Showing posts with label ஜனமேஜயன். Show all posts
Showing posts with label ஜனமேஜயன். Show all posts

Sunday, December 09, 2018

நாராயண மகிமை! - சாந்திபர்வம் பகுதி – 347

The glory of Narayana! | Shanti-Parva-Section-347 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 174)


பதிவின் சுருக்கம் : தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்ற நாரதர்; ஜனமேஜயனுக்கு நாராயணனின் மகிமையைச் சொன்ன வைசம்பாயனர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நரனும், நாராயணனும் சொன்ன இந்த வார்த்தைகளைக்கேட்ட முனிவர் நாரதர், பரம்பொருளிடம் அர்ப்பணிப்பில் {பக்தியில்} நிறைந்தார்.(1) நரநாராயணர்களின் ஆசிரமத்தில் முழுமையாக ஆயிரம் வருடங்கள் வசித்து, மாற்றமில்லாதவனான ஹரியைக் கண்டு, நாராயாணனைக் குறித்த சிறந்த உரையாடல்களைக் கேட்ட பிறகு அந்தத் தெய்வீக முனிவர், இமயச் சாரலில் உள்ள தன் சொந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(2) எனினும், முதன்மையான தவசிகளான நரனும், நாராயணனும், கடுந்தவப் பயிற்சிகளில் ஈடுபட்டபடியே இனிமை நிறைந்த தங்கள் பதரி ஆசிரமத்தில் தொடர்ந்து வசித்தனர்.(3) நீ பாண்டவ குலத்தில் பிறந்தவனாவாய். நீ அளவிலா சக்தி கொண்டவனாவாய். ஓ! பாண்டவ குலத்தைத் தழைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, நாராயணனைக் குறித்த இந்த உரையைத் தொடக்கம் முதல் கேட்ட உனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் கழுவப்பட்டு, ஆன்ம புனிதம் அடைந்தவனாக நீ இருக்கிறாய்.(4)

Wednesday, July 05, 2017

நாகர்களும்! ஆஸ்தீகரும்!! (கிண்டில் புத்தகம்)


நாகர்களும்! ஆஸ்தீகரும்!! - ₹.75.00
காண்டவ வனத்தை அர்ஜுனன் எரித்ததில் இருந்தே தொடங்குகிறது, பாம்புகளுக்கும், பாண்டவர்களுக்குமான தொடர்பு. அக்னியின் வேண்டுகோளுக்கிணங்க அர்ஜுனன் காண்டவ வனத்தை எரிக்கிறான். அவ்வாறு எரித்ததில் தக்ஷகனின் மனைவி இறக்கிறாள். அவனது மகன் அஸ்வசேனன் தப்பிக்கிறான். எனினும், அவனும் கர்ணனின் அஸ்திரத்தில் புகுந்து அர்ஜுனனைத் தாக்கச் செல்கையில், அர்ஜுனனால் கொல்லப்படுகிறான்.

Wednesday, December 28, 2016

ஜனமேஜயன் கேள்வி! - கர்ண பர்வம் பகுதி – 01

Janamejaya's enquiry! | Karna-Parva-Section-01 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : துரோணர் இறந்த பிறகு, துரியோதனனும், பிற மன்னர்களும் அவரது மகனிடம் சென்றது; கர்ணனைத் தங்கள் படைத்தலைவனாக்கிக் கொண்டு போரிடச் சென்றது; இரண்டு நாட்கள் கடும் போருக்குப் பிறகு அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்படுவது ஆகியவற்றை வைசம்பாயனர் சொல்வது; போரை விவரமாகச் சொல்லும்படி ஜனமேஜயன் கேட்டுக் கொண்டது…


ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

வைசம்பாயனர் {வியாசரின் சீடர்} சொன்னார், "ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, துரோணர் கொல்லப்பட்டதும், துரியோதனன் தலைமையிலான (கௌரவப் படையின்) அரசப் போர்வீரர்கள் அனைவரும், இதயம் நிறைந்த பெருங்கவலையுடன், துரோணர் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} சென்றனர்.(1) துரோணரின் இழப்பால் அழுதபடியே இருந்த தங்கள் உற்சாகமற்ற நிலையின் விளைவால், சக்தியை இழந்து, துயரால் பீடிக்கப்பட்ட அவர்கள், சரத்வான் மகளின் {கிருபியின்} மகனை {அஸ்வத்தாமனைச்} சுற்றி அமர்ந்தனர்.(2) சாத்திரங்களில் காணப்படும் கருத்துகளால் சற்று ஆறுதலடைந்த அந்தப் பூமியின் ஆட்சியாளர்கள், இரவு வந்ததும் தங்கள் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினர்.(3)


எனினும், ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயா}, தங்கள் வசிப்பிடங்களில் இருந்த அந்தப் பூமியின் தலைவர்களால் எந்த மகிழ்ச்சியையும் உணரமுடியவில்லை. மிகப்பெரும் படுகொலைகளை நினைத்துப் பார்த்த அவர்களால் உறங்கவும் முடியவில்லை.(4) குறிப்பாகச் சூதன் மகன் (கர்ணன்), மன்னன் சுயோதனன் {துரியோதனன்}, துச்சாசனன், சகுனி ஆகியோரால் உறங்கவே முடியவில்லை.(5) இந்த நால்வரும், உயர் ஆன்மப் பாண்டவர்களுக்குத் தாங்கள் ஏற்படுத்திய துயரங்களை நினைத்துப் பார்த்தபடியே அவ்விரவை துரியோதனனின் பாசறையில் ஒன்றாகக் கழித்தனர்.(6) முன்பு அவர்கள், பகடையாட்டத்தால் துயரில் மூழ்கியிருந்த திரௌபதியைச் சபைக்குக் கொண்டு வந்தனர்.

அதை நினைத்துப் பார்த்த அவர்கள், கவலை நிறைந்த இதயங்களுடன் பெரும் வருத்தத்தை அடைந்தனர்.(7) சூதாட்டத்தின் விளைவால் (பாண்டவர்களுக்கு) ஏற்படுத்தப்பட்ட அந்தத் துன்பங்களை நினைத்துப் பார்த்த அவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில் அவ்விரவை நூறு வருடங்களைப் போலக் கழித்தனர்.(8)

காலை விடிந்ததும், அவர்கள் அனைவரும் இயல்பு விதிகளை நோற்று, வழக்கமான தங்கள் சடங்குகளைச் செய்தனர்.(9) வழக்கமான சடங்குகளைச் செய்த பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஓரளவுக்கு ஆறுதலை அடைந்த அவர்கள், தங்கள் துருப்புகளை முறையாக அணிவகுக்கச் செய்து, போரிட வெளியே வந்து,(10) கர்ணனின் மணிக்கட்டில் மங்கல நாணைக் கட்டி, அவனைத் {கர்ணனைத்} தங்கள் படைத்தலைவனாக்கிக் கொண்டு, பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு, தயிர்ப்பாத்திரங்கள், தெளிந்த நெய், அக்ஷதங்கள் [1], தங்க நாணயங்கள், பசுக்கள், ரத்தினங்கள், நகைகள், விலைமதிப்புமிக்க ஆடைகள் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்தும், கட்டியங்கூறுவோர் {சூதர்கள்}, இசைக்கலைஞர்கள் {மாகதர்கள்}, துதிபாடிகள் {வந்திகள்} ஆகியோரை வெற்றித் துதிகளால் தங்களைப் பாடச் செய்தும், அவர்களைத் தங்களின் வெற்றிக்காக வேண்டச் செய்தனர்.(11,12) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்களும், தங்கள் காலைச் சடங்குகளைச் செய்த பிறகு, போரிடும் தீர்மானத்துடன் தங்கள் முகாமை விட்டு வெளியே வந்தனர்.(13)

