Friday, March 12, 2010

குந்தி

குந்தி {Kunti} = குந்திபோஜனின் (வளர்ப்பு) மகள்

இயற்பெயர் : பிருதை {Pritha}
பெற்ற தந்தை : சூரன் {சூரசேனன்}
வளர்ப்புத் தந்தை : குந்திபோஜன்
கணவர் : பாண்டு
பிள்ளைகள் : கர்ணன், யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன்

குறிப்பு:
யாதவர்களுக்குள் அவர்களது தலைவனாக சூரன் {சூரசேனன்} இருந்தார். சூரசேனருக்கு பிருதை {Pritha} என்ற மகளும், *வசுதேவர் என்ற மகனும் பிறந்தனர்.
சூரசேனன், தான் முன்பே வாக்கு கொடுத்திருந்தபடி, பிள்ளையற்றிருந்த தனது நண்பனும் மைத்துனனுமான {தந்தையின் சகோதரியின் மகனான} குந்திபோஜனுக்குத் தனது மகளை {பிருதையை} சுவீகாரமாகக் கொடுத்தான். {பிருதை {Pritha} குந்திபோஜனின் மகளாக வளர்ந்ததால் குந்தி என்றே அழைக்கப்பட்டாள்}

*வசுதேவர் : வசுதேவரின் பிள்ளைகளே கிருஷ்ணன், பலராமன், சுபத்திரை ஆகியோர். குந்தியின் மகன் அர்ஜுனனே சுபத்திரையின் கணவன் என்பதனையும் அறிக.

மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்: