(http://www.hindunet.org/hindu_history/ancient/mahabharat/mahab_patnaik.html என்ற வலைத்தளத்தில்
Dr.K.N.S.பட்நாயக் ஆங்கிலத்தில் கொடுத்திருப்பதை
இங்குத் தமிழாக்கி வெளியிடுகிறோம்)
தற்போதிருக்கும் ஐரோப்பியா நாட்காட்டி கி.பி.7ல் வழக்குக்கு வந்தது. இந்தியா, பழங்காலத்தில் இருந்தே சந்திர நாட்காட்டியையே வழக்கத்தில் கொண்டுள்ளது. மேற்கத்திய நாட்காட்டி காலத்திற்குத் தகுந்தபடி அடிக்கடி பல மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் முதல் ஆறு மாதங்கள் 31 நாட்களுடனும், கடைசி ஆறு மாதங்கள் 30 நாட்களுடனும் இருந்துள்ளன.
மகாபாரதப் போர் நடந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் வேத ஆட்சிக்குட்பட்டே இருந்தது. அதில் இந்தியாவை மையமாகக் கொண்டு சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை ஒரு நாளாகக் கருதப்பட்டது. அதே போல, உலகின் மற்ற பகுதிகளும் இந்திய கால அட்டவணையே பயன்படுத்தின. ஆகையால் தான், பிரிட்டனில் (இங்கிலாந்தில்) நள்ளிரவு முதல் அடுத்த நாள் நள்ளிரவு வரை ஒரு நாளாகக் கருதப்பட்டது. இந்தியாவில் காலை 5.30க்கு சூரியன் உதிக்கும்போது பிரிட்டனில் நள்ளிரவு 12.00 ஆக இருக்கிறது.
பிறகு காலம் செல்ல செல்ல நாடுகளுக்கிடையே உண்டான பரஸ்பர முரண்பாட்டின் காரணமாக அனைத்தும் துண்டாகின {தொடர்பற்று மாறின}. வெள்ளையர்கள் இந்தியாவைக் கி.பி.1947 வரை 200 வருடங்கள் ஆண்டனர். வெள்ளையர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை என்றே நாள் கணக்கிடப்பட்டலாயிற்று. இதனால், நவீன கணக்கியலின் படி பல தவறுகள் ஏற்படுகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு வருட வித்தியாசத்தில் கொண்டு போய் முடிக்கின்றன.
மஹாபாரதக் கால அட்டவணையைத் தொடர்வதற்கு முன்னர் நாம் வேத காலச் சந்திர நாட்காட்டியைப் பற்றிச் சிறிது பார்ப்போம். அந்த நாட்காட்டியின்படி காலச் சுழற்சியின் அடிப்படைகளான இருபத்தேழு நட்சத்திரங்கள், பனிரெண்டு மாதங்கள் மற்றும் அறுபது வருடங்கள் ஆகியவற்றின் பெயர்கள் பின் வருமாறு.
தமிழ் | English | தமிழ் | English | தமிழ் | English | |||
01 | அஸ்வினி | Ashwini | 10 | மகம் | Magha | 19 | மூலம் | Moola |
02 | பரணி | Bharani | 11 | பூரம் | Poorva | 20 | பூராடம் | Poorvashadha |
03 | கார்த்திகை | Krutika | 12 | உத்திரம் | Uttara | 21 | உத்திராடம் | Uttarashadha |
04 | ரோகிணி | Rohini | 13 | அஸ்தம் | Hastha | 22 | திருவோணம் | Shravana |
05 | மிருகசீரிஷம் | Mruga | 14 | சித்திரை | Chitra | 23 | அவிட்டம் | Dhanishta |
06 | திருவாதிரை | Ardra | 15 | சுவாதி | Swati | 24 | சதயம் | Satabhisha |
07 | புனர்பூசம் | Punarvasu | 16 | விசாகம் | Vishakha | 25 | பூரட்டாதி | Poorvabhadra |
08 | பூசம் | Pushya | 17 | அனுஷம் | Anuradha | 26 | உத்திரட்டாதி | Uttarabhadra |
09 | ஆயில்யம் | Aslesha | 18 | கேட்டை | Jyeshta | 27 | ரேவதி | Revati |
மாதங்கள்
மாதம் (தமிழ்) | சமசுகிருதம் | செந்தமிழ் | In English | |
01 | சித்திரை | சைத்ர | மேழம் | Chaitra |
02 | வைகாசி | வைஸாயுகயு | விடை | Vaishakha |
