Wednesday, October 29, 2014

ஆடியோ கோப்பு - விராட பர்வம் பகுதி 8

நண்பர் திரு.ஜெயவேல் அவர்களின் மனைவி திருமதி.தேவகிஜெயவேலன் அவர்கள் விராட பர்வப் பகுதிகளை ஆடியோவாகப் பதிந்திருக்கிறார். "Live-ஆ பதிவுகளுக்கு ஆடியோ இருந்தா நல்லா இருக்குங்க!" என்று அடிக்கடி குறைபடுவார் நண்பர் ஜெயவேல். இப்போது அவரது மனைவி தேவகி அவர்களே Live பதிவைப் படித்திருக்கிறார். இது தொடர்ந்தால் நன்றாக இருக்கும். ஆடியோ கோப்புகள் செய்யும் முயற்சியை மேற்கொண்டிருக்கும்  தீபாநடராஜன், ஜெயாஅருண் மற்றும் தேவகிஜெயவேலன் ஆகிய நண்பர்களுக்கு நன்றி.

விராட பர்வம் பகுதி 8 - அசல் பதிவுக்குச் செல்ல



பதிவிலிருந்து சில வரிகள்: இப்படி மன்னன் விராடனால் கட்டளையிடப்பட்டதும், வேகமான கால்களையுடைய தூதுவர்கள் குந்தியின் மகனிடம் {பீமனிடம்} சென்று, அந்த யுதிஷ்டிரனின் தம்பியிடம் {பீமனிடம்} மன்னன் சொன்ன யாவற்றையும் சொன்னார்கள். பிறகு அந்த உயர் ஆன்ம பாண்டுவின் மகன் {பீமன} விராடனை அணுகி, தன் நோக்கத்திற்கு ஏற்ற வார்த்தைகளில், “ஓ !மன்னர்களில் முதன்மையானவரே {விராடரே}, நான் ஒரு சமையற்காரன். என் பெயர் வல்லவன் [Vallava; ballavo]{வல்லன்}ஆகும். உணவுகளைப் பக்குவப்படுத்துவதில் நான் நிபுணன். என்னைச் சமையலறையில் நியமிப்பீராக! [1]” என்றான். - See more at: http://mahabharatham.arasan.info/2014/10/Mahabharatha-Virataparva-Section8.html

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



விராட பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!