Showing posts with label சியவனர். Show all posts
Showing posts with label சியவனர். Show all posts

Monday, July 22, 2019

அத்ரி மற்றும் சியவனர் பெருமை! - அநுசாஸனபர்வம் பகுதி – 156

The greatness of Atri and Chyavana! | Anusasana-Parva-Section-156 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 156)


பதிவின் சுருக்கம் : பிராமணர்களான அத்ரி மற்றும் சியவனரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு சொல்லப்பட்ட {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், "ஓ! ஹைஹயர்களில் முதன்மையானவனே, உயர் ஆன்ம அத்ரியின் சாதனையைச் சொல்கிறேன் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில், இருளில் தேவர்களும், தானவர்களும் ஒருவருக்கொருவர் போரிட்டபோது, சூரியன் மற்றும் சோமன் {சந்திரன்} ஆகிய இருவரையும் ராகு {ஸ்வர்ப்பானு} தன் கணைகளால் துளைத்தான்.(2) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இருளில் மூழ்கிய தேவர்கள் வலிமைமிக்கத் தானவர்களின் முன்பு வீழத் தொடங்கினர்.(3) அசுரர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட சொர்க்கவாசிகள், தங்கள் பலத்தை இழக்கத் தொடங்கினர். அப்போது அவர்கள் தவங்களைச் செல்வமாகக் கொண்டவரும் கல்விமானுமான பிராமணர் அத்ரி கடுந்தவத்தில் இருப்பதைக் கண்டனர்.(4)

Wednesday, May 01, 2019

விஷ்வாமித்ரர் மற்றும் பரசுராமர் பிறப்பு! - அநுசாஸனபர்வம் பகுதி – 56

The Birth of Vishwamithra and Parasurama! | Anusasana-Parva-Section-56 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 56)


பதிவின் சுருக்கம் : பிருகு குலத்திலும், குசிக குலத்திலும் நேரப்போகும் வர்ணக் கலப்புக் குறித்துக் குசிகனிடம் சொன்ன சியவனர்; விஷ்வாமித்ரர் மற்றும் பரசுராமரின் பிறப்பை முன்கூட்டியே அறிவித்தது...


சியவனர் {மன்னன் குசிகனிடம்*}, "ஓ! மனிதர்களின் தலைவா, ஓ! ஏகாதிபதி, உன் குலத்தை அழிப்பதற்காக நான் இங்கே வந்த சூழ்நிலைகள் அனைத்தையும் நிச்சயம் நான் உனக்குச் சொல்ல வேண்டும்.(1) ஓ! மன்னா, வேள்விக் காரியங்களில் க்ஷத்திரியர்களுக்குப் பிருகு மகன்களின் துணை எப்போதும் வேண்டும் என்பது நன்கறியப்பட்டதே. தடுக்கப்பட முடியாத அளவுக்கான விதியின் மூலம் க்ஷத்திரியர்களும், பார்க்கவர்களும் வீழப் போகிறார்கள்.(2) ஓ! மன்னா, பிருகுவின் வழித்தோன்றல்கள் அனைவரையும் க்ஷத்திரியர்கள் கொல்லப் போகிறார்கள். விதி விதிக்கும் விதியால் பீடிக்கப்படும் அவர்கள் தாயின் கருவறையில் உள்ள குழந்தைகளையும் விட்டுவிடாமல் பிருகு குலத்தை அழிக்கப் போகிறார்கள்.(3)
*குசிகன்= கௌசிகன், கவுசிகன்

சியவனர் அருளிய வரம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 55

Boon granted by Chyavana! | Anusasana-Parva-Section-55 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 55)


பதிவின் சுருக்கம் : தன் மனத்தில் இருந்த ஐயங்கள் அனைத்தையும் சியவனரிடம் கேட்ட குசிகன்; தமது செயல்பாடுகளுக்கான காரணங்களைக் குசிகனுக்கு விளக்கிச் சொல்லி அவனுக்கு வரமளித்த சியவனர்...


சியவனர் {மன்னன் குசிகனிடம்}, "நீ என்னிடம் இருந்து ஒரு வரத்தை ஏற்பாயாக. ஓ! மனிதர்களின் தலைவா, உன் மனத்தில் இருக்கும் ஐயம் என்ன என்பதையும் எனக்குச் சொல்வாயாக. நான் நிச்சயம் உன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்" என்றார்.(1)

Saturday, April 27, 2019

குசிகனைத் துன்புறுத்திய சியவனர்! - அநுசாஸனபர்வம் பகுதி – 53

Chyavana afflicted Kusika! | Anusasana-Parva-Section-53 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 53)


பதிவின் சுருக்கம் : மீண்டும் இருபத்தோரு நாட்கள் உறங்கிய சியவனர்;. நீராடச் சென்று மீண்டும் மறைந்தது; தனக்குப் பரிமாறப்பட்ட உணவை எரித்தது; மன்னனையும் அவனது மனைவியையும் தேரில் பூட்டி தம்மை இழுக்கச் செய்தது; சாட்டையால் அவர்களை அடித்தது; மன்னனின் அவல நிலையைக் கண்டு துயருற்ற குடிமக்கள்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "முனிவர் {சியவனர்} மறைந்ததும் மன்னன் {குசிகன்} என்ன செய்தான்? உயர்ந்த அருளைக் கொண்ட அவனது மனைவி என்ன செய்தாள்? ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)

Wednesday, April 24, 2019

சியவனரும், குசிகனும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 52

Chyavana and Kusika! | Anusasana-Parva-Section-52 | Mahabharata In Tamil (அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 52)

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 43)


பதிவின் சுருக்கம் : பரசுராமர், விஷ்வாமித்ரர் பிறப்புக் காரியமாகச் சியவனர் குசிகனிடம் வசித்தது...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எனக்குக் கடலைப் போன்றொரு பெரிய ஐயம் உள்ளது. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, அதைக் கேட்பீராக. அதை அறிந்து கொண்டு அதைக் குறித்து எனக்கு விளக்கம் அளிப்பீராக.(1) ஜமதக்னியின் மகனும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவருமான ராமர் {பரசுராமர்} குறித்து எனக்குப் பேராவல் இருக்கிறது. அந்த ஆவலை நிறைவடையச் செய்வதே உமக்குத் தகும்.(2) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட ராமர் {பரசுராமர்} எவ்வாறு பிறந்தார்? அவர் பிறப்பால் மறுபிறப்பாள முனிவர்களைச் சார்ந்தவர். அவர் எவ்வாறு க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றுபவரானார்?(3) ஓ! மன்னா, ராமர் {பரசுராமரின்} பிறப்பு சூழ்நிலைகளைக் குறித்து எனக்கு விளக்கமாக உரைப்பீராக. மேலும் குசிக குலமகனான ஒரு க்ஷத்திரியன் {விஷ்வாமித்ரர்} எவ்வாறு பிராமணர் ஆனார்?(4) ஓ! மனிதர்களின் தலைவா, உயர் ஆன்ம ராமர் {பரசுராமர்} மற்றும் விஷ்வாமித்ரரின் பலம் நிச்சயம் பெரியதாகும்.(5) ரிசீகரின் மகனுக்கு {ஜமதக்னிக்குப்} பதிலாக அவரது பேரன் {பரசுராமர்} க்ஷத்திரிய ஒழுக்கத்தைக் கொண்டதேன்? மேலும் குசிகனின் பேரன் {விஷ்வாமித்ரர்} எவ்வாறு ஒரு பிராமணரானார்? அவர்கள் இருவரின் மகன்களுக்குப் பதிலாக, அவர்களுடைய பேரர்களுக்கு இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நேர்ந்ததேன்? இந்தச் சூழ்நிலைகளைப் பொறுத்தவரையில் உண்மையை விளக்குவதே உமக்குத் தகும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(6)

Tuesday, April 23, 2019

மீன்களும் மீனவரும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 51

The fishes and the fishermen! | Anusasana-Parva-Section-51 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 51)


பதிவின் சுருக்கம் : சியவனருக்கான விலையைச் சொன்ன நஹுஷன்; பசுவின் பெருமை; மீனவர்களிடம் இருந்து பசுவைப் பெற்றுக் கொண்ட சியவனர்; சொர்த்தையடைந்த மீன்களும், மீனவர்களும்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மன்னன் நஹுஷன், சியவனர் அடைந்த நிலையைக் கேட்டு தன் அமைச்சர்கள் மற்றும் புரோகிதரின் துணையுடன் அந்த இடத்திற்கு விரைவாகச் சென்றான்.(1) முறையாகத் தன்னைத் தூய்மை செய்து கொண்ட அந்த மன்னன் தன் கரங்களைக் கூப்பிக் குவிந்த கவனத்துடன் உயர் ஆன்ம சியவனரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.(2) அப்போது மன்னனின் புரோகிதர், ஓ! ஏகாதிபதி, வாய்மை நோன்பு நோற்றவரும், உயர் ஆன்மா கொண்டவரும், (காந்தியிலும், சக்தியிலும்) தேவர்களுக்கே ஒப்பானவருமான அந்த முனிவரை உரிய சடங்குகளுடன் வழிபட்டார்.(3)

Sunday, April 21, 2019

சியவனரும் மீன்களும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 50

The fishes and Chyavana! | Anusasana-Parva-Section-50 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 50)


பதிவின் சுருக்கம் : தோழமையினால் ஏற்படும் கருணை குறித்துச் சொல்வதற்காக சியவனரின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; பனிரெண்டு வருடம் நீரில் தவமிருந்த சியவனர்; நீர்வாழ் உயிரினங்களுடன் அவருக்கு இருந்த தோழமை; மீன்பிடித்த மீனவர்கள்; இறந்த மீன்களைக் கண்டு துயருற்ற சியவனர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அடுத்தவர் துயரத்தைக் கண்டு உணரும் கருணை, அல்லது பரிதாப உணர்வின் இயல்பென்ன? ஒருவன் மற்றவனுடன் தோழமையுடன் வாழ்வதன் விளைவால் அந்த மற்றவனிடம் அவன் கொள்ளும் கருணை, அல்லது பரிவு உணர்வின் இயல்பென்ன? பசுக்கள் தொடர்புடைய உயர்ந்த அருளின் (அளவென்ன?) இயல்பென்ன? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(1)

Sunday, March 16, 2014

சோமத்தைப் பெற்ற அசுவினிகள் - வனபர்வம் பகுதி 125

Aswinis got the right for Soma juice | Vana Parva - Section 125 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சியவனர், இந்திரனை விடுவித்தது; லோமசர் தீர்த்தங்களின் பெருமைகளை விவரிப்பது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "நூறு வேள்விகள் செய்தவன் (இந்திரன்), தன்னை விழுங்க எண்ணி தன்னைநோக்கி வரும் மரணத் தேவன் போல வாயைத் திறந்து கொண்டு வந்த பயங்கர முகம் கொண்ட பிசாசான மதனைக் கண்டான். தனது கரங்கள் அசைவற்று இருந்ததால், அச்சத்தால் அவன் திரும்பத் திரும்பத் தனது உதட்டோரங்களை நாவால் நனைத்தான்.


பிறகு, அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, சியவனரிடம், "ஓ! பிருகுவின் மகனே! ஓ! அந்தணரே, நான் உண்மையைச் சொல்கிறேன். இன்று முதல் அந்த அசுவினிகள் இருவரும் சோமச்சாற்றைப் பருகும் தகுதி பெறட்டும். என்னிடம் கருணை கொள்ளும்! எனது பணி பயனற்றுப் போகக்கூடாது. இது விதியாகட்டும். ஓ! புரோகித வகையைச் சேர்ந்த தவசியே! உமது பணியும் ஒன்றுமில்லாமல் போகக்கூடாது. இந்த இரு அசுவினிகளும், உம்மால் தகுதிபெற்றதால், சோமச்சாற்றைப் பருகும் உரிமையைப் பெறுவார்கள். மேலும், ஓ பிருகுவின் மகனே, உமது சக்தியின் புகழ் பரவவே நான் இதைச் செய்தேன். உமது சக்திகளைக் காட்ட ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதே எனது நோக்கம். சுகன்யாவின் தந்தையின் {மன்னன் ச்ர்யாதியின்} புகழும் எங்கும் பரவ வேண்டும் என்பது எனது மற்றொரு நோக்கம். ஆகையால், என்னிடம் கருணை கொள்ளும். நீர் விரும்பியவாறே அனைத்தும் நடக்கட்டும்" என்றான் {இந்திரன்}.

இந்திரனால் இப்படிச் சொல்லப்பட்டதும், சக்திவாய்ந்த ஆன்மாக் கொண்ட சியவனர் உடனே அமைதியடைந்தார். பிறகு அவர் எதிரி நகரங்களை அழிப்பவனை {இந்திரனை} விடுவித்தார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தச் சக்திவாய்ந்த தவசி {சியவனர்} பிசாசான மதனை (உண்மையில் போதையை) {மதத்தை} மதுவுக்கும், பெண்களுக்கும், சூதுக்கும், விளையாட்டுக் களத்துக்கும் எனப் பலவாறாகப் பகுத்தளித்தார். இப்படிப் பிசாசான மதனைக் கைவிட்டு சோமச்சாற்றின் பங்கைக் கொடுத்து இந்திரனைத் திருப்திப்படுத்தி, மன்னன் சர்யாதி மற்றத் தேவர்களையும் அசுவினி இரட்டையர்களையும் வணங்கவும் அம்மன்னனின் புகழ் அனைத்து உலகங்களை அடையவும் உதவி செய்தார். பிறகு பேச்சறிந்தவர்களில் சிறந்த அவர் {சியவனர்}, தமது அன்பான மனைவியான சுகன்யாவுடன் அக்கானகத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பறவையொலிகளுடன் பளபளக்கும் இதுவே அத்தடாகம். இங்கே நீ உனது தம்பிகளுடன் சேர்ந்து உனது மூதாதையர்களுக்கும் தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்த வேண்டும். ஓ! பூமியின் ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, ஓ! பாரதகுலத்தின் வழித்தோன்றலே, அதை அடைந்த பிறகு, சிகதாக்ஷத்தைக் கண்டு, ஸைந்தவ வனத்தை அடைந்து, எண்ணற்ற சிறு செயற்கையாறுகளைக் காண வேண்டும். ஓ! பெரும் மன்னா, ஓ! பாரதகுலத்தின் வழித்தோன்றலே, அனைத்து புனிதமான தடாகங்களின் நீரையும் தொட்டு தெய்வமான ஸ்தாணுவின் (சிவன்) பாடல்களைப் {மந்திரங்களைப்} பாடி அனைத்துக் காரியங்களிலும் வெற்றியைச் சந்திக்க வேண்டும். ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {யுதிஷ்டிரா}, ஏனென்றால், இது துவாபர மற்றும் திரேதா யுகத்தின் சந்திக்காலம் ஆகும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இது ஒரு மனிதனின் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் வல்லமை பெற்ற காலமாகும்.

இந்த இடம் ஒரு மனிதனின் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் வல்லமை பெற்றிருப்பதால், இங்கே நீ நீராட வேண்டும். பண்படுத்தப்பட்ட மனங்கள் கொண்ட மனிதர்கள் வாழும் ஆர்ச்சிக மலையும் இங்கே தான் இருக்கிறது. அனைத்துக் காலங்களின் கனிகளும் இங்கே எல்லாக் காலங்களிலும் வளர்கிறது. ஓடைகள் இங்கே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றன. தேவர்களுக்குத் தகுந்த அற்புதமான இடம் இது. தேவர்களால் நிறுவப்பட்ட பல உருவங்களிலான புனