ஆன்லைனில் படிக்கலாம்.