இதோ பீஷ்ம பர்வத்தின் பாதி வரை வந்தாகிவிட்டது. இன்னும் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான கிசாரி மோகன் கங்குலியின் முன்னுரையை நாம் மொழி பெயர்க்கவில்லையே என்ற கவனம் கூட இல்லாமல் இருந்துவிட்டேன். ஆதிபர்வம் அச்சிடுவதற்காக முதல் பிரதியை அச்சக நண்பர் கொடுத்த பிறகு கூட உரைக்கவில்லை, ஆதிபர்வத்தின் பிழை திருத்தங்கள் அனைத்தையும் செய்த பிறகுதான் அது எனக்கு உரைத்தது. உடனே அந்த முன்னுரையை மொழிபெயர்த்தேன். அதற்குள் அடைமழை, மின்சாரமின்மை என பத்து நாட்களாக இந்த முன்னுரையை பதிவேற்ற முடியாமல் இருந்தேன். இப்போது பதிவேற்றுகிறேன்.
கீழ்க்கண்ட முன்னுரையில் கங்குலி குறிப்பிடும் "மொழிபெயர்ப்பாளனின் கடமை" என்பதற்கு ஏற்றபடி நானும் இதுவரை மொழிபெயர்த்துவருகிறேன் என்ற மனநிறைவுடன்...

- செ.அருட்செல்வப்பேரரசன்
ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை
மொழிபெயர்ப்பாளனுடைய எழுத்தின் பொருள், தனது ஆசிரியனைக் கண்ணாடியில் காட்டுவது போல எப்போதும் இருக்க வேண்டும். {எழுதப்படும் மொழியின்} மரபைத் துறந்தாவது, தனது ஆசிரியரின் தனித்தன்மையான கற்பனையையும், மொழிவளத்தையும் காக்கும் வகையில், தனது ஆசிரியர் எப்படிக் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறாரோ, அப்படியே நடைமுறைக்கு உகந்தபடி அவற்றைப் பிரதிபலிப்பதே அவனது தலையாயக் கடமையாகும்.
சம்ஸ்க்ருதத்தில் இருந்து மொழிபெயர்ப்பதைப் பொறுத்தவரை, ஆங்கிலச் சுவைக்கு ஏற்றவாறு இந்து {இந்துமதக்} கருத்துகளைச் சமைப்பது எளிதானதல்ல. ஆனால், தற்போதைய மொழிபெயர்ப்பாளனின் {கங்குலியாகிய என்னுடைய} முயற்சி என்பது, வியாசரின் பெருஞ்செயலை கூடுமானவரை சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி பொருள் கொண்டு வெளிப்படுத்துவதேயாகும்.
முற்றான ஆங்கில வாசகருக்கு, பின்வரும் பக்கங்களில் நகைப்பைத்தரும் பல சொற்கள் காத்திருக்கின்றன. தங்கள் மொழியைத் தவிர வேறு எந்த மொழியையும் அறியாதவர்களுக்கு, சுவை போன்ற காரியங்கள் இதில் விலகியே நிற்கும். தங்கள் நாவின் மூலம் சந்தித்ததைவிட {அனுபவித்ததைவிட} வேறு எந்த மாதிரிகளையும் அறியாதவர்களுக்கு, தங்களுக்குத் தாங்களே அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் தூய்மையும், சுவையும் சேர்ந்த ஒரு கலவை மிகக் குறுகியதாகவே இருக்கும்.
பரிகாசத்தைத் தவிர்க்கும் பொருட்டு, அசல் பதிப்பின் உண்மைத்தன்மையை ஒரு மொழிபெயர்ப்பாளன் தியாகம் செய்வானானால், அவன் தனது கடமையில் தவறியவனாவான். அவன் தனது ஆசிரியனைப் பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, தன்னை முற்றிலும் அறியாதோரின் குறுகிய சுவையை நிறைவு செய்வதில் ஈடுபடக்கூடாது. மகாவீர சரிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் திரு.பிக்ஃபோர்டு {Mr. Pickford} அவர்கள், "எளிய மொழிபெயர்ப்பு" என்ற பெயருக்காக, {மூல மொழியின்} மரபையும், சுவையையும் தியாகம் செய்து, ஆசிரியனை வெளிநாட்டு ஆடையில் மறைத்தும், மூலத்துடன் நெருக்கமாக மொழிபெயர்த்திருப்பதாகத் தனது முன்னுரையில் திறமையுடன் தன்னைத் தற்காத்துக் கொண்டும், யாருக்கு அந்த ஆசிரியனை அறிமுகப்படுத்துகிறாரோ அவர்களை நிறைவு செய்திருக்கிறார்.
பர்த்ருஹரியின் {Bhartrihari} நீதி சதகம் மற்றும் வைராக்கிய சதகம் {Niti Satakam and Vairagya Satakam} ஆகியவற்றின் செவ்வியல் மொழிபெயர்ப்பைச் செய்த திரு.சி.எச்.டாவ்னி {Mr. C.H. Tawney}, தனது முன்னுரையில், "தற்போதைய என் முயற்சியில் உள்ளூர் வண்ணங்களை அப்படியே தக்க வைத்திருக்கிறேன். அதையே நான் விவேகமானதாகக் கருதுகிறேன். உதாரணத்திற்கு, கடவுள் மற்றும் பெரும் மனிதர்களின் கால்களை வழிபடுவது என்பது இந்திய இலக்கியங்களில் அடிக்கடிக் காணப்படும் ஒன்றாகும். ஆனால், சம்ஸ்க்ருதம் அறியாத ஆங்கிலேயருக்கு அது நிச்சயம் நகைப்பையே உண்டாக்கும். அதிலும் குறிப்பாக, தற்செயலான காரியங்களில் கவனம் செலுத்தி, முக்கியமானவற்றைக் காணாமல், தங்கள் கவனத்தைத் திருப்பிக் கொள்ளும் வாசகர் வட்டத்திடம் இது நகைப்பையே உண்டாக்கும். ஆனால், கிழக்கத்திய கவிஞர்களை நேர்மையில்லாமல் ஆய்வு செய்யும் பல மொழிபெயர்ப்புகளை விட, குறிப்பிட்ட அளவுக்கு மூலப்பதிப்பின் பற்றிலிருந்து மாறாமல், தன்னைக் கேலிக்கு உள்ளாக்கிக் கொள்ளும் ஆபத்தை ஏற்பதே சிறந்தது" என்கிறார்.
"நேர்மையில்லாத ஆய்வு" என்பது எதுவும் இல்லை, தங்கள் கடமை குறித்த தவறான புரிதலே இங்கே நேர்கிறது. அது மூளையால் விளையும் தவறேயன்றி, இதயத்தால் நேரும் தவறு இல்லை. எனவே, கடைசியில் {திரு.சி.எச்.டாவ்னி [Mr. C.H.Tawney]} சுட்டிக்காட்டியபடி மொழிபெயர்ப்பாளர்கள் கண்டனத்துக்கு உள்ளாகியிருப்பது தகாது என்றாலும், மேற்கண்டது {டாவ்னியின் விளக்கத்தை} முழுமையையும் நாம் ஏற்கிறோம்.
பனிரெண்டு {12} வருடங்களுக்கு முன்பாகப் பாபு பிரதாப் சந்திர ராய் Babu Pratapa Chandra Roy அவர்கள், பாபு துர்கா சரண் பேனர்ஜி Babu Durga Charan Banerjee அவர்களுடன் சீப்பூரில் {Seebpore} இருக்கும் எனது இல்லத்திற்கு வந்து மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். அந்தப் பெரும் திட்டத்தால் நான் மலைப்படைந்தேன். அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, "எனது பணிக்கு ஈடான பணம் எங்கே இருந்து வரும்?" என்பதாகும்.
அப்போது பிரதாபர் தனது திட்டத்தின் விபரங்களை விளக்கி, வெவ்வேறு இடங்களில் இருந்து, நேர்மையான முறையில், இதயப்பூர்வமான உதவிகளை எப்படியெல்லாம் பெற முடியும் என்பதை நம்பிக்கையுடன் என்னிடம் சொன்னார். அவர் உற்சாகத்தில் நிறைந்திருந்தார். அந்தக் காரியத்தைச் செய்யும்படி பரிந்துரைத்த டாக்டர் ரோஸ்ட் அவர்களின் கடிதத்தை, அவர் என்னிடம் காட்டினார்.
