Showing posts with label கோஷ யாத்ரா பர்வம். Show all posts
Showing posts with label கோஷ யாத்ரா பர்வம். Show all posts

Friday, August 29, 2014

சொர்க்கத்தை மறுத்த முத்கலர்! - வனபர்வம் பகுதி 259

Mudgala declined heaven!  | Vana Parva - Section 259 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சொர்க்கம், நிலையற்றது என்றெண்ணிய முத்கலர் சொர்க்கத்தை ஏற்க மறுத்தது; முத்கலரின் கதையைச் சொன்ன வியாசர் திரும்பிச் சென்றது...

தேவர்களின் தூதுவன் {முத்கலரிடம்}, "ஓ! பெரும் தவசியே {முத்கலரே}, நீர் குறைந்த அறிவுள்ளவராக இருக்கிறீர்; பெரும் புகழைத் தரத்தக்க தெய்வீக அருளை அடைந்தும், ஞானமற்ற மனிதரைப் போல இன்னும் தீர்மானித்துக் கொண்டிருக்கிறீர். ஓ! முனிவரே {முத்கலரே}, சொர்க்கம் என்று அறியப்படும் பகுதி, நமக்கு மேலே இருககிறது. கோபுரத்தின் உயரங்களுக்கு மேலே இருக்கும் அது, ஓ! தவசியே {முத்கலரே}, எப்போதும் தெய்வீகத் தேர்கள் பயணிக்கும் அற்புதமான பாதைகளைக் கொண்டிருக்கிறது. நாத்திகர்கள், உண்மையற்றவர்கள், தவம் பயிலாதவர்கள், பெரும் வேள்விகளைச் செய்யாதவர்கள் ஆகியோர் அங்குச் செல்ல முடியாது. அறம்சார்ந்த ஆன்மா கொண்டவர்கள், மனதை அடக்கியவர்கள், தங்கள் உணர்வுகளை அடக்கியவர்கள், தங்கள் புலன்கள் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள், தீமை விலக்கியவர்கள், தானம் செய்வதில் முனைப்புடன் இருப்பவர்கள், புலன்களையும், உள்ளுணர்வுகளையும் வென்று, போர்வடுக்களை மேனியில் தாங்கிய மனிதர்கள் மட்டுமே அந்தப் பகுதிகளை அடைய முடியும். ஓ! அந்தணரே {முத்கலரே}, நற்செயல்கள் செய்பவர்களால் அடையப்படும் அவ்வுலகங்களில் பக்திமான்களே வசிக்கின்றனர்.

Thursday, August 28, 2014

முத்கலரும்! துர்வாசரும்! - வனபர்வம் பகுதி 258

Mudgala and Durvasa!  | Vana Parva - Section 258 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

முத்கலர் மற்றும் துர்வாசகர் கதையை வியாசர் யுதிஷ்டிரனுக்கு உரைத்தல்; துர்வாசர் முத்கலரைச் சோதித்தால்; முத்கலரை அழைத்துச் செல்ல தேவ தூதன் வந்தது...


யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஏன் அந்த உயர் ஆன்மா கொண்டவர் {முத்கலர்} ஒரு துரோணம் சோளத்தைத் தானமளித்தார்? ஓ! பக்தியில் பெரியவரே {வியாசரே}, யாருக்கு, எந்தக் குறிப்பிட்ட முறையில் அவர் தானமளித்தார்? இதை நீர் எனக்குச் சொல்லும். அனைத்தையும் சாட்சியாகக் கண்டு வரும், ஆறு குணம் கொண்டவனை {பரமாத்மாவை}, தனது பயிற்சிகளால் நிறைவு கொள்ள வைத்த அறம்சார்ந்த மனிதன், தன் பிறவிப் பயனை அடைந்தவனாவான் என நான் கருதுகிறேன்" என்றான்.

Wednesday, August 27, 2014

காம்யகம் வந்த வியாசர்! - வனபர்வம் பகுதி 257

Vyasa visited Kamyaka!  | Vana Parva - Section 257 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

காம்யக வனத்தில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; தானம், தவம் ஆகியவற்றில் எது அதிகப் பலனைக் கொடுக்கும் என்ற விளக்கம்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, காட்டில் வசிக்கும் அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள், அவல நிலையிலேயே பதினோரு {11} வருடங்களைக் கழித்தனர். மகிழ்ச்சியை அனுபவிக்கத் தகுந்த அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள, தங்களுக்கு ஏற்பட்ட சூழ்நிலையால் அடைகாக்கும் நிலையை அடைந்து, பழங்களிலும், கிழங்குகளிலும் வாழ்ந்து, தங்கள் நாட்களைத் துன்பகரமாகவே கழித்தனர். அந்த அரசமுனியான பலமிக்கக் கரங்கள் கொண்ட யுதிஷ்டிரன், தன் தம்பிகளுக்கு நேர்ந்த இந்த எல்லை கடந்து துன்பம், தனது தவறாலேயே ஏற்பட்டது என்று நினைத்தான். தன் சூதாட்டச் செயலால் விளைந்த அந்தத் துன்பங்களை நினைத்துப் பார்த்த அவனால் {யுதிஷ்டிரனால்} நிம்மதியாக உறங்க முடியவில்லை. தன் இதயம் ஈட்டியால் துளைக்கப்பட்டதைப் போல உணர்ந்தான். சூத மகனின் {கர்ணனின்} கடுமையான வார்த்தைகளை நினைத்துப் பார்த்த அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, தன் கோப விஷத்தை ஒடுக்கி, பெருமூச்சு விட்டபடி, தனது நேரத்தை எளிமையான தோற்றத்தில் கழித்தான். அர்ஜுனன், இரட்டையர் இருவர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, சிறப்புமிக்கத் திரௌபதி, மனிதர்களில் பெரும் பலம் படைத்த பராக்கிரமம் மிக்கப் பீமன் ஆகியோர், தங்கள் பார்வையை யுதிஷ்டிரன் மேல் செலுத்தும்போதெல்லாம் {அவன் நிலையைக் கண்டு} மிகவும் கசப்பான வலியை உணர்ந்தனர். (வனவாசக் கெடுவில்) மிகக் குறைந்த காலமே எஞ்சியிருப்பதை நினைத்துப்பார்த்து, கோபமும் நம்பிக்கையும் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், பல்வேறு முயற்சிகளையும் பயிற்சிகளையும் நாடி, தங்கள் உடல்களைப் பல்வேறு உருவங்களில் சமைத்தனர்.


சிறிது காலம் கழித்து வலிமைமிக்கத் துறவியும், சத்தியவதியின் மகனுமான வியாசர் பாண்டவர்களைக் காண அங்கே வந்தார். தங்களை நோக்கி அவர் வருவதைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன் முன்சென்று, அந்த உயர் ஆன்மா கொண்டவரை முறைப்படி வரவேற்றான். வியாசரை வணங்கி, அவரை மனம் நிறைய வைத்த புலன்களை அடக்கிய பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்த முனிவர் அமர்ந்த பிறகு, அவர் சொல்வதைக் கேட்கும் வண்ணம், அவருக்கு முன்பு அமர்ந்தான். தனது பேரர்கள் மெலிந்து போய், காட்டில் கிடைப்பதை வைத்து உண்டு வாழ்வதைக் கண்ட அந்த வலிமைமிக்கத் தவசி {வியாசர்}, இரக்கத்தால் உந்தப்பட்டு, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், “ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் சிறந்தவனே, கடும் தவம் புரியாதவர்கள் இவ்வுலகில் பெரும் மகிழ்ச்சியை அடைய முடியாது. மனிதர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறியே அனுபவிக்கிறார்கள்; இது நிச்சயம். ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, எந்த மனிதனும் தடையற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. உயர்ந்த ஞானத்தைக் கொண்ட ஒரு ஞானி, வாழ்வு என்பது பள்ளம் மேடுகள் நிறைந்ததே என்பதை அறிந்து, இன்பத்தாலோ, துன்பத்தாலோ நிறைந்திருப்பதில்லை.

பயிரைத் {விதைகளைத்} தூவுபவன் {பயிரிடும் உழவன்}, காலத்தை உணர்ந்து, பயிரின் பலன்களை அனுபவிப்பதைப் போல, மகிழ்ச்சி வரும்போது ஒருவன் மகிழ்ந்திருக்க வேண்டும்; துன்பம் வரும்போது, அவன் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும். தவத்திற்கு மேன்மையானது எதுவுமில்லை; தவத்தினால் ஒருவன் வலிமையான கனியை அடைகிறான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தவத்தால் அடைய முடியாதது எதுவும் இல்லை என்பதை அறிந்து கொள். உண்மை, நேர்மை, கோபத்தில் இருந்து விடுதலை, நீதி, சுய அடக்கம், காரியங்களில் கட்டுப்பாடு, அசுத்தம் விலக்கல், சூதற்ற தன்மை, புனிதம், புலன்கள் ஒடுக்கம் ஆகியவை, ஓ! வலிமைமிக்க ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, நற்செயல்கள் செய்யும் ஒரு மனிதனை சுத்தப்படுத்துகின்றன. தீமை மற்றும் மிருகத்தனமான வழிகளுக்கு அடிமையாக இருக்கும் மூடர்கள், இவ்வாழ்வுக்குப் பிறகு, மிருகத்தனமான பிறப்புகளை அடைந்து {மிருகங்களாகப் பிறந்து}, எப்போதும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. இவ்வுலகில் செய்யப்படும் செயல்களின் கனிகளையெல்லாம், {அம்மனிதன்} அடுத்த உலகில் அறுக்கிறான். எனவே, ஒருவன் தவத்தாலும், நோன்புகள் நோற்பதாலும் தனது உடலை கட்டுப்படுத்த வேண்டும்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சூதற்ற மகிழ்ச்சியான மனதுடன், {தானம்} பெறுபவர்களிடம் சென்று, அவருக்கு மரியாதை செலுத்தி, தனது சக்திக்குத் தக்க ஒருவன் தானம் அளிக்க வேண்டும். உண்மை பேசும் மனிதன், தொல்லைகளற்ற வாழ்வைப் பெறுகிறான். கோபம் களைந்த ஒருவன் நேர்மையை அடைகிறான். துர்குணம் களைந்த ஒருவன் உச்சபட்ச மனநிறைவை அடைகிறான். தனது புலன்களையும், உள்மனதையும் வென்ற ஒருவன், இன்னல்களை அறியமாட்டான். புலன்களை வென்ற ஒரு மனிதன் மற்றவர்களுடைய செழிப்பின் உயர்வைக் கண்டு பாதிப்படையமாட்டான். அனைவருக்கும் அவர்களுக்கு உரியதைக் கொடுத்து, வரங்களை அளிப்பவன், மகிழ்ச்சியை அடைந்து, அவனது இன்பத்திற்கான அனைத்துப் பொருட்களையும் அடைகிறான். பொறாமை களைந்த மனிதன் பூரண நிம்மதியை அடைகிறான். மரியாதைக்குரியவர்களை மரியாதையுடன் நடத்துபவன், சிறப்புமிக்கக் குலத்தில் பிறப்பை அடைகிறான். தன் புலன்களை வெல்பவன், தீப்பேறுகளைச் {துரதிர்ஷ்டங்களைச்} சந்திப்பதில்லை. நன்மையைத் தொடரும் மனதுடையவன் {நன்மை செய்ய விரும்புபவன்}, இயற்கைக்குத் தான் செய்ய வேண்டிய கடனை செலுத்துவதன் காரணமாக, நேர்மையான மனதுடையவனாக மீண்டும் பிறக்கிறான்" என்றார்.

யுதிஷ்டிரன் {வியாசரிடம்} கேட்டான், "ஓ! அறம்சார்ந்தவர்களில் சிறந்தவரே, ஓ! வலிமைமிக்கத் தவசியே {வியாசரே}, தானமளிப்பதிலும், தவம் மேற்கொள்வதிலும், அடுத்த உலகத்திற்குத் தேவையான கூடுதல் செயல்திறனை {அல்லது பலாபலனை = efficacy} எது கொடுக்கும்? பயில்வதற்கு {செய்வதற்கு} எது கடினமானது?" என்று கேட்டான்.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, தானத்தைவிட இவ்வுலகில் பயில்வதற்குக் கடினமானது ஏதுமில்லை. செல்வத்தில் {அதைச் சம்பாதிப்பதில்} மனிதர்கள் அதிகத் தாகம் கொள்கின்றனர். செல்வமும் சிரமத்துடனே அடையப்படுகிறது. ஓ! பெருந்தன்மை கொண்டவனே, வீர மனிதர்கள், செல்வத்தை அடைவதற்காக, தங்கள் இன்னுயிரையும் கைவிட்டு {இன்னுயிர் மீதுள்ள பற்றைக் கைவிட்டு} கடலின் ஆழங்களுக்குள்ளும், கானகத்திற்குள்ளும் நுழைகின்றனர். செல்வத்திற்காக, சிலர் உழவு {விவசாயம்} செய்கின்றனர், சிலர் பசுக்களை வளர்க்கின்றனர், சிலர் சேவகம் செய்கின்றனர். எனவே, இத்தகு சிரமங்களுக்கு ஆட்பட்டு அடையும் செல்வத்தைத் துறப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. தானத்தைவிடப் பயில்வதற்குக் கடினமானது எதுவும் இல்லையென்பதால், வரங்களை அளிப்பது கூட, அனைத்திற்கும் மேன்மையானது என்பது எனது கருத்து.

குறிப்பாக ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். முறையாக அடைந்த செல்வத்தை, சரியான நேரத்தில், சரியான இடத்தில் பக்தியுள்ள மனிதர்களுக்குக் {தானம்} கொடுக்க வேண்டும். ஆனால், முறையற்று அடைந்த செல்வத்தைக் கொண்டு தானம் செய்பவன், மறுபிறவியின் தீமையில் இருந்து தப்ப முடியாது. ஓ! யுதிஷ்டிரா, குறித்த நேரத்தில், தகுந்த ஆளுக்கு {தானம் பெறுபவருக்கு}, சுத்தமான மனதுடன் சிறு தானத்தைச் செய்தால் கூட, {அந்த தானமளிக்கும் மனிதன்}, மறு உலகத்தில் வற்றாத பலன்களை அடைவான் என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஒரு பழங்கதை இருக்கிறது. முத்கலர், ஒரு துரோணம் [1] சோளத்தைத் தானம் செய்ததால் நல்ல பலனை அடைந்தார்.

[1] மிகச் சிறிய அளவு {அளவுகோல்} என்கிறார் கங்குலி. சமஸ்க்ருதத்தில் ‘த்ரோணீ’ என்றால் வாளி போன்ற ஒரு பாத்திரம், அது போன்றதொரு பாத்திரத்தில் பிறந்ததாலேயே துரோணருக்கும் அவ்வாறு பெயர் வந்தது. துரோணம் என்பது ஒரு பாத்திர அளவாக இருக்கக்கூடும்.இந்த இடத்தில் இருந்து விரீஹித்ரௌணிக பர்வம் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் கங்குலியின் மொழிபெயர்ப்பில் கோஷ யாத்திரா பர்வமே தொடர்கிறது. 260பகுதியில் தான் கோஷயாத்திரா பர்வம் முடிகிறது. அதன் பிறகு  261ம் பகுதியில் திரௌபதி ஹரணப் பர்வம் தொடங்குகிறது.


இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


யுதிஷ்டிரன் கனவில் வந்த மான்கள்? - வனபர்வம் பகுதி 256

Deer dream of Yudhishthira!  | Vana Parva - Section 256 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரன் கனவில் வந்த மான்கள், பாண்டவர்கள் துவைத வனத்தை விட்டுப் போகும்படியும், தாங்கள் பல்கிப் பெருக வழி கொடுக்கும்படியும் இரந்து கேட்டது; தன் கனவைத் தனது தம்பிகளுக்கு வெளிப்படுத்திய யுதிஷ்டிரன், அனைவரையும் அழைத்துக் கொண்டு காம்யகம் சென்றது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், "துரியோதனனை விடுவித்த பிறகு, பாண்டுவின் பலமிக்க மகன்கள் அந்தக் காட்டில் என்ன செய்தனர்? இதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்"


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஒரு சமயம், யுதிஷ்டிரன், இரவில் துவைத வனத்தில் படுத்துக் கொண்டிருந்தபோது, ஏதோ சில மான்கள், கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவனது கனவில் தோன்றின. கூப்பிய கரங்களுடன் உடல் நடுங்க நின்று கொண்டிருந்தவற்றிடம் {மான்களிடம்} அந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, “நீங்கள் சொல்ல விரும்பியதை என்னிடம் சொலுங்கள். நீங்கள் யார்? நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான். {பாண்டவர்களால்} கொல்லப்பட்டவையில் மீந்திருந்த அந்தமான்கள், குந்தியின் மகனான சிறப்புமிக்கப் பாண்டவனால் {யுதிஷ்டிரனால்}, இப்படி அணுகி அழைக்கப்பட்டபோது, அவை அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, {உங்களால்} கொல்லப்பட்டவைகளில் இன்னும் உயிரோடு இருப்பவர்கள் நாங்கள். நாங்கள் {உங்களால்" மொத்தமாகக் கொல்லப்படலாம். எனவே, உங்கள் வசிப்பிடத்தை மாற்றுங்கள். ஓ! பலமிக்க மன்னா {யுதிஷ்டிரா}, உனது தம்பிகள் அனைவரும் ஆயுதங்கள் அறிந்த வீரர்கள். இந்தக் காட்டில் வசிப்பவற்றின் எண்ணிக்கையை அவர்கள் குறைத்துவிட்டனர். ஓ! பலமிக்க மனம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, எஞ்சியவர்களான நாங்களே இப்போது {எங்கள் குலத்தின்} வித்தாக இருக்கிறோம். ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, உன் கருணையால் எங்களைப் பல்கிப் பெருக விடு" என்றன.

அழிக்கப்பட்டவை போக வித்துப் போல மீந்திருந்த அந்த மான்கள் அச்சத்துடன் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட நீதிமானான யுதிஷ்டிரன் பெரும் துயரால் தாக்கப்பட்டான். அனைத்து உயிர்களின் நன்மையைக் கருத்தில் கொண்ட அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அவற்றிடம் {அந்த மான்களிடம்}, “அப்படியே ஆகட்டும். நீங்கள் சொன்னது போலவே செயல்படுகிறேன்" என்றான். இப்படிப்பட்ட காட்சியால் விழித்தெழுந்த அந்த அற்புதமான மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த மான்களின் மீது இரக்கம் கொண்டு, அங்குக் கூடியிருந்த தனது தம்பிகளிடம், “கொல்லப்பட்டவை போக மீந்திருக்கும் அந்த மான்கள், இரவில் என்னை அணுகி அழைத்து, "நாங்கள் எங்கள் குலங்களின் நினைவுக் குறிப்புகளைப் போலவே எஞ்சியிருக்கிறோம். நீ அருளப்பட்டிரு. எங்களிடம் இரக்கங்கொள்" என்றன. அவை உண்மையையே பேசியுள்ளன. நாம் இந்தக் கானகவாசிகளிடம் {வனவிலங்குகளிடம்} பரிதாபம் கொள்ள வேண்டும். ஒரு வருடம் மற்றும் எட்டு மாதங்களாக நாம் அவற்றை உணவாகக் கொண்டிருக்கிறோம்.

எனவே, பாலைவனத்தின் தொடக்கத்தில், திருணபிந்து எனும் தடாகத்திற்கு அருகில், வனவிலங்குகள் நிறைந்த, கானகங்களில் சிறந்த, அழகிய காம்யக வனத்திற்கே நாம் மீண்டும் செல்வோம். அங்கே நமது மீத நாட்களை இனிமையாகக் கடத்துவோம்" என்றான். பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அறநெறிகள் அறிந்த பாண்டவர்கள், தங்களுடன் இருந்த அந்தணர்கள் மற்றும் தங்களோடு வாழ்ந்தவர்களோடு, இந்திரசேனன் மற்றும் பிற பணியாட்களுடன் விரைவராக (அந்த இடத்திற்கு) சென்றனர். சோளம் மற்றும் தெளிந்த நீர் நிறைந்த, (பயணிகள்) நடக்கும் பாதை வழியாக முன்னேறி, கடைசியாகக் காம்யக வனத்தில் ஆன்மத் தகுதி உடையவர்கள் நிறைந்த புனிதமான ஆசிரமத்தைக் கண்டார்கள். தெய்வீக உலகங்களுக்குள் நுழையும் பக்திமான்கள் போல, பாரதக் குலத்தின் முதன்மையான அந்தக் கௌரவர்கள் {பாண்டவர்கள்}, அந்த அந்தணர்களில் காளைகளால் சூழப்பட்டு, அந்தக் கானகத்தில் {காம்யகத்திற்குள்} நுழைந்தார்கள்.இந்த இடத்தோடு மிருகஸ்வப்நோத்பவ பர்வமும் முற்றுபெற்று, அடுத்த பகுதியில் இருந்து விரீஹித்ரௌணிக பர்வம் ஆரம்பிக்கிறது. ஆனால் கங்குலி இங்கும் கோஷ யாத்திரா பர்வத்தைத் தொடர்ந்து செல்கிறார்.260பகுதியில் தான் கோஷயாத்திரா பர்வத்தை முடிக்கிறார். அதன் பிறகு 261ம் பகுதியில் திரௌபதி ஹரணப் பர்வம் தொடங்குகிறது.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, August 26, 2014

கர்ணனின் சபதம்? - வனபர்வம் பகுதி 255

The vow of Karna!  | Vana Parva - Section 255 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

துரியோதனன் செய்த வேள்வி, யுதிஷ்டிரன் செய்த வேள்வியின் பதினாறில் ஒரு பங்குக்குக் கூட ஈடாகாது என்று சிலர் சொல்வது; நண்பர்கள் துரியோதனன் செய்த வேள்வியை மெச்சுவது; நான் எப்போது ராஜசூய வேள்வியைச் செய்வேன் என்று துரியோதனன் கேட்பது; கர்ணன் ஏற்கும் நோன்பு; கர்ணன் ஏற்ற சபதத்தைக் கேள்விப்பட்ட யுதிஷ்டிரன் துயருறுவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, துரியோதனன் (நகரத்திற்குள்) நுழைந்து கொண்டிருந்த போது, தோற்காத வலிமை கொண்ட அந்த இளவரசனைப் புகழ்ச்சியாளர்கள் {சூதர்கள்} துதிபாடினர். அந்த வலிமைமிக்க வில்லாளியான மன்னர்களில் முதன்மையானவனை {துரியோதனனை} பிறரும் புகழ்ந்தனர். அவன் மீது நெல் பொரிகளையும் {fried paddy}, சந்தனக் குழம்பையும் வாரி இறைத்த குடிமக்கள், “ஓ! மன்னா {துரியோதனா}, நீ அடைந்த நற்பேறாலேயே உனது வேள்வி தடையில்லாமல் நிறைவேறியது" என்றார்கள். அங்கிருந்தவர்களில் இரக்கமற்ற பேச்சுக் கொண்ட சிலர் அந்தப் பூமியின் தலைவனிடம் {துரியோதனனிடம்}, “நிச்சயமாக, இவ்வேள்வி யுதிஷ்டிரனுடைய வேள்வியுடன் ஒப்பிட முடியாததாகும்; இது அதில் {யுதிஷ்டிரன் நடத்திய வேள்வியில்} பதினாறில் ஒரு பங்கிற்குக்கூட ஈடாகாது" என்றனர். பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காத பொறுப்பற்ற சிலர் அம்மன்னனிடம் இப்படியே பேசினர்.

