Showing posts with label ராஜசூய ஆரம்ப பர்வம். Show all posts
Showing posts with label ராஜசூய ஆரம்ப பர்வம். Show all posts

Saturday, September 21, 2013

ஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பகை - சபாபர்வம் பகுதி 19

The enmity between Jarasanda and Krishna! | Sabha Parva - Section 19 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : சந்தகௌசிகர் ஜராசந்தனின் வருநலமுரைத்தல்; அதே போல ஜராசந்தன் பெரும் பலத்துடன் வளர்தல்; கம்சன் மரணத்தால் ஜராசந்தனுக்கு கிருஷ்ணனுடன் ஏற்பட்ட பகை; யாதவர்கள் ஜராசந்தனுடன் மோதுவது இல்லை என்று தீர்மானத்துடன் இருந்தது…

கிருஷ்ணன் தொடர்ந்தான், "இது நடந்த சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் பெரும் துறவியான அந்த மேன்மைமிகு சண்டகௌசிகர் மகத நாட்டுக்கு வந்தார்.(1) அந்த முனிவரின் {சண்டகௌசிகரின்} வருகையால் மிகவும் மகிழ்ந்த மன்னன் பிருஹத்ரதன், தனது அமைச்சர்கள், புரோகிதர், மனைவியர், மகன் {ஜராசந்தன்} ஆகியோருடன் அவரை வரவேற்கச் சென்றான்.(2) ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, அந்த முனிவருக்குக் கால் மற்றும் முகம் கழுவ நீர் கொடுத்து, அர்க்கியம் கொடுத்து, பிறகு அந்த மன்னன் {பிருஹத்ரதன்}, அவருக்கு {சண்டகௌசிகருக்குத்} தனது மகனுடன் {ஜராசந்தனுடன்} சேர்ந்த நாட்டையே கொடுக்க முன் வந்தான்.(3)

சுயம்புவால் உருவாக்கப்பட்ட கிரகதேவி ஜரை! - சபாபர்வம் பகுதி 18

Grahadevi created by the Self create! | Sabha Parva - Section 18 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : பிருஹத்ரதனிடம் ஜரை தன்னை அறிமுகம் செய்து கொள்ளல்; தான் கிரகதேவி என்று சொல்லல்; பிருஹத்ரதன் அந்த ராட்சசிக்கு மரியாதை செலுத்த ஒரு விழாவை ஏற்பாடு செய்து; தனது பிள்ளைக்கு ஜரையின் பெயரையும் சேர்த்து ஜராசந்தன் என்ற பெயரைச் சூட்டல்...

கிருஷ்ணன் தொடர்ந்தான், "மன்னனின் {பிருஹத்ரதனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த ராட்சசப் பெண் {ஜரை}, "நீ அருளப்பட்டிரு. ஓ மன்னர்களுக்கு மன்னா, நினைத்த வடிவை அடையக்கூடிய ராட்சசப் பெண்ணான நான் ஜரை என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன். ஓ மன்னா {பிருஹத்ரதா}, நான் அனைவராலும் வழிபடப்பட்டு மகிழ்ச்சியுடன் உனது இல்லத்தில் வாழ்ந்து வருகிறேன்.(1) ஒவ்வொரு நாளும் நான் ஒரு மனிதனின் இல்லத்தில் இருந்து மற்றொரு மனிதனின் இல்லத்திற்கு சென்று வருகிறேன். உண்மையில் நான் பழங்காலத்தில் சுயம்புவால் படைக்கப்பட்ட போது, கிருகதேவி (வீட்டில் குடியிருக்கும் பெண் தெய்வம்) என்று பெயரிடப்பட்டேன்.(2)

Friday, September 20, 2013

ராட்சசி ஜரையால் உயிர்பெற்ற ஜராசந்தன்! - சபாபர்வம் பகுதி 17

Jarasandha given life by Jara! | Sabha Parva - Section 17 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை ஜராசந்தனுக்கு எதிராக கிருஷ்ணன் தூண்டுதல்; ஜராசந்தன் யார் என்று யுதிஷ்டிரன் கேட்டல்; ஜராசந்தனின் பிறப்பு ரகசியத்தை கிருஷ்ணன் சொல்லல்…

வாசுதேவன், "பாரத குலத்தில் பிறந்தவன், அதிலும் குறிப்பாக குந்தியின் மகனாக இருப்பவன், என்ன செய்ய வேண்டும் என்பதை அர்ஜுனன் சொல்லிவிட்டான்.(1) நம்மை மரணம் எப்போது வந்தடையும்? இரவிலா, பகலிலா என்பதை நாம் அறியோம். போரில் இருந்து விலகுவதால் சாகா வரம் பெறுவோம் என்பதையும் எப்போதும் நாம் கேள்விப்பட்டதில்லை.(2) எனவே, விதிப்படி அனைத்து எதிரிகளையும் தாக்குவது மனிதர்களின் கடமையாகிறது. இது எப்போதும் நமது இதயத்துக்கு நிறைவைத் தருகிறது.(3) விதியின் காரணமாக வெறுப்படையாமல், நல்ல கொள்கையின் துணை கொண்டு பணியை மேற்கொண்டால் நிச்சயம் நாம் வெற்றி மகுடத்தை அடைவோம். இதே தகுதிகளைக் கொண்ட இரு தரப்புகள், போரில் ஒருவருக்கொருவர் மோதும்போது, யாராவது ஒருவர் சிறப்படைந்தே ஆக வேண்டும், இருவரும் வெல்லவோ அல்லது இருவரும் தோற்கவோ முடியாது.(4)

அர்ஜுனன் கொடுத்த ஊக்கம்! - சபாபர்வம் பகுதி 16

Arjuna's Motivation! | Sabha Parva - Section 16 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் ஜராசந்தனை எதிர்ப்பதைக் கைவிட்டுவிடலாம் என்று சொல்லல்; அர்ஜுனன் அதற்குச் சமாதானம் கூறல்…

யுதிஷ்டிரன், "ஓ கிருஷ்ணா, தகுந்த மாட்சிமையில் விருப்பம் கொண்டு, என் ஆற்றலை மட்டுமே நம்பி சுய நல நோக்கத்துடன் செயல்பட்டு, எப்படி என்னால் அவனை {ஜராசந்தனை} அழிக்க முடியும்?(1) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பீமனையும், அர்ஜுனனையும் எனது கண்களாகவும், உன்னை எனது மனமாகவும் நான் நினைக்கிறேன். எனது கண்களையும், மனத்தையும் இழந்து என்னால் எப்படி வாழ முடியும்?(2) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ஜராசந்தனை யமனாலும் வீழ்த்த முடியாதே! அவற்றுக்கு எதிராக என்ன வகையான ஆற்றலை உன்னால் வெளிப்படுத்த முடியும்?(3) இந்தக் காரியத்தை முடிக்க வில்லை என்றால், நாம் பேரழிவிற்குள் தள்ளப்படுவோம் என்பது உறுதியாகத் தெரிகிறது. எனவே, வெல்லப்பட முடியாத காரியத்தைச் செய்யக்கூடாது என்பதே எனது கருத்து.(4) ஓ கிருஷ்ணா, நான் அடிக்கடி நினைப்பதை நீ கேட்பாயாக. ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்தக் காரியத்தைச் செய்வதில் இருந்து ஒதுங்குவதே நமக்கு நன்மை என எனக்குத் தெரிகிறது. இன்று எனது இதயம் துயரால் பீடிக்கப்பட்டிருக்கிறது. ராஜசூயம் அடைய முடியாத சாதனையாக எனக்குத் தெரிகிறது" என்றான் {யுதிஷ்டிரன்}.(5)

எண்பத்தாறு மன்னர்கள் சிறையில்! - சபாபர்வம் பகுதி 15

Eighty six kings in Jail! | Sabha Parva - Section 15 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் கிருஷ்ணனை மெச்சுவது; கிருஷ்ணன் யுதிஷ்டிரனையும் ஜராசந்தனையும் ஒப்பிடுதல்; எண்பத்தாறு மன்னர்கள் சிறைப்பட்டிருப்பதை உரைத்தல்; ஜராசந்தன் நூறு மன்னர்களைப் பிடித்து சிவனுக்குப் பலி கொடுப்போவதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்; ஜராசந்தனை வீழ்த்தினால் தான் ஒருவன் மாமன்னனாக முடியும் என்பதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்...

யுதிஷ்டிரன், {கிருஷ்ணனிடம்}" நீ புத்திசாலி, யாரும் சொல்ல முடியாததைச் சொல்லிவிட்டாய். இந்த உலகத்தில் வேறு யாருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் தகுதி இல்லை.(1) தங்கள் நன்மையைக் கருதும் மன்னர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாருக்கும் மாட்சிமைமிக்க தகுதி கிடையாது. உண்மையில், மாமன்னன் {சக்கரவர்த்தி} என்ற பட்டத்தை அடைவதற்கரியதாகும்.(2) மற்றவர்களின் ஆற்றலையும், பலத்தையும் அறிந்தவர்கள் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதில்லை. உண்மையில் புகழத்தகுந்தவன், எதிரிகளுடன் போரில் ஈடுபட்டு, பாராட்டுகளைத் தானே தாங்கிக் கொண்டிருப்பவன் ஆவான்.(3) விருஷ்ணி குலத்தின் மேன்மையைத் தாங்கும் நீ, இந்த விரிந்த உலகம் போல் இருக்கும் மனிதர்களின் ஆசைகளும் மனப்பாங்குகளும், பல்வேறு வகையாகவும் விரிவானவையாகவும் இருக்கின்றன என்பதை அறிந்தவனாவாய். தன் இல்லத்தைவிட்டுப் பல பகுதிகளுக்கும் பயணிப்பதால் உண்டாகும் அனுபவத்தினாலும், உயர்ந்த கொள்கைகளாலும், முக்தி அடையப்படுகிறதே ஒழிய, சாதாரண ஆசைகளாலும் மனப்பாங்குங்களாலும் அடையப்படுவதில்லை. மன அமைதியே உயர்ந்த தகுதி என நான் கருதுகிறேன். அந்த உயர்ந்த தகுதியில் இருந்தே செழிப்புண்டாகிறது. நான் இந்த வேள்வியைச் செய்தால், உயர்ந்த வெகுமதியை அடையமாட்டேன்.(5)

Thursday, September 19, 2013

ஊரைவிட்டு ஓடிய கிருஷ்ணன்! - சபாபர்வம் பகுதி 14 ஆ

Krishna ran out of his city | Sabha Parva - Section 14 B | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம்)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




யாதவர்கள் மதுராவில் இருந்து துவாரகைக்கு ஏன் வந்தனர் என்பதற்கு காரணத்தைக் கிருஷ்ணன் சொல்லல்; ஜராசந்தன் சிறையில் அடைத்து வைத்திருக்கும் மன்னர்களைப் பற்றிச் சொல்லல்; ராஜசூயம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஜராசந்தனைக் கொல்ல வேண்டும் என்று சொல்லல்;

ஜராசந்தனுக்கு பயந்து கிருஷ்ணன்
 துவாரகைக்கு ஓடுதல்
கிருஷ்ணன், "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஹன்சன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பதினெட்டு நாள் போர் புரிந்து ராமனால் {பலராமனால்} வீழ்த்தப்பட்டான் {கொல்லப்பட்டது போல மயக்கமுற்றான்}. ஆனால், ஓ பாரதா, ஹன்சன் கொல்லப்பட்டான் என்று மக்கள் சொல்வதைக் கேட்ட டிம்பகன், ஓ மன்னா, ஹன்சன் இல்லாது தான் வாழ முடியாது என்று நினைத்தான். அதனால் அவன் யமுனையின் நீரில் குதித்துத் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டான். பிறகு எதிரி வீரர்களைக் கொல்லும் ஹன்சன், டிம்பகன் தன்னைத் தானே கொன்று கொண்டான் என்பதைக் கேள்விப்பட்டு, யமுனைக்கு சென்று, அதன் நீரில் தானும் குதித்தான். பிறகு, ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, ஹன்சனும், டிம்பகனும் கொல்லப்பட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட ஜராசந்தன் வெறுமையடைந்த இதயத்துடன் தனது நாட்டிற்குத் திரும்பினான். ஜராசந்தன் திரும்பியதும், ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, மதுராவிலேயே தொடர்ந்து வாழ ஆரம்பித்தோம். பிறகு ஹன்சனின் விதவை மனைவியும், ஜராசந்தனின் மகளுமான தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அழகானப் பெண், தனது தலைவனின் மரணத்துக்காக துக்கமடைந்து, தனது தந்தையைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினாள். அவள் "ஓ எதிரிகளைக் கொல்பவரே, எனது கணவரைக் கொன்றவர்களைக் கொல்லும்" என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தாள்.


பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்களது பெரும் செல்வத்தைப் பிரித்து, சிறு சிறு பகுதிகளாக்கி, ஒவ்வொரு பகுதியையும் எளிதாக சுமந்து செல்லும்படியாக்கி, ஜராசந்தனுக்குப் பயந்து மதுராவை விட்டு எங்கள் மைத்துனர்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு ஓடினோம். அனைத்தையும் சிந்தித்து நாங்கள் மேற்கு நோக்கி ஓடினோம்.

