ஆதிபர்வம் 95ம் பகுதியான அறம் வளர்க்கும் குல வரலாறு என்ற பதிவில் திரு.ஜெயவேலன் என்ற நண்பர் ஒருவர், 50 பெயர்களுடன் ஒரு வம்ச வரலாறை பட்டியலிட்டு மறுமொழியாகக் கொடுத்திருந்தார். மொழிபெயர்த்த எனக்குக்கூட அதில் 50 பெயர்கள் இருந்தது தெரியாது. மஹாபாரதத்தில் மொத்தம் எத்தனை மனிதர்கள்தான் வருவார்கள் என்று நினைத்தேன். அது ஒரு வரைபடமாகக் கிடைக்காதா என்று எண்ணினேன். இணையத்தில் தேடியதில் ஆங்கிலத்தில் ஒரு அருமையான படம் கிடைத்தது. அதுவும் முழுமையானது அல்ல. சுருக்கம் தான். பல தலைமுறைகளைக் காண்பிக்காமலேயே படமளித்திருந்தனர். அதை அப்படியே தமிழில் மொழிமாற்றம் செய்து கீழே தருகிறேன்.
படம் பெரிதாகத் தெரிய வேண்டுமென்றால் படத்தைச் சொடுக்கிப் பாருங்கள். அல்லது பின் வரும் லிங்க்கைச் சொடுக்கி படத்தைத் தரவிறக்கி (Download) ப்பார்த்தால் இன்னும் பெரிதாகப் பார்க்கலாம்.
கீழே ஆங்கிலத்தில் நான் இணையத்தில் கண்டெடுத்த படத்தை தருகிறேன்.