இருப்பினும் அவனது {துரியோதனனின்} நண்பர்கள், “உனது இந்த வேள்வி மற்ற அனைத்தையும் விஞ்சி நிற்கிறது. இதுபோன்ற வேள்வியைச் செய்து புனிதமடைந்த யயாதி, நகுஷன், மாந்தாதா, பாரதன் ஆகியோர் சொர்க்கம் சென்றனர்" என்றனர். இத்தகு ஏற்புடைய வார்த்தைகளைத் தனது நண்பர்களிடம் கேட்ட அந்த ஏகாதிபதி {துரியோதனன்}, ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, மிகவும் மனநிறைவு கொண்டு, நகரத்திற்குள் நுழைந்து இறுதியாகத் தனது சொந்த வசிப்பிடத்திற்குச் சென்றான். பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தன் தந்தை {திருதராஷ்டிரன்}, தாய் {காந்தாரி}, பீஷ்மர், துரோணர், கிருபர், ஞானியான விதுரன் ஆகியோரைத் தலைமையாகக் கொண்ட பிறரின் பாதங்களை வழிபட்டான். பிறகு தன் தம்பிகளால் வழிபடப்பட்டான். அந்தத் தம்பிகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவன் {துரியோதனன்}, தம்பிகள் சூழ தனது அற்புத இருக்கையில் அமர்ந்தான்.

அப்போது, சூதனின் மகன் {கர்ணன்} எழுந்து, “ஓ! பாரதகுலத்தில் முதன்மையானவனே {துரியோதனா}, உனது இந்தப் பெரும் வேள்வி, நீ பெற்ற நற்பேறாலேயே நல்ல முறையில் நிறைவடைந்தது. எனினும், பிருதையின் {குந்தியின்} மகன்களைப் {பாண்டவர்களைப்} போர்க்களத்தில் கொன்ற பிறகு, நீ ராஜசூய வேள்வியைச் செய்யும்போது, ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, நான் உனக்கும் மீண்டும் பெருமையை ஏற்படுத்துவேன்" என்றான். பிறகு திருதராஷ்டிரன் மகனான அந்தப் பலமிக்க மன்னன் {துரியோதனன்}, “நீ சொல்வது உண்மையே. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கர்ணா}, தீய மனம் கொண்ட பாண்டவர்கள் கொல்லப்பட்டு, பிரம்மாண்டமான ராஜசூயம் என்னால் செய்யப்படும்போது, ஓ! வீரா {கர்ணா}, நீ மீண்டும் என்னைப் பெருமைப் படுத்துவாய்" என்று மறுமொழி கூறினான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, இப்படிச் சொன்ன அந்தக் கௌரவன் {துரியோதனன்} கர்ணனை ஆரத்தழுவி, ஓ! பலமிக்க மன்னா {ஜனமேஜயா}, வேள்விகளில் முதன்மையான ராஜசூயத்தைக் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தான்.

அந்த மன்னர்களில் சிறந்தவன் {துரியோதனன்}, தன்னைச் சூழ்ந்திருந்த குருக்களிடம், “கௌரவர்களே, பாண்டவர்களைக் கொன்று, பெரும்பொருட்களால் செய்ய வேண்டிய ராஜசூயம் என்ற முதன்மையான வேள்வியை நான் எப்போது செய்வேன்?” என்று கேட்டான். அப்போது, கர்ணன் அவனிடம் {துரியோதனனிடம்}, “ஓ மன்னர்களில் களிறே {யானையே} {ராஜகுஞ்சரா} {துரியோதனா}, நான் சொல்வதைக் கேள். அர்ஜுனனை நான் கொல்லாதவரை, நான் யாரையும் எனது பாதத்தைக் கழுவ விட மாட்டேன்; இறைச்சியை உண்ணாதிருப்பேன்; நான் அசுர நோன்பை நோற்பேன் [1], எவர் என்னிடம் எதைக் (எந்தப் பொருளைக்) கோரினாலும், “அது என்னிடம் இல்லை" என்று எப்போதும் சொல்ல மாட்டேன்.” என்றான் கர்ணன். போர்க்களத்தில் பல்குனனைக் {அர்ஜுனனைக்} கொல்வேன் என்று கர்ணன் சபதமேற்ற போது, பெரும் பலம் வாய்ந்த ரதசாரதிகளும், பெரும் வில்லாளிகளுமான திருதராஷ்டிரனின் மகன்கள் உற்சாகத்தால் பெருத்த ஆரவாரம் செய்தனர். அந்தத் திருதராஷ்டிரனின் மகன்கள் பாண்டவர்கள் ஏற்கனவே வெல்லப்பட்டதாகவே நினைத்தனர். பிறகு, மன்னர்களின் தலைவனான அருள் நிறைந்த துரியோதனன், மனிதர்களில் காளையரான அவர்களை விட்டுவிட்டு, சித்திரரதத் தோட்டத்திற்குள் நுழையும் தலைவன் குபேரனைப் போலத் தனது அறைக்குள் நுழைந்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளிகள் அனைவரும் தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்றனர்.

[1] (பர்துவான் பண்டிட்டுகளின் {வங்காள மொழியில் பாரதத்தை மொழிபெயர்த்தவர்கள் என நினைக்கிறேன்} கூற்றுப்படி) இந்த அசுரர்கள் நோன்பு என்பது மது குடிக்க மாட்டேன் என்று நோன்பேற்பதாகும் {இங்கே கும்பகோணம் தமிழ் பதிப்பும் மதுவுண்ண மாட்டேன் என்றே சொல்கிறது}. ஆனால் இங்கே ஆரியர்களின் சுத்தமான நடத்தைகளைக் கைவிட்டு, "எனது விருப்பம் நிறைவேறும் வரை அசுரர்களின் நடத்தையைக் கைக்கொள்வேன்" என்று கர்ணன் நோன்பேற்பதாகக் கொள்வதே பகுத்தறிவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கங்குலி சொல்கிறார். வழக்கம் போல இந்த விளக்கத்துக்கு மத்தியில் { } என்ற அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும் கருத்துகள் என்னுடையவை.

அதேவேளையில், தூதர்கள் பேசிய வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெரும்பலம் வாய்ந்த வில்லாளிகளான பாண்டவர்கள் பரபரப்படைந்து, கவலையடைந்தனர். (அந்நேரத்தில் இருந்து) அவர்கள் சிறு மகிழ்ச்சியையும் அனுபவிக்கவில்லை. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மேலும், விஜயனை {அர்ஜுனனைக்} கொல்ல சூதமகன் {கர்ணன்} ஏற்ற சபதத்தைப் புலனாய்வின் மூலம் பெற்ற {பாண்டவர்களின்} ஒற்றர்கள், அச்செய்தியை அவர்களுக்குக் {பாண்டவர்களுக்குக்} கொண்டு வந்தனர். ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, இதைக் கேட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, கவலையின் எல்லையை அடைந்தான். துளைக்க முடியாத கவசம் கொண்ட கர்ணனை அற்புத பராக்கிரமம் கொண்டவன் என்று கருதி, தங்கள் துன்பங்களையெல்லாம் நினைவு கூர்ந்த அவன் {யுதிஷ்டிரன்}, அமைதியை அறியவில்லை. கவலை நிறைந்த அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவன் {யுதிஷ்டிரன்}, மூர்க்கமான விலங்குகள் நிறைந்த அந்தத் துவைதவனத்தைக் கைவிட மனதில் தீர்மானம் கொண்டான்.

அதேவேளையில், திருதராஷ்டிரனின் அரச மகன் {துரியோதனன்}, தனது வீரமிக்கத் தம்பிகளுடனும், பீஷ்மர், துரோணர் மற்றும் கிருபருடனும் சேர்ந்து பூமியை ஆளத் தொடங்கினான். படையெடுப்பு செய்த புகழ் என்ற மகுடம் தரித்த சூதமகனின் {கர்ணனின்} உதவியுடன் துரியோதனன், எப்போதும் பூமியின் ஆட்சியாளர்களின் நன்மையிலேயே எப்போதும் குறியோடு இருந்தான். அபரிமிதமான தானங்களுடன் வேள்விகளைச் செய்து அந்தணர்களில் முதன்மையானவர்களை வழிபட்டான். எதிரிகளை வீழ்த்துபவனான அந்த வீரன் {துரியோதனன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தானத்தையும் இன்பம் அனுபவிப்பதையும் பலனாகக் கொண்டவையே செல்வங்கள் என்பதை உறுதியாக மனதில் தீர்மானித்துத் தனது தம்பிகளுக்கு நன்மைகளைச் செய்தான்.இந்த இடத்தோடு கோஷயாத்திரா பர்வம் முற்றுபெற்று மிருகஸ்வப்நோத்பவ பர்வம் ஆரம்பிக்கிறது. ஆனால் கங்குலி இங்கு முடிக்காமல் கோஷயாத்திரா பர்வத்தைத் தொடர்ந்து செல்கிறார்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Monday, August 25, 2014

பீமனின் கோபம்? - வனபர்வம் பகுதி 254

The wrath of Bhima!  | Vana Parva - Section 254 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

வேள்வி செய்வதற்காகத் துரியோதனன் அனைவரையும் அழைப்பது; துச்சாசனன் பாண்டவர்களை அழைக்க ஒரு தூதுவனை அனுப்புவது; யுதிஷ்டிரன் வாழ்த்துவது; பீமன் கோபத்துடன் பேசி, துரியோதனனுக்கு எச்சரிக்கை அனுப்புவது; வேள்வி நிறைவடைவது; துரியோதனன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு அனைத்து கைவினைஞர்களும், முக்கியமான ஆலோசகர்களும் {அமைச்சர்களும்}, உயர்ந்த ஞானம் கொண்ட விதுரனும், திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, “அற்புதமான வேள்விக்குரிய அனைத்து தயாரிப்புகளும் முடிந்துவிட்டன. ஓ! மன்னா {துரியோதனா}, ஓ பாரதா, நேரமும் வந்துவிட்டது. பெரும் மதிப்புமிக்கத் தங்கக் கலப்பையின் நிர்மாணம் முடிந்தவிட்டது" என்றனர். இதைக் கேட்ட மன்னர்களில் சிறந்தவனான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} வேள்விகளில் தலைமையான வேள்வியை ஆரம்பிக்க உத்தரவிட்டான். பிறகு, அபரிமிதமான உணவு வகைகளுடன், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட அந்த வேள்வி ஆரம்பித்தது. காந்தாரியின் மகன் {துரியோதனன்} அவ்வேள்வியை விதிப்படி தொடங்கிவைத்தான். திருதராஷ்டிரன், சிறப்புமிகுந்த விதுரன், பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், கொண்டாடப்படும் காந்தாரி ஆகியோர் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தனர்.

