Showing posts with label ஜராசந்தன். Show all posts
Showing posts with label ஜராசந்தன். Show all posts

Sunday, October 22, 2017

ஜராசந்தனின் நட்பு! - சாந்திபர்வம் பகுதி – 05

The friendship with Jarasandha! | Shanti-Parva-Section-05 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 05)


பதிவின் சுருக்கம் : கர்ணனை எதிர்த்த ஜராசந்தன்; ஜராசந்தனைப் பிளக்க ஆயத்தமான கர்ணன்; கர்ணனின் தோழமையை வேண்டி அவனுக்கு மாலினி என்ற நகரத்தைக் கொடுத்த ஜராசந்தன்; கர்ணனின் மரணத்துக்கான காரணங்கள்...


நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "மகதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஜராசந்தன், கர்ணனின் வலிமை குறித்த புகழைக் கேட்டு அவனோடு தனிப்போரில் ஈடுபட அவனை அறைகூவி அழைத்தான்.(1) தெய்வீக ஆயுதங்களை அறிந்தவர்களான அவர்கள் இருவருக்கிடையில் ஒரு கடும்போர் நடந்தது. அதில் அவர்கள் பல்வேறு வகை ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கினர்.(2) இறுதியாக அவர்களது கணைகள் தீர்ந்து, விற்களும், வாள்களும் உடைந்து, அவர்கள் இருவரும் தேரற்றவர்கள் ஆன பிறகு, வலிமைமிக்கவர்களான அவர்கள் வெறுங்கரங்களால் போரிடத் தொடங்கினர். தன் எதிராளியுடன் வெறுங்கரங்களால் தனிப்போரில் {மற்போரில்} ஈடுபட்ட கர்ணன், ஜரையால் ஒருங்கிணைக்கப்பட்ட அவனது {ஜராசந்தனின்} உடலை இரண்டாகப் பிளக்க ஆயத்தமானான்[1].(4)

Saturday, November 12, 2016

“கடோத்கசனை நானே கொன்றிருப்பேன்!” என்ற கிருஷ்ணன்! - துரோண பர்வம் பகுதி – 181

“I myself would have slain Ghatotkacha!” said Krishna | Drona-Parva-Section-181 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 29)

பதிவின் சுருக்கம் : முன்பே பலராமனால் ஜராசந்தனின் கதாயுதம் அழிக்கப்பட்டதையும், அவனது வளர்ப்புத்தாயான ஜரை கொல்லப்பட்டதையும் சொன்ன கிருஷ்ணன்; கபடமாக ஏகலவ்யன் கட்டைவிரல் இழக்கச் செய்யப்பட்டது, சிசுபாலன் கொல்லப்பட்டது, ஹிடிம்பன் முதலான ராட்சசர்கள் கொல்லப்பட்டது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணன்; கடோத்கசன் செய்த தீமைகளைச் சொல்லி, தானே அவனைக் கொல்ல வேண்டியிருந்த அவசியத்தை அர்ஜுனனிடம் சொன்ன கிருஷ்ணன்...


அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “எங்களுக்கு நன்மை செய்யும்பொருட்டு, ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பூமியின் தலைவர்களான அந்த ஜராசந்தனும், பிறரும் எந்த வழிமுறைகளில் எவ்வாறு கொல்லப்பட்டனர்?” என்று கேட்டான்.(1)


அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஜராசந்தன், சேதிகளின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, நிஷாத மன்னனின் {ஹிரண்யதனுசின்} வலிமைமிக்க மகன் {ஏகலவ்யன்} ஆகியோர் கொல்லப்பட்டாமல் இருந்திருந்தால், அவர்கள் {நமக்குப்} பயங்கரமானவர்களாக இருந்திருப்பார்கள்.(2) துரியோதனன், (தன் தரப்பைத் தழுவும்) அந்த முதன்மையான தேர்வீரர்களைத் தேர்ந்தெடுத்திருப்பான், என்பதில் ஐயமில்லை. அவர்கள் நம்முடன் எப்போதும் பகைமையுடனே இருந்தனர், மேலும் அவர்கள் அனைவரும் கௌரவர்களின் தரப்பையே அடைந்திருப்பார்கள்.(3) அவர்கள் அனைவரும், வீரர்களாகவும், ஆயுதங்களில் சாதித்த வலிமைமிக்க வில்லாளிகளாகவும், போரில் உறுதிமிக்கவர்களாகவும் இருந்தனர். (ஆற்றலில்) தேவர்களைப் போன்ற அவர்கள், திருதராஷ்டிரரின் மகனை {துரியோதனனைப்} பாதுகாத்திருப்பார்கள்.(4). உண்மையில், சூதன் மகன் {கர்ணன்}, ஜராசந்தன், சேதிகளின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, நிஷாதன் மகன் {ஏகலவ்யன்} ஆகியோர் சுயோதனனின் {துரியோதனனின்} தரப்பை அடைந்து, மொத்த உலகையும் வெற்றி கொண்டிருப்பார்கள்.(5) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, எந்த வழிமுறைகளால் அவர்கள் கொல்லப்பட்டனர் என்பதைக் கேட்பாயாக. உண்மையில் வழிமுறைகளுடன் {உபாயங்களுடன்} செயல்படாவிட்டால், தேவர்களே கூடப் போரில் அவர்களை வெல்ல முடியாது.(6) அவர்களில் ஒவ்வொருவரும், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, லோகபாலர்களின் பாதுகாப்பில் இருக்கும் தேவர்களின் மொத்த படையுடனும் போரிடக் கூடியவர்கள் ஆவர்.(7)

(ஒரு சந்தர்ப்பத்தில்) பலதேவரால் {பலராமரால்} தாக்கப்பட்ட ஜராசந்தன், கோபத்தால் தூண்டப்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் கொல்லவல்ல கதாயுதம் ஒன்றை எங்களை அழிப்பதற்காக {எங்கள் மீது} வீசினான்.(8) நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்தக் கதாயுதமானது, சக்ரனால் {இந்திரனால்} வீசப்பட்ட வஜ்ரத்தின் மூர்க்கத்துடன், பெண்களின் கூந்தலைப் பிரிக்கும் வகிட்டைப் போல ஆகாயத்தைப் பிரித்துக் கொண்டு, எங்களை நோக்கி {மூர்க்கமாக} வந்து கொண்டிருந்தது.(9) எங்களை நோக்கி அப்படி வந்து கொண்டிருந்த அந்தக் கதாயுதத்தைக் கண்ட ரோஹிணியின் மகன் {பலராமர்}, அதைக் கலங்கடிப்பதற்காக ஸ்தூணகர்ணம் என்று அழைக்கப்படும் ஆயுதத்தை வீசினார்.(10) பலதேவருடைய ஆயுதத்தின் சக்தியால் வலுவிழந்த அந்தக் கதாயுதம், பூமியில் விழுந்து மலைகளையே நடுங்கச் செய்தபடி (அதன் வலிமையால்) அவளை {பூமியைப்} பிளந்தது.(11)

அப்போது ஜரை என்ற பெயரில் பெரும் ஆற்றலைக் கொண்ட ஒரு பயங்கர ராட்சசி இருந்தாள். ஓ! இளவரசே {அர்ஜுனா}, அவளே {அந்த ஜரையே} அந்த எதிரிகளைக் கொல்பவனை {ஜராசந்தனை} ஒருங்கிணைத்தவளாவாள். எனவே, பின்னவன் ஜராசந்தன் என்று அழைக்கப்பட்டான்.(12) ஜராசந்தன் ஒரு குழந்தையின் இரு பாகங்களால் ஆனவனாவான். அந்த இரு பாகங்களையும் ஜரை ஒருங்கிணைத்தாள் என்பதாலேயே அவன் ஜராசந்தன்[1] என்று அழைக்கப்படலானான்.(13) அப்போது பூமிக்குள் இருந்த அந்த ராட்சசப் பெண் {ஜரை}, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்தக் கதாயுதம் மற்றும் ஸ்தூணகர்ணம் என்ற ஆயுதம் ஆகியவற்றின் மூலம், தன் மகன் மற்றும் சொந்தங்களுடன் சேர்த்துக் கொல்லப்பட்டாள்.(14) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அந்தப் பெரும்போரில் தன் கதாயுதத்தை இழந்த[2] ஜராசந்தன்,  பின்னர் உன் முன்னிலையில் பீமசேனரால் கொல்லப்பட்டான்.(15) அந்த வீர ஜராசந்தன் தன் கதாயுதத்துடன் நின்றால், ஓ! மனிதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, இந்திரனின் தலைமையிலான தேவர்களாலேயே கூடப் போரில் அவனைக் {ஜராசந்தனைக்} கொல்ல முடியாது.(16)

[1] “ஜரையால் இணைக்கப்பட்டவன் என்பது பொருள்” என இங்கே விளக்குகிறார் கங்குலி. இரு தாய்மார்களால் தனித்தனியான இரு பகுதிகளாகப் பெற்றெடுக்கப்பட்டு, ஜரையினால் ஒன்றுசேர்க்கப்பட்டவன் ஜராசந்தன்.

