Saturday, October 12, 2013

மஹாபாரதம் - கால அட்டவணை - 1


(http://www.hindunet.org/hindu_history/ancient/mahabharat/mahab_patnaik.html  என்ற வலைத்தளத்தில்
Dr.K.N.S.பட்நாயக் ஆங்கிலத்தில் கொடுத்திருப்பதை
இங்குத் தமிழாக்கி வெளியிடுகிறோம்)

தற்போதிருக்கும் ஐரோப்பியா நாட்காட்டி கி.பி.7ல் வழக்குக்கு வந்தது. இந்தியா, பழங்காலத்தில் இருந்தே சந்திர நாட்காட்டியையே வழக்கத்தில் கொண்டுள்ளது. மேற்கத்திய நாட்காட்டி காலத்திற்குத் தகுந்தபடி அடிக்கடி பல மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் முதல் ஆறு மாதங்கள் 31 நாட்களுடனும், கடைசி ஆறு மாதங்கள் 30 நாட்களுடனும் இருந்துள்ளன.


மகாபாரதப் போர் நடந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் வேத ஆட்சிக்குட்பட்டே இருந்தது. அதில் இந்தியாவை மையமாகக் கொண்டு சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை ஒரு நாளாகக் கருதப்பட்டது. அதே போல, உலகின் மற்ற பகுதிகளும் இந்திய கால அட்டவணையே பயன்படுத்தின. ஆகையால் தான், பிரிட்டனில் (இங்கிலாந்தில்) நள்ளிரவு முதல் அடுத்த நாள் நள்ளிரவு வரை ஒரு நாளாகக் கருதப்பட்டது. இந்தியாவில் காலை 5.30க்கு சூரியன் உதிக்கும்போது பிரிட்டனில் நள்ளிரவு 12.00 ஆக இருக்கிறது.

பிறகு காலம் செல்ல செல்ல நாடுகளுக்கிடையே உண்டான பரஸ்பர முரண்பாட்டின் காரணமாக அனைத்தும் துண்டாகின {தொடர்பற்று மாறின}. வெள்ளையர்கள் இந்தியாவைக் கி.பி.1947 வரை 200 வருடங்கள் ஆண்டனர். வெள்ளையர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை என்றே நாள் கணக்கிடப்பட்டலாயிற்று. இதனால், நவீன கணக்கியலின் படி பல தவறுகள் ஏற்படுகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு வருட வித்தியாசத்தில் கொண்டு போய் முடிக்கின்றன.

மஹாபாரதக் கால அட்டவணையைத் தொடர்வதற்கு முன்னர் நாம் வேத காலச் சந்திர நாட்காட்டியைப் பற்றிச் சிறிது பார்ப்போம். அந்த நாட்காட்டியின்படி காலச் சுழற்சியின் அடிப்படைகளான இருபத்தேழு நட்சத்திரங்கள், பனிரெண்டு மாதங்கள் மற்றும் அறுபது வருடங்கள் ஆகியவற்றின் பெயர்கள் பின் வருமாறு.

நட்சத்திரங்கள்
 
தமிழ் English தமிழ் English தமிழ் English
01 அஸ்வினி Ashwini 10 மகம் Magha 19 மூலம் Moola
02 பரணி Bharani 11 பூரம் Poorva 20 பூராடம் Poorvashadha
03 கார்த்திகை Krutika 12 உத்திரம் Uttara 21 உத்திராடம் Uttarashadha
04 ரோகிணி Rohini 13 அஸ்தம் Hastha 22 திருவோணம் Shravana
05 மிருகசீரிஷம் Mruga 14 சித்திரை Chitra 23 அவிட்டம் Dhanishta
06 திருவாதிரை Ardra 15 சுவாதி Swati 24 சதயம் Satabhisha
07 புனர்பூசம் Punarvasu 16 விசாகம் Vishakha 25 பூரட்டாதி Poorvabhadra
08 பூசம் Pushya 17 அனுஷம் Anuradha 26 உத்திரட்டாதி Uttarabhadra
09 ஆயில்யம் Aslesha 18 கேட்டை Jyeshta 27 ரேவதி Revati


