Showing posts with label தியூத பர்வம். Show all posts
Showing posts with label தியூத பர்வம். Show all posts

Wednesday, October 30, 2013

அந்தணர்கள் செய்த வேலைநிறுத்தம் - சபாபர்வம் பகுதி 80

Brahmanas on strike | Sabha Parva - Section 80 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 08)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் சென்ற பிறகு துயரத்தில் இருக்கும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் வருவது; திருதராஷ்டிரன் பாண்டவர்கள் குறித்த அச்சத்தை சஞ்சயனிடம் தெரிவிப்பது; சஞ்சயன் அனைத்துக்கும் காரணம் உமது மகனே என்று சொல்லுவது; சில காரியங்களை விதுரன் சொன்னதாக திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது...

Dhritarashtra and Sanjaya

வைசம்பாயனர் சொன்னார், "பகடையில் தோற்று பாண்டவர்கள் வனம் சென்ற பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் பெருந்துயரத்தில் மூழ்கினான்.(1) அவன் அமைதியற்றவனாகக் கவலையுடன் அமர்ந்து, துயரத்தால் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அப்போது சஞ்சயன் அவனை {திருதராஷ்டிரனை} அணுகி,(2) "ஓ பூமியின் தலைவா, பூமி முழுவதையும், அதன் செல்வங்களையும் அடைந்து விட்டீர்; பாண்டவர்களையும் நாடு கடத்திவிட்டீர்; இன்னும் ஏன் துயரத்தில் இருக்கிறீர்?" என்று கேட்டான்.

Tuesday, October 29, 2013

துரோணர் பயந்தாரா? - சபாபர்வம் பகுதி 79

Did Drona fear? | Sabha Parva - Section 79 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 07)

பதிவின் சுருக்கம் : விதுரன் பாண்டவர்கள் எப்படிச் சென்றார்கள் என்பதை திருதராஷ்டிரனுக்குச் சொல்வது; தொடர்ந்து கெட்டசகுனங்கள் தோன்றுவது; நாரதர் தோன்றி பதினான்காம் வருடம் கௌரவர்கள் அழிவார்கள் என்று எச்சரிப்பது; துரியோதனன், கர்ணன், மற்றும் சகுனி ஆகியோர் துரோணரிடம் தஞ்சம் புகுவது; துரோணர் தன்னால் இயன்றவரை காப்பதாக உறுதியளிப்பது; திருதராஷ்டிரன் விதுரனிடம் மறுபடியும் பாண்டவர்களை அழைத்துவரும்படி சொல்வது...

Duryodhana, Karna, Sakuni and Drona

வைசம்பாயனர் சொன்னார், "பெரும் முன்னறியும் திறன் கொண்ட விதுரன் வந்தவுடன், அம்பிகையின் மகன் மன்னன் திருதராஷ்டிரன் தனது தம்பியிடம் {விதுரனிடம்},(1) "தர்மனின் மகன் யுதிஷ்டிரன் எப்படிச் சென்றான்? அர்ஜுனன் எப்படிச் சென்றான்? மாத்ரியின்மகன்களான அந்த இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} எப்படிச் சென்றனர்?(2) ஓ க்ஷத்தா {விதுரா} தௌமியர் எப்படிச் சென்றார்? சிறப்பு வாய்ந்த திரௌபதி எப்படிச் சென்றாள்? நான் அனைத்தையும் கேட்க விரும்புகிறேன். ஓ க்ஷத்தா, அவர்களது செயல்களை எனக்கு விளக்கிச் சொல்வாயாக" என்றான்.(3)

Sunday, October 27, 2013

குந்தியின் அழுகை | சபா பர்வம் - பகுதி 78

Kunti's lamentation | Sabha Parva - Section 78 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : திரௌபதி குந்தியிடமும் மற்ற பெண்களிடமும் பிரியாவிடை பெறுவது; குந்தி திரௌபதியைச் சமாதானப்படுத்தியது; பாண்டவர்களைக் கண்ட குந்தி துக்கம் கொண்டது; பாண்டவர்கள் குந்தியைச் சமாதானப்படுத்தியது, பாண்டவர்கள் கிளம்பியது; விதுரன் குந்தியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றது; திருதராஷ்டிரன் விதுரைரை அழைத்தது...

Draupadi, Kunti

வைசம்பாயனர் சொன்னார், "பின்பு அனைவரும் புறப்படத் தயாரான போது, சிறப்புமிக்கப் பிருதையிடம் {குந்தியிடம்} சென்று திரௌபதி பிரியாவிடை கோரினாள். துயரத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் மற்ற பெண்களிடமும் பிரியாவிடை கோரினாள்.(1) தகுதியுடையவர்கள் அனைவரையும் வணங்கி, ஆரத்தழுவி செல்ல அவள் {திரௌபதி} விரும்பினாள். பின்னர் பாண்டவர்களின் அந்தப்புரத்திற்குள் இருந்து ஒப்பாரியும், அழுகையும் பேரொலியுடன் எழுந்தது.(2) அவர்கள் பயணப்படுவதற்கு முன்னர், திரௌபதியைக் கண்ட குந்தி, மிகவும் துன்புற்றவளாக, துயரத்தால் அடைபட்ட குரலுடன் இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.(3)

பாண்டவர்கள் வெளியேறினர் | சபா பர்வம் - பகுதி 77

The Pandavas went away | Sabha Parva - Section 77 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் அனைவரிடம் விடை பெறுதல்; விதுரன் குந்தி தன்னிடம் இருக்கட்டும் என்று கோருதல்; பாண்டவர்கள் சம்மதித்தல்; விதுரன் யுதிஷ்டிரனுக்கு நீதிகளைச் சொல்லல்; பாண்டவர்கள் வெளியேறுதல்...

Pandavas came out

யுதிஷ்டிரன், "எனது முதிர்ந்த பாட்டாவிடமும் {பீஷ்மரிடமும்}, மன்னர் சோமதத்தரிடமும், பெரும் மன்னன் பாஹ்லீகரிடமும்,(1) துரோணர், கிருபர் ஆகியோரிடமும், அனைத்து மன்னர்களிடமும், அஸ்வத்தாமன், விதுரர், திருதராஷ்டிரர் மற்றும் திருதராஷ்டிரரின் அனைத்தும் மகன்களிடமும்,(2) யுயுத்சு, சஞ்சயன், மற்றும் சபையோர் அனவரிடமும் நான் பிரியாவிடையைக் கோருகிறேன். நான் அனைத்து பாரதர்களிடமும் பிரியாவிடை கோருகிறேன். நான் திரும்பி வந்து உங்கள் அனைவரையும் காண்பேன்" என்றான்".(3)

நகுலனும் சபதமேற்றான் | சபா பர்வம் - பகுதி 76

The vow of Nakula | Sabha Parva - Section 76 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : துச்சாசனன் பாண்டவர்களைப் பார்த்து எள்ளி நகையாடி, திரௌபதியிடம் தங்களுள் ஒருவரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லல்; பீமன் கோபம் கொள்ளுதல்; துரியோதனனின் நையாண்டி; பீமன் சபதத்தை உரக்கச் சொல்லல்; அர்ஜுனன் சபதமேற்றல்; சகாதேவன் பீமனின் சபதத்தை உறுதி கூறல்; நகுலன் சபதம் ஏற்றல்; பிறகு பாண்டவர்கள் திருதராஷ்டிரனை அணுகுதல்...


வைசம்பாயனர் சொன்னார், "பிறகு {பகடை ஆட்டத்தில்} தோல்வியுற்ற பிருதையின் {குந்தியின்} மகன்கள், வனவாசத்துக்குத் தயாரானார்கள். அவர்கள் {பாண்டவர்கள்} ஒருவர் பின் ஒருவராக, முறையான வரிசையில் தங்கள் அரச உடுப்புகளைக் களைந்து மான் தோல் உடுத்தினர்.(1) மான் தோல் உடுத்தப்பட்டு நாட்டை இழந்து, நாடு கடத்தலுக்குத் தயாராக இருந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களைக் கண்ட துச்சாசனன்,(2) "சிறப்புவாய்ந்த மன்னன் துரியோதனனின் முழு அரசாட்சி நடக்கத் தொடங்கிவிட்டது. பாண்டுவின் மகன்கள் வெற்றிகொள்ளப்பட்டு, பெரும் துயரத்தில் மூழ்கினர்.(3) அகலமான அல்லது குறுகலான பாதைகளில் சென்று எங்கள் குறிக்கோளை நாங்கள் அடைந்துவிட்டோம். இன்று நாங்கள் எங்கள் எதிரிகளைவிட செல்வத்திலும், அனைத்திலும் மேன்மையடைந்தோம்.(4) எங்கள் அரசாட்சி காலமும் மனிதர்கள் போற்றுதலுக்குரிய வகையில் இருக்கிறது. பிருதையின் {குந்தியின்} மகன்கள் அனைவரும் நிலைத்த நரகத்திற்குள் மூழ்கிவிட்டனர். அவர்கள் காலாகாலத்துக்கும் நாட்டையும் மகிழ்ச்சியையும் இழந்துவிட்டனர்.(5) செல்வத்தில் செருக்கு கொண்டு, திருதராஷ்டிரன் மகனை {துரியோதனனை} ஏளனம் செய்து சிரித்தவர்கள், இப்போது தோல்வியுற்று, தங்கள் செல்வத்தையெல்லாம் இழந்து கானகத்திற்கு செல்ல வேண்டியவர்களானார்கள்.(6)

பந்தயம் இதுதான் | சபா பர்வம் - பகுதி 75

This is the stake | Sabha Parva - Section 75 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனின் தூதுவர் யுதிஷ்டிரனிடம் சென்று மீண்டும் அழைத்து வருவது; சகுனி புதிய பந்தயம் பற்றிச் சொல்வது; யுதிஷ்டிரன் பந்தயத்தை ஏற்று, பகடையாட்டம் தொடங்கியது...


வைசம்பாயனர் சொன்னார், "புத்திசாலியான மன்னன் திருதராஷ்டிரனின் கட்டளைகளை ஏற்றுச் சென்ற அரசத் தூதுவன் {பிராதிகாமின்}, அந்த நேரத்தில் நெடுந்தூரம் சென்றிருந்த பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரனைச் சந்தித்து,(1) "உமக்குத் தந்தையைப் போன்றவரான உமது பெரியப்பா "சபை தயாராக இருக்கிறது. ஓ பாண்டுவின் மகனே, ஓ மன்னன் யுதிஷ்டிரனே, வந்து பகடையை வீசுவாயாக" என்ற சொற்களை உமக்கு சொல்லி அனுப்பினார்" என்றான்.(2)

காந்தாரி சொன்ன புத்திமதி | சபா பர்வம் - பகுதி 74

Gandhari's counsel to Dhritarashtra | Sabha Parva - Section 74 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : அறத்தின் வழி நடக்கும்படி திருதராஷ்டிரனுக்கு காந்தாரி அறிவுறுத்துவது; காந்தாரியை சொல்லை மறுத்த திருதராஷ்டிரன் பாண்டவர்களை மீண்டும் சூதாட அழைப்பது...

Dhritarashtra and Gandhari

வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஏகாதிபதி, அதன்பிறகு தான் அறம் சார்ந்த காந்தாரி, தனது மகன்கள் மேல் இருக்கும் அன்பால் துயரமடைந்து மன்னன் திருதராஷ்டிரனிடம்,(1) "துரியோதனன் பிறந்த போது, பெரும் புத்திகூர்மையுள்ள விதுரர், "குலத்தைக் கெடுக்கப் போகும் இவனை {துரியோதனனை} மறு உலகத்திற்கு அனுப்புவது நலம்." என்று சொன்னார்.(2) இவன் ஒரு குள்ளநரியைப் போல மீண்டும் மீண்டும் ஊளையிட்டான். இவன் நம் இனத்தின் அழிவை உறுதி செய்வான். ஓ குருக்களின் மன்னா, இஃதை இதயத்தில் நிறுத்துவீராக.(3) 

Saturday, October 26, 2013

பாண்டவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டனர் | சபா பர்வம் - பகுதி 73

Pandavas were asked to return | Sabha Parva - Section 73 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டனர் என்று கேள்விப்பட்ட துச்சாசனன், துரியோதனனிடம் விரைந்து சென்று சொல்வது; உடனே துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோர் திருதராஷ்டிரனைத் தனிமையில் சந்தித்து முறையிடுவது; பாண்டவர்களை மீண்டும் விளையாட அழைப்பது...

Duryodhana, Dhritarashtra, Dussasana

ஜனமேஜயன் சொன்னான், "தங்கள் ரத்தினங்கள் மற்றும் செல்வங்களுடன், திருதராஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் புறப்பட்டனர் என்று தெரிய வந்த போது திருதராஷ்டிரன் மகன்களின் உணர்வு எப்படி இருந்தது?" என்று கேட்டான்.(1)

Friday, October 25, 2013

இந்திரப்பிரஸ்தம் புறப்பட்ட பாண்டவர்கள் | சபா பர்வம் - பகுதி 72

Pandavas started to Indraprastha | Sabha Parva - Section 72 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 28)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் ஆணையை எதிர்பார்த்த யுதிஷ்டிரன்; சகோதர அன்பு தழைக்கட்டும் என்ற திருதராஷ்டிரன்; காண்டவப்ரஸ்தம் புறப்பட்ட பாண்டவர்கள்...

Dhritarashtra

யுதிஷ்டிரன் சொன்னான், "ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நீரே எங்கள் தலைவர். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடுவீராக. ஓ பாரதரே, நாங்கள் எப்போதும் உமக்குக் கீழ்ப்படிந்தே இருக்க விரும்புகிறோம்" என்றான்.(1)

பீமன் அமைதிப்படுத்தப்பட்டான் | சபா பர்வம் - பகுதி 71

Bhima was pacified | Sabha Parva - Section 71 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 27)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் திரௌபதியால் பிழைத்தனர் என்று சொல்லி கர்ணன் அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; மேலும் கோபம் கொண்ட பீமனை யுதிஷ்டிரன் சாந்தப்படுத்தி திருதராஷ்டிரனை அணுகுவது...

Yudhishthira and Bhimasena

கர்ணன் சொன்னான், "இந்த உலகில் அழகுக்காக பெயர் பெற்ற எந்தப் பெண்மணியும் (இந்த திரௌபதயைப் போல்) இதுபோன்ற செய்கையைச் செய்து நாம் கேள்விப்பட்டதில்லை.(1) பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் மகன்கள் கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் போது, இந்த திரௌபதி, பாண்டவர்களின் மீட்பவளானாள்.(2) உண்மையில், இந்த பாஞ்சால இளவரசி {திரௌபதி}, படகில்லாமல் துன்பக்கடலில் மூழ்கிக்கொண்டிருந்த பாண்டுவின் மகன்களுக்கு படகாகி, அவர்களைப் பாதுகாப்பாகக் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தாள்" என்றான்".(3)

Thursday, October 24, 2013

பாண்டவர்களை மீட்டாள் திரௌபதி | சபா பர்வம் - பகுதி 70

Draupadi rescued the Pandavas | Sabha Parva - Section 70 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 26)

பதிவின் சுருக்கம் : கர்ணன் மேலும் திரௌபதியை அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; தீய சகுனங்களை விதுரரும் காந்தாரியும் உணர்ந்து திருதராஷ்டிரனுக்கு உணர்த்துவது; திருதராஷ்டிரனிடம் இரண்டு வரங்கள் கேட்டு திரௌபதி பாண்டவர்களை மீட்பது...

Dhritarashtra and Draupadi

கர்ணன், "இந்தச் சபையில் உள்ள அனைவரிலும், பீஷ்மர், விதுரர், மற்றும் குருக்களின் ஆசான் (துரோணர்) ஆகியோர் சுதந்திரமானவர்களாக இருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில், இவர்கள்தான் எப்போதும் தங்கள் தலைவனை {திருதராஷ்டிரனை} துன்மார்க்கன் போலப் பேசி, எப்போதும் அவரைக் கண்டித்து, எப்போதும் அவரது {திருதராஷ்டிரரின்} செழிப்பை விரும்பாமலிருக்கிறார்கள்.(1) ஓ சிறந்தவளே {திரௌபதியே}, ஓர் அடிமை, அவனது மகன் மற்றும் அவனது மனைவி ஆகியோர் சுதந்திரமில்லாதவர்கள். அவர்கள் {அடிமைகள்} செல்வம் ஈட்ட முடியாது. அப்படியே ஈட்டினாலும் அஃது அவர்களின் தலைவருடையது. தனது கணக்கில் ஒரு உடைமையையும் சேர்த்துக் கொள்ள முடியாத ஓர் அடிமையின் {யுதிஷ்டிரனின்} மனைவியாவாய் நீ.(2) மன்னர் திருதராஷ்டிரரின் அந்தப்புரத்திற்குச் சென்று, அங்கிருக்கும் மன்னரின் உறவினர்களுக்குப் பணிவிடை செய்வாயாக. அதுவே உனக்குச் சரியான காரியம் என நாங்கள் வழிகாட்டுகிறோம். ஓ இளவரசி {திரௌபதி}, திருதராஷ்டிரரின் அனைத்து மகன்களும்தான் இப்போது உனக்குத் தலைவர்கள் ஆவர், பிருதையின் {குந்தியின்} மகன்கள் அல்ல.(3) 

Wednesday, October 23, 2013

எங்கள் அண்ணன் எங்கள் தலைவன் | சபா பர்வம் - பகுதி 69

Our elder brother is our lord | Sabha Parva - Section 69 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 25)

பதிவின் சுருக்கம் : திரௌபதியின் கேள்விகளுக்கு அச்சபை பதில் சொல்லாததுது; துரியோதனன், திரௌபதியிடம் உன் கணவன்மார்கள் யுதிஷ்டிரனைத் தங்கள் தலைவன் இல்லை என்று சொல்லட்டும், உன்னை அடிமை வாழ்வில் இருந்து விடுவிக்கிறேன் என்று கூறல்; பீமன் யுதிஷ்டிரன் எங்கள் தலைவனே என்று கூறல்...

Bhima

வைசம்பாயனர் சொன்னார் "துரியோதனன் மீதிருந்த பயத்தால், அன்றில் பேட்டைப் போல {பெண் விரலடிப்பான் பறவை போல}, பாவமாக அழுதுகொண்டு திரும்பத் திரும்பக் கோரிக்கை வைத்த திரௌபதியைக் கண்டும், அந்தச் சபையில் இருந்த மன்னர்கள் யாரும் நன்மையாகவோ தீமையாகவோ ஒரு வார்த்தையும் பேசவில்லை.(1) 

கேள்வியின் நாயகன் யுதிஷ்டிரனே | சபா பர்வம் - பகுதி 68

The authority of the question is Yudhishthira | Sabha Parva - Section 68 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 24)

பதிவின் சுருக்கம் : மன்னர்களிடமும், கௌரவர்களிடமும் திரௌபதி கேள்வி கேட்பது; பீஷ்மர் பதில் உரைக்க இயலாது என்றும், இந்தக் கேள்விக்கு பதிலை யுதிஷ்டிரனே சொல்ல வேண்டும் என்றும் சொல்வது...

Draupadi questionied Bhishma

திரௌபதி, "மனிதர்களில் மோசமானவனே, தீய மனதுடைய துச்சாசனா சற்று பொறுப்பாயாக. உயர்ந்த கடமையாக இருக்கும் ஒரு செயலை நான் செய்ய வேண்டும். நான் இதுவரை அதைச் செய்யவில்லை. இந்தப் பாவியின் {துச்சாசனனின்} பலம் நிறைந்த கரங்களால் வலுக்கட்டாயமாக இழுக்கப்படுவதால், நான் எனது உணர்வுகளை இழந்தேன்.(1) நான் இந்த குருக்களின் சபையில் இருக்கும் மரியாதைக்குரிய பெரியோர்களை வணங்குகிறேன். இதை நான் முன்கூட்டி செய்யாதது என் தவறாகாது" என்றாள்".(2)

Monday, October 21, 2013

மார்பைப் பிளந்து ரத்தம் குடிப்பேன் | சபா பர்வம் - பகுதி 67ஆ

I will tear open the breast and drink the life blood | Sabha Parva - Section 67b | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

பீமன், துச்சாசனனின் மார்பைப் பிளந்து உதிரம் குடிப்பேன் என்று சபதம் ஏற்பது; விதுரர் மறுபடி நியாம் கேட்பது; பிரகலாதன், சூதன்வான் மற்றும் விரோசனன் கதையை விதுரர் சொல்வது; கர்ணன் திரௌபதியை உள் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு துச்சாசனனிடம் சொல்வது; துச்சாசனன் திரௌபதியை இழுப்பது....

 கோபம் கொண்ட பீமன்
பீமன் சொன்னான் "உலகத்தின் க்ஷத்திரியர்களே, இந்த எனது வார்த்தைகளைக் கேளுங்கள். இது போன்ற வார்த்தைகளை மற்ற மனிதர்கள் யாரும் இதுவரை உச்சரித்ததில்லை, எதிர்காலத்திலும் யாரும் எப்போதும் இவற்றை உச்சரிக்க மாட்டார்கள். பூமியின் தலைவர்களே, இவ்வார்த்தைகளைப் பேசிவிட்டு, அவற்றை நான் நிறைவேற்றாமல் இருந்தால், இறந்த எனது மூதாதையர்கள் உலகம் எனக்குக் கிடைக்காமல் போகட்டும். போர்களத்தில் சக்தியை மட்டுமே பயன்படுத்தி, கொடிய மனம் கொண்ட துன்மார்க்கனான  இந்தப் பாவியின் மார்பைப் பிளந்து, இவனது {துச்சாசனனது} உயிர்மை கொண்ட ரத்தத்தைக் குடிக்காமல் போனேன் என்றால், எனது மூதாதையர்கள் உலகத்தை நான் அடையாமல் போகக் கடவேன்" என்றான்.


வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீமனின் இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட சபையோர் இருக்கையின் நுனியில் நின்றனர். அங்கே இருந்த அனைவரும் அவனைப் {பீமனைப்} பாராட்டி, திருதராஷ்டிரன் மகனை {துச்சாசனனை} நிந்தித்தனர். திரௌபதியின் மேனியில் இருந்து உருவப்பட்டு அந்த சபையில் சேகரிக்கப்பட்டிருந்த துணிகள் எல்லாம் உருவியதால் துச்சாசனன் களைப்படைந்து, வெட்கமடைந்து கீழே அமர்ந்தான்.

குந்தியின் மகன்களை அந்த நிலையில் கண்ட அந்தச் சபையிலிருந்த தேவர்களைப் போன்ற மனிதர்கள் (திருதராஷ்டிரன் மகனைப் பார்த்து) "சீ" என்றனர். ஒன்றுகலந்த அவர்களின் குரல் கேட்டவர்களை இருக்கையின் நுனியில் நிற்கச் செய்தது. அந்தச் சபையில் இருந்த நேர்மையான மனிதர்கள் அனைவரும், "அந்தோ! திரௌபதியின் கேள்விக்கு இந்தக் கௌரவர்கள் பதிலளிக்கவில்லை" என்று சொல்லி திருதராஷ்டிரனையும் நிந்தித்து பெரும் கூச்சல் எழுப்பினர்.

பிறகு நீதி நெறிகளின் அறிவியல் அறிந்த விதுரன், தனது கரங்களை அசைத்து, அனைவரையும் அமைதிப்படுத்தி, "இந்தச் சபையில் இருப்போரே, ஆதரவற்று அழுது கொண்டிருக்கும் திரௌபதி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறாள். நீங்கள் யாரும் பதிலளிக்கவில்லை. இது போன்ற நடத்தையால் அறமும் அறநெறிகளும் தண்டிக்கப்படுகின்றன. நெருப்பால் உட்கொள்ளப்பட்டவன் போல, துயரத்துக்கு ஆட்பட்ட மனிதன் நல்ல மனிதர்களின் சபையை அணுகுகிறான். அந்தச் சபையில் இருப்பவர்கள் அந்த நெருப்பைத் தணித்து, அவனை உண்மையாலும் அறநெறிகளாலும் குளிரச் செய்வர். பாதிக்கப்பட்ட மனிதன் சபையாரிடம் அறநெறி வழங்கும் தனது உரிமைகள் பற்றி கேட்கிறான். அப்போது அந்தச் சபையில் இருப்போர் விருப்பாலும் கோபத்தாலும் உந்தப்படாமல் அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும்.

மன்னர்களே, விகர்ணன் அவனது ஞானத்துக்கும் நீதிக்கும் தகுந்தவாறு அந்தக் கேள்விக்கு பதிலளித்திருக்கிறான். நீங்கள் சரியாக நினைப்பதை நீங்களும் பதிலாகச் சொல்ல வேண்டும். அறநெறிகளின் விதிகளை அறிந்து, ஒரு சபையில் கலந்து கொண்டு, ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் {மௌனமாக} இருப்பது என்பது பாதி பொய்க்கு சமமாகும். மறுபுறம் அறநெறிகளின் விதிகளை அறிந்த ஒருவன் ஒரு சபையில் சேர்ந்து பொய்யான பதிலைச் சொன்னால், நிச்சயமாக பொய் சொன்ன பாவம் அவனைச் சாரும். பழைய வரலாற்றில் உள்ள அங்கிரசின் மகனான பிரகலாதனின் கதையை கற்றவர்கள் மேற்கோளாகக் காட்டுவார்கள்.

பழங்காலத்தில் தைத்தியர்களின் தலைவனாக பிரகலாதன் என்ற பெயரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு விரோசனன் என்ற பெயர் கொண்ட ஒரு மகன் இருந்தான், அந்த விரோசனன் தனக்கு ஒரு மணமகளை அடைவதற்காக அங்கிரசின் மகனான சூதன்வானிடம் சண்டையிட்டான். அந்த மணமகளை அடைவதன் பொருட்டு அவர்கள் இருவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, "நான்தான் பெரியவன், நான்தான் பெரியவன்" என்று சொன்னார்கள் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் இப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட பிறகு, அவர்கள் இருவரும் பிரகலாதனை நடுவராகக் கொண்டு தங்கள் இருவருக்குள்ளும் ஒரு தீர்மானத்திற்கு வர முடிவு செய்தனர். அவர்கள் அவனிடம் {பிரகலாதனிடம்}, "எங்கள் இருவரில் (மற்றவனுக்கு) யார் பெரியவன்? இந்தக் கேள்விக்கு விடை பகரும். பொய் சொல்லாதீர்" என்றனர்.

இந்த சண்டையால் அச்சமடைந்த பிரகலாதன் தனது பார்வையை சூதன்வானிடம் செலுத்தினான். யமனின் கதாயுதத்தைப் போல கோபத்தால் எரிந்து கொண்டிருந்த சூதன்வான், அவனிடம் {பிரகலாதனிடம்}, "நீர் தவறாக விடையளித்தாலோ, அல்லது விடையளிக்காமல் இருந்தாலோ உமது தலை இடிதாங்கியின் {இந்திரனின்} இடியால் நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும்" என்றான். சூதன்வானால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த தைத்தியன் {பிரகலாதன்}, அத்திமர இலை போல நடுங்கி, ஆலோசனைக்காக பெரும் சக்தி வாய்ந்த காசியபரிடம் சென்றான்.

பிரகலாதன், "ஓ சிறப்பும் மேன்மையும் வாய்ந்தவரே, தேவர்களையும், அசுரர்களையும், அந்தணர்களையும் வழிநடத்த வேண்டிய அறநெறிகளின் விதிகளை நன்கு அறிந்தவர் நீர். இருப்பினும், கடமையின் படி பார்த்தால் இந்தச் சூழ்நிலை பெரும் சிரமம் கொண்டதாக இருக்கிறது. நான் உம்மிடம் ஒன்று கேட்கிறேன். ஒருவனிடம் கேள்வி கேட்ட பிறகு, அவன் பதிலளிக்கவில்லை என்றாலோ, தவறாக பதிலளித்தாலோ அவன்  எந்த உலகங்களை அடைவான்?" என்று கேட்டான்.

காசியபர், "பதிலை அறிந்தும் ஒருவன் சபலத்தாலோ, கோபத்தாலோ அல்லது பயத்தாலோ விடையளிக்கவில்லை என்றால், அவன் தன் மீது வருணனின் ஆயிரம் சுருக்குகளைப் {சுருக்கு கயிறு} போட்டுக் கொள்கிறான். விழியாலோ காதாலோ ஒரு காரியத்தை சாட்சியாக நின்று அறிந்தவன், பொறுப்பில்லாமல் பேசினால், அவனும் தன்மேல் ஆயிரம் வருண சுருக்குகளை {வருணபாசங்களை} மாட்டிக் கொள்கிறான். ஒரு முழு வருடத்தின் முடிவில் அச்சுருக்குகளில் ஒன்று தளரும். ஆகையால், அறிந்தவன், உண்மையை மறைக்காமல் பேச வேண்டும். அறம் பாவத்தால் {என்ற கணையால்} துளைக்கப்பட்டு ஒரு சபையை அடைந்தால், அந்தக் கணையை அகற்ற வேண்டியது அந்தச் சபையில் இருக்கும் அனைவரின் கடமையாகும். அல்லது அவர்களே அந்த அந்தப் பாவத்தால் துளைக்கப்படுவார்கள்.

ஒரு சபையில் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய செயல் கண்டிக்கப்படவில்லை என்றால், அந்தச் செயலில் இருக்கும் பாதி {½} பாக  பாவம் அந்த சபைக்குத் தலைமை தாங்குபவனைச் சாரும். கால் {¼} பாக பாவம் கண்டிக்கத்தக்க படி நடந்து கொண்டவனுக்கும், கால் {¼} பாக பாவம் அங்கிருந்த மற்றவர்களையும் சாரும். மறுபுறம், அந்த சபையில், கண்டிக்கப்பட வேண்டியவன் கண்டிக்கப்பட்டால், அந்த சபைக்குத் தலைமை தாங்குபவன் எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டவனாகிறான். மற்ற சபை உறுப்பினர்களுக்கு எந்தப் பாவமும் சேருவதில்லை. குற்றம் புரிந்தவன் மட்டுமே அந்தச் செயலுக்குப் பொறுப்பாளி ஆவான்.

பிரகலாதா, நீதி குறித்துக் கேட்கப்படும்போது தவறாக விடை சொல்பவர்கள், தங்களிலிருந்து ஏழு தலைமுறையினர் மற்றும் தங்களுக்கு முந்தைய ஏழு தலைமுறையினர் செய்த அறச்செயல்களை அழிக்கின்றனர். செல்வத்தை இழந்தவன், மகனை இழந்தவன், கடனாளி, உடனிருந்தவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டவன், கணவனை இழந்த பெண், மன்னனின் ஆணைக்கேற்ப எல்லாவற்றையும் இழந்தவன், மலட்டுப் பெண், புலியால் விழுங்கப்பட்டவன், சக்காளத்தியாக இருப்பவள், போலி சாட்சியால் சொத்த இழந்தவன் ஆகியோரின் துயரங்கள் அனைத்தும் ஒன்றே என்று தேவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. பொய் பேசுபவன் இந்த பலதரப்பட்ட துயரங்களையும் அனுபவிப்பான்.

ஒரு மனிதன் ஒரு காரியத்தைப் பார்த்தோ அல்லது கேட்டோ புரிந்து கொண்டு அந்த காரியத்தின் சாட்சியாகிறான். ஆகையால், ஒரு சாட்சியானவன் எப்போதும் உண்மையையே பேச வேண்டும். உண்மை பேசும் சாட்சி தனது அறத்தகுதிகளையும் உலகம் சார் உடைமைகளையும் இழப்பதில்லை" என்றார் {காசியபர்}.

காசியபரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிரகலாதன், தனது மகனிடம் {விரோசனனிடம்}, "சூதன்வான் உன்னைவிடப் பெரியவன், (அவனது தந்தை) அங்கிரஸ் என்னைவிடப் பெரியவர். சூதன்வானின் தாயும், உனது தாயைவிட பெரியவள். ஆகையால், ஓ விரோசனா, இந்த சூதன்வானே உனது வாழ்வின் தலைவனாவான்" என்றான். பிரகலாதனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சூதன்வான், "உனது மகன் மீதிருக்கும் பாசத்தால் மாறி நடக்காமல், நீ அறத்தைக் கைக்கொண்டதால், உனது இந்த மகன் {விரோசனன்} ஆயிரம் வருடங்களுக்கு வாழட்டும் என்று நான் ஆணையிடுகிறேன்" என்றான் {சூதன்வான்}.

விதுரன் தொடர்ந்தான், "ஆகையால் இந்தச் சபையில் இருக்கும் அனைவரும் இந்த உயர்ந்த அற உண்மைகளைக் கேட்டு, திரௌபதி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதைச் சிந்திக்கட்டும்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "விதுரனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சபையில் இருந்த மன்னர்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இருப்பினும், கர்ணன் மட்டும் துச்சாசனனிடம் "இந்தப் பணிப்பெண் கிருஷ்ணையை {திரௌபதியை} உள் அறைகளுக்கு அழைத்துச் செல்" என்றான். இதன் காரணமாக, துச்சாசனன் பார்வையாளர்கள் முன்னிலையில் ஆதரவற்று நாணத்துடன், தனது தலைவர்களான பாண்டவர்களைக் கண்டு பாவமாக அழுது கொண்டிருந்த திரௌபதியை இழுக்க ஆரம்பித்தான்.


Sunday, October 20, 2013

மானம் காத்த மாயவன் | சபாபர்வம் - பகுதி 67

Krishna prevented from humiliation | Sabha Parva - Section 46 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 23)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் கரங்களை எரித்துவிடுவதாக பீமன் சொல்வது; அர்ஜுனன் பீமனைக் கண்டிப்பது; திரௌபதிக்கு ஆதரவாக திருதராஷ்டிரனின் மகன் விகர்ணன் நீதி கேட்பது; கர்ணன் விகர்ணனைக் கண்டிப்பது; கர்ணன் துச்சாசனனிடம் திரௌபதியின் ஆடையைக் களையச் சொல்வது; திரௌபதி கிருஷ்ணனை வேண்டுவது; கிருஷ்ணன் திரௌபதியின் மானம் காக்க விரைந்து வருவது; பீமன், துச்சாசனனின் மார்பைப் பிளந்து உதிரம் குடிப்பேன் என்று சபதம் ஏற்பது; விதுரர் மறுபடி நியாயம் கேட்பது; பிரகலாதன், சூதன்வான் மற்றும் விரோசனன் கதையை விதுரர் சொல்வது; கர்ணன் திரௌபதியை அந்தப்பரத்திற்கு அழைத்துச் செல்லுமாறு துச்சாசனனிடம் சொல்வது; துச்சாசனன் திரௌபதியை இழுப்பது...

Dussasana disrobing Draupadi

பீமன் சொன்னான் "ஓ யுதிஷ்டிரரே, சூதாடிகளின் இல்லத்தில் தளர்ந்த நடத்தை கொண்ட பல பெண்கள் இருந்தாலும், அவர்கள்கூட அப்பெண்கள் மீது கொண்டிருக்கும் அன்பால் அவர்களைப் பந்தயப் பொருளாக வைக்கமாட்டார்கள்.(1) காசி மன்னன் கொடுத்த அத்தனை அற்புதப் பொருட்களையும், செல்வங்களையும், விலங்குகளையும், வேறு செல்வங்களையும், கவசங்களையும், வேறு மன்னர்கள் கொடுத்த ஆயுதங்களையும், நமது நாட்டையும், உம்மையும், எங்களையும் எதிரிகள் வென்று விட்டார்கள்.(2,3) நீர் எங்கள் தலைவராக இருப்பதால் இவற்றில் நான் கோபம் கொள்ளவிலை. இருப்பினும், திரௌபதியைப் பந்தயமாக வைத்த உமது செயல் பெரிதும் முறையற்றது என நான் கருதுகிறேன்.(4) இந்த அப்பாவிப் பெண் {திரௌபதி} இப்படி நடத்தப்படுவதற்குத் தகுந்தவளல்ல. பாண்டவர்களைத் தலைவர்களாக அடைந்து, தாழ்ந்தவர்களும், இழிந்தவர்களும், கொடூரர்களும், தீய மனம் கொண்டவர்களுமான கௌரவர்களால் இவ்வாறு உம்மாலேயே தண்டிக்கப்படுகிறாள்.(5) அவள் காரணமாகவே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது கோபம் உம்மீது விழுகிறது. நான் அந்த உமது கரங்களை எரிக்கப் போகிறேன். சகாதேவா, நெருப்பைக் கொண்டு வருவாயாக" என்றான்[1].(6) 

சபை நடுவே இழுத்துவரப்பட்டாள் திரௌபதி | சபா பர்வம் - பகுதி 66 ஆ

Draupadi was dragged down the assembly | Sabha Parva - Section 66B | Mahabharata In Tamil

(தியூத பர்வத் தொடர்ச்சி)

துரியோதனன் தனது பணியாளிடம் மீண்டும் திரௌபதியை அழைத்து வரச் சொல்லல்; அவன் தயங்கி நிற்பதைக் கண்டு துச்சாசனனை அனுப்புவது; துச்சாசனன் சென்று திரௌபதியின் கூந்தலைப் பற்றி சபை நடுவே இழுத்து வருவது; திரௌபதி சபை பெரியோர்களிடம் நியாயம் கேட்பது; பீஷ்மர் இது விஷயத்தில் தான் எந்தத் தீர்மானத்துக்கும் வரமுடியாதிருப்பதாகச் சொல்வது; இந்த நிலையில் யுதிஷ்டிரனைக் கண்டு பீமன் கோபப்படுவது....

பிராதிகாமினின் சொல்லைக் கேட்ட துரியோதனன் "ஓ துச்சாசனா {Dussasana}, எனது சூதனின் குறைந்த புத்தியுடைய மகன் {பிராதிகாமின் - Pratikamin} விருகோதரனுக்கு {Vrikodara - பீமனுக்கு} அஞ்சுகிறான். ஆகையால், நீயே சென்று யக்ஞசேனனின் மகளை {daughter of Yajnasena - திரௌபதியை} இங்கு வலுக்கட்டாயமாக இழுத்துவா, தற்போது நமது எதிரிகள் நமது விருப்பத்தை எதிர்பார்த்தே இருக்கின்றனர். அவர்கள் {பாண்டவர்கள்} உன்னை என்ன செய்ய முடியும்?" என்றான்.

தனது அண்ணனின் {துரியோதனனின்} உத்தரவைக் கேட்ட துச்சாசனன் ரத்தச்சிவப்பாக இருந்த கண்களுடன் எழுந்து, அந்தப் பெரும் போர்வீரர்களின் {பாண்டவர்களின்} வசிப்பிடத்திற்கு நுழைந்து, அந்த இளவரசியிடம் {திரௌபதியிடம்}, "ஓ பாஞ்சால இளவரசி கிருஷ்ணா {Krishna - திரௌபதி}, வா... வா... நீ எங்களால் வெல்லப்பட்டாய். ஓ தாமரை இலை போன்ற அகன்ற கண்களை உடையவளே {திரௌபதியே}, இப்போதே வந்து குருக்களை உனது தலைவர்களாக ஏற்றுக் கொள். நீ அறம் சார்ந்தே அடையப்பட்டாய், சபைக்கு வா..." என்றான் {துச்சாசனன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்டு பெரும் துயரத்துடன் எழுந்த திரௌபதி, தனது மங்கிய முகத்தை தனது கரத்தால் துடைத்துக் கொண்டு, பெரும் துயரத்துடன் திருதராஷ்டிரன் வீட்டுப் பெண்கள் இருந்த இடத்திற்கு ஓடிப் போனாள். இதனால் கோபத்துடன் கர்ஜித்த துச்சாசனன், அவள் பின்னே ஓடி, நீல நிறத்தில், அலை அலையாக இருந்த ராணியின் {திரௌபதியின்} அடர்த்தியான கூந்தலைப் பற்றினான். 

அந்தோ! ராஜசூய வேள்வியில் மந்திரங்களுடன் தவசி நீர் தெளிக்கப்பட்ட அந்தக் கூந்தலை பாண்டவர்களின் வீரத்தைக் கருதாமல், இப்போது திருதராஷ்டிரன் மகன் {துச்சாசனன்}, வலுக்கட்டாயமாக பற்றி இழுத்தான். கிருஷ்ணையின் {திரௌபதியின்} நீண்ட கூந்தலைப் பற்றி சபையின் நடுவே இழுத்துச் சென்றான். அவள் {திரௌபதி} பலம் நிறைந்த காப்பாளர்களைப் பெற்றிருந்தும், இப்படி இழுத்து வரப்பட்டதால், புயலில் சிக்கிய வாழை மரம் என நடுங்கினாள்.

அவனால் {துச்சாசனனால்}  இழுத்தவரப்பட்டு, உடல் வளைந்திருந்த அவள் {திரௌபதி}, மயக்கத்துடன் அழுதாள், "பாவி, என்னை இப்படி சபையின் நடுவே கொண்டு செல்வது தவறான நடத்தையாகும். எனது மாதாந்திர காலம் வந்திருக்கிறது. நான் இப்போது ஒற்றை ஆடை உடுத்தியிருக்கிறேன்" என்றாள்.  

மேலும் விஷ்ணுவும், நரனும் நாராயணராகவும் இருந்த கிருஷ்ணனிடம் பாவமாக வேண்டிக் கொண்டிருந்த கிருஷ்ணையின் {திரௌபதியின்} கருங்கூந்தலை வலுக்கட்டையமாக பற்றி இழுத்துச் சென்ற துச்சாசனன், "உனது மாதாந்திர காலம் வந்ததோ இல்லையோ, நீ ஒற்றையாடையுடன் இருக்கிறாயோ அல்லது நிர்வாணமாக இருக்கிறாயோ, பகடையில் நீ வெல்லப்பட்டு பிறகு, எங்களுக்கு நீ அடிமையாக ஆன பிறகு எங்கள் பணிப்பெண்கள் வாழும் இடத்தில் நீ விரும்பியவாறு இருந்து கொள்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "துச்சாசனால் இழுத்துச் செல்லப்பட்ட போது, கலைந்த முடிகளுடன், அவளது பாதி ஆடை தளர்ந்து, கோபத்தால் உட்கொள்ளப்பட்ட எளிமையான கிருஷ்ணை {திரௌபதி}, மயக்கத்துடன், "கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த, வேள்விக்கு தங்களை அர்ப்பணித்து, இந்திரனுக்கு சமமான மனிதர்கள் நிறைந்திருக்கும் இந்தச் சபையில் சிலர் மேன்மையானவர்களாகவும், மற்றவர்கள் மதிப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நான் இந்த நிலையில் நிற்க முடியாது. ஓ பாவி! கொடுஞ்செயல் புரிபவனே {துச்சாசனனே} என்னை இப்படி இழுக்காதே. என்னை இப்படித் திறந்து காட்டாதே {Uncover me not so}. 