[2] “{இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும்} சகதயா Sagadaya என்ற ஒரு சொல் ’ராட்சசத் தன்மையை இழந்தது” என்றும், “கதாயுதத்தை இழந்தது’ என்றும் பொருளைக் தருகிறது என்று நீலகண்டர் நினைக்கிறார். இது வலிந்து பெறப்படும் பொருளாகவே தெரிகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "பெரிய யுத்தத்தில் கதையில்லாமலிருந்த அந்த ஜராசந்தன் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீமசேனனால் கொல்லப்பட்டான்" என்றிருக்கிறது.

கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட நிஷாதன் மகனும் {ஏகலவ்யனும்}, அவனது ஆசானின் நிலையை ஏற்ற துரோணரால் உனது நன்மைக்காகவே கபடமாகத் தனது கட்டைவிரல் இழக்கச் செய்யப்பட்டான்.(17) செருக்கும், நிலையான ஆற்றலும் கொண்ட அந்த நிஷாதன் மகன் {ஏகலவ்யன்}, கையில் தோலுறைகளைப் பூட்டிக் கொண்டு, இரண்டாவது ராமனை {பரசுராமனைப் போலப்} பிரகாசமாகத் தெரிந்தான்.(18) கட்டைவிரலை இழக்காத ஏகலவ்யன், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, {ஒன்றாகச் சேர்ந்திருக்கும்} தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், உரகர்கள் ஆகியோராலும் போரில் வெல்லப்பட முடியாதவனாவான்.(19) உறுதியான பிடி கொண்டவனும், ஆயுதங்களில் சாதித்தவனும், இரவும் பகலும் இடையறாமல் கணையேவக்கூடியவனுமான அவன் {ஏகலவ்யன்}, சாதாரண மனிதர்களால் பார்க்கப்படக்கூட முடியாதவனாக {பார்க்கப்பட முடியாத அளவுகு சக்தியைக் கொண்டு} இருந்தான்.(20) உனது நன்மைக்காவே போர்க்களத்தில் என்னால் அவன் {ஏகலவ்யன்} கொல்லப்பட்டான்.

பெரும் ஆற்றலைக் கொண்ட சேதிகளின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, உன் கண் முன்பாகவே என்னால் கொல்லப்பட்டான்.(21) அவனும் {சிசுபாலனும்}, ஒன்றுசேர்ந்த தேவர்களாலும், அசுரர்களாலும் போரில் வெல்லப்பட முடியாதவனாகவே இருந்தான். ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, உலகத்தின் நலனை விரும்பி, அவனையும் {சிசுபாலனையும்}, தேவர்களின் பிற எதிரிகளையும் உன் உதவியுடன் கொல்லவே நான் பிறப்பை எடுத்தேன். ஹிடிம்பன், பகன், கிர்மீரன் ஆகியோர் அனைவரும் பீமசேனரால் கொல்லப்பட்டனர்.(23) அந்த ராட்சசர்கள் அனைவரும் ராவணனின் பலத்தைக் கொண்டவர்களாகவும், பிராமணர்கள் மற்றும் வேள்விகளை அழிப்பவர்களாகவும் இருந்தனர். அதே போல, பெரும் மாயா சக்திகளைக் கொண்ட அலாயுதனும் ஹிடிம்பையின் மகனால் {கடோத்கசனால்} கொல்லப்பட்டான்.(24)

ஈட்டியுடன் {சக்திஆயுதத்துடன்} கூடிய கர்ணனின் மூலம் நானே வழிமுறைகளுடன் செயல்பட்டு ஹிடிம்பையின் மகனையும் {கடோத்கசனையும்} கொன்றேன். இந்தப் பெரும்போரில் தன் ஈட்டியை {சக்தி ஆயுதத்தைக்} கொண்டு கர்ணன் அவனைக் {கடோத்கசனைக்} கொல்லாதிருந்தால்,(25) பீமசேனர் மகனான கடோத்கசனை நானே கொல்ல வேண்டி இருந்திருக்கும். உனக்கு நன்மை செய்ய விரும்பியே நான் முன்பே அவனை {கடோத்கசனைக்} கொல்லாதிருந்தேன்.(26) அந்த ராட்சன் {கடோத்கசன்}, பிராமணர்களுக்கும், வேள்விகளுக்கும் எதிரியாக இருந்தான். அவன் {கடோத்கசன்} வேள்விகளை அழிப்பவனாகவும், பாவகர ஆன்மாக் கொண்டவனாகவும் இருந்த காரணத்தால் தான் இவ்வாறு கொல்லப்பட்டான்.(27) ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, அந்தச் செயல்பாட்டையே {கடோத்கசனின் கொலையையே ஒரு} வழிமுறையாகக் கொண்டு, சக்ரனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்ட ஈட்டியும் {சக்தி ஆயுதமும்} பயனற்றதாகச் செய்யப்பட்டது.

ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீதியை {அறத்தைக்} கொல்பவர்கள் யாவரும் என்னால் கொல்லத்தக்கவர்களாவர்.(28) நீதியை {அறத்தை} நிலைநிறுத்துவதற்காகவே என்னால் அச்சபதம் செய்யப்பட்டது. வேதங்கள், உண்மை {சத்தியம்}, தற்புலனடக்கம், தூய்மை, நீதி {அறம்}, பணிவு, செழுமை, அறிவு {ஞானம்}, பொறுமை ஆகியவற்றை எங்கே எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறதோ,(29) அங்கே எப்போதும் நான் இருப்பேன். கர்ணனைக் கொல்வது குறித்து நீ கவலைகொள்ளத் தேவையில்லை. அவனை {கர்ணனை} நீ கொல்லும் வழிமுறைகளை நான் உனக்குச் சொல்வேன். விருகோதரும் {பீமரும்} சுயோதனனைக் {துரியோதனனைக்} கொல்வதில் வெல்வார்.(31) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அதை அடைய வேண்டிய வழிமுறைகளையும் நான் உனக்குச் சொல்வேன். அதே வேளையில் {இதோ பார்}, பகைவரின் படையால் உண்டாக்கப்படும் ஆரவாரமானது அதிகரித்து வருகிறது.(32) உனது துருப்புகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுகின்றன. தங்களது நோக்கங்கள் நிறைவேறிய கௌரவர்கள் உன் படையை அழித்து வருகின்றனர். உண்மையில், தாக்குபவர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணர் போரில் நம்மை எரித்து வருகிறார்” என்றான் {கிருஷ்ணன்}” {என்றான் சஞ்சயன்}.(33)
------------------------------------------------------------------------------
துரோணபர்வம் 181-ல் உள்ள சுலோகங்கள் : 33

ஆங்கிலத்தில் | In English

Monday, September 23, 2013

ஜராசந்தனை இரண்டாக உடைத்த பீமன் - சபாபர்வம் பகுதி 24

Jarasandha was broke into two! | Sabha Parva - Section 24 | Mahabharata In Tamil

(ஜராசந்த வத பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : பீமன் ஜராசந்தனைக் கொன்றது; கிருஷ்ணன் மலைக்கோட்டையில் அடைபட்டிருந்த மன்னர்களை விடுவித்தது; ஜராசந்தனின் தெய்வீகத் தேரை எடுத்துக் கொண்டது; ஜராசந்தனின் மகனை அரியணையில் அமர்த்தியது; மன்னர்களின் பரிசையும், சகாதேவனின் {ஜராசந்தன் மகன்} பரிசையும் கிருஷ்ணன் ஏற்றுக் கொண்டது. கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் ஆகியோர் இந்திரப்பிரஸ்தம் திரும்பியது; யுதிஷ்டிரன் மகிழ்ச்சி அடைந்தது; அந்தத் தெய்வீக தேரை கிருஷ்ணனுக்கு யுதிஷ்டிரன் கொடுப்பது; கிருஷ்ணன் துவராகைக்கு மனோவேகத்தில் திரும்பியது...

Wrestling between Jarasandha and Bhima
வைசம்பாயனர் சொன்னார், "இப்படிச் சொல்லப்பட்ட பீமன் ஜராசந்தனைக் கொல்வதில் உறுதி பூண்டு, யது குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனிடம், "ஓ யது குலத்தின் புலியே, ஓ கிருஷ்ணா, போதிய பலத்துடன் என்னுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பாவியை நான் மன்னிக்க மாட்டேன்" என்றான்.(1,2) பீமனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மனிதர்களில் புலியான கிருஷ்ணன், தாமதமில்லாமல் ஜராசந்தனைக் கொல்வதற்கு அந்த வீரனை {பீமனை} ஊக்குவிக்கும் வகையில், "ஓ பீமரே, நற்பேற்றின் காரணமாக (உமது தந்தையான) தேவன் மருத்தனிடம் {வாயுத்தேவனிடம்) நீர் அடைந்த பெரும் பலத்தை, ஜராசந்தனிடம் பயன்படுத்துவீராக" என்றான்.(3,4) இப்படி கிருஷ்ணனால் சொல்லப்பட்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பீமன், பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தனைக் காற்றில் உயரமாகத் தூக்கி சுழற்றத் தொடங்கினான்.(5) ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, இப்படியே காற்றில் அவனை {ஜராசந்தனை} நூறு முறை சுழற்றி, ஜராசந்தனின் முதுகெலும்பில் தன் கால் முட்டியை வைத்த பீமன், அவனது உடலை இருகூறுகளாக உடைத்துப் போட்டான். இப்படி அவனை {ஜராசந்தனைக்} கொன்ற அந்தப் பெரும்பலம் வாய்ந்த விருகோதரன் பயங்கர முழக்கம் செய்தான்.(6) பீமன் அப்படி ஜராசந்தனை உடைத்துப்போட்டு பிறகு, அந்தப் பாண்டவனின் {பீமனின்} முழக்கம், ஜராசந்தனின் மரண ஓலம், பேரொலியாக எழுந்து அனைத்து உயிர்களின் இதயத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியது.(7) மகதத்தின் குடிமக்கள் அனைவரும் இதைக் கண்ட பயங்கரத்தால் ஊமைகளாகினர். இதைக் கண்ட பல பெண்கள் தகுந்தகாலத்திற்கு முன்பே கருக்களை ஈன்றெடுத்துவிட்டனர்.(8) இந்த முழக்கங்களைக் கேட்ட மகத மக்கள், இமயம் பிளந்து பூமியில் விழுந்து இரண்டாகக் கிடக்கிறதோ என்று நினைத்தனர்.(9) பிறகு அந்த எதிரிகளை ஒடுக்குபவர்கள், உறங்குவது போல கிடந்த மன்னனின் உயிரற்ற உடலை அரண்மனை வாயிலில் விட்டுவிட்டு அந்த நகரத்தை விட்டு வெளியே சென்றனர்.(10)

பிறகு கிருஷ்ணன் கொடிக்கம்பத்துடன் கூடிய ஜராசந்தனின் தேரை ஆயத்தமாக்கி, அதில் அந்தச் சகோதரர்களை பயணிக்கச் செய்து, (சிறையில் இருந்த) தனது உறவினர்களை விடுவித்தான்.(11) பெரும் அளவிலான தங்கத்தையும், செல்வங்களையும் கொண்ட அந்த மன்னர்கள், கொடூரமான விதியில் இருந்து காப்பாற்றப் பட்டதால், அவர்கள் கிருஷ்ணனை அணுகி பல பொன்னையும் ரத்தினங்களையும் அவனுக்குப் பரிசாக அளித்தனர்.(12) தன் எதிரியை வீழ்த்திய கிருஷ்ணன், ஆயுதங்களுடன் எந்தக் காயமும் இன்றி, (விடுவிக்கப்பட்ட) மன்னர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, (ஜராசந்தனின்) அந்தத் தெய்வீக தேரில் கிரிவ்ரஜத்தை விட்டு வெளியே வந்தான்.(13) இந்தப் பூமியில் எந்த ஏகாதிபதியாலும் வீழ்த்தப்பட முடியாதவனும், பேரழகனும், எதிரியைக் கொல்வதில் திறன் கொண்டவனும், தான் கொண்ட வில்லை இரு கைகளாலும் தாங்கக்கூடியவனும் (அர்ஜுனனும்), பெரும் பலங்கொண்டவனும் (பீமனும்), கிருஷ்ணன் தேரை ஓட்ட, பொல்லாங்கு நிறைந்த அந்த இடத்தில் இருந்து வெளியே வந்தனர்.(14)

வீரர்களான பீமனும் அர்ஜுனனும் பயணிக்க கிருஷ்ணனால் செலுத்தப்பட்ட, அந்த சிறந்த தேர் பேரழகு வாய்ந்ததாக இருந்தது.(15) பழங்காலத்தில் இந்த தேரில் நின்றே இந்திரனும் விஷ்ணுவும் (அசுரர்களுக்கு எதிராகப்) போரில் ஈடுபட்டனர். அந்தப் போருக்கு முக்கிய காரணமாகவும், பல கொலைகளுக்குக் காரணமாகவும் (பிருஹஸ்பதியின் மனைவி) தாரகை இருந்தாள். அந்த தேரை ஓட்டிக் கொண்டு வந்த கிருஷ்ணன் மலைக்கோட்டையை விட்டு வெளியே வந்தான்.(16) புடம்போட்ட பொன்னைப் போல பிரகாசித்து, வரிசையாக அலங்கரிக்கப்பட்ட மணிகள் குலுங்க, அதன் சக்கர ஒலி மேகத்தின் முழக்கத்தைப் போல இருக்க, போரில் வெற்றியை மட்டுமே தந்து, எவனுக்கு எதிராக செலுத்தப்படுகிறதோ அவனைக் கொல்லும் அந்த தேரில் இந்திரன், பழங்காலத்தில் தொண்ணூற்று ஒன்பது அசுரர்களைக் கொன்றிருக்கிறான். அந்த மனிதர்களில் காளைகள் (மூன்று மைத்துனர்களும்) அந்த தேரைப் பெற்றதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.(17,18) இரண்டு சகோதரர்களுடன் கூடியவனும், நீண்ட கரத்தைக் கொண்டவனுமான கிருஷ்ணன், (ஜராசந்தனின்) அந்த தேரில் அமர்ந்திருப்பதைக் கண்ட மகத மக்கள் மிகவும் வியப்படைந்தனர்.(19) ஓ பாரதா {ஜனமேஜயா), காற்றின் வேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டிருந்த அந்த தேரில் அமர்ந்திருந்த கிருஷ்ணன் பேரழகுடன் காணப்பட்டான்.(20) 

அந்தச் சிறந்த தேரில், பார்வைக்குப் புலப்படாத தெய்வீகக் கலை அம்சத்துடன் கொடிக்கம்பம் இணைக்கப்பட்டிருந்தது. வானவில்லின் பிரகாசம் கொண்ட அந்த அழகிய கொடிக்கம்பத்தை ஒரு யோஜனை தொலைவில் இருந்தும் காணலாம்.(21) கிருஷ்ணன் அதில் ஏறி வெளியே வரும்போது கருடனை நினைத்துக் கொண்டான். தன் தலைவனால் நினைக்கப்பட்ட கருடன், உடனே வந்து, கிராமங்களில் அனைவராலும் வழிபடப்படும் மரம் போல நின்றான்.(22) பாம்புகளை உண்டு வாழும் கனம் நிறைந்த உடல் கொண்ட கருடன், திறந்த வாயுடன் பயங்கரமாக முழங்கிக் கொண்டிருக்கும் எண்ணிலடங்கா உயிரினங்களைக் கொண்ட அந்த அற்புதத்தேரின் கொடிக்கம்பத்தில் அமர்ந்தான்.(23) அதன் பிறகு அந்த தேர் ஆயிரம் கதிர்களால் சூழப்பட்ட நடுப்பகல் சூரியன் போல பார்ப்பதற்கு கூசும்படி இருந்தது. ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த தெய்வீகக் கொடிக்கம்பம் எந்த மரத்தின் மீது மோதாதபடியும், மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாததாகவும், எந்த ஆயுதத்தாலும் தாக்கப்படாததாகவும் இருந்தது.(24,25) மனிதர்களின் புலியான அச்யுதன் {கிருஷ்ணன்}, மேக முழக்கம் புரியும் சக்கரங்களைக் கொண்ட அந்த தெய்வீக தேரில் பாண்டுவின் மகன்களுடன் {பீமன், அர்ஜுனனுடன்} பயணித்து, கிரிவ்ரஜத்தைவிட்டு வெளியே வந்தான்.(26)