[1] "அக்ஷதங்கள் என்பன, ஒருவேளை பூர்ண பாத்திரங்கள், அதாவது, சோளம் மற்றும் பிற பயனுள்ள பொருட்களால் விளிம்பு வரை நிறைந்த குறிப்பிட்ட பாத்திரங்கள் என்று பொருள் கொள்ளலாம். முழுமையாகப் பார்த்தால் இது மங்கலத்தன்மையைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது, ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு கடும்போர் தொடங்கியது.(14) கர்ணனுடைய படைத்தலைமையின் போது, குரு மற்றும் பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் நடந்த போரானது மிகக் கடுமையானதாக இரண்டு நாட்களுக்கு நீடித்தது.(15) போரில் தன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்ற விருஷன் (கர்ணன்), இறுதியாகத் தார்தராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(16) பிறகு ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பிய சஞ்சயன், குருஜாங்கலத்தில் நடைபெற்ற அனைத்தையும் திருதராஷ்டிரனுக்குச் சொன்னான்" {என்றார் வைசம்பாயனர்}.(17)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பீஷ்மர் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர் ஆகியோரின் வீழ்ச்சியைக் கேட்டவனும், அம்பிகையின் மகனுமான முதிர்ந்த மன்னன் திருதராஷ்டிரன் பெரும் துயரால் பீடிக்கப்பட்டிருந்தான்.(18) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, துரியோதனனின் நலன் விரும்பியான கர்ணனின் மரணத்தைக் கேட்டுத் துயரில் மூழ்கியும், எவ்வாறு அவன் {திருதராஷ்டிரன்} உயிரோடு இருந்தான்?(19) தன் மகன்களின் வெற்றி எவனிடம் இருக்கிறது என அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} நினைத்தானோ, அவன் {கர்ணன்} வீழ்ந்த போதும், எவ்வாறு அவனால் {திருதராஷ்டிரனால்} உயிர் தரித்திருக்க முடிந்தது?(20) 

கர்ணனின் மரணத்தைக் கேட்ட பிறகும் மன்னன் {திருதராஷ்டிரன்} தன் உயிரை விடாமல் இருந்தான் எனும்போது, எத்தகு பெரும் துயரச் சூழ்நிலைகளிலும் மனிதர்கள் தங்கள் உயிரை விடுவது மிகக் கடினமானது என்றே நான் நினைக்கிறேன்.(21) ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, சந்தனுவின் மதிப்புமிக்க மகன் {பீஷ்மர்}, பாஹ்லீகன், துரோணர், சோமதத்தன், பூரிஸ்ரவஸ், பிற நண்பர்கள், தன் மகன்கள், பேரன்கள் ஆகியோரின் வீழ்ச்சியைக் கேட்ட பிறகும், மன்னன் {திருதராஷ்டிரன்} தன் உயிரை விடவில்லை எனும்போது, ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, ஒருவன் உயிரை விடுவது என்பது மிகக் கடினமானது என்றே நான் நினைக்கிறேன்.(22,23) உண்மையாக நடந்தவாறே இவை யாவற்றையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக. என் மூதாதையரின் உயர்ந்த சாதனைகளைக் கேட்பதில் நான் நிறைவை அடையவில்லை" என்றான் {ஜனமேஜயன்}.(24)
----------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 1-ல் உள்ள சுலோகங்கள் : 24


ஆங்கிலத்தில் | In English

Monday, August 03, 2015

போர் உடன்படிக்கைகள்! - பீஷ்ம பர்வம் பகுதி -001

War Covenants! | Bhishma Parva - Section 001 | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : கௌரவர்களும், பாண்டவர்களும் குருக்ஷேத்திரத்தில் கூடியது; தங்களுக்கு அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும்...

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரத  என்ற இதிகாசம்}  சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "குருக்கள் {கௌரவர்கள்}, பாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து கூடியிருந்த உயர் ஆன்ம மன்னர்கள் ஆகிய அந்த வீரர்கள் எப்படிப் போரிட்டனர்?" என்று கேட்டான்.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, சொன்னார் "ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, குருக்கள், பாண்டவர்கள், சோமகர்கள் ஆகிய அந்த வீரர்கள், புனிதவெளியான [1] குருக்ஷேத்திரத்தில் எப்படிப் போரிட்டார்கள் என்பதைக் கேட்பாயாக. சோமகர்களுடன் குருக்ஷேத்திரத்திற்குள் நுழைந்த பெரும் பலம் படைத்த பாண்டவர்கள், கௌரவர்களுக்கு எதிரான வெற்றியை விரும்பி முன்னேறினர். வேதங்களின் கல்வியில் சாதித்த (அவர்கள் {பாண்டவர்கள்}) அனைவரும் போரில் பெருமகிழ்ச்சியை அடைந்தனர். போரில் வெற்றியை எதிர்பார்த்து, தங்கள் துருப்புகளுடன் (அவர்கள் {பாண்டவர்கள்}) அந்தப் போரை எதிர் கொண்டனர். திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} படையை அணுகியவர்களும் போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அந்த வீரர்கள், தங்கள் முகங்களைக் கிழக்கு நோக்கி வைத்துக் கொண்டு, (அந்த வெளியில் {களத்தின்}) மேற்குப் பகுதியில் தங்கள் துருப்புகளை நிறுத்தினர். குந்தியின் மகனான யுதிஷ்டிரன் சமந்தபஞ்சகம் {குருஷேத்திரம்} என்று அழைக்கப்பட்ட பகுதிக்கும் அப்பால், ஆயிரக்கணக்கான கூடாரங்களை விதிப்படி அமைத்தான்.

[1] தபஸ்-க்ஷேத்திரம் = இந்தப் பகை வீடுகளுக்கு {கௌரவ மற்றும் பாண்டவர்களுக்கு) பொதுவான மூதாதையான குரு என்பவன் இங்கே தனது தவத்துறவுகளை மேற்கொண்டான். அந்தக் குருவின் காலத்தில் இருந்து, இங்கே பல தவசிகள் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டனர். எனவே இது குருக்ஷேத்திரம் என்றும் தபக்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுவதாகக் கங்குலி குறிப்பிடுகிறார்.

(வீட்டில்) குழந்தைகள் மற்றும் முதியவர்களை மட்டுமே விட்டுவிட்டு, குதிரைகள் மற்றும் மனிதர்களும் இன்றி, தேர்கள் மற்றும் யானைகளும் இன்றி இருந்த முழுப் பூமியும் வெறுமையாகத் தெரிந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, சூரியன் தனது கதிர்களை வடிக்கும் [2] ஜம்பூத்வீபப் பகுதி முழுவதிலும் இருந்து படைகள் சேகரிக்கப்பட்டிருந்தன. மாவட்டங்கள், ஆறுகள், மலைகள், வனங்கள் ஆகியவற்றில் பல யோஜனைகளுக்குப் பரந்த பகுதியில் அனைத்து இனங்களைச் [3] சார்ந்த மனிதர்களும் கூடினர். மனிதர்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், தங்கள் விலங்குகளோடு சேர்ந்த அவர்கள் அனைவருக்கும் அற்புத உணவையும், பிற இன்பநுகர் பொருட்களையும் வழங்கினான். மேலும் யுதிஷ்டிரன், அவர்களுக்குப் பல்வேறு நோட்ட மொழிகளை {அடையாளச் சொற்களை} நிர்ணயித்தான். அவற்றைச் சொல்லும் ஒருவன், பாண்டவர்களைச் சேர்ந்தவன் என்பதை அறிவதற்காக இதைச் செய்தான். அந்தக் குரு குலத்தின் வழித்தோன்றல் {யுதிஷ்டிரன்}, போர் நடைபெறும் நேரத்தில் அவர்களை அறிந்து கொள்வதற்காக அவர்கள் அனைவருக்கும் பதக்கங்களையும், பெயர்களையும் தீர்மானித்தான்.

[2] "வெப்பத்தைக் கொடுக்கும்" என்பதே உண்மை பொருள் என்கிறார் கங்குலி.

