மஹாபாரத நிகழ்வுகளின் தொடர்ச்சி…
12. வில்வித்தைக் கண்காட்சி: பிலவ வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி அன்று நடைபெற்றது.
{இப்போது யுதிஷ்டிரனுக்கு 30-31 வயது}
13. மன்னன் துருபதனைக் கைப்பற்றியது: பிலவ வருடம் வைகாசி மாத தேய்பிறை 5வது நாளில் ஆரம்பித்து 1 வருடம் 4 மாதம் 5 நாட்களுக்கு நடந்தது. அதாவது சபகிருது (Subhakrit) வருடம் திருவாதிரை (Bhadrapada) {Ardra} மாதம் வளர்பிறை 10 வது நாள் வரை நடந்தது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 31 வருடம் 5 நாள்.
{துருபதனை கைதாக்கிய போது பீமனுக்கு 30 வயது, அர்ஜுனனுக்கு 29 வயது, நகுல சகாதேவர்களுக்கு 28 வயது என அறியவும்}
15. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தல் 5 வருடம் 4 மாதம் 20 நாட்களுக்கு, அதாவது பிலவங்க (Plavanga) வருடம் மாசி (Maagha) மாதம் அமாவசை வரை இருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 36 வருடம் 4 மாதம் 25 நாள்.
16. பிலவங்க வருடம், மாசி மாதம் வளர்பிறை 8ம் நாளில் பாண்டவர்கள் வாரணாவதத்திற்குள் நுழைந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 36 வருடம் 4 மாதம் 3 நாட்கள்.
17. கீலக (Keelaka) வருடம், பங்குனி மாதம் 13 / 14ம் நாள் இரவு மூன்றாம் ஜாமத்தில் அரக்கு மாளிகைக்குத் தீ வைக்கப்பட்டது. (ஒரு நாள் என்பது 8 ஜாமம் கொண்டது. 4 பகலிலும், 4 இரவிலும்) {இரவை நான்காகப் பிரித்தால் வரும் 3வது ஜாமத்தில் தீ வைக்கப்பட்டது}. பாண்டவர்கள் கீலக வருடம் பங்குனி மாத அமாவாசை அன்று பகலில் கங்கை நதியைக் கடந்தனர்.
18. ஹிடிம்ப வதம்: சவுமிய (Sowmya) வருடம், சித்திரை மாதம், வளர்பிறை முதல் நாளில் ஹிடிம்பன் கொல்லப்பட்டான்.
{பீமனால் ராட்சசன் ஹிடிம்பன் கொல்லப்பட்ட போது பீமனுக்குச் சுமார் வயது 37}
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:
பீமன் ஹிடிம்பன் மோதல் - ஆதிபர்வம் பகுதி 155
ஹிடிம்பனைக் கொன்றான் பீமன் - ஆதிபர்வம் பகுதி 156
19. கடோத்கசன் பிறப்பு: சவுமிய வருடம், ஐப்பசி மாதம் வளர்பிறை இரண்டாம் நாளில் கடோத்கசன் பிறந்து அன்றே பெரிய மனிதனாக வளர்ந்தான்.
{பீமனுக்கும் ராட்சசி ஹிடிம்பிக்கும் கடோத்கசன்
பிறந்த போது பீமனுக்குச் சுமார் வயது 37}
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்:
கடோத்கசன் பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 157
20. பாண்டவர்கள் சாலிஹோதாஷ்ரமம் என்ற இடத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தனர். அது சவுமிய வருடம் ஐப்பசி (Ashwayuja) {Ashwin} மாத வளர்பிறை 2ம் நாளில் இருந்து சாதாரண (Sadharana) வருடம் சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை ஆகும். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 38 வருடம் 5 மாதம் 7 நாட்கள் ஆகும்.
21. பாண்டவர்கள் ஏகச்சக்கரபுரத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தனர். அது சாதாரண வருடம், சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாளில் இருந்து, ஐப்பசி மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை ஆகும்.
22. பகன் வதம்: சாதாரண வருடம் வளர்பிறை 10ம் நாளில். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 39 வருடம் 5 நாள் ஆகும்.
