Showing posts with label சால்வன். Show all posts
Showing posts with label சால்வன். Show all posts

Sunday, July 30, 2017

எதிரிகளைக் கலங்கடித்த மிலேச்சன் சால்வன்! - சல்லிய பர்வம் பகுதி – 20

The hostile army agitated by Mleccha Shalva! | Shalya-Parva-Section-20 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 20)


பதிவின் சுருக்கம் : பாண்டவப் படையை எதிர்த்து வந்த மிலேச்சன் சால்வன்; படையைக் கலங்கடித்த சால்வனின் பெரும் யானை; பாண்டவப் படையைப் பிளந்த சால்வன்; சால்வனை எதிர்த்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் தேரை நொறுக்கிய யானை; யானையைக் கொண்ட திருஷ்டத்யும்னன்; சால்வனைக் கொன்ற சாத்யகி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "(குரு) படை மீண்டும் அணிதிரண்டபிறகு, மிலேச்சர்களின் ஆட்சியாளனான சால்வன், சினத்தால் நிறைந்து, அங்கங்களில் மதநீர் சொரிந்ததும், மலையைப் போலத் தெரிந்ததும், செருக்கு நிறைந்ததும், {இந்திரனின் யானையான} ஐராவதனுக்கு ஒப்பானதும், பகைவரின் பெருங்கூட்டத்தை நொறுக்கவல்லதுமான ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு, பாண்டவர்களின் பெரும்படையை எதிர்த்து விரைந்தான்.(2) அந்தச் சால்வனின் விலங்கானது {யானையானது} உன்னதமான உயர்ந்த குலத்தில் {பத்ர குலத்தில்} பிறந்ததாகும். அஃது எப்போதும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} வழிபடப்பட்டதாகும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது யானை பழக்குவதை நன்கறிந்தோரால் சரியாக ஆயத்தம் செய்யப்பட்டு, போருக்காகச் சரியாகப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அந்த யானையைச் செலுத்தி வந்த அந்த மன்னர்களில் முதன்மையானவன் {சால்வன்} கோடையின் நெருக்கத்தில் உள்ள காலை சூரியனைப் போலத் தெரிந்தான்.(3) அந்த முதன்மையான யானையில் ஏறிய அவன் {சால்வன்}, ஓ! ஏகாதிபதி, பாண்டவர்களை எதிர்த்துச் சென்று, சக்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானவையும், பயங்கரமானவையுமான கூரிய கணைகளால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்களைத் துளைத்தான்.(4) அந்தப்போரில் அவன் {சால்வன்} தன் கணைகளை ஏவி, பகைவீரர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பியபோது, ஓ மன்னா, பழங்காலத்தில் வஜ்ரதாரியான வாசவன் {இந்திரன்}, தைத்தியர்களின் படைகளை நொறுக்குகையில் ஏற்பட்ட தைத்தியர்களின் நிலையைப் போலக் கௌரவர்களாலோ, பாண்டவர்களாலோ அவனிடம் எந்தக் குறையையும் {கவனக்குறைவையும்} காணமுடியவில்லை.(5)

Monday, July 20, 2015

அம்பையை மறுத்த சால்வன்! - உத்யோக பர்வம் பகுதி 176

Salwa rejected Amba! | Udyoga Parva - Section 176 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 3)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் அனுமதி பெற்ற அம்பை, சால்வனிடம் சென்றது; அங்கு அவனால் அவள் நிராகரிக்கப்பட்டது; அம்பை சால்வனிடம் மன்றாடியது; பீஷ்மர் மீது கொண்ட அச்சத்தால் தான் அவளை மறுப்பதாக சால்வன் அம்பையிடம் சொல்லி போ... போ.. என்று அவளை அவசரப்படுத்தியது; அம்பை துயரத்துடன் சால்வனின் நகரத்தில் இருந்து வெளியேறியது...

சால்வனும் அம்பையும்
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "பிறகு நான் இக்காரியத்தைக் காந்தவதி என்றும் அழைக்கப்பட்ட (எனது தாயான) காளியிடமும் {சத்தியவதியிடமும்), எங்கள் ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} அனைவரிடமும், புரோகிதர்கள் மற்றும் சிறப்புப் புரோகிதர்கள் ஆகியோரிடமும் வைத்த பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, அந்தக் கன்னிகையரில் மூத்தவளான அம்பையைப் புறப்பட அனுமதித்தோம். என்னால் அனுமதிக்கப்பட்ட அந்தக் கன்னிகை {அம்பை}, சால்வர்களின் ஆட்சியாளன் நகருக்குச் சென்றாள். அவள் தனது துணைக்கு, முதிர்ந்த அந்தணர்கள் பலரைக் கொண்டிருந்தாள். மேலும் அவள் தனது சொந்த செவிலியாலும் பின்தொடரப்பட்டாள்.

(ஹஸ்தினாபுரத்திற்கும், சால்வனின் நகரத்திற்கும் இடைப்பட்ட) முழு தூரத்தையும் கடந்து பயணம் செய்த அவள் {அம்பை}, மன்னன் சால்வனை அணுகி, "ஓ! வலிமைமிக்க கரங்களைக் கொண்டவரே, ஓ! உயர் ஆன்மா கொண்டவரே {சால்வரே}, நான் உம்மை எதிர்பார்த்து வந்திருக்கிறேன்" என்றாள். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, அந்தச் சால்வர்களின் தலைவன் சிரித்துக் கொண்டே அவளிடம் {சால்வன் அம்பையிடம்}, "ஓ! அழகிய நிறம் கொண்டவளே {அம்பையே}, இன்னொருவனுக்குத் திருமணம் செய்யப்பட இருந்த உன்னை மனைவியாக அடைய இனியும் நான் விரும்பவில்லை. எனவே, ஓ அருளப்பட்டவளே {அம்பையே}, இங்கிருந்து நீ பீஷ்மனின் முன்னிலைக்குச் செல்வாயாக. பீஷ்மனால் பலவந்தமாகக் கடத்தப்பட்ட உன்னை இனியும் நான் விரும்பவில்லை.

உண்மையில், பீஷ்மன், மன்னர்களை வீழ்த்தி உன்னைக் கடத்திச் செல்கையில் நீ அவனுடன் {பீஷ்மனுடன்} உற்சாகமாகவே சென்றாய். பூமியின் மன்னர்கள் அனைவரையும் அவமானப்படுத்தி வீழ்த்தி, பீஷ்மன் உன்னைக் கவர்ந்து சென்றதாலும், நீ இன்னொருவனுக்குத் திருமணம் செய்யப்பட இருந்தவள் என்பதாலும், நான் இனியும் உன்னை மனைவியாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அறிவின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவனும், பிறருக்கு வழிகாட்டும் விதிகளைச் சமைப்பவனுமான என்னைப் போன்ற மன்னன் ஒருவனால், இன்னொருவனுக்குத் திருமணம் செய்யப்பட இருந்த ஒரு பெண்ணை (தனது இல்லத்துக்குள்) எப்படி அனுமதிக்க முடியும்? ஓ! அருளப்பட்ட மங்கையே {அம்பையே}, நேரத்தை வீணாகக் கழிக்காமல், நீ எங்கு செல்ல விரும்புகிறாயோ அங்கே செல்வாயாக" என்றான் {சால்வன்}.

ஓ! மன்னா {துரியோதனா}, அவனது {சால்வனது} வார்த்தைகளைக் கேட்ட அம்பை,  காம தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்குண்டு சால்வனிடம், "அப்படிச் சொல்லாதீர், ஓ! பூமியின் தலைவா {சால்வரே}, ஏனெனில் அது அப்படி இல்லை. ஓ! எதிரிகளை வாட்டுபவரே, பீஷ்மரால் கடத்தப்பட்ட போது, நான் மகிழ்ச்சியாக இல்லை! நாளெல்லாம் நான் அழுது கொண்டிருந்த போது, மன்னர்கள் அனைவரையும் கலங்கடித்தபடி பலவந்தமாக அவர் {பீஷ்மர்} என்னைத் தூக்கிச் சென்றார். ஓ! சால்வர்களின் தலைவரே, உம்முடன் பிணைப்புடன் இருக்கும் அப்பாவிப் பெண்ணான என்னை ஏற்றுக் கொள்வீராக! (ஒருவனிடம்) பிணைப்புடன் இருப்பவர்களை (அவன்) கைவிடுவது, சாத்திரங்களில் மெச்சப்படுவதில்லை.

போரில் இருந்து பின்வாங்காதவரான கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} வேண்டிக்கொண்டு, இறுதியாக அவரது {பீஷ்மரது} அனுமதியைப் பெற்றே நான் உம்மிடம் வந்தேன். உண்மையில், வலிமைமிக்க கரங்களைக் கொண்ட பீஷ்மர், ஓ! மன்னா {சால்வரே}, என்னை விரும்பவில்லை! (இக்காரியத்தில்) அவரது செயல்பாடு, அவரது தம்பிக்காகவே {விசித்திரவீரியனுக்காகவே} செய்யப்பட்டது என்று நான் கேள்விப்பட்டேன். என்னுடன் ஒரே சமயத்தில் கடத்தப்பட்ட அம்பிகை மற்றும் அம்பாலிகை ஆகிய என் தங்கையர் இருவரும், ஓ! மன்னா {சால்வரே}, கங்கையின் மைந்தரால் {பீஷ்மரால்}, அவரது தம்பி விசித்திரவீரியனுக்கு அளிக்கப்பட்டார்கள்.

ஓ! சால்வர்களின் தலைவா, ஓ! மன்னர்களில் புலியே {சால்வரே}, உம்மைத் தவிர நான் வேறு யாரையும் கணவனாக நினைத்ததில்லை என்று என் தலையைத் தொட்டு சத்தியம் செய்கிறேன். ஓ! பெரும் மன்னா {சால்வரே}, இன்னொருவருக்கு திருமணம் செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்து நான் உம்மிடம் வரவில்லை. ஓ! சால்வரே, எனது ஆன்மாவின் மீது உண்மையாக ஆணையிட்டு, நான் உம்மிடம் உண்மையையே சொல்கிறேன். ஓ! பெரிய கண்களை உடையவரே, இன்னொருவருக்குத் திருமணம் செய்யப்பட வேண்டாதவளாக, உமது அருளை விரும்பி, தனது சொந்த விருப்பத்தில் உம்மிடம் வந்திருக்கும் கன்னிகையான என்னை ஏற்றுக் கொள்ளும்" என்றாள் {அம்பை}.

என்னதான் அவள் இதே வகையில் பேசினாலும், ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, பாம்பு தனது சட்டையைக் கைவிடுவது போல, காசி ஆட்சியாளனின் மகளை {அம்பையைச்} சால்வன் நிராகரித்தான். இதுபோன்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி ஆவலோடு வேண்டப்பட்டாலும், அந்தச் சால்வர்களின் தலைவன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்தப் பெண்ணை {அம்பையை} ஏற்றுக்கொள்ளும் எந்த ஆவலையும் வெளிப்படுத்தவில்லை.

பிறகு, அந்தக் காசி ஆட்சியாளனின் மூத்த மகள் {அம்பை}, கோபத்தால் நிறைந்து, கண்ணீரால் குளித்த கண்களுடன், கண்ணீராலும், துயரத்தாலும் தடைப்பட்ட குரலுடன் {அம்பை சால்வனிடம்}, "உம்மால் கைவிடப்படும் நான், ஓ! மன்னா {சால்வரே}, எங்கே போனாலும், நீதிமான்கள் எனக்குப் பாதுகாவலர்களாக இருப்பார்கள். ஏனெனில், உண்மை அழிவற்றதாகும்" என்றாள் {அம்பை}.

இப்படியே, ஓ! குருகுலத்தோனே {துரியோதனா}, அந்தச் சால்வர்களின் தலைவன், தன்னிடம் இம்மொழியில் பேசியவளும், மென்மையாக அழுதுகொண்டிருந்தவளுமான அந்தக் கன்னிகையை நிராகரித்தான். "போ... போ..." என்ற வார்த்தைகளே சால்வன் அவளிடம் மீண்டும் மீண்டும் சொன்ன வார்த்தைகளாக இருந்தது. "ஓ! அழகிய இடை கொண்டவளே {அம்பையே}, நான் பீஷ்மனை அஞ்சுகிறேன். நீயோ பீஷ்மனின் கைதி" என்று அவன் {சால்வன்} சொன்னான். தொலைநோக்குப் பார்வையாற்ற அந்தச் சால்வனால் இப்படிச் சொல்லப்பட்ட கன்னிகை, பெண் அன்றில் {பறவையைப்} போல அழுது கொண்டே, துயரத்துடன் அவனது {சால்வனின்} நகரத்தை விட்டு வெளியேறினாள்.


Thursday, December 05, 2013

நாடு திரும்பிய கிருஷ்ணன் - வனபர்வம் பகுதி 22

Krisha returned to his country | Vana Parva - Section 22 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

சால்வனுடன் கிருஷ்ணன் புரிந்த போர்; சால்வனைக் கிருஷ்ணன் கொல்லுதல்; யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு கிருஷ்ணன் துவாரகை திரும்புதல்...

வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "பிறகு, பாரத குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, எனது அழகான வில்லை எடுத்து, விலையுயர்ந்த பொருட்களால் ஆன அந்தத் தேரில் இருந்தவர்களும் தேவர்களுடைய எதிரிகளும் ஆனவர்களின் தலையை எனது கணைகளால் வெட்டிப் போட ஆரம்பித்தேன்! எனது வில்லான சாரங்கத்தில் இருந்து, பாம்புகள் போன்ற வடிவம் கொண்டவையும், பெரும் உயரம் செல்லக்கூடிவையும், பெரும் சக்தி படைத்தவையுமான அழகான கணைகளை ஏவ ஆரம்பித்தேன். குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {யுதிஷ்டிரரே}! பிறகு என்னால் விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேரைக் காண முடியவில்லை. மாயசக்தியால் அது மறைந்து போயிருந்தது! நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

பாரதரே {யுதிஷ்டிரரே}, நான் அப்படி காத்திருந்த போது, பயங்கரமான முகங்களும் தலைமுடியும் கொண்ட தானவப்படையினர் பெரும் அலறல் அலறினர். பிறகு அந்தக் கடும் போரில் நான், அவர்களை அழிக்கும் நோக்கத்துடன், எனது வில்லின் நாணில் சத்தமில்லாமல் சென்று எதிரியைத் துளைக்கும் வல்லமை பெற்ற ஆயுதத்தைப் பொருத்தினேன். இதன் பிறகு அவர்கள் சத்தம் அடங்கியது. ஆனால், சத்தமிட்ட தானவர்கள் அனைவரும் சூரியன் போலப் பிரகாசிப்பதும், சத்தத்தைக் கொண்டே தாக்கும் திறன் கொண்ட எனது கணைகளால் கொல்லப்பட்டனர். ஒரு இடத்தில் சத்தம் அடங்கியதும், வலிமைவாய்ந்த மன்னா {யுதிஷ்டிரரே}, வேறு இடத்தில் இருந்து அலறம் சத்தம் கேட்கத் தொடங்கியது. அங்கேயும் எனது கணைகளை அனுப்பினேன். இவ்வகையில், பாரதரே {யுதிஷ்டிரரே}, அசுரர்கள் பத்து பகுதிகளில் இருந்தும் மேலிருந்தும் கீழிருந்தும் அலற ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் மற்றும் வானத்தில் இருந்து மறைமுகமாக நின்று போரிட்டவர்களும், மந்திரங்களால் உந்தப் பட்ட பலதரப்பட்ட உருவங்களில் உள்ள எனது தெய்வீக கணைகளால் கொல்லப்பட்டனர். வீரரே {யுதிஷ்டிரரே}, பிறகு, விரும்பிய இடத்திற்கு செல்லும் திறன் கொண்ட விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேர் எனது கண்களைத் தடுமாறச் செய்து, பிராக்ஜோதிஷத்தில் மீண்டும் காணப்பட்டது!

பிறகு, அழிக்கும் சக்தி கொண்ட பல்வேறு உருவங்களில் இருந்த தானவர்கள் திடீரென பெரும் கல் மழையைப் பொழிந்தனர், கற்களின் ஊற்று என் மீது விழுந்த என்னை மூடியது. என்னைச் சுற்றி அவை (உச்சிகளும் முகடுகளும் கொண்ட) எரும்புப் புற்று போல வளர்ந்தன. எனது குதிரைகள், தேரோட்டி, கொடிக்கம்பங்கள், ஆகியவையுடன் சேர்த்து நானும் செங்குத்தான பாறைகளின் நடுவே மற்றவர்களின் பார்வையில் இருந்து மொத்தமாக மறைந்து போனேன். பிறகு, எனது படையாய் இருந்த விருஷ்ணிகுலத்தின் முதன்மையானவர்கள் பீதியால் தாக்குண்டு, திடீரென அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓட ஆரம்பித்தனர். மன்னா {யுதிஷ்டிரரே}, என்னை அந்த நிலையில் கண்டு, சொர்க்கமும் வானமும், பூமியும், "ஓ", "ஐயோ" என்ற வார்த்தைகளால் நிரம்பியன. ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, பிறகு, துயரத்தில் மூழ்கிய எனது நண்பர்கள், சோகத்துடன் அழுது, கனத்த இதயத்துடன் ஒப்பாரி வைத்தனர்! எதிரிகளின் இதயங்கள் மகிழ்ச்சியில் மூழ்கியன. நடுக்கமில்லாதவரே, நான் இவற்றையெல்லாம் அந்த எதிரியை வீழ்த்திய பிறகு கேள்விப்பட்டேன்! பிறகு நான், கற்களைத் துளைக்கவல்ல இந்திரனின் விருப்பமான (ஆயுதமான) வஜ்ராயுதத்தை எடுத்து, அந்த மொத்த நிறை கொண்ட செங்குத்தான் பாறைகளை அழித்தேன்.

ஆனால் எனது குதிரைகள், அந்தக் கற்களின் நிறையால் துன்பப்பட்டு, மரணத்தின் விழிம்பில் நின்று கொண்டு நடுங்கத் தொடங்கின. பிறகு என்னைக் கண்ட எனது நண்பர்கள், மேகங்களைக் கலைத்துக் கொண்டு உதிக்கும் சூரியனைக் கண்டவர்கள் போல மகிழ்ச்சியடைந்தனர்.  பிறகு, பாறைகளின் பாரத்தைத் தாங்காமல், கிட்டத்தட்ட தங்கள் கடைசி மூச்சை சுவாசித்துக் கொண்டிருந்த குதிரைகளைக் கண்ட எனது தேரோட்டி, அந்த சூழ்நிலைக்குத் தக்க வார்த்தைகளைச் சொன்னான். "ஓ விருஷ்ணி குலத்தவரே, விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேருக்குச் சொந்தமான சால்வன் (அவ்விடத்தில்) அமர்ந்திருப்பதைப் பாரும். அவனை அலட்சியம் செய்யாதீர்! நன்கு முயற்சி செய்யும்! சால்வனிடம் நீர் கொண்டுள்ள மென்மையையும், கருத்துகளையும் கைவிடும்! வலிமைவாய்ந்த கரம் கொண்டவரே, சால்வனைக் கொல்லும். கேசவரே, அவனை வாழ விடாதீர்! வீரரே, உமது நண்பரல்லாதவரை (எதிரிகளை) அழிப்பவரே, அனைத்து முயற்சிகளையும் கைக்கொண்டு ஒரு எதிரி கொல்லப்பட வேண்டும். பலம் வாய்ந்த மனிதனின் காலடியில் அமர்ந்திருக்கும் ஒரு பலவீனமான எதிரியைக் கூட அந்தப் பலவான் அலட்சியம் செய்யக் கூடாது. நம்மிடம் போர்புரியத் துணிந்தவன் குறித்து சொல்லவும் வேண்டுமா?