[3] மூலத்தில் இந்த இடத்தில் "வர்ணம்" என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. அது சாதிகளைக் குறிப்பதல்ல, இனங்களையே குறிக்கும் என்கிறார் கங்குலி.

பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனின்} கொடிநுனியைக் கண்டவனும், தனது தலைக்கு மேலே வெண்குடையைக் கொண்டவனும், ஆயிரம் யானைகளுக்கு மத்தியில் இருப்பவனும், தனது நூறு தம்பிகளால் சூழப்பட்டவனுமான உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, (தனது தரப்பில் உள்ள) மன்னர்கள் அனைவருடனும் சேர்ந்து பாண்டு மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} எதிராகத் தனது துருப்புகளை அணிவகுத்தான். போரில் மகிழ்ச்சி கொள்ளும் பாஞ்சாலர்கள் துரியோதனனைக் கண்டதும், மகிழ்ச்சியால் நிறைந்து, உரத்த ஒலியைத் தரும் தங்கள் சங்குகளை ஊதினர், இனிய ஒலி தரும் பேரிகைகளையும் முழங்கினர்.

அந்தத் துருப்புகள் இப்படி மகிழ்ச்சியடைவதைக் கண்ட பாண்டுவின் மகனும் {யுதிஷ்டிரனும்}, பெரும் சக்தி கொண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தங்கள் இதயத்தில் மகிழ்ச்சியால் நிறைந்தனர். ஒரே தேரில் அமர்ந்திருந்தவர்களும், மனிதர்களில் புலிகளுமான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்து, தங்கள் தெய்வீகச் சங்குகளை முழங்கினர். அந்த இருவருக்கும் சொந்தமான பெரியதின் {Gigantea} {சங்கான பாஞ்சஜன்யத்தின்} முழக்கத்தையும், பெருக்கத்தின் {Theodotes} {சங்கான தேவதத்தத்தின்} உரத்த வெடிப்பையும் கேட்ட எதிராளிகள் மலம் மற்றும் சிறுநீரைக் {மலஜலத்தைக்} கழித்தனர். கர்ஜிக்கும் சிங்கத்தின் குரலைக் கேட்டு அச்சத்தால் நிறையும் பிற விலங்குகளைப் போல, அந்த உரத்த வெடிப்புகளைக் கேட்ட படையும் அப்படியே அச்சத்தால் நிறைந்தன. அச்சம்நிறைந்த புழுதியெழுந்ததால் ஏதும் காணப்படவிலை, ஏனெனில் திடீரெனச் சூரியனும் அவற்றால் மூடப்பட்டதால், அது {சூரியன்} மறைந்ததைப் {அஸ்தமித்ததைப்} போலத் தெரிந்தது. கருநிற மேகம் ஒன்று சுற்றிலும் இருந்த அந்தத் துருப்புகளின் மேல் இறைச்சியையும் இரத்தத்தையும் பொழிந்தது. இவையாவும் இயல்புக்கு மிக்கதாகத் தெரிந்தது.

மண்ணோடு சேர்ந்த பருக்கைக் கற்களைச் சுமந்து, அங்கே எழுந்த காற்றானது நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் போராளிகளை துன்புறுத்தியது. (இவை அனைத்தையும் விட) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா} மகிழ்ச்சி நிறைந்து போரைச் சந்திக்க நின்ற அந்தப் படைகள் இரண்டும், கலங்கிய கடல்கள் இரண்டைப் போலக் குருக்ஷேத்திரக் களத்தில் நின்றன. உண்மையில், அந்த இருபடைகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலானது, யுகத்தின் முடிவின் போது ஏற்படும் இரண்டு கடல்களின் மோதலைப் போல இருந்தது. கௌரவர்களால் மொய்க்கப்பட்ட அந்தப் பெரும் படையின் விளைவாக (வீட்டில்) சிறுவரும் முதியவரும் மட்டுமே இருந்ததால் முழுப் பூமியும் வெறுமையாக இருந்தது.

பிறகு, ஓ! குரு குலத்தின் காளையே {ஜனமேஜயா}, குருக்களும், பாண்டவர்கள் மற்றும் சோமகர்களும் சில உடன்படிக்கைகளையும், பல்வேறு விதமான மோதல்கள் சம்பந்தமாக விதிகளையும் தங்களுக்குள் நிர்ணயித்துக் கொண்டனர்.

  1. சமமான சூழல் கொண்டவர்கள் {சமமானவர்களே} தங்களுக்குள் மோதிக் கொண்டு நன்கு போரிட வேண்டும்.  
  2. நன்கு போராடிய பிறகு, (துன்பத்தைக் கண்டு அஞ்சாமல்) போராளிகள் விலகினாலும், அதுவும் நமக்கு நிறைவையே தர வேண்டும். {போரிட்டு முடிந்த பிறகு, நமக்குள் அன்பு உண்டாக வேண்டும்}. 
  3. சொற்போட்டிகளில் ஈடுபடுபவர்களுடன் சொற்களாலேயே போரிட வேண்டும். [4]  
  4. படையணியை விட்டு விலகியவர்கள் கொல்லப்படக் கூடாது. 
  5. ஒரு தேர்வீரன் மற்றொரு தேர்வீரனையே எதிராளியாகக் கொள்ள வேண்டும்; யானையின் கழுத்தில் இருப்பவன், அதே போன்ற போராளியையே தனது எதிரியாகக் கொள்ள வேண்டும்; ஒரு குதிரை மற்றொரு குதிரையையே சந்திக்க வேண்டும்; ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஒரு காலாட்படை வீரர் மற்றொரு காலாட்படை வீரரையே சந்திக்க வேண்டும். 
  6. உடற்தகுதி, விருப்பம், துணிவு, பலம் ஆகிய கருதுகோள்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஒருவன் மற்றவனுக்கு அறிவிப்பைச் செய்துவிட்டு அடிக்க வேண்டும். எவனும், தயாராக இல்லாதவனையோ [5], பீதியால் தாக்குண்டவனையோ அடிக்கக் கூடாது.
  7. வேறொருவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் ஒருவன், இடத்தைத் தேடிக் கொண்டிருக்கும் ஒருவன், பின்வாங்கும் ஒருவன், ஆயுதம் தகுதியற்றுவிட்டதாகக் காண்பிக்கும் ஒருவன், கவசம் தரிக்காதவன் ஆகியோர் எப்போதும் அடிக்கப்படக்கூடாது.  
  8. தேரோட்டிகள், (தேரில் பூட்டப்பட்ட அல்லது ஆயுதங்களைச் சுமந்து வரும்) விலங்குகள், ஆயுதங்களைச் சுமந்து வருவதில் ஈடுபடும் மனிதர்கள், பேரிகைகள் அடிப்பவர்கள் மற்றும் சங்கை முழக்குபவர்கள் ஆகியோர் ஒருபோதும் அடிக்கப்படக்கூடாது. 

[4] தனியாக விடப்பட்டவன் கொல்லப்படக்கூடாது.

[5] உண்மையில், "நம்பிக்கைக்கு உரித்தான" என்பதே இங்குப் பொருள் என்கிறார் கங்குலி. அஃதாவது இப்போது தாக்கமாட்டான் என்ற நம்பிக்கையுடன் தயாரில்லாமல் இருக்கும் ஒருவனை அடிக்கக்கூடாது என்பதே இங்குப் பொருள்.

 {மேற்கண்ட} இந்த உடன்படிக்கைகளைச் செய்து கொண்ட குருக்கள், பாண்டவர்கள் மற்றும் சோமகர்கள், மிகுந்த ஆச்சரியத்துடன் ஒருவருக்கொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டனர். (இப்படித் தங்கள் படைகளுடன்) நிலை நின்ற அந்த மனிதர்களில் காளைகள், அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள், தங்கள் படைகளுடன் சேர்ந்து, இதயத்தில் மகிழ்ந்தனர்; அந்த மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் பிரதிபலித்தது" என்றார் {வைசம்பாயனர்}.


