Friday, October 04, 2013

மஹாபாரதம் - கும்பகோணம் ம.வீ.ரா. பதிப்பு - முன்பதிவு செய்துவிட்டீர்களா?

மதிப்பிற்குரிய திரு.அருட்செல்வ பேரரசன் அவர்களுக்கு

நன்றாக இருக்கிறீர்களா? ஶ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு. வெங்கடரமணன் அவர்கள் மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பை அச்சில் கொண்டுவர முன்வெளியீட்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ளார். அது பற்றி கீழ்க்கண்ட இணைப்பில் படிக்கலாம். மிகுந்த பொருட் செலவு ஆகக் கூடிய திட்டம். ஆதலால் தயை கூர்ந்து இதைத் தங்களுடைய இணையத் தளத்தில் வெளியிட முடியுமா? இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த லாபமும் கிடையாது. ம.வீ.ரா என்ற மாபெரும் மனிதருக்கு செய்யும் ஒரு மரியாதையாகவே இதைக் கருதுகிறேன். இன்றைய தலைமுறைக்கும் இந்தப் புத்தகங்களைக் கிடைக்கச் செய்வது நம்முடைய கடமை என்றும் நினைக்கிறேன். செய்வீர்களா? தங்களுடைய நண்பர்களுக்கும் இதைப் பற்றி தெரியப்படுத்துங்கள்.

http://srimahabharathaparvangal.blogspot.in/2013/09/blog-post_24.html


அன்புள்ள
பா.மாரியப்பன்
 
 
 ******************************
 
 
நண்பர் திரு.மாரியப்பன் அவர்களுக்கு,

நான் இங்கு நலமாக இருக்கிறேன்.
 
ம.வீ.ரா. வின் உழைப்பு வீண் போகக்கூடாது. எத்தனை நல்லுள்ளங்களின் கனவாக அப்புத்தகம் மலர்ந்திருக்கும். அது ஒரு சிறு வட்டத்திற்குள் முடங்கிப் போகாமல், பயன்படுத்துவோர் பலர் கரங்களுக்கு வரவேண்டும். ஆகையால், எப்படியெல்லாம் இத்திட்டத்தைப் பற்றி விளம்பரம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்யுங்கள்.  

நிச்சயம்  ம.வீ.ரா. பதிப்பு வெளிவர என்னால் முடிந்த எல்லா வகையிலும் நான் உறுதுணையாக இருப்பேன்.

நன்றி!

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
 
குறிப்பு:  ஏற்கனவே ம.வீ.ரா. பதிப்பு குறித்து நமது வலைப்பூவில் சில முக்கிய லிங்குகள் என்ற தலைப்பின் கீழ் நிரந்தரமாக இட்லி வடை வலைப்பூவின் லிங்க் ஒன்றை http://idlyvadai.blogspot.in/2013/07/blog-post_27.html ஏற்கனவே கொடுத்திருக்கிறோம்.