சாந்தி பர்வத்தின் ஆபத்தர்மம் {ஆபத்தர்மாநுசாஸன பர்வம்} நிறைவடைகையில், மஹாபாரதத்தில் நான்கில் மூன்று பங்குக்குச் சற்றே குறைவான பகுதி நிறைவடைகிறது. மொத்தத்தில் எஞ்சியிருப்பது நான்கில் ஒரு பங்குக்குச் சற்று அதிகமாகப் பகுதி மட்டுமே. சாந்தி பர்வத்தின் மோக்ஷதர்மத்தைத் தொடங்கும் முன், நான் சமாளிக்க வேண்டிய சிரமங்களின் இயல்பைக் குறித்துச் சில சொற்கள் சொல்வது அவசியமாகப் படுகிறது.
முதற்கண், சாந்தி மற்று அனுசாசன பர்வங்களின் ஆங்கிலப் பதிப்பை அடையும் வழியில் உள்ள இலக்கியச் சிரமங்களைக் குறித்த கவனத்தைப் பெற விரும்புகிறேன். சாந்தி பர்வமானது மஹாபாரதம் எனும் மரத்தின் கனியைப் போன்றது என்று அதன் ஆசிரியராலேயே {வியாசராலேயே} (அனுக்ரமானிகா பர்வத்தில்) தனிச்சிறப்புடன் சொல்லப்படுகிறது. புலவரின் கல்வியும், மனோவியல் மற்றும் அறவியல் ஊகத்திறனும் இதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. யோகத்தின் கோட்பாடுகள் இதில் நிறுவப்படுகின்றன. தர்ம சாஸ்திரங்களின் விளைவுகள், இயல்பான வாக்கியங்களில் இதில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. சாந்தி பர்வத்தைப் புரிந்து கொள்ள அஃதை ஆழமாகப் படித்துணர வேண்டும். வெறும் பார்வையாகப் பார்ப்பது எந்த இன்பத்தையும் தராது. உணர்ந்து கொள்ளவும், பாராட்டவும் ஆழ்ந்த சிந்தனை தேவை. மூல சம்ஸ்கிருதத்திலேயே கூட, உரையாசிரியர்களுக்கு அறைகூவல் விடுக்கும் {சவால் நிறைந்த} பகுதிகளும், வாக்கியங்களும் இருக்கின்றன. இரண்டு வங்கப் பதிப்புகளில் {கே.பி.சின்ஹா மற்றும் பர்துவான் பதிப்புகள்} கே.பி.சின்ஹாவின் பதிப்பே சிறந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் பாபு {திருவாளர்} சின்ஹாவால் நியமிக்கப்பட்ட அறிஞர்கள் மறுக்கத்தக்க திட்டத்தைத் தேர்ந்தேடுத்துள்ளனர். அவர்கள், சிரமம் அளிக்கக்கூடிய வாக்கியங்க அனைத்தையும் அப்படியே முறைதவறாமல் புறக்கணித்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் சேர்த்த பாவங்களுக்கும், புறக்கணித்த பாவங்களுக்கும் {சேர்த்தல் மற்றும் நீக்கல்} பதில் சொல்ல வேண்டும் என்பது உண்மையே. புறக்கணித்த பாவங்கள் எண்ணிக்கையில் மிக அதிகமாக இருப்பதால் அவர்களது உழைப்பை அவர்கள் முழுமை செய்யவில்லை என்றாகிறது. பர்துவான் பதிப்பு பெரும்பிழைகள் உள்ளதாக இருக்கிறது. அனைத்து விளக்கங்களிலும் மிக அதிகமான பிழைகளைக் கொண்டதாக அஃது இருக்கிறது.