ஆங்கிலத்தில் | In English

Tuesday, July 30, 2013

அமானுஷ்ய பிறப்புகள்! - ஆதிபர்வம் பகுதி 167

Supernatural Births! | Adi Parva - Section 167 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : பிராமணன் வீட்டிற்கு வந்த புதிய விருந்தினர்; திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதியின் அமானுஷ்ய பிறப்புகளைக் குறித்துச் சொன்னது; திரௌபதிக்கு நடக்க இருக்கும் சுயம்வரத்தைக் குறித்தும் சொன்னது...

{வைசம்பாயனர் தொடர்ந்தார்}, "குடிமக்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்ற பிறகு, பாண்டவர்கள் அந்த ஏகச்சக்கர நகரத்தில் முன்பு போலவே தொடர்ந்து வசித்தனர்".

Thursday, May 30, 2013

ஆணி மாண்டவ்யர்! - ஆதிபர்வம் பகுதி 107

Ani Mandavya! | Adi Parva - Section 107 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 43)

பதிவின் சுருக்கம் : மௌனவிரதம் இருந்த மாண்டவ்ய முனிவர்; கள்வர்கள் பதுக்கி வைத்த கொள்ளைப் பொருள்; கழுவிலேற்றப்பட்ட முனிவர் சாகாமலிருந்தது...

ஜனமேஜயன் வைசம்பயானரிடம், "சபிக்கப்படும்படி தர்மதேவன் அப்படி என்ன காரியம் செய்தான்? அவனைச் சூத்திர வர்ணத்தில் பிறக்கும்படி சாபம் தந்த அந்த பிராமணத் துறவி யார்?" என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் சொன்னார், "மாண்டவ்யர் என்ற பெயருடன் ஒரு பிராமணர் இருந்தார். அவர் அறம், உண்மை {சத்தியம்}, துறவு ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்துத் தனது கடமைகளில் தெளிவுடன் இருந்தார்.(2) அந்தப் பெரும் துறவி, தனது ஆசிரமத்திற்கு அருகில் உள்ள ஒரு மரத்தினடியில் அமர்ந்து, உள்ளங்கைகளை வானம் பார்க்கத் தனது மடியில் வைத்துப் பேசா நோன்பு (மௌன விரதம்) இருப்பது வழக்கம்.(3) இதை அவர் பல வருடங்களாகச் செய்து வந்தார். ஒரு நாள், அவரது ஆசிரமத்திற்குக் கொள்ளையடித்த பொருட்களுடன் கள்வர்கள் வந்தனர்.(4)

Saturday, May 11, 2013

அறம் வளர்க்கும் குல வரலாறு! - ஆதிபர்வம் - பகுதி 95

The History that increases virtue! | Adi Parva - Section 95 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 31)

பதிவின் சுருக்கம் : பூருவின் குல வரலாறு நீட்சி; நாட்டை இழந்து மீண்டும் அடைந்த சம்வர்ணனின் வரலாறு; பாரதம் அறிவதால் உண்டாகும் பலன்...

ஜனமேஜயன், "ஓ பிராமணரே! நான் இதுவரை எனது மூதாதையர்களின் பெரும் வரலாறுகளைக் கேட்டறிந்தேன். இந்தக் குலத்தில் பிறந்த பெரும் ஏகாதிபதிகளைப் பற்றியும் அறிந்தேன்.(1) இருப்பினும் நான் மனநிறைவு கொள்ளவில்லை. அந்தப் பெரும் வரலாறுகள் சுருக்கமாகவே உரைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, ஓ பிராமணரே! அந்த வரலாறுகளைப் படைப்புத் தலைவனான மனுவில் தொடங்கி விரிவாகச் சொல்வீராக. இந்த வரலாறுகளை யார் தான் புனிதமாகக் கருதமாட்டார்கள்?(2,3) அவர்கள் கடைப்பிடித்த அறங்கள், சாதனைகள், உயர்ந்த பண்புகள் ஆகியவற்றால் அந்த ஏகாதிபதிகளின் புகழ் மூவுலகங்களுக்கும் பரவும்படி உயர்ந்தது.(4) அவர்களின் ஈகை, ஆற்றல், உடல் பலம், மனோ பலம், சக்தி, விடாமுயற்சி ஆகியவற்றைத் தேன் போன்ற இனிமையான உங்கள் சொற்களால் கேட்டேன். இருப்பினும் நான் மனநிறைவு கொள்ளவில்லை" என்றான்.(5)

Thursday, May 09, 2013

பூருவின் குல வரலாறு! - பகுதி 94

History of Puru's lineage! | Adi Parva - Section 94 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 30)

பதிவின் சுருக்கம் : பூருவின் குல வரலாறு; தன் வம்சத்திற்குத் தனது பெயரையே வைத்த பரதன்...

ஜனமேஜயன், "ஓ வழிபடத்தகுந்தவரே {வைசம்பாயனரே}!, பூருவின் வழித்தோன்றல்களான மன்னர்களின் வரலாறுகளைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். பெரும் வீரத்தைக் கொண்டு பெரும் சாதனைகளைச் செய்த அம்மன்னர்களை ஒவ்வொருவராக எனக்குச் சொல்வீராக.(1) பூருவின் பரம்பரையில் வந்த எந்த மன்னனும் நன்னடத்தையில்லாமலோ, வீரமற்றோ, புத்திரப்பேறு இல்லாமலோ இருந்ததாக நிச்சயமாக நான் கேள்விப்படவில்லை.(2) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! சிறந்த கல்வியும், சிறந்த சாதனைகளையும் கொண்ட அந்தப் புகழ்வாய்ந்த ஏகாதிபதிகளின் வரலாறுகளை விவரமாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(3)

Wednesday, March 20, 2013

பாண்டவர் வரலாறு! | ஆதிபர்வம் - பகுதி 61

The History of Pandavas! | Adi Parva - Section 61 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 3)

பதிவின் சுருக்கம் : மகாபாரதத்தின் கதைச்சுருக்கம்...

வைசம்பாயனர் சொன்னார், "எனது உடலின் எட்டுப் பகுதிகளும் தரையைத் தொட,[1] என் ஆசானை {வியாசரை} பக்தியுடனும், மரியாதையுடனும் முதற்கண் வணங்கி, இந்தச் சபையில் இருக்கும் பிராமணர்களையும், மற்ற கற்றவர்களையும் முழு மனத்துடன் வழிபட்டு, மூவுலகங்களிலும் புத்திசாலிகளில் முதன்மையான இந்த உயரான்ம முனிவர் வியாசரிடம் நான் கேட்டவற்றை முழுமையாக உரைக்கின்றேன்.(1,2) இதை அறியப்போகும் ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, நீ பாரதம் என்று அழைக்கப்படும் இந்தத் தொகுப்பைக் கேட்கத் தகுதி வாய்ந்தவனே. எனது ஆசானின் {வியாசரின்} கட்டளையில் தூண்டப்பட்டிருப்பதால் எனது இதயத்தில் அச்சத்தை[2]  நான் உணரவில்லை.(3) "ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒற்றுமையின்மை நிலவியது ஏன் என்றும், (குருக்களின்) ஆளும் ஆசையினால் நேர்ந்த சூதாட்டத்தைத் தொடர்ந்து, வனவாசம் ஏன் விதிக்கப்பட்டது என்றும் கேட்பாயாக. பாரதக் குலத்தில் சிறந்தவனே! {ஜனமேஜயனே!} கேட்க விரும்பிய உனக்கு அனைத்தையும் சொல்வேன்.(4,5)

மஹாபாரதம் ஆரம்பம்! | ஆதிபர்வம் - பகுதி 60

Mahabharatham Begins! | Adi Parva - Section 60 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 2)

பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன் யாகத்திற்கு வியாசர் வருவது; வியாசரின் பெருமை; பாண்டவர் வரலாற்றை ஜனமேஜயன் வியாசரிடம் கேட்பது; அக்கதையைச் சொல்லும்படி வைசம்பாயனரைப் பணித்த வியாசர்...

