Thursday, March 01, 2012

லோமபாதன்

இவன் லோமபாதன் என்றும் ரோமபாதன் என்றும் இரு வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறான். இவன் அங்க தேசத்தின் மன்னனாக இருந்திருக்கிறான். லோமபாதனுக்கு பிள்ளையில்லாத காரணத்தால், அவன் கோசல இளவரசியான சாந்தையை எடுத்து வளர்த்தான். தனது நாட்டில் மழையின்றி பஞ்சம் நிலவியதால், மழையை எதிர்பார்த்து, ரிஷ்யசிருங்கருக்குப் பெண் ஆசை காட்டி தனது நாட்டுக்கு வரவழைத்தான். மழையும் பொழியவே, தனது மகள் சாந்தையை ரிஷ்யசிருங்கருக்கு மணமுடித்துக் கொடுத்தான். இவர் ராமனின் தந்தையான தசரதனுக்கு நண்பனாவான். இவனுடைய உதவியாலேயே தசரதன் ரிஷ்யசிருங்கரை அழைத்து புத்திரகாமேஷ்டி வேள்வி நடத்தி ராமனைப் பெற்றான்.

மஹாபாரதத்தில் லோமபாதன் வரும் இடங்கள்


Mbh.3.93.4971  
Mbh.3.110.5681  
Mbh.3.110.5682  
Mbh.3.110.5687  
Mbh.3.110.5704  
Mbh.3.110.5720  
Mbh.3.113.5843  
Mbh.12.233.14495  
Mbh.13.137.11361  

பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:lomapada