நீ தேவர்களையும் இந்திரனையும் கூட்டாளியாக வைத்திருந்தாலும், இந்த இளவரசர்கள் (எனது தலைவர்கள்) உன்னை மன்னிக்க மாட்டார்கள். தர்மனின் சிறப்புவாய்ந்த மகன் {யுதிஷ்டிரன்}, இப்போது அறநெறிக் கடமைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறார். இருப்பினும், அறநெறி மிகவும் நுட்பமானது. தெளிந்த பார்வையுள்ளவர்கள் மட்டுமே அதை உறுதி செய்ய முடியும். எனது தலைவன் {யுதிஷ்டிரன்} அறத்தை மறந்து அணுவளவு குற்றம் செய்தார் என்று என் வாக்கினாலும்கூட சொல்ல நான் விரும்பவில்லை. 

மாதாந்திர காலத்தில் இருக்கும் என்னை இந்த குரு வீரர்கள் முன்னிலையில் இழுத்து வருகிறாய். உண்மையில் இது தகாத காரியம். ஆனால் இங்கிருக்கும் ஒருவரும் இதைக் கண்டிக்கவில்லை. நிச்சயமாக இவர்களும் உன்னைப் போன்ற மனம் கொண்டவர்களே. சீ... உண்மையில் பாரதர்களிடம் அறம் மறைந்துவிட்டதா? உண்மையில் க்ஷத்திரிய ஒழுக்கமும் மறைந்துவிட்டதா? அல்லது ஒழுக்கத்தின் எல்லைகளைக் கடக்கும் இந்தச் செயலை, இந்தச் சபையில் இருக்கும் குருக்கள் அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்களே! 

ஓ, துரோணரும், பீஷ்மரும், க்ஷத்தரும் {விதுரரும்}, இந்த மன்னரும் {திருதராஷ்டிரரும்} தங்கள் சக்தியை இழந்துவிட்டனரே. அல்லது, குருக்களில் முதன்மையான இந்த மூத்தவர்கள் ஏன் இக்குற்றத்தைக் கண்டும் அமைதியாக பார்க்கின்றனர்?" என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படியே அந்தக் கொடியிடை கிருஷ்ணை {திரௌபதி} அந்தச் சபையில் துக்கத்துடன் அழுதாள். தனது பார்வையைத் தனது கோபம் கொண்ட தலைவர்களான பாண்டவர்களிடம் செலுத்திய அவள் {திரௌபதி}, தனது பார்வையால் மேலும் அவர்களின் {பாண்டவர்களின்} கோபத்தைத் தூண்டினாள். தங்கள் நாட்டையோ, செல்வத்தையோ, விலையுயர்ந்த ரத்தினங்களையோ களவாடியது குறித்து அவர்கள் பெரிதும் துயரம் கொள்ளவில்லை. ஆனால், நாணத்தோடும் கோபத்துடனும் இருந்த கிருஷ்ணையின் {திரௌபதியின்} பார்வையைக் கண்டு கோபத்தால் பெரும் துயர் அடைந்தனர். 

ஆதரவற்ற தங்கள் தலைவர்களைக் காணும் கிருஷ்ணையை {திரௌபதியைக்} கண்ட துச்சாசனன், மேலும் அவளை {திரௌபதியை} வலுக்கட்டாயமாக இழுத்து, அவளிடம், "அடிமையே அடிமையே" {தாசி என்று அழைத்தான் என்கிறது ம.வீ.ரா பதிப்பு} என்று சொல்லி சத்தமாகச் சிரித்தான். அந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ந்து அந்தப் பேச்சை அங்கீகரித்து சத்தமாகச் சிரித்தான். அதே போல, சுபலனின் மகனான காந்தார மன்னன் சகுனியும் துச்சாசனனைப் பாராட்டினான். கிருஷ்ணை {திரௌபதி} இப்படிச் சபை நடுவே இழுத்துவரப்பட்டதைக் கண்டு இவர்கள் மூவர் {துச்சாசனன், கர்ணன், சகுனி} மற்றும் துரியோதனனைத் தவிர்த்து அனைவரும் சோகத்தில் நிறைந்திருந்தனர்.

இவையனைத்தையும் கண்ட பீஷ்மர், "ஓ அருளப்பட்டவளே, அறம் மிகவும் நுட்பமானது. ஆகையால், நான் இதுவிஷயத்தில் எந்தத் தீர்மானத்துக்கு வர முடிய வில்லை. ஒரு புறம், செல்வமில்லாதவன் மற்றவர் செல்வத்தைப் பணயம் வைக்க முடியாது என்றாலும், மறுபுறம், மனைவியர் தங்கள் தலைவர்களின் ஆணைப்படி நடக்க வேண்டியவர்கள். யுதிஷ்டிரன், இந்த உலகம் முழுதும் நிறைந்த செல்வத்தையும் கைவிடுவான், ஆனால் அவன் {யுதிஷ்டிரன்} அறத்தைத் தியாகம் செய்ய மாட்டான். அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, "நான் வெல்லப்பட்டேன் என்கிறான்". ஆகையால், நான் இதுவிஷயத்தில் ஒரு தீர்மானத்துக்கு வர முடியவில்லை. பகடையில் சகுனி அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} சமமானவன் கிடையாது {ஆனால் உயர்ந்தவன்}. இருப்பினும், குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} தானே முன்வந்து பந்தயம் வைத்தான். அந்தச் சிறப்பு மிகுந்த யுதிஷ்டிரனே சகுனி ஏமாற்றி விளையாடினான் என்று கருதவில்லை. ஆகையால் இதுவிஷயத்தில் என்னால் எதுவும் தீர்மானிக்க முடியாது" என்றான்.