சௌதி சொன்னார், "ஜனமேஜயன் நாக வேள்வியில் அமர்ந்திருக்கிறான், என்று கேள்விப்பட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அங்கே சென்றார்.(1) அந்தப் பாண்டவர்களின் பாட்டன் {வியாசர்}, கன்னிகையான கலிக்கும் {சத்தியவதிக்கும்}, சக்தியின்[1] மைந்தன் பராசரருக்கும், யமுனையின் தீவு ஒன்றில் பிறந்தவராவார்.(2) அந்தச் சிறப்பு வாய்ந்தவர் {வியாசர்}, பிறந்தவுடன் தனது விருப்பத்தினால் மட்டுமே {விருப்பிய உடனே தன் சுய சங்கல்பத்தாலேயே} தன் உடலை வளர்த்து, வேதங்களையும் அதன் கிளைகளையும், வரலாறுகள் அனைத்தையும் கற்றார்.(3)

Sunday, March 17, 2013

தக்ஷகனைக் கைவிட்டான் இந்திரன்! | ஆதிபர்வம் - பகுதி 56

Indra cast off Takshaka! | Adi Parva - Section 56 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 44)

பதிவின் சுருக்கம் : ஆஸ்தீகரைப் பாராட்டி வரமளிக்க முன்வந்த ஜனமேஜயன்; இந்திரனின் பாதுகாப்பில் தக்ஷகன் இருப்பதாக ஜனமேஜயனுக்குச் சொல்லப்படுவது; அச்சத்தால் தக்ஷகனைக் கைவிட்ட இந்திரன்; வேள்வியை நிறுத்தும் வரத்தைக் கோரிய ஆஸ்தீகர்...

ஜனமேஜயன், "இவர் சிறுவனைப் போல இருந்தாலும், விவேகமுள்ள முதிர்ந்தவர் போலப் பேசுகிறார். இவர் சிறுவனில்லை. விவேகி. முதிர்ந்தவர். இவருக்கு நான் வரமளிக்கலாம் என்று நினைக்கிறேன். பிராமணர்களே, அதற்கான அனுமதியை எனக்கு அளியுங்கள்" என்றான்.(1)

அதற்குச் சதயஸ்யர்கள், "பிராமணன் ஒருவன் சிறுவனாக இருந்தாலும், மன்னனால் மதிக்கப்பட வேண்டியவன். கற்றோர் எப்போதும் அப்படியே செய்வர். இந்தச் சிறுவனின் விருப்பங்கள் உன்னால் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், வேகத்துடன் தக்ஷகன் வந்து விழுவதற்கு முன்னால் அல்ல " என்றனர்."(2)

ஆஸ்தீகர் உறுதி! | ஆதிபர்வம் - பகுதி 54

Promise of Astika! | Adi Parva - Section 54 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 42)

பதிவின் சுருக்கம் : ஆஸ்திகருக்கு ஜரத்காரு பழைய வரலாறுகளைத் தெரிவித்தாள்; ஆஸ்தீகர் பாம்புகளை விடுவிக்க உதவுவதாக வாக்களிப்பது; வேள்வி அரங்கில் நுழைந்த ஆஸ்தீகர்...

சௌதி சொன்னார், "அதன்பிறகு, அந்த நாகமங்கை ஜரத்காரு, தனது மகனை {ஆஸ்தீகனை} அழைத்து, பாம்புகளின் மன்னன் வாசுகி சொன்னபடி பேசினாள்.(1) அவள், "ஓ மகனே! {ஆஸ்தீகனே} எதற்காக நான் எனது தமையனால் {வாசுகியால்} உனது தந்தைக்கு {ஜரத்காருவுக்கு} அளிக்கப்பட்டேனோ அந்தக் குறிக்கோளை அடைய இப்போது நேரம் வந்து விட்டது. எனவே, எது செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்" என்றாள் {பெண் பாம்பு ஜரத்காரு}.(2)

ஆஸ்தீகர், "ஓ தாயே!{ஜரத்காருவே}, மாமா {பாம்பு மன்னன் வாசுகி} ஏன் உன்னை எனது தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} மணமுடித்துக் கொடுத்தார்? உண்மை முழுமையும் சொல்வாயானால், அதைக் கேட்டதும் நான் தகுந்ததைச் செய்ய ஏதுவாக இருக்கும்" என்றார்.(3)

தக்ஷகனைப் பாதுகாத்த இந்திரன்! | ஆதிபர்வம் - பகுதி 53

Indra protected Takshaka! | Adi Parva - Section 53 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 41)

பதிவின் சுருக்கம் : வேள்வியை நடத்திய அந்தணர்களின் பெயர்கள்; வேள்வி குறித்து அறிந்த தக்ஷகன் இந்திரனின் பாதுகாப்பை அடைந்தான்; கவலைக்கொண்ட வாசுகி தங்கை ஜரத்காருவிடம் ஆஸ்திகனின் உதவியைக் கோரியது…

சௌனகர், "பாண்டவ குலத்தில் வந்த விவேகியான மன்னன் ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில், எந்தப் பெரும் முனிவர்கள், ரித்விக்குகளாக இருந்தனர்?(1) பாம்புகளுக்கு அச்சமூட்டியதும், அவைகளுக்குத் துன்பத்தைக் கொடுத்ததுமான அந்தப் பயங்கரமான பாம்பு வேள்வியில் யாரெல்லாம் சதஸ்யர்களாக இருந்தனர்?(2) ஓ சூத மைந்தா! {சௌதியே}, இந்த விவரங்களை விரிவாகக் கூறினால், அந்தப் பாம்பு வேள்வியின் சடங்குகளை யார் அறிந்திருந்தனர் என்று நாங்கள் தெரிந்து கொள்வோம்" என்று கேட்டார்.(3)

நெருப்பில் விழுந்த பாம்புகள்! | ஆதிபர்வம் - பகுதி 52

Snakes fell on fire! | Adi Parva - Section 52 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 40)

பதிவின் சுருக்கம் : வேள்வி ஆரம்பித்தது; பாம்புகள் அழிந்தன…

சௌதி சொன்னார், "பாம்பு வேள்வி அதன் விதிகளின்படி தொடங்கியது. சாத்திர விதிகள்படி தங்கள் கடமைகளில் தேர்ந்தவர்களான வேள்விப் புரோகிதர்கள், கருப்பு ஆடை அணிந்து, புகையினால் கண்கள் சிவந்து, சுடர்விட்டெரியும் நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டு சரியான மந்திரங்களை உச்சரித்தனர்.(1,2) அக்னியின் வாயில் தெளிந்த நெய்யை விட்டு, பாம்புகளின் பெயர்களைச் சொல்லி, அந்தப் பாம்புகளைப் பயத்தால் நடுங்க வைத்தனர்.(3) அதன்பிறகு, பாம்புகள் தங்கள் சக்திகளை இழந்து, பரிதாபமாக ஒன்றை ஒன்று அழைத்துக்கொண்டு, அந்த எரியும் நெருப்பில் விழ ஆரம்பித்தன.(4) உடல் உப்பி, மூச்சு விடச் சிரமப்பட்டு, ஒன்றை ஒன்று {அந்த பாம்புகள்} தம் தலைகளாலும், வால்களாலும் பின்னிக் கொண்டு பெரும் எண்ணிக்கையில் வந்து நெருப்பில் விழுந்தன.(5)

சூதனின் தீர்க்க தரிசனம்! | ஆதிபர்வம் - பகுதி 51

The prophesy of a Suta! | Adi Parva - Section 51 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 39)

பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன் பாம்பு வேள்விக்கு உத்தரவிட்டான்; அந்தணனால் வேள்வி தடைபடும் என்றான் ஒரு சூதன்…

சௌதி சொன்னார், "மன்னன் ஜனமேஜயன் இப்படிச் சொல்லவும், அமைச்சர்களும் அதை உறுதி செய்தனர். அந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்}, பாம்பு வேள்வியை நடத்தப்போவதாகத் தனது முடிவைச் சொன்னான்.(1) பிறகு அந்தப் பூமியின் தலைவன், பாரதக் குலத்தின் புலி, பரீக்ஷித்தின் மைந்தன் {ஜனமேஜயன்} தனது புரோகிதரையும் ரித்விக்குகளையும், அழைத்தான்.(2)

Wednesday, March 13, 2013

பரீக்ஷித் வரலாறு! | ஆதிபர்வம் - பகுதி 49

The History of Parikshit! | Adi Parva - Section 49 | Mahabharata In Tamil

(ஆஸ்தீகப் பர்வம் - 37)

பதிவின் சுருக்கம் : தன் தந்தையின் வரலாற்றை அமைச்சர்களிடம் கேட்ட ஜனமேஜயன்; பரீக்ஷித்தின் சிறப்பு; அவன் வேட்டையாடச் சென்றது; பரீக்ஷித் சமீகரை அவமதித்தது...

