மஹாபாரத நிகழ்வுகளின் தொடர்ச்சி…
48. சைந்தவனின் {ஜெயத்ரதன்} மரணம்: மார்கழி மாதம் தேய்பிறை பதினோறாம் நாளில் ஜெயத்ரதன் கொல்லப்பட்டான். அன்று இரவும் போர் தொடர்ந்தது. துரோணர் மார்கழி மாதம் தேய்பிறை பனிரெண்டாம் நாளில் நடுப்பகலில் கொல்லப்பட்டார்.
49. கர்ணனின் மரணம்: மார்கழி மாதம் தேய்பிறை 14ம் நாளில் கர்ணன் கொல்லப்பட்டான். சல்லியன் மார்கழி மாதம் அமாவாசை அன்று கொல்லப்பட்டான்.
50. துரியோதனனின் வீழ்ச்சி: மார்கழி மாதம் அமாவாசை / தைமாதம் வளர்பிறை முதல் நாள் மாலையில் அவன் வீழ்ந்தான். அடுத்த நாள் காலையில் தை மாதம் வளர்பிறை முதல் நாளில் அவன் இறந்தான்.
51. பலராமன் கார்த்திகை மாதம் தேய்பிறை 5ம் நாளில், பூச நட்சத்திரத்தில் தன் யாத்திரயைத் தொடங்கினார். அதேபோல நாள் வாரியாகவும், நட்சத்திர வாரியாகவும் அந்த யாத்திரை 42 நாட்கள் நடந்தது.
52. அஸ்வத்தாமன் மார்கழி மாதம் அமாவாசை / தை மாதம் வளர்பிறை 1ம் நாள் இரவில் பாண்டவர்களின் மகன்களைக் கொன்று அந்தப் பயங்கரச் செய்தியை துரியோதனனிடம் வளர்பிறை 1ம் நாள் காலையில் சொன்னான். தைமாதம் வளர்பிறை 1ம் நாளில் அஸ்வத்தாமன் வீழ்த்தப்பட்டான்.
53. பாண்டவப் படைகள் 7 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 551,33,83,260.
கௌரவப் படைகள் 11 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 866,38,87,960,
மொத்தம் 18 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 1417,72,71,240.
பாண்டவர்களின் தரப்பில், பாண்டவர்கள், கிருஷ்ணன், சாத்யகி, யுயுத்சு ஆகியோரையும், கௌரவர் தரப்பில், கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமன் ஆகியோரையும் தவிர எஞ்சிய அனைவரும் கொல்லப்பட்டனர். யுதிஷ்டிரன், போரில் 94 கோடி பேருக்கு மேல் கொல்லப்பட்டதாகத் திருதராஷ்டிரனிடம் தெரிவித்தான்.
பாண்டவ வீரர்கள் கௌரவப்படையினரை எப்படி அப்புறப்படுத்தினர் என்ற தகவல்கள் இக்காவியத்தில் தெளிவாக இல்லை. 13வது நாளில் அபிமன்யு மட்டும் 0.5 அக்ஷௌஹிணி படையினரைக் கொன்றான். 14வது நாளில் அர்ஜுனன் மட்டும் 5 அக்ஷௌஹிணி படையினரைக் கொன்றான்.
54. பாண்டவத்தரப்பைத் தாக்கி
பீஷ்மர் மட்டும் கிட்டத்தட்ட 1.27 அக்ஷௌஹிணிகள் = 100,00,00,000
துரோணர் மட்டும் கிட்டத்தட்ட 1.00 அக்ஷௌஹிணி = 78,75,26,180
கர்ணன் மட்டும் கிட்டத்தட்ட 2.37 அக்ஷௌஹிணிகள் = 186,28,78,540
சல்லியன் மட்டும் கிட்டத்தட்ட 0.29 அக்ஷௌஹிணி = 22,60,46,000
அஸ்வத்தாமன் மட்டும் கிட்டத்தட்ட 0.09 அக்ஷௌஹிணி = 7,20,24,400

போர்வீரர்களைக் கொன்றனர்.
எஞ்சிய போர்வீரர்கள் 1.98 அக்ஷௌஹிணிகள் = 156,48,08,140
மொத்தம் 7.00 அக்ஷௌஹிணிகள் = 55,33,83,260
55. அப்போது யுதிஷ்டிரனின் வயது 91 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் 27 நாட்களாகும். பாண்டவர்கள் தை மாதம் வளர்பிறை 1ம் நாளில் இருந்து 13ம் நாள் வரை துக்கம் அனுசரித்தனர். 14ம் நாளில் மொத்த தகனம் நடந்தது. அதே நாள் மாலையில் பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்றனர்.
