Monday, April 04, 2016

மஹாபாரதம் - கால அட்டவணை - 3



மஹாபாரத நிகழ்வுகளின் தொடர்ச்சி…

36. கானக வாழ்வு: சர்வதாரி வருடம், ஆவணி மாதம் தேய்பிறையின் 8-ம் நாளில் பாண்டவர்களின் கானக வாழ்வு தொடங்கியது. அப்போது யுதிஷ்டிரனின் வயது 76 வருடம் 10 மாதம் 18 நாட்களாகும். ராட்சசன் கிர்மீரன் அன்றிலிருந்து 3-ம் நாளில், அதாவது தேய்பிறை 10-ம் நாளில் கொல்லப்பட்டான். 12 வருட காட்டு வாழ்க்கை சார்வரி வருடம், ஆவணி மாதம் தேய்பிறையின் ஏழாம் நாளில் முடிவுற்றது.



37. 13-ம் ஆண்டுக் கண்டறியப்படாமல் இருக்க வேண்டிய காலம் பிலவ ஆண்டு ஆவணி மாதம் தேய்பிறையின் 7ம் நாளில் முடிவுற்றது.

38. கீசகன், பிலவ ஆண்டு ஆடி மாத தேய்பிறையின் 8ம் நாள் இரவில் கொல்லப்பட்டன். அவனது தம்பிகள் அடுத்த நாளான தேய்பிறையின் 9ம் நாளில் கொல்லப்பட்டனர்.

39. இவையனைத்தும் சந்திரமான வருடங்களென்பதால், ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் 2 அதிக மாதங்கள் இருக்கும். 13 வருடங்களில் 5 அதிக மாதங்களும், 12 நாட்களும் இருந்திருக்கும். ஆனால் இவை அதிக மாதங்கள் எனச் சந்திரமான வருடங்களில் கலக்கப்பட்டிருந்தன. திதிவயங்கள் போன்றவற்றில் பீஷ்மரும், யுதிஷ்டிரனும் இந்தக் கணக்கீடே சரி என்று அதையே பின்பற்றினர், ஆனால் துரியோதனனோ அந்தக் காலங்களில் ஏற்றுக்கொள்ளப்படாத சூரியமான வருடங்களின்படி பாண்டவர்கள் கண்டறியப்பட்டதாக வலியுறுத்தினான்.

40. மறைந்திருக்க வேண்டிய காலம் முந்தைய நாளே முடிந்ததால், அர்ஜுனன் தன்னை வெளிக்காட்டிக் கொண்டான். பிரமோதூத ஆண்டு முதல் சார்வரி ஆண்டுவரை 30 ஆண்டுகளாக அர்ஜுனன் தன் வில்லான காண்டீவத்தைத் தாங்கி வந்தான். அர்ஜுனன் உத்தரனிடம் மேலும் 35 ஆண்டுகள் அவன் அதைத் தாங்கப்போவதாகச் சொன்னான். அடுத்த நாளான தேய்பிறையின் 9ம் நாளில் பாண்டவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 89 வருடங்கள், 10 மாதங்கள், 9 நாட்களாகும்.

41. பாண்டவர்கள் {விராட தேசத்தில்} உபப்லாவ்யத்தில் 1வருடம் 2 மாதம் 17 நாட்களுக்குத் தங்கியிருந்தனர். இந்நாட்களில்தான் ஆலோசனைகளும், சுபகிருத ஆண்டு ஆனி மாதத்தில் உத்தரை அபிமன்யு திருமணமும், படைகளைத் திரட்டுவதும், துருபதன் புரோகிதர் மற்றும் சஞ்சயன் ஆகியோர் செய்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஐப்பசி {Aswyuja} மாதத்தில் தீமையையும், அழிவையும் முன்னறிவிக்கும் வகையில் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் நேர்ந்தன.

