Showing posts with label உதங்கர். Show all posts
Showing posts with label உதங்கர். Show all posts

Saturday, November 30, 2019

நாகலோகம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 58

The world of Nagas! | Aswamedha-Parva-Section-58 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 43)


பதிவின் சுருக்கம் : அடையாளம் பெற்று வந்து ராணியிடம் கொடுத்துக் குண்டலங்களைப் பெற்ற உதங்கர்; குண்டலங்களைக் கவர்ந்து சென்ற நாகன்; இந்திரனின் துணையால் நாகலோகம் சென்று அவற்றைப் பெற்றது; அஹல்யையிடம் குண்டலங்களைக் கொடுத்த உதங்கர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உதங்கர், தன் நண்பர்களிடம் எப்போதும் நல்ல மனநிலையில் உள்ள மன்னன் சௌதாஸனிடம் திரும்பி, (தாம் உண்மையில் மன்னனிடம் இருந்தே வந்தார் என்று மதயந்தியை நம்பச் செய்ய) ஏதாவதொரு அடையாளத்தைத் தருமாறு வேண்டினார். இக்ஷாகு குலத்தில் முதன்மையான அவன் ஓர் அடையாளத்தை அவரிடம் கொடுத்தான்.(1)

காதுகுண்டலங்கள்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 57

Ear-rings! | Aswamedha-Parva-Section-57 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 42)


பதிவின் சுருக்கம் : உதங்கரை உண்ண முயன்ற ஸௌதாஸன்; குருதக்ஷிணை அளித்துவிட்டுத் திரும்ப வருவதாகச் சொல்லி அவனது மனைவியின் குண்டலங்களை வேண்டிய உதங்கர்; குண்டலத்தின் சிறப்பைச் சொல்லி சௌதாசனின் அனுமதியை வேண்டிய ராணி...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, பிராமணரான உதங்கர், பயங்கரம் நிறைந்த முகத்தோற்றத்துடனும், மனிதக் குருதியால் நனைந்திருந்த நீண்ட தாடியுடனும் கூடிய மன்னனைக் {ஸௌதாஸனை} கண்டும் கலக்கமடையவில்லை.(1) ஒவ்வொருவரின் நெஞ்சிலும் அச்சத்தைத் தூண்டுபவனும் இரண்டாவது யமனைப் போலத் தெரிந்தவனும், பெருஞ்சக்தியைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி, எழுந்திருந்து உதங்கரிடம்,(2) "ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நாளின் ஆறாம் காலத்தில் நான் உணவு தேடிக் கொண்டிருக்கும்போது நற்பேற்றினாலேயே நீ என்னிடம் வந்தாய்" என்றான்.(3)

குருதக்ஷிணை! - அஸ்வமேதபர்வம் பகுதி – 56

Preceptor Fee! | Aswamedha-Parva-Section-56 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 41)


பதிவின் சுருக்கம் : முதுமையைக் கண்டு வருந்திய உதங்கர்; உதங்கருக்கு இளமையைக் கொடுத்துத் தமது மகளைத் திருமணம் செய்து கொடுத்த கௌதமர்; உதங்கரிடம் அஹல்யை கேட்ட குருதக்ஷிணை...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "வலிமைகள் அனைத்திற்கும் பிறப்பிடமான விஷ்ணுவையே சபிக்க விரும்பும் அளவுக்கு உயர் ஆன்ம உதங்கர் செய்த தவங்கள் என்ன?" என்று கேட்டான்.(1)

பாலைவன நீர்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 55

Water in desert! | Aswamedha-Parva-Section-55 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 40)


பதிவின் சுருக்கம் : உதங்கருக்கு விஷ்வரூப தரிசனம் அளித்த கிருஷ்ணன்; உதங்கர் பெற்ற வரம்; சண்டாள வடிவில் வந்த இந்திரன் கொடுத்த அமிர்தத்தை மறுத்த உதங்கர்; பாலைவனத்திலும் நீர்கிடைக்கும் வரத்தை உதங்கருக்கு அளித்த கிருஷ்ணன்...


உதங்கர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஜனார்த்தனா, அண்டத்தைப் படைத்தவன் நீ என்பதை நான் அறிவேன். நீ என்னிடம் கொண்ட கருணையின் விளைவே இந்த ஞானம் என்பதில் ஐயமில்லை.(1) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, என் மனம் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டிருப்பதால் உற்சாகம் நிறைந்து அமைதியின் வசப்பட்டதாக இருக்கிறது. ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, இதற்கு மேலும் என் இதயம் உன்னைச் சபிக்க விரும்பவில்லை என்பதை அறிவாயாக.(2) ஓ! ஜனார்த்தனா, அற்பக் கருணையையாவது உன்னிடம் அடையத்தகுந்தவனாக நான் இருந்தால், உன் இறை வடிவை {விஷ்ணு ரூபத்தை} எனக்கு ஒருமுறை காட்டுவாயாக" என்று கேட்டார்".(3)

Friday, November 29, 2019

பரிதாப முறையீடு! - அஸ்வமேதபர்வம் பகுதி – 54

Piteous appeal! | Aswamedha-Parva-Section-54 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 39)


பதிவின் சுருக்கம் : தன் மகிமையை உதங்கருக்கு உணர்த்திய கிருஷ்ணன்; தன்னுடைய சொல்லைக் கேட்காததால் கௌரவர்கள் அழிந்தனர் என்று சொன்ன கிருஷ்ணன்...


உதங்கர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா, களங்கமற்ற அத்யாத்மத்தை எனக்குச் சொல்வாயாக. உன் உரையைக் கேட்டப் பிறகு, ஓ! ஜனார்த்தனா உனக்கு நன்மையானதை விதிப்பேன், அல்லது உன்னைச் சபிப்பேன்" என்றார்.(1)

உதங்கர்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 53

Utanka! | Aswamedha-Parva-Section-53 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 38)


பதிவின் சுருக்கம் : துவாரகைக்குச் செல்லும் வழியில் உதங்கரைக் கண்ட கிருஷ்ணன்; கௌரவர்கள் அழிக்கப்பட்டதற்காகச் சபிக்கப் போவதாகச் சொன்ன உதங்கர்; உதங்ருக்கு உண்மையைச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} துவாரகைக்குப் புறப்படும்போது, பகைவர்களைத் தண்டிப்பவனும், பாரதக் குல இளவரசர்களில் முதன்மையானவனும் ஆனவன் {அர்ஜுனன்} அவனைத் தழுவி கொண்டு, தன் பணியாட்களுடன் சேர்ந்து திரும்பினான்.(1) விருஷ்ணி வீரனை மீண்டும் மீண்டும் தழுவிய பல்குனன் {அர்ஜுனன்}, அவன் தன் பார்வையின் வரம்புக்குள் உள்ள வரை மீண்டும் மீண்டும் தன் கண்களை அவனை நோக்கிச் செலுத்தினான்.(2) கோவிந்தன் மேல் விழுந்த தன் பார்வையைப் பெருங்கடினத்துடன் பிருதையின் மகன் {அர்ஜுனன்} விலக்கினான். வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணனும் அவ்வாறே செய்தான் (அதையே செய்தான்).(3) அந்த உயர் ஆன்மா புறப்படும்போது வெளிப்பட்ட அறிகுறிகளை {சகுனங்களை} நான் உனக்கு விரிவாகச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(4)

Saturday, July 12, 2014

விஷ்ணுவைக் கண்ட உதங்கர்! - வனபர்வம் பகுதி 200

Utanka beheld Vishnu! | Vana Parva - Section 200 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

உதங்கரின் தவத்தைக் கண்டு திருப்தியுற்ற விஷ்ணு அவரைச் சந்தித்தல்; துந்து என்ற அசுரனைக் குறித்து உதங்கரிடம் விஷ்ணு சொல்லல் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, அரசமுனியான இந்திரத்யும்னன் சொர்க்கமடைந்த வரலாற்றைச் சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம் இருந்து கேட்ட பாரதக் குலத்தின் காளையான யுதிஷ்டிரன் மீண்டும அந்தப் பெரும் தவத்தகுதியும், நீண்ட வாழ்நாளும் உடைய பாவமற்ற முனிவரிடம் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! அறம் சார்ந்தவரே {மார்க்கண்டேயரே}, தேவர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்களின் ஒட்டுமொத்தக்கூட்டத்தையும் நீர் அறிவீர். நீர் பலதரப்பட்ட அரச பரம்பரைகளையும், நித்திய வழி வந்த முனிவர்கள் பலரையும் அறிவீர். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, இவ்வுலகில் நீர் அறியாதது ஒன்றுமில்லை. ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, மனிதர்கள், பாம்புகள், ராட்சசர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், அப்சரசுகள் ஆகியோரின் பல கேட்பதற்கினிய கதைகளை அறிந்திருக்கிறீர். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்த ஒப்பற்ற மன்னன் குவலாஸ்வன் {Kuvalaswa} ஏன் தனது பெயரை துந்துமாரன் {Dhundhumara} என்று மாற்றிக் கொண்டான்? ஓ! பிருகு குலத்தில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}. பெரும் புத்திக்கூர்மை கொண்ட குவலாஸ்வன் ஏன் தனது பெயரை மாற்றிக் கொண்டான் என்பதை விவரமாக அறிய விரும்புகிறேன்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படி யுதிஷ்டிரனால் கேட்கப்பட்ட பெரும் முனிவரான மார்க்கண்டேயர், ஓ! பாரதா {ஜனமேஜயா}, துந்துமாரனின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்!"