பாபு துர்கா சரண் Durga Charan அவர்களை நான் பல வருடங்களாக அறிவேன். அவரது புலமை மற்றும் நல்ல நடைமுறை உணர்வு ஆகியவற்றில் உயர்ந்த கருத்தைக் கொண்டவன் நான். திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், என்னைச் சமாதானப்படுத்தவும், பிரதாப்பின் பக்கத்தில் இருந்து கொண்டு உற்சாகமாகப் பேசியதால், நான் அவர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் அனைத்து ஏற்பாடுகளையும் என்னுடன் சேர்ந்து அன்றே முடிக்க இருந்தனர். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. ஆலோசிப்பதற்காக நான் ஒரு வாரத்தை எடுத்துக் கொண்டேன்.
இலக்கிய வட்டத்தில் உள்ள எனது நண்பர்கள் சிலருடன் கலந்தாலோசித்தேன். அவர்களில் முதன்மையானவர் காலஞ்சென்ற டாக்டர் சம்பு சி.முகர்ஜி Dr. Sambhu C. Mookherjee. ஆவார். அவரைப் பணியின் நிமித்தமாகப் பிரதாபர் சந்தித்ததாக நான் அறிந்தேன். "கட்டுக்கடங்காத ஆற்றல் கொண்டவர்" என்றும், "விடாமுயற்சியுடையவர்" என்றும், பிரதாபரைக் குறித்து டாக்டர் முகர்ஜி என்னிடம் சொன்னார். டாக்டர் முகர்ஜியுடன் நடந்த ஆலோசனையின் விளைவாக நான் மீண்டும் அவரைப் {பிரதாபரைப்} பார்க்க விரும்புவதாகப் பிரதாபருக்குக் கடிதம் எழுதினேன்.
இந்த இரண்டாவது சந்திப்பில், மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. மேலும் எனக்கான பங்கைப் பொறுத்தவரை அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டன. எனது நண்பர் {பிரதாபர்} பேராசிரியர் மேக்ஸ் முல்லரிடம் Professor Max Muller இருந்து பெற்ற மொழிபெயர்ப்பின் ஒரு மாதிரியை எனக்குக் கொடுத்துச் சென்றார். அதை மூலத்துடன் வரிக்கு வரி கவனமாக ஒப்பிட்டுப் படிக்கத் தொடங்கினேன். சொல்லுக்குச் சொல்லான அதன் தன்மை குறித்து எந்த ஐயமுமில்லை. ஆனால், அதில் ஒரு தொடர்ச்சி இல்லை. எனவே, பொது வாசகர் படிப்பதற்கு அஃது ஏற்றதாக இருக்காது.
அந்தப் பெரும் பண்டிதரின் {மேக்ஸ் முல்லரின்} இளம் ஜெர்மானிய நண்பர் ஒருவர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார். ஒவ்வொரு வரியையும் நான் திருத்த வேண்டியிருந்தது. மூலப்பதிப்பின் உண்மைநிலை பாதிக்காத வண்ணம் அதை நான் செய்தேன். எனது முதல் பிரதி தட்டெழுதப்பட்டு, ஒரு டசன் {12} பக்கங்கள் தயாரிக்கப்பட்டன. ஆய்வுக்காக, ஐரோப்பிய மற்றும் உள்ளூர் எழுத்தாளர்களில் சிறந்தவர்களிடம் அவை ஒப்படைக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டன. அதைக் கண்ட அனைவரும் மகிழ்ச்சியுடன் அங்கீகரித்தனர். பிறகுதான் மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணி உண்மையிலேயே தொடங்கியது.