மேற்கில் ரைவத மலைகளால் அலகங்கரிக்கப்பட்டிருந்த குசஸ்தலி {Kusasthali} என்ற அழகான நகரத்தை அடைந்தோம். அந்த நகரத்தில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டோம். நாங்கள் அதன் கோட்டைகளை தேவர்களும் புகமுடியாதபடி மறுபடி கட்டினோம். அதன் உள் இருந்து பெண்கள் கூட சண்டையிடமுடியும் எனும் போது, அச்சமற்ற யாதவ வீரர்கள் எப்படிப் போரிடுவார்கள்? ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் இப்போது அந்த நகரத்தில்தான் வாழ்கிறோம். ஓ குரு குலத்தின் புலியே {யுதிஷ்டிரரே}, மலைகளில் முதன்மையான அந்த மலையைக் கடக்க முடியாது என்று கருதியும், ஜராசந்தனின் மீதிருந்த பயத்தைக் கடந்து வந்துவிட்டோம் என்று கருதியும், மதுவின் வழித்தோன்றல்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இப்படியே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பலமும் சக்தியும் பெற்றிருந்தாலும், ஜராசந்தனின் ஒடுக்குதலால், நாங்கள் மூன்று யோஜனை நீளம் கொண்ட கோமந்தா மலையை அடைய பணிக்கப்பட்டோம். ஒவ்வொரு யோஜனையின் இடைவெளியிலும் நூறு{100} வளைவுகளில் நூறு{100} வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு யோஜனையிலும் இருபத்தியோரு{21} வகையான ஆயுதம் தாங்கிய வீரர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வாயிலும் வீரமிக்க வீரர்களால் பாதுகாக்கப்படுகிறது. பதினெட்டு யாதவ பிரிவுகளில் வரும் இளையவர்கள், இந்தப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்கள் குலத்தில் பதினெட்டாயிரம் {18000} சகோதரர்களும், மைத்துனர்களும் இருக்கிறோம். அஹூகனுக்கு நூறு{100} மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் (வீரத்தில்) தேவர்களைப் போல இருக்கின்றனர். சாருதேஷ்ணன், அவனது சகோதரன் சக்கரதேவன், சாத்யகி, நான் {கிருஷ்ணன்}, ரோகிணியின் மகன் பலதேவன் {பலராமன்}, எனக்குச் சமமான எனது மகன் சம்பன் ஆகிய ஏழுபேரும் அதிரதர்கள் ஆவோம். எங்களைத் தவிர்த்து, மற்ற பலரும் இருக்கின்றனர். ஓ மன்னா, அவர்களின் பெயர்களையும் இப்போது சொல்கிறேன். கிருதவர்மன், ஆனந்ததிருஷ்டி, சமிகன், சமிதின்ஜயன், கங்கன், சங்கு, குந்தி ஆகிய எழுவரும் மஹாரதர்கள். அந்தக போஜனின் இரு மகன்களும், அந்த முதிர்ந்த மன்னனும் சேர்ந்த அந்த பெரும் சக்தி மிக்க வீரர்கள், ஒவ்வொருவரும் இடியை ஒத்தவர்களாவர். இந்த மஹாரதர்கள் அனைவரும் மத்திய நாட்டைத் தேர்ந்தெடுத்து, விருஷ்ணிகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.

துவாரகா,குசஸ்தலி நகரம் {Kusasthali}
ஓ பாரத குலத்தில் வந்த சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நீர் ஒருவரே மாமன்னன் {சக்கரவர்த்தி} ஆகும் தகுதி படைத்தவர். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நீர் உமது ஆட்சியை அனைத்து க்ஷத்திரியர்கள் மூலம் நிறுவ வேண்டும். ஆனால் இது எனது அனுமானமே. ஓ மன்னா, நீர் ராஜசூய வேள்வியைச் செய்ய வேண்டுமானால், பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தன் உயிருடன் இருக்கும் வரை அது ஈடேறாது. மலைகளின் மன்னனுக்கு உள்ளிருக்கும் ஒரு குகையில் கொல்லப்பட்ட பெரும் யானைகளின் உடல்களை சிங்கம் வைத்திருப்பது போல, ஒரு மலைக்கோட்டையில் பல எண்ணிலடங்கா ஏகாதிபதிகள், அவனால்{ஜராசந்தனால்} அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஓ அனைத்து எதிரிகளையும் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, மன்னன் ஜராசந்தன், ஒரு வேள்வியில், தனது கடும் தவத்திற்கு அலங்காரமாக, அந்த நூறு மன்னர்களை உமையின் கணவனும் தேவர்களுக்குத் தேவனுமான சிறந்தவருக்குப் {சிவனுக்குப்} பலி கொடுக்க விரும்பி அடைத்து வைத்திருக்கிறான். ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, அவன் {ஜராசந்தன்} வேள்வி சம்பந்தமான தனது நோன்பை நிறைவேற்றவே இப்படிச் செய்துவருகிறான். மன்னர்களை அவர்களது படைகளுடன் சேர்த்து தோற்கடித்து, அவர்கள் அனைவரையும் கைதிகளாக்கித் தனது நகருக்குக் கொண்டு வந்து, அந்தக் கூட்டத்தை பலவாகப் பெருக வைத்திருக்கிறான். ஓ மன்னா, ஜராசந்தனிடம் உள்ள பயத்தின் காரணமாக, ஒரு காலத்தில் நாங்களும் மதுராவை விட்ட ஓட வேண்டி வந்து, துவாராவதிக்கு {துவாரகைக்கு} வந்து சேர்ந்தோம். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் வேள்வியைச் செய்ய நினைத்தால், ஜராசந்தனால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மன்னர்களை விடுவித்து, அவனது {ஜராசந்தனது} சாவுக்கு ஒரு வழி செய்ய வேண்டும். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, அல்லது உமது பணி நிறைவடையாது. ஓ புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, உம்மால் ராஜசூயம் செய்யப்பட வேண்டுமானால், நீர் இதன்படியே செய்ய வேண்டும். வேறு வழியில்லை. இது, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது பார்வையில் சொல்லப்பட்டது. ஓ பாவமற்றவரே, நீர் நினைப்பதைச் செய்யும். இந்தச் சூழ்நிலையில், ஓ மன்னா, அனைத்தையும் சிந்தித்துப் பார்த்து, காரணங்களை குறித்துக் கொண்டு, எது சரி என்று நீர் நினைக்கிறீரோ அதை எங்களுக்குச் சொல்லும்," என்றான் {கிருஷ்ணன்}.

ஜராசந்தன் எனும் பெரும் தடை! - சபாபர்வம் பகுதி 14

Jarasandha - the bar! | Sabha Parva - Section 14 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு ராஜசூய வேள்வி செய்வதில் இருக்கும் தடைகளைக் குறித்துச் சொல்லல்; ஜராசந்தன், சிசுபாலன், பீஷ்மகன் எனப் பலரைப் பற்றி கிருஷ்ணன் சொல்லல்; யாதவர்கள் மதுராவில் இருந்து துவாரகைக்கு ஏன் வந்தனர் என்பதற்கு காரணத்தைக் கிருஷ்ணன் சொல்லல்; ஜராசந்தன் சிறையில் அடைத்து வைத்திருக்கும் மன்னர்களைப் பற்றிச் சொல்லல்; ராஜசூயம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஜராசந்தனைக் கொல்ல வேண்டும் என்று சொல்லல்…

கிருஷ்ணன், "ஓ மாமன்னா, ராஜசூய வேள்வி செய்வதற்கான அடிப்படைத் தகுதிகள் அனைத்தையும் நீர் கொண்டிருக்கிறீர். நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர், ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, இருப்பினும், நான் உமக்குச் சிலவற்றைச் சொல்கிறேன்.(1) இன்றைய உலகில் இருக்கும் க்ஷத்திரியர்கள் எல்லாம், முன்பு ஜமதக்னியின் மகன் ராமரால் {பரசுராமனால்} கொல்லப்பட்ட க்ஷத்திரியர்களைவிட (அனைத்திலும்) தாழ்ந்தவர்களே.(2) ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, ஓ பாரதக் குலத்தின் காளையே, க்ஷத்திரியர்கள் தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாகத் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு, விதிகளைத் தங்களுக்குள் நிறுவிக் கொண்டனர் என்பதையும், ராஜசூய வேள்வி செய்ய அவர்களுக்கு எவ்வளவு தகுதி இருக்கிறது என்பதையும் நீர் அறிவீர்.(3) பல்வேறு அரச பரம்பரைகளும், மற்ற சாதாரண க்ஷத்திரியர்களும், ஐலா மற்றும் இக்ஷவாகுவின் வழித்தோன்றல்களாகவே இருப்பார்கள். ஓ மன்னா, ஐலனின் வழித்தோன்றல்களும், இக்ஷ்வாகு குலத்தில் வந்த மன்னர்களும், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, இன்று நூற்றுக்கணக்கான தனித்தனி நாடுகளாகிவிட்டனர் என்பதை அறிந்து கொள்ளும்.(4,5) யயாதியின் வழித்தோன்றல்களும் போஜர்களும் குலம், எண்ணிக்கை மற்றும் சிறப்புகளிலும் பெரியவர்களாக இருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இறுதியில் அவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர்.(6)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்