சாந்தி பர்வத்தில் உள்ள கருத்துகள் இந்து தத்துவஞானம் மற்றும் இந்து சமய சட்டங்களில் தனித்துவம் வாய்ந்தவையாகும். மூலத்தில் இருந்து முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்டாலும், அவற்றை ஆங்கில நாவுக்கு ஏற்றவாறு அமைக்க விரும்பும் மொழிபெயர்ப்பாளருக்கு, அவை மிகுந்த சிரமத்தைக் கொடுக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்ப்பதைப் பொறுத்தவரை, இஃது ஒரு மொழிபெயர்ப்பு என்ற வேறுபாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, கிழக்கத்திய சிந்தனைக்கு அந்நியமான வார்த்தைகளையும், வரிகளையும் அங்கேயும் இங்கேயும் இட்டு அழகுபடுத்தி, காதுக்கினிய எழுத்து நடையாக அமைப்பதைவிட வார்த்தைக்கு வார்த்தை பொருத்தமாக மொழிபெயர்ப்பதே மிகவும் விரும்பத்தக்கது என்று மேற்கத்திய அறிஞர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே ஏற்றுக் கொண்டனர். வேறுவிதமான {இதற்கு மாறான} பதிப்புகள் கிழக்கத்திய அறிஞர்களால் பயன்றறதைவிட இழிந்தவையாகக் கருதப்படுகின்றன எனும்போது, சொல்லுக்குசொல் நெருக்கமாக இருக்கும் பதிப்பின் மதிப்பானது, வரலாற்று, தத்துவ, மொழியறிவு மற்றும் பல்வேறு காரியங்களில் பெரிதும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும். முடிந்தவரை மூல சம்ஸ்கிருதப் பதிப்புக்கு உண்மையாக இதைத் தயாரிப்பதே என் முயற்சியாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு சுலோகத்திற்கு எண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மூலத்தை {மூல மொழியிலேயே} படிக்க விரும்பினாலும், உதவியில்லாமல் அதைச் செய்ய இயலாதவர்களுக்கு, இத்தகைய பதிப்பு உண்மையில் அருமதிப்பானது. ஆங்கில வாக்கிய வடிவங்கள், அல்லது அவற்றின் ஒருங்குவைப்புகள், பொதுவான ஆங்கில வாசகருக்கு அந்நியமாகவும், கடினமாகவும், ஏன் இயல்பற்றதாகவும் கூடத் தோன்றலாம். ஆனால் அவர், புதிய மொழியின் {மூல மொழியின்} மரபுக்கு அவசியம் தேவைப்படும் அத்தகைய மாற்றங்களுடன் கூடிய மூலத்தின் இலக்கிய மறுபதிப்பாக மாற்றமில்லாமலேயே அந்த வாக்கியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவரது கருத்துகளின் படி வழக்கமில்லாத இந்த வடிவம், அல்லது அவர் குறிப்பிடும் ஆங்கிலமற்ற ஒருங்குவைப்பு ஆகியன நேர்வது, எளிதாகப் படிக்கத்தக்க, சிறப்பான ஆங்கில வாக்கியத்தை அமைக்கத்தக்க திறன் மொழிபெயர்ப்பாளருக்கு இல்லை என்பதால் அல்ல. நவீன ஆங்கில உரையின் நெறிமுறைகளுக்கு மெய்நிகராக மிக எளிய வாக்கியத்தை அமைக்கும் மயங்கத்தைத் தடுக்க மொழிபெயர்ப்பாளர் அடிக்கடி மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. உண்மையென்னவென்றால், கிட்டத்தட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும், முடிந்தவரை மூலத்தில் உள்ள வரிசையை மாற்றாமல் ஆங்கிலப் பதிப்பிலும் தக்க வைத்துக் கொள்ளவே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதைச் செய்வதால் மொழிபெயர்ப்பாளரின் மொழிநடையானது, விமர்சகர்கள் சிலரைக் காயப்படுத்தலாம், இருந்தாலும், பழங்காலத்து மேதைகளின் தொகுப்புகளை நவீன நாவுகளுக்கு மறுஆக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழிகாட்டுவதற்காகக் கட்டளைகள் மற்றும் எடுத்துக் காட்டுகளால் திறன்மிக்க அறிஞர்கள் கற்றுக் கொடுத்த நெறிமுறைகளுக்கு மட்டுமே அவர் {இந்த மொழிபெயர்ப்பாளர் கங்குலி} கீழ்ப்படிந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை.
மேலும், மனம், ஆன்மா, யோகம், தர்மத்தின் இயல்பு போன்ற காரியங்களில் தத்துவ விவாதங்கள் நேரும் சாந்தி பர்வத்தின் பல பகுதிகளைச் சரியாகப் புரிந்து கொள்வதில் உள்ள சிரமங்கள் கிட்டத்தட்ட எண்ணிலடங்காதவை. இவற்றில் உரையாசிரியர்கள் தங்கள் கல்வித்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், ஆனால் இங்கே அவர்களுடைய கல்வி பயனற்றதாக இருக்கிறது. வரியின் வார்த்தைகளுக்கிடையில் அவற்றை நீட்டவும், குறிப்பிட்ட வார்த்தைகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கவும், தங்கள் அவதானிப்பை இடைசெருக முனைந்து, எங்கெல்லாம் முடியுமோ அங்கே தங்கள் பார்வைகளை உறுதி செய்யும் குறிப்புகளை ஸ்ருதிகள், உபநிஷத்துகள் மற்றும் சாத்திரங்களில் இருந்து வரிகளை எடுத்தாண்டு ஒரு தீர்மானத்திற்கு வருகின்றனர். இத்தகைய விளக்கங்கள், வாசகருக்கு உதவி செய்வதைவிட்டு, மேலும் குழப்பவே செய்கின்றன. மேலும், தெளிவான வாக்கியங்களைக் கூடக் கல்வித்திறனுடன் அடிப்படையில் எப்போதும் விளக்கப்படுகின்றன. மேலும் உரையாசிரியர்கள், ஏற்கனவே தாங்கள் ஏற்படுத்திக் கொண்ட கருத்துகளுடன் மூலத்தைப் பார்க்க ஆயத்தமாக இருப்பதால், அவர்களை நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக எப்போதும் நம்மால் எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
இலக்கியச் சிரமங்கள் முக்கியமாவை என்றாலும், பொறுமையாலும், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர்களின் உதவி மூலமும் அவற்றில் தேர்ச்சியடையலாம். சிக்கலான வாக்கியங்கள் நிறைந்த இத்தகைய பழைய ஆக்கங்களில் எந்தக் கருத்துவேறுபாடோ, நேரடி பிழையோ இருக்காது என்று எதிர்பார்க்க முடியாது. பல வாக்கியங்களின் ஆங்கிலப் பதிப்புகள் நிச்சயம் தற்காலிகமானவையாகவே இருக்கின்றன. இத்தகைய பணிகளில் தாங்களே முயற்சி செய்த அறிஞர்கள், இவ்வகையில் முதல் முயற்சியான இதில் தோன்றும் பிழைகளை நிச்சயம் மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன். துல்லியமாகவும், சரியாகவும் இருப்பதை உறுதி செய்ய உரிய கவனம் எடுத்துக் கொண்ட போதிலும், இப்பதிப்பில் பிழைகள் ஊர்ந்திருந்தால் என்னால் வருத்தப்பட மட்டுமே முடியும். ஒரு சம்ஸ்கிருத பழமொழி, "Yatne krite yadi na siddyati, ko-atra doshah" என்றிருக்கிறது.