03 | ஆனி | ஆநுஷி / ஜ்யேஷ்ட | ஆடவை | Jyeshta |
04 | ஆடி | ஆஷாட | கடகம் | Aashadha |
05 | ஆவணி | ஸ்யுராவண | மடங்கல் | Shravana |
06 | புரட்டாசி | ப்ரோஷ்டபதீ /பாத்யூரபதயூ | கன்னி | Bhadrapada |
07 | ஐப்பசி | ஆஸ்யுவிந | துலை | Ashwin |
08 | கார்த்திகை | கார்திக: | நளி | Kartika |
09 | மார்கழி | மார்கயூஸீயுர்ஷ | சிலை | Margasheersha |
10 | தை | தைஷ்யம்/ பவுஷ: | சுறவம் | Pausha |
11 | மாசி | மாக | கும்பம் | Maagha |
12 | பங்குனி | பாயுல்குயூந: | மீனம் | Phalguna |
வருடங்கள்
தமிழ் | English | தமிழ் | English | தமிழ் | English | |||
01 | பிரபவ | Prabhava | 21 | சர்வஜித்த | Sarvajittu | 41 | பிலவங்க | Plavanga |
02 | விபவ | Vibhava | 22 | சர்வதாரி | Sarvadhari | 42 | கீலக | Keelaka |
03 | சுக்கில | Sukla | 23 | விரோதி | Virodhi | 43 | சவுமிய | Sowmya |
04 | பிரமோதூத | Pramoodotha | 24 | விகிர்தி | Vikriti | 44 | சாதாரண | Sadharana |
05 | பிரசோத்பத்தி | Pajothpatthi | 25 | கர | Khara | 45 | விரோதிகிருது | Voridhikrutu |
06 | ஆங்கீரச | Agnirasa | 26 | நந்தன | Nandana | 46 | பரிதாபி | Paridhavi |
07 | ஸ்ரீமுக | Srimukha | 27 | விஜய | Vijaya | 47 | பிரமாதீச | Pramadicha |
08 | பவ | Bhava | 28 | ஜய | Jaya | 48 | ஆனந்த | Ananda |
09 | யுவ | Yuva | 29 | மன்மத | Manmatha | 49 | இராக்ஷஸ | Rakshasa |
10 | தாது | Dhata | 30 | துன்முகி | Durmukhi | 50 | நள | Nala |
11 | ஈசுவர | Eswara | 31 | ஏவிளம்பி | Havilambi | 51 | பிங்கள | Pingala |
12 | வெகுதானிய | Bahudhanya | 32 | விளம்பி | Vilhambi | 52 | காளயுக்தி | Kalayukti |
13 | பிரமாதி | Pramadi | 33 | விகாரி | Vikari | 53 | சித்தார்த்தி | Siddharthi |
14 | விக்ரம | Vikrama | 34 | சார்வரி | Sarvari | 54 | ரவுத்ரி | Roudri |
15 | விஷு | Vishu | 35 | பிலவ | Plava | 55 | துன்மதி | Durmati |
16 | சித்திரபானு | Chitrabhanu | 36 | சுபகிருது | Shubhakritu | 56 | துந்துபி | Dundubhi |
17 | சுபானு | Swabhanu | 37 | சோபகிருது | Sobhakruthu | 57 | உருத்ரோத்காரி | Rudhirodgari |
18 | தாரண | Tharana | 38 | குரோதி | Krodhi | 58 | இரத்தாக்ஷி | Rathakshi |
19 | பார்த்திப | Parthiva | 39 | விஸ்வாவசு | Vishwavasu | 59 | குரோதன் | Krodhana |
20 | விய | Vyaya | 40 | பரிதாவி | Paridhavi | 60 | அக்ஷய | Akshaya |
கலியுகம்
பிரமாதி வருடத்தில் சித்திரை மாத வளர்பிறை முதல் நாளில், வெள்ளிக்கிழமை அன்று (கி.மு. 3102 - 2 - 20) நேரம் 2-27-30 p.m.ன் போது கலியுகம் துவங்கியது.
இனி மகாபாரத நிகழ்வுகள்
மஹாபாரதச் சம்பவங்கள் கலியுகத்திற்கு முன்னரே {அதாவது துவாபர யுகத்திலேயே} நடந்தன.
1. கர்ணனின் பிறப்பு: மாசி (Magha) மாத வளர்பிறை முதல் நாளில் கர்ணன் பிறந்தான். அவன் {கர்ணன்} யுதிஷ்டிரனைவிட 16 வருடங்கள் மூத்தவன் என்று சொல்லப்படுகிறது.
2. பிரம்மகூடத்தில் உள்ள சப்தசிருங்க மலையை மன்னன் பாண்டு ஐப்பசி (Aswin) மாத வளர்பிறை ஐந்தாவது நாளில் அடைந்தான். இது யுதிஷ்டிரன் பிறந்து ஒரு வருடத்தில் நடந்தது.
3. யுதிஷ்டிரன் பிறப்பு: யுதிஷ்டிரன் பிரஜோத்பத்தி (Prajothpatti) வருடம், ஐப்பசி (Ashwin) மாத வளர்பிறை 5வது நாளில் கேட்டை (Jyeshtha) நட்சத்திரத்தில், தனுசு (Sagittarius) லக்கினத்தில், மதிய வேளையில் அபிஜித் (abhijit) முகூர்த்தத்தில் பிறந்தான். அது கலியுக ஆரம்பத்திற்கு 127 வருடம் 5 மாதம் 25 நாள் முன்னதாக நடந்தது. (அநேகமாகக் கி.மு. 3229 - 8 -15)
4. பீமன் பிறப்பு: பீமன் ஆங்கீரச (Agnirasa) வருடம், ஐப்பசி (Ashwin) மாதம் தேய்பிறை 9வது நாளில் மக (Magha) நட்சத்திரத்தில் மதிய வேளைக்குப் பிறகு பிறந்தான். அவன் யுதிஷ்டிரனை விட 1 வருடம் 19 நாட்கள் இளையவனாக இருந்தான்.
5. அர்ஜுனன் பிறப்பு: ஸ்ரீமுக (Srimukha) வருடம் பங்குனி (Phalguna) மாதம் பௌர்ணமி பகலில் உத்திரம்(uttara) நட்சத்திரத்தில் பிறந்தான். அவன் பீமனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவனாக இருந்தான்.
{பீமனை விட 1 வருடம் இளையவன்}{யுதிஷ்டிரனை விட 2 வருடம் இளையவன் }{கர்ணனை விட 18 வருடம் இளையவன்}
6. நகுலன் சகாதேவன் பிறப்பு: பவ (Bhava) வருடம், பங்குனி (Phalguna) மாதம் அமாவசை நாள் மதிய வேளையில் அசுவினி (Ashwini) நட்சத்திரத்தில் பிறந்தனர். அவர்கள் அர்ஜுனனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவர்களாக இருந்தனர்.
{அர்ஜுனனை விட 1 வருடம் இளையவர்கள்}{பீமனை விட 2 வருடம் இளையவர்கள்}{யுதிஷ்டிரனை விட 3 வருடம் இளையவர்கள் }{கர்ணனை விட 19 வருடம் இளையவர்கள்}
7. கிருஷ்ணன் பிறப்பு: ஸ்ரீ முக (Shrimukha) வருடம் ஆவணி (Shravana) மாதம் தேய்பிறை எட்டாம் நாள் {ரோகிணி நட்சத்திரம்} நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் பிறந்தான்.
8. துரியோதனன் பிறப்பு: பீமன் பிறந்த அடுத்த நாள் பிறந்தான். அந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் 99 கௌரவர்களும் அவர்களது ஒரு தங்கையும் பிறந்தனர். அதே போல, ஹிடிம்பன், பகன், மற்றும் கீசகன் ஆகியோர் அதே காலகட்டத்தில் மகம் மற்றும் சுவாதி நட்சத்திரங்களுக்கு இடையில் பிறந்தனர்.
9. மன்னன் பாண்டு சர்வதாரி (Sarvadhari) ஆண்டு, சித்திரை (Chaitra) மாத, வளர்பிறை உத்திரம் (Uttara) நட்சத்திரத்தில் இறந்தான். அப்போது அர்ஜுனன் பிறந்து 14 வருடங்களும் 7 நாட்களும், யுதிஷ்டிரன் பிறந்து 16 வருடங்களும் 6 மாதங்களும் 7 நாட்களும் ஆகியிருந்தன.
10. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குச் சர்வதாரி (Sarvadhari) வருடம், சித்திரை (Chaitra) மாதம் தேய்பிறை 13வது நாள் கொண்டு வரப்பட்டனர். அஃதாவது அவர்கள் தந்தை {பாண்டு} இறந்து 16 நாட்களுக்குப் பிறகு. சர்வதாரி வருடம் சித்திரை மாத தேய்பிறை 13வது நாளில் இருந்து வைகாசி (Vaisahakha) மாதம் வளர்பிறை 10வது நாள் வரை தொடர் 10 நாட்களுக்குப் பாண்டுவின் இறுதிச் சடங்குகள் நடந்தன. அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 16 வருடம், 6 மாதம், 28 நாளாகும்.
11. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 13 வருடங்கள் இருந்தனர். அதாவது சர்வதாரி வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளிலிருந்து, பிலவ (Plava) வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் வரை இருந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 29 வருடம் 6 நாள் 23 நாட்கள் ஆகும். பாண்டவர்கள் துரோணரிடம் வில்வித்தை பயின்றனர்.