சௌனகர், "மன்னன் ஜனமேஜயன், அவனது அமைச்சர்களிடம், தனது தந்தை {பரீக்ஷித்} தேவலோகத்திற்கு உயர்ந்ததைப் பற்றி கேட்டதனைத்தையும் மறுபடியும் விரிவாக எனக்குச் சொல்" என்றார். (1)

சௌதி சொன்னார், "ஓ பிராமணரே! {சௌனகரே}, பரீக்ஷித்தின் இறப்பைப் பற்றித் தனது அமைச்சர்களிடம் மன்னன் ஜனமேஜயன் கேட்டதனைத்தையும், அவர்கள் சொன்னதனைத்தையும் கேட்பீராக.(2)

ஜனமேஜயன், "உங்கள் எல்லோருக்கும் எனது தந்தைக்கு என்ன நடந்தது என்பது தெரியும். அந்தப் புகழ்வாய்ந்த மன்னன் {பரீக்ஷித்}, அந்த நேரத்தில் எப்படித் தனது மரணத்தைச் சந்தித்தார்?(3) எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விவரமாக உங்களிடம் நான் கேட்டறிந்தால், உலக நன்மைக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் நான் அதற்கு உத்தரவிடுவேன். இல்லையென்றால் நான் எதுவும் செய்யமாட்டேன்" எனக் கேட்டான் {ஜனமேஜயன்}.(4) {உயர் ஆன்ம மன்னன் ஜனமேஜயனால் இவ்வாறு கேட்கப்பட்டவர்களும், அறவோர்களும், விவேகிகளுமான அமைச்சர் இவ்வாறு பதிலுரைத்தனர்}[1].(5)

[1] இந்த சுலோகம் கங்குலியில் விடுபட்டிருக்கிறது. ஆதிபர்வம் முதல் உத்யோக பர்வம் வரை மன்மதநாததத்தரின் பதிப்பை ஒட்டியே சுலோக எண்களைக் குறிக்க இருப்பதால், மேற்கண்ட சுலோகத்தையும் அப்பதிப்பில் இருந்தே எடுத்துக் கையாண்டிருக்கிறேன்.

அதற்கு அமைச்சர்கள், "ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே}, உனது சிறப்புமிக்கத் தந்தையின் {பரீக்ஷித்தின்} வாழ்க்கை பற்றிய விவரத்தையும், எப்படி அந்த மன்னாதிமன்னன் {பரீக்ஷித்} இந்த உலகத்தை விட்டு அகன்றான் என்பதையும் நீ கேட்டதற்கிணங்க சொல்கிறோம் கேட்பாயாக.(6) உனது தந்தை {பரீக்ஷித்} அறம் சார்ந்த உயர் ஆன்மாவாக, தனது மக்களை எப்போதும் காத்து வந்தான். இந்த உலகத்தில் அந்த உயர் ஆன்மா எப்படி நடந்து கொண்டான் என்பதைக் கேட்பாயாக.(7) அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, அறமும் நீதியும் உருவெடுத்தாற் போல் இருந்து, அறம் உணர்ந்து, நான்கு வர்ணங்களையும், அவரவர் கடமைகளுக்கேற்ப அறத்தின்படிக் காத்து வந்தான்.(8) ஒப்பற்ற வீரத்துடன், நற்பேறும் அருளப்பட்ட அவன், பூமாதேவியைக் {உலகைக்} காத்து வந்தான். அவனை {பரீக்ஷித்தை} வெறுத்தவர் யாருமில்லை, அவனும் {பரீக்ஷித்தும்} யாரையும் வெறுத்ததில்லை.(9) பிரஜாபதியைப் (பிரம்மாவைப்) போல அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவித்தான். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, தங்கள் கடமையை மனநிறைவுடன் செய்து வந்த பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என,(10) எல்லோரையும் பாரபட்சமின்றிக் காத்துவந்தான், அந்த மன்னன் {பரீக்ஷித்}, விதவைகளையும், அனாதைகளையும், ஊனமுள்ளவரையும், ஏழைகளையும் தாங்கிக் காத்து வந்தான்.(11)

அனைத்துயிர்களுக்கும், தனது அழகால் இரண்டாவது சோமனைப் {சந்திரனைப்} போலத் தோன்றினான்.  நற்பேறு அருளப்பட்டு, தனது குடிகளை மனத்தில் வைத்து, அவர்களை மனநிறைவுப்படுத்தி, உண்மை பேசி, அளவிலா வீரம்பொருந்தி, சரத்வானின்[2] சீடனாக இருந்து, ஆயுத அறிவியல் பயின்றான். ஓ ஜனமேஜயா, உனது தந்தை {பரீக்ஷித்} கோவிந்தனுக்கு {கிருஷ்ணனுக்கு} அன்பானவனாக இருந்தான்.(12,13) பெரும் புகழை அடைந்து, அனைத்து மனிதர்களாலும் அன்பு பாராட்டப்பட்டான். குரு பரம்பரையே கிட்டதட்ட அழிந்திருந்த காலத்தில் உத்தரையின் கருவறையில் அவன் {பரீக்ஷித்} பிறந்தான்.(14) எனவே, அந்தப் பலம்பொருந்திய அபிமன்யுவின் மகன் பரீக்ஷித் என்று அழைக்கப்பட்டான். மன்னர்களுக்கான கடமைகளைப் {ராஜதர்மங்களைப்} பற்றிய சாத்திரங்களை விளக்குவதில் அவன் நிபுணனாக இருந்தான். எல்லா அறங்களையும் அவன் கொடையாகப் பெற்றிருந்தான். தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து, புத்தி கூர்மையுடன், பெருத்த ஞாபகச் சக்தியுடன், எல்லா அறங்களையும் கடைப்பிடித்தான். தனது மனத்தின் சக்தியால் ஆறு உணர்ச்சிகளையும் வென்றான். அவன் அனைவரிலும் மேம்பட்டு இருந்தான். (15,16)  அரசியலும் ஒழுக்கமும் அறிந்த உனது தந்தை {பரீக்ஷித்}, தனது குடிகளை அறுபது {60} வருடங்கள் ஆண்டான். அப்படிப்பட்ட அவன் {பரீக்ஷித்} பிறகு தனது குடிகளைப் புலம்பி அழச் செய்யும் வகையில் இறந்து போனான். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, அவனுக்குப் பிறகு, குரு பரம்பரையின் ஆயிரம் வருடப் பரம்பரை {வம்சாவளி} அரசை நீ அடைந்தாய். குழந்தைப் பருவத்திலேயே முடிசூட்டப்பட்டு, {அதுமுதல்} உயிரினங்களனைத்தையும் நீ காப்பாற்றி வருகிறாய்" என்றார் {அமைச்சர்}.(17,18)

[2] சரத்வானின் மகன் கிருபர் ஆவார். அவர் குரு வம்சத்து குலகுரு. அப்படி இருக்க சரத்வான் பரீக்ஷித்தின் குரு என்பது நெருடலாய் இருக்கிறது. மூல ஸ்லோகத்தை ஆராய்ந்ததில், சரத்வன் எனப்படும் கௌதமர் வழிவந்தவர் என்பதைக் குறிக்கும் சரத்வத் (சரத்வன் என்னும் கௌதம பரம்பரையைச் சேர்ந்தவன்) என்ற சொல்லே உபயோகப் படுத்தப்பட்டிருப்பதால் கிருபரே பரீக்ஷித்துக்கும் குருவாக இருந்தார் எனத் தெரிகிறது.