துரியோதனனின் வைஷ்ணவ வேள்வி? - வனபர்வம் பகுதி 253

Vaishnava Sacrifice of Duryodhana!  | Vana Parva - Section 253 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

ராஜசூய வேள்வி செய்ய விரும்பிய துரியோதனன்; யுதிஷ்டிரனும் திருதராஷ்டிரனும் உயிரோடு இருப்பதால் துரியோதனன் அவ்வேள்வியைச் செய்ய முடியாது என்று புரோகிதர் சொன்னது; ராஜ சூய வேள்விக்கு ஈடான வைஷ்ணவ வேள்வியைத் துரியோதனன் செய்யலாம் என்று சொன்னது; வைஷ்ண வேள்வி செய்ய நடந்த ஏற்பாடுகள்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா, ஓ !மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, எதிரி வீரர்களைக் கொல்பவனான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ! கௌரவா, துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உன் இதயத்தில் நிறுத்து. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, எனது வார்த்தைகளைக் கேட்ட பின்பு, அனைத்து வழிகளிலும் அதன்படி செயல்படுவதே உனக்குத் தகும். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, ஓ! வீரா, இப்போது இந்தப் பூமி {உனக்கு} எதிரிகளற்று இருக்கிறது. எதிரிகளை அழித்த பிறகு மனோபலம் கொண்ட சக்ரன் {இந்திரன்} எப்படி ஆண்டானோ, அதே போல அவளை {பூமியை} ஆட்சி செய்" என்றான்.

Sunday, August 24, 2014

கர்ணனின் திக்விஜயம்? - வனபர்வம் பகுதி 252

Digvijaya of Karna!  | Vana Parva - Section 252 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பூமியின் நாற்புறமும் உள்ள மன்னர்களையும் வீழ்த்திய கர்ணன் மீண்டும் ஹஸ்தினாபுரம் திரும்பியது; கர்ணனை துரியோதனன் பாராட்டியது; துரியோதனனும், சகுனியும் அடைந்த பெருமிதம்...


வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், "பிறகு, ஓ! பாரதர்களில் காளையே {ஜனமேஜயா}, அந்தப் பெரும் பலம்வாய்ந்த வில்லாளியான கர்ணன், பெரிய படை சூழ துருபதனின் அழகிய நகரத்தை முற்றுகையிட்டான். அதன்பிறகு நடைபெற்ற கடும்போரில், அந்த வீரனைத் {துருபதனைத்} தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயா} துருபதனை அவனுக்கு {கர்ணனுக்கு} வெள்ளி, தங்கம் மற்றும் ரத்தினங்களைக் காணிக்கையாகக் கொடுக்க வைத்து, அவனைக் கப்பமும் கட்ட வைத்தான்.[1] ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா} அவனை {துருபதனை} அடக்கிய பிறகு, அவனுக்குக் (துருபதனுக்குக்) கீழ் அடங்கியிருந்த பிற இளவரசர்களையும் தனது (கர்ணன்) கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்களையும் கப்பம் கட்ட வைத்தான்.


[1] ஆதிபர்வம் 140வது பகுதியில் "நெருப்புச் சக்கரம் போல அந்தக் களத்தில் சுழன்ற துருபதன், தனது கணைகளால் துரியோதனன், விகர்ணன் மற்றும் பலம்வாய்ந்த கர்ணனையும் மற்றும் பல வீர இளவரசர்களையும், எண்ணற்ற வீரர்களையும், அடித்து, அவர்களின் போர்த் தாகத்தைத் தணித்தான்" என்றும், "பிறகு, கௌரவர்கள், போர் தங்களுக்கெதிராக உக்கிரமடைவதைக் கண்டு, போர் செய்வதை விடுத்து, பாண்டவர்களை நோக்கி ஓடினர்" என்றும் வருகிறது. இங்குக் கர்ணனும் சேர்ந்து துருபதனிடம் புறமுதுகிடுகிறான் என்பதைக் கவனிக்கவும். வனபர்வத்தின் இந்தப் பகுதியில் நிகழும் போரில் கர்ணன் தனியாகச் {துரியோதனன் படையுடன் சேர்த்துத்தான்} சென்று, திருஷ்டத்யுமனன் துணையுடன் கூடிய துருபதனை வீழ்த்தினான் என்று வருகிறது என்பதையும் கவனிக்கவும்.

பிறகு வடக்கு நோக்கி சென்ற அவன் அந்தப் பகுதியின் மன்னர்களைத் தனக்கு அடிபணிய வைத்து, பகதத்தனுக்குத் தோல்வியைக் கொடுத்த ராதையின் மகன் {கர்ணன்}, தனது எதிரிகளுடன் போரிட்டுக் கொண்டே மாபெரும் மலையான இமயத்தின் மீது ஏறினான். அங்கே அனைத்துப் பக்கங்களுக்கும் சென்று, இமயத்தில் வசித்த அனைத்து மன்னர்களையும் தனக்கு அடிபணியச் செய்து, அவர்களைக் கப்பம் கட்ட வைத்தான். பிறகு அந்த மலையில் இருந்து இறங்கி, கிழக்கிற்கு விரைந்து, அங்கம், வங்கம், கலிங்கம், மண்டிகம் {சுண்டிகம், மிதிலை ஆகிய இரண்டும் சேர்ந்த பகுதி என்று நினைக்கிறேன்}, மகதம், கர்க்ககண்டம் ஆகிய நாடுகளையும், பின்பு ஆவசீரம், யோத்யம், அஹிக்ஷத்ரம் ஆகிய நாடுகளையும் வீழ்த்தினான்.

(இப்படி) கிழக்குப்பகுதியை வென்ற கர்ணன், பிறகு தன்னை வத்ஸபூமியில் வெளிப்படுத்தினான். வத்ஸபூமியை வென்று, ஆகியோரையும் வென்று அந்த நாடுகள் அனைத்தையும் கப்பம் கட்ட வைத்தான். கேவலம், மிருத்திகாவதி மோஹனம், பத்ராணம், திரிபுரம், கோசலம் ஆகிய நாடுகளையும் வீழ்த்தி, அவர்கள் அனைவரையும் தனக்குக் கப்பம் கட்ட வைத்தான்.

பிறகு தெற்கே சென்ற கர்ணன், (அந்தப் பகுதியில் உள்ள) பலம்வாய்ந்த தேரோட்டிகளை வீழ்த்தினான். தென்னாட்டில் {Dakshinatya = தக்ஷிநாட்யத்தில்} அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} ருக்மியுடன் மோதலில் நுழைந்தான். கடுமையாகப் போரிட்டபிறகு, ருக்மி, சூதனின் மகனிடம் {கர்ணனிடம்}, "ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {கர்ணா}, உனது பலத்தையும் பராக்கிரமத்தையும் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு நான் தீங்கிழைக்க மாட்டேன். நான் க்ஷத்திரியக் கடமையையே நிறைவேற்றினேன். நீ விரும்பும் தங்க நாணயங்களை மகிழ்ச்சியுடன் உனக்குக் கொடுப்பேன்" என்றான். ருக்மியைச் சந்தித்த பிறகு, கர்ணன், பாண்டியநாட்டிற்கும், ஸ்ரீ என்ற மலைக்கும் சென்றான். காரலன், மன்னன் நீலன், வேணுதாரியின் மகன், மற்றும் தெற்கு திசையில் வாழ்ந்த மன்னர்களில் சிறந்தவர்கள் அனைவருடனும் போரிட்டு அவர்களைக் கப்பம் கட்ட வைத்தான்.

பிறகு சிசுபாலனின் மகனிடம் சென்ற சூதனின் மகன் {கர்ணன்} அவனை வீழ்த்தினான். அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {கர்ணன்}, {சேதி நாட்டுக்கு அருகில் இருந்த} அண்டை நாட்டு ஆட்சியாளர்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, அவந்தி நாட்டினரை அடக்கி, அவர்களோடு அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு, விருஷ்ணிகளைச் சந்தித்த அவன் [2], மேற்குப்பகுதிகளை வென்றான். வருணன் பகுதிக்கு வந்த அவன் அனைத்து யவன, பர்ப்பர {Varvara} மன்னர்களையும் தனக்குக் கப்பம் கட்ட வைத்தான்.

[2] விருஷ்ணிகளைச் சந்தித்தான் என்றால் வென்றான் என்றே பொருள் என நினைக்கிறேன். அப்படிக் கர்ணன் விருஷ்ணிகளை வென்றான் என்றால் கிருஷ்ணனையும் பலராமனையும் வென்றானா என்பதை இங்குத் தெளிவுபடக் கூறவில்லை.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்தையும் வென்ற அந்த வீரன், தனக்கு எந்த உதவியுமின்றி அனைத்து மிலேச்ச, மலைவாசி, பத்ர, ரோகித, அக்னேய, மாலவ நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். நகனஜிதனைத் தலைமையாகக் கொண்ட பெரும் பலம்வாய்ந்த ரதசாரதிகளை வென்ற அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, சசகர்களையும், யவனர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இப்படி முழு உலகையும் தனக்கு அடிபணிய வைத்த அந்தப் பலம்வாய்ந்த தேரோட்டியும், மனிதர்களில் புலியுமானவன் {கர்ணன்} ஹஸ்தினாபுரத்திற்கு (திரும்பி) வந்தான்.

தன் தந்தை, தம்பிகள், நண்பர்களுடன் இருந்த மனிதர்களின் தலைவனான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, போர்த்தகுதிகளால் மகுடம் சூடப்பட்டுத் திரும்பி வந்திருந்த அந்தப் பலம்வாய்ந்த வில்லாளியிடம் {கர்ணனிடம்} வந்து அவனுக்கு {கர்ணனுக்கு} உரிய வரவேற்பைக் கொடுத்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, "பீஷ்மரிடமோ, துரோணரிடமோ, கிருபரிடமோ, பாஹ்லீகரிடமோ பெறாதாதை, நான் உன்னிடம் பெறுகிறேன். நன்மையே உனக்கு நேரட்டும்! நீளமாகப் பேச வேண்டிய தேவை என்ன? ஓ! கர்ணா! எனது வார்த்தைகளைக் கேள்! ஓ! மனிதர்களின் தலைவா {கர்ணா}, உன்னிடமே எனது புகலிடத்தைக் கொண்டிருக்கிறேன் {நீயே எனது அடைக்கலம்}. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே, ஓ மனிதர்களில் புலியே, பாண்டவர்களும், செழுமையால் முடிசூட்டப்பட்ட மன்னர்கள் அனைவரும் சேர்ந்தாலும், உன்னில் பதினாறில் ஒரு பங்குக்குக்கூட அவர்கள் ஈடாக மாட்டார்கள். ஓ! வலிமைமிக்க வில்லாளியே, ஓ! கர்ணா, வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} அதிதியைக் காண்பது போல, திருதராஷ்டிரரையும், சிறப்புமிக்கக் காந்தாரியையும் பார்" என்றான்.

பிறகு ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த ஹஸ்தினாபுர நகரத்தில் ஓ! என்றும் ஐயோ! என்றும் ஆரவாரம் எழுந்தது. ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, சில மன்னர்கள் அவனைப் (கர்ணனைப்) புகழவும், சிலர் நிந்திக்கவும், சிலர் அமைதியாகவும் இருக்கவும் செய்தனர். ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இப்படி மலைகள், காடுகள், வானம், கடல்கள், ஏராளமான உயர்ந்த மற்ற தாழ்ந்த நிலப்பரப்புகள், நகரங்கள், தீவுகள் ஆகியவற்றைக் கொண்ட இந்தப் பூமியைக் குறுகிய காலத்தில் {கர்ணன்} வென்றான். ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, இப்படியே அனைத்து ஏகாதிபதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வற்றாத செல்வத்தை வென்ற சூதனின் மகன் {கர்ணன்} மன்னனின் {துரியோதனன்} முன்னிலையில் தோன்றினான்.

