http://venmurasu.in/2014/02/15/நூல்-ஒன்று-முதற்கனல்-46/
பால்ஹீகன் சிகண்டி சந்திப்பு
*********************************************************************************
9. ஆடியின் ஆழம்-4 | முதற்கனல்-46 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...
- புருவின் குல வரலாறு - பகுதி 94 - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section94.html
- அறம் வளர்க்கும் குல வரலாறு - பகுதி 95 - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section95.html
- கால் கழுவும் பணியேற்ற கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 34 - http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section34.html
- Sacred texts - http://www.sacred-texts.com/hin/m05/m05149.htm
நீண்ட நாட்களாக வெண்முரசு குறித்து பதிவுகள் இட நேரம் கிடைக்கவில்லை. அதற்கு வருந்துகிறேன். இனியாவது ஒருவாறு வெண்முரசின் வேகத்தோடு இணைந்து நானும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். முடியுமா தெரியவில்லை. இனி இன்றைய வெண்முரசு குறித்து சிறிது காண்போம்...
இப்பகுதியில் பால்ஹிக நாட்டின் புவியியலை ஒருவாறு அறிய முடிகிறது. பீஷ்மர் பால்ஹிகன் போர் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இப்படி ஒரு சம்பவம் மஹாபாரதத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருப்பினும் பால்ஹிகனை அருமையாகச் செதுக்கிக் கொண்டு வந்திருக்கிறார் ஜெ. தேவாபியைச் சுமந்த சிறுவன் பால்ஹிகன் ஆகட்டும். சிகண்டியிடம் பேசும் முதிய பால்ஹிகன் ஆகட்டும் நம்மை மிரள வைக்கின்றனர். பால்ஹிகனுக்கும் பாண்டுவுக்கும் ஓரளவு ஒற்றுமையிருப்பினும் பீஷ்மர் பால்ஹிகனின் நிழல் என்பது சகோதரர்களின் குடும்பங்களைச் சுமப்பதாலா என்று தெரியவில்லை.
இன்றைய வெண்முரசில் நான் ரசித்த வரிகள்...
* “ஆம்” என்றார். “நெடுநாட்களாகின்றன… நான் அவனை வென்றேன். அல்லது நாங்கள் இருவரும் வெல்லவில்லை. அல்லது இருவருமே தோற்றோம்.. என்ன நடந்தது என்று என்னால் இப்போது சொல்லமுடியவில்லை” என்றார்.
* மண்ணும் புழுதியும் வெயிலும் சேர்ந்துதான் எங்கள் பெண்களை அழகிகளாக ஆக்குகின்றன. நான் அஸ்தினபுரியின் பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் காளான் போலிருக்கிறார்கள்.
* இங்கே அதிகாரம் இல்லை. ஆகவே அரசியல் இல்லை. அரசமரியாதைகளும் சபைமுறைமைகளும் இல்லை. நான் இங்கே காட்டுமிருகத்தின் கட்டற்ற சுதந்திரத்துடன் வாழ்ந்தேன்.
* ஒருகணமாவது என் கதையை அல்லது தோள்களை அவன் பார்க்கிறானா என்று நான் கவனித்தேன். மிருகங்கள் மட்டுமே போரில் அவ்வளவு முழுமையான கவனம் கொண்ட கண்களுடன் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
* இந்த கல்குகைக்குள் நான் என் தனிமையை தின்றுகொண்டிருக்கிறேன். அவன் தன் கல்குகைக்குள் இருக்கிறான். அவனிடம் சொல், அவனுக்கு விடுதலை இல்லை என்று. அவன் ஆடிப்பிம்பம் என்று…”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.