எனினும் முதல் நூல் வெளியிடப்படுவதற்கு முன்னர், அந்த மொழிபெயர்ப்புக்கான ஆசிரியத்தன்மை வெளிப்படையாக உரிமை கொண்டாடப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. ஆசிரியர் யார் என்றே தெரியாத நிலைக்குப் பாபு பிரதாப சந்திர ராய் எதிராக இருந்தார். நான் ஆதரவாக இருந்தேன். ஒரே நபராக அனைத்தையும் மொழிபெயர்க்கும் இந்தப் பிரம்மாண்ட பணியில் உள்ள சாத்தியக்குறைவே நான் எடுத்த அந்த நிலைக்குக் காரணமாகும். எடுத்துக் கொண்ட கடமையைச் செய்வது என்ற எனது தீர்மானம் ஒரு புறம் இருக்க, அதை முடிக்கும் அளவுக்கு நான் உயிரோடு வாழ முடியாமல் போகலாமே. {இந்த மஹாபாராதப் படைப்பின்} நிறைவை அடைவதற்கு முன்னர்ப் பல வருடங்கள் கழிந்துவிடுமே. மரணத்தைத் தவிர வேறு சூழ்நிலைகளும் எழலாம். அதன் காரணமாகப் பணி நின்று விடவும் வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த நூல்களின் தலைப்புப் பக்கங்களில் வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களைச் சேர்க்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
இவையும், இன்னும் பிற பரிசீலனைகளும் சேர்ந்து எனது பார்வையே சரியானது என்று எனது நண்பரை நம்ப வைத்தது. அதன்படி மொழிபெயர்ப்பாளரின் பெயரை வெளியிட வேண்டியதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. எனினும் இரு பார்வை நிலைகளுக்கும் ஒரு சமரசமாக, முதல் நூலை இரு முகவுரைகளுடன், ஒன்று வெளியீட்டாளரின் கையொப்பத்துடனும், மற்றொன்று மொழிபெயர்ப்பாளரின் முகவுரையுடனும் வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அனைத்து வகைத் தவறான கருத்துகளுக்கும் எதிரான ஒரு பாதுகாப்பாக அஃது இருக்கும் என்று கருதப்பட்டது. கவனம் கொண்ட வாசகர் எவரும் ஆசிரியரோடு வெளியீட்டாளரைப் பொருத்திப் பார்த்துக் குழம்ப மாட்டார்கள்.
இந்தத் திட்டம் கடைப்பிடிக்கப்பட்டாலும், கால் பணி நடைபெறுவதற்கு முன்பே, செல்வாக்கு மிக்க ஓர் இந்திய பத்திரிகை, இலக்கிய ஏமாற்றில் பங்காற்றியதாகப் பரிதாபத்திற்குரிய பிரதாப சந்திர ராயை வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியது. அதாவது, வெளியீட்டாளராக மட்டுமே இருந்து கொண்டு, வியாசருடைய படைப்பின் மொழிபெயர்ப்பாளராக உலகத்தின் முன்னால் தன்னை அவர் வெளிக்காட்டிக் கொள்வதாகக் குற்றஞ்சாட்டியது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிழக்கத்திய அறிஞர்களிடம் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் ஒருபோதும் ஆசிரியத்தன்மையைக் கமுக்கமாக வைக்காத போதேகூட, வியப்பைத் தரும் அளவுக்கு, என் நண்பர் மேல் அப்படிப்பட்ட குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவர் உடனடியாக, ஆசிரியரின் பெயர் இல்லாததற்கான காரணங்களை விளக்கியும், உலகத்திற்குக் கொடுக்கப்பட்ட முதல் நூலில் இடம்பெற்ற இரு முன்னுரைகளையும் சுட்டிக் காட்டியும், அந்தப் பத்திரிகையின் செயலைக் கேள்வி கேட்டுக் கடிதம் எழுதினார். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் உடனே தவறை ஏற்றுக் கொண்டு, ஏற்கத்தக்க வகையில் மன்னிப்பையும் வெளியிட்டார்.
இப்போது மொழிபெயர்ப்பு நிறைவடைந்துவிட்டபடியால், இன்னும் மொழிபெயர்ப்பாளரின் பெயரை வெளியிடாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. நடைமுறை உண்மையில், முழு மொழிபெயர்ப்பும் ஒரே கரங்களுக்குச் சொந்தமானவையே. ஆதி பர்வம் மற்றும் சபா பர்வத்தின் சில பகுதிகளில் பாபு சாரு சரண் முகர்ஜி Babu Charu Charan Mookerjee எனக்கு உதவி செய்தார். சபா பர்வத்தின் நான்கு பாரங்கள் பேராசிரியர் கிருஷ்ண கமல் பட்டாச்சாரி Professor Krishna Kamal Bhattacharya அவர்களால் செய்யப்பட்டது. எனக்கு உடல்நிலை சரியில்லாத போது, ஒரு நூலின் பாதி வேலை வேறு கரத்தால் செய்யப்பட்டது. எனினும், இந்தக் கனவான்களின் பிரதிகள் அச்சகத்திற்குச் செல்லும் முன்னர், நானே அவற்றை வரிக்கு வரி கவனமாக மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, மீதி பகுதிகளோடு இணைக்கும்போது இவற்றின் நடையில் ஒருமை நிலைப்பதற்காக, தேவையான இடங்களில் திருத்தம் செய்தே அளித்தேன்.