எனினும், நான் எதிர் கொள்ளும் பெரும் சிரமம், இப்பணியை நிறைவு செய்வதற்கான பணத்தேவைதான். என் எளிய பணிகளைப் பரிவுடன் எப்போதும் விரும்பும் திரு.H.விட்டன் {Mr.H. Witton} அவர்கள், கனடாவின் ஹாமில்டனில் {நகரத்தில்} இருந்து, "ஒரு பணியில் பாதி வழி கடந்ததும், அதற்காகப் பெறக்கூடிய நிதி உதவியைவிட, அப்பணியின் தொடக்க நிலைகளில் பெறுவது எளிதென அஞ்சுகிறேன்" என்று சொல்கிறார். சரியாக என் வழக்கிலும் அதுவே நடக்கிறது. பணவகையிலான உதவிகளைத் தேடி நாட்டின் பெரும்பகுதிகளில் நான் மேற்கொண்ட அடுத்தடுத்த பயணங்களால் என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நிரந்தர நோய் எனும் நஞ்சு உள்வாங்கப்பட்டது. "எவன் தன் வீட்டில் மஹாபாரதம் ஓதுவதை நிறைவு செய்கிறானோ, அவன் இந்த உலகத்தைவிட்டுச் செல்ல வேண்டியிருக்கும்" என்று நன்கறியப்பட்ட ஒரு சொலவடை நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது. இஃது ஓதல், அல்லது படிப்பதில் ஈடுபடுபவர்கள் தங்கள் பங்குக்கு நீக்கல் மற்றும் சேர்த்தலில் ஈடுபடுவதால் ஏற்படும் பாவமாகும் எனச் சிலர் விளக்குகின்றனர். பக்திமான்கள், "உயர்ந்த தகுதியின் {புண்ணியத்தின்} விளைவால், அம்மனிதன், மகிழ்ச்சியற்ற உலகத்திலிருந்து மகிழ்ச்சியான உலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான்" என்று பாவித்து விளக்குகிறார்கள். இந்நாட்டில் அச்சுக்கலையின் அறிமுகத்திற்குப் பிறகு, புனிதப் படைப்புகள் அச்சகத்தைக் கடப்பதைக் காண பண்டிதர்கள் மறுத்தே வருகின்றனர். மேற்குறிப்பிட்ட பழமொழியே, ஒரு விரிவை அடைந்திருக்க வேண்டும். எந்தப் புனிதப்படைப்பின் பதிப்பையோ, மொழியாக்கத்தையோ நிறைவு செய்யும் எந்த மனிதனும், பிள்ளையற்ற நிலையில் இவ்வுலகத்தைவிட்டுச் செல்ல வேண்டியிருக்கும் {இறந்து போவான்} என்று சொல்லப்பட்டது. இதற்கான உண்மையான எடுத்துக்காட்டுகள் நிறைய இருக்கின்றன. எவருடைய மரணமும் என்னை இல்லாமல் செய்து விடும் என்று எதிர்பார்ப்பதற்கு எனக்கு எந்தச் சந்ததியும் இல்லை. நான் இறப்பதற்கு முன் என் பணியை நிறைவு செய்த மனநிறைவுடன் நான் இருப்பேன் என்றாலும், என் வழக்கிலும் அந்தச் சொலவடை உண்மையில் சரியாக இருக்கிறது என்றே நம்புகிறேன். இத்தகைய பணி நடைபெறும்போது மரணம் ஏற்படும் என்று முன்னறிவிக்காததால் முதல் பார்வையில் தெரிவது போல, அந்தப் பழமொழி அவ்வளவு கருணையற்றதாக இல்லை. எந்த வகையிலும் அஃது ஓர் உற்சாகமூட்டலே.