பிறகு, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, அந்த மாளிகையின் உள்ளே சென்ற வந்த வீரன் {கர்ணன்}, காந்தாரியுடன் இருந்த திருதராஷ்டிரனைக் கண்டான். ஓ! மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, அறநெறிகள் அறிந்த அவன் {கர்ணன்}, ஒரு மகனைப் போல அவனது {திருதராஷ்டிரன்} பாதத்தைப் பற்றினான். திருதராஷ்டிரனும் அவனைப் பாசத்துடன் அரவணைத்து, பிறகு அவனுக்கு விடை கொடுத்தனுப்பினான். அந்நேரத்திலிருந்து, ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனனும், சுபலனின் மகனான சகுனியும், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, போர்க்களத்தில் ஏற்கனவே கர்ணனால் வீழ்த்தப்பட்டதாகவே கருதினர்."

[1], [2] ஆகிய விளக்கங்களுக்கு நண்பர்களின் மறுமொழியைக் கீழே இங்கே அளிக்கிறேன். 

[1]க்கான நண்பர் திரு.மெய்யப்பன் அருண் அவர்களின் மறுமொழி 

ஆதி பர்வம் 140–ல் அங்க மன்னன் கர்ணன் துருபதனிடம் தோல்வியுற்றதாக கருதுகின்றீர்கள் ஆனால் என்னுடைய புரிதல் என்னவெனில்

மகாபாரதத்தில் அங்க மன்னன் கர்ணன் வருமிடங்களில் வியாசர் கர்ணனை வசுசேணன், ராதேயன் , சூதாவின் மகன், விகர்த்தன குமாரன், வ்ருஷா, போன்ற பெயர்களையும் சேர்த்து குறிப்பிடுவார். இது ஏனைய முக்கிய கதாப்பாத்திரங்களும் பொருந்தும். துருபதானான போரில் கர்ணனை அவ்வாறான எந்த பெயரிலும் குறிப்பிடவில்லை . மேலும் திருதிராஷ்டிரரின் 48-வது மகனின் பெயரும் கர்ணனே. அந்த 140 வது பகுதியில் வியாசர் துரியோதணின் சில தம்பிகளின் வரிசையிலே கர்ணனை குறிப்பிடுகின்றார். நிச்சயம் அது அங்கதேசத்து மன்னன் கர்ணனாக இருந்திருந்தால் கர்ணனின் சிறப்புபெயர்களில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டிருப்பார்.

எனவே அந்த கர்ணன் திருதராஸ்டிரரின் 48 வது மகன் கர்ணனே.

[1] நண்பர் திரு.மெய்யப்பன் அருண் அவர்களின் மறுமொழிக்கு, நண்பர் திரு.ராமராஜன் மாணிக்கவேல் அவர்களின் மறுப்பு

நண்பர் திரு.மெய்யப்பன் இட்டப்பதிவில் அது திருதராஷ்டரன் 48வது மகன் கர்ணன் என்று சொல்லி உள்ளார்.  எனக்கு அதில் உடன் பாடு இல்லை. காரணம்
//துரியோதனன், கர்ணன், பலம்வாய்ந்த யுயுத்சு, துட்சாதனன், விகர்ணன், ஜலசந்தன், சுலோசனன் ஆகியோரும், பெரும் வீரம் கொண்ட க்ஷத்திரிய இளவரசர்கள் பலரும் சேர்ந்து தாக்குதலில் முன்னணி பெற ஒருவருக்கொருவர் போட்டியிட்டுச் சென்றனர்// 

பகுதி 140ல் வியாசபெருமான் துரியோதன் அதற்கு அடுத்து கர்ணன் என்று ஏன் வரிசை வைத்து சொல்லவேண்டும்? பெரும் வீரனாகிய துட்சாதனனை பலம்வாய்ந்த யுயுத்சுக்கு பின்னால் ஏன் வைக்கிறார்? அப்படி என்றால் வீரம் இங்கு காட்டப்படுகின்றது. 48வது மகன் கர்ணன் பெரும் வீரன் என்று எங்காவது காட்டப்பட்டு உள்ளதா?

//நெருப்புச் சக்கரம் போல அந்தக் களத்தில் சுழன்ற துருபதன், தனது கணைகளால் துரியோதனன், விகர்ணன் மற்றும் பலம்வாய்ந்த கர்ணனையும் மற்றும் பல வீர இளவரசர்களையும், எண்ணற்ற வீரர்களையும், அடித்து, அவர்களின் போர்த் தாகத்தைத் தணித்தான்//

மேற்கண்ட பதிவில் துரியோதன், விகர்ணன், பலம்வாய்ந்த கர்ணனையும் என்று சொல்லிவிட்டு மற்றும் பல வீர இளவரசர்கள் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாராவில் துச்சாதனன் யுயுச்சு பெயரைக்கூட விட்டுவிட்டவர் ஏன் கர்ணன் பெயரை மட்டும் விட்டுவிட வில்லை? மீண்டும் இங்கு வீரமே சுட்டப்படுகின்றது. துரியோதனனுக்கு நிகரான அர்ஜுனனுக்கு நிகரான ஒரு வீரன் கர்ணன் அவனை விட்டுவிட வியாசருக்கு மனம் இல்லை அடை மொழி தந்தாலும் தராவிட்டாலும் அது அங்கநாட்டு மன்னன் கர்ணன்தான்.
நன்றி.

[2]க்கான நண்பர் திரு.ராமராஜன் மாணிக்கவேல் அவர்களின் மறுமொழி

திக்விஜயம் என்பது ஒரு கொடியின் கீழ் ஒரு நாட்டைநோக்கி படை நடத்துவது இது ஒரு தூதுப்போலத்தான், தூது வென்றால் பரிசைப்பெறலாம் தூது வெல்லைவில்லை என்றால் திறமையைக்காட்டவேண்டும். திக்விஜயம் செய்தவன் வென்றால் நாட்டை அந்த நாட்டுமன்னனிடமே கொடுத்துவிட்டு பரிசுப்பெற்று முன்னேறுவது மட்டும். அதன்பின் அவன் சுதந்திரநாடு உடையவன்தான். திக்விஜயம் செய்தவன் தோற்றால் நாடு வென்றவனுக்கு கிடைக்காது அதனுடன் அவன் திரும்பி தனது நாட்டுக்கு செல்லவேண்டும்.
கர்ணன் திக்விஜயம் செய்வது ஹஸ்தினபுரியின் கொடியின் கீழ் இவனோடு போர்புரிவதால் எந்த நன்மையும் கண்ணனுக்கு கிடையாது வெறும் நேரவிரயமும், படை நஷ்டமும்தான் இதை சிறந்த ஞானியான கண்ணன் உணர்ந்து கர்ணனுடன் நட்புக்கரம் நீட்டி இருப்பார். கர்ணனும் வெல்லவில்லை கண்ணனும் தோற்கவில்லை என்ற நிலை. இன்னும் ஒரு ராஜதந்திரமும் இதில் உண்டு. தோற்றவன் தூங்குவதில்லை வெற்றிக்காக ஓடிக்கொண்டே இருக்கிறான் ஆனால் வென்றவன் மமதையில் திறமையை இழக்கின்றான். கர்ணனின் திறமைக்கு இதுவே கடைசி முற்றுப்புள்ளியாகவும் கண்ணன் வைக்கிறார்.


துருபதனும், திருஷ்டத்தியுமனும் இறுதிப்போர் பதிநான்காவது ஆண்டில் உண்டு என்று நிச்சயமாக எண்ணுகின்றார்கள் அங்கு துரியோதனனுக்கும், கர்ணனுக்கும் இலக்கு வகுக்கப்பட்டு உள்ளது அதுதான் அவர்களின் இந்த தோல்விக்கும் காரணம். தன்னை வென்ற அர்ஜுனனை மருமகனாக அடையவேண்டும் என்றே இலக்கு நிர்ணயத்தவன் துருபதன் அவன் மதியூகம் எத்தனை காலத்தை தாண்டி உள்ளது. சிந்திக்க வைக்கிறது.
நன்றி
வாழ்க வளமுடன் 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, August 23, 2014

பாண்டவர்களுக்கு ஈடா கர்ணன்? - வனபர்வம் பகுதி 251

"Karna,  is not a fourth part of the Pandavas" said Bhishma!  | Vana Parva - Section 251 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

வனம் சென்றதற்காகப் பீஷ்மர் துரியோதனனைக் கடிந்து கொண்டது; கர்ணன் துரியோதனனிடம் பீஷ்மரைப் பழித்துப் பேசியது; 'நான்கு பாண்டவர்கள் சேர்ந்து வென்ற பூமியை நான் ஒருவனாகவே வெல்வேன்' என்று சூளுரைக்கும் கர்ணன், துரியோதனனிடம் அனுமதி பெற்றுக் கிளம்புவது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், "பிருதையின் {குந்தியின்} உயர் ஆன்ம மகன்கள் கானகத்தில் வாழ்ந்த போது, மனிதர்களில் முதன்மையானவர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமான திருதராஷ்டிரனின் மகன்கள் என்ன செய்தார்கள்? சூரியனின் வாரிசான கர்ணனும், பலமிக்கச் சகுனியும், பீஷ்மரும், துரோணரும், கிருபரும் என்ன செய்தார்கள்? இவையனைத்தையும் எனக்கு நீர் சொல்வதே தகும்"


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பலம்வாய்ந்த மன்னா {ஜனமேஜயா}, இப்படிச் சுயோதனனை {துரியோதனனை} விட்டுப் பாண்டவர்கள் சென்ற பிறகு, பாண்டுவின் மகன்களால் விடுதலை பெற்று அவன் ஹஸ்தினாபுரம் வந்த போது, அந்தத் திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, பீஷ்மர், "ஓ! குழந்தாய் {துரியோதனா}, அந்த ஆசிரமத்திற்குப் பயணிக்கும் உங்கள் நோக்கம் எனக்குத் திருப்தியைத் தரவில்லை என்பதை நான் உனக்கு முன்பே சொன்னேன். ஆனால் நீ அதைச் செய்தாய். அதன் தொடர்ச்சியாக, ஓ! வீரா, நீ எதிரியால் பலவந்தமாகச் சிறைப்பிடிக்கப்பட்டாய். அறநெறிகளை அறிந்த பாண்டவர்களால் விடுவிக்கப்பட்டாய். இருப்பினும் நீ வெட்கப்படவில்லை. ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, உனது முன்னிலையிலேயே, ஓ!மன்னா {துரியோதனா}, உன் படைகளுடன் கூடிய சூதனின் மகன் {கர்ணன்} பீதியடைந்து, கந்தர்வர்களுடனான போரில் இருந்து தப்பி ஓடினான்.

Friday, August 22, 2014

நரகாசுரனே கர்ணன்! - வனபர்வம் பகுதி 250

The soul of the slain Naraka hath assumed the form of Karna!  | Vana Parva - Section 250 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தானவர்களும் தைத்தியர்களும் துரியோதனனுக்குத் தாங்கள் எவ்வாறெல்லாம் உதவ முடியும் என்று சொன்னது; கர்ணன் நரகாசுரனின் ஆன்மா கொண்டவன் என்று சொன்னது; உயிரைத் துறக்கும் முடிவைக் கைவிடச் சொல்லி மீண்டும் துரியோதனனை அதே இடத்தில் விட்டது; நடந்தது அத்தனையும் கனவெனத் துரியோதனன் நினைத்தது; கர்ணன் துரியோதனனுக்குச் சொன்ன வார்த்தைகள்; துரியோதனன் தனது சொந்த நகரத்திற்குத் திரும்பியது…

தானவர்கள் {துரியோதனனிடம்}, "ஓ! சுயோதனா, ஓ! பெரும் மன்னா! ஓ! பாரதக் குலத்தைத் தழைக்க வைப்பவனே, நீ எப்போதும் வீரர்களாலும், சிறப்பு மிகுந்த மனிதர்களாலும் சூழப்பட்டு இருக்கிறாய். பிறகு ஏன் நீ பட்டினி நோன்பு எனும் இத்தகு மூர்க்கச் செயலைச் செய்கிறாய்? தற்கொலை எப்போதுமே நம்மை நரகத்திலேயே ஆழ்த்தும். மேலும் நம்மை இகழ்ச்சி பேச்சுக்குப் பாத்திரமாக வைக்கும். புத்திக்கூர்மையுள்ள மனிதர்கள், தங்கள் சிறந்த விருப்பங்களுக்கு எதிராக, தங்கள் நோக்கங்களின் வேரையே தாக்கும் பாவம் நிறைந்த செயல்களில் கை வைக்க மாட்டார்கள். எனவே, ஓ! மன்னா, அறநெறிகள், லாபம், மகிழ்ச்சி, புகழ், பராக்கிரமம், சக்தி ஆகியவற்றுக்கு அழிவைத் தந்து, எதிரிக்கு மகிழ்ச்சியைத் தரும் உனது இந்தத் தீர்மானத்தில் இருந்து பின்வாங்கு. ஓ! மேன்மையான மன்னா {துரியோதனா}, உனது உடலை உண்டாக்கிய உனது ஆன்மாவின் தெய்வீக மூலத்தைத் தெரிந்து கொண்டு, உண்மையை அறிந்து கொள். பிறகு பொறுமையை உனது உதவிக்கு அழைத்துக் கொள்.
பழங்காலத்தில் ஓ! மன்னா {துரியோதனா}, பெரும் ஆன்ம தவங்கள் செய்து நாங்கள் உன்னை மகேஸ்வரனிடம் {சிவனிடம்} இருந்து அடைந்தோம். உனது உடலின் மேல் பகுதி {தொப்புளுக்கு மேலே} வஜ்ரக் குவியலால் செய்யப்பட்டது. எனவே, ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, அஃது எவ்வகை ஆயுதத்தாலும் பாதிப்படையாது. பெண்களின் இதயங்களைக் கவரும் ஈர்ப்புடன் உடைய உனது உடலில் கீழ்ப்பகுதி {தொப்புகளுக்குக் கீழே}, மலர்களைக் கொண்டு மகாதேவரின் மனைவியால் செய்யப்பட்டது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, இப்படியே உனது உடல் மகேஸ்வரனாலும் அவனது தேவியாலும் {உமையாலும்} படைக்கப்பட்டதாகும். எனவே, ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, நீ மனிதனல்ல; தெய்வீகத் தன்மை கொண்டவனாவாய். பகதத்தனின் தலைமையில் உள்ள பெரும் பலம் கொண்ட மற்ற வீரமிக்க க்ஷத்திரியர்கள் அனைவரும், தெய்வீக ஆயுதங்களைப் பெற்றிருப்பதால், உனது எதிரிகளைக் கொல்வார்கள். எனவே, உனது இந்தத் துயரத்தை நிறுத்து. நீ அஞ்சத்தக்க காரணம் ஏதுமில்லை. உனக்கு உதவி செய்வதற்காகப் பல வீரமிக்கத் தானவர்கள் பூமியில் பிறந்திருக்கிறார்கள்.

மற்ற அசுரர்களும், பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் பிறரைப் பீடிக்க இருக்கின்றனர். அவ்வசுரர்களின் பிடிக்குள் இருக்கும் அந்த வீரர்கள், உனது எதிரிகளுடன் போரிடும்போது, தங்கள் கருணையைக் கைவிடுவார்கள். உண்மையில் அந்தத் தானவர்கள் அவர்களின் இதயத்திற்குள் நுழைந்து, அவர்களை முழுதும் பீடித்ததும், அனைத்துப் பாசங்களையும் தூக்கியெறிந்தவர்களார், இதயத்தில் கடுமையை நிறைத்துக் கொள்ளும் அவ்வீரர்கள், போரில் தங்களை எதிர்த்து வரும் மகன்கள், சகோதரர்கள், தந்தைகள், நண்பர்கள், சீடர்கள், உறவினர்கள் ஆகியோரை மட்டுமல்ல குழந்தைகள், முதியவர்கள் ஆகியோரையும்கூட அடிப்பார்கள். அறியாமையாலும், கோபத்தாலும் குருடாகி, படைப்பாளனால் விதிக்கப்பட்ட விதியால் உந்தப்பட்ட இந்த மனிதப் புலிகளின் இதயங்கள் பாவத்தில் நுழைந்து, ஓ! குருக்களில் முதன்மையானவனே {துரியோதனா}, தங்கள் அனைத்துவகை ஆயுதங்களையும் ஆண்மையுடனும், பலத்துடனும் வீசி உலகை மக்கள் தொகையற்றதாக்குவார்கள். மேலும் அவர்கள் ஒருவரிடம் ஒருவர், "நீ என்னிடம் இருந்து இன்று உயிருடன் தப்பிக்க மாட்டாய்" என்று கர்வத்தோடு பேசுவார்கள். எண்ணிக்கையில் ஐந்து பேரான பாண்டுவின் சிறப்புமிக்க இந்த மகன்கள், இவர்கள் அனைவருடனும் போரிடுவார்கள். விதியின் உதவியால் பலம் பொருந்தி அவர்கள் {பாண்டவர்கள்}, இவர்களது அழிவுக்கு வழிவகுப்பார்கள்.

ஓ! மன்னா {துரியோதனா}, க்ஷத்திரிய வகையில் பிறந்துள்ள தைத்தியர்களும் ராட்சசர்களும், போர்க்களத்தில், கதாயுதங்கள் {maces}, தண்டங்கள் {clubs}, ஈட்டிகள் {lances}, மற்றும் மேன்மையான பல வகை ஆயுதங்களைக் கொண்டும் உனது எதிரிகளுடன் பெரும் வீரத்துடன் போரிடுவார்கள். ஓ! வீரா, அர்ஜுனனைக் குறித்து உனது இதயத்தில் இருக்கும் அச்சத்திற்காக, அர்ஜுனனைக் கொல்லும் வழிகளை ஏற்கனவே நாங்கள் தீர்மானித்து வைத்திருக்கிறோம். கொல்லப்பட்ட நரகனின் ஆன்மா கர்ணனின் வடிவை அடைந்திருக்கிறது. தனது பழைய பகைமையை நினைவுகூரும் அவன் {கர்ணன் வடிவில் இருக்கும் நரகாசுரன்}, கேசவனுடனும் {கிருஷ்ணனுடனும்}, அர்ஜுனனுடனும் மோதுவான். அடிப்பவர்களில் முதன்மையான அந்தப் பலமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, தனது பராக்கிரமத்தில் கர்வம் கொண்ட அர்ஜுனனையும், உனது எதிரிக்ள அனைவரையும் போர்க்களத்தில் வீழ்த்துவான். இவையாவற்றையும் அறிந்த வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்}, அர்ஜுனனைக் காக்க விரும்பி, மாற்றுருவம் கொண்டு வந்து கர்ணனிடம் இருந்து காது குண்டலங்களையும், கவசத்தையும் கவர்ந்து செல்வான்.

அந்தக் காரணத்திற்காகவே, நாங்கள் நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் {லட்சக்கணக்கான} சம்சப்தகர்கள் [1] என்ற பெயரால் அறியப்படும் தைத்தியர்களையும், ராட்சசர்களையும் நியமித்திருக்கிறோம். இந்தக் கொண்டாடப்படும் வீரர்கள், வீரனான அந்த அர்ஜுனனைக் கொல்வார்கள். எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, வருந்தாதே. ஓ! ஏகாதிபதி, எதிரியற்ற முழு உலகை நீ ஆள்வாய். சோர்வுக்கு இடம் கொடுக்காதே. இது போன்ற நடத்தை உனக்குப் பொருந்தாது. ஓ! குரு குலத்தவனே {துரியோதனா}, நீ இறந்துவிட்டால், நமது கட்சி பலவீனமடையும். செல், ஓ! வீரா, உனது மனதில் வேறு வகையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதே. நீயே எங்களுக்கு எப்போதும் புகலிடம், பாண்டவர்கள் தேவர்களுக்குப் புகலிடமாக இருக்கிறார்கள்" என்றனர்.

[1] "வெற்றி அல்லது மரணம் என்ற சபதமேற்றிருக்கும் வீரர்கள். ஒரு முழு அக்ஷௌஹிணி இருந்த இவர்கள் கிருஷ்ணனிடம் இருந்தார்கள். இவர்களைக் கிருஷ்ணன் துரியோதனனுக்காகப் போரிட அவனுக்கு {துரியோதனனுக்குக்} கொடுத்தான். ஒரு புறத்தில் போரிடுவதில்லை என்று சபதமேற்று ஆலோசகராக மட்டும் இருக்கும் தானும் {கிருஷ்ணனும்}, மறுபுறத்தில் அவர்களும் {சம்சப்தகர்களும்} என்ற தேர்வை, கிருஷ்ணன் தானம் கேட்டு வந்த துரியோதனனுக்குக் கொடுத்தான் என்ற கதை உத்யோக பர்வத்தில் முழுமையாக வருகிறது. துரியோதனன் தனது முட்டாள்த்தனத்தால் படைகளை ஏற்றான், முடிவில் அர்ஜுனன் அவர்கள் அனைவரையும் கொன்றான்" என்கிறார் கங்குலி

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவனிடம் {துரியோதனனிடம்} இப்படிப் பேசிய அந்தத் தைத்தியர்கள், மன்னர்களில் யானையான அவனை {துரியோதனனை} அணைத்துக் கொண்டனர். பிறகு தானவர்களில் காளையரான அவர்கள் ஒடுக்கப்பட முடியாத அவனைத் {துரியோதனனைத்} தங்கள் மகனைப் போல நினைத்து உற்சாகமூட்டினர். ஓ! பாரதா {ஜனமேஜயனிடம்}, மென்மையான பேச்சால் அவனது மனத்தைக் குளிர்வித்து, "சென்று வெற்றியை அடை! போ" என்று சொல்லி அவன் விடைபெற அனுமதியளித்தனர். அந்தப் பலமிக்கக் கரம் கொண்டவனுக்கு அவர்கள் விடை கொடுத்ததும், அதே தேவதை {கிருத்தியை = ஏவியதைச் செய்யும் தேவதை}, உயிரை மாய்த்துக்கொள்ள அவன் அமர்ந்திருந்த அதே இடத்திற்கே சுமந்து சென்றாள். அந்த வீரனை {துரியோதனனை} அங்கே இறக்கி, அவனை வணங்கிய அந்தத் தேவதை மன்னனின் அனுமதி பெற்று மறைந்து போனாள். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவள் போனதும், மன்னன் துரியோதனன் {நடந்தது அத்தனையும்} கனவெனக் கருதினான். பிறகு அவன் தனக்குள், "நான் போர்க்களத்தில் பாண்டவர்களை வீழ்த்துவேன்" என்று நினைத்தான்.