ஜனமேஜயன், "குடிகளின் நன்மையைக் கருதாத அல்லது அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகாத எந்த ஒரு மன்னனும் எங்கள் பரம்பரையில் {குரு குலத்தில்} தோன்றியதில்லை. குறிப்பாக என் முப்பாட்டன்களின் நடத்தை, பெரும் சாதனைகளைச் செய்வதாகவே இருந்ததைக் கண்டிருப்பீர்கள்.(19) பல அறங்கள் அருளப்பட்ட எனது தந்தை {பரீக்ஷித்} எப்படி மரணமடைந்தார்? நடந்தது அனைத்தையும் எனக்கு நடந்தபடியே விவரியுங்கள். உம்மிடமிருந்து அதைக் கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன்" என்றான் {ஜனமேஜயன்}."(20)

சௌதி தொடர்ந்தார், "இப்படி அந்த ஏகாதிபதியால் {ஜனமேஜயனால்} கேட்டுக்கொள்ளப்பட்டதும், எப்போதும் மன்னனின் {ஜனமேஜயனின்} நலனில் அக்கறையுள்ள சபை உறுப்பினர்கள் {அமைச்சர்கள்}, அவனிடம் எது எது எப்படி நடந்ததோ அப்படியே மொத்தமாகத் தெரிவித்தனர்"(21)

சபை உறுப்பினர்கள், "ஓ மன்னா {ஜனமேஜயா}, உனது தந்தை {பரீக்ஷித்}, முழு உலகத்தையும் பாதுகாத்தவன். சாத்திரங்கள் வழி ஒழுகும் மனிதர்களில் முதன்மையானவன். போர்க்களத்தில் வில்தாங்கியவர்களில் முதன்மையான பாண்டுவைப் போல, வேட்டையாடும் விளையாட்டிற்கு அடிமையாக இருந்தான். அவன் சிறு விஷயங்களிருந்து மிக முக்கியமான விஷயங்கள் வரை நாட்டு நடப்பில் எல்லா விஷயங்களையும் எங்களைக் கலந்தாலோசித்தான்.(22,23) அவன் {பரீக்ஷித்}, ஒரு நாள், கானகத்திற்குள் சென்று, ஒரு மானைத் தனது கணையால் துளைத்தான்.  தனது அம்புறாத்தூணியையும், வாளையும், {வில்லையும்} சுமந்து கொண்டு,(24) அந்த மானைத் துரத்திக் கொண்டு ஓடினான். தொலைந்த மானை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுக்கு அறுபது {60} வயது ஆகியிருந்ததால், முதுமையினால் தளர்வுற்று, விரைவிலேயே மிகவும் சோர்ந்து போய்ப் பசியெடுத்து களைத்து இருந்தான். அங்கே அந்த ஆழ்ந்த கானகத்திற்குள் ஓர் உயர் ஆன்ம முனிவரைக் கண்டான்.(25,26) அந்த முனிவர் {சமீகர்} மௌன விரதம் மேற்கொண்டிருந்தார். மன்னன் {பரீக்ஷித்} அவரிடம் {சமீகரிடம்} மானைப் பற்றிக் கேட்டான். ஆனாலும் அவர் பதிலளிக்கவில்லை.(27) ஏற்கனவே களைப்பாலும், சோர்வாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்த அந்த மன்னன் {பரீக்ஷித்}, முடிவில், அசைவற்று மரக்கட்டை போல் மௌன விரதம் இருந்த முனிவரைக் {சமீகரைக்} கண்டு கோபம் கொண்டான். அவர் {முனிவர் சமீகர்} மௌன விரதம் இருப்பது மன்னனுக்குத் தெரியாது. எனவே, கோபத்தால் உந்தப்பட்ட உனது தந்தை {பரீக்ஷித்} அவரை {முனிவர் சமீகரை} அவமதித்தான்.(28,29) பாரதக் குலத்தில் அருமையானவனே {ஜனமேஜயனே}, அந்த மன்னனான உனது தந்தை {பரீக்ஷித்}, தனது வில்லின் நுனியால் ஓர் உயிரற்ற பாம்பை எடுத்து களங்கமற்ற ஆன்மாவான அந்த முனிவரின் {முனிவர் சமீகரின்} தோளில் போட்டான்.(30) ஆனாலும் அந்த முனிவர் {சமீகர்} நன்மை தரும் சொல்லோ, தீமை தரும் சொல்லோ ஒன்றும் கூறாமல், கோபமற்று இருந்தார். அவர் {முனிவர் சமீகர்} அந்த உயிரற்றப் பாம்பைத் தாங்கிக் கொண்டு அதே நிலையிலேயே இருந்தார்" என்றனர் {அமைச்சர்கள்}."(31)


ஆங்கிலத்தில் | In English

Wednesday, March 06, 2013

ஜனமேஜயனும் வபுஷ்டமையும்! | ஆதிபர்வம் - பகுதி 44

Janamejaya and Vapushtama! | Adi Parva - Section 44 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 32)

பதிவின் சுருக்கம் : பரீக்ஷித் இறந்ததும் பாலகன் ஜனமேஜயன் மன்னனானது; காசி மன்னன் சுவர்ணவர்மனின் மகள் வபுஷ்டமையை மணந்த ஜனமேஜயன்; இன்புற்றிருந்த ஜனமேஜயன்...

சௌதி சொன்னார், "தக்ஷகனின் சுருளுக்குள் அகப்பட்டுக் கிடந்த மன்னனைப் {பரீக்ஷித்தைப்} பார்த்த சபை உறுப்பினர்கள் பயத்தினால் வெளிறி போய்த் துயரம் கொண்டு அழுதனர்.(1) தக்ஷகனின் முழக்கத்தைக் கேட்ட அனைத்து அமைச்சர்களும் தலைதெறிக்க ஓடினர். அப்படி அவர்கள் ஓடியபோது, ஒரு பெண்ணின் தலையுச்சியின் அடர்ந்த கூந்தலின் நடுவே உள்ள சிவந்த வகிட்டைப் போல, நீல வானத்திலே தாமரை நிறக் கோடாக அந்தப் பாம்புகளில் அற்புதமானவனும், பாம்புகளின் அரசனுமான தக்ஷகன் செல்வதைக் கண்டனர்.(2,3)

Wednesday, March 07, 2012

ஜனமேஜயன்

பரிக்ஷித்தின் மகன், அபிமன்யுவின் பேரன். இவன் முன்னிலையில் தான் வைசம்பாயனர் வியாசர் அருளிய மஹாபாரதத்தை உரைத்தார்