ஆங்கிலத்தில் மகாபாரதத்தைச் செய்வதில் பின்பற்றிய மூன்று {3} வங்காளப் பதிப்புகளில் இருந்து நான் மிகச் சிறிய உதவியையே பெற்றிருக்கிறேன். இவை ஒவ்வொன்றும் துல்லியமற்றதாகவும், ஒவ்வொரு விளக்கத்திலும் தவறுகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன. குறிப்பாக, பதினெட்டுப் பர்வங்களில் மிகக் கடினமானதான சாந்தி பர்வத்தை, அதைத் தாக்கிய பண்டிதர்கள் குழப்பி வைத்திருக்கிறார்கள். கேலிக்குரிய நூற்றுக்கணக்கான தவறுகளை ராஜதர்மம் மற்றும் மோட்சதர்மம் ஆகிய பகுதிகளில் சுட்டிக்காட்ட முடியும். அவற்றில் சிலவற்றை நான் அடிக்குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.
தவறிழைக்காத் தன்மைக்கு நான் உரிமை கோர முடியாது. புரிந்து கொள்ள மிகக் கடினமான வரிகள் மகாபாரதத்தில் பல உள்ளன. பெரும் உரையாசிரியரான நீலகண்டரிடம் Nilakantha இருந்தே நான் பெரும் உதவிகளைப் பெற்றிருக்கிறேன். நீலகண்டரின் வல்லமை கேள்விக்கு உட்படுத்த தகாதது இல்லை என்பதை நான் அறிவேன். இருப்பினும், நீலகண்டர் கொடுத்த பொருள் விளக்கங்கள், பழங்காலத்திலிருந்தே அவரது ஆசான்களிடம் இருந்து பெறப்பட்டவை என்பதை நினைவுகூர்ந்தால், நீலகண்டரை வழிகாட்டியாக மறுப்பதற்கு முன் ஒருவன் இருமுறை சிந்திக்க வேண்டும்.
நான் ஏற்றுப் பின்பற்றியுள்ள அளவீடுகளைப் பற்றிச் சொல்லும்போது, இப்படைப்பின் முதல் பாதியைப் பொறுத்தவரை, பொதுவாக நான் வங்க உரைகளையே பின்பற்றி இருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும்; பிற்பாதியைப் பொறுத்தவரை அச்சிடப்பட்ட பம்பாய் பதிப்பையே நான் பின்பற்றியிருக்கிறேன். சில தனிப்பட்ட பகுதிகளில், வரிகளின் வரிசையைப் பொறுத்தவரை, வங்கப் பதிப்புகளில் உள்ள நிகழ்வுகள், பம்பாய் பதிப்பில் பெரிதும் வேறுபடுகின்றன. அத்தகு இடங்களில், கருத்துகளின் வரிசைகள் பம்பாய் பதிப்பைவிட, வங்கப் பதிப்புகளில் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்ற நம்பிக்கையில் வங்க உரைகளையே நான் பின்பற்றியிருக்கிறேன்.