கிருஷ்ணனால் செலுத்தப்பட்ட அந்தத் தேரானது வாசவனிடம் இருந்து மன்னன் வசுவால் பெறப்பட்டதும், வசுவிடம் இருந்து பிருஹத்ரதனால் பெறப்பட்டதும், பிறகு ஜராசந்தனிடம் வந்ததுமாக இருந்தது.(27) நீண்ட கரமும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களும், சிறப்புவாய்ந்த புகழும் கொண்டவன் {கிருஷ்ணன்}, கிரிவ்ரஜத்தைவிட்டு வெளியே வந்தும், நகருக்கு வெளியே ஒரு சம வெளியில் (சிறிது நேரம்) நின்றான்.(28) ஓ மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்களைத் தலைமையாகக் கொண்ட குடிமக்கள், அங்கே விரைந்து வந்து உரிய அறச்சடங்குகளுடன் வாழ்த்தினர்.(29) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னர்கள் அனைவரும் பெரும் மதிப்புடன் புகழும் வகையில் மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்},(30) "ஓ நீண்ட கரங்கொண்டவனே {கிருஷ்ணா}, ஜராசந்தனால் பீடிக்கப்பட்டு மிகுந்த துயரத்தில் இருந்த எங்களை இன்று நீ விடுவித்திருக்கிறாய். ஓ தேவகியின் மகனே {கிருஷ்ணா}, பீமன் மற்றும் அர்ஜுனனுடன் கூடி நீ சாதித்த இந்த அறச்செயல் இயல்புக்கு மீறிய சாதனையாகும்.(31,32) ஓ விஷ்ணுவே {கிருஷ்ணா}, ஜராசந்தனின் மலைக் கோட்டையில் அல்லலுற்ற எங்களை, நாங்கள் பெற்ற நற்பேற்றாலேயே விடுவித்தாய். இதனால், ஓ யது குலத்தின் மகனே {கிருஷ்ணா}, நீ செய்தற்கரிய செயலைச் செய்திருக்கிறாய்.(33) ஓ மனிதர்களில் புலியே, நாங்கள் உன்னை வணங்குகிறோம். நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடு. அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், உனது கட்டளையை அறிந்த நாங்கள், ஓ தலைவா {கிருஷ்ணா}, நிச்சயம் அதைச் சாதிப்போம்", என்று சொன்னார்கள்.(34) 

இப்படி அந்த ஏகாதிபதிகளால் சொல்லப்பட்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அவர்களுக்கு {விடுவிக்கப்பட்ட மன்னர்களுக்கு} அனைத்து உறுதிகளையும் கொடுத்துவிட்டு, அவர்களிடம் {விடுவிக்கப்பட்ட மன்னர்களிடம்}, "யுதிஷ்டிரர் ராஜசூய வேள்வி செய்ய நினைத்திருக்கிறார்.(35) அறத்தால் வழிநடத்தப்படும் அந்த ஏகாதிபதி, உயர்ந்த அதிகாரமுள்ள உண்மையான மதிப்பை அடைய விரும்புகிறார். என் மூலமாக இதை அறிந்து கொண்டு அவருக்கு அவரது காரியங்களில் உதவி செய்யுங்கள்" என்றான்.(36) 

ஓ மன்னா {ஜனமேஜயா}, இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த அந்த ஏகாதிபதிகள் கிருஷ்ணனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, "அப்படியே ஆகட்டும்!" என்றனர்.(37) இதைச் சொன்ன பூமியின் அந்தத் தலைவர்கள், பல நகைகளை தாசார்ஹ குலத்தவனுக்கு {கிருஷ்ணனுக்கு) பரிசாக அளித்தனர். பிறகு கோவிந்தன் {கிருஷ்ணன்}, அவர்களிடம் கொண்ட அன்பால், அவர்கள் கொடுத்த பரிசுகளில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டான்.(38)

பிறகு ஜராசந்தனின் மகனும், உயர்ந்த ஆன்மாவுமான சகதேவன், தனது உறவினர்களுடனும், தனது நாட்டின் முக்கிய அதிகாரிகளுடனும், புரோகிதரை தன் முன் கொண்டு அங்கே வந்தான்.(39) அந்த இளவரசன் {சகதேவன்}, பணிந்து வணங்கி, பெரும் பொற்குவியலையும், விலையுயர்ந்த கற்களையும் பரிசாகக் கொடுத்து, மனிதர்களில் தேவனான வாசுதேவனை {கிருஷ்ணனை} வழிபட்டான்.(40) பிறகு மனிதர்களில் சிறந்த கிருஷ்ணன் பயத்தில் இருந்த அந்த இளவரசனுக்கு {சகாதேவனுக்கு} அனைத்து உறுதிகளையும் கொடுத்து, பெருமதிப்பிலான அந்தப் பரிசுகளை ஏற்றுக் கொண்டான்.(41) மகிழ்ச்சியுடன் இருந்த கிருஷ்ணன் அந்த இளவரசனுக்கு மகதத்தின் ஆட்சியுரிமையைக் கொடுத்தான். அந்த மேன்மையான, மனிதர்களில் பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட, ஜராசந்தனின் சிறப்புவாய்ந்த மகன் {சகதேவன்}, அந்த நாட்டின் அரியணையில் அமர்த்தப்பட்டு, கிருஷ்ணனின் நட்பைப் பெற்று, பிருதையின் {குந்தியின்} மகன்களால் மதிப்புடன் நடத்தப்பட்டு, தனது தந்தையின் {ஜராசந்தனின்} நகருக்குள் மீண்டும் நுழைந்தான்.(42,43) பிருதையின் {குந்தியின்} மகன்களுடன் இருந்த பெரும் நற்பேறு பெற்ற மனிதர்களில் காளையான கிருஷ்ணன், எண்ணிலடங்கா நகைகளுடன் மகத நகரை விட்டு வெளியேறினான்.(44) பாண்டுவின் இரு மகன்களுடன் {பீமன், அர்ஜுனனுடன்} அச்யுதன் (கிருஷ்ணன்) இந்திரப்பிரஸ்தத்தை அடைந்தான். யுதிஷ்டிரனை மகிழ்ச்சியுடன் அணுகி, அந்த ஏகாதிபதியிடம்,(45) "ஓ மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நற்பேற்றின் நிமித்தமாக, பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தன் பீமரால் கொல்லப்பட்டான். (கிரிவ்ரஜ) சிறையில் அடைபட்டிருந்த மன்னர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.(46) மேலும் நற்பேற்றினால் பீமரும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்) அந்த நகரத்தில் காயமடையாமல் நலமுடன் தங்கள் சொந்த நகரத்திற்குத் திரும்பியிருக்கின்றனர்" என்றான்.(47) 

பிறகு யுதிஷ்டிரன், கிருஷ்ணனை அவனது தகுதிக்கேற்ப வழிபட்டு, பீமனையும் அர்ஜுனனையும் மகிழ்ச்சியுடன் வாரி அணைத்துக் கொண்டான்.(48) எதிரிகளற்ற அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகளின் வெற்றியாலும், ஜராசந்தனின் மரணத்தாலும் மிகவும் மகிழ்ந்து, தனது தம்பிகளுடன் அந்தச் சூழ்நிலையைக் கொண்டாடினான்.(49) பாண்டுவின் மகன்களில் மூத்தவன் (யுதிஷ்டிரன்), தனது தம்பிகளுடன் சேர்ந்து இந்திரப்பிரஸ்த்ததிற்கு வந்திருந்த மன்னர்களை, அவர்களது வயதுக்குத் தகுந்தபடி உற்சாகப்படுத்தி வழிபட்டு விடை கொடுத்து அனுப்பினான்.(50) யுதிஷ்டிரனால் கட்டளையிடப்பட்ட அந்த மன்னர்கள் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நேரந்தாழ்த்தாமல் தங்கள் வாகனங்களில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர்.(51) 