எனினும், உயிர் இருக்கும் வரையில் நான் ஓய மாட்டேன். தேவைப்படும் நிதியைக் கண்டடைய நான் என் சக்திகள் அனைத்தையும் திரட்டப் போகிறேன். முன்கூட்டியே இந்தப் பணியானது ஒரு ராஜாவுக்கோ, ஒரு பிச்சைக்காரனுக்கோ தகுந்ததாகவே இருக்கிறது. நான் ராஜா அல்ல. எனினும், வெட்கமில்லாமல் என்னால் பிச்சையெடுக்க முடியும். இந்தப் பாரத நிலத்தில், பழங்காலத்தில் பல உன்னத மனிதர்கள் தங்கள் நாடுகளையும் சாம்ராஜ்யங்களையும் தன்னார்வத்துடன் கைவிட்டு, தங்கள் வாழ்வை ஆதரித்துக் கொள்ளப் பிச்சையெடுத்து வாழ்ந்திருக்கின்றனர். என் வயிற்றை நிரப்பிக் கொள்ள ஏதுமில்லாத இப்பணிக்காக, என் முன்னுள்ள இத்தகைய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, அத்தகைய வாழ்வுமுறையையும் நிச்சயம் நான் மேற்கொள்வேன். நான் பிச்சைக்காரனாகி, அனைத்து நிலங்களிலும் உள்ள ஈகையாளர்கள் அனைவரிடமும் கோரிக்கை வைக்கப்போகிறேன்.
பல்வேறு வட்டார அரசுகள், மையஅரசு, மாநிலச் செயல் அதிகாரி ஆகியோரிடம் இருந்து நான் அடைந்திருக்கும் ஆதரவுக்காக நான் அவர்களுக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தியாவின் இளவரசர்கள் மற்றும் தலைவர்களுக்கும் நான் பட்டிருக்கும் நன்றிக்கடன் குறைந்ததல்ல. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சார்ந்தவர்களும், பெரும் புகழ்பெற்றவர்களுமான கிழக்கத்திய அறிஞர்கள் பலர், பரிவுடன் எனக்கு உதவியிருக்கிறார்கள், அவர்களில் சிலர் பணம் கொடுத்தும் உதவியிருக்கிறார்கள். அவர்களின் பரிவில்லாமல், நான் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை அடைவதில் நான் ஒருபோதும் வென்றிருக்கமாட்டேன். இந்தியாவின் தனி அதிகாரிகளும் எனக்குப் பேருதவி செய்திருக்கிறார்கள். எனக்கு நட்புக்கரம் நீட்டி உதவி செய்த நபர்களும், பிரமுகர்களும் மிக அதிகமாக இருப்பதால், குறிப்பிட்ட சிலரின் பெயர்களை மட்டும் குறிப்பிடுவது கசப்பானதாக இருக்கும். இருப்பினும் என்னிடம் மிக அன்பாக இருந்த சிலருடைய பெயரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்தப் பணியின் தொடக்கத்திலேயே சர் ஸ்ட்யூர்ட் பெய்லி {Sir Steuart Bayley}, சர் ஆக்லண்ட் கால்வின் {Sir Auckland Colvin}, ஜெனரல் ஸ்டுவர்ட் {General Stewart}, திரு.இல்பர்ட் {Mr. Ilbert}, சர் W.W.ஹண்டர் {Sir W. W. Hunter}, ஜெனரல் சர் ஜார்ஜ் செஸ்னே {General Sir George Chesney}, மற்றும் சர் சார்ல்ஸ் ஐட்சிசன் {Sir Charles Aitchison} ஆகியோர் அனைவரும் என்னிடம் நட்பு பூண்டார்கள். மிகத் தாராளமாகச் செய்யப்பட்ட அவர்களுடைய உதவி இல்லாமல் என் முதல்கட்டப் பணிகளையே கூட என்னால் சிரமமில்லாமல் கடந்திருக்க முடியாது. இரண்டாம் கட்டப் பணியின்போது, முன்பு போலவே எனக்குத் தொடர்ந்து உதவி செய்த புகழ்பெற்ற அதிகாரிகளைத் தவிர்த்து, டஃபரின் மற்றும் ஏவாவைச் சேர்ந்த மார்கிஸ் {Marquis of Dufferin and Ava}, சர் டோனல்ட் மெக்கன்ஸி