Brahmanas ate deer meat | Vana Parva - Section 50 | Mahabharata In Tamil
(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)
அர்ஜுனன் இல்லாத ஐந்து வருடங்களுக்கு அந்தணர்களுக்குப் பாண்டவர்கள் எப்படி உணவு கொடுத்தார்கள் என்பது பற்றி விவரிப்பு...
ஜனமேஜயன் சொன்னான், "ஓ முனிவரே {வைசம்பாயணரே}, பாண்டுவின் வீர மைந்தர்களைக் {பாண்டவர்களைக்} காட்டுக்கு அனுப்பி வைத்த பிறகு, திருதராஷ்டிரனின் இந்தப் புலம்பல்கள் வீண்தானே. தனது முட்டாள் மகனான துரியோதனன், அந்த பலம் வாய்ந்த வீரர்களை கோபமூட்டும்படி அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} ஏன் அனுமதித்தான்? ஓ அந்தணரே, பாண்டுவின் மகன்கள் கானகங்களில் வாழ்ந்த போது, அவர்களது உணவு என்ன என்பதை எங்களுக்குச் சொல்லும். அவை வனப்பகுதிகளில் இருந்து கிடைத்தனவா? அல்லது சாகுபடியில் இருந்து உற்பத்தியாகினவா?" என்று கேட்டான்.
வைசம்பாயனர் சொன்னார், "மனிதர்களில் காளையான அவர்கள், தங்கள் சுத்தமான கணைகளால் மான்களைக் கொன்று, தங்கள் உணவை கானகத்தின் உற்பத்தியில் பெற்று, அதில் ஒரு பகுதியை முதலில் அந்தணர்களுக்குப் படைத்து, அதனினும் மீந்ததையே அவர்கள் உண்டார்கள். ஓ மன்னா {ஜனமேஜயா}, பெரும் விற்களைத் தாங்கும் அந்த வீரர்கள் வனத்தில் வசித்த போது, நெருப்புடன் வழிபடுபவர்களும், நெருப்பில்லாமல் வழிபடுபவர்களுமான இரு வகை அந்தணர்களாலும் தொடரப்பட்டார்கள். அந்தக் கானகத்தில், யுதிஷ்டிரனால் தாங்கப்பட்டவர்களாக, முக்தி வழிகளில் ஈடுபடும் ஸ்நாதக அந்தணர்களே பத்தாயிரம் {10000} பேர் இருந்தார்கள். ருருக்களையும், கருப்பு மான்களையும், மற்ற விலங்குவகையில் உள்ள சுத்தமான காட்டு விலங்குகளையும், அவர்கள் அந்த அந்தணர்களுக்குக் கொடுத்தார்கள். யுதிஷ்டிரனுடன் தங்கிய யாரும் வெளிறிப் போயோ, நோய்வாய்ப்பட்டோ, மெலிதாகவோ, பலவீனமாகவோ, துக்கத்துடனோ, அச்சமுற்றோ இருக்க வில்லை.
குருக்களின் தலைவனும் அறம் சார்ந்த மன்னனுமான யுதிஷ்டிரன், தனது தம்பிகளைத் தனது பிள்ளைகளைப் போல பராமரித்தான். தனது உறவினர்களைத் தனது உடன் பிறந்த சகோதரர்களைப் போல பராமரித்தான். சுத்தமான புகழ் கொண்ட திரௌபதி, தனது கணவர்களுக்கும், அந்தணர்களுக்கும், ஏதோ அவள்தான் அவர்களது தாய் என்பது போல, உணவு கொடுத்து, அனைவரிலும் கடைசியாகவே தனது உணவை எடுத்துக் கொண்டாள். தங்கள் விற்களைக் கையில் கொண்டு, மன்னன் {யுதிஷ்டிரன்} கிழக்கிலும், பீமன் தெற்கிலும், இரட்டையர்கள் மேற்கிலும், வடக்கிலும் என தினந்தோறும் அந்தக் கானகத்தின் மான்களை இறைச்சிக்காக கொன்றனர். அர்ஜுனன் இல்லாத போது, தொடர்ந்து ஐந்து வருடங்களாக அந்தக் காம்யக வனத்தில் இருந்த பாண்டவர்கள், கல்வியையும், வழிபாடுகளையும், வேள்விகளையும் செய்து வந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.