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் உனக்கு அனைத்தையும் சொல்வேன். நான் சொல்வதைக் கேள்! துந்துமாரனின் கதை அறநெறிகள் அடங்கியது. அதைக் கேள்! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இக்ஷவாகு குலத்தைச் சார்ந்த மன்னன் குவலாஸ்வன், துந்துமாரன் என்று அறியப்படும் காரணத்தைக் கேள். ஓ! மகனே, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உதங்கர் என்ற பெயரில் கொண்டாடப்படும் முனிவர் ஒருவர் இருந்தார். ஓ! குரு குலத்தவனே {யுதிஷ்டிரா}, ஒரு இனிமையான வனத்தில் உதங்கரின் ஆசிரமம் இருந்தது. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, விஷ்ணுவின் கருணையைப் பெறுவதற்காக, முனிவர் உதங்கர் அங்கே கடுமையான தவத்தை எண்ணிலடங்கா வருடங்களுக்குச் செய்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த ஒப்பற்ற தலைவன் {விஷ்ணு} உதங்கருக்குக் காட்சியளித்தான்.

அந்தத் தெய்வத்தை {விஷ்ணுவைக்} கண்ட முனிவர் அடக்கத்துடன், அவனைத் {விஷ்ணுவைத்} திருப்தி செய்யப் பல பாடல்களைப் பாடினார். உதங்கர், "ஓ! பிரகாசம் மிக்கவனே {விஷ்ணுவே}, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் அசைவன, அசையாதன, ஏன் பிரம்மனும், வேதங்களும் உட்பட அறியப்பட முடிந்த அனைத்து உயிரினங்களும், அனைத்துப் பொருட்களையும் நீ படைத்தவையே. ஓ! தேவா {விஷ்ணுவே}, ஆகாயமே உனது தலை, சூரியனும், சந்திரனும் உனது விழிகள்! ஓ! மங்காதவனே, காற்று உனது சுவாசம், நெருப்பு உனது சக்தி! அடிவானத்தின் திசைகள் அனைத்தும் உனது கரங்கள், பெருங்கடலே உனது வயிறு! ஓ! தேவா {விஷ்ணுவே}, குன்றுகளும் மலைகளும் உனது தொடைகள், வானம் உனது இடுப்பு, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பூமியே உனது பாதம், செடிகள் உனது உடலில் இருக்கும் ரோமங்களாகும். ஓ! தேவா {விஷ்ணுவே}, இந்திரன், சோமன், அக்னி, வருணன் உட்பட உண்மையில் அனைத்து தேவர்களும், அசுரர்களும், பெரும் பாம்புகளும், பலதரப்பட்ட பாடல்களால் உன்னைப் புகழ்ந்து கொண்டு உனக்காக அடக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

ஓ! அண்டத்தின் தலைவா {விஷ்ணுவே}, படைக்கப்பட்ட அனைத்திலும் நீ பரவியிருக்கிறாய் {ஊடுருவியிருக்கிறாய்}. உயர்ந்த சக்தியும், எப்போதும் தவத்தியானத்தில் மூழ்கியிருப்பவர்களுமான பெரும் முனிவர்கள் எப்போதும் உன்னை வழிபடுகிறார்கள். நீ திருப்தியடையும்போது, அண்டம் அமைதியில் இருக்கிறது. நீ கோபத்தில் இருக்கும்போதோ, அனைத்து ஆன்மாவையும் பயங்கரம் ஊடுருவுகிறது. ஓ! தலைவா {விஷ்ணுவே}, நீயே அனைத்துப் பயங்கரங்களையும் விலக்குபவன், நீயே மேன்மையானவன்! தேவர்கள் மற்றும் மனிதர்களின் மகிழ்ச்சிக்கு நீயே காரணமானவன்! ஓ! தலைவா {விஷ்ணுவே}, உனது மூவடிகளால், மூன்று உலகங்களையும் ஆக்கிரமித்தாய். அதிகாரத்தின் உச்சியில் இருந்த அசுரர்களை நீயே அழித்தாய்! ஓ! தேவா {விஷ்ணுவே}, உனது பராக்கிரமத்தினாலேயே, தேவர்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {விஷ்ணுவே}, உனது கோபமே நூற்றுக்கணக்கான பெரும் தைத்தியத் {அசுரத்} தலைவர்களை அழித்தது. நீயே படைப்பவனும், உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களையும் அழிப்பவனும் ஆவாய். உன்னை வணங்கியே தேவர்கள் மகிழ்ச்சியை அடைகின்றனர்". இப்படியே, ஓ! யுதிஷ்டிரா, உயர் ஆன்ம உதங்கர் புலன்களின் தலைவனைப் {விஷ்ணுவைப்} புகழ்ந்தார். ஆகையால், விஷ்ணு உதங்கரிடம், "நான் உன்னிடம் திருப்தி கொண்டேன். நீ விரும்பும் வரத்தைக் கேள்" என்றான். அதற்கு உதங்கர், "அண்டத்தின் தலைவனும், தெய்வீகப் படைப்பாளனும் நித்தியமானவனான ஹரியை என்னால் காண முடிந்தது. உண்மையில், இதுவே எனக்குப் பெரும் வரமாகும்!" என்றார் {உதங்கர்}.

இப்படிச் சொல்லப்பட்ட விஷ்ணு {உதங்கரிடம்}, "ஓ! மனிதர்களில் சிறந்தவனே {உதங்கா}, லாபத்தில் விருப்பமில்லாத்தன்மையையும், உனது அர்ப்பணிப்பையும் கண்டு நான் திருப்தியடைந்தேன். ஆனால், ஓ! அந்தணா, ஓ! மறுபிறப்பாளனே, நீ நிச்சயம் என்னிடம் ஒரு வரத்தைப் பெற வேண்டும்" என்றான். வரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஹரியின் {விஷ்ணுவின்} கோரிக்கையின்படி உதங்கர், ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, கரங்கள் கூப்பி ஒரு வரத்தை யாசித்தார். "ஓ! சிறப்புமிக்கவனே {விஷ்ணுவே}, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவனே, நீ என்னிடம் திருப்தியடைந்தாயானால், எனது இதயம் எப்போதும் அறம், உண்மை {சத்தியம்}, தன்னடக்கம் {சுய அடக்கம்} ஆகியவற்றைப் {உறுதியுடன்} பற்றி, எப்போதும் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கட்டும்" என்றார் {உதங்கர்}.

உதங்கின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, "ஓ! மறுபிறப்பாளனே, இவை அனைத்தும் எனது அருளால் நடைபெறும். சொர்க்கத்தில் வசிப்பவர்களுக்காவும் {தேவர்களுக்காகவும்}, மூவுலகங்களுக்காவும் நீ ஒரு பெரிய காரியத்தைச் சாதிக்க வேண்டியுள்ளது. அதற்கு உரிய யோக சக்தி உன்னிடம தோன்றும். மூவுலகங்களையும் அழிக்கும் நோக்குடன் துந்து என்ற பெயர் கொண்ட ஒரு பெரும் அசுரன் கடும் தவம் செய்து வருகிறான். அவ்வசுரனை யார் கொல்வார் என்பதைக் குறித்துக் கேள். ஓ! மகனே {உதங்கா}, ஒப்பற்ற சக்தியும், பெரும் பராக்கிரமும் கொண்ட ஒரு மன்னன் இக்ஷவாகு குலத்தில் பிருகதஸ்வன் என்ற பெயரில் அறியப்படுவான். அவன் {பிருகதஸ்வன்}, பெரும்புனிதமும், தன்னடக்கமும், புகழும், குவலாஸ்வன் என்ற பெயரும் கொண்ட மகனைப் பெறுவான். எனது யோக சக்தியில் எழும்பும் அந்த மன்னர்களில் சிறந்தவன் {குவலாஸ்வன்}, உன்னால் கட்டளையிடப்பட்டும், தூண்டப்பட்டும், ஓ! மறுபிறப்பாள முனிவா {உதங்கா}, அம்மன்னன் {குவலாஸ்வன்}, அசுரன் துந்துவைக் கொல்பவனாவான்" என்றான் {விஸ்ணு}. அந்த அந்தணரிடம் {உதங்கரிடம்} அப்படிச் சொன்ன விஷ்ணு அங்கேயே மறைந்து போனான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்