இப்படியே, ஓ மன்னா {ஜனமேஜயா}, மனிதர்களின் புலியும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் எதிரியான ஜராசந்தனின் மரணத்துக்குக் காரணமாக இருந்து, யுதிஷ்டிரனிடமும், பிருதையிடமும் {குந்தியிடமும்}, திரௌபதியிடமும், சுபத்திரையிடமும், பீமசேனனிடமும், அர்ஜுனன் மற்றும் நகுல சகாதேவர்களிடமும் விடைபெற்றான். தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்தும் விடைபெற்று, யுதிஷ்டிரனால் தனக்குக் கொடுக்கப்பட்ட அந்த தெய்வீகத் தேரில் தனது நகரத்திற்கு (துவாரகைக்கு) மனோ வேகத்துடன் சுற்றுச்சூழலின் பத்து புள்ளிகளை அந்தத் தேரின் சக்கர ஒலியால் கலங்கச் செய்து சென்றான்.(52,55) ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, கிருஷ்ணன் புறப்படத் தயாராக இருந்த போது, யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட பாண்டவர்கள், அந்தக் களைப்பறியா முயற்சியுடைய மனிதர்களில் புலியை {கிருஷ்ணனை} வலம் வந்தனர்.(56)
தேவகியின் மகனான அந்தச் சிறப்பு வாய்ந்த கிருஷ்ணன், (இந்திரப்பிரஸ்தத்தை விட்டு) சென்ற பிறகு, பெரும் வெற்றியை அடைந்து, மன்னர்களின் பயத்தை விலக்கிய காரியம் செய்த அந்தப் பாண்டவர்கள் புகழுடன் இருந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்தப் பாண்டவர்கள் தங்கள் நாட்களை கடத்தி, திரௌபதியை மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் வைத்திருந்தனர். அந்த நேரத்தில் அறம், இன்பம், பொருள், ஆகியவற்றுக்குச் சரியாக மன்னன் யுதிஷ்டிரன் தனது குடிமக்களைக் காத்து வந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(57-59)

ஆங்கிலத்தில் | In English

பதினாலாவது நாளில் ஓய்ந்த ஜராசந்தன் - சபாபர்வம் பகுதி 23

Jarasandha tired out on fourteenth day! | Sabha Parva - Section 23 | Mahabharata In Tamil

(ஜராசந்த வத பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : ஜராசந்தன் மோதுவதற்கு பீமனைத் தேர்ந்தெடுத்தல்; கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் போர் தொடங்கல்; ஜராசந்தனுக்கும் பீமனுக்கும் நடந்த உக்கிரமான போர்; உணவு உறக்கம் இல்லாமல் நடந்த பதிமூன்று நாள் போர்; பதினாலாவது நாளில் ஜராசந்தன் களைத்துப் போதல்; அதை கிருஷ்ணன் பீமனுக்கு உணர்த்துதல்; பீமன் ஜராசந்தனைக் கொல்ல விரும்புதல்…

Jarasandha encounters Bhima

வைசம்பாயனர் சொன்னார், "அனைத்துப் பேச்சாளிகளிலும் முதன்மையானவனும், யாதவ குலத்தைச் சார்ந்தவனுமான கிருஷ்ணன், போரிடத் தீர்மானித்திருந்த ஜராசந்தனிடம்,(1) "ஓ மன்னா {ஜராசந்தா}, எங்கள் மூவரில் நீ யாருடம் போரிட விரும்புகிறாய்? எங்களில் யார் {உன்னுடனான} போரிட ஆயத்தமாக வேண்டும்?" என்று கேட்டான்.(2)

Sunday, September 22, 2013

"அடப்பாவி! நீயா அப்பாவி?" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 22

"You sinner, are you innocent?" said Krishna! | Sabha Parva - Section 22 | Mahabharata In Tamil

(ஜராசந்த வத பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : தான் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ததாக நினைவில்லை என்று ஜராசந்தன் கூறல்; கிருஷ்ணன் சிறையில் அடைபட்டிருக்கும் மன்னர்களைக் குறித்துச் சொல்லல்; மனிதபலியை உலகம் கண்டதில்லை என்று கூறல்; க்ஷத்திரியர்களின் கடமையை ஜராசந்தன் நினைவூட்டல்; மன்னர்களை விடுவிக்க முடியாதெனவும், மோதுவதற்குத் தயார் எனவும் ஜராசந்தன் கூறல்…

Jarasandha speaking to Krishna

ஜராசந்தன் சொன்னான், "நான் எப்போது உங்களுக்கு தீங்கேதும் செய்தேன் என்று என்னால் நினைவுகூர முடியவில்லை. கவனமாக எனது மனத்தில் நினைத்துப் பார்த்தாலும், நான் உங்களுக்கு என்ன காயமிழைத்தேன் என்று அறிய முடியவில்லை.(1) நான் உங்களுக்கு எத்தீங்கும் இழைக்காத அப்பாவியாக இருக்கும்போது, பிராமணர்களாகிய நீங்கள் ஏன் என்னை பகைவனாகக் கருதுகிறீர்கள்? எனக்கு உண்மையுடன் பதில் சொல்லுங்கள். அதுவே நேர்மையானவர்கள் நடந்து கொள்ளும் முறை.(2) ஒருவரின் இன்பத்திற்கோ அறத்திற்கோ செய்யப்படும் தீங்கு துன்பம் மிகுந்ததாகும். ஓர் அப்பாவி மனிதனின் இன்பதுக்கோ, அறத்திற்கோ தீங்கு செய்யும் ஒரு க்ஷத்திரியன், பெரும் வீரனாகவும், அறவிதிகளை அறிந்தவனாகவும் இருந்தாலும் கூட, பாவிகளுக்கு ஏற்படும் விதி போல, அவன் செழிப்பில் இருந்து வீழ்வான்.(3,4) க்ஷத்திரியர்களின் வழிமுறைகளே மூன்று உலகிலும் நேர்மையானவை. உண்மையில், அறவிதிகளை அறிந்த மனிதர்கள் க்ஷத்திரிய வழிமுறைகளைப் புகழவே செய்கிறார்கள்.(5) எனது {க்ஷத்திரிய} வகைக்கான முறைகளை உறுதியான ஆன்மாவுடன் பின்பற்றும் நான், எனக்குக் கீழ் இருப்பவர்களுக்குத் தீங்கிழைத்ததில்லை. எனவே, இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் என் மீது வைத்தால் அது பிழையானது ஆகும்" {என்றான் ஜராசந்தன்}.(6)

ஜராசந்தனை எதிர்கொண்ட கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 21

Krishna met Jarasandha! | Sabha Parva - Section 21 | Mahabharata In Tamil

(ஜராசந்த வத பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அந்த நகரத்தின் பெருமையை எடுத்துச் சொல்வது; கிருஷ்ணன் பீமன் அர்ஜுனன் ஆகியோர் மகத நகருக்குள் நுழைவது; ஒரு மலைச்சிகரத்தைத் தங்கள் கணைளால் உடைப்பது; முறையற்ற வாசல் வழியாக ஜராசந்தனை அணுகுவது; ஜராசந்தன் அவர்களுக்கு மரியாதை செய்வது; ஸ்நாதக பிராமணர்கள் யார் என்பதை கிருஷ்ணன் ஜராசந்தனுக்குத் தெரிவிப்பது; கிருஷ்ணன் ஜராசந்தனை பகைவன் என்று சொல்வது…

Krishna, Bhima and Arjuna head to Magadha as brahmins in guise.

வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்னான், "ஓ பார்த்தா {அர்ஜுனா}, அழகாக எழுந்து நிற்கும் மகதத்தின் பெரும் தலைநகரைப் பார். கால்நடைக் கூட்டங்களாலும், வற்றாத நீர்த்தேக்கங்களாலும், சரியான வரிசையில் நிற்கும் நன்றாக அலங்கரிக்கப்பட்ட ஐந்து மாளிகைளுடன் இருக்கும் இந்த நகரம் அனைத்து பேரிடர்களில் இருந்தும் விடுபட்டதாக இருக்கிறது.(1) பெரும் சிகரங்களையும், இடைவிடாமல் தொடர்ச்சியாக ஒன்றன் மேல் ஒன்று சாய்ந்தவையாக குளிர்ந்த நிழலைத் தரும் உயர்ந்த மரங்களையும் கொண்ட வைஹரம் {விபுலம்}, வராஹம், ரிஷபம், ரிஷிகிரி மற்றும் காண்பதற்கினிய சைத்தியா {சைத்தியகம்} ஆகிய ஐந்து பெரும் மலைகளும் அந்த கிரிவ்ரஜம் என்ற நகரத்திற்கு பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன.(2,3) அந்த மலைகளின் மார்புகள் காண்பதற்கினிய கானகம் மற்றும் நறுமணம் வீசும் லோத்திர மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரங்களாலும் மறைக்கப்பட்டிருக்கிறது.(4) இங்கேதான் கடும் நோன்புகள் நோற்ற சிறப்பு வாய்ந்த கௌதமர் {தீர்க்கதமஸ்}, சூத்திரப் பெண்ணான ஔசிநரியிடம் {உசீநரனின் மகளிடம்} கக்ஷீவத் {கக்ஷீவான்} மற்றும் பிற கொண்டாடப்பட்ட மகன்களைப் பெற்றெடுத்தார்[1].(5) கௌதமரிடம் இருந்து உற்பத்தியான அந்த குலம் இன்னும் இயல்பான மனித குலத்தின் (ஏகாதிபதிகளின்) ஆட்சியில் வாழ்வது, கௌதமர் மன்னர்களிடம் கொண்ட அன்பின் சாட்சியாக இருக்கிறது.(6) ஓ அர்ஜுனா, பழங்காலத்தின் அங்க, வங்க தேசங்கள் மற்றும் பிற தேசங்களின் பெரும் சக்தி வாய்ந்த ஏகாதிபதிகள் கௌதமரின் வசிப்பிடமான இந்த இடத்திற்கு வந்து மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கழித்தனர்.(7)

