Sunday, February 16, 2014

ஆடியின் ஆழம் - 5 | முதற்கனல் - 46 | வெண்முரசு - ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=45499
http://venmurasu.in/2014/02/16/ நூல்-ஒன்று-முதற்கனல்-47/

இப்பகுதியில் யயாதி குறித்த அறிமுகம் வருகிறது.

*********************************************************************************

வெண்முரசின் இப்பகுதி முழு மஹாபாரதத்தில் கடக்கும் பதிவுகள்...

*********************************************************************************


நமது கருத்து:

யயாதியை பீஷ்மருடன் ஒப்பிட்டு நாகசூதன் கதை சொல்கிறான். அங்கே யயாதியிடம் பீஷ்மர் தன்னை உணர்கிறார். இங்கே யயாதியின் நிலை கிட்டத்தட்ட சந்தனுவின் நிலையே புரு பீஷ்மர் என்றால் அதில் இன்னும் அதிக ஒற்றுமை இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இப்பகுதியில் //விண்ணுலகில் யயாதியின் அகந்தையைக் கண்டு பொறுமையிழந்த பிரம்மன் அவரைப் பழித்து மண்ணுக்குத்தள்ளினார்// என்று ஜெ. சொல்கிறார்.

முழு மஹாபாரதத்தில் இந்திரன் தள்ளியதாக வருகிறது. பார்க்க : http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section88.html

இப்பகுதியில் யயாதியின் கதையில் வரும் அஸ்ருபிந்துமதி மற்றும் மாதவி ஆகியோர் பத்மபுராணத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். மஹாபராதத்தில் உத்யோக பர்வத்தின் 121வது பகுதியில் இக்கதை வருகிறது. http://www.sacred-texts.com/hin/m05/m05121.htm


நான் ரசித்த வரிகள்...

* “திரும்புவதற்கு பாதையில்லாமல் பயணம் செய்பவர்களே வீரர்கள் எனப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றார் தண்டகர்.

* மண்ணில் முளைத்தவற்றையெல்லாம் உண்டுமுடித்த யானை முளைக்காது புதைந்துகிடக்கும் கோடானுகோடி விதைகளை உள்ளத்தால் உண்ணத் தொடங்கியது. உண்ண உண்ணப்பசிக்கும் தீராவிருந்து என்பர் காமத்தை.

* தந்தையே, அந்த முதுமைக்குள் இருந்தபடி நான் காமத்தின் முழுமையை அறிந்துகொண்டேன். இளமையைக்கொண்டு வெற்றியையும் புகழையும் அகவிடுதலையையும் மட்டுமே இனி நாடுவேன்” என்று சொன்னான். அக்கணமே தன் முதுமைக்குள் இருந்த யயாதி காமத்தின் நிறைவின்மையை மீண்டும் அறியத் தொடங்கினார்.





இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!