56. யுதிஷ்டிரன் சுபகிருது வருடம் தை மாதம் பௌர்ணமியில் மூடிசூடப்பட்டான். யுதிஷ்டிரனுக்கு அப்போது 91 ஆண்டுகள் 3 மாதங்கள் மற்றும் 10 நாட்களாகும்.
57. பாண்டவர்கள் (அம்புப்படுக்கையில் கிடந்த) பீஷ்மரிடம் தை மாதம் தேய்பிறை 2ம் நாளில் சென்று 8ம் நாள் வரை அவரது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டு ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி ,15 நாட்கள் ஹஸ்தினாபுரத்திலேயே தங்கி, மாசி மாதம் வளர்பிறை எட்டாம் நாளில் பீஷ்மரிடம் மீண்டும் சென்றனர். 8வது, 9வது, 10வது, 11வது நாட்களில் பீஷ்மர் தியானத்தில் இருந்தார். 12வது நாளில் தமது உடலைத் துறந்தார். அதன்காரணமாகவே தை மாதம் தேய்பிறையின் 8ம் நாள் முதல் 12ம் நாள் வரை பீஷ்ம பஞ்சகம் என்று அழைக்கப்படுகிறது. மார்கழி மாதம் தேய்பிறை 7ம் நாளில் விழுந்த பீஷ்மர், 8ம் நாளில் இருந்து மாசி மாதம் வளர்பிறை 11ம் நாள் வரை, 48 நாள் கடந்திருந்தது. "அஷ்ட பஞ்சசதம் ராத்ரியாசயணச் சியாசியாம கதை AshtaPanchasatam ratryassayana syasyama gatha" என்பது பீஷ்மர் தான் போர்க்களத்தில் கழித்ததாகச் சொன்ன 58 (10 + 48) நாட்களாகும். "ஸரஷு நிஸிதகிரேசு யதா வர்ஷ சதம் தஹா Sarashu nisitagresu yatha varsha satam tatha" என்பது 100 வருடங்களாகத் தோன்றினாலும், கூரிய கணைகளில் படுத்திருந்த அந்தக் காலம் ஆகும். "திரிபாகச் சேஷ பக்ஷியம் சுக்லோ Tribhaga seshah pakshyam suklo" என்பது 3 பகுதிகள் மீந்திருந்த வளர்பிறைக் காலமாகும். (வளர்பிறை காலத்தை 10 பகுதிகளாக வகுத்தால், 7 பகுதிகள் என்பது 10.5 நாள் அல்லது 11வது நாள் நடைபெறும் காலமாகும். மீதம் மூன்று பகுதிகள் என்பது பௌர்ணமிக்கு முன்பு எஞ்சியிருந்த 4.5 நாட்களாகும்).
58. அஸ்வமேத யாகம் சோபகிருது வருடம் மாதி மாதம் 12ம் நாளில் தொடங்கியது. அதற்குச் சற்று முன்பே உத்தரைக்கு மகனாகக் குறைப்பிரசவத்தில் பரிக்ஷித் இறந்து பிறந்து பிறந்து, கிருஷ்ணனால் மீண்டும் உயிர்பெற்றான். 15 வருடங்களுக்குப் பிறகு கார்த்திகை மாதத்தில் திருதராஷ்டிரன் காடேகினான். அதற்கடுத்து 3 வருடங்களுக்குப் பிறகு பாண்டவர்கள் திருதராஷ்டிரனைக் காண காட்டுக்குச் சென்றனர். விதுரன் இறந்தான். அதற்கு அடுத்து 1 மாதத்திற்குப் பிறகு திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் காட்டுத்தீயில் கொல்லப்பட்டனர்.
59. பெரும்போர் முடிந்து 36 வருடங்கள் கழித்து வந்த வெகுதானிய வருடத்தில் துவாரகையில் தீய சகுனங்கள் தென்பட்டன. சாம்பன் கருத்தரித்து, {அதன் மூலம்} இரும்பு உலக்கை ஒன்று (முசலத்தைப்) பிறந்தது.
