Showing posts with label பரதன். Show all posts
Showing posts with label பரதன். Show all posts

Friday, June 03, 2016

மாமன்னன் பரதன்! - துரோண பர்வம் பகுதி – 068

Imperial Bharata! | Drona-Parva-Section-068 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 38)

பதிவின் சுருக்கம் : துஷ்யந்தனின் மகனான மாமன்னன் பரதனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, துஷ்யந்தனின் [1] மகன் பரதனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். குழந்தையாக அவன் {பரதன்} காட்டில் வாழும் போதே, பிறரால் செய்ய முடியாத சாதனைகளைச் செய்தான். பெரும் பலம் கொண்ட அவன் {பரதன்}, பனி போன்று வெள்ளையாகவும், பற்களையும், நகங்களையும் ஆயுதங்களாகக் கொண்டவையுமான சிங்கங்களின் ஆற்றலை இழக்கச் செய்து, அவற்றை இழுத்து வந்து (தன் விருப்பப்படி) கட்டிப்போட்டான். மேலும் அவன் {பரதன்}, (சிங்கங்களை விட) இரக்கமற்றவையும், மூர்க்கமானவையுமான புலிகளையும் அடக்கி, அவற்றைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.


[1] துஷ்யந்தனைக் குறித்து ஆதிபர்வம் பகுதி 68 முதல் பகுதி 74 வரை சொல்லப்பட்டுள்ளது.

பெரும் வலிமைமிக்க இரைதேடும் பிற விலங்குகளையும், மனோசிலை {சிவப்பு ஈயம் [அ] அரிதாரம்} பூசப்பட்டு, பிற திரவக் கனிமங்களால் கறையேறிய பற்களுடனும், தந்தங்களுடனும் கூடிய பெரும் யானைகளையும் பிடித்து, அவற்றைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்து, அவற்றின் வாய்களை வறண்டு போகச்செய்தான், அல்லது அவற்றைப் புறமுதுகிட்டோடும்படி விரட்டினான். பெரும் வலிமை கொண்ட அவன் {பரதன்}, எருமைகளில் வலிமைமிக்க எருமைகளை இழுத்து வந்தான். தன் பலத்தின் விளைவால் அவன் {பரதன்}, செருக்குமிக்கச் சிங்கங்களையும், வலிமைமிக்கச் சிருமரங்களையும் {மான்களையும்}, கொம்பு படைத்த காண்டாமிருகங்களையும், இன்னும் பிற விலங்குகளையும் நூற்றுக்கணக்கில் அடக்கினான். அவற்றின் கழுத்தைக் கட்டி, கிட்டத்தட்ட அவை உயிரைவிடும் அளவுக்கு நசுக்கிய பிறகு, அவற்றை அவன் விட்டான் {விடுவித்தான்}. அவனது அந்தச் சாதனைகளுக்காகவே (அவனோடு வாழ்ந்த) மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் அவனைச் சர்வதமனன் (அனைத்தையும் கட்டுப்படுத்துவபன்) என்று அழைத்து வந்தனர். இறுதியில், அவன் அவ்வழியில் விலங்குகளுக்குக் கொடுமை செய்வதை அவனது தாய் {சகுந்தலை} தடுத்தாள்.

பெரும் ஆற்றலைக் கொண்ட அவன் {பரதன்}, யமுனையாற்றங்கரையில் நூறு குதிரை வேள்விகளைச் செய்தான், பிறகு, சரஸ்வதி ஆற்றங்கரையில் அது போன்ற முன்னூறும், கங்கை ஆற்றங்கரையில் நானூறும் {குதிரை வேள்விகளும்} செய்தான். இவ்வேள்விகளைச் செய்த பிறகு, அவன் {பரதன்}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கி, மீண்டும் ஆயிரம் குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூயங்களையும், பெரும் வேள்விகளையும் செய்தான். மேலும், பிற வேள்விகளான அக்நிஷ்டோமம், அதிராத்ரம், உக்தியம், விஸ்வஜித் ஆகியவற்றையும், அவைகளுடன் ஆயிரமாயிரம் {பத்து லட்சம்} வாஜபேயங்களையும் எந்த இடையூறுமின்றிச் செய்து முடித்தான். இவை அனைத்தையும் செய்து முடித்த அந்தச் சகுந்தலையின் மகன் {பரதன்}, பிராமணர்களுக்குச் செல்வங்களைப் பரிசளித்து அவர்களை மனம்நிறையச் செய்தான்.

பெரும் புகழ் படைத்த அந்தப் பரதன், (தன் தாயான சகுந்தலையைத் தன் மகளாகவே வளர்த்த) கண்வருக்கு, மிகத் தூய்மையான {ஜம்பூநதம் என்ற} தங்கத்தாலான பத்து லட்சம் கோடி {பத்தாயிரம் பில்லியன் 10000,000,000,000} நாணயங்களைக் கொடுத்தான். இந்திரனின் தலைமையிலான தேவர்களும், பிராமணர்களும் அவனது வேள்விக்கு வந்து, நூறு வியாமங்கள் [2] அகலம் கொண்டதும் முற்றிலும் தங்கத்தாலானதுமான அவனது வேள்விக்கம்பை {யூபஸ்தம்பத்தை} நிறுவினர்.

[2] இரண்டு கரங்களையும் அகல நீட்டினால் வரும் அளவே வியாமமாகும் என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.

உன்னத ஆன்மா கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் வெல்பவனும், எதிரியால் வெல்லப்பட முடியாத ஏகாதிபதியும், பேரரசனுமான அந்தப் பரதன், அழகிய குதிரைகளையும், யானைகள், தேர்கள், தங்கத்தாலும், அனைத்து வகை அழகிய ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர்கள், ஒட்டகங்கள், ஆடுகள், செம்மறியாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள், செல்வங்கள், தானியங்கள், கன்றுகளுடன் கூடிய கறவை மாடுகள், கிராமங்கள், வயல்கள், பல்வேறு விதங்களிலான ஆடைகள் ஆகியவற்றையும், லட்சக் கணக்காகவும் கோடிக்கணக்காவும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {மாமன்னன் பரதனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English

Sunday, September 07, 2014

காட்டுக்குச் சென்ற ராமன்! - வனபர்வம் பகுதி 275

Rama went to forest!  | Vana Parva - Section 275 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

ராமனுக்குப் பட்டம் சூட்ட தசரதன் தீர்மானம்; ராமனைக் காட்டுக்கு அனுப்பி, பரதனை நாடாள வைக்க வேண்டும் என்ற வரத்தைக் கைகேயி தரசதனிடம் கேட்டல்; ராமன் காட்டுக்குச் செல்வது; கரன் தூஷணனைக் கொல்வது; அங்கம் பழுதான சூர்ப்பனகை ராவணனிடம் சென்று தனது நிலையைத் தெரியப்படுத்துதல்; கோபம் கொண்ட ராவணன், ராமனை அழிப்பதற்குத் திட்டம் தீட்டி மாரீசனை அணுகுதல்...


யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! போற்றுதலுக்குரியவரே {மார்க்கண்டேயரே}, ராமன் மற்றும் பிறரின் பிறப்பு வரலாற்றை நீர் எனக்கு விவரமாகச் சொன்னீர். நான் அவர்களது வனவாசத்திற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, தசரதன் மகன்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய சகோதரர்கள், மிதிலை இளவரசியுடன் {சீதையுடன்} காட்டுக்கு ஏன் சென்றார்கள் என்பதை உரைப்பீராக" என்று கேட்டான்.


Wednesday, March 19, 2014

குதிரை வேள்வி செய்த பரதன்! - வனபர்வம் பகுதி 129

Bharata performed horse sacrifice! | Vana Parva - Section 129 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

வேள்விகள், தீர்த்தங்கள், வேள்விகள் செய்த மன்னர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்கள் என்று யுதிஷ்டிரனுக்கு லோசமர் சொன்னவை...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ மன்னா! பழங்காலத்தில் உயிரினங்களின் தலைவனே {பிரம்மனே} இங்கு இஷ்டீகிருதம் {Ishtikrita} என்ற ஆயிரம் {1000} வருட வேள்வியைச் செய்திருக்கிறான். நாபாகனுடைய மகனான அம்பரீஷனும் யமுனையாற்றுக்கு அருகில் வேள்வியைச் செய்திருக்கிறான். அப்படி வேள்வியைச் செய்து பத்துப் பத்மங்கள் {ஒரு பத்மம் = நூறு கோடி {100,00,00,000} (தங்கக்காசுகளை) வேள்வியைக் கவனித்த புரோகிதர்களுக்குக் கொடுத்து, தனது வேள்விகளாலும் தவத்தாலும் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நகுஷனின் மகனான அளவிடமுடியா சக்தி கொண்டவனும், புனித வாழ்வு வாழ்ந்தவனுமான யயாதி முழு உலகத்தையும் ஆட்சி செய்து வேள்விகள் செய்தது இந்தப் பகுதியில்தான். அவன் {யயாதி} இந்திரனுடன் போட்டிப் போட்டு வேள்விகளை இங்கே செய்தான். பல விதமான வடிவங்களிலுள்ள வேள்வி மேடைகள் பூமியை நிறைப்பதையும், யயாதியின் பக்தி நிறைந்த செயல்களின் தாக்கத்தின் மூலம் உலகம் எப்படி மூழ்கியிருக்கிறது என்பதையும் பார். இது ஓர் இலை கொண்ட ஒரு வன்னி மரம். இது அற்புதமான தடாகம்.


