Monday, August 20, 2018

பிரம்மனின் கோபாக்னி! - சாந்திபர்வம் பகுதி – 256

Brahma's fire of wrath! | Shanti-Parva-Section-256 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 83)


பதிவின் சுருக்கம் : மரணம் குறித்துப் பீஷ்மரிடம் வினவிய யுதிஷ்டிரன்; நாரத முனிவர் மன்னன் அனுகம்பகனுக்குச் சொன்ன கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பிரம்மன் தன் கோபத்தீயால் உயிரினங்களை எரித்தது; அத்தீயைத் தணிக்கப் பிரம்மனிடம் சென்ற ஸ்தாணு...


யுதிஷ்டிரன், "தங்கள் தங்கள் படைகளுக்கு மத்தியில் பூமியின் பரப்பில் கிடக்கும் பூமியின் தலைவர்களும், பெரும் வலிமையைக் கொண்டவர்களுமான இந்த இளவரசர்கள் இப்போது அசைவற்றவர்களாக இருக்கிறார்கள்.(1) இந்த வலிமைமிக்க ஏகாதிபதிகள் ஒவ்வொருவரும் பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். ஐயோ, சம ஆற்றலும் வலிமையும் கொண்ட மனிதர்களால் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(2) இந்த மனிதர்களைப் போரில் கொல்லக்கூடிய ஒருவரையும் நான் (இவ்வுலகத்தில்) காணவில்லை[1]. இவர்கள் அனைவரும் பேராற்றலையும், பெரும் சக்தியையும், பெரும்பலத்தையும் கொண்டவர்களாவர்.(3) பெரும் ஞானத்தைக் கொண்ட இவர்கள், இப்போது உயிரை இழந்து வெறுந்தரையில் கிடக்கிறார்கள். உயிரை இழந்து கிடக்கும் இந்த மனிதர்கள் அனைவரையும் குறிக்க இறந்தவர்கள் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.(4) பயங்கர ஆற்றலைக் கொண்ட இந்த மன்னர்கள் அனைவரும் இறந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இக்காரியத்தில், என் மனத்தில் ஓர் ஐயம் எழுகிறது. அசைவு எங்கே இருந்து வருகிறது? மரணம் எங்கே இருந்து வருகிறது?(5) இறப்பவன் யார்? (இறப்பது திரள் உடலா? நுண்ணுடலா? அல்லது ஆத்மாவா?) மரணம் எங்கே இருந்து வருகிறது? எக்காரணத்தினால் (வாழும் உயிரினங்களை) மரணம் கொண்டு போகிறது? ஓ பாட்டா, ஓ தேவனுக்கு ஒப்பானவரே, இதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(6)

Sunday, August 19, 2018

எழுபத்தோரு தனியுருக்கள்! - சாந்திபர்வம் பகுதி – 255

Seventy one entities! | Shanti-Parva-Section-255 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 82)


பதிவின் சுருக்கம் : ஐம்பூதங்களின் ஐம்பது குணங்களையும், மனத்தின் ஒன்பது குணங்களையும், புத்தியின் ஐந்து குணங்களையும், ஐம்பூதங்களையும் உள்ளடக்கிய எழுபத்தோரு தனியுருக்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர், "ஓ மகனே, ஓ பாவமற்றவனே, பூதங்களின் கணக்கீட்டைக்குறித்துத் தீவிற்பிறந்த முனிவரின் {துவைபாயனரின் / வியாசரின்} உதடுகளிலிருந்து விழுந்த வார்த்தைகளை மிக்கப் பெருமையுடன் மீண்டும் கேட்பாயாக.(1) (அறியாமைகள் அனைத்தையும் கடந்து) சுடர்மிக்க நெருப்பைப் போல இருந்த அந்தப் பெரும் முனிவர், புகையால் மூடப்பட்ட நெருப்புக்கு ஒப்பான தனது மகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார். ஓ மகனே, அவர் சொன்னவற்றில் கற்பிக்கப்பட்ட நானும் கூட (அறியாமையை அகற்றும்) அந்தக் குறிப்பிட்ட ஞானத்தை மீண்டும் விளக்கப் போகிறேன்.(2)

Saturday, August 18, 2018

புத்தியும், மனமும்! - சாந்திபர்வம் பகுதி – 254

The understanding and mind! | Shanti-Parva-Section-254 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 81)


பதிவின் சுருக்கம் : ஆசையை வெல்லும் காரியம் குறித்தும், மனம், புத்தி, புலன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்...