மாதங்கள்
 
மாதம் (தமிழ்)சமசுகிருதம்செந்தமிழ் In English
01சித்திரைசைத்ர மேழம் Chaitra
02வைகாசிவைஸாயுகயு விடை Vaishakha
03ஆனிஆநுஷி / ஜ்யேஷ்ட ஆடவை Jyeshta
04ஆடிஆஷாட கடகம் Aashadha
05ஆவணிஸ்யுராவண மடங்கல் Shravana
06புரட்டாசிப்ரோஷ்டபதீ /பாத்யூரபதயூ கன்னி Bhadrapada
07ஐப்பசிஆஸ்யுவிந துலை Ashwin
08கார்த்திகைகார்திக: நளி Kartika
09மார்கழிமார்கயூஸீயுர்ஷ சிலை Margasheersha
10தைதைஷ்யம்/ பவுஷ: சுறவம் Pausha
11மாசிமாக கும்பம் Maagha
12பங்குனிபாயுல்குயூந: மீனம் Phalguna


வருடங்கள்
தமிழ் English தமிழ் English தமிழ் English
01 பிரபவ Prabhava 21 சர்வஜித்த Sarvajittu 41 பிலவங்க Plavanga
02 விபவ Vibhava 22 சர்வதாரி Sarvadhari 42 கீலக Keelaka
03 சுக்கில Sukla 23 விரோதி Virodhi 43 சவுமிய Sowmya
04 பிரமோதூத Pramoodotha 24 விகிர்தி Vikriti 44 சாதாரண Sadharana
05 பிரசோத்பத்தி Pajothpatthi 25 கர Khara 45 விரோதிகிருது Voridhikrutu
06 ஆங்கீரச Agnirasa 26 நந்தன Nandana 46 பரிதாபி Paridhavi
07 ஸ்ரீமுக Srimukha 27 விஜய Vijaya 47 பிரமாதீச Pramadicha
08 பவ Bhava 28 ஜய Jaya 48 ஆனந்த Ananda
09 யுவ Yuva 29 மன்மத Manmatha 49 இராக்ஷஸ Rakshasa
10 தாது Dhata 30 துன்முகி Durmukhi 50 நள Nala
11 ஈசுவர Eswara 31 ஏவிளம்பி Havilambi 51 பிங்கள Pingala
12 வெகுதானிய Bahudhanya 32 விளம்பி Vilhambi 52 காளயுக்தி Kalayukti
13 பிரமாதி Pramadi 33 விகாரி Vikari 53 சித்தார்த்தி Siddharthi
14 விக்ரம Vikrama 34 சார்வரி Sarvari 54 ரவுத்ரி Roudri
15 விஷு Vishu 35 பிலவ Plava 55 துன்மதி Durmati
16 சித்திரபானு Chitrabhanu 36 சுபகிருது Shubhakritu 56 துந்துபி Dundubhi
17 சுபானு Swabhanu 37 சோபகிருது Sobhakruthu 57 உருத்ரோத்காரி Rudhirodgari
18 தாரண Tharana 38 குரோதி Krodhi 58 இரத்தாக்ஷி Rathakshi
19 பார்த்திப Parthiva 39 விஸ்வாவசு Vishwavasu 59 குரோதன் Krodhana
20 விய Vyaya 40 பரிதாவி Paridhavi 60 அக்ஷய Akshaya


கலியுகம்

பிரமாதி வருடத்தில் சித்திரை மாத வளர்பிறை முதல் நாளில், வெள்ளிக்கிழமை அன்று (கி.மு. 3102 - 2 - 20) நேரம் 2-27-30 p.m.ன் போது கலியுகம் துவங்கியது.

இனி மகாபாரத நிகழ்வுகள்

மஹாபாரதச் சம்பவங்கள் கலியுகத்திற்கு முன்னரே {அதாவது துவாபர யுகத்திலேயே} நடந்தன.

1. கர்ணனின் பிறப்பு: மாசி (Magha) மாத வளர்பிறை முதல் நாளில் கர்ணன் பிறந்தான். அவன் {கர்ணன்} யுதிஷ்டிரனைவிட 16 வருடங்கள் மூத்தவன் என்று சொல்லப்படுகிறது.

2. பிரம்மகூடத்தில் உள்ள சப்தசிருங்க மலையை மன்னன் பாண்டு ஐப்பசி (Aswin) மாத வளர்பிறை ஐந்தாவது நாளில் அடைந்தான். இது யுதிஷ்டிரன் பிறந்து ஒரு வருடத்தில் நடந்தது.