{பீமனால் பகாசுரன் கொல்லப்பட்ட போது பீமனுக்குச் சுமார் வயது 37}
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:
பகவதம் -ஆதிபர்வம்-முழுமஹாபாரதம் (159-166)
அந்தணன் துயரம் - ஆதிபர்வம் பகுதி 159
"என்னைக் கைவிடு" என்றாள் மனைவி - ஆதிபர்வம் பகுதி 160
பாலகனின் மழலைச் சொற்கள் - ஆதிபர்வம் பகுதி 161
துயர் விசாரித்தாள் குந்தி - ஆதிபர்வம் பகுதி 162
குந்தியின் சொல்லமுதம் - ஆதிபர்வம் பகுதி 163
குந்தியைக் கடிந்து கொண்ட யுதிஷ்டிரன் - ஆதிபர்வம் பகுதி 164
பீம பகாசுர மோதல் - ஆதிபர்வம் பகுதி 165
புதிய பண்டிகை உதயமானது - ஆதிபர்வம் பகுதி 166
23. பாண்டவர்க்ள ஏகச்சக்கரபுரத்தில் மேலும் 1 மாதமும் 10 நாட்களுக்கும் தங்கினர். அதாவது சாதாரண (Sadharana) வருடம் மார்கழி (Margashirsha) மாதம், தேய்பிறை 5ம் நாள் வரை தங்கியிருந்தனர். பிறகு அவர்கள் பாஞ்சால நாடு நோக்கி நடந்து 3 நாட்களில் தௌமியரின் ஆசிரமத்தை அடைந்தனர். அங்கே அவர்கள் 15 நாட்கள் தங்கினர். 18வது நாளில் அவர்கள் {பாண்டவர்கள்} பாஞ்சால நாட்டுத் தலைநகரத்தை அடைந்தனர். அதாவது சாதாரண (Sadharana) வருடம் தை (Pausha) மாதம் 7ம் நாள் அடைந்தனர்.
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:
பாண்டவர்களின் புரோகிதரானார் தௌமியர் - ஆதிபர்வம் பகுதி 185
24. திரௌபதி சுயம்வரம் சாதாரண வருடம் தை மாதம் வளர்பிறை 10ம் நாளில் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:
சுயம்வர பர்வம் மற்றும் வைவாஹிக பர்வம் - ஆதிபர்வம் (186-201)
பாஞ்சாலம் செல்கையில் - ஆதிபர்வம் பகுதி 186
அரங்கிற்கு வந்தாள் திரௌபதி - ஆதிபர்வம் பகுதி 187
சுயம்வரத்திற்கு வந்த மன்னர்கள் யார்? - ஆதிபர்வம் பகுதி 188
காட்சியில் வந்த நாயகன் {கிருஷ்ணன்}! - ஆதிபர்வம் பகுதி 189
குறியை அடித்த அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 190
பாண்டவர்களை அடையாளம் காட்டிய கிருஷ்ணன் - ஆதிபர்வம் பகுதி 191
அர்ஜுனனுடன் போர் புரிவதிலிருந்து விலகினான் கர்ணன் - ஆதிபர்வம் பகுதி 192
அம்மா பிச்சை கொண்டு வந்தோம் - ஆதிபர்வம் பகுதி 193
ஒளிந்திருந்தான் திருஷ்டத்யும்னன் - ஆதிபர்வம் பகுதி 194
திருமண விருந்து தயார்! - ஆதிபர்வம் பகுதி 195
விருந்தும் கண்காட்சியும் - ஆதிபர்வம் பகுதி 196
உமது மகள் எங்களுக்குப் பொது மனைவியாவாள் - ஆதிபர்வம் பகுதி 197
ஒரு பெண்ணுக்குப் பல கணவர்களா? - ஆதிபர்வம் பகுதி 198
பல கணவர்களுக்குப் பொது மனைவி - ஆதிபர்வம் பகுதி 199
ஒவ்வொரு நாளும் கன்னியானாள் திரௌபதி - ஆதிபர்வம் பகுதி 200
25. பாஞ்சால நாட்டில் பாண்டவர்கள் ஒரு வருடம் 15 நாட்கள் தங்கியிருந்தனர். அதாவது விரோதிகிருது (Virodhikrithu) வருடம், தை மாதம் அமாவாசை நாள் வரை தங்கியிருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 40 வருடம் 3 மாதம் 25 நாள் ஆகும்.
26. விரோதிகிருது வருடம், மாசி மாதம் வளர்பிறை 2ம் நாள் அன்று பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் அழைக்கப்பட்டுப் பாதி நாட்டை அடைந்தனர். அவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 5 வருடம் 6 மாதங்களுக்குத் தங்கினர். அதாவது பிங்கள (Pingala) வருடம் ஆவணி மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை தங்கினர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 45 வருடம் 9 மாதம் 27 நாள். இந்திரப்பிரஸ்த நகரம் அந்தக் காலத்தில் தான் கட்டப்பட்டது.