ஆகையால், மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, ஓ தலைவா, விருஷ்ணி குலத்தின் முதன்மையானவரே {கிருஷ்ணரே}, அனைத்து முயற்சிகளையும் கைக்கொண்டு அவனைக் கொல்லும். மேலும் தாமதிக்காதீர்! மென்மையான திட்டங்களால் அழிக்கப்படக்கூடியவன் இவன் இல்லை. உம்மிடம் போரிட்டுக் கொண்டு துவாரகையைப் பாழாக்கி இவன், உமக்கு நண்பனாக முடியாது என்பது எனது கருத்து" என்றான் {தேரோட்டி}. கௌந்தேயரே {யுதிஷ்டிரரே}, எனது தேரோட்டியின் இவ்வார்த்தைகளைக் கேட்டும், அவன் சொன்னது உண்மை என்பதை அறிந்து, சால்வனைக் கொல்லும் நோக்கிலும், விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேரை அழிக்கும் நோக்கிலும் போரில் (புத்துணர்ச்சியுடன்) ஈடுபட்டேன். வீரரே, தாருகனிடத்தில், "சற்றுப் பொறு" என்று சொல்லி, எனது வில்லின் நாணில் எனது விருப்பத்திற்குரிய ஆயுதமான தெய்வீகம் கொண்டதும், கட்டுப்படுத்தப்பட முடியாததும், கலங்கடிக்கப்பட முடியாததும், சக்தியால் வெடித்துச் சிதறுவதும், அனைத்தையும் துளைக்கும் சக்தி பெற்றதும், பெரும் பிரகாசமுடையதும் எனக்குப் பிடித்தமான ஆயுதமும் ஆன  எரிந்து கொண்டிருந்த நெருப்பாயுதத்தை {ஆக்னேயாஸ்திரத்தை} பொருத்தினேன்.
"விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேரையும் அதில் இருக்கும் அனைத்து எதிரிகளையும் அழி" என்று சொல்லி அந்தக் கணையை அடித்தேன். யக்ஷர்களையும், ராட்சசர்களையும், தானவர்களையும், அசுத்தமான குலங்களில் பிறந்த மன்னர்களையும் சாம்பலாக்குவதும், கூர்மையானதும், களங்கமற்றதும், அழிவுக்கடவுளான யமனைப் போன்றதும், ஒப்பற்றதும், எதிரிகளைக் கொல்வதுமான பெரும் சக்தி பெற்ற சக்கரமான சுதர்சனத்தை எனது கரத்தின் பலத்தாலும், மந்திரங்களை உச்சரித்தும் கோபத்துடன் ஏவினேன். விண்ணில் எழுந்த அது யுகத்தின் கடைசியில் பிராகசத்துடன் மின்னும் இரண்டாவது சூரியனைப் போல இருந்தது. ஒளியிழந்த சௌப நகரத்தை அடைந்து, வாளால் நெடும் மரத்தை அறுப்பது போல நகரத்துக்குள் நுழைந்தது.

சுதர்சனத்தின் சக்தியால் இரண்டாகப் பிளந்து மகேஸ்வரரின் கணைகளால் அசைக்கப்பட்ட திரிபுரா நகரம் போல விழுந்தது. சௌப நகரம் இப்படி விழுந்த பிறகு, சக்கரம் மீண்டும் எனது கைகளை அடைந்தது. மீண்டும் அதை {சுதர்சனத்தை} எடுத்து, பெரும் சக்தியுடன் அதைச் சுழற்றி, "சால்வனிடம் செல்" என்று சொல்லி வீசினேன். பெரும் எடை கொண்ட  கதையைச் என்மீது வீசுவதற்க்காக  சுழற்றிக் கொண்டிருந்த சால்வனை அந்தச் சக்கரம் இரண்டாகப் பிளந்தது. அதன் சக்தியால் அந்த எதிரியைப் பொசுக்கியது. அந்த வீரன் கொல்லப்பட்ட பிறகு, இதயம் வருந்திய தானவப் பெண்மணிகள், "ஓ" என்றும் "ஐயோ" என்றும் அலறிக் கொண்டு எல்லாப்புறமும் ஓடினர். எனது தேரை சௌப நகரத்தின் முன்பாக எடுத்துச் சென்று, நான் மகிழ்ச்சிகரமாக எனது சங்கை எடுத்து ஊதி எனது நண்பர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை ஊட்டினேன். அரண்மனைகளுடனும், வாயில் வழிகளுடனும் மேரும் மலையின் சிகரம் போல இருந்த அவர்களின் நகரம் மொத்தமாக அழிந்து பொசுங்கியது. தானவர்கள் அனைவரும் அச்சத்தால் ஓடிவிட்டனர். இப்படி சௌப நகரத்தை அழித்து, சால்வனைக் கொன்ற நான் ஆனர்த்த நாட்டிற்குத் திரும்பும் எனது நண்பர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கினேன். மன்னா {யுதிஷ்டிரரே}, இதன் காரணமாகவே என்னால் யானையின் பெயர் கொண்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வர முடியவில்லை. எதிரி வீரர்களை அழிப்பவரே! ஓ வீரரே, நான் வந்திருந்தால், சுயோதனன் {துரியோதனன்} உயிருடன் இருக்க மாட்டான். பகடையாட்டமும் நடைபெற்றிருக்காது. நான் இப்போது என்ன செய்ய? அணை உடைந்த பிறகு நீரைத் தேக்குவது என்பது சிரமமாகும்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தக் கௌரவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, இப்படிப் பேசிய வலிமை நிறைந்த கரங்கள் கொண்ட ஆண்மக்களில் முதன்மையானவனும், அனைத்து அருளையும் கொண்டவனுமான மதுவைக் கொண்டவன் {மதுசூதனன் = கிருஷ்ணன்}, பாண்டவர்களை வணங்கி, விடைபெறத் தயாரானான். வலிமை நிறைந்த கரம் கொண்ட அந்த வீரன் மரியாதையுடன் நீதிமானான யுதிஷ்டிரனை வணங்கினான். மன்னனும் {யுதிஷ்டிரனும்} பதிலுக்கு வணங்கினான். பீமன், அவனது {கிருஷ்ணனின்} தலையில் இருந்த கிரீடத்தை முகர்ந்து பார்த்தான். அர்ஜுனனால் கட்டி அணைத்துக் கொள்ளப்பட்டான். இரட்டையர்கள் அவனை {கிருஷ்ணனை} மரியாதையுடன் வணங்கினர். அவன் தௌமியரால் முறையாக மதிக்கப்பட்டான், திரௌபதி கண்ணீரால் அவனை வழிபட்டாள். *சுபத்திரையையும், அபிமன்யுவையும் தங்கத் தேரில் ஏறச் செய்து, பாண்டவர்களால் வணங்கப்பட்டு கிருஷ்ணனும் அந்தத் தேரில் ஏறினான். யுதிஷ்டிரனைச் சமாதானம் செய்த பிறகு, கிருஷ்ணன், சைப்பியம், சுக்ரீவன் என்ற குதிரைகள் பூட்டப்பட்டு, சூரியனைப் போலப் பிரகாசித்த தனது தேரில் ஏறி துவாரகைக்குச் சென்றான். தாசார்ஹ குலத்தைச் சேர்ந்த அவன் சென்றதும், பிரிஷாதனின் {துருபதன்} மகன் திருஷ்டத்யும்னனும், தன்னுடன் திரௌபதியின் மகன்களை அழைத்துக் கொண்டு, தனது நகரத்திற்குத் {காம்பில்யத்திற்குத்} திரும்பினான்.

சேதி நாட்டு மன்னன் திரிஷ்டகேது {சிசுபாலன் மகனான திருஷ்டகேது}, தனது தங்கையை {**கரேணுமதி = நகுலனின் மனைவி, சிசுபாலனின் புதல்வியை} அழைத்துக் கொண்டு, பாண்டவர்களிடம் விடைபெற்று அழகான நகரமான சுக்திமதிக்கு சென்றான். பாரதரே, குந்தி மகன்களின் அனுமதியைப் பெற்ற அளக்கமுடியாத சக்தி கொண்ட கேகயர்களும் பாண்டவர்கள் அனைவரையும் மரியாதையுடன் வணங்கிய பிறகு கிளம்பிச் சென்றனர். ஆனால் அந்தணர்களும், யுதிஷ்டிரனின் நாட்டில் வாழ்ந்த வைசியர்களும் தொடர்ச்சியாக கேட்டுக் கொள்ளப்பட்டும், பாண்டவர்களை விட்டு விலகவில்லை. மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, பரத குலத்தின் காளையே, காம்யக வனத்தில் அந்த உயர் ஆன்மா கொண்டவர்களைச் சூழ்ந்திருந்தவர்கள் இயல்புக்கு மிக்கவர்களாகத் தெரிந்தார்கள். பிறகு யுதிஷ்டிரன், உயர்ந்த மனம் கொண்ட அந்தணர்களை வணங்கி, உரிய நேரத்தில் தனது மக்களிடம், "தேரைத் தயார் செய்யுங்கள்" என்று சொன்னான்.

---------------------------------------------------
*சுபத்திரையையும், அபிமன்யுவையும்....

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:

சுபத்திரையைக் கடத்தினான் அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 222
பாண்டவர்களின் பிள்ளைகள் - ஆதிபர்வம் பகுதி 223

** கரேணுமதி = நகுலனின் மனைவி....... என்று ஆதிபர்வம் 95ம் பகுதியில் வருகிறது. மேலும், 15வது பர்வமான ஆசிரமவாச பர்வத்தின்  முதல் பகுதியிலும் வருகிறது.

அறம் வளர்க்கும் குல வரலாறு - ஆதிபர்வம் பகுதி 95

நகுலன் சேதி நாட்டு இளவரசி கரேனுமதியை மனைவியாகக் கொண்டு, அவளிடம் நிராமித்ரா என்ற மகனைப் பெற்றான். 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, December 03, 2013

வசுதேவரைக் கொன்றான் சால்வன் - வனபர்வம் பகுதி 21

Salwa killed Vasudeva | Vana Parva - Section 21 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

சால்வனுடன் கிருஷ்ணன் புரிந்த போர்; வசுதேவர் மாண்டார் என்று ஆஹூகர் கிருஷ்ணனுக்கு செய்தி அனுப்புவது; வானில் இருந்த சால்வன் தேரில் இருந்து வசுதேவர் விழுவது; இதைக் கண்ட கிருஷ்ணன் மயக்கமடைவது...

வாசுதேவன் சொன்னான், "மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, எனது பெரும் எதிரியான மன்னன் சால்வன், இப்படிப் போர்க்களத்தில் என்னிடம் போரிட்டு, மீண்டும் வானத்தில் எழும்பினான். வலிமைவாய்ந்த ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, வெற்றியின் மீது இருக்கும் விருப்பத்தால் உந்தப்பட்டு, அந்தத் தீயவன் என்மீது சதாக்னிகளையும், பெரும் கதாயுதங்களையும், எரியும் ஈட்டிகளையும், கனத்த தண்டங்களையும் வீசினான். அந்த ஆயுதங்கள் வானத்தில் வரும்போதே, நான் எனது வேகமான கணைகளால் தடுத்து, அவை என்னிடம் வரும் முன்பே அவற்றை இரண்டு மூன்று துண்டுகளாக்கினேன். அதனால் வானத்தில் பெரும் சத்தம் இருந்தது. சால்வன், தாருகனையும், எனது குதிரைகள் மற்றும் தேரையும் நூற்றுக்கணக்கான நேர்க்கணைகளால் மூடினான்.