பரசுராமரின் தடாகங்களையும், நாராயணனின் ஆசிரமத்தையும் பார். ஓ பூமியின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அளவற்ற சக்தி படைத்த ரிசீகரின் மகன், இந்தப் பாதையின் வழியே சென்று, பூமியின் இந்தப் பகுதியில் மீது உலாவி, யோகச் சடங்குகளைப் பயிலும் ரௌப்பிய {Raupya} ஆற்றையும் இதோ பார். ஓ! குரு குலத்தின் மகிழ்ச்சியே {யுதிஷ்டிரா}, உரல்களைப் போன்ற காதணிகளோடு கூடிய ஒரு பெண் பிசாசு (ஒரு அந்தணப் பெண்ணிடம்) கூறியதும் பரம்பரையாக வந்ததுமான கதையைக் கேள். (அவள் {அந்தப் பெண் பிசாசு}), "யுகாந்தரத்தில் தயிரை உண்டு, அச்சுதஸ்தலத்தில் வாழ்ந்து, பூதலயத்தில் நீராடியதால், நீ உனது மகன்களுடன் வாழ்வாய். ஓ பாரதக் குலத்தின் மிக நேர்மையானவனே {யுதிஷ்டிரா}, இங்கே ஒரு இரவைக் கழித்த பிறகு, இரண்டாவது இரவில் நடக்கும் சம்பவங்கள் பகல் பொழுதில் நடந்த சம்பவங்களுக்கு முற்றிலும் வித்தியாசமானவையாக இருக்கும். இன்றிரவை நாம் இதே இடத்தில் கழிப்போம்.

ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இதுவே குருக்களின் போர்க்கள வாயிலாகும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதே இடத்தில்தான் நகுஷனின் மகனான ஏகாதிபதி யயாதி வேள்விச் சடங்குகளைச் செய்து, அபரிமிதமான ரத்தினங்களைக் கொடையாகக் கொடுத்தான். இந்திரனும் அந்தப் புனிதமான சடங்குகளின் மூலம் திருப்தியடைந்தான். இது பிலக்ஷாவதரணம் என்ற பெயரில், யமுனையாற்றின் கரையில் இருக்கும் அற்புதமான புனித நீராட்டுப் பகுதியாகும். பண்பட்ட மனம் கொண்ட மனிதர்கள் இதைச் சொர்க்கத்திற்கான வாயில் என்று சொல்கிறார்கள். ஓ! மதிப்பிற்குரிய ஐயா {யுதிஷ்டிரா}, சாரஸ்வத மன்னன் இங்கே வேள்விச்சடங்குகளைச் செய்த பிறகு, வேள்விக்கம்புகளை உரலாகப் பயன்படுத்திய உயர்ந்த வகையிலான தவசிகள் அந்தப் புனிதச் சடங்கின் இறுதியில் தங்கள் புனித நீராடலைச் செய்தனர்.

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இங்கே மன்னன் பரதன் வேள்விச் சடங்குகளைச் செய்தான். குதிரை வேள்வியைச் செய்ய, இங்கே தான் அவன் வேள்விப்பசுவான குதிரையைச் சுதந்திரமாக விட்டான். அந்த ஏகாதிபதி {பரதன்} முழு உலகத்தின் ஆட்சியையும் நேர்மையாக வெற்றிக் கொண்டான். ஒரு முறைக்குப் பலமுறை கருநிறம் கொண்ட குதிரையை விட்டான். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, தவசிகளின் தலைவரான சம்வர்த்தரால் பாதுகாக்கப்பட்ட மருத்தன் இந்த இடத்தில் தான் அற்புதமான வேள்விகளைச் செய்து வெற்றியடைந்தான். ஓ! மன்னர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில் நீராடும் ஒருவன், அனைத்து உலகங்களையும் கண்டு, தீயச் செயல்களில் இருந்து சுத்தப்படுத்தப் படுவான். ஆகையால், நீ இந்த இடத்தில் நீராட வேண்டும்" என்றார் {லோமசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டு மகன்களில் மிகவும் போற்றுதலுக்குரியவன் {யுதிஷ்டிரன்} பிறகு, தனது தம்பிகளுடன் நீராடினான். சக்திவாய்ந்த தவசிகள் வாழ்த்துப் பாடினார்கள். பிறகு அவன் {யுதிஷ்டிரன்} லோமசரிடம், "உண்மையின் பலம் கொண்டவரே {லோமசரே}, இந்தப் பக்தி நிறைந்த செயலின் அறத்தால், நான் அனைத்து உலகங்களையும் காண்கிறேன். இந்த இடத்தில் இருந்து, நான் பாண்டுவின் மகன்களில் புகழத்தக்கவனும், வெள்ளைக் குதிரையில் சவாரி செய்பவனுமான அர்ஜுனனைக் காண்கிறேன்" என்றான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! தோள்வலிமை மிக்கவனே {யுதிஷ்டிரா}, அது உண்மையே. உயர்ந்த வகையிலான தவசிகளால் இவ்வாறு அனைத்து உலகங்களைக் காண முடியும். தன்னையே முழுப் புகலிடமாக நம்பி இருக்கும் மனிதர்களால் மொய்க்கப்படும் புனிதமான இந்தச் சரஸ்வதியைப் {சரஸ்வதி நதியைப்} பார். ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {யுதிஷ்டிரா}, இங்கே நீராடிய பிறகு, நீ அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டவனாவாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இங்கே தான் சாரஸ்வத மன்னனுக்காக, தெய்வீகத் தவசிகளும், பூலோகத் தவசிகளும், அரசத்தவசிகளும் வேள்விச்சடங்குகளைச் செய்தனர். இதுவே உயிரினங்களின் தலைவனுடைய {பிரம்மனுடைய} வேள்விப்பீடமாகும். இது எல்லாப்புறங்களிலும் ஐந்து யோஜனை தூரம் கொண்டதாகும். வேள்வி செய்வதையே பழக்கமாகக் கொண்ட பெருமைமிக்கக் குருக்களின் களம் இதுவே" என்றார் {லோமசர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, April 13, 2013

