Thursday, March 01, 2012

விபாண்டகர்

தசரத ராமன் புத்திரகாமேஷ்டி வேள்வி மூலம் பிறக்க காரணமாக இருந்த ரிஷ்யசிருங்க முனிவரின் தந்தை. காசியபரின் மகன்.

காசியபரின் மகனான விபாண்டகர் ஒரு பெரும் தடாகத்திற்குச் சென்று நோன்பு பயில தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தேவர்களுக்கு ஒப்பான அந்தத் தவசி இப்படியே நீண்ட காலம் நோன்பிருந்தார். ஒரு முறை நீரில் {தடாகத்தில்} தனது வாயைக் கழுவி கொண்டிருந்த போது, தேவலோக மங்கையான ஊர்வசியைக் கண்டார். அதன்காரணமாக அவரது உயிர்நீர் வெளியேறியது. அங்கே {அத்தடாகத்தில்} நீர் குடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மான், தாகமிகுதியால், தண்ணீருடன் சேர்த்து அதையும் அருந்தியது. அதன்காரணமாக அந்தப் பெண்மான் ஒரு பிள்ளையைப் பெற்றது. அந்தப் பெண்மான் உண்மையில் தேவர்களின் மகளாவாள். அந்தப் பெண்மானிடம் பெரும் தவசியான அவரது மகன் {ரிஷ்யசிருங்கர்} பிறந்தார்.

மஹாபாரதத்தில் விபாண்டகர் வரும் இடங்கள்
மஹாபாரதம்.3.110.5690  
மஹாபாரதம்.3.110.5692  
மஹாபாரதம்.3.111.5778  
மஹாபாரதம்.3.111.5780  
மஹாபாரதம்.3.113.5824  
மஹாபாரதம்.3.113.5834  
மஹாபாரதம்.3.113.5842  
மஹாபாரதம்.3.113.5844  
மஹாபாரதம்.3.113.5845  
மஹாபாரதம்.3.113.5858  

பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:vibhandaka