வீரரே {யுதிஷ்டிரரே}, பிறகு, தாருகன் {தேரோட்டி} மயங்கும் முன்பு என்னிடம் தெளிவாக, "சால்வனின் கணைகளால் தாக்குண்ட பிறகும் நான் களத்தில் நிற்கிறேன் என்றால், அது எனது கடமை என்பதால் தான். ஆனால், {மேலும்} அப்படிச் செய்ய இயலாதவனாக இருக்கிறேன். எனது உடல் பலவீனமடைந்துவிட்டது" என்றான். எனது தேரோட்டியின் பரிதாபகரமான வார்த்தைகளைக் கேட்டு, நான் அவனைப் பார்த்தேன். அவன் {தேரோட்டி தாருகன்} கணைகளால் புண்ணாகியிருந்தான். பாண்டுவின் மகன்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அவனது மார்புகளோ, தலையோ, உடலோ, கரங்களோ, அம்புகளால் மறைக்கப்படாமல் இல்லை. அந்தக் கணைகளால் உண்டான புண்களில் இருந்து இரத்தம் ஒழுகிக்கொண்டே இருந்தது. மழையில் முழுக்க நனைந்த சிவந்த சுண்ணாம்பு மலை எப்படி இருக்குமோ அப்படி அவன் இருந்தான். வலிமைமிக்க கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, இப்படிப் போர்க்களத்தில் சால்வனின் கணைகளால் துளைக்கப்பட்டு, கைகளில் கடிவாளக் கயிற்றைப் பற்றியிருந்த எனது சாரதிக்கு நான் உற்சாகமூட்டினேன்.

பாரதரே {யுதிஷ்டிரரே}, அந்த நேரத்தில், துவாரகையில் தனது வீட்டை வைத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட மனிதன் எனது தேருக்கு வேகமாக வந்து, ஒரு நண்பனைப்போல், ஆஹுகர் சொல்லியனுப்பிய செய்தியைச் சொன்னான். அவன் ஆஹுகரின் பணியாட்களில் ஒருவன் போலத் தெரிந்தான். சோகத்துடன், துயரால் உடைந்த குரலுடன் அவன் "வீரரே {கிருஷ்ணரே}, துவாரகையின் தலைவர் ஆஹுகன் உமக்கு சில வார்த்தைகளைச் சொல்லி அனுப்பியிருக்கிறார். கேசவரே {கிருஷ்ணரே}, உமது தந்தையின் நண்பர் என்ன சொல்லியனுப்பியிருக்கிறார் என்பதைக் கேளும், "விருஷ்ணி குலத்தின் மகனே {கிருஷ்ணனே}, கட்டுப்படுத்தப்பட முடியாதவனே, நீ இல்லாத போது, இன்று சால்வன் துவாரகைக்கு வந்து, பலாத்காரமாக வசுதேவரைக் கொன்றான். ஆகையால், மேலும் போர் செய்யத் தேவையில்லை. போரை நிறுத்து, ஓ ஜனார்த்தனா, இங்கே வந்து துவாரகையைக் காப்பாற்று! அதுவே உனது முதற்கடமை!" என்று ஆஹுகர் சொன்னதாக செய்தியாளன் சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்டு எனது இதயம் கனத்தது. நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை என்னால் உறுதிசெய்ய முடியவில்லை.

வீரரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும் துரதிர்ஷ்டத்தைக் கேட்டு, சாத்யகியையும், பலதேவரையும் {பலராமரையும்}, வலிமைவாய்ந்த பிரத்யும்னனையும் மனதால் நிந்தித்தேன். குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, துவாரகை மற்றும் வசுதேவரைக் காப்பதை அவர்களுக்கு அடிப்படைக் கடமையாக வைத்தே, நான் சால்வனின் நகரத்தை அழிக்கச் சென்றேன். துயர் நிறைந்த இதயத்துடன் நான் என்னிடமே, "அந்த எதிரிகளை அழிக்கும், வலிமைவாய்ந்த கரங்களுக்கு சொந்தக்காரரான பலதேவர் உயிருடன் இருக்கிறாரா, சாத்யகி, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, சாருதேஷ்ணன், சாம்பன் ஆகியோர் உயிருடன்தான் இருக்கின்றனரா?" என்று கேட்டுக் கொண்டேன். மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, அவர்கள் உயிருடன் இருந்தால், இடியைத் தாங்குபவனால் {இந்திரனால்} கூட சூதரின் மகனை (வசுதேவரை) எவ்வழியிலும் அழிக்க முடியாது. வசுதேவர் இறந்து விட்டார் என்றால் பலதேவர் {பலராமன்} உள்ளிட்ட அனைவரும் உயிரை இழந்திருப்பார்கள் என்பதே எனது உறுதியான தீர்மானமாக இருந்தது.

வலிமைவாய்ந்த மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டார்களே என்று நினைத்துப் பார்த்த நான் துயரத்தில் மூழ்கினேன்! இந்த மனநிலையுடன் நான் சால்வனை எதிர்கொண்டேன். ஓ பெரும் ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, அப்போது நான் அந்த விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேரில் இருந்து வசுதேவர் விழுவதைக் கண்டேன். இதைக் கண்ட நான் மயக்கமடைந்தேன். அனைத்துத் தகுதிகளையும் இழந்து வானில் இருந்து *பூமியை நோக்கி விழும் யயாதியைப் போல எனது தந்தை எனக்குத் தெரிந்தார். அழுக்கடைந்த தலைப்பாகையுடன், தலைமுடி கலைந்து, ஆடைகள் கலைந்து விழும் எனது தந்தை, தகுதிகளை இழந்து வானில் இருந்து விழும் ஒரு கோள் {கிரகம்} போலத் தெரிந்தார். பிறகு எனது வில்லான சாரங்கம் எனது கைகளில் இருந்து விழுந்தது. குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, எனக்கு மயக்கம் வந்தது! நான் தேரின் பக்கவாட்டில் அமர்ந்தேன்.

பாரத குலத்தின் வழித்தோன்றலே, நான் தேரில் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டு, நான் இறந்து விட்டேன் என்று நினைத்த எனது முழு படையும் "ஓ", "ஐயோ" என்று கதறின. தனது கரங்களையும் கீழ் முட்டிகளையும் நீட்டியபடி புரண்டு கொண்டு வந்த எனது தந்தை, வானத்தில் இருந்து விழும் பறவையைப் போலத் தெரிந்தார். வலிமைவாய்ந்த கரங்கள் கொண்ட வீரரே {யுதிஷ்டிரரே}, கைகளில் ஈட்டிகளையும் போர்க்கோடரிகளையும் வைத்திருந்த எதிரி வீரர்கள் பயங்கரமாகத் தாக்கினர்! (இவற்றைக் கண்டு) எனது இதயம் நடுங்கியது. நான் விரைவில் உணர்வடைந்தேன். ஓ வீரரே, அப்போது அந்தக் களத்தில் விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேரையோ, எதிரியான சால்வனையோ, அல்லது முதிர்ந்த எனது தந்தையையோ நான் காணவில்லை! பிறகு நான் கண்டதெல்லாம் மாயை என்பதை என் மனதில் நிச்சயித்துக் கொண்டேன். உணர்வுகள் மீண்ட நான், மறுபடியும் நூற்றுக்கணக்கான கணைகளை அடிக்க ஆரம்பித்தேன்.
----------------------------------------------------------------------------------------------------------------
*பூமியை நோக்கி விழும் யயாதியைப் போல எனது தந்தை எனக்குத் தெரிந்தார்.


மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
இந்திரன் யயாதி பேச்சு | ஆதிபர்வம் - பகுதி 87
அஷ்டகனை அடைந்த யயாதி | ஆதிபர்வம் - பகுதி 88
யயாதி கண்ட உலகங்கள்| ஆதிபர்வம் - பகுதி 89
மனிதன் இறந்த பிறகும், பிறக்கும் முன்பும் என்ன நடக்கிறது? ஆதிபர்வம் - பகுதி 90

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Monday, December 02, 2013

சால்வனுடன் கிருஷ்ணன் புரிந்த போர் - வனபர்வம் பகுதி 20

Krishna's war against Salwa | Vana Parva - Section 20 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

துவாரகை திரும்பிய கிருஷ்ணன் சால்வனைத் தேடி பல நாடுகளைக் கடந்து சென்று அவனைக் கண்டடைந்து அவனுடன் யுத்தம் புரிந்தது;

வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்னான், "சால்வன் அனர்த்தர்களின் நகரத்தைவிட்டு சென்ற பிறகு, உமது பெரும் ராஜசூய வேள்வியை முடித்ததும் நான் அங்கு சென்றேன்! அங்கே சென்றதும் துவாரகை தனது ஓளியை இழந்திருப்பதைக் கண்டேன். பெரும் ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, அங்கே வேத உச்சரிப்புகள் மற்றும் வேள்வி ஆகியவற்றின் ஒலி கேட்கவில்லை. அற்புதமான மங்கையர் தங்கள் ஆபரணங்களை இழந்திருந்தனர். தோட்டங்கள் அழகிழந்து இருந்தன. இக்காட்சிகளால் அச்சமுற்ற நான், ஹிருதிகனின் மகனிடம் {கிருதவர்மனிடம்}, "மனிதர்களில் புலி போன்றவனே, விருஷ்ணிகளின் நகரத்தில் இருக்கும் ஆண்களும் பெண்களும் துயருற்று இருக்கின்றனர்?" என்று கேட்டேன். மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, இப்படிக் கேட்கப்பட்ட ஹிருத்திகனின் மகன் (கிருதவர்மன்), நகரத்தின் மீதான சால்வனின் படையெடுப்பையும், அவன் திரும்பிச் சென்றதையும் விவரமாகத் தெரிவித்தான்.


பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இவை அனைத்தையும் கேட்ட நான், சால்வனைக் கொல்ல எனது மனதில் தீர்மானித்தேன். பாரதர்களில் சிறந்தவரே, குடிமக்களை ஊக்கப்படுத்தி, மன்னர் ஆஹுகரிடமும், அனகதுந்துபியிடமும், விருஷ்ணி குலத்தின் தலைமை வீரர்களிடமும், "யாதவர்களில் காளைகளே, நான் சால்வனைக் கொல்லப் போகிறேன் என்பதை அறிந்து, நீங்கள் அனைவரும் விழிப்புடன் இந்த நகரத்திலேயே இருங்கள். அவனை {சால்வனைக்} கொல்லாமல் நான் துவாராவதி நகரத்திற்குத் திரும்பமாட்டேன். சால்வனுக்கும், விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அவனது தேருக்கும் அழிவை ஏற்படுத்திவிட்டு நான் உங்களிடம் வருகிறேன். பகைவருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இந்த துந்துபி {போர் இசை வாத்தியம்}, கூர்மை, நடுத்தர மற்றும் சம சுவரங்களில் அடிக்கப்படட்டும்", என்று சொன்னேன்.

பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, என்னால் இப்படித் தொடர்ந்து ஊக்கப்படுத்தப்பட்ட அந்த வீரர்கள் மகிழ்ச்சியாக என்னிடம், "சென்று பகைவர்களைக் கொல்லுங்கள்" என்றனர். இப்படி மகிழ்ச்சி நிறைந்த அந்த வீரர்களிடம் இருந்து வாழ்த்துகளைப் பெற்று, அந்தணர்களை அதிர்ஷ்டமான வார்த்தைகளைக் கூற வைத்து, மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} சிறந்தவர்களையும் சிவனையும் வணங்கி, சைப்பியம், சுக்ரீவம் என்ற குதிரைகளை எனது தேரில் பூட்டி, தேர்ச்சக்கரங்களின் ஒலியால் அந்த இடத்தையே நிறைத்து, சங்குகளில் சிறந்த சங்கான பாஞ்சஜன்யத்தை ஊதிக்கொண்டு வெளியே சென்றேன்.

மன்னா {யுதிஷ்டிரரே}, மனிதர்களில் புலியே, சந்தேகத்திற்கிடமில்லாது வெற்றியடையும் எனது நால்வகைப் படையுடன் நான் கிளம்பினேன். மரங்களால் கிரீடம் சூட்டப்பட்டு, நீர்த்தேக்கங்களாலும், ஓடைகளாலும் நிரம்பிய பல நாடுகளையும் மலைகளையும் கடந்து, கடைசியாக மார்திகாவர்தம் என்ற நாட்டை அடைந்தேன். அங்கே, மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தனது தேருடன் சால்வன் சமுத்திரத்தின் அருகில் சென்று கொண்டிருந்ததாகக் கேள்விப் பட்டு அவனைத் தொடர்ந்து சென்றேன்.

எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அலைகள் கொண்ட ஆழமான கடலுக்கு மத்தியில் சால்வன் விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தனது தேருடன் இருந்தான். யுதிஷ்டிரரே, தூரத்தில் இருந்தே என்னைக் கண்ட அந்தத் தீய ஆன்மா, என்னைத் தொடர்ந்து போருக்கு அழைத்துக் கொண்டிருந்தான். எனது வில்லில் இருந்து புறப்பட்ட வேகமாக சென்று துளைக்கக்கூடய எனது கணைகள் அவனது தேரை அடையவில்லை. இதனால் நான் மிகுந்த கோபமடைந்தேன்.

மன்னா, தைத்தியனின் மகனும் பாவியுமான அந்த கட்டுப்படுத்த முடியாத சக்தி கொண்டவன் {சால்வன்}, அவனது பங்குக்கு ஆயிரக்கணக்கான கணைகளை ஊற்று போல என்னை நோக்கி அடித்துக் கொண்டிருந்தான். பாரதரே, எனது வீரர்கள் மீதும், எனது தேரோட்டி மீதும், எனது குதிரைகள் மீதும் கணைகளை மழையெனப் பொழிந்தான். அந்தக் கணைகளைக் குறித்துக் கருதிப் பாராமல் நாங்கள் தொடர்ந்து போரிட்டோம். பிறகு சால்வனைத் தொடரும் வீரர்கள் என்னை நோக்கி நேரடியாக ஆயிரம் கணைகளை அடித்தனர். அசுரர்கள், எனது குதிரைகளையும், எனது தேரையும், தாருகனையும் உயிரைத் துளைத்துப் பறிக்கவல்ல கணைகளால் மூடினர்.

குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, ஆயுதங்களில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட நிபுணத்துவத்தைப் பெற்ற நானும் பத்தாயிரக்கணக்கான கணைகளை மந்திரங்களை உச்சரித்து அடித்தேன்! விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்த தேர் வானத்தில் இரண்டு மைல்களுக்கு அப்பால் இருந்த போது, அதை எனது துருப்புகளால் காண முடியவில்லை. ஆகையால் அவர்கள் என்னை தங்கள் கர்ஜனைகளால் ஊக்கப்படுத்தியும் கைத்தட்டிக் கொண்டும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடிந்தது. எனது கை நுனியால் விடப்பட்ட கணைகள் அனைத்தும் தானவர்களின் உடலில் பூச்சிகளைப் போல ஊடுருவின.

விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேரில் இருந்து ஓலம் எழுந்தது. கூரிய கணைகளால் தாக்குண்டவர்கள் அந்தப் பெரும் சமுத்திரத்தின் நீருக்குள் விழுந்தனர். தங்கள் கரங்களையும் இழந்தவர்களும், கழுத்துகளை இழந்து தலையில்லாத முண்டங்களின் வடிவத்தில் இருந்தவர்களும் பெரும் ஓலமிட்டு விழுந்தனர். அப்படி அவர்கள் விழும்போதே, அந்தச் சமுத்திரத்தின் நீரில் வாழ்ந்த விலங்குகளால் விழுங்கப்பட்டனர். பிறகு நான் நீரில் இருந்து பெற்றதும், தாமரைத் தண்டு போல அருள்நிறைந்ததும், பால் போன்ற வெண்மை கொண்டதும், மகரந்த மலரைப் {Kunda Flower} போலவும், நிலவைப் போலவும், வெள்ளியைப் போலவும் இருந்த பாஞ்சஜன்யத்தை பலமாக ஊதினேன்.

விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேரையுடைய சால்வன், தனது வீரர்கள் விழுவதைக் கண்டு, மாயையின் உதவியுடன் போர்புரியத் தொடங்கினான். அவன் தொடர்ச்சியாக என்னை நோக்கி கதாயுதங்களையும், கலப்பைகளையும், இறகு கொண்ட கணைகளையும், ஈட்டிகளையும், போர்க்கோடரிகளையும், வாட்களையும், ஈட்டிகைளப் போன்ற கணைகளையும், இடிகளையும், சுருக்கு கயிறுகளையும், அகலமான வாட்களையும், பீப்பாய்களில் இருந்து தோட்டாக்களையும் {bullets from barrels}, தண்டங்களையும், ஏவுகணைகளையும் அடித்தான். என்னை நோக்கி அவர்களை வரவைத்த நான், வெகுவிரைவாக அவர்களை பதில் மாயையால் அழித்தேன். தனது மாயைகள் பலனற்றுப் போவதைக் கண்ட அவன் {சால்வன்}, மலைச்சிகரங்களை எடுத்துப் போர்புரிய ஆரம்பித்தான்.

பாரதரே {யுதிஷ்டிரரே}, அங்கே இருளும் ஒளியும் மாறி மாறி வந்தன. திடீரென நாள் இருண்டதாகவும் அழகானதாகவும் இருந்தது. திடீரென வெப்பமாகவும், திடீரென குளிர்ச்சியாகவும் இருந்தது. அங்கே நிலக்கரி, சாம்பல் மற்றும் கணைகளின் மழை பொழிந்தன. இப்படி ஒரு மாயையை உண்டாக்கிய அந்த எதிரி என்னுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். அதை உறுதி செய்த நான், பதில் மாயையால் முன் வந்த மாயையை அழித்தேன். சரியான நேரத்தில் சுற்றிலும் நான் கணைகளின் மழையைப் பொழிந்தேன். வலிமைமிக்க மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு வானத்தின் மாடம் நூறு சூரியன்களை உடையது போலவும், நூறு சந்திரன்கள் உடையது போலவும், ஆயிரம் பத்தாயிரிம் நட்சத்திரங்களை உடையது போலவும் காட்சியளித்தது. அது இரவா அல்லது பகலா என்பதை யாராலும் நிர்ணயம் செய்ய முடியவில்லை. கலக்கமடைந்த நான், எனது வில்லின் நாணில் பிரஜ்ஞாயுதத்தைப் {பிரஜ்ஞாஸ்திரத்தைப்} பொருத்தினேன். குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, அந்த ஆயுதம், பருத்திச் செதில்களாக மாறி காற்றால் இழுத்துச் செல்லப்பட்டது! முடிவில் ஒருவரின் உடல் மட்டும் மீண்டிருப்பதற்காகக் கணக்கிட்டது போல அங்கே பெரும் போர் நடந்தது. ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, ஒளி மீண்டதும், மீண்டும் நான் எதிரியுடன் போரிட்டேன்.

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, December 01, 2013

சால்வனை வீழ்த்திய பிரத்யும்னன் - வனபர்வம் பகுதி 19

Pradyumna defeated Salwa | Vana Parva - Section 19| Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

உணர்வு திரும்பிய பிரத்யும்னனைத் தேரோட்டி, மீண்டும் களத்திற்கு இட்டுச் செல்லல்; சால்வனை பிரத்யும்னன் வீழ்த்துதல்...

வாசுதேவன் தொடர்ந்தான், "இப்படிச் சொல்லப்பட்ட சூதகுல மகன் {தேரோட்டி}, பலம் பொருந்தியவர்களில் முதன்மையான பிரத்யும்னனிடம் இனிமையான வார்த்தைகளில் விரைந்து மறுமொழி கூறினான். அவன், "ஓ ருக்மிணியின் மகனே {பிரத்யும்னனே}, போரில் விருஷ்ணிகளின் முறைமைகளை அறிந்த நான், களத்தில் குதிரைகளை வழிநடத்த அஞ்சவில்லை. இதைத் தவிர வேறு எதுவுமில்லை! ஆனால், நீண்ட ஆயுள் அருளப்பட்டவனே {பிரத்யும்னா}, போரில் தேரை வழிநடத்துபவர்களுக்கு, அந்தத் தேரில் இருக்கும் போர்வீரனை என்ன செய்தாவது காக்க வேண்டும் என்று சொல்லித்தரப்படுகிறது! நீயும் மிகவும் தாக்கப்பட்டு இருந்தாய். சால்வனின் கணைகளில் நீ மிகுந்த காயங்களை அடைந்திருந்தாய். மேலும் ஓ வீரனே, நீ உணர்வை இழந்திருந்தாய். ஆகையால், நான் களத்தில் இருந்து விலக வேண்டியிருந்தது! ஆனால், சத்வதர்களின் தலைவனே, இப்போது நீ உணர்வை அடைந்துவிட்டாய். ஆகையால், கேசவரின் மகனே, குதிரைகளை வழிநடத்துவதில் எனக்கிருக்கும் திறமையை இப்போது பார்! நான் தாருகரால் பெறப்பட்டு, நல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளேன். நான் இப்போது, கொண்டாடப்படும் சால்வப் படையின் அணிவகுப்பை அச்சமின்றி ஊடுருவிச் செல்வேன்!" என்றான்.

வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "வீரரே {யுதிஷ்டிரரே}, இதைச் சொன்ன அந்தத் தேரோட்டி, கடிவாளத்தின் வாரை இழுத்து, குதிரைகளை விரைவாக போர்க்களத்திற்கு நடத்தினான். மன்னா {யுதிஷ்டிரரே}, சாட்டையால் அடிக்கப்பட்டும், கடிவாளங்களால் இழுக்கப்பட்டு சென்ற அந்த அற்புதமான குதிரைகள் வளைவாகவும், ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியாக இல்லாமலும், வலதுபுறமாகவும் இடது புறமாகவும் அழகான அசைவுகளுடன், காற்றில் பறப்பதைப் போல சென்றன. மன்னா {யுதிஷ்டிரரே}, கை லாவகம் கொண்ட தாருகன் மகனின் நோக்கத்தை அறிந்த அந்தக் குதிரைகள், மிகுந்த சக்தியுடன், தரையில் தங்கள் குளம்புகளைப் பதிக்காமல் செல்வது போலத் தெரிந்தது! அந்த மனிதர்களில் காளை {தேரோட்டி}, எளிதாக சால்வனின் சேனையைச் சுற்றி வந்ததைக் கண்டவர்கள் மிகுந்த ஆச்சரியம் கொண்டனர்.

பிரத்யும்னனின் திறமிக்க செயலைத் தாங்கிக் கொள்ள முடியாத சௌபத்தின் தலைவன் {சால்வன்}, உடனே மூன்று கணைகளைத் தனது எதிரியின் தேரோட்டி மீது அடித்தான்! எனினும், அந்தத் தேரோட்டி, அந்தக் கணைகளின் வேகத்தைக் குறித்து எந்த லட்சியமும் செய்யாமல் தொடர்ந்து வலப்புறமாகச் சென்றான். வீரரே {யுதிஷ்டிரரே}, பிறகு அந்த சௌபத்தின் தலைவன் {சால்வன்}, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்} மீது பல்வேறு வகையான ஆயுதங்களை ஏவினான்! ஆனால் அந்த எதிரிகளைக் கொல்லும் வீரனான ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, தனது கை லாவகத்தை சிறு புன்னகையால் வெளிக்காட்டி, அந்த ஆயுதங்கள் அவனை நெருங்கும் முன்னரே அவற்றைத் துண்டாக்கினான். பிரத்யும்னனால் கணைகள் துண்டிக்கப்பட்டதைக் கண்ட சௌபத்தின் தலைவன், அசுர மாயையை அறிந்தவனாதலால், அவற்றின் துணை கொண்டு அடர்த்தியான கணை மழையைப் பொழிந்தான். தன்னை நோக்கி அடிக்கப்பட்ட அந்த வலிமைவாய்ந்த தைத்திய ஆயுதங்களைத் தனது பிரம்ம ஆயுதத்தைக் கொண்டு பல துண்டுகளாக்கினான். பிறகு பிரத்யும்னன் பிற மன்னர்களின் இறகு கொண்ட கணைகளை அடித்தான்.

அந்த தைத்தியனால் அடிக்கப்பட்ட இரத்தம் குடிக்கும் கணைகளை விலக்கி, அவனைத் {சால்வனைத்} தலையிலும், மார்பிலும், முகத்திலும் அடித்தான். அதனால் ஏற்பட்ட காயங்களால் சால்வன் உணர்விழந்து கீழே விழுந்தான். பிரத்யும்னனால் கணைகளால் காரிய வாதம் கொண்ட அந்தச் சால்வன் கீழே விழுந்த போது, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, அவனை {சால்வனை} நோக்கி, எந்த எதிரியையும் அழிக்கும் வேறொரு கணையைப் பொருத்தி குறி பார்த்தான். அனைத்து தாசார்ஹர்களாலும் வழிபடப்படுவதும், சுடர் விட்டு எரியும் நெருப்பு போன்றதும், கடும் விஷம் கக்கும் பாம்பு போன்றதுமான அந்தக் கணையைக் கண்டு, அந்த ஆகாயமே "ஓ", "ஐயோ" என்றது போல இருந்தது.

பிறகு கருவூலத் தலைவனைத் (குபேரனைத்) தலைமையாகக் கொண்ட இந்திரன் முதற்கொண்ட அனைத்து தேவர்களும், நாரதரையும், பெரும் வேகம் கொண்ட வாயுத் தேவனையும் அனுப்பினார்கள். அந்த இருவரும் ருக்மிணியின் மகனை {பிரத்யும்னனை} அணுகி, தேவர்கள் அனுப்பிய செய்தியைச் சொல்லி, "வீரனே, மன்னன் சால்வன் உன்னால் கொல்லப்படக்கூடாது! அந்தக் கணையை விலக்கிக் கொள். போரில் உன்னால் அவனைக் கொல்ல இயலாது! அந்தக் கணையால் கொல்லப்பட முடியாத, அதன் சக்தியைத் தாங்கக் கூடிய மனிதன் யாருமில்லை. வலிமையுள்ள கரம் கொண்டவனே, தேவகியின் மகனான கிருஷ்ணனின் கையால் அவன் இறக்க வேண்டும் என்று பெரும்படைப்பாளர் {பிரம்மா} விதித்திருக்கிறார். அது பொய்யாகக் கூடாது!" என்றனர். இதன் காரணமாக பிரத்யும்னன் கணைகளில் சிறந்த அந்தக் கணையை தனது வில்லில் இருந்து பிரத்யும்னன் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எடுத்து, தனது அம்பறாத்தூணியில் திரும்ப வைத்தான். பிறகு, மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அந்த வலிமை வாய்ந்த சால்வன், பிரத்யும்னனின் கணைகளால் தாக்குண்டு, இதயம் ஒடிந்து, விரைவாக சென்று விட்டான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தத் தீய சால்வன், விருஷ்ணிகளால் இப்படித் தாக்கப்பட்டு, விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தனது தேரில் ஏறி, துவாரகையை விட்டு வானத்தில் ஏறி வெளியேறினான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!Friday, November 29, 2013

பிரத்யும்னன் சால்வன் போர் - வனபர்வம் பகுதி 17

Encounter between Pradyumna and Salwa | Vana Parva - Section 17 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

பிரத்யும்னனுக்கும் சால்வனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு விவரித்தல்.

வாசுதேவன் தொடர்ந்தான், "பாரத குலத்தின் காளையே, யாதவர்களிடம் இப்படிப் பேசிய ருக்மிணியின் மகன் (பிரத்யும்னன்) தனது தங்க ரதத்தில் ஏறினான். அவனது {பிரத்யும்னன்} தேரை இழுத்துச் சென்ற குதிரைகள் அற்புதமான வகையைச் சேர்ந்தவை. அந்தத் தேரில் யமனைப் போன்ற கடுமையுடன் திறந்த வாய் உள்ள மகரம் பொறிக்கப்பட்ட கொடி பொருத்தப்பட்டிருந்தது. தரையில் ஓடுவதை விட பறப்பதைப் போல இருக்கும் குதிரைகளுடன் அவன் {பிரத்யும்னன்} எதிரியை நோக்கி விரைந்தான். அந்த வீரன் அம்பறாத்தூணி, வாள் ஆகியவற்றை அணிந்து கொண்டு, விரல்களுக்கு தோல் கவசம் பூண்டு, மின்னலைப் போன்ற பிரகாசமிக்க தனது வில்லை எடுத்துச் சுண்டினான். பெரும் பலத்துடன் அந்த வில்லை ஒரு கரத்தைவிட்டு மறு கரத்திற்கு மாற்றிக் கொண்டு எதிரியை அவமதிப்பது போல, தானவர்களுக்கு மத்தியிலும் சௌப நகரத்தின் போர்வீரர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தினான்.


மேலும் எதிரியை அவமதிப்பது போல, போர்க்களத்தில் தானவர்களைத் தொடர்ந்து கொன்ற போது, அவன் சரமெனத் தொடர்ந்து கணையடித்ததில் யாரும் சிறு இடைவெளியையும் காணவில்லை. அவனது {பிரத்யும்னனின்} முகத்தின் நிறம் மாறவில்லை. அவனது உறுப்புகள் நடுங்கவில்லை. அவனது அற்புதமான வீரத்தைப் பறைசாற்றும் விதத்தில் அவனால் எழுப்பப்பட்ட சிம்ம கர்ஜனைகளை மட்டுமே மக்கள் கேட்டனர். வாயை அகல விரித்திருக்கும் நீர்மிருகம் அனைத்து மீன்களையும் விழுங்குவது போல, ரதங்களில் சிறந்த தனது ரதத்தின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடி, சால்வனின் போர் வீரர்கள் இதயங்கள் பயங்கரத்தை உணர்ந்தனர். மன்னா {யுதிஷ்டிரா}, எதிரிகளை வெட்டித் தள்ளும் பிரத்யும்னன், சால்வனிடம் போர் புரிய விரும்பி அவனிடம் {சால்வனிடம்} விரைந்து சென்றான்.

குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {யுதிஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் தனது வீரத்தைப் பறைசாற்றிய பிரத்யும்னனைக் கண்டு கோபம் கொண்ட சால்வனால் அந்தச் சவாலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதரிகளின் நகரங்களை வெல்லும் சால்வன், கோபத்தால் வெறிகொண்டு, கட்டற்ற வேகம் கொண்ட தனது அழகிய ரதத்தில் இருந்து இறங்கி, பிரத்யும்னனிடம் போர்புரியத் தீர்மானித்தான். சால்வனுக்கும், விருஷ்ணி வீரர்களில் முதன்மையானவனுக்கும் {பிரத்யும்னனுக்கும்} இடையில் நடந்த போர், பழங்காலத்தில் இந்திரனுக்கும் பலிக்கும் {மஹாபலிக்கும்} இடையில் நடந்த போரைப் போல இருப்பதை மக்கள் கண்டனர்.

வீரரே {யுதிஷ்டிரரே}, தங்கத்தாலானதும், கொடிகளும், கொடிக்கம்பங்களும், அம்பறாத்தூணிகளும் கொண்ட தனது அழகிய தேரில் ஏறிய சிறப்புமிக்கவனும் பலம் பொருந்தியவனுமான சால்வன் பிரத்யும்னனை நோக்கித் தனது கணைகளை அடிக்கத் தொடங்கினான். பிரத்யும்னன் தனது கரங்களின் சக்தியால் அடர்த்தியான கணை மழையால் சால்வனை மூடினான். பிரத்யும்னனால் இவ்வளவு தாக்கப்பட்டும் சௌபத்தின் மன்னன், அவனைப் பொறுத்துக் கொள்ளாமல், எனது மகனை {பிரத்யும்னனை} நோக்கி சுடர்விட்டு எரியும் நெருப்பு போன்ற கணைகளை அடித்தான்.

ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, சால்வனின் கணைகளால் துளைக்கப்பட்ட ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, நேரத்தைத் தவற விடாது, எதிரியின் உயிர்ப்பகுதிக்குள் நுழையும் ஆற்றல் கொண்ட கணையை அடித்தான். எனது மகனால் {பிரத்யும்னனால்} அடிக்கப்பட்ட இறகுகள் கொண்ட அந்தக் கணை, சால்வனின் கவசத்தைத் துளைத்து, இதயத்திற்குள் நுழைந்தது. இதனால் சால்வன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தான். வீரனான மன்னன் சால்வன் உணர்விழந்து கீழே விழுந்ததைக் கண்ட தானவர்களில் முதன்மையானவர்கள் பூமியை மறைப்பது போல ஓடிப் போனார்கள். பூமியின் தலைவரே {யுதிஷ்டிரரே}, சால்வனின் படை, சௌபத்தின் தலைவனான தங்கள் மன்னன் உணர்வின்றி கீழே விழுவதைக் கொண்டு  "ஓ...." "ஐயோ" என்று சொல்லி ஓலமிட்டனர்.

குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, மீண்டும் உணர்வைப் பெற்ற, பெரும் பலம் வாய்ந்த சால்வன் எழுந்து, பிரத்யும்னனை நோக்கி தனது கணைகளை அடித்தான். வீரனும், பலம் வாய்ந்த கரம் கொண்டவனுமான பிரத்யும்னன், தனது எதிரியால் {சால்வனால்} தொண்டையில் துளைக்கப்பட்டு, தளர்ந்து போய் தனது தேரில் இருந்தான். பெரும் பலம் வாய்ந்த மன்னரே, ருக்மிணியின் மகனைக் {பிரத்யும்னனைக்} காயப்படுத்திய சால்வன், சிம்மத்தைப் போல உரக்க கர்ஜித்து, உலகம் முழுவதையும் அந்தச் சத்தத்தால் நிறைத்தான்! பாரதரே {யுதிஷ்டிரரே}, எனது மகன் {பிரத்யும்ன்ன} உணர்விழந்த போது, அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடாத சால்வன், தாங்க முடியாத கணைகளை அவன்  {பிரத்யும்னன்} மீது ஏவினான். குரு குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, இப்படி எண்ணிலடங்கா கணைகளால் துளைக்கப்பட்ட பிரத்யும்னன், போர்க்களத்தில் அசைவற்றுக் கிடந்தான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Wednesday, November 27, 2013

கிருஷ்ணனின் மகன்கள் வீரம் - வனபர்வம் பகுதி 16

The prowess of the sons of Krishna | Vana Parva - Section 16 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

சால்வனின் படைபலத்தை கிருஷ்ணன் விவரித்தல்; கிருஷ்ணனின் மகன்களான சாம்பன், சாருதேஷ்ணன், பிரத்யும்னன் ஆகியோர் சால்வப் படைகளிடம் காட்டிய வீரத்தைக் குறித்து கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொல்வது….

வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "ஓ மன்னர் மன்னா {யுதிஷ்டிரா}, சௌபத்தின் தலைவன் சால்வன், காலாட்படை, குதிரைப்படை மற்றும் யானைகள் கொண்ட பெரும் படையுடன் எங்கள் நகரத்தை நோக்கி வந்தான்! மன்னன் சால்வனின் தலைமையில் வந்த நால்வகைப் படைகளும் அதிகமான நீர் சூழ்ந்த சமவெளியில் நின்றன. கல்லறைகள், தேவர்களுக்கு அர்ப்பணித்திருந்த கோவில், புனிதமான மரங்கள், எரும்புப் புற்றுகள் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் அவனது {சால்வனின்} படையே நிரம்பியிருந்தது. (நகரத்தை நோக்கி செல்லும்) சாலைகள் அனைத்தும் அந்தப் படைகளின் பிரிவுகளால் தடுக்கப்பட்டன. ரகசிய வழிகளும் எதிரிகளின் முகாமால் தடுக்கப்பட்டிருந்தது. கௌரவரே, மனிதர்களில் காளையே (யுதிஷ்டிரரே}, சௌபத்தின் ஆட்சியாளன் {சால்வன்}, அனைத்துவிதமான ஆயுதங்களுடனும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களுடனும், அடர்ந்த காட்சி கொண்ட, ரதங்கள், யானைகள், பதாகைகளுடன் கூடிய குதிரைப் படை, நல்ல முறையில் கூலி கொடுக்கப்பட்ட பலமும் அனைத்து நற்குறிகளும் கொண்ட காலாட்படை வீரர்கள், பறவைகளின் தலைவனைப் போல (கருடனைப் போல), அற்புதமான ரதங்களில் வில்லுடன் கூடிய ரதவீரர்கள் ஆகியோருடன் பறவைகளின் மன்னனைப் போல (கருடனைப் போல) துவாரகையை நோக்கி விரைவாக வந்தான்.


சால்வனின் படையைக் கண்ட விருஷ்ணி குலத்தின் {யாதவ குலத்தின்} இளைஞர்களான இளவரசர்கள், அவர்களுக்கு {சால்வ படையினருக்கு} நகருக்கு வெளியே பதிலடி கொடுப்பது என்று தீர்மானித்தனர். மன்னா {யுதிஷ்டிரரே}, சாருதேஷ்ணன், சம்பன், பெரும் வீரனான பிரதியும்னன் ஆகியோர் கவசம் பூண்டு, அனைத்துவித ஆபரணங்களும் பூண்டு  தங்கள் ரதங்களின் ஏறி சால்வனின் எண்ணிலடங்கா வீரர்களுடன் மோதுவதெனத் தீர்மானித்து சென்றனர்.

சாம்பன் தனது வில்லை எடுத்துக் கொண்டு சால்வனின் படைத்தளபதியும், அமைச்சருமான க்ஷேமவிருத்தியுடன் ஆர்வமாகப் போர்க்களத்தில் மோதினான். பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அந்த ^ஜாம்பவதியின் மகன் {சாம்பன்}, மழையைப் பொழியவைக்கும் இந்திரனைப் போல, தனது கணைகளை மழையெனப் பொழிந்தான். பெரும் பலம்வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு சால்வப் படைகளின் தளபதியான க்ஷேமவிருத்தி, அந்தக் கணைமழையை, இமயம் போல நின்று அசையாமல் தாங்கிக் கொண்டான்.

மன்னர்களில் முதன்மையானவரே, க்ஷேமவிருத்தி, தனது பங்குக்கு, தன் மாயச் சக்தியைப் பயன்படுத்தி சாம்பன் மீது பலம்வாய்ந்த கணைகளைச் சரமாரியாகப் பொழிந்தான். அந்த மாயையால் ஈர்க்கப்பட்ட சாம்பன் தனது பதில் மாயையால் ஆயிரக்கணக்கான கணைகளை அவனது (எதிரியின்) {க்ஷேமவிருத்தியின்} ரதத்தின் மீது பொழிந்தான். சாம்பனின் கணைகளால் துளைக்கப்பட்டு, அதிக காயம் கொண்டு, தனது விரைவான குதிரையின் உதவியுடன் களத்தை விட்டு விலகினான் {க்ஷேமவிருத்தி}.

சால்வனின் {க்ஷேமவிருத்தி} தீய தளபதி களத்தை விட்டு விலகியதும், பெரும் பலம் வாய்ந்த தைத்தியனான வேகவத் எனது மகனை {சாம்பனை} நோக்கி விரைந்தான். ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, விருஷ்ணி குலத்தைத் தழைக்க வைக்கும் வீரனான சாம்பன், வேகவத்தின் தாக்குதலைப் பொறுத்து களத்தை விடாதிருந்தான். குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, குலைக்க முடியா வீரம் கொண்ட சாம்பன், விரைவாகச் செல்லும் ஒரு கதாயுதத்தைச் சுழற்றி, வேகவத்தின் மீது வேகமாக ஏறிந்தான். மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த கதாயுதத்தால் தாக்குண்ட வேகவத் சிதைந்த வேர்களைக் கொண்ட காட்டின் தலைவன் {ஆல மரம்} விழுவது போல தரையில் விழுந்தான். இப்படி அந்தப் பெரும் பலம்வாய்ந்த அசுரனைத் தனது கதாயுதத்தால் கொன்ற எனது மகன் {சாம்பன்} அந்தப் பெரும்படைக்குள் நுழைந்து, அனைவருடனும் போரிட்டான்.

பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நன்கு அறியப்பட்ட தானவனும் பெரும் பலம் வாய்ந்த வீரனுமான பிவிந்தியன் ஒரு பெரும் பலம்வாய்ந்த வில்லைத் தாங்கிக் கொண்டு, சாருதேஷ்ணனை எதிர்கொண்டான். ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, சாருதேஷ்ணனுக்கும் பிவிந்தியனுக்கும் இடையில் நடந்த போர் பழங்காலத்தில் விரித்திரனுக்கும் வாசவனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல கடுமையானதாக இருந்தது! அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் கணைகளால் தாக்கிக் கொண்டு, ஒருவரை மற்றவர் துளைத்து, இரு பெரும் பலம் வாய்ந்த சிம்மங்களைப் போல கர்ஜித்துக் கொண்டிருந்தனர்.