"வாசுதேவ விஜயத்தின்" 'Vasudeva Vijayam ஆசிரியரான பண்டிதர் ராம்நாத் தாரகரத்னா Pundit Ram Nath Tarkaratna அவர்களுக்கும், சில செய்யுட்களில், பேராசிரியர் மகேஷ் சந்திர நியாயரத்னா Professor Mahesh Chandra Nayaratna அவர்களின் உரையுடன் கூடிய "காவியபிரகாசா"வின் Kavyaprakasha ஆசிரியர் பண்டிதர் சியாமச்சரண் கவிரத்னா Pundit Shyama Charan Kaviratna அவர்களுக்கும், "பாரதக் காரியாலயா"வின் Bharata Karyalaya மேலாளர் பாபு அகோர் நாத் பேனர்ஜி அவர்களுக்கும் Babu Aghore Nath Banerjee நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதைச் சொல்ல வேண்டும். இந்த அறிஞர்கள் அனைவரும் கடினமான பல இடங்களில் எனக்கு நடுவர்களாக இருந்திருக்கின்றனர். பண்டிதர் ராம்நாத் அவர்களின் திடமான புலமை, அவருடன் தொடர்பு கொண்டிருந்த அனைவரும் அறிந்ததே. அவரால் தெளிவுபடுத்தப்பட முடியாத எந்தக் கடினமான ஒன்றையும் என்னால் குறிப்பிட முடியவில்லை. துரதிர்ஷடவசமாக, எப்போதும் ஆலோசனை வழங்க அவர் அருகில் இல்லை. நான் சீப்பூரில் தங்கியிருந்த போது, சாந்தி பர்வத்தின் மோட்ச தர்மப் பகுதிகளில் பண்டிதர் சியாமச்சரண் கவிரத்னா அவர்கள் எனக்குத் துணைபுரிந்தார். பெரிதும் ஆடம்பரமற்றவகையில் இருக்கும் கவிரத்னா அவர்கள், உண்மையில், பண்டைய இந்தியாவின் படித்த பிராமண வகையைச் சேர்ந்தவராவார். பாபு அகோர் நாத் பேனர்ஜி அவர்களும் அவ்வப்போது என் சிரமங்களைப் போக்குவதில் மதிப்புமிக்க உதவிகளைச் செய்திருக்கிறார்.
சர் ஸ்டுவர்ட் பெய்லி Sir Stuart Bayley, சர் ஆக்லண்ட் கால்வின் Sir Auckland Colvin, சர் ஆல்பிரட் கிராப்ட் Sir Alfred Croft மற்றும் கிழக்கத்திய அறிஞர்களில் Oriental scholars, காலஞ்சென்ற டாக்டர் ரெயின்ஹோல்ட் ராஸ்ட் Dr. Reinhold Rost, பாரீசின் மோன்ஸ் ஏ.பார்த் Mons. A. Barth of Paris ஆகியோரின் ஊக்கமில்லாவிடில் இந்தப் பிரம்மாண்டமான வேலை எனக்கு மிகக் கடினமானதாக இருந்திருக்கும். இந்த மொழிபெயர்ப்பு என் பேனாவில் இருந்துதான் நடைபெறுகிறது என்பதை ஆரம்பம் முதலே இந்தச் சிறந்த மனிதர்கள் அனைவரும் அறிவார்கள். எனக்கு உற்சாகத்தை அளித்த எனது அப்பாவி நண்பர் பிராதப சந்திர ராய் அவர்கள் ஒருபுறம் என்னை நிறைவுகொள்ளச் செய்வதிலேயே எப்போதும் முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்த நிறுவனத்தின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரிடம் நான் பெற்ற ஊக்க வார்த்தைகள் மட்டும் இல்லாதிருந்தால் எனது சக்தி தடைபட்டு, பொறுமையை இழந்திருப்பேன் என்பது நிச்சயம்.
இறுதியாக, நான் என் இலக்கியத் தலைவரும், நண்பருமான டாக்டர் சம்பு சி.முகர்ஜி Dr. Sambhu C. Mookherjee அவர்களைக் குறித்துச் சொல்ல வேண்டும். எனது உழைப்பில் அவர் எடுத்துக் கொண்ட கனிவான அக்கறை, என் பொறுமையைத் தூண்டி மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியது. முடிவற்றதாகத் தோன்றிய இப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ஒவ்வொரு நூலும் வெளி வரும் போது, அதைப் படிப்பதில் அவர் கொண்ட கவனம், பழம்பொருள் கொண்ட தலைப்புகள் மீது ஒளிவீசி அந்தப் பத்திகள் அனைத்தையும் குறிப்பிட்டுக் காட்டியது, எந்த உணர்வாவது குறிப்பாக அவரது கண்களுக்கு மகிழ்ச்சி அளித்தால், அவர் உதிர்த்த பாராட்டு வார்த்தைகள் ஆகியனவே மற்ற எதையும்விட அதிகம் என்னைப் பணியாற்றத் தூண்டியது.
கிசாரி மோகன் கங்குலி
கல்கத்தா