Garuda Born! | Adi Parva - Section 23 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 11)
பதிவின் சுருக்கம் : பந்தயத்தில் வீழ்ந்த வினதை; கத்ருவுக்கு அடிமையான வினதை; கருடன் பிறந்தது; தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்பட்ட கருடன்...
சௌதி சொன்னார் "கடலைக் கடந்ததும், துரிதமான வேகம் கொண்ட கத்ரு தன் சகோதரி வினதையுடன் குதிரைக்கு அருகில் இறங்கினாள்.(1) அவர்கள் இருவரும் வேகமாக ஓடக்கூடிய குதிரைகளில் முதன்மையான அந்தக் குதிரை {உச்சைஸ்ரவஸ்}, சந்திரக்கதிர்களைப் போல உடல் முழுவதும் வெள்ளையாகவும், (வாலில்) கருமுடிகளுடன் இருந்ததையும் கண்டனர்.(2) குதிரையின் வாலில் நிறையக் கருமுடிகள இருப்பதைச் சுட்டிக்காட்டிய கத்ரு, மிகவும் வாட்டமுற்றிருந்த வினதையைத் தனது அடிமையாக்கிக் கொண்டாள்.(3) இப்படிப் பந்தயத்தில் தோற்று, அடிமைத்தனத்திற்குள் தான் புகுந்துவிட்டதை எண்ணி வினதை மிகவும் வருந்தினாள்.(4)
அதே வேளையில், தன் விருப்பப்படியே நினைத்த உருவெடுக்க வல்லவனும், நினைத்த இடத்திற்குச் செல்ல தகுந்தவனும், நினைத்த அளவிற்கு சக்தியைப் பெருக்கிக் கொள்ளத் தக்கவனும், காந்தி மிக்கவனும், பலசாலியுமான அந்தப் பெரும்பறவையான கருடன், அவனது {கருடனது} நேரம் வந்தவுடன்,(5) அண்டத்தின் அனைத்து புள்ளிகளையும் பிரகாசப்படுத்திக் கொண்டு, தாயின் உதவியில்லாமல் முட்டையை உடைத்துக் கொண்டு வெளிவந்தான்.(6) நெருப்புக் குவியல் போன்ற ஒளியுடன் அவன் பயங்கரமாகப் பிரகாசித்தான்.
மின்னலைப் போன்ற பார்வையுடனும், யுக முடிவின் நெருப்புக்கு ஒத்த காந்தியுடனும், இருந்த அந்தப் பறவையானவன் {கருடன்}, பிறந்தவுடனேயே வேகமாக வளர்ந்து, உருவத்தைப் பெருக்கிக் கொண்டு வானத்தில் பறந்தான்.
மூர்க்கமாகவும், மிகுந்த உணர்ச்சியுடனும் கர்ஜனை செய்த அவன் இரண்டாவது கடல் நெருப்பைப் {வடவாக்னி} போல அச்சந்தரும் வகையில் தோன்றினான்.(7,8) அவனைக் {கருடனை} கண்ட அனைத்துத் தேவர்களும் அச்சமுற்று, விபாவசுவிடம் (அக்னியிடம்) பாதுகாப்பை வேண்டினர். அவர்கள் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்த, பல உருவங்கள் கொண்ட அந்தத் தேவனிடம் {அக்னியிடம்} பணிந்து, இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்,(9) "ஓ அக்னி, உமது உடலை பெருக்காதே, எம்மை உட்கொண்டு விடுவாயோ? இதோ இந்தப் பெருங்குவியலான தழல்கள் அகலமாகப் பெருகிக் கொண்டே வருகின்றனவே" என்றனர்.(10)
அதற்கு அக்னி, "ஓ அசுரர்களைத் துன்புறுத்துபவர்களே, நீங்கள் நினைப்பது போல அல்ல இஃது. இவன் பெரும்பலம் வாய்ந்த கருடன். ஒளியில் என்னை ஒத்திருப்பவன்;(11) பெரும் சக்தி படைத்தவன்; வினதையின் மகிழ்வைப் பெருக்கப் பிறந்தவன். நீங்கள் காணும் பிரகாசமான ஒளிக்குவியல் உங்களுக்குள் இந்த மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.(12) இவன் கசியபரின் பெரும்பலம் பொருந்திய மகன்; நாகங்களை அழிப்பவன்; தேவர்களின் நன்மையில் ஈடுபடுபவன், தைத்தியர்களுக்கும், ராட்சசர்களுக்கும் எதிரியானவன்.(13) இவனைக் கண்டு சிறிதும் அஞ்சாதீர்கள். என்னுடன் வந்து பாருங்கள்" என்று தேவர்களுக்குச் சொன்னான்.(14)
