Saturday, September 14, 2013

நமது வலைப்பூவில் நமக்குத் தேவையான பதிவுகளைத் தேடுவது எப்படி?

நான் நேற்று எதேச்சையாக நமது வலைப்பூவில் உள்ள Feedjit மூலம் எங்கிருந்தெல்லாம் நமது வலைப்பூவைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; எந்த வலைத்தளம் மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தபோது, வெளிநாட்டில் ஒரு இடத்தில் இருந்து, தொடர்ந்து கூகுளில் இருந்து தேடியே நமது தளத்திற்கு வருவதைக் கண்டேன். அதவும் Maharabharatham.arasan.info + Mahabharatha-Adiparva-Section236 என்று பதிவின் எண்ணைக் கூட கொடுத்து தேடி நமது தளத்திற்கு வருவதைக் கண்டேன்.

அப்போதுதான், நமது வலைப்பூவின் பழைய பதிவுகளைக் காண்பதில் வாசகர்கள் சிரமப்படுகிறார்களோ என்று நினைத்தேன். 

ஆகவே, அதைக் களையஒரு காணொளியைத் தயார் செய்திருக்கிறேன். நமது தளத்தில் இருந்து எவ்வாறெல்லாம் பழைய பதிவுகளை எடுக்கலாம் என்பதைக் குறித்து இந்தக் காணொளி இருக்கும்



காணொளிப் பெட்டியின் கீழே வலது மூலையில் Youtube என்பதற்கு வலது பக்கத்தில் இருக்கும் சிறு பெட்டிபோன்ற உருவத்தைச் சொடுக்கினால், காணொளி {Video} பெரிதாகத் தெரியும்