3. யுதிஷ்டிரன் பிறப்பு: யுதிஷ்டிரன் பிரஜோத்பத்தி (Prajothpatti) வருடம், ஐப்பசி (Ashwin) மாத வளர்பிறை 5வது நாளில் கேட்டை (Jyeshtha) நட்சத்திரத்தில், தனுசு (Sagittarius) லக்கினத்தில், மதிய வேளையில் அபிஜித் (abhijit) முகூர்த்தத்தில் பிறந்தான். அது கலியுக ஆரம்பத்திற்கு 127 வருடம் 5 மாதம் 25 நாள் முன்னதாக நடந்தது. (அநேகமாகக் கி.மு. 3229 - 8 -15)

4. பீமன் பிறப்பு: பீமன் ஆங்கீரச (Agnirasa) வருடம், ஐப்பசி (Ashwin) மாதம் தேய்பிறை 9வது நாளில் மக (Magha) நட்சத்திரத்தில் மதிய வேளைக்குப் பிறகு பிறந்தான். அவன் யுதிஷ்டிரனை விட 1 வருடம் 19 நாட்கள் இளையவனாக இருந்தான்.

5. அர்ஜுனன் பிறப்பு: ஸ்ரீமுக (Srimukha) வருடம் பங்குனி (Phalguna) மாதம் பௌர்ணமி பகலில் உத்திரம்(uttara) நட்சத்திரத்தில் பிறந்தான். அவன் பீமனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவனாக இருந்தான்.

{பீமனை விட 1 வருடம் இளையவன்}
{யுதிஷ்டிரனை விட 2 வருடம் இளையவன் }
{கர்ணனை விட 18 வருடம் இளையவன்}


6. நகுலன் சகாதேவன் பிறப்பு: பவ (Bhava) வருடம், பங்குனி (Phalguna) மாதம் அமாவசை நாள் மதிய வேளையில் அசுவினி (Ashwini) நட்சத்திரத்தில் பிறந்தனர். அவர்கள் அர்ஜுனனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவர்களாக இருந்தனர்.

{அர்ஜுனனை விட 1 வருடம் இளையவர்கள்}
{பீமனை விட 2 வருடம் இளையவர்கள்}
{யுதிஷ்டிரனை விட 3 வருடம் இளையவர்கள் }
{கர்ணனை விட 19 வருடம் இளையவர்கள்}

7. கிருஷ்ணன் பிறப்பு: ஸ்ரீ முக (Shrimukha) வருடம் ஆவணி (Shravana) மாதம் தேய்பிறை எட்டாம் நாள் {ரோகிணி நட்சத்திரம்} நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் பிறந்தான்.

8. துரியோதனன் பிறப்பு: பீமன் பிறந்த அடுத்த நாள் பிறந்தான். அந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் 99 கௌரவர்களும் அவர்களது ஒரு தங்கையும் பிறந்தனர். அதே போல, ஹிடிம்பன், பகன், மற்றும் கீசகன் ஆகியோர் அதே காலகட்டத்தில் மகம் மற்றும் சுவாதி நட்சத்திரங்களுக்கு இடையில் பிறந்தனர்.

9. மன்னன் பாண்டு சர்வதாரி (Sarvadhari) ஆண்டு, சித்திரை (Chaitra) மாத, வளர்பிறை உத்திரம் (Uttara) நட்சத்திரத்தில் இறந்தான். அப்போது அர்ஜுனன் பிறந்து 14 வருடங்களும் 7 நாட்களும், யுதிஷ்டிரன் பிறந்து 16 வருடங்களும் 6 மாதங்களும் 7 நாட்களும் ஆகியிருந்தன.

10. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குச் சர்வதாரி (Sarvadhari) வருடம், சித்திரை (Chaitra) மாதம் தேய்பிறை 13வது நாள் கொண்டு வரப்பட்டனர். அஃதாவது அவர்கள் தந்தை {பாண்டு} இறந்து 16 நாட்களுக்குப் பிறகு. சர்வதாரி வருடம் சித்திரை மாத தேய்பிறை 13வது நாளில் இருந்து வைகாசி (Vaisahakha) மாதம் வளர்பிறை 10வது நாள் வரை தொடர் 10 நாட்களுக்குப் பாண்டுவின் இறுதிச் சடங்குகள் நடந்தன. அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 16 வருடம், 6 மாதம், 28 நாளாகும்.

11. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 13 வருடங்கள் இருந்தனர். அதாவது சர்வதாரி வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளிலிருந்து, பிலவ (Plava) வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் வரை இருந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 29 வருடம் 6 நாள் 23 நாட்கள் ஆகும். பாண்டவர்கள் துரோணரிடம் வில்வித்தை பயின்றனர்.


 

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்