மஹாபாரதத்தில் ஜனமேஜயன் வரும் பகுதிகள்
Mbh.1.1.11
Mbh.1.1.17
Mbh.1.1.80
Mbh.1.1.206
Mbh.1.2.284
Mbh.1.2.365
Mbh.1.3.592
Mbh.1.3.595
Mbh.1.3.598
Mbh.1.3.602
Mbh.1.3.603
Mbh.1.3.606
Mbh.1.3.608
Mbh.1.3.610
Mbh.1.3.611
Mbh.1.3.615
Mbh.1.3.769
Mbh.1.3.937
Mbh.1.3.942
Mbh.1.11.1204
Mbh.1.12.1206
Mbh.1.13.1216
Mbh.1.20.1447
Mbh.1.37.2028
Mbh.1.38.2064
Mbh.1.44.2300
Mbh.1.44.2301
Mbh.1.49.2495
Mbh.1.49.2497
Mbh.1.49.2512
Mbh.1.49.2521
Mbh.1.50.2566
Mbh.1.50.2588
Mbh.1.50.2604
Mbh.1.51.2619
Mbh.1.53.2651
Mbh.1.53.2664
Mbh.1.54.2711
Mbh.1.55.2764
Mbh.1.56.2765
Mbh.1.56.2774
Mbh.1.56.2784
Mbh.1.56.2790
Mbh.1.56.2798
Mbh.1.58.2829
Mbh.1.58.2830
Mbh.1.58.2838
Mbh.1.58.2855
Mbh.1.59.2870
Mbh.1.60.2877
Mbh.1.60.2884
Mbh.1.60.2885
Mbh.1.60.2886
Mbh.1.60.2890
Mbh.1.60.2893
Mbh.1.60.2898
Mbh.1.62.2962
Mbh.1.64.3190
Mbh.1.65.3256
Mbh.1.67.3429
Mbh.1.67.3486
Mbh.1.67.3513
Mbh.1.68.3594
Mbh.1.69.3615
Mbh.1.73.3855
Mbh.1.74.3876
Mbh.1.75.4120
Mbh.1.76.4192
Mbh.1.76.4196
Mbh.1.86.4819
Mbh.1.94.5135
Mbh.1.94.5161
Mbh.1.94.5201
Mbh.1.94.5203
Mbh.1.94.5206
Mbh.1.95.5218
Mbh.1.95.5231
Mbh.1.95.5233
Mbh.1.95.5355
Mbh.1.102.5728
Mbh.1.107.6004
Mbh.1.115.6221
Mbh.1.115.6223
Mbh.1.116.6274
Mbh.1.117.6298
Mbh.1.118.6305
Mbh.1.123.6588
Mbh.1.130.6965
Mbh.1.131.6997
Mbh.1.143.7738
Mbh.1.159.8305
Mbh.1.167.8574
Mbh.1.167.8580
Mbh.1.186.9375
Mbh.1.186.9384
Mbh.1.209.10288
Mbh.1.213.10467
Mbh.1.215.10523
Mbh.1.219.10697
Mbh.1.219.10701
Mbh.1.221.10737
Mbh.1.222.10813
Mbh.1.224.10939
Mbh.1.230.11234
Mbh.1.233.11425
Mbh.2.8.349
Mbh.2.9.373
Mbh.2.12.501
Mbh.2.21.936
Mbh.2.28.1209
Mbh.2.30.1275
Mbh.2.30.1276
Mbh.2.30.1277
Mbh.2.30.1340
Mbh.2.49.2045
Mbh.2.72.3103
Mbh.3.1.4
Mbh.3.3.191
Mbh.3.41.2204
Mbh.3.48.2476
Mbh.3.50.2527
Mbh.3.52.2582
Mbh.3.80.3914
Mbh.3.80.3920
Mbh.3.93.4991
Mbh.3.114.5867
Mbh.3.119.6081
Mbh.3.141.7253
Mbh.3.159.8037
Mbh.3.174.8707
Mbh.3.175.8723
Mbh.3.177.8780
Mbh.3.181.8998
Mbh.3.191.9688
Mbh.3.234.11842
Mbh.3.235.11912
Mbh.3.237.11943
Mbh.3.245.12189
Mbh.3.251.12401
Mbh.3.256.12564
Mbh.3.260.12758
Mbh.3.271.13218
Mbh.3.298.14701
Mbh.3.301.14802
Mbh.3.308.15121
Mbh.3.309.15126
Mbh.4.1.4
Mbh.4.9.376
Mbh.4.13.467
Mbh.4.14.529
Mbh.5.4.105
Mbh.5.72.3531
Mbh.5.74.3730
Mbh.5.84.4025
Mbh.5.106.4902
Mbh.5.154.6837
Mbh.5.158.6980
Mbh.5.160.7066
Mbh.6.1.4
Mbh.7.1.4
Mbh.7.23.1131
Mbh.7.60.2727
Mbh.7.155.8338
Mbh.7.164.8897
Mbh.7.182.9937
Mbh.8.1.20
Mbh.8.4.99
Mbh.8.6.178
Mbh.8.8.230
Mbh.8.48.2650
Mbh.8.49.2740
Mbh.8.56.3204
Mbh.8.61.3553
Mbh.8.73.4457
Mbh.8.82.5022
Mbh.8.82.5026
Mbh.9.1.4
Mbh.9.1.29
Mbh.9.33.2364
Mbh.9.33.2406
Mbh.9.33.2416
Mbh.9.34.2503
Mbh.9.35.2593
Mbh.9.35.2617
Mbh.9.35.2634
Mbh.9.36.2650
Mbh.9.37.2754
Mbh.9.38.2787
Mbh.9.39.2864
Mbh.9.40.2892
Mbh.9.41.2985
Mbh.9.41.3006
Mbh.9.42.3021
Mbh.9.42.3027
Mbh.9.43.3136
Mbh.9.43.3139
Mbh.9.45.3349
Mbh.9.45.3371
Mbh.9.46.3479
Mbh.9.47.3502
Mbh.9.47.3508
Mbh.9.48.3530
Mbh.9.48.3541
Mbh.9.49.3602
Mbh.9.50.3671
Mbh.9.52.3748
Mbh.9.53.3804
Mbh.9.54.3855
Mbh.9.61.4379
Mbh.10.11.798
Mbh.11.1.4
Mbh.11.2.70
Mbh.11.9.390
Mbh.12.45.2216
Mbh.12.47.2290
Mbh.12.53.2833
Mbh.12.123.7017
Mbh.12.149.8896
Mbh.12.149.8897
Mbh.12.149.8905
Mbh.12.150.8930
Mbh.12.150.8961
Mbh.12.150.8979
Mbh.12.151.8988
Mbh.12.151.8995
Mbh.12.151.9048
Mbh.12.172.10336
Mbh.12.233.14484
Mbh.12.283.17454
Mbh.12.339.21994
Mbh.12.339.22001
Mbh.12.339.22002
Mbh.12.340.22016
Mbh.12.340.22017
Mbh.12.340.22018
Mbh.12.341.22215
Mbh.12.343.22735
Mbh.12.343.22737
Mbh.12.347.22977
Mbh.12.347.22992
Mbh.12.348.23184
Mbh.12.348.23293
Mbh.12.348.23312
Mbh.12.349.23328
Mbh.12.349.23335
Mbh.12.350.23445
Mbh.12.352.23559
Mbh.13.6.416
Mbh.13.137.11345
Mbh.13.166.13715
Mbh.14.15.405
Mbh.14.16.431
Mbh.14.55.2447
Mbh.14.56.2492
Mbh.14.56.2493
Mbh.14.56.2497
Mbh.14.56.2546
Mbh.14.57.2593
Mbh.14.58.2670
Mbh.14.58.2695
Mbh.14.58.2705
Mbh.14.59.2709
Mbh.14.63.2886
Mbh.14.66.2970
Mbh.14.90.4012
Mbh.14.91.4241
Mbh.14.92.4292
Mbh.14.92.4351
Mbh.14.92.4354
Mbh.15.1.4
Mbh.15.13.608
Mbh.15.29.1133
Mbh.15.29.1175
Mbh.15.32.1296
Mbh.15.34.1353
Mbh.15.34.1355
Mbh.15.35.1397
Mbh.15.35.1402
Mbh.15.35.1403
Mbh.15.35.1406
Mbh.15.35.1419
Mbh.15.36.1421
Mbh.16.1.23
Mbh.16.1.26
Mbh.16.7.330
Mbh.17.1.4
Mbh.18.1.4
Mbh.18.5.228
Mbh.18.5.260
Mbh.18.5.268
Mbh.18.5.271
Mbh.18.5.273
Mbh.18.6.328
பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:janamejaya

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top