தேவர்கள், கருடனைத் தூரத்தில் இருந்தே பார்த்து,(15) "முனிவன் நீயே (அனைத்து மந்திரங்களையும் அறிந்தவன்), வேள்விகளில் கிடைக்கும் அவிர்பாகத்தில் பெரும்பகுதியை பகிர்பவன் நீயே, எப்போதும் பிரகாசிப்பவன் நீயே, அசைவன, அசையாதன ஆகியவற்றின் தலைவன் நீயே, அனைத்தையும் அழிப்பவன் நீயே, அனைத்தையும் படைப்பவன் நீயே, ஹிரண்யகர்பன் நீயே, தட்சனாகவும், பிரஜாபதிகளாகவும் அனைத்தையும் படைப்பவன் நீயே,(16) இந்திரன் (தேவர்களின் தலைவன்) நீயே, குதிரை முகம் கொண்ட விஷ்ணுவான ஹயக்ரீவன் நீயே, கணை நீயே (திரிபுரத்தை எரித்த மஹாதேவரின் {சிவனின்} கையில் கணையாக இருந்த விஷ்ணு), நான்முகம் படைத்த பத்மஜன் {பிரம்மன்} நீயே, பிராமணன் (ஞானமுள்ளவன்) நீயே, அக்னி நீயே,(17) பவனன் (அண்டதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் தலைவன்) நீயே. அறிவு நீயே, எங்களை மயக்கும் மாயை நீயே, ஊடுருவும் ஆவி நீயே, தேவர்களுக்குத் தேவன் நீயே, பெரிய உண்மை நீயே, அச்சமற்றவன் நீயே, என்றும் மாறுதலில்லாதவன் நீயே, குணங்களற்ற (நிர்க்குணமான) பிரம்மம் நீயே,(18) கதிரவனின் சக்தி நீயே, சித்தத்தின் செயல்கள் நீயே, எங்கள் காப்பாளன் நீயே, தெய்வீகங்களின் கடல் நீயே, புனிதமானவன் நீயே, இருளின் {அறியாமையின்} தன்மைகளற்றவன் நீயே, உயர்ந்த ஆறு குணங்களின் சொந்தக்காரன் நீயே, எங்களால் போட்டிகளில் வெல்லப்படமுடியாதவன் நீயே,(19) உன்னிலிருந்தே எல்லாம் உற்பத்தியாயிற்று, அற்புதமான செயல்கள் செய்பவன் நீயே, இருந்தவை இல்லாதவை எல்லாம் நீயே, தூய அறிவு நீயே, கதிரவன் தன் கதிர்களால் ஒளி தருவது போல, எங்களுக்குக் காட்சி தருபவன் நீயே, அண்டத்திலுள்ள உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாம் நீயே,(20) சூரியனின் ஒளியை மறைப்பவன் நீயே, அனைத்தையும் அழிப்பவன் நீயே, அழிவது அழியாதது எல்லாமும் நீயே.
ஓ ஒளிரும் அக்னியே! கதிரவன் கோபத்தால் உயிரினங்கள் அனைத்தையும் சுட்டெரிப்பதைப் போல, அனைத்தையும் எரிப்பவன் நீயே,(21) ஓ பயங்கரமானவனே, பிரளயத்தில் நெருப்பால் எல்லாம் அழிந்தாலும் அழியாதவன் நீயே. ஓ விண்ணில் உலவும் பலம்பொருந்திய கருடா, எங்கள் பாதுகாப்பை உன்னிடம் வேண்டுகிறோம். ஓ பறவைகளின் மன்னா! {கருடா}, இயல்புக்கு மீறிய {அசாதரணமான} சக்தியும், நெருப்புக்கு நிகரான காந்தியும் கொண்டு, இருள் அணுகமுடியாத மின்னலைப் போலப் பிரகாசிப்பவன் நீயே, மேகங்களைத் தொடுபவன் நீயே, காரணமும் காரியமும் நீயே, வரங்களைத் தருபவனும், வெல்ல முடியாத வீரத்தைக் கொண்டவனும் நீயே,(22,23) ஓ தேவனே! புடம்போட்ட தங்கம்போல இந்த அண்டமே உன் காந்தியால் வெப்பமடைந்தது. உன்னைக்கண்ட அச்சத்தால் அங்குமிங்கும் தங்கள் வாகனங்களில் தேவலோகத்தில் பறந்து திரியும் உயர் ஆன்மத் தேவர்களைக் காப்பாயாக.(24) ஓ பறவைகளில் சிறந்தவனே! {கருடா}, அனைத்துக்கும் தலைவன் நீயே, கருணையுள்ள உயர் ஆன்ம முனிவர் கசியபரின் புதல்வன் நீயே, அண்டத்தின் மீது கோபங்கொள்ளாமல் கருணை கொள்வாயாக. யாவற்றுக்கும் தலைமையானவன் நீயே, கோபத்தைத் தணித்து, எங்களைக் காப்பாற்றுவாயாக.(25)