பிறகு ^ருக்மிணியின் மகன் {சாருதேஷ்ணன்}, தனது வில் நாணில் நெருப்பைப் போலவும் சூரியனைப் போலவும் பிரகாசித்த பெரும் ஆயுதம் ஒன்றைப் பொருத்தி தகுந்த மந்திரங்களை உச்சரித்து அதற்கு உயிருண்டாக்கினான். ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, எனது மகனான அந்த பெரும் போர் வீரன் {சாருதேஷ்ணன்}, கோபத்தால் எரிந்து, பவிந்தியனுக்குச் சவால் விட்டு, அந்த ஆயுதத்தை அவன் {பிவிந்தியன்} மீது ஏவினான். அந்த ஆயுதத்தால் தாக்குண்ட அந்த தானவன், உயிரற்ற சடலமாகக் கீழே தரையில் விழுந்தான். பவிந்தியன் கொல்லப்பட்டதை அறிந்த மொத்த படையும் நடுங்கியது.

அப்போது சால்வன், நினைத்த இடம் எங்கும் செல்லக்கூடிய தனது அழகான ரதத்தில் மேலும் முன்னேறி வந்தான். பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட மன்னா {யுதிஷ்டிரரே}, அப்படி அழகான தேரில் வந்த சால்வனைக் கண்ட துவாரகையின் வீரர்கள் பயத்தால் நடுங்கினார்கள். ஆனால், குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, பிரத்யும்னன் வெளியே வந்து, ஆனர்த்தர்களுக்கு ஊக்கம் கொடுத்து, "நடுங்காதீர்கள், நான் போர்புரியப்போவதைப் பாருங்கள். எனது சக்தியைக் கொண்டு தேரோடு கூடிய அந்தச் சால்வனைத் தடுப்பேன். யாதவர்களே, இந்த நாளில், பாம்புகள் போன்ற கணைகளை எனது வில்லில் இருந்து வெளியேற்றி, சௌபத்தின் தலைவனான {சால்வனை} இந்தப் புரவலனை அழிப்பேன்! அனைவரும் உற்சாகத்தோடு இருங்கள்! அஞ்சாதீர்கள்! சௌபத்தின் தலைவன் {சால்வன்} இன்று கொல்லப்படுவான்! என்னுடன் மோதியதும், அந்த இழிந்தவன், தனது தேருடன் சேர்ந்து அழிவைச் சந்திப்பான்" என்றான். பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, பிரத்யும்னன் இப்படி உற்சாகத்துடன் பேசியதும், யாதவப் புரவலர்கள், வீரரே {யுதிஷ்டிரரே}, களத்திலேயே நின்று, உற்சாகத்துடன் போர்புரியத் தொடங்கினார்கள்.

---------------------------------------------------------------------------------------------
^கிருஷ்ணரின்  எட்டு மனைவியர்களின் பெயர்கள்:

1.ருக்மினி, 2.மித்திரவிந்தை, 3.சத்தியை, 4.ஜாம்பவதி, 5.ரோகிணி, 6.சுசீலா, 7.சத்தியபாமா, 8.லக்ஷ்மனை என எட்டு மனைவியர் கிருஷ்ணருக்கு இருந்தனர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, November 24, 2013

துவாரகையில் மதுவிலக்கு! - வனபர்வம் பகுதி 15

Abstinence from intoxicating drink in Dwarka | Vana Parva - Section 15 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

சால்வனின் முற்றுகையில், துவாரகையில் நடந்த போர்த்தயாரிப்புகள் மற்றும் கோட்டைகளின் தன்மைகளைக் குறித்து கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு விவரித்தல்...

யுதிஷ்டிரன், "பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட சிறப்புகள் மிக்க வாசுதேவா, சௌபத்தின் தலைவன் {சால்வன்} மரணம் குறித்து விரிவாகச் சொல். இந்த விவரிப்பால் எனது ஆர்வம் தணியவில்லை" என்று கேட்டான்.


வாசுதேவன் {கிருஷ்ணன்}, "பெரும்பலம்வாய்ந்த கரம் கொண்ட மன்னா, *சுரூதஸ்ரவசின் மகன் (சிசுபாலன்) என்னால் கொல்லப்பட்டதைக் கேட்ட சால்வன், ஓ பரத குலத்தில் சிறந்தவா {யுதிஷ்டிரரே}, துவாராவதி நகரத்திற்கு வந்தான்! பிறகு, பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே} அந்தத் தீய மன்னன் {சால்வன்}, தனது படைகளை வரிசையாக நிறுத்தி, அந்த நகரத்தைச் சுற்றிலும் மேலிருந்தும் முற்றுகையிட்டான். வானில் தன்னை நிறுத்திக் கொண்ட அந்த மன்னன் {சால்வன்} அந்த நகரத்திற்கு {துவாரகைக்கு} எதிராகப் போர் தொடுத்தான். எல்லா புறங்களில் இருந்தும் அடர்த்தியான ஆயுதங்களைப் பொழிந்து அந்தப் போர் நடந்தது.

பாரத குலத்தின் காளையே, அந்த நகரம் {துவாரகை} எல்லாப்புறங்களிலும் கோட்டை பாதுகாப்புடனும் இருந்தது. அந்தக் கோட்டை, கோட்டை கட்டும் அறிவியலுடன் இருந்தது. நீண்ட முக்கோண வடிவ கொடிகளுடனும், வளைவுகளுடனும், வீரர்களுடனும், சுவர்கள் மற்றும் மேடைகளுடனும், இயந்திரங்கள், சுரங்கங்கள், மற்றும் மரத்தாலான முள்வேலியால் தடுக்கப்பட்ட தெருக்களும், நெருப்பு, பாத்திரங்கள், (நீர் எடுத்துச் செல்ல) மான் தோல் மற்றும் அனைத்து ஆயுதங்களும், ஆயுதங்களை ஏவும் இயந்திரங்களுடன் கூடிய வாயில்கள் கொண்ட கோபுரங்கள் மற்றும் மாளிகைகளுடன் அந்தக் கோட்டை இருந்தது.

மேலும் அந்த வாயில்களில் எக்களாம், சிறு முரசு, மேளம், ஈட்டிகள், கவண்கள், சதாக்னிகள், கலப்பை பங்குகள், ஏவுகணைகள், கற்பந்துகள், போர்க்கோடரிகள் மற்றும் பிற ஆயுதங்கள், இரும்பு பதித்த கவசங்கள், பந்துகளையும், தோட்டாக்கள் மற்றும் கொதிக்கும் திரவங்களை வீசக்கூடிய இயந்திரங்களும் இருந்தன. அந்த நகரம் {துவாரகை}, எண்ணிலடங்கா ரதங்களுடன், உயர்ந்த பிறப்பு கொண்டவர்களும், எந்த எதிரியையும் எதிர்க்கவல்லவர்களுமான கதன், சாம்பன், உத்தவன் மற்றும் பிற வீரர்களால் காக்கப்பட்டு இருந்தது. உத்தரவிடும் பணிகளில் தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்ட அவர்கள், குதிரைப்படை மற்றும் காலாட்படையின் துணை கொண்டு நகரத்தைக் காக்கத் தொடங்கினார்கள்.

கவனக்குறைவைத் தவிர்க்க உக்கிரசேனரும், உத்தவனும் நகரம் முழுவதும் சென்று யாரும் மது அருந்தக் கூடாது என்று அறிவித்தனர். அனைத்து விருஷ்ணிகளும் அந்தகர்களும், தாங்கள் கவனக்குறைவாக நடந்து கொண்டால் சால்வனால் கொல்லப்படுவோம் என்பதை நன்றாய் அறிந்து, நிதானத்துடனும் விழிப்புணர்வுடனும் இருந்தனர்.

ஆனர்த்த நாட்டின் கோமாளிகளையும், ஆடற்கலைஞர்களையும், பாடகர்களையும் காவலர்கள் நகரத்தை விட்டுத் துரத்தினர். நதிகளின் மேல் இருந்த அனைத்து பாலங்களும் அழிக்கப்பட்டன. படகுகள் தடுக்கப்பட்டன. (நகரத்தைச் சுற்றிலும் இருந்த) அகழிகளில் அடியில் சூலங்கள் நட்டு வைக்கப்பட்டன. நகரைச் சுற்றி இருந்த இரண்டு மைல் நீளம் கொண்ட நிலங்கள் சமமற்றவையாக, துளைகளும் குழிகளும் தோண்டப்பட்டு அடியில் ரகசியமாக எரிபொருட்கள் {Combustibles வெடி பொருட்களோ!} நிரப்பப்பட்டன.

பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, எங்கள் கோட்டை இயற்கையிலேயே வலிமையானது. எல்லாப்புறங்களில் இருந்தும் நன்கு பாதுகாக்கப்பட்டது. அதில் எல்லா வகையான ஆயுதங்களும் நிரப்பப்பட்டிருந்தது. இந்தத் தயாரிப்புகளின் தொடர்ச்சியாக எங்கள் நகரம் எப்போதையும் விட எதிரியைச் சந்திக்கத் தயாராகவே இருந்தது.

பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, இவை அனைத்தின் தொடர்ச்சியாக அந்த நகரம் இந்திரனின் நகரம் போலவே காட்சி அளித்தது. மன்னா, சால்வன் அதை {அந்நகரத்தை} அணுகிய போது, அந்த விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் நகரம் ஏற்றுக் கொண்ட குறிப்புகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல், யாரும் நுழையவும், அதை விட்டு வெளியேறவும் முடியாத நிலையில் இருந்தது. அந்த நகரத்தின் அனைத்து தெருக்களும், திறந்த வெளிகளும், எண்ணிலடங்கா யானைகளாலும் குதிரைகளாலும் நிரப்பப்பட்டன.

பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே, போரிடத் தாயாரயிருந்த வீரர்களுக்கு உதவித்தொகைகளுடன் கூடிய கூலியும், உணவுப் பங்கீடும், ஆயுதங்களும், ஆடைகளும் வழங்கப்பட்டன. அந்த வீரர்களில் தங்கம் கொடுக்கப்படாதவர்கள் யாரும் இலர். கூலிக்கொடுக்கப்படாத யாரும் இலர். கட்டாயப்படுத்தப்பட்ட எவரும் இலர். பராக்கிரமத்தை முன்பே வெளிப்படுத்ததாத யாரும் இலர். தாமரை இலைகளைப் போன்ற கண்களை உடையவரே {யுதிஷ்டிரரே}, இப்படியே நன்கு திட்டமிட்டப்பட்ட ஏற்பாடுகளினால் பாதுகாக்கப்பட்ட துவாரகை ஆஹுகரால் (உக்கிரசேனரால்) காக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------
*சுரூதஸ்ரவசின் மகன் (சிசுபாலன்) என்னால் கொல்லப்பட்டதைக் .....

மேலும் விவரங்ளுக்கு கீழே சொடுக்கவும்:
சிசுபால வதம் -சபாபர்வம் பகுதி 44

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top