வியாசர், "மனிதனின் இதயத்தில் ஆசை {காமம்} என்றழைக்கப்படும் ஆச்சரியமான ஒரு மரம் இருக்கிறது. அது பிழை {மோகம்} என்றழைக்கப்பட்ட வித்தில் இருந்து பிறந்ததாகும். கோபமும், செருக்கும் அதன் பெரிய அடிமரமாக இருக்கின்றன. செயல்பாட்டு விருப்பம், (அதை வளர்க்கும் நீரைத் தக்க வைத்துக் கொள்ள) அதனடியைச் சுற்றி வடிநிலமாக {பாத்தியாக} இருக்கிறது.(1) அறியாமையே அம்மரத்தின் வேராகும், கவனமின்மை அதற்கு ஊட்டமளிக்கும் நீராக இருக்கிறது. பொறாமை அதன் இலைகளாக இருக்கிறது. முற்பிறவிகளின் தீச்செயல்கள் அதற்கு உயிர்வளத்தைக் கொடுக்கிறது.(2) தீர்மானமிழப்பு {மயக்கம்} மற்றும் கவலை ஆகியன அதன் கொப்புகளாக இருக்கின்றன; துயரம் அதன் பெரும் கிளைகளாக அமைகின்றன; அச்சம் அதன் முளையாக இருக்கிறது. (வெளிப்படையாகப் பல்வேறு பொருள்களில் உள்ள) ஏற்புடைய தாகம் அனைத்துப் புறத்தில் அதன் சுற்றிப் பிணைக்கும் கொடிகளாக அமைகிறது.(3)

யோகதர்மம்! - சாந்திபர்வம் பகுதி – 253

The virtue of yoga! | Shanti-Parva-Section-253 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 80)


பதிவின் சுருக்கம் : யோகதர்மம் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...


வியாசர், "சாத்திரங்களை அறிந்தோர், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களின் துணை கொண்டு, நுண்ணியவுடலை உடுத்திக் கொண்டதும், மிக நுட்பமானதும், திரள் உடலுக்குள் வசித்துக் கொண்டே அதனுடன் தொடர்பறுந்த நிலையில் இருப்பதுமான ஆத்மாவைக் காண்கிறார்கள்[1].(1) அடர்த்தியான திரளாக ஆகாயத்தின் ஒவ்வொரு பகுதியிலும் திரியும் சூரியக் கதிர்களின் இருப்பை அறிவால் உள்ளுணர முடியுமென்றாலும் வெறுங்கண்களுக்கு அவை தெரியாததைப் போலவே, இருப்பிலுள்ளவை {உயிரினங்கள்} தங்கள் திரள் உடல்களில் இருந்து விடுபட்டு அண்டத்தில் திரிந்து கொண்டிருப்பதைக் காண்பது மனிதக் கண்களின் உற்றறியும் திறனுக்கு அப்பாற்பட்டதாகும்[2].(2) சூரியனின் பிரகாசமான வட்டில் நீரின் எதிரொளியில் {பிரதிபிம்பத்தில்} தென்படுவதைப் போலவே, யோகியும் திரளுடல்களினுள் இருப்பிலுள்ள சுயத்தை அதன் எதிரொளியில் காண்கிறான்.(3)

Thursday, August 16, 2018

புலன்கள், தன்மாத்திரைகள், பூதங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 252

Senses, their objects and elements! | Shanti-Parva-Section-252 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 79)


பதிவின் சுருக்கம் : புலன்கள், தன்மாத்திரைகள் மற்றும் ஐம்பூதங்களுக்கிடையில் உள்ள உறவு; ஐம்பூதங்களின் குணங்கள் ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...


வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்து, அறம், பொருள் ஆகிய இரண்டு காரியங்களையும் நிறைவேற்றிய ஒரு சீடனிடம், திறம்பெற்ற ஓர் ஆசான் அத்யாத்மா குறித்து முன்சொன்ன பகுதியில் சொல்லப்பட்ட அனைத்தையும் முதலில் சொல்ல வேண்டும்.(1) ஐந்து பொருட்களை உள்ளடக்கமாகக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, ஒளி, நீர், ஐந்தாவதாகக் கணக்கிடப்படும் பூமி, பாவம், அபாவம் ஆகியற்றைக் கொண்டுள்ளது[1].(2) வெளியானது {நிரம்பாமல்} வெறுமையாக இருக்கும் இடைவெளியாகும். கேள்விப் புலன்கள் வெளியைக் கொண்டிருக்கின்றன. வடிவம் கொண்ட பொருள்களின் அறிவியலை அறிந்தவர்கள், வெளியானது ஒலியைத் தன் குணமாகக் கொண்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.(3)

Wednesday, August 15, 2018

வைராக்யம்! - சாந்திபர்வம் பகுதி – 251

Fortitude! | Shanti-Parva-Section-251 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 78)


பதிவின் சுருக்கம் : எவன் பிராமணன்? பிராமண நிலையை அடைவதெவ்வாறு? முக்திக்கு வழிவகுக்கும் மனோவுறுதி ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...


வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "மணம், சுவை மற்றும் பிறவகை இன்பங்களில் ஒருவன் எந்தப் பற்றையும் வெளிக்காட்டக்கூடாது. மேலும் அவன் ஆபரணங்களையும், மணம் மற்றும் சுவைப் புலன்களால் நுகரும் பிற பொருட்களையும் ஏற்கக் கூடாது. அவன் கௌரவம், சாதனை மற்றும் புகழில் பேராசை கொள்ளக்கூடாது. கருத்துடைய பிராமணனின் ஒழுக்கம் இதுவேயாகும்.(1) வேதங்கள் அனைத்தையும் கற்று, தன் ஆசானிடம் கடமையுணர்வுடன் பணி செய்து, பிரம்மச்சரிய நோன்பை நோற்றவனும், ரிக்குகள், யஜுஸ்கள் மற்றும் சாமங்கள் அனைத்தையும் அறிந்தவனுமான ஒருவன் மறுபிறப்பாளன் {பிராமணன்} ஆகமாட்டான்[1].(2) அனைத்து உயிரினங்களிடமும் சொந்தக்காரனைப் போல நடந்து கொள்பவனும், பிரம்மத்தை அறிந்தவனுமான ஒருவனே வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். ஆசையற்றவனாக, (ஆத்ம ஞானத்தில் நிறைவடைந்தவனாக) இருக்கும் ஒருவன் ஒருபோதும் இறப்பதில்லை. இத்தகைய ஒழுக்கமும், இத்தகைய மனோநிலையும் கொண்டவனே உண்மையில் மறுபிறப்பாளனாவான்.(3) கருணையற்றவனாகவும், ஆசையைக் கைவிடாதவனாகவும் இருக்கும் ஒருவன், பல்வேறு வகை அறச்சடங்குகளையும், தக்ஷிணையுடன் கூடிய பல்வேறு வேள்விகளையும் நிறைவு செய்வதால் மட்டுமே பிராமண நிலையை அடைந்துவிடமுடியாது. அனைத்து உயிரினங்களையும் அச்சுறுத்துவதையும், அனைத்து உயிரினங்களிடமும் அச்சங்கொள்வதையும் ஒருவன் நிறுத்தும்போதும், எதையும் விரும்பாமலும், எதையும் வெறுக்காமலும் இருக்கும்போதும், அவன் பிராமண நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(5)

Tuesday, August 14, 2018

ஆத்மஞானம்! - சாந்திபர்வம் பகுதி – 250

The Knowledge of Soul! | Shanti-Parva-Section-250 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 77)


பதிவின் சுருக்கம் : கடமைகள் அனைத்திலும் உயர்ந்த தவம்; ஆத்மஞானம்; ஆத்மஞானத்தை அடையும் வழி ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...


சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, "இவ்வுலகில் இருப்பனவற்றில் எந்தக் கடமை உயர்ந்ததோ, கடமைகள் அனைத்திலும் எது முதன்மையானதோ, அதை மதிப்பிற்குரிய நீர் எனக்குச் சொல்ல வேண்டும்" என்று கேட்டார்.(1)

Monday, August 13, 2018

ஞானம்! - சாந்திபர்வம் பகுதி – 249

The Knowledge! | Shanti-Parva-Section-249 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 76)


பதிவின் சுருக்கம் : ஞானம் மற்றும் ஞானியின் பெருமைகளைச் சுகருக்கு எடுத்துச் சொன்ன வியாசர்...


வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "ஒருவனைச் சூழ்ந்திருக்கும் பொருட்கள் புத்தியால் படைக்கப்படுகின்றன. ஆன்மாவானது, அவற்றுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்திருந்து அவற்றைக் கண்காணிக்கிறது. புத்தியே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறது. (பொருட்களின் உற்பத்திக்காக) மூன்று அடிப்படை குணங்களும் மாற்றமடைகின்றன. பலம்பொருந்திய க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மாவானது, அவற்றுடன் கலக்காமலேயே அவையனைத்தையும் கண்காணிக்கிறது.(1) புத்தியால் படைக்கப்படும் பொருட்கள் தங்கள் சொந்த இயல்பை அடைகின்றன. உண்மையில், சிலந்தியானது (தன் உடல் பொருளைக் கொண்டே) இழைகளைப் படைப்பதைப் போலவே, புத்தியால் படைக்கப்படும் பொருட்களும், புத்தியின் இயல்பைக் கொள்கின்றன.(2) யோகம் அல்லது அறிவால் விரட்டப்படும் குணங்கள் இல்லாமல் போவதில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அவை சென்ற பிறகு, அவை திரும்புவதற்கான குறியீடுகள் மட்டுமே காணப்படுவதில்லை (ஆனால் அவை உண்மையாக அழிந்ததற்கான எந்தச் சாட்சியமும் கிடையாது). ஞானத்தால் விரட்டப்படும்போது, அவை ஒருபோதும் திரும்பாமல் அழிந்தே போகின்றன என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.(3) ஒருவன் இவ்விரு கருத்துகளையும் முறையாகச் சிந்தித்து, எதைச் சரியென அவன் நினைக்கிறானோ அதன்வழியே சிறப்பாக முயற்சிக்க வேண்டும். அவன் அவ்வழியிலேயே மேம்பட்டு தன் சொந்த ஆன்மாவில் மட்டுமே புகலிடம் கொள்ள வேண்டும்[1].(4)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top