கர்ணன் மற்றும் சம்சப்தகப் படை ஆகிய இரண்டும் (அழிக்கும்) திறனும், பகைவர்களைக் கொல்பவனான பார்த்தனை {அர்ஜுனனை} அழிக்கும் நோக்கம் உடையவை எனச் சுயோதனன் நினைத்தான். இப்படியே, ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, தீய மனம் கொண்ட திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு}, பாண்டவர்களை வெல்லலாம் என்ற நம்பிக்கை பலமடைந்தது. கர்ணனும், அந்தராத்மாவில் நரகனின் ஆன்மா ஊடுருவியதால், அர்ஜுனனைக் கொல்வது என்ற கொடும் தீர்மானத்தோடு அப்போது இருந்தான். வீரர்களான அந்தச் சம்சப்தகர்களும், ராட்சசர்களின் அறிவால் பீடிக்கப்பட்டு, இருள் மற்றும் உணர்வுகளின் குணங்களால் பாதிப்படைந்து, பல்குனனைக் {அர்ஜுனனைக்} கொல்லும் விருப்பத்துடனே இருந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, கிருபரைத் தலைமையாகக் கொண்ட பீஷ்மர், துரோணர் ஆகியோர் தானவர்களின் ஆதிக்கத்தால், முன்பிருந்ததைப் போலப் பாண்டுவின் மகன்களின் பாசத்துடன் இருக்கவில்லை. ஆனால் மன்னன் சுயோதனன் இதைக் குறித்து யாரிடமும் சொல்லவில்லை.

இரவு கடந்ததும், சூரியனின் வாரிசான கர்ணன், கரங்கள் கூப்பியபடி, புன்னகையுடன் மன்னன் துரியோதனனிடம் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசினான், அவன், "இறந்த எந்த மனிதனும், தனது எதிரிகளை வெல்வதில்லை; அவன் உயிரோடிருக்கும்போதே அவனது நன்மையைக் காண முடியும். இறந்த மனிதனால் ஆகும் நன்மையென்ன? ஓ! கௌரவேயா {துரியோதனா}, அவனது வெற்றி எங்கே? எனவே துயருறவோ, அச்சம் கொள்ளவோ, இறக்கவோ இது காலமன்று" என்றான். அந்தப் பலமிக்கக் கரம் கொண்டவனை {துரியோதனனை} தனது கரங்களால் அணைத்துக் கொண்ட அவன் {கர்ணன்}, மேலும், "ஓ! மன்னா {துரியோதனா}, எழு! ஏன் படுத்திருக்கிறாய்? ஓ! பகைவர்களைக் கொல்பவனே, ஏன் வருந்துகிறாய்? உனது பராக்கிரமத்தால் எதிரிகளைத் துன்புறுத்தியபிறகு, நீ ஏன் மரணத்தை விரும்புகிறாய்? அர்ஜுனனின் பராக்கிரமத்தைக் கண்டதால், உனக்கு இந்த அச்சம் ஏற்பட்டிருக்கிறதென்றால், நான் போர்க்களத்தில் அர்ஜுனனைக் கொல்வேன் என உண்மையில் உனக்குச் சத்தியம் செய்கிறேன். பதிமூன்று வருடங்கள் கடந்ததும், நான் பிருதையின் {குந்தியின்} மகன்கள் உனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என என் ஆயுதங்களின் மீது சத்தியம் செய்கிறேன்" என்றான் {கர்ணன்}.

கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், தைத்தியர்களின் வார்த்தைகளை நினைவு கூர்ந்து, (தனது தம்பிகளான) அவர்கள் விடுத்த கோரிக்கைகளாலும் சுயோதனன் எழுந்தான். தைத்தியர்களின் அந்த வார்த்தைகளைக் கேட்டிருந்த அந்த மனிதர்களில் புலி {துரியோதனன்}, இதயத்தில் நிலைத்த தீர்மானத்தை எடுத்து, குதிரைகளும், யானைகளும், தேர்களும், காலாட்படையும் நிறைந்த தனது படையை வரிசைப்படுத்தினான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, வெண்குடைகளும், கொடிகளும், வெண்சாமரங்களும், தேர்களும், குதிரைகளும், காலட்படை வீரர்களும் கொண்ட அந்தப் பலமிக்கப் படை, கங்கையின் நீரைப்போல அசைந்து சென்றது. குறித்த காலத்தில் மேகங்கள் கலைந்து இலையுதிர் காலத்தின் {சரதக் காலம்} குறியீடுகள் கொஞ்சம் தொடங்கியதும் தெரியும் அருள்மிக்க வானம் போல அந்தப்படையின் நடை இருந்தது.

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, வெற்றிக்கு ஆசிகள் கூறிய அந்தணர்களில் சிறந்தவர்களால் ஏகாதிபதியைப் போலத் துதிபாடப்பட்ட திருதராஷ்டிரனின் மகனான மனிதர்களின் தலைவன் {துரியோதனன்}, எண்ணிடங்கா குவிந்த கரங்களின் வணக்கங்களை ஏற்று, எல்லையில்லா பிரகாசத்துடன் சுடர்விட்டு கர்ணன் மற்றும் சூதாடியான சுபலனின் மகனுடன் சேர்ந்து முன்னே சென்றான். துச்சாசனனைத் தலைமையாகக் கொண்ட அவனது தம்பிகள், பூரிஸ்ரவஸ், சோமதத்தன், பெரும் பலம்வாய்ந்த மன்னனான பாஹ்லீகன் ஆகியோர் பல்வேறு வடிவங்களிலான தங்கள் ரதங்கள், குதிரைகள், யானைகளில் சிறந்தவை ஆகியவற்றில் மன்னர்களில் சிங்கமானவனின் {துரியோதனனின் செல்லும்} வழியில் பின்தொடர்ந்து சென்றார்கள். ஓ! ஏகாதிபதிகளில் தலைமையானவனே {ஜனமேஜயா}, பிறகு, குறுகிய காலத்திற்குள், அந்தக் குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்கள் தங்கள் சொந்த நகரத்துக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்."


இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Thursday, August 21, 2014

"பாண்டவர்களுக்கு நாட்டைத் திருப்பிக் கொடு" என்றான் சகுனி! - வனபர்வம் பகுதி 249

"Give back unto the sons of Pritha their kingdom!" said Sakuni!  | Vana Parva - Section 249 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்களுக்கு நாட்டைத் திருப்பிக் கொடுத்து அவர்களுடன் நட்போடு பழகு என்று சகுனி துரியோதனனுக்குச் சொன்னது; துரியோதனனைத் தேற்றி, தற்கொலை எண்ணத்தில் இருந்து அவனை மீட்க சகுனி செய்த முயற்சி; இறப்பதில் உறுதியாக இருந்த துரியோதனன் உணவைத் துறந்து அமர்ந்தது; தைத்தியர்களும் தானவர்களும் துரியோதனனை பாதாள லோகத்திற்குக் கொண்டு சென்றது…

அசுரர்கள் துரியோதனன் சந்திப்பு
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவமானத்தைத் தாங்க முடியாமல் உணவைத் துறந்து உயிரை விடத் தீர்மானித்து அமர்ந்திருந்த மன்னன் துரியோதனனைக் கண்ட சுபலனின் மகனான சகுனி ஆறுதலாக இவ்வார்த்தைகளை அவனிடம் {துரியோதனனிடம்} கூறினான். சகுனி, "ஓ! குரு குலத்தின் மகனே, கர்ணன் என்ன சொன்னான் என்பதை இப்போதுதான் கேட்டாய். உண்மையில் அவனுடைய {கர்ணனின்} வார்த்தைகள் ஞானம் நிரம்பியவையாக இருந்தன. ஓ! மன்னா {துரியோதனா}, அற்பமான காரியத்துக்காக உனது உயிரை விடத்துணிந்து, உனக்காக நான் வென்ற உயர்ந்த செழிப்பை முட்டாள்த்தனமாக ஏன் கைவிடுகிறாய்? நீ மூத்தவர்களுக்காக எப்போதும் காத்ததில்லை என்பதை இன்றே நான் கண்டு கொண்டேன். திடீர் இன்பத்தையோ, திடீர் துன்பத்தையோ கட்டுப்படுத்தத்தெரியாதவன், ஏற்கனவே செழிப்பை அடைந்தவனாக இருந்தாலும், சுடப்படாத மண் குடத்தைத் தண்ணீரில் இட்டது போலவே அது {அவனிடமிருந்து} தொலைந்து போகும்.
துணிச்சலற்று, ஆண்மையின் சிறு பொறி கூட இல்லாது, அலட்சியப் போக்குக்கு அடிமையாக, எப்போதும் புத்தியற்றவனாக, சிற்றின்பங்களுக்கு அடிமையாக இருக்கும் ஒரு மன்னன், எப்போதும் தனது குடிகளால் மதிக்கப்படுவதில்லை. நன்மையையே அடைந்த உனக்கு, இந்தக் காரணமற்ற சோகம் ஏன் வந்தது? {நடந்த சம்பவங்களை நினைத்து} மகிழ்ச்சி அடைந்து, பாண்டவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டிய நீ, ஓ மன்னா {துரியோதனா} ஏன் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? இந்த உனது நடத்தை உண்மையில் நிலையற்றதாகும். உற்சாகமாக இரு. உனது உயிரைத் துறக்காதே. ஆனால் அவர்கள் {பாண்டவர்கள்} உனக்குச் செய்த நன்மையை எண்ணி இதயத்தால் மகிழ்ந்து நினைத்துப் பார். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, அவர்களது நாட்டைத் திருப்பிக் கொடு. அத்தகு நடத்தையால், அறத்தையும் புகழையும் வெல். இவ்வழியில் செயல்படுவதால், நீ பெருமையடைவாய். நட்புடன் இருந்து பாண்டவர்களுடன் சகோதர உறவுநிலையை நிறுவு. நீ மகிழ்ச்சியை அடைய வேண்டுமானால், அவர்களது {பாண்டவர்களின்} தந்தை வழி நாட்டை அவர்களுக்குக் கொடு" என்றான் {சகுனி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சகுனியின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் முன்னால் சகோதரப்பாசத்தின் அன்பால் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் வீரமிக்கத் துச்சாசனனைக் கண்ட மன்னன் {துரியோதனன்}, துச்சாசனனை எழுப்பி, தனது பருத்த கரங்களால் அவனை வாரி அணைத்து, பாசத்தால் அவனது தலையை முகர்ந்து பார்த்தான். கர்ணன் மற்றும் சுபலன் {சகுனி} ஆகியோரது இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன் எப்போதையும் விட அதிகமாக நம்பிக்கை இழந்து, அவமானத்தில் மூழ்கினான். நம்பிக்கையற்ற தன்மை அவனது ஆன்மாவை வென்றது. தன் நண்பர்கள் சொன்னது அனைத்தையும் கேட்ட அவன் சோகத்துடன், "அறம், செல்வம், நட்பு, செழுமை, ஆட்சி, கேளிக்கைகள் ஆகியவற்றால் எனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எனது நோக்கத்தைத் தடை செய்யாது, அனைவரும் என்னை விட்டுச் செல்லுங்கள். உணவைத் துறந்து உயிரை விடுவதில் உறுதியான தீர்மானத்தோடு இருக்கிறேன். நகரத்திற்குத் திரும்பி, எனக்கு மூத்தவர்களை மரியாதையோடு நடத்துங்கள்" என்றான் {துரியோதனன்}.

