Abhimanyu obliged Alamvusha to turn his back! Valiant Satyaki!! | Bhishma-Parva-Section-102 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 60)
பதிவின் சுருக்கம் : அபிமன்யுவுக்கும் அலம்புசனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; மாயாசக்தியைப்
பயன்படுத்திய அலம்புசன்; அலம்புசனைப் புறமுதுகிடச் செய்த அபிமன்யு; கௌரவ
வீரர்கள் அனைவரும் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டது; அபிமன்யுவை எதிர்த்த
பீஷ்மர்; அபிமன்யுவைக் காக்க அர்ஜுனன் விரைந்தது; அர்ஜுனனைத் தாக்கிய
கிருபர்; கிருபரைத் தாக்கிய சாத்யகி; சாத்யகியின் வீரம்; சாத்யகி கிருபரைக்
கொல்லாமல் தடுத்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமன் சாத்யகி மோதல்; மயங்கி அமர்ந்த
அஸ்வத்தாமன்; தன் மகனை மீட்க விரைந்த துரோணர்; சாத்யகி துரோணர் மோதல்;
துரோணர் அர்ஜுனன் மோதல்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, வலிமைமிக்க நம் தேர்வீரர்கள் பலரைப் போரில் தாக்கிய அர்ஜுனனின் வீர மகனை {அபிமன்யுவை} அலம்புசன் எவ்வாறு எதிர்த்தான்? மேலும், பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ரிஷ்யசிருங்கன் மகனுடன் {அலம்புசனுடன்} எவ்வாறு போர்புரிந்தான்? அந்தப் போரில் நடந்ததை உள்ளபடியே இவை அனைத்தையும் விவரமாக எனக்குச் சொல்வாயாக. தேர்வீரர்களில் முதன்மையான பீமன், ராட்சசன் கடோத்கசன், நகுலன், சகாதேவன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரும் போரில் என் துருப்புகளை என்ன செய்தார்கள்? ஓ! சஞ்சயா, (விவரிப்பதில்) நீ திறம்படைத்தவனாக இருப்பதால், இவை அனைத்தையும் எனக்கு உண்மையாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசர்களில் முதன்மையானவனுக்கும் {அலம்புசனுக்கும்}, சுபத்திரையின் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்} இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கரப் போரைக் குறித்துத் தற்போது விவரிக்கிறேன். போரில் அந்த அர்ஜுனன் வெளிப்படுத்திய ஆற்றலையும், பாண்டுவின் மகனான பீமசேனன், நகுலன், சகாதேவன், பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான உமது படையின் வீரர்கள், என்று அனைவரும் அச்சமற்று செய்த பல்வேறு அற்புத சாதனைகளையும் உமக்கு நான் விவரிப்பேன்.
பேரொலிகளை எழுப்பிய அலம்புசன், அபிமன்யுவை நோக்கி மீண்டும் மீண்டும் முழங்கி, “நில், நில்” என்று சொன்னபடி, போரில் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அபிமன்யுவை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான். அதே போல அபிமன்யுவும், சிங்கம் போல மீண்டும் மீண்டும் முழங்கியபடி ரிஷ்யசிருங்கன் மகனும், முன்னவனின் {அபிமன்யுவின்} தந்தையால் {அர்ஜுனனால்} மன்னிக்கமுடியாத எதிரியுமான அந்த வலிமைமிக்க வில்லாளியை {அலம்புசனை} நோக்கி பெரும் சக்தியுடன் விரைந்தான்.
பிறகு தேர்வீரர்களில் முதன்மையானவர்களான அந்த மனிதன் {அபிமன்யு}, ராட்சன் {அலம்புசன்} ஆகிய இருவரும் தங்கள் தேர்களில் இருந்தபடியே தேவனும் தானவனும் போலத் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். அந்த ராட்சசர்களில் சிறந்தவன் {அலம்புசன்} மாயாசக்திகளைக் கொண்டிருந்தான், அதே வேளையில் பல்குனன் மகனோ {அபிமன்யுவோ} தெய்வீக ஆயுதங்களை அறிந்தவனாக இருந்தான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ரிஷ்யசிருங்கன் மகனை {அலம்புசனை} மூன்று கூரிய கணைகளாலும், பிறகு மீண்டும் ஐந்தாலும் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அலம்புசனும், அங்குசங்கள் {தோத்ரங்கள்} கொண்டு யானையைத் துளைக்கும் பாகனைப் போல அபிமன்யுவின் மார்பை ஒன்பது {9} கணைகளால் வேகமாகத் துளைத்தான்.
அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் சுறுசுறுப்புக் கொண்ட அந்த இரவு உலாவி {அலம்புசன்}, அம்மோதலில் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} ஆயிரம் {1000} கணைகளால் பீடித்தான். பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அபிமன்யு, மிகக் கூர்மையான ஒன்பது {9} நேரான கணைகளால் அந்த ராட்சசர்களின் இளவரசனின் {அலம்புசனின்} அகன்ற மார்பைத் துளைத்தான். அவனது உடலைத் துளைத்துச் சென்ற அவை, அவனது உயிர்நிலைகளுக்கு உள்ளேயே ஊடுருவின. அவற்றால் தன் அங்கங்கள் சிதைக்கப்பட்ட அந்த ராட்சசர்களில் சிறந்தவன் {அலம்புசன்}, மலர்ந்த கின்சுகங்கள் {பலாச மரங்கள்} அடர்ந்திருக்கும் ஒரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான். தங்கச் சிறகுகள் கொண்ட அந்தக் கணைகளைத் தன் உடலில் தாங்கியபடி இருந்த வலிமைமிக்க அந்த ராட்சசர்களின் இளவரசன் {அலம்புசன்}, தீப்பிடித்த ஒரு மலையைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.
பிறகு, பழியுணர்வு கொண்ட அந்த ரிஷ்யசிருங்கன் மகன் {அலம்புசன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, சிறகுகள் படைத்த கணைகளின் மேகங்களால், மகேந்திரனுக்கு {இந்திரனுக்கு} இணையான அபிமன்யுவை மறைத்தான். அவனால் {அலம்புசனால்} ஏவப்பட்ட, யமதண்டங்களுக்கு ஒப்பான அந்தக் கூரிய கணைகள், அபிமன்யுவைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தன. அதே போல அர்ஜுனன் மகனால் {அபிமன்யுவால்} ஏவப்பட்ட, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளும், அலம்புசனைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தன. பிறகு சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பழங்காலத்தில் மயனைத் [1] துரத்தியடித்த சக்ரனைப் {இந்திரனைப்} போல, அந்தப் போரில் தன் நேரான கணைகளால், அந்த ராட்சனை {அலம்புசனை} போர்க்களத்தில் புறமுதுகிட நிர்பந்தித்தான் {புறமுதுகிடச் செய்தான்}.
இப்படி விரட்டப்பட்டவனும், தன் எதிராளியால் {அபிமன்யுவால்} மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டவனும், பகைவர்களை எரிப்பவனுமான அந்த ராட்சசன் {அலம்புசன்}, காரிருளை உண்டாக்கி தன் பெரும் மாயாசக்திகளை வெளிப்படுத்தினான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கிருந்த போராளிகள் அனைவரும் அந்த இருளால் மறைக்கப்பட்டனர். அபிமன்யுவையும் காண முடியவில்லை, அந்தப் போரில் எதிரிகளிடம் இருந்து நண்பர்களை வேறுபடுத்திப் பார்க்கவும் முடியவில்லை [2]. எனினும், அந்தப் பயங்கரக் காரிருளைக் கண்ட அபிமன்யு, ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, சுடர்மிகும் சூரியாயுதத்தைத் {பாஸ்கராஸ்திரத்தைத்} தோன்றச் செய்தான் {விடுத்தான்}. அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அண்டத்தை மீண்டும் காணும்படி ஆனது {உலகம் அனைத்தும் பிரகாசமாயிற்று}. இப்படியே அவன் {அபிமன்யு}, அந்தத் தீய ராட்சசனின் மாயையைச் செயலறச் {சமன்} செய்தான்.
பிறகு பெரும் சக்தி கொண்ட அந்த மனிதர்களின் இளவரசன் {அபிமன்யு}, கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் ஆற்றலோடு நேரான கணைகள் பலவற்றால் அந்த ராட்சர்களில் முதன்மையானவனை {அலம்புசனை} அந்தப் போரில் மறைத்தான். பல்வேறு வகைகளிலான இன்னும் பிற மாயையைகள் அந்த ராட்சசனால் {அலம்புசனால்} ஏவப்பட்டன. எனினும், ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவனான பல்குனன் மகன் {அபிமன்யு} அவை அனைத்தையும் செயலறச் {சமன்} செய்தான்.
