அஞ்சனம் | கண் மை, eyeliner |
அட்டிகை | கழுத்தணி, Necklace |
அண்டம் | பிரபஞ்சம், Universe, |
அகழி | பள்ளம்; மறை குழி; மறைகுழி, trench |
அரணி | நெருப்பை உண்டாக்குவதற்கான குச்சிகள், உராய்வதன் மூலம் தீப்பொறி உருவாக்கும் கருவி, sticks for making fire, pieces of pipal or mesquit wood, used for kindling the sacred fire by attrition |
அழுவம் | அரைத்திங்கள், பக்ஷம், fortnight |
அறைகூவல் | சவால், Challenge |
ஈகை | ஒன்றை வேண்டுபவர்க்கு, அவர் தேவையை அறிந்து இல்லை என்று கூறாமல் கொடுப்பது; கொடை, charity, gift, grant |
ஈட்டி | Spear, சூலாயுதம் |
எரிகொள்ளி | எரிகொள்ளி, flaming brand, |
எறிவேல் | தோமரம், ஈட்டி, எறி மெல்லீட்டு, Javelin |
ஏகாதிபதி | சக்கரவர்த்தி, Monarch, |
ஏவுகணை | Missile, பிண்டிபாலங்கள் |
கண்ணமுது | பாயசம், அரிசியும் பாலும் கலந்த பானம், rice boiled in milk |
கணை | அம்பு, arrow |
கன்னிகை | மணமாகாத கன்னிப் பெண், maiden |
கடகம் | காப்பு; கை வளை; கங்கணம்; bracelet |
கடைக்கோல் | கடைவதற்குப் பயன்படும் ஒரு கோல், a churning staff |
கதாயுதம் | தண்டாயுதம், தண்டம், mace, club |
கயிறு | வடம், சுருக்கு, பாசம், cord |
கவண் | உண்டைவில்; விசையுடன் பாய்; விசைவில் பொறி, catapult |
கவண்பொறி | உண்டிவில் போன்று கோட்டை மதில்களில் பொருத்தப்படும் ஒரு பொறி, catapult |
களிம்பு | காயத்தின் மேல் தடவப்படும் மருந்து, unguent |
காரிகை | பெண், பாவை, பாலிகை, வனிதை, damsel |
கூன்வாள் | வளைந்த வாள், Scimitar |
கைப்பற்றல் | பறிமுதல், confiscate, |
கோங்கு | Karnikara tree, கோங்கு மரம், கோங்கம் |
சம்மட்டி | mallet, இரும்பு உலக்கைகள் |
சிதைத்தல் | அழித்தல், சின்னாபின்னமாய்ச் சிதைப்பது, mangle |
சூலம் | ஈட்டி போன்ற ஆயுதம், lance |
செழிப்பு | ஐசுவரியம், Prosperity, |
செற்றம் | நீண்ட காலாமாக உள்ள பகை, குரோதம், Long standing rivalry, rancour
|
தகரி | பழங்காலத்தில் இருந்த பீரங்கி போன்ற ஒரு பொறி, cannon |
தண்டாயுதம் | தடி, தண்டம், கதாயுதம், club, mace |
தடி | stave |
தன்மை | அம்சம், aspect |
தலைவன் | எஜமான், தெய்வம், Lord, Master |
தீச்சொல் | சாபம், curse |
தீப்பேறு, தீயூழ் | துரதிர்ஷ்டம், ill luck |
தொனி | ஒலி, tone, sound |
நற்பேறு, நல்லூழ் | அதிர்ஷ்டம், Fortune, Good luck |
நாநயம் | சொல்திறமிக்க, Eloquent |
நிகருண்மை | உபமானம், standard of comparison, recognition of likeness; likeness, resemblance, parable |
நெற்றிப்பொட்டு | நெற்றியின் பக்கவாட்டில் இருபுறமும் இருக்கும் பொட்டு போன்ற குழி, temple |
பசப்புநயம் | கொஞ்சுதல், இன்னயம். blandishment |
படகம் | பெரிய மேளம், large drum |
பட்டாக்கத்தி | குத்துவாள், dagger |
பராசம் | இறகு படைத்த அம்பு போன்ற ஆயுதம், bearded dart |
பரிகம் | முள் பொருந்திய தண்டம், spiked club |
பற்றுறுதி | விசுவாசம், allegiance |
புகழ்கேடு | அபகீர்த்தி, Infamy |
புங்கம் | அம்பு {அ} கணையில் இருக்கும் இறகு, Wings of an arrow |
புரசமரம் | பலாசமரம், புனமுருக்கு, Indian coral tree, Kinshuka, palas-tree, butea frondosa |
பேடிசம் | பசப்புநயம், தான் நம்பாத, பின்பற்றாத விடயங்களை பிறரை பின்பற்றும்படி அறிவுறுத்துதல் அல்லது அவற்றைத் தான் பின்பற்றுவதாக நம்புதல் மற்றும் நம்பவைத்தல், போலித்தனம், பாசாங்கு, டம்பம், Hypocrisy, imposition, deception, dissimulation |
பேரரசன் | சக்கரவர்த்தி, Emperor |
பேரிகை | முரசு, Kettle-Drum |
பேறிலி, பேறிலாதவன் | துரதிர்ஷ்டசாலி, unfortunate, ill lucky person |
பேறுடையவன் | அதிஷ்டசாலி, fortunate |
போர்க்கோடரி | மழு, பரசு, battle-axe |
மங்கலமற்ற | அமங்களமான, inauspicious |
மதில் | சுற்றுச்சுவர், rampart |
மலைவீழாறு | மலையருவி, மலையில் இருந்து விழும் ஆறு, cataract |
மேற்புயம் | மேல்கை; மேல்கரம்; upper arm |
வாள் | கத்தி, Sword |
வேல் | ஈட்டி போன்ற ஆயுதம், lance |
வேலமரம் | ஈட்டி போன்ற ஆயுதம், Tala tree, Gum arabic tree |
வேள்வி | யாகம், Sacrifice, Yaga, Yagna |