Kunti told the story of Bhadra! | Adi Parva - Section 121 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 57)
பதிவின் சுருக்கம் : பழங்காலத்தில் நடந்த வியுஷிதாஸ்வன் மற்றும் பத்ரையின் கதையைப் பாண்டுவுக்குச் சொன்ன குந்தி; இறந்து போன கணவனிடம் பிள்ளைகளைப் பெற்ற பத்ரை...
வைசம்பாயனர் சொன்னார், "இப்படிச்சொல்லப்பட்ட குந்தி, குருக்களில் காளையும், தனது வீரத் தலைவனுமான மன்னன் பாண்டுவிடம்,(1) "ஓ அறம்சார்ந்தவரே, நீர் என்னிடம் இப்படிச் சொல்வது தகாது. ஓ தாமரைக் கண் கொண்டவரே! நான் எப்போதும் உம்மிடம் அர்ப்பணிப்புடன் உள்ளவளும், முறையாக மணந்து கொள்ளப்பட்டவளுமான உமது மனைவியாவேன்.(2) ஓ பெரும் கரம் கொண்ட பாரதரே, பெரும் சக்தி கொண்ட நீரே என்னிடம் பிள்ளைகளைப் பெறுவீர்.(3) அதன் பிறகு நான் சொர்க்கத்திற்கு உம்முடனே சேர்ந்தே வருகிறேன். ஓ குருகுல இளவரசரே, உம் அணைப்பில் என்னை ஏற்றுப் பிள்ளைகளைப் பெறுவீராக.(4) உமது அணைப்பைத் தவிர வேறு எந்த மனிதனின் அணைப்பையும் நான் கற்பனையில் கூட ஏற்கமாட்டேன். உம்மைவிட உயர்ந்தவனாக எந்த மனிதன் உலகத்தில் இருக்கிறான்?(5) ஓ அறம்சார்ந்தவரே, தாமரைக் கண் கொண்டவரே! நான் கேள்விப்பட்ட ஒரு புராண விவரிப்பைக் கேட்பீராக. நான் உமக்கு அதைச் சொல்கிறேன்.(6)