வாலஸ் {Sir Donald Mackenzie Wallace}, ஜெனலரல் சர் பிரெட்ரிக் ராபரட்ஸ் {General Sir Frederick Roberts} , சர் சார்ல்ஸ் எலியட் {Sir Charles Elliott}, சர் ஜான் வேர் எட்கர் {Sir John Ware Edgar}, மற்றும் சர் ஆல்பிரட் கிராஃப்ட் {Sir Alfred Croft} ஆகியோரிடம் இருந்தும் நான் பொருள் உதவியைப் பெற்றேன். அதிகாரிகளைத் தவிர்த்து, காலஞ்சென்ற திரு. ராபர்ட் நைட் {Mr. Robert Knight}, திரு. J.O.B.சான்டர்ஸ் {Mr. J. O. B. Saunders} மற்றும் பிறரிடமிருந்தும் பெரும்பரிவையும், ஊக்கத்தையும் நான் பெற்றேன். ஐரோப்பிய பெருநிலத்தைச் சார்ந்த அறிஞர்களுக்கு மத்தியில் கிழக்கத்திய அறிவுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர்களான M.பார்த் {M. Barth} மற்றும் M. St. ஹிலெய்ர் {M. St. Hilaire} ஆகிய இருவர் மற்றும் ஜெர்மனியின் பேராசிரியர் ஜேகோபி {Professor Jacoby} ஆகியோரின் அன்பையும், உதவியையும் பெற்றேன். பிரஞ்சுக் குடியரசில் இருந்து நான் பெற்ற நன்கொடைக்காக, M.பார்த் {M. Barth} மற்றும் M.பார்தெலமி St. ஹிலெய்ர் {M. Barthelamy {St. Hilaire} ஆகியோரின் முயற்சிகளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எந்த வெளிநாட்டு பதிப்புக்கும், அதிலும் குறிப்பாக நிறைவு பெறாத ஒரு பதிப்புக்கு இத்தகைய உதவி கொடுக்கப்பட மாட்டாது எனும்போது, எனக்கு உதவுவதற்காகவே பிரஞ்சு அதிகாரிகளால் ஆதரவளிக்கும் விதிகள் துறக்கப்பட்டன. இங்கிலாந்திலிருந்து பேராசிரியர் மாக்ஸ் முல்லர் {Max Muller} மற்றும் டாக்டர் ரெயின்ஹோல்ட் ரோஸ்ட் {Dr. Reinhold Rost} ஆகியோரின் பேருதவியை அடைந்தேன். முன்னவர் {Max Muller} தன் கரத்தால் படியெடுக்கபட்ட ஆதிபர்வ முதல் பகுதிகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பையனுப்பி எனக்கு வழிகாட்டினார். இத்தகைய உதவியில்லாமல், பெரும் இந்து காப்பியத்தின் ஓர் ஆங்கிலப்பதிப்பைப் பதிப்பிக்க நான் ஒருபோதும் துணிந்திருக்க மாட்டேன். டாக்டர் ரோஸ்ட் {Dr. Rost}-ஐ பொறுத்தவரையில், மஹாபாரதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முதல் கருத்தை முன்வைத்தமைக்காக நான் அவருக்குக் கடன் பட்டிருக்கிறேன். என் நிலையின் சிரமங்களால் என் சக்தி தடைபட்டபோதெல்லாம் பரிவு நிறைந்த ஆலோசனையுடன் கூடிய அவரது அன்பான ஒரு கடிதம், இருள் மற்றும் உற்சாகமற்ற நிலை ஆகிய அனைத்தையும் விலக்கி உடனே என்னை நம்பிக்கையில் நிறைத்துவிடும். அமெரிக்காவிலிருந்து சான்பிரான்சிஸ்கோவின் திரு.Wm.எமீட் கோல்மன் {Mr.Wm. Emmette Coleman of San-Francisco}, கேம்பிரிட்ஜின் பேராசிரியர் லான்மன் {Professor Lanman of Cambridge, U.S.A.}, மாரிலாந்தின் பேராசிரியர் {Professor H. Reese of Maryland}, மற்றும் கனடாவிலிருந்து ஹாமில்டனைச் சேர்ந்த திரு.H.B.விட்டன் {Mr. H. B. Witton of Hamilton, Canada} ஆகியோரிடமிருந்து பொருளுதவியைப் பெற்றிருக்கிறேன்.