இடியின் முழக்கம் போன்ற உனது குரலால், ஓ பறவையானவனே {கருடா}, அண்டத்தின் பத்துப் புள்ளிகளையும், விண்ணையும், தேவலோகத்தையும், பூமியையும், எங்கள் இதயங்களையும் தொடர்ந்து நடுங்க வைக்கிறாய். அக்னியைப் போன்ற உனது இந்த உடலைச் சுருக்குவாயாக.(26) கோபமடைந்த யமனைப் போன்ற காந்தியுடன் உன்னைப் பார்க்கும்போது, எங்கள் இதயத்தில் அமைதியை இழந்து நடுங்குகிறோம்.(27) ஓ பறவைகளின் தலைவா! {கருடா}, உன் இரக்கத்தை வேண்டும் எங்களுக்கு உனது கருணையால் நன்மை செய்வாயாக. ஓ சிறப்புமிக்கவனே! {கருடா}, எங்களுக்கு இன்பத்தையும் நற்பேறையும் அளிப்பாயாக" என்று வேண்டினர் {தேவர்கள்}. இப்படித் தேவர்களாலும், முனிவர்களாலும் போற்றப்பட்ட அழகான இறகுகளைக் கொண்ட அந்தப் பறவையானவன் {கருடன்}, தனது சக்தியையும் காந்தியையும் குறைத்துக் கொண்டான்" {என்றார் சௌதி}.(28)
அதே வேளையில், தன் விருப்பப்படியே நினைத்த உருவெடுக்க வல்லவனும், நினைத்த இடத்திற்குச் செல்ல தகுந்தவனும், நினைத்த அளவிற்கு சக்தியைப் பெருக்கிக் கொள்ளத் தக்கவனும், காந்தி மிக்கவனும், பலசாலியுமான அந்தப் பெரும்பறவையான கருடன், அவனது {கருடனது} நேரம் வந்தவுடன்,(5) அண்டத்தின் அனைத்து புள்ளிகளையும் பிரகாசப்படுத்திக் கொண்டு, தாயின் உதவியில்லாமல் முட்டையை உடைத்துக் கொண்டு வெளிவந்தான்.(6) நெருப்புக் குவியல் போன்ற ஒளியுடன் அவன் பயங்கரமாகப் பிரகாசித்தான்.
மின்னலைப் போன்ற பார்வையுடனும், யுக முடிவின் நெருப்புக்கு ஒத்த காந்தியுடனும், இருந்த அந்தப் பறவையானவன் {கருடன்}, பிறந்தவுடனேயே வேகமாக வளர்ந்து, உருவத்தைப் பெருக்கிக் கொண்டு வானத்தில் பறந்தான்.
மூர்க்கமாகவும், மிகுந்த உணர்ச்சியுடனும் கர்ஜனை செய்த அவன் இரண்டாவது கடல் நெருப்பைப் {வடவாக்னி} போல அச்சந்தரும் வகையில் தோன்றினான்.(7,8) அவனைக் {கருடனை} கண்ட அனைத்துத் தேவர்களும் அச்சமுற்று, விபாவசுவிடம் (அக்னியிடம்) பாதுகாப்பை வேண்டினர். அவர்கள் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்த, பல உருவங்கள் கொண்ட அந்தத் தேவனிடம் {அக்னியிடம்} பணிந்து, இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்,(9) "ஓ அக்னி, உமது உடலை பெருக்காதே, எம்மை உட்கொண்டு விடுவாயோ? இதோ இந்தப் பெருங்குவியலான தழல்கள் அகலமாகப் பெருகிக் கொண்டே வருகின்றனவே" என்றனர்.(10)
அதற்கு அக்னி, "ஓ அசுரர்களைத் துன்புறுத்துபவர்களே, நீங்கள் நினைப்பது போல அல்ல இஃது. இவன் பெரும்பலம் வாய்ந்த கருடன். ஒளியில் என்னை ஒத்திருப்பவன்;(11) பெரும் சக்தி படைத்தவன்; வினதையின் மகிழ்வைப் பெருக்கப் பிறந்தவன். நீங்கள் காணும் பிரகாசமான ஒளிக்குவியல் உங்களுக்குள் இந்த மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.(12) இவன் கசியபரின் பெரும்பலம் பொருந்திய மகன்; நாகங்களை அழிப்பவன்; தேவர்களின் நன்மையில் ஈடுபடுபவன், தைத்தியர்களுக்கும், ராட்சசர்களுக்கும் எதிரியானவன்.(13) இவனைக் கண்டு சிறிதும் அஞ்சாதீர்கள். என்னுடன் வந்து பாருங்கள்" என்று தேவர்களுக்குச் சொன்னான்.(14)