27. பிங்கள வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாளில் யுதிஷ்டிரன் பட்டம்சூட்டப்பட்டான். அப்போது அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} வயது சரியாக 46 வருடம்.
{பீமனுக்கு வயது 45, அர்ஜுனனுக்கு வயது 44, நகுல சகாதேவர்களுக்கு வயது 43}
28. அர்ஜுனன் 12 வருடம் தீர்த்த யாத்திரை சென்றான். அவன் {அர்ஜுனன்} காளயுக்தி (Kalayukthi) வருடத்தில் சென்று பிரமோதூத (Pramodhoota) வருடத்தில் திரும்பினான். பிரமோதூத வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளில் அர்ஜுனன் சுபத்திரையைத் திருமணம் செய்தான். அபிமன்யு பிரமோதூத வருடத்தில்தான் பிறந்தான்.
{அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் திருமணம் நடைபெறும் போது அர்ஜுனனுக்குச் சுமார் வயது 57. அபிமன்யு பிறக்கும் போது அர்ஜுனனுக்குச் சுமார் வயது 57}
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:
"சுபத்திரையைக் கடத்து!" என்றான் கிருஷ்ணன் - ஆதிபர்வம் பகுதி 221
சுபத்திரையைக் கடத்தினான் அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 222
29. அதே வேளையில் திரௌபதி தனது ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து மகன்களைப் பெற்றெடுத்தாள்.
30. பிரமோதூது வருடம் ஆவணி மாத வளர்பிறை 2ம் நாளில் காண்டவ வனம் எரிக்கப்பட்டது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 58 வருடங்கள் 10 மாதங்கள் 15 நாட்கள். மயன் கட்டிய சபாமண்டபத்தைக் கட்டி முடிக்க 1 வருடம் 2 மாதம் ஆகியது.
31. பாண்டவர்கள் மயசபைக்குள் பிரசோத்பத்தி (Prajopatthi) வருடம் ஐப்பசி மாத வளர்பிறை 10ம் நாளில் நுழைந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 60 வருடம் 5 நாள் ஆகும்.
32. பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தை 16 வருடங்கள் ஆண்டு வந்தனர். அதாவது சர்வஜித்த (Sarvajit) வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாள் வரை ஆண்டனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 5 நாட்கள் ஆகும்.
33. பீமனுக்கும் ஜராசந்தனுக்கும் இடையில் நடைபெற்ற மல்யுத்தம் சர்வஜித்த வருடம் கார்த்திகை (Kartika) மாதம் வளர்பிறை 2ம் நாள் துவங்கி 14 நாட்கள் தொடர்ந்து, 14வது நாள் மாலையில் ஜராசந்தன் கொல்லப்பட்டான்.
34. சர்வதாரி (Sarvadhari) வருடம் சித்திரை மாத பௌர்ணமியில் ராஜசூய வேள்வி தொடங்கியது. அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 76 வருடம் 6 மாதம் 15 நாள்.
35. பகடை ஆட்டம்: இரண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள். ஆகப் பாண்டவர்கள் விரோதிகிருது வருடம் மாசி மாத வளர்பிறை 2ம் நாள் தொடங்கிச் சர்வதாரி வருடம் ஆவணி மாதம் தேய்பிறை 7ம் நாள் வரை 36 வருடம் 6 மாதம் 20 நாட்களுக்கு இந்திரப்பிரஸ்தத்தை ஆண்டார்கள்.
பகடை ஆட்டம் நடைபெற்றபோது
யுதிஷ்டிரனுக்கு வயது :76
பீமனுக்கு வயது :75
அர்ஜுனனுக்கு வயது :74
நகுல சகாதேவர்களுகு :73
துரியோதனனுக்கு வயது :75
கர்ணனுக்கு வயது :92
கிருஷ்ணனுக்கு வயது :74
13 வருட வனவாசத்திற்குப் பிறகு குருஷேத்திரப் போர் நடைபெற்றபோது
யுதிஷ்டிரனுக்கு வயது :89
பீமனுக்கு வயது :88
அர்ஜுனனுக்கு வயது :87
நகுல சகாதேவர்களுகு :86
துரியோதனனுக்கு வயது :88
கர்ணனுக்கு வயது :105
கிருஷ்ணனுக்கு வயது :87