எனக்காக உதவ இத்தனை நபர்களும், பிரமுகர்களும் இருக்கும்போது நான் கவலை கொள்ளக் காரணமேதும் இல்லை. இதுவரை வங்கம் என் பணிக்கு சொற்ப உதவியை மட்டுமே செய்திருக்கிறது. மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தை வங்கமொழியிலும், சம்ஸ்கிருதத்திலும் நான் வெளியிட்ட போது, என் நாட்டுக்காரர்களிடம் {வங்கநாட்டாரிடம்} இருந்து நான் பெரும் அளவில் ஆதரவைப் பெற்றேன். என் நாட்டாரின் பரிவு மற்றும் அன்பை விட்டுக் கொடுக்க நான் ஏதும் செய்துவிடவில்லை. இந்து சாத்திரங்களை அந்நிய நாக்குக்கு ஏற்ப மொழிபெயர்க்கும் ஒவ்வொரு முயற்சியும் பக்தியற்ற செயலே என மரபு வழுவாதவர்களிடம் ஓர் உணர்விருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய உணர்வைக் கொண்ட என் நாட்டவர்களிடம், இக்காரியத்தைக் கவனமாகக் கருத்தில் கொள்ளும்படி நான் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன். இந்து மதம், மதம் மாற்றாததாக இருக்காலம். ஆனால், நமது சாத்திரங்களை மேலும் பரவலாக்கினால், மதமாற்றல் தொடர்பானவற்றை விட, மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொன்றும் வெளிய தெரியவரும். வங்கத்திலேயே கூடச் சம்ஸ்கிருதத்தில் உள்ள மஹாபாரதத்தைப் படிக்க இயலாத, வங்கத்தைப் படிக்க விரும்பாத வாசகர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்பது மறக்கப்படுகிறதா? ஆங்கில மொழியாக்கத்தின் துணையுடன் மூலத்தைப் படிப்பதற்கு இஃது உதவி செய்யாதா? இத்தகைய மொழிபெயர்ப்பினால் உண்டாகும் அரசியல் ஆதாயங்கள் அதிகமாக இருக்க முடியாது. முதல் திரட்டில் {சஞ்சிகையில்} வெளியிட்ட என் முகவுரையில், "ஆங்கிலேயர்கள், சிறந்த அரசின் நோக்கங்களுக்காக இந்திய இனங்கள் கொண்டுள்ள விருப்பங்கள் மற்றும் விழைவுகளைப் புரிந்து கொள்ள, பழங்காலத்தின் சம்ஸ்கிருத பெரும்படைப்புகளில் உள்ளதனைத்துடன் கூடிய சம்ஸ்கிருத கல்வியை மொழிபெயர்ப்பின் வழியே அவர்களுக்கு {ஆங்கிலேயர்களுக்குக்} கிடைக்கச் செய்யும் வழிமுறையையும் தீர்வெனும் வெளிச்சத்தில் நாம் காண வேண்டும். எனவே, இங்கிலாந்தில் உள்ள, அல்லது இந்தியாவில் உள்ள ஆங்கிலேயர்களுக்கு, மனு, யாஜ்ஞவல்கியர், வியாசர், வால்மீகி ஆகியோரைத் திறந்து காட்டும் எந்த முயற்சியும், நல்ல அரசு அமைவதற்கான மதிப்புமிக்கக் கொடையாகவே கருதப்பட வேண்டும்" என்று கூறியிருந்தேன்.
எனவே மரபுவழுவாதவர்களான என் நாட்டவர்கள், வியாசரின் பெரும்படைப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை பக்தியற்ற செயல் {பாவச்செயல்} என்றோ அவர்களைப் பொறுத்தவரையில் அது பயனற்றது என்றோ கருத வேண்டாம் என்று நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல, ஆளப்படுபவர்களைச் சிறப்பாகப் புரிந்து கொள்வதற்கு, ஆட்சியாளர்களுக்கு உதவி, நல்ல அரசு அமைய இஃது ஒரு கொடையாக இருக்கும். முடிவாக, வங்கம் மட்டுமல்லாமல் இந்தியாவைச் சார்ந்த என் நாட்டவர்கள் அனைவரிடமும், பணிவுடனும், மதிப்புடனும் கோருகிறேன். நமது நிலம், ஈகையின் நிலம் என்றே எப்போதும் சொல்லப்படுகிறது. ஒவ்வொருவராலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுடன் அனைவரும் முன்வந்தால், என் பணியைப் போன்ற இத்தகைய நூறு பணிகள் ஒவ்வொன்றையும் நூறு முறை நிறைவு செய்யலாம்.
- பிரதாப சந்திர ராய்
கல்கத்தா
செப்டம்பர் 5, 1891
குறிப்பு: இது {சாந்தி பர்வம் இரண்டாம் பாகப் புத்தகத்தின்} இரண்டாவது பதிப்பில் உள்ள முன்னுரையாகும். இதற்குப் பிறகு வந்த பதிப்புகளில், {பதிப்பக உரிமையாளரான} பிரதாப சந்திர ராய் அவர்களின் பெயரில் தாமே எழுதியதாகக் கங்குலி சொல்லியிருக்கிறார்.
இந்த ஆங்கில அறிக்கை இணையத்தில் இல்லாததால் இங்கே பதிகிறேன்.
Notice by Kisari Mohan Ganguli - in the second part of Santi Parva
"With the completion of the
Apaddharma of the Santi Parvan, a little less than three-fourths of the
Mahabharata has been completed. That which remains is a little more than a
fourth part of the whole. Before commencing the MokshadAarma of the Qanti it is
necessary for me to say a few words regarding the nature of the difficulties
with which I have to cope.
In the first place, I desire to
draw attention to the literary difficulties that lie in the way of an English
version of th Santi and of portions of the Anusasana. The Santi has been
characterised by the author himself (vide Anukramanika) as the fruit of the
Mahabharata-tree. The learning of the poet, and his capacity for speculations
on mental and moral philosophy, have been shown in it. The doctrines of the
yoga have been set forth. The results of the Dharnia-Sastras have been laid
down in brief, aphoristic sentences. To be understood, the Santi requires to be
deeply studied. A mere perusal will yield no pleasure. Deep thought is
necessary to apprehend and appreciate. In the original Sanskrit itself, there
are sections and verses that defy the commentators. Of the two Bengali
versions, K. P. Singha's is undoubtedly better. But then the scholars employed
by Babu Singha chose to proceed on a very objectionable plan. They
systematically ignored all such passages as gave them any difficulty. It is
true they have sins of commission as well to answer for as sins of omission. But
then the latter are so many in number as to have made their labours incomplete.