தேவர்கள், கருடனைத் தூரத்தில் இருந்தே பார்த்து,(15) "முனிவன் நீயே (அனைத்து மந்திரங்களையும் அறிந்தவன்), வேள்விகளில் கிடைக்கும் அவிர்பாகத்தில் பெரும்பகுதியை பகிர்பவன் நீயே, எப்போதும் பிரகாசிப்பவன் நீயே, அசைவன, அசையாதன ஆகியவற்றின் தலைவன் நீயே, அனைத்தையும் அழிப்பவன் நீயே, அனைத்தையும் படைப்பவன் நீயே, ஹிரண்யகர்பன் நீயே, தட்சனாகவும், பிரஜாபதிகளாகவும் அனைத்தையும் படைப்பவன் நீயே,(16) இந்திரன் (தேவர்களின் தலைவன்) நீயே, குதிரை முகம் கொண்ட விஷ்ணுவான ஹயக்ரீவன் நீயே, கணை நீயே (திரிபுரத்தை எரித்த மஹாதேவரின் {சிவனின்} கையில் கணையாக இருந்த விஷ்ணு), நான்முகம் படைத்த பத்மஜன் {பிரம்மன்} நீயே, பிராமணன் (ஞானமுள்ளவன்) நீயே, அக்னி நீயே,(17) பவனன் (அண்டதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் தலைவன்) நீயே. அறிவு நீயே, எங்களை மயக்கும் மாயை நீயே, ஊடுருவும் ஆவி நீயே, தேவர்களுக்குத் தேவன் நீயே, பெரிய உண்மை நீயே, அச்சமற்றவன் நீயே, என்றும் மாறுதலில்லாதவன் நீயே, குணங்களற்ற (நிர்க்குணமான) பிரம்மம் நீயே,(18) கதிரவனின் சக்தி நீயே, சித்தத்தின் செயல்கள் நீயே, எங்கள் காப்பாளன் நீயே, தெய்வீகங்களின் கடல் நீயே, புனிதமானவன் நீயே, இருளின் {அறியாமையின்} தன்மைகளற்றவன் நீயே, உயர்ந்த ஆறு குணங்களின் சொந்தக்காரன் நீயே, எங்களால் போட்டிகளில் வெல்லப்படமுடியாதவன் நீயே,(19) உன்னிலிருந்தே எல்லாம் உற்பத்தியாயிற்று, அற்புதமான செயல்கள் செய்பவன் நீயே, இருந்தவை இல்லாதவை எல்லாம் நீயே, தூய அறிவு நீயே, கதிரவன் தன் கதிர்களால் ஒளி தருவது போல, எங்களுக்குக் காட்சி தருபவன் நீயே, அண்டத்திலுள்ள உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாம் நீயே,(20) சூரியனின் ஒளியை மறைப்பவன் நீயே, அனைத்தையும் அழிப்பவன் நீயே, அழிவது அழியாதது எல்லாமும் நீயே.
மூர்க்கமான கருடன் |
இடியின் முழக்கம் போன்ற உனது குரலால், ஓ பறவையானவனே {கருடா}, அண்டத்தின் பத்துப் புள்ளிகளையும், விண்ணையும், தேவலோகத்தையும், பூமியையும், எங்கள் இதயங்களையும் தொடர்ந்து நடுங்க வைக்கிறாய். அக்னியைப் போன்ற உனது இந்த உடலைச் சுருக்குவாயாக.(26) கோபமடைந்த யமனைப் போன்ற காந்தியுடன் உன்னைப் பார்க்கும்போது, எங்கள் இதயத்தில் அமைதியை இழந்து நடுங்குகிறோம்.(27) ஓ பறவைகளின் தலைவா! {கருடா}, உன் இரக்கத்தை வேண்டும் எங்களுக்கு உனது கருணையால் நன்மை செய்வாயாக. ஓ சிறப்புமிக்கவனே! {கருடா}, எங்களுக்கு இன்பத்தையும் நற்பேறையும் அளிப்பாயாக" என்று வேண்டினர் {தேவர்கள்}. இப்படித் தேவர்களாலும், முனிவர்களாலும் போற்றப்பட்ட அழகான இறகுகளைக் கொண்ட அந்தப் பறவையானவன் {கருடன்}, தனது சக்தியையும் காந்தியையும் குறைத்துக் கொண்டான்" {என்றார் சௌதி}.(28)
ஆங்கிலத்தில் | In English |