திரௌபதி, "பகடையில் நிபுணத்துவம் இல்லை என்றாலும், மன்னர் {யுதிஷ்டிரர்} இந்தச் சபைக்கு அழைக்கப்பட்டு, நிபுணத்துவம் வாய்ந்த, தீய, ஏமாற்றுக்கார, பெரும் சூதாடியுடன் {சகுனியுடன்} விளையாட வைக்கப்பட்டார். இப்படியிருக்கையில், அவர் {யுதிஷ்டிரர்} தானாக முன்வந்து பந்தயம் வைத்தார் என்று எப்படிச் சொல்லப்படுகிறது? பாண்டவர்களின் தலைவரை {யுதிஷ்டிரரை} இந்தப் ஏமாற்றுகர நடத்தையும் தவசிமற்ற நோக்கங்களும் கொண்ட பாவிகள் ஒன்றுகூடி மதியிழக்கச் செய்து வீழ்த்தினர். அவர்களின் தந்திரங்களை அவர் {யுதிஷ்டிரர்} அறிய முடியாது, ஆனால் அவர் இப்படிச் செய்துவிட்டார். இங்கு, இந்தச் சபையில், தனது மகன்களுக்கும், மருமகள்களுக்கும் தலைவர்களான குருக்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும், எனது வார்த்தைகளை மனதில் கொண்டு, நான் சொல்லியிருக்கும் விஷயத்தைத் தீர்மானியுங்கள்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி பாவமாக அழுது கொண்டிருந்த கிருஷ்ணை {திரௌபதி}, துச்சாசனன் ஏற்றுக்கொள்ள முடியாத கடும் சொற்களைப் பேசிய போது ஆதரவற்ற தனது தலைவர்களை {பாண்டவர்களை} அடிக்கடி பார்த்தாள். மாதாந்திர காலத்தில் இருந்த அவள் இப்படி இழுத்து வரப்படுவதையும், அவளுக்கு {திரௌபதிக்கு} சற்றும் பொருந்தாத நிலையில், மேலாடை தளர்ந்த நிலையில் அவள் இருப்பதையும் கண்ட விருகோதரன் {பீமன்}, தனது உறுதியையும் தாண்டி, கண்களை யுதிஷ்டிரனிடம் நிலைக்க வைத்து, கோபத்துக்கு உள்ளானானான்.


சபை நடுவே இழுத்துவரப்பட்டாள் திரௌபதி | சபாபர்வம் - பகுதி 66

Draupadi was dragged down the assembly | Sabha Parva - Section 66B | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 22)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் தனது பணியாளை அழைத்து திரௌபதியை அழைத்து வரச் சொல்லல்; பணியாள் மறுபடியும் சபைக்கு வந்து திரௌபதியின் கேள்வியைக் கேட்டல்; துரியோதனன் தனது பணியாளிடம் மீண்டும் திரௌபதியை அழைத்து வரச் சொல்லல்; அவன் தயங்கி நிற்பதைக் கண்டு துச்சாசனனை அனுப்புவது; துச்சாசனன் சென்று திரௌபதியின் கூந்தலைப் பற்றி சபை நடுவே இழுத்து வருவது; திரௌபதி சபை பெரியோர்களிடம் நியாயம் கேட்பது; பீஷ்மர் கைவிரிப்பது; இந்த நிலையில் யுதிஷ்டிரனைக் கண்டு பீமன் கோபப்படுவது...

Draupadi dragged into court by Dussasana

வைசம்பாயனர் சொன்னார், "செருக்கால் போதையுண்ட திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, க்ஷத்தனை {விதுரனைக்} கண்டு, "சீ" என்று சொல்லி விட்டு பணியாளான பிராதிகாமினைப் பார்த்து, மரியாதைக்குரிய மூத்தவர்கள் முன்னிலையில் அவனை {பிராதிகாமினை} அழைத்து,(1) "செல் பிராதிகாமின், சென்று திரௌபதியை இங்கே கொண்டு வருவாயாக. பாண்டுவின் மகன்களிடம் அச்சம் கொள்ளாதே. விதுரர் மட்டுமே அப்படி பயத்தால் உளறுகிறார். மேலும், அவர் நமது செழிப்பை எப்போதும் விரும்புவதில்லை" என்றான்".(2)

Saturday, October 19, 2013

குருக்களின் அழிவு நிச்சயம் | சபாபர்வம் - பகுதி 65

The destruction of Kurus is sure | Sabha Parva - Section 64 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 21)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் விதுரனிடம் திரௌபதியை அழைத்து வரச் சொல்வதும்; விதுரன் சொன்ன விளக்கங்களும்...

Vidura

துரியோதனன், "ஓ க்ஷத்தரே இங்கே வாரும், பாண்டவர்களின் அன்புக்கும் நேசத்திற்கு உரிய மனைவியான திரௌபதியை இங்கே அழைத்து வாரும். அறைகளை துடைத்துக் கூட்டுவதற்கு அவளை பலவந்தமாக அனுப்புவீராக. நமது பணிப்பெண்கள் தங்கும் இடத்தில் அந்தப் பேறற்ற பெண்ணும் தங்கட்டும்" என்றான்.(1)

அனைத்தையும் இழந்தான் யுதிஷ்டிரன் | சபாபர்வம் - பகுதி 64

Yudhishthira lost everything | Sabha Parva - Section 64 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 20)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் சகுனியிடம் அனைத்து செல்வங்களையும் இழப்பது; தனது தம்பிகளை இழப்பது; தன்னை இழப்பது; பின்பு திரௌபதியை இழப்பது...

Sakuni

சகுனி சொன்னான், "ஓ யுதிஷ்டிரா, நீ பாண்டவர்களின் செல்வத்தை நிறைய இழந்துவிட்டாய். இன்னும் எங்களிடம் தோற்காதது ஏதேனும் உன்னிடம் இருந்தால், ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, அது என்ன என்பதை எங்களுக்குச் சொல்வாயாக" என்றான்.(1)

Friday, October 18, 2013

பார்வையில் விஷம் கொண்ட பாம்புகளைக் கோபப்படுத்தாதே - சபாபர்வம் பகுதி 63

Never enrage adders having venom in their very glances | Sabha Parva - Section 46 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 19)

பதிவின் சுருக்கம் : துரியோதனை விதுரனைக் கண்டித்து, அவமானப்படுத்துவது; விதுரன் திருதராஷ்டிரனிடம் தனது உள்ளத்தைத் தெரியப்படுத்துதல்...

Vidura and Duryodhana

துரியோதனன் சொன்னான், "ஓ க்ஷத்தரே {விதுரரே}, நீர் எப்போதும் நமது எதிரிகளின் புகழைப் பெருமையாகவும், திருதராஷ்டிரர் மகன்களை தாழ்த்தியுமே பேசி வருகிறீர். ஓ விதுரரே, உமக்கு யாரைப் பிடிக்கும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் எப்போதும் எங்களை சிறுவர்களாகவே தாழ்த்திக் கருதி(1), உமக்கு நெருக்கமானவர்களின் வெற்றியை விரும்பி, உமக்கு விருப்பமில்லாவதவர்களின் தோல்வியையும் விரும்பி வருபவர் ஆவீர். உமது நாவும் மனமும் உமது இதயத்தைக் காட்டிக் கொடுக்கின்றன. உமது பேச்சில் நீர் காட்டும் பகைமை, உமது இதயத்தில் இருப்பதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது.(2) பாம்பைப் போன்ற உம்மை எங்கள் மடியில் வைத்துப் பேணி வளர்த்திருக்கிறோம். வளர்ப்பவருக்கு தீமையை விரும்பும் பூனையைப் போன்றவர் நீர். முதலாளியைக் {எஜமானைக்} காயப்படுத்துவதைவிட கொடும்பாவம் ஏதுமில்லை என்பது ஞானமுள்ளோர் வாக்காகும். ஓ க்ஷத்தரே, எப்படி இந்தப் பாவத்திற்கு நீர் அஞ்சாமல் இருக்கிறீர்?(3) 

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்