அவனால் இப்படிச் சொல்லப்பட்டது, அவர்கள் அனைவரும் எதிரிகளை அழிக்கும் அந்த மன்னனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதா {துரியோதனா}, உன் வழி எதுவோ, அதுவே எங்களுடையதுமாகும். நீ இல்லாமல் நாங்கள் எப்படி நகரத்துக்குள் நுழைய முடியும்?" என்றனர்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நண்பர்கள், அமைச்சர்கள், தம்பிகள், உறவினர்கள் ஆகியோர் எப்படிச் சொல்லிப் பார்த்தும், அந்த மன்னன் {துரியோதனன்}, தனது நோக்கத்தில் இருந்து வழுவவில்லை. அவனது நோக்கத்திற்கு ஏற்ப திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்}, பூமியில் தர்ப்பை புற்களைப் பரப்பி, நீரைத் தொட்டுத் தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு, அந்த இடத்தில் அமர்ந்தான். மரவுரி மற்றும் தர்ப்பை புற்களை ஆடையாக உடுத்தி அவன் உயர்ந்த நோன்பைக் கடைப்பிடித்தான். {மௌன விரதம் மேற்கொண்டு} அனைத்துப் பேச்சையும் நிறுத்திய அந்த மன்னர்களில் புலி {துரியோதனன்}, சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பி, வெளி விவகாரங்களை அனைத்தையும் விலக்கி வழிபாட்டையும் வேண்டுதலையும் ஆரம்பித்தான்.

அதே வேளையில், பழங்காலத்தில் தேவர்களால் வீழ்த்தப்பட்டுப் பாதாள லோகங்களில் வாழும் தைத்தியர்களும் தானவர்களும், துரியோதனனின் நோக்கத்தை உறுதி செய்து கொண்டு, மன்னன் {துரியோதனன்} இறந்தால், தங்கள் பக்கம் பலவீனமடையும் என்பதை அறிந்து, துரியோதனனைத் தங்கள் முன்னிலைக்குக் கொண்டு வர, ஒரு வேள்வியைச் செய்தனர். மந்திரங்களை அறிந்தவர்கள், ஏற்கனவே பிருஹஸ்பதியாலும், உசானசாலும் {சுக்கிராச்சாரியராலும்} தீர்மானிக்கப்பட்டிருந்த சூத்திரங்களின் உதவியுடன், மந்திரங்களாலும், வேண்டுதல்களாலும் அடையத்தக்க வகையில், அதர்வ {அதர்வண} வேதத்திலும், உபநிஷத்களிலும் சொல்லப்பட்டுள்ள {நவகுண்டீ} சடங்குகளைச் செய்தனர். வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கு அறிந்த, கடும் நோன்புகள் கொண்ட அந்தணர்கள், கவனம் நிறைந்த ஆன்மாவுடன், நெருப்பில் தெளிந்த நெய்யையும் பாலையும் நீர்க் காணிக்கையாக மந்திரங்கள் சொல்லி ஊற்ற ஆரம்பித்தனர்.

அச்சடங்குகள் முடிந்த போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு விசித்திரமான தேவதை {பேய்}, தன் வாயை அகல விரித்த படி (வேள்வி நெருப்பிலிருந்தபடி), "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டது. இதயத்தில் நல்ல மகிழ்ச்சியை அடைந்த தைத்தியர்கள் அவளிடம் {கிருத்தியை = ஏவியதைச் செய்யும் தேவதை}, "திருதராஷ்டிரனின் மகனான மன்னன் {துரியோதனன்} இப்போது, உயிரைத் துறப்பதற்காக உண்ணா நோன்பு நோற்றிருக்கிறான். அவனை இங்கே கொண்டு வா" என்று கட்டளையிட்டனர். இப்படிக் கட்டளையிடப்பட்ட அவள், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி சென்றுவிட்டாள். கண் இமைக்கும் நேரத்தில் சுயோதனன் {துரியோதனன்} இருக்கும் இடத்தை அவள் அடைந்தாள். மன்னனை பாதாள லோகத்திற்கு நொடிப்பொழுதில் கொண்டு வந்த அவள், அதைத் தானவர்களிடம் தெரிவித்தாள். இரவு வேளையில் தங்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட மன்னனைக் {துரியோதனனைக்} கண்ட தானவர்கள் ஒன்று கூடி, இதயத்தால் அவர்கள் அனைவரும் நன்கு மகிழ்ந்து, அம்மகிழ்ச்சியால் கண்கள் அகன்று, இந்தப் புகழ்ச்சி வார்த்தைகளை {முகத்துதியை} துரியோதனனிடம் பேசினர்."

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


"உன் கால்களைச் சேவிப்பேன்" என்றான் கர்ணன்! - வனபர்வம் பகுதி 248

"I will serve thy feet reverentially!" said Karna!  | Vana Parva - Section 248 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

துரியோதனனைத் தேற்றி, தற்கொலை எண்ணத்தில் இருந்து அவனை மீட்க கர்ணன் செய்த முயற்சி…

கர்ணன் {துரியோதனனிடம்} தொடர்ந்தான், "ஓ! மன்னா, இன்று உனது நடத்தை குழந்தைத்தனமாக இருக்கிறது. ஓ! வீரா, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நீ பகைவனால் வீழ்த்தப்பட்டபோது, பாண்டவர்கள் உன்னை விடுவித்தனர் என்பதில் நீ ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? ஓ குரு குலத்தின் மகனே {துரியோதனா},  மன்னனின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்பவர்கள், அதிலும் குறிப்பாக (அவர்களில்) ஆயுதமேந்துவதைத் தொழிலாகக் கொண்டவர்கள், தாங்கள் ஏகாதிபதியால் அறியப்பட்டவர்களாக இருப்பினும், அறிப்படாதவர்களாக இருப்பினும், தங்கள் மன்னனுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்ய வேண்டும். எதிரிப்படையின் தலைவர்களை நசுக்கும் மனிதர்களில் முதன்மையானவர்கள், அவர்களாலேயே {அந்த எதிரிகளாலேயே} வீழ்த்தப்படுவதும், பின்பு தங்கள் துருப்புகளால் மீட்கப்படுவதும் அடிக்கடி நிகழ்ந்து வருவதே.

Wednesday, August 20, 2014

துச்சாசனன் கண்ணீர்! - வனபர்வம் பகுதி 247

The tears of Dussasana!  | Vana Parva - Section 247 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சித்திரசேனன், துரியோதனன் வந்த நோக்கத்தை யுதிஷ்டிரனிடம் வெளிப்படுத்துவது; துரியோதனன் அவமானத்தால் கூனிக் குறுகிப் போவது; தனக்கு நேர்ந்த அவமானத்தால் உணவைத் துறந்து, உயிர் விடப்போவதாகத் துரியோதனன் தீர்மானிப்பது; நீ இல்லாமல் நான் ஆள மாட்டேன் என்று துச்சாசனன் துரியோதனனிடம் கதறி அழுவது; கர்ணன் துரியோதனனுக்குச் சமாதானம் கூறுவது...

துரியோதனன் {கர்ணனிடம்} சொன்னான், "பகை வீரர்களைக் கொல்பவனான அர்ஜுனன், பிறகு சித்திரசேனனை அணுகி, சிரித்துக் கொண்டே ஆண்மை நிறைந்த வார்த்தைகளால், "ஓ! வீரா, ஓ! கந்தர்வர்களில் முதன்மையானவனே {சித்திரசேனா}, என் சகோதரர்களை விடுவிப்பதே உனக்குத் தகும். பாண்டுவின் மகன்கள் உயிரோடு இருக்கும் வரை அவர்கள் {கௌரவர்கள்} அவமதிக்கப்பட இயலாதவர்கள்" என்றான். இப்படிப் பாண்டுவின் சிறப்புமிகுந்த மகனால் சொல்லப்பட்ட கந்தர்வர்கள் தலைவன் {சித்திரசேனன்}, ஓ! கர்ணா, துன்பத்தில் மூழ்கி இருக்கும் பாண்டுவின் மகன்களையும் அவர்களது மனைவியையும் காணவே நாம் அந்த இடத்திற்கு வந்தோம் என்ற நமது நோக்கத்தைப் பாண்டவர்களிடம் வெளிப்படுத்தினான்.

"சிறை பிடிக்கப்பட்டேன்" என்றான் துரியோதனன்! - வனபர்வம் பகுதி 246

"I was captured" said Duryodhana!  | Vana Parva - Section 246 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

போர்க்களத்தில் நடந்த விவரங்களைத் துரியோதனன் கர்ணனுக்குச் சொல்லல்; கந்தர்வர்களால் தானும் தன் குடும்பத்தாரும், நண்பர்களும் சிறை பிடிக்கப்பட்டதையும், யுதிஷ்டிரன் கட்டளையின் பேரில் அர்ஜுனன், பீமன் மற்றும் நகுல சகாதேவர்கள் கந்தர்வர்களுடன் போரிட்டதையும் துரியோதனன் கர்ணனிடம் சொன்னது;

துரியோதனன் {கர்ணனிடம்} சொன்னான், "ஓ! ராதேயா {கர்ணா}, நடந்தது என்ன என்பதை நீ அறியமாட்டாய். எனவே, நான் உனது வார்த்தைகளால் சீற்றமடையவில்லை. பகைவர்களான கந்தர்வர்களை எனது சக்தியால் நானே வீழ்த்தியதாக நீ நினைக்கிறாய். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {கர்ணா}, உண்மையில் எனது துணையுடன் என் தம்பிகள் நீண்ட நேரம் கந்தர்வர்களுடன் போரிட்டனர். உண்மையில், இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், அந்த வீரமிக்கக் கந்தர்வர்கள், தங்கள் மாய சக்திகள் பலவற்றைப் பயன்படுத்தி, வானத்திற்கு உயர்ந்து எங்களுடன் போரிட்டனர். அவர்களுடனான மோதல் சம தன்மையை இழந்தது. தோல்வி எங்களுடையதாகியது. சிறை பிடிக்கவும் பட்டோம்.

Tuesday, August 19, 2014

"உன் கண் முன்பே தப்பி ஓடினேன்" என்றான் கர்ணன்! - வனபர்வம் பகுதி 245

"I fled before thy eyes" said Karna!  | Vana Parva - Section 245  | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தோற்றுத் திரும்பிய துரியோதனன் ஓரிடத்தில் தனது படைகளை நிறுத்தியது; அங்கே கர்ணன் வந்து துரியோதனனைச் சந்தித்து; துரியோதனன் வெற்றியடைந்து திரும்பியிருப்பதாக எண்ணிய கர்ணன் துரியோதனனை மெச்சி கொண்டது ...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "தோல்வியுற்று, எதிரியால் சிறைபிடிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து தான் பாண்டுவின் சிறப்புமிக்க மகன்களின் {பாண்டவர்களின்} ஆயுத சக்தியால் விடுவிக்கப்பட்ட பிறகு, எப்போதும் பாண்டுவின் மகன்களை அவமதிப்பதில் ஈடுபட்டு, தனது சொந்த மேன்மையைத் தற்புகழ்ச்சி செய்து கொள்பவனும், கர்வமும், தீய எண்ணமும், தற்புகழ்ச்சி நிறைந்தவனும், கொடூரம் நிறைந்தவனும், ஆணவம் நிறைந்தவனும், பாதகனுமான துரியோதனன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்தது கடினமானதாக எனக்குத் தோன்றுகிறது. ஓ! வைசம்பாயனரே, அவமானத்தில் மூழ்கி, துயரத்தால் மனம் கலங்கியவனுமான அந்த இளவரசன் {துரியோதனன்}, அந்தத் தலைநகருக்குள் எப்படி நுழைந்தான் என்பதை எனக்கு விரிவாகச் சொல்லும்" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top