The Burdwan version is very faulty. It is replete with errors of every
description.
The ideas in the Santi are
peculiar to Hindu philosophy and Hindu ecclesiastical law. Even when fully
understood in the original, they present the greatest possible difficulty to
the translator who wishes to render them into the English tongue. "Western
scholars have long ago agreed that in translating from Sanskrit, a closely
literal version is much more desirable than any flowing writing agreeable to
the ear and embellished here and there, for keeping up the pretence of its
being a translation, with words and phrases peculiar to oriental modes of thinking.
The value of a closely literal version, for historical, philosophical,
philological, and various other purposes, is so great that a version of a
different character is looked upon by most Oriental scholars as worse than
useless. It has been my endeavour to assist at the production of as faithful a version
of the original Sanskrit as is possible. Each verse has been numbered. To those
desirous of studying the original but who cannot be expected to do it without
help, such a version is simply invaluable. The structure of the English sentence,
or its collocation, may appear to the general English reader as strange or
harsh or even unnatural. But then he should invariably take the sentence to be
a literal reproduction of the original with only such changes as are absolutely
needed by the idiom of the new language. The oddest structure, according to his
ideas, or any highly un-English collocation he may mark, is not due to any
inability on the part of the translator to produce a better and more readable
English sentence. Often it becomes very difficult for the translator to resist
the temptation of making an involved period more easy and more consonant with
the canons of modern English composition. The fact is, in almost every case,
the order of the original is sought to be preserved as much as possible in the English
version. In doing this, the translator may offend some critics of style, but
there can be no doubt that ho observes more obediently the only canon that
eminent scholars have taught, both by precept and example, for the guidance of
translators reproducing into modern tongues compositions of genius belonging to
ancient times.
The difficulties again of
correctly understanding many portions of the Santi where philosophical discussions
about the mind, the soul, the yoga, the nature of Dharma, and similar topics,
occur, are simply enormous. The commentators have showed much learning, but
then their learning is useless. They seek to interpolate their own observations
between words of the text, to stretch or limit the significations of particular
word, and conclude where they can with such citations from the Srutis, the
Upanishads, and Institutes, as seem to them to confirm their views. Such
explanations, instead of helping, only puzzle the reader. Often again, the plainest
sentences are interpreted as learnedly figurative. Altogether the commentators
cannot always be taken as faithful guides for their readiness to view the
original through the colored medium of preconceived ideas of their own.
The literary difficulties,
although grave, may be mastered with the aid of patience and of living
teachers. It cannot be expected that in interpreting such old works, abounding with
what have been called cruces, there will be no difference of opinion or even no
downright errors. The English versions of many passages are necessarily
tentative. As the first effort of the kind, scholars who have themselves
attempted such tasks will, I am sure, be inclined to pardon mistakes where these
do occur. If, in spite of the care taken for ensuring accuracy and correctness,
errors creep into the version, I can only lament. The Sanskrit adage says,
Yatne krite yadi na siddhyati, ho-atra doshah.
The greatest difficulty, however,
with which 1 have to contend is the want of funds io carry on the enterprise to
its completion. Mr. H. Witton, who has ever taken a sympathetic interest in my
humble labours, writing to me from Hamilton, Canada, says: "I am afraid
that it is easier to secure financial assistance in the inceptive stages of an
enterprise than when it has passed the half-way stage." That is precisely
my case. My successive tours through a great part of the country in search of
pecuniary aid have broken down my health. The poison of permanent disease has
been imbibed. There is a well-known saying current amongst us, that he who
succeeds in causing the recitation of the Mahabharata to be completed in his
house has to depart from this world. This is explained by some as due to the
sins of omission and commission on the part of the reciters or readers
employed. Pious men explain it on the supposition that the person is called
away, as the result of his high merit, from an unhappy to a happy world. Upon
the introduction of printing into this country, the Pundits refused to see the
sacred works pass through the Press. The adage referred to above received an
expansion. Every man, it came to be said, who would complete the publication or
translation of any sacred work, would have to depart from this world in a
childless state; Of actual examples of this, there have been many. . I have no progeny
the prospect of whose death would unman me. I only hope that the saying may be
literally verified in my case also, for then I shall have the satisfaction of
having completed my task before departing. The adage is not so unkind as one at
bhe first sight may take it, for it does not prophesy death during the progresa of such a work. That at any rate is an encouragement.
As long, however, as life
remains, I will not spare myself. I will tax all my energies in finding the
funds necessary. The ivork is pre-eminently one which suits a Rajah or a
mendicant. I am not a Rajah. I can, however, without shame, betake myself to
mendicancy. Many nobler men in antiquity, in this land of Bharata, voluntarily
giving up kingdoms and empires, betook themselves to mendicancy for supporting
their lives. Surely, with such examples before me, I can betake myself to i
similar mode of life for a task that has nothing to do with the filling of my
own stomach. Let me be a mendicant then and appeal to the generous in all
lands.
To the different Local
Governments, the Supreme Government, and the Secretary of State, my obligations
have been very great for the support I have obtained from each of them. To the
native princes and chiefs, also, of India my obligations are scarcely less.
Many Oriental scholars of great repute, belonging to Europe and America, have
aided me with sympathy and a few of them with even money. Without their
sympathy I could never have succeeded in making the progress T have made.
Individual Officials, also, in India have helped me greatly. Where there have
been so many persons and personages all of whom have extended to me the land of
friendship and help, it would be invidious to mention particular names. For all
that, I cannot help naming a few who have been particularly kind to me. Sir
Steuart Bayley, Sir Auckland Colvin, General Stewart, Mr. Ilbert, Sir W. W.
Hunter, General Sir George Chesney, and Sir Charles Aitchison have all
befriended me from the very commencement of the undertaking. Without their
help, aceordpd to mo most liberally, I could never have succeeded in riding over
the difficulties of even the first stages of my work.
During the second stage, besides
all those distinguished Officials who continued to help me as before, I have
derived material aid from the Marquis of Dufferin and Ava, Sir Donald Mackenzie
Wallace, General Sir Frederick Roberts, Sir Charles Elliott, Sir John Ware
Edgar, and Sir Alfred Croft. Among non -officials I have derived much sympathy
and encouragement from the late lamented Mr. Robert Knight, Mr. J. O. B.
Saunders, and others. Amongst scholars in continental Europe I have received
much kindness and assistance from M. Barth and M. St. Hilaire, both so
well-known in the annals of Oriental learning, and Professor Jacobi of Germany.
It was to the exertions of M. A. Barth and M. Barthelamy St. Hilaire that I owe
the grant I have obtained from the Republic of France. The rule about patronage
was rescinded by the authorities in France for granting me help, for no foreign
publication, particularly an incomplete one, is accorded such favor. In England
I have obtained the greatest help from Professor Max Muller and Dr. Reinhold
Rest The former by sending me a translation he had transcribed in his own hand,
of the first few sections of the Adi Parvan, showed me the way. Without such
help I could never have ventured to undertake the publication of an English
version of the great Hindu Epic. As regards Dr. Rost, I owe him the first idea
of an English translation of the Mahabharata. Whenever again my energies have
flagged in view of the difficulties of my situation, a kind letter from him,
full of sympathy and advice, has instantly filled me with hope, dispelling all
gloom and cheerlessness. In America I have received material help from Mr. Wm.
Emmette Coleman of San-Francisco, Professor Lanman of Cambridge, U. S. A., Professor
H. Reese of Maryland, and Mr. H. B. Witton of Hamilton, Canada.
When I have so many persons and
personages to help me I have no reason to despair. As yet Bengal only has done very
little* for my enterprise. I had received the largest measure of support from
my own countrymen while issuing my Bengali and Sanskrit Mahabharata and
Ramayana. I have done nothing to forfeit the sympathy and kindness of my countrymen,
Amongst the orthodox, there seems to be a feel ing that every attempt to
translate the Hindu scriptures into a foreign tongue is an act of impiety. I
humbly ask those countrymen of mine who entertain such a feeling to carefully consider
the matter. The Hindu religion may not be proselytising. But objects other than
those connected with proselytiism, and every one of which is highly important,
may be served by publishing our scriptures more widely. Is it forgotten that in
Bengal itself there is a large class of readers unable to read the Mahabharata
in Sanskrit and unwilling to read it in Bengali? Will not the study of the
original itself be materially aided by the English translation ? Then again the
political advantages of such a translation cannot be inconsiderable. In the
preface put forth with the first fascicule, I said that "... Viewed also
in the light of a means to an end, the end, viz., of understanding the wishes
and aspirations of the Indian races for purposes of better government, the
study of Sanskrit may be dispensed with if all that is contained in the great
Sanskrit works of antiquity becomes obtainable by Englishmen through the medium
of translation. Any effort, therefore, that is made towards unlocking Manu and
Yajnavalkya, Vyasa and Valmiki, to Englishmen at home or in India, cannot but
be regarded as a valuable contribution to the cause of good Government."
To my orthodox countrymen,
therefore, I repeat that they should not view the English translation of the
great work of Vyasa as an act of impiety or that it is useless so far as they are
concerned. It is, as I said before, a contribution to the cause of good
government, as helping the rulers to better understand the ruled.
In conclusion I appeal humbly and
respectfully to all my countrymen, not of Bengal alone but of India. Ours, as I
have often said, is the land of charity. If all come forward with what each can
easily spare, a hundred such enterprises as mine may each be completed a
hundred times.
- Prataapa Chandra Raay
Calcutta,
September 5th, 1891.
September 5th, 1891.
Note: This notice is in the Second edition of Santi Parva - Part II. The editions of after this, contains the acknowledgement of Kisari Mohan Ganguli, that he himself wrote this piece in the name of the publisher Mr. Prataapa Chandra Raay.