60. யுதிஷ்டிரன் 36 வருடங்கள், 2 மாதங்கள் மற்றும் 15 நாட்களுக்கு ஆட்சி செய்தான். சுபகிருது வருடம் தை மாதம் பௌர்ணமியில் இருந்து வெகுதானிய வருடம் தை மாதம் பௌர்ணமி வரை 36 வருடங்களும் 2 மாதங்களும் 15 நாட்களும் கழிந்திருந்தன. ஸ்ரீகிருஷ்ணன் தன் அவதாரத்தை முடித்துக் கலியுகம் பிறந்த நாளானது பிரமாதி வருடம் வளர்பிறை 1ம் நாளாக இருந்தது.
61. 7 நாட்கள் கழித்து வளர்பிறையின் 7ம் நாளில் துவாரகை நகரம் பெருங்கடலில் மூழ்கியது. கலியுகத்திற்கு 75 வருடங்கள் முன்பு இருந்து கலியுகம் தொடங்கிய பின்னர் 25 வருடங்கள் வரை சப்தரிஷிகள் மக நட்சத்திரத்தில் இருந்தனர். யுதிஷ்டிரனின் காலகட்டமானது {Yudhishthir Shaka யுதிஷ்டிரனின் சகாப்தமானது} அவனது பட்டமேற்பு நாளில் இருந்து தொடங்கியது. அதன்படி, யுதிஷ்டிரன் காலகட்டத்தில் 36 வருடங்கள், 2 மாதங்கள், 15 நாட்களில் கிருஷ்ணன் தன் அவதாரத்தை முடித்தான்.
62. பாண்டவர்கள் அதற்கடுத்து 6 மாதங்கள் 11 நாட்களுக்குப் பிறகு பிரமாதி வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 12 நாளில் தங்கள் முடிவை அடைந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 128 வருடங்களும், 6 நாட்களுமாகும். 36 வயதுடைய பரீக்ஷித் அதே நாளில் ஹஸ்தினாபுரத்தில் மகுடம் சூட்டப்பட்டான்.
63. சுவர்க்கரோஹணம் என்பது இந்தக் காவியத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அது 26 வருடங்களுக்குப் பிறகாக இருக்கலாம். பாண்டவர்களின் சுவர்க்கரோஹணத்திற்குப் பிறகே, அதாவது கலியுகம் தொடங்கி 26 வருடங்கள் கழித்தே முனிவரான வேத வியாசர் இந்தப் பெருங்காப்பியத்தைக் கணபதியிடம் உரைத்தார்.
64. பரீக்ஷித் 60 வருடங்கள், 25 வயதான தன் மகன் ஜனமேஜயனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு இறந்து போனான்.
65. எனவே, முனிவரான வேதவியாசரால் மகாபாரதம் எழுதப்பட்ட பிறகே பாகவதம் எழுதப்பட்டது. அது கலியுகத்தின் 60வது வருடத்திற்கு முன்பாக இருக்க வேண்டும்.
66. துவாபர யுகத்தில், மனிதர்கள் 400 வருடங்கள் வரை வாழ்ந்தனர். வாழ்வில், பால்யம், யௌவனம், கௌமாரம், வார்த்தக்யம் {விருத்தப்பியம் Vriddhapyam} என்ற நான்கு நிலைகள் இருந்தன. துவாபர யுகத்தில் பால்ய பருவம் என்பது 40 வருடங்கள் வரையும், யௌவனம் 120 வருடங்கள் வரையும், அதன்பிறகு கௌமாரம் மற்றும் வார்த்தக்ய பருவங்களும் இருந்தன. ஆனால் இப்போதோ இந்தக் கலியுகத்தில் பால்ய பருவம், 15 வருடங்கள் வரையும், யௌவன பருவம் 45 வருடங்கள் வரையும், கௌமார பருவம் 60 வருடங்கள் வரையும், வார்த்தக்யம பருவம் 60 வருடங்களுக்கு மேலும் என இருக்கிறது.
இந்தத் தகவல்கள் யாவும் சம்ஸ்க்ருதப் பெருங்காப்பியமான மகாபாரதத்தில் இருந்தும், பல்வேறு உரையாசிரியர்களின் உரைகளில் இருந்தும் திரட்டப்பட்டவையாகும்.
- Dr.K.N.S.பட்நாயக்
தமிழில் செ. அருட்செல்வப்பேரரசன்.

முற்றும்.
- Dr.K.N.S.பட்நாயக்
தமிழில் செ. அருட்செல்வப்பேரரசன்.