பரதனை ஏற்றான் துஷ்யந்தன்! | ஆதிபர்வம் - பகுதி 74இ

Dushmanta accepted Bharata! | Adi Parva - Section 74b | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 10)

பதிவின் சுருக்கம் : மனைவி மற்றும் மகனின் பெருமை குறித்து விவரித்த சகுந்தலை; பரதன் என்ற பெயரைப் பெற்ற சர்வதமனன்; பரதனின் ஆற்றல்...

சகுந்தலை, "ஓ மன்னா! சிறு கடுகளவு இருக்கும் அடுத்தவர்களின் தவறுகளை மட்டும் நீர் பார்க்கிறீர். ஆனால் வில்வக் {பில்வக்} கனியைப் போன்ற உமது பெரும் தவறுகளைக் காண மறுக்கிறீர்.(82) மேனகை தேவர்களில் ஒருத்தியாவாள். நிச்சயமாக, தேவர்களில் முதன்மையானவளாக அவள் அறியப்படுகிறாள். எனவே, ஓ துஷ்யந்தரே, உமது பிறப்பைவிட எனது பிறப்பு மிக உயர்ந்ததே.(83) ஓ மன்னா! நீர் பூமியில் நடக்கிறீர், நான் வானத்தில் உலாவுகிறேன். நமக்குள், மேரு மலைக்கும், கடுகு வித்துக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பீராக. எனது சக்தியைப் பாரும். ஓ மன்னா! நான் நினைத்தால், இந்திரன், குபேரன், யமன் மற்றும் வருணனின் வசிப்பிடங்களுக்குச் செல்ல முடியும்.(84)

Friday, March 12, 2010

பரதன்

பரதன் {Bharata} = ஏற்றுக் கொள்ளப்பட்டவன்

தந்தை : துஷ்யந்தன் {Dushmanta}
தாயார் : சகுந்தலை {Sakuntala}

இயற்பெயர் = சர்வதமனா {Sarvadamana}(அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்)
சர்வதமனாவிற்கான குறிப்பு: கண்வரின் {Kanwa} ஆசிரமத்தில் வளர்ந்த 6 வயதே நிரம்பிய சகுந்தலையின் குழந்தையானவன் எந்த பலம் மிகுந்த மிருகத்தையும் பற்றி அடக்கி வைப்பதால் சர்வதமனா (அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என்று அழைக்கப்படட்டும் என்று சொன்னார்கள்.
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:

பரதனுக்கான குறிப்பு: துஷ்யந்தனால் சகுந்தலையும், அவள் குழந்தை சர்வதமனாவும் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனவுடன், வானத்திலிருந்து ஒரு அசரீரி, "ஓ புரு குலத்தில் வந்தவனே {துஷ்யந்தனே}, சகுந்தலைக்குப் பிறந்த உனது உயர் ஆன்ம மகனை ஏற்றுக் கொள். எமது வார்த்தையால், நீ இந்தப் பிள்ளையை ஏற்றுக் கொள்வதால், இந்தப் பிள்ளை இது முதல் பரதன் (ஏற்றுக் கொள்ளப்பட்டவன்) என்று அறியப்படட்டும்", என்றது.

மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:



மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்