42. ஸ்ரீகிருஷ்ணனின் அமைதிக்கான பேச்சுவார்த்தை: சுபகிருது ஆண்டுக் கார்த்திகை மாதம் வளர்பிறை 2ம் நாளில், ரேவதி நட்சத்திரத்தில் புறப்பட்ட ஸ்ரீகிருஷ்ணன், 13ம் நாளில் ஹஸ்தினாபுரத்தை அடைந்து, அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தேய்பிறையின் 8ம் நாள் வரை நடத்தினான். கடைசி நாளில் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தினான். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அதே நாளில் பூசம் நட்சத்திரத்தில் தன் பயணத்தைத் தொடங்கி, கர்ணனிடம் 7 நாட்களில் அமாவாசை நாளில் கேட்டை நட்சத்திரத்தில் அனைவரும் பெரும்போருக்காகக் குருக்ஷேத்திரத்தில் கூட வேண்டும் என்று சொல்லி உபப்லாவ்யம் திரும்பினான் [1].

[1] இங்கே ஏதோ குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. கேட்டை நட்சத்திரம் பூரம் நட்சத்திரத்தில் இருந்த ஏழாவது நட்சத்திரமாக வரும். ஆனால் இங்கே தெளிவாகப் பூசம் Pushyami Star என்று கொடுக்கப்பட்டிருக்கிறது ஆங்கிலத்தில் வருவது இதுதான்: Shri Krishna started on Shubhakrit Kartik Bright 2nd Day, in Revati Star, reached Hastinapur on the 13th Day, and held peace talks upto Dark 8th Day. On his last day, His Vishwaroopa was shown. Since talks failed, he started on his return journey the same day in Pushyami Star, told Karna that in 7 days, on New Moon Day in Jyeshta Star, all should assemble at Kurukshetra for the Great War, and returned to Upaplavya.

43. எனவே, பாண்டவர்கள் உபப்லாவ்யத்தில் 1 வருடம் 2 மாதங்கள் 17 நாட்கள் + 15 நாட்கள் = 1 வருடம் 3 மாதங்கள் 2 நாட்கள் தங்கியிருந்தனர்.

44. பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு படையினரும் குருக்ஷேத்திரத்திற்குப் புது நிலவில் அமாவாசையில் சென்றனர். மார்கழி மாதம் வளர்பிறை இரண்டாம் நாளில் இருந்து 12ம் நாள் வரை படைகளின் பாசறை அமைப்பதும், போர் ஒத்திகைகளும் நடந்தன.

45. மகாபாரதப் பெரும்போர் சுபகிருத வருடம் மார்கழி மாதம் வளர்பிறை 13/14ம் நாள், செவ்வாய்க்கிழமை பரணி நட்சத்திரத்தில் தொடங்கியது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 91 வருடம், 2 மாதம் 9 நாட்களாகும். அதற்கு முந்தைய நாளில் அதாவது வளர்பிறை 11/12ம் நாளில் படைகள் வியூக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது அர்ஜுனன் மயங்கினான். அதன் காரணமாகக் கிருஷ்ணன் புகழ்பெற்ற பகவத்கீதை உரையாடலை அர்ஜுனனிடம் நிகழ்த்தினான்.

46. பீஷ்மரின் வீழ்ச்சி : மார்கழி தேய்பிறை 7ம் நாளில்

47. அபிமன்யுவின் மரணம்: அபிமன்யு மார்கழி மாதம் தேய்பிறை 10ம் நாளில் {போரில் சக்கரவியூகத்தில்} கொல்லப்பட்டான். அப்போது அவனுக்கு {அபிமன்யுக்கு} வயது 32 வருடங்களாகும் (பிரமோதூதம் முதல் சுபகிருது வரை). அவனது திருமணம் ஆனி மாதத்தில் நடந்ததால் 6 மாத காலமே அவன் திருமண வாழ்வை வாழ்ந்திருந்தான். அவன் இறக்கும்போது உத்தரை 6 மாத கர்ப்பிணியாக இருந்தாள்.