தன் மாயை அனைத்தும் அழிக்கப்பட்டு, கணைகளால் தாக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, பிறகு, அங்கேயே தன் தேரைக் கைவிட்டு விட்டு பெரும் அச்சத்துடன் தப்பி ஓடினான். நேர்மையற்ற போருக்கு அடிமையான {நேர்மையற்ற போர் செய்தே பழக்கப்பட்ட} அந்த ராட்சசன் இப்படி வீழ்த்தப்பட்டதும், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, மதநீரால் குருடான காட்டு யானைகளின் இளவரசன் ஒன்று தாமரைகள் அடர்ந்த தடாகத்தைக் கலக்குவது போல உமது துருப்புகளைக் கலங்கடிக்கத் தொடங்கினான்.
அப்போது, சந்தனுவின் மகனான பீஷ்மர், முறியடிக்கப்பட்ட தன் துருப்புகளைக் கண்டு, அந்தச் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} அடர்த்தியான கணை மழையால் மறைத்தார். பிறகு, தார்தராஷ்டிப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், அந்தத் தனிவீரனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டு, தங்கள் கணைகளால் பலமாகத் தாக்கத் தொடங்கினர். ஆற்றலில் தன் தந்தையை ஒத்தவனும், வீரத்திலும் வலிமையிலும் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவனும், ஆயுதம் தரித்திருப்போர் அனைவரில் முதன்மையானவனுமான அந்த வீரன் {அபிமன்யு}, தன் தந்தைக்கும் {அர்ஜுனனுக்கும்}, {தன்} தாய்மாமனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} தகுந்த பல்வேறு சாதனைகளை அந்தப் போரில் அடைந்தான்.
பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் மகனை {அபிமன்யுவை} மீட்க விரும்பி, {தான்} வந்த வழியெங்கும் உமது துருப்பினரைக் கொன்றபடி பின்னவன் {அபிமன்யு} இருந்த இடத்தை அடைந்தான். அதே போல உமது தந்தை தேவவிரதரும் {பீஷ்மரும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனை அணுகும் ராகுவைப் போல அந்தப் போரில் பார்த்தனை {அர்ஜுனனை} அணுகினார் [3]. பிறகு தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் துணையோடு கூடிய உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்தப் போரில் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு அனைத்துப் புறங்களில் இருந்தும் அவரைப் பாதுகாத்தனர். அது போலவே கவசந்தரித்த பாண்டவர்களும், ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கடும்போரில் ஈடுபட்டிருந்த தனஞ்சயனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சரத்வானின் மகன் (கிருபர்), பீஷ்மருக்கு முன்பு நின்று கொண்டிருந்த அர்ஜுனனை இருப்பத்தைந்து {25} கணைகளால் துளைத்தார். அதன்பேரில் புலியொன்று யானையைத் தாக்குவதைப் போல, கிருபரை அணுகிய சாத்யகி, பாண்டவர்களுக்கு ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தால் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் அவரைத் {கிருபரைத்} துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட கௌதமரும் பதிலுக்கு, கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட ஒன்பது கணைகளால் அந்த மது குலத்தோனின் {சாத்யகியின்} மார்பிலேயே விரைவாகத் துளைத்தார். கோபத்தால் தூண்டப்பட்ட அந்தச் சிநியின் பேரனும் {சாத்யகியும்}, தன் வில்லைப் பலமாக வளைத்து, அவரது {கிருபரின்} உயிரையே எடுக்க வல்ல கணையொன்றை அவர் மீது வேகமாக ஏவினான்.
எனினும், நெருப்பு போன்ற துரோண மகன் {அஸ்வத்தாமன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, கிருபரை நோக்கி மூர்க்கமாக வந்து கொண்டிருந்ததும், பிரகாசத்தில் இந்திரனின் வஜ்ரத்துக்கு இணையானதுமான அந்தக் கணையை இரண்டாகத் துண்டித்தான். அதன் பேரில், தேர்வீரர்களில் முதன்மையானவனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, கிருபரை விட்டுவிட்டு, சந்திரனை எதிர்த்து ஆகாயத்தில் விரையும் ராகுவைப் போலப் போரில் துரோண மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி விரைந்தான்.
எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்}, சாத்யகியின் வில்லை இரண்டாக வெட்டினான். அவனது {சாத்யகியின்} வில் அப்படி வெட்டப்பட்டதும், முன்னவன் {அஸ்வத்தாமன்} தன் கணைகளால் பின்னவனை {சாத்யகியைத்} தாக்கத் தொடங்கினான். பெரும் கடுமையைத் தாங்க வல்லதும், எதிரியைக் கொல்லவல்லதுமான மற்றொரு வில்லை எடுத்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆறு {6} கணைகளால் அந்தத் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} மார்பிலும், கரங்களிலும் தாக்கினான். இப்படித் துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த அவன் {அஸ்வத்தாமன்}, ஒருக்கணம் தன் உணர்வுகளை இழந்து, தன் கொடிக்கம்பத்தைப் பிடித்தபடியே, தன் தேர்த்தட்டில் கீழே அமர்ந்தான்.
பிறகு தன் சுயநினைவு மீண்ட அந்தத் துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, சினத்தால் தூண்டப்பட்டு, அந்தப் போரில் நாராசம் ஒன்றால் {நீண்ட கணை ஒன்றால்} அந்த விருஷ்ணி குலத்தோனை {சாத்யகியைப்} பீடித்தான். சிநியின் பேரனை {சாத்யகியை} துளைத்துச் சென்ற அந்த நாராசம், வசந்த காலத்தில் தன் துளைக்குள் நுழையும் விறுவிறுப்பான இளம்பாம்பு ஒன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. அந்தப் போரில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வேறு ஒரு பல்லத்தால் {அகன்ற தலை கொண்ட கணையால்} சாத்யகியின் அருமையான கொடிமரத்தை வெட்டினான். அந்தச் சாதனையை அடைந்த அவன் {அஸ்வத்தாமன்} சிங்க முழக்கம் செய்தான். மீண்டுமொருமுறை அவன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியை {சாத்யகியை} கோடை காலத்தைக் கடந்தபின் {மழைக்காலத்தில்} சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, கடுங்கணைகளின் மழையால் மறைத்தான்.
சாத்யகியும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் கணை மழையைக் கலங்கடித்து, பல்வேறு கணைமழைகளால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} விரைவில் மறைத்தான். பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, மேகங்களில் இருந்து விடுபட்டச் சூரியனைப் போல அந்தக் கணை மழையில் இருந்து விடுபட்டு, (தன் சக்தியால்) துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எரிக்க {தகிக்க} ஆரம்பித்தான். சினம் பெருக்கெடுத்த அந்த வலிமைமிக்கச் சாத்யகி, மீண்டும் ஒருமுறை தன் எதிரியை {அஸ்வத்தாமனை} ஆயிரம் கணைகளால் மறைத்து பெருங்கூச்சலிட்டான்.
ராகுவால் பீடிக்கப்பட்ட சந்திரனைப் போலத் தன் மகனைக் கண்ட பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, சிநியின் பேரனை {சாத்யகியை} நோக்கி விரைந்தார். அந்த விருஷ்ணி வீரனால் {சாத்யகியால்} பீடிக்கப்பட்ட தன் மகனை மீட்க விரும்பிய துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனை {சாத்யகியை} மிகக் கூர்மையான கணை ஒன்றால் துளைத்தார். அப்போது சாத்யகி, வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமனை விட்டுவிட்டு, அந்தப் போரில் மிகக் கூர்மையான இருபது {20} கணைகளால் துரோணரைத் துளைத்தான்.
அதன்பிறகு விரைவில், எதிரிகளை எரிப்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, அந்தப் போரில் துரோணரை எதிர்த்து விரைந்தான். பிறகு துரோணரும், பார்த்தனும் {அர்ஜுனனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருக்கும் புதன் மற்றும் சுக்கிரக் கோள்களைப் [4] போலக் கடுமையாகப் போரிட்டு தங்களுக்குள் மோதிக் கொண்டனர்.

[1] பலன் என்று வேறு ஒரு பதிப்பில் இருக்கிறது.

[2] “போர்க்களத்தில் பாண்டவப் படைவீரர்களால் அபிமன்யுவையோ, தங்கள் நண்பர்களையோ, பிறரையோ காண முடியவில்லை” என்று வேறு பதிப்புகளில் இருக்கின்றன.

[3] இந்து தொன்மவியலின்படி, சூரியனை விழுங்க ராகு முயல்வதே சூரிய கிரகணங்களை உண்டாக்குகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] புதன் வெள்ளிக் கிரகங்கள் இவை எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆங்கிலத்தில் | In English |