Saturday, September 21, 2013

ஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பகை - சபாபர்வம் பகுதி 19

The enmity between Jarasanda and Krishna! | Sabha Parva - Section 19 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : சந்தகௌசிகர் ஜராசந்தனின் வருநலமுரைத்தல்; அதே போல ஜராசந்தன் பெரும் பலத்துடன் வளர்தல்; கம்சன் மரணத்தால் ஜராசந்தனுக்கு கிருஷ்ணனுடன் ஏற்பட்ட பகை; யாதவர்கள் ஜராசந்தனுடன் மோதுவது இல்லை என்று தீர்மானத்துடன் இருந்தது…

கிருஷ்ணன் தொடர்ந்தான், "இது நடந்த சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் பெரும் துறவியான அந்த மேன்மைமிகு சண்டகௌசிகர் மகத நாட்டுக்கு வந்தார்.(1) அந்த முனிவரின் {சண்டகௌசிகரின்} வருகையால் மிகவும் மகிழ்ந்த மன்னன் பிருஹத்ரதன், தனது அமைச்சர்கள், புரோகிதர், மனைவியர், மகன் {ஜராசந்தன்} ஆகியோருடன் அவரை வரவேற்கச் சென்றான்.(2) ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, அந்த முனிவருக்குக் கால் மற்றும் முகம் கழுவ நீர் கொடுத்து, அர்க்கியம் கொடுத்து, பிறகு அந்த மன்னன் {பிருஹத்ரதன்}, அவருக்கு {சண்டகௌசிகருக்குத்} தனது மகனுடன் {ஜராசந்தனுடன்} சேர்ந்த நாட்டையே கொடுக்க முன் வந்தான்.(3)

சுயம்புவால் உருவாக்கப்பட்ட கிரகதேவி ஜரை! - சபாபர்வம் பகுதி 18

Grahadevi created by the Self create! | Sabha Parva - Section 18 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : பிருஹத்ரதனிடம் ஜரை தன்னை அறிமுகம் செய்து கொள்ளல்; தான் கிரகதேவி என்று சொல்லல்; பிருஹத்ரதன் அந்த ராட்சசிக்கு மரியாதை செலுத்த ஒரு விழாவை ஏற்பாடு செய்து; தனது பிள்ளைக்கு ஜரையின் பெயரையும் சேர்த்து ஜராசந்தன் என்ற பெயரைச் சூட்டல்...

கிருஷ்ணன் தொடர்ந்தான், "மன்னனின் {பிருஹத்ரதனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த ராட்சசப் பெண் {ஜரை}, "நீ அருளப்பட்டிரு. ஓ மன்னர்களுக்கு மன்னா, நினைத்த வடிவை அடையக்கூடிய ராட்சசப் பெண்ணான நான் ஜரை என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன். ஓ மன்னா {பிருஹத்ரதா}, நான் அனைவராலும் வழிபடப்பட்டு மகிழ்ச்சியுடன் உனது இல்லத்தில் வாழ்ந்து வருகிறேன்.(1) ஒவ்வொரு நாளும் நான் ஒரு மனிதனின் இல்லத்தில் இருந்து மற்றொரு மனிதனின் இல்லத்திற்கு சென்று வருகிறேன். உண்மையில் நான் பழங்காலத்தில் சுயம்புவால் படைக்கப்பட்ட போது, கிருகதேவி (வீட்டில் குடியிருக்கும் பெண் தெய்வம்) என்று பெயரிடப்பட்டேன்.(2)

Friday, September 20, 2013

ராட்சசி ஜரையால் உயிர்பெற்ற ஜராசந்தன்! - சபாபர்வம் பகுதி 17

Jarasandha given life by Jara! | Sabha Parva - Section 17 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை ஜராசந்தனுக்கு எதிராக கிருஷ்ணன் தூண்டுதல்; ஜராசந்தன் யார் என்று யுதிஷ்டிரன் கேட்டல்; ஜராசந்தனின் பிறப்பு ரகசியத்தை கிருஷ்ணன் சொல்லல்…

வாசுதேவன், "பாரத குலத்தில் பிறந்தவன், அதிலும் குறிப்பாக குந்தியின் மகனாக இருப்பவன், என்ன செய்ய வேண்டும் என்பதை அர்ஜுனன் சொல்லிவிட்டான்.(1) நம்மை மரணம் எப்போது வந்தடையும்? இரவிலா, பகலிலா என்பதை நாம் அறியோம். போரில் இருந்து விலகுவதால் சாகா வரம் பெறுவோம் என்பதையும் எப்போதும் நாம் கேள்விப்பட்டதில்லை.(2) எனவே, விதிப்படி அனைத்து எதிரிகளையும் தாக்குவது மனிதர்களின் கடமையாகிறது. இது எப்போதும் நமது இதயத்துக்கு நிறைவைத் தருகிறது.(3) விதியின் காரணமாக வெறுப்படையாமல், நல்ல கொள்கையின் துணை கொண்டு பணியை மேற்கொண்டால் நிச்சயம் நாம் வெற்றி மகுடத்தை அடைவோம். இதே தகுதிகளைக் கொண்ட இரு தரப்புகள், போரில் ஒருவருக்கொருவர் மோதும்போது, யாராவது ஒருவர் சிறப்படைந்தே ஆக வேண்டும், இருவரும் வெல்லவோ அல்லது இருவரும் தோற்கவோ முடியாது.(4)

அர்ஜுனன் கொடுத்த ஊக்கம்! - சபாபர்வம் பகுதி 16

Arjuna's Motivation! | Sabha Parva - Section 16 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் ஜராசந்தனை எதிர்ப்பதைக் கைவிட்டுவிடலாம் என்று சொல்லல்; அர்ஜுனன் அதற்குச் சமாதானம் கூறல்…

யுதிஷ்டிரன், "ஓ கிருஷ்ணா, தகுந்த மாட்சிமையில் விருப்பம் கொண்டு, என் ஆற்றலை மட்டுமே நம்பி சுய நல நோக்கத்துடன் செயல்பட்டு, எப்படி என்னால் அவனை {ஜராசந்தனை} அழிக்க முடியும்?(1) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பீமனையும், அர்ஜுனனையும் எனது கண்களாகவும், உன்னை எனது மனமாகவும் நான் நினைக்கிறேன். எனது கண்களையும், மனத்தையும் இழந்து என்னால் எப்படி வாழ முடியும்?(2) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ஜராசந்தனை யமனாலும் வீழ்த்த முடியாதே! அவற்றுக்கு எதிராக என்ன வகையான ஆற்றலை உன்னால் வெளிப்படுத்த முடியும்?(3) இந்தக் காரியத்தை முடிக்க வில்லை என்றால், நாம் பேரழிவிற்குள் தள்ளப்படுவோம் என்பது உறுதியாகத் தெரிகிறது. எனவே, வெல்லப்பட முடியாத காரியத்தைச் செய்யக்கூடாது என்பதே எனது கருத்து.(4) ஓ கிருஷ்ணா, நான் அடிக்கடி நினைப்பதை நீ கேட்பாயாக. ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்தக் காரியத்தைச் செய்வதில் இருந்து ஒதுங்குவதே நமக்கு நன்மை என எனக்குத் தெரிகிறது. இன்று எனது இதயம் துயரால் பீடிக்கப்பட்டிருக்கிறது. ராஜசூயம் அடைய முடியாத சாதனையாக எனக்குத் தெரிகிறது" என்றான் {யுதிஷ்டிரன்}.(5)

எண்பத்தாறு மன்னர்கள் சிறையில்! - சபாபர்வம் பகுதி 15

Eighty six kings in Jail! | Sabha Parva - Section 15 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் கிருஷ்ணனை மெச்சுவது; கிருஷ்ணன் யுதிஷ்டிரனையும் ஜராசந்தனையும் ஒப்பிடுதல்; எண்பத்தாறு மன்னர்கள் சிறைப்பட்டிருப்பதை உரைத்தல்; ஜராசந்தன் நூறு மன்னர்களைப் பிடித்து சிவனுக்குப் பலி கொடுப்போவதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்; ஜராசந்தனை வீழ்த்தினால் தான் ஒருவன் மாமன்னனாக முடியும் என்பதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்...

யுதிஷ்டிரன், {கிருஷ்ணனிடம்}" நீ புத்திசாலி, யாரும் சொல்ல முடியாததைச் சொல்லிவிட்டாய். இந்த உலகத்தில் வேறு யாருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் தகுதி இல்லை.(1) தங்கள் நன்மையைக் கருதும் மன்னர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாருக்கும் மாட்சிமைமிக்க தகுதி கிடையாது. உண்மையில், மாமன்னன் {சக்கரவர்த்தி} என்ற பட்டத்தை அடைவதற்கரியதாகும்.(2) மற்றவர்களின் ஆற்றலையும், பலத்தையும் அறிந்தவர்கள் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதில்லை. உண்மையில் புகழத்தகுந்தவன், எதிரிகளுடன் போரில் ஈடுபட்டு, பாராட்டுகளைத் தானே தாங்கிக் கொண்டிருப்பவன் ஆவான்.(3) விருஷ்ணி குலத்தின் மேன்மையைத் தாங்கும் நீ, இந்த விரிந்த உலகம் போல் இருக்கும் மனிதர்களின் ஆசைகளும் மனப்பாங்குகளும், பல்வேறு வகையாகவும் விரிவானவையாகவும் இருக்கின்றன என்பதை அறிந்தவனாவாய். தன் இல்லத்தைவிட்டுப் பல பகுதிகளுக்கும் பயணிப்பதால் உண்டாகும் அனுபவத்தினாலும், உயர்ந்த கொள்கைகளாலும், முக்தி அடையப்படுகிறதே ஒழிய, சாதாரண ஆசைகளாலும் மனப்பாங்குங்களாலும் அடையப்படுவதில்லை. மன அமைதியே உயர்ந்த தகுதி என நான் கருதுகிறேன். அந்த உயர்ந்த தகுதியில் இருந்தே செழிப்புண்டாகிறது. நான் இந்த வேள்வியைச் செய்தால், உயர்ந்த வெகுமதியை அடையமாட்டேன்.(5)

Thursday, September 19, 2013

ஊரைவிட்டு ஓடிய கிருஷ்ணன்! - சபாபர்வம் பகுதி 14 ஆ

Krishna ran out of his city | Sabha Parva - Section 14 B | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம்)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




யாதவர்கள் மதுராவில் இருந்து துவாரகைக்கு ஏன் வந்தனர் என்பதற்கு காரணத்தைக் கிருஷ்ணன் சொல்லல்; ஜராசந்தன் சிறையில் அடைத்து வைத்திருக்கும் மன்னர்களைப் பற்றிச் சொல்லல்; ராஜசூயம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஜராசந்தனைக் கொல்ல வேண்டும் என்று சொல்லல்;

ஜராசந்தனுக்கு பயந்து கிருஷ்ணன்
 துவாரகைக்கு ஓடுதல்
கிருஷ்ணன், "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஹன்சன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பதினெட்டு நாள் போர் புரிந்து ராமனால் {பலராமனால்} வீழ்த்தப்பட்டான் {கொல்லப்பட்டது போல மயக்கமுற்றான்}. ஆனால், ஓ பாரதா, ஹன்சன் கொல்லப்பட்டான் என்று மக்கள் சொல்வதைக் கேட்ட டிம்பகன், ஓ மன்னா, ஹன்சன் இல்லாது தான் வாழ முடியாது என்று நினைத்தான். அதனால் அவன் யமுனையின் நீரில் குதித்துத் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டான். பிறகு எதிரி வீரர்களைக் கொல்லும் ஹன்சன், டிம்பகன் தன்னைத் தானே கொன்று கொண்டான் என்பதைக் கேள்விப்பட்டு, யமுனைக்கு சென்று, அதன் நீரில் தானும் குதித்தான். பிறகு, ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, ஹன்சனும், டிம்பகனும் கொல்லப்பட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட ஜராசந்தன் வெறுமையடைந்த இதயத்துடன் தனது நாட்டிற்குத் திரும்பினான். ஜராசந்தன் திரும்பியதும், ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, மதுராவிலேயே தொடர்ந்து வாழ ஆரம்பித்தோம். பிறகு ஹன்சனின் விதவை மனைவியும், ஜராசந்தனின் மகளுமான தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அழகானப் பெண், தனது தலைவனின் மரணத்துக்காக துக்கமடைந்து, தனது தந்தையைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினாள். அவள் "ஓ எதிரிகளைக் கொல்பவரே, எனது கணவரைக் கொன்றவர்களைக் கொல்லும்" என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தாள்.


பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்களது பெரும் செல்வத்தைப் பிரித்து, சிறு சிறு பகுதிகளாக்கி, ஒவ்வொரு பகுதியையும் எளிதாக சுமந்து செல்லும்படியாக்கி, ஜராசந்தனுக்குப் பயந்து மதுராவை விட்டு எங்கள் மைத்துனர்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு ஓடினோம். அனைத்தையும் சிந்தித்து நாங்கள் மேற்கு நோக்கி ஓடினோம்.

மேற்கில் ரைவத மலைகளால் அலகங்கரிக்கப்பட்டிருந்த குசஸ்தலி {Kusasthali} என்ற அழகான நகரத்தை அடைந்தோம். அந்த நகரத்தில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டோம். நாங்கள் அதன் கோட்டைகளை தேவர்களும் புகமுடியாதபடி மறுபடி கட்டினோம். அதன் உள் இருந்து பெண்கள் கூட சண்டையிடமுடியும் எனும் போது, அச்சமற்ற யாதவ வீரர்கள் எப்படிப் போரிடுவார்கள்? ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் இப்போது அந்த நகரத்தில்தான் வாழ்கிறோம். ஓ குரு குலத்தின் புலியே {யுதிஷ்டிரரே}, மலைகளில் முதன்மையான அந்த மலையைக் கடக்க முடியாது என்று கருதியும், ஜராசந்தனின் மீதிருந்த பயத்தைக் கடந்து வந்துவிட்டோம் என்று கருதியும், மதுவின் வழித்தோன்றல்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இப்படியே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பலமும் சக்தியும் பெற்றிருந்தாலும், ஜராசந்தனின் ஒடுக்குதலால், நாங்கள் மூன்று யோஜனை நீளம் கொண்ட கோமந்தா மலையை அடைய பணிக்கப்பட்டோம். ஒவ்வொரு யோஜனையின் இடைவெளியிலும் நூறு{100} வளைவுகளில் நூறு{100} வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு யோஜனையிலும் இருபத்தியோரு{21} வகையான ஆயுதம் தாங்கிய வீரர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வாயிலும் வீரமிக்க வீரர்களால் பாதுகாக்கப்படுகிறது. பதினெட்டு யாதவ பிரிவுகளில் வரும் இளையவர்கள், இந்தப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்கள் குலத்தில் பதினெட்டாயிரம் {18000} சகோதரர்களும், மைத்துனர்களும் இருக்கிறோம். அஹூகனுக்கு நூறு{100} மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் (வீரத்தில்) தேவர்களைப் போல இருக்கின்றனர். சாருதேஷ்ணன், அவனது சகோதரன் சக்கரதேவன், சாத்யகி, நான் {கிருஷ்ணன்}, ரோகிணியின் மகன் பலதேவன் {பலராமன்}, எனக்குச் சமமான எனது மகன் சம்பன் ஆகிய ஏழுபேரும் அதிரதர்கள் ஆவோம். எங்களைத் தவிர்த்து, மற்ற பலரும் இருக்கின்றனர். ஓ மன்னா, அவர்களின் பெயர்களையும் இப்போது சொல்கிறேன். கிருதவர்மன், ஆனந்ததிருஷ்டி, சமிகன், சமிதின்ஜயன், கங்கன், சங்கு, குந்தி ஆகிய எழுவரும் மஹாரதர்கள். அந்தக போஜனின் இரு மகன்களும், அந்த முதிர்ந்த மன்னனும் சேர்ந்த அந்த பெரும் சக்தி மிக்க வீரர்கள், ஒவ்வொருவரும் இடியை ஒத்தவர்களாவர். இந்த மஹாரதர்கள் அனைவரும் மத்திய நாட்டைத் தேர்ந்தெடுத்து, விருஷ்ணிகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.

துவாரகா,குசஸ்தலி நகரம் {Kusasthali}
ஓ பாரத குலத்தில் வந்த சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நீர் ஒருவரே மாமன்னன் {சக்கரவர்த்தி} ஆகும் தகுதி படைத்தவர். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நீர் உமது ஆட்சியை அனைத்து க்ஷத்திரியர்கள் மூலம் நிறுவ வேண்டும். ஆனால் இது எனது அனுமானமே. ஓ மன்னா, நீர் ராஜசூய வேள்வியைச் செய்ய வேண்டுமானால், பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தன் உயிருடன் இருக்கும் வரை அது ஈடேறாது. மலைகளின் மன்னனுக்கு உள்ளிருக்கும் ஒரு குகையில் கொல்லப்பட்ட பெரும் யானைகளின் உடல்களை சிங்கம் வைத்திருப்பது போல, ஒரு மலைக்கோட்டையில் பல எண்ணிலடங்கா ஏகாதிபதிகள், அவனால்{ஜராசந்தனால்} அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஓ அனைத்து எதிரிகளையும் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, மன்னன் ஜராசந்தன், ஒரு வேள்வியில், தனது கடும் தவத்திற்கு அலங்காரமாக, அந்த நூறு மன்னர்களை உமையின் கணவனும் தேவர்களுக்குத் தேவனுமான சிறந்தவருக்குப் {சிவனுக்குப்} பலி கொடுக்க விரும்பி அடைத்து வைத்திருக்கிறான். ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, அவன் {ஜராசந்தன்} வேள்வி சம்பந்தமான தனது நோன்பை நிறைவேற்றவே இப்படிச் செய்துவருகிறான். மன்னர்களை அவர்களது படைகளுடன் சேர்த்து தோற்கடித்து, அவர்கள் அனைவரையும் கைதிகளாக்கித் தனது நகருக்குக் கொண்டு வந்து, அந்தக் கூட்டத்தை பலவாகப் பெருக வைத்திருக்கிறான். ஓ மன்னா, ஜராசந்தனிடம் உள்ள பயத்தின் காரணமாக, ஒரு காலத்தில் நாங்களும் மதுராவை விட்ட ஓட வேண்டி வந்து, துவாராவதிக்கு {துவாரகைக்கு} வந்து சேர்ந்தோம். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் வேள்வியைச் செய்ய நினைத்தால், ஜராசந்தனால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மன்னர்களை விடுவித்து, அவனது {ஜராசந்தனது} சாவுக்கு ஒரு வழி செய்ய வேண்டும். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, அல்லது உமது பணி நிறைவடையாது. ஓ புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, உம்மால் ராஜசூயம் செய்யப்பட வேண்டுமானால், நீர் இதன்படியே செய்ய வேண்டும். வேறு வழியில்லை. இது, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது பார்வையில் சொல்லப்பட்டது. ஓ பாவமற்றவரே, நீர் நினைப்பதைச் செய்யும். இந்தச் சூழ்நிலையில், ஓ மன்னா, அனைத்தையும் சிந்தித்துப் பார்த்து, காரணங்களை குறித்துக் கொண்டு, எது சரி என்று நீர் நினைக்கிறீரோ அதை எங்களுக்குச் சொல்லும்," என்றான் {கிருஷ்ணன்}.

ஜராசந்தன் எனும் பெரும் தடை! - சபாபர்வம் பகுதி 14

Jarasandha - the bar! | Sabha Parva - Section 14 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு ராஜசூய வேள்வி செய்வதில் இருக்கும் தடைகளைக் குறித்துச் சொல்லல்; ஜராசந்தன், சிசுபாலன், பீஷ்மகன் எனப் பலரைப் பற்றி கிருஷ்ணன் சொல்லல்; யாதவர்கள் மதுராவில் இருந்து துவாரகைக்கு ஏன் வந்தனர் என்பதற்கு காரணத்தைக் கிருஷ்ணன் சொல்லல்; ஜராசந்தன் சிறையில் அடைத்து வைத்திருக்கும் மன்னர்களைப் பற்றிச் சொல்லல்; ராஜசூயம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஜராசந்தனைக் கொல்ல வேண்டும் என்று சொல்லல்…

கிருஷ்ணன், "ஓ மாமன்னா, ராஜசூய வேள்வி செய்வதற்கான அடிப்படைத் தகுதிகள் அனைத்தையும் நீர் கொண்டிருக்கிறீர். நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர், ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, இருப்பினும், நான் உமக்குச் சிலவற்றைச் சொல்கிறேன்.(1) இன்றைய உலகில் இருக்கும் க்ஷத்திரியர்கள் எல்லாம், முன்பு ஜமதக்னியின் மகன் ராமரால் {பரசுராமனால்} கொல்லப்பட்ட க்ஷத்திரியர்களைவிட (அனைத்திலும்) தாழ்ந்தவர்களே.(2) ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, ஓ பாரதக் குலத்தின் காளையே, க்ஷத்திரியர்கள் தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாகத் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு, விதிகளைத் தங்களுக்குள் நிறுவிக் கொண்டனர் என்பதையும், ராஜசூய வேள்வி செய்ய அவர்களுக்கு எவ்வளவு தகுதி இருக்கிறது என்பதையும் நீர் அறிவீர்.(3) பல்வேறு அரச பரம்பரைகளும், மற்ற சாதாரண க்ஷத்திரியர்களும், ஐலா மற்றும் இக்ஷவாகுவின் வழித்தோன்றல்களாகவே இருப்பார்கள். ஓ மன்னா, ஐலனின் வழித்தோன்றல்களும், இக்ஷ்வாகு குலத்தில் வந்த மன்னர்களும், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, இன்று நூற்றுக்கணக்கான தனித்தனி நாடுகளாகிவிட்டனர் என்பதை அறிந்து கொள்ளும்.(4,5) யயாதியின் வழித்தோன்றல்களும் போஜர்களும் குலம், எண்ணிக்கை மற்றும் சிறப்புகளிலும் பெரியவர்களாக இருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இறுதியில் அவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர்.(6)

Friday, August 16, 2013

காட்சியில் வந்த நாயகன் {கிருஷ்ணன்}! - ஆதிபர்வம் பகுதி 189

Hero Enter! | Adi Parva - Section 189 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள், பிராமணர்களுக்கு மத்தியில் இருப்பதை அறிந்த கிருஷ்ணன், பலராமருக்கு அதைச் சுட்டிக் காட்டியது; வில்லைப் பார்த்து சில அரசர்களின் ஆசை ஒழிந்தது; பல அரசர்கள் வில்லில் நாணேற்ற முடியாமல் பங்கமடைந்ததும்; அர்ஜுனன் வில்லில் நாணேற்ற எழுந்தது...

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களான அந்த இளமையான இளவரசர்கள், ஒருவயொருவர் விஞ்சும் வகையில் தங்களை, ஆயுதச் சாதனைச் செய்தவர்களாகவும், பெரும் பலத்தைக் கொடையாகக் கொண்டிருப்பவர்களாகவும் நினைத்துக் கொண்டு, தங்கள் ஆயுதங்கள் பளபளக்க எழுந்தனர்.(1) அவர்கள் தங்கள் அழகிலும், ஆற்றலிலும், குலவழியிலும் {பிறப்பிலும்}, அறிவிலும், செல்வத்திலும், இளமையிலும் செருக்கு கொண்டவர்களாக, இமயத்தின் மதம் பிடித்த யானைகளைப் போல இருந்தனர். ஒருவரையொருவர் பொறாமையுடன் பார்த்துக்கொண்டு, காமதேவனின் வசப்பட்டு, "கிருஷ்ணை {திரௌபதி} எனதே" என்று சொல்லிக்கொண்டு தங்கள் அரச ஆசனங்களில் இருந்து திடீரென எழுந்தனர்.(2,3) க்ஷத்திரியர்கள் ஒவ்வொருவரும் துருபதனின் மகளை {திரௌபதியை} வெல்லும் விருப்பத்தோடு, மலையரசனின் {இமவானின்} மகளான உமையைச் சூழ்ந்து நிற்கும் தேவர்கள் போல அந்த அரங்கத்தில் கூடியிருந்தனர்.(4) மலர்களால் ஆன வில்லைக் கொண்டிருக்கும் தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்கப்பட்டு, கிருஷ்ணையின் {திரௌபதியின்} நினைவால் இதயத்தைத் தொலைத்த அந்த அரங்கத்திலிருந்த இளவரசர்கள், அந்தப் பாஞ்சால மங்கையை {திரௌபதியை} வெல்வதற்காகத் தங்கள் சிறந்த நண்பர்களைக் கூடப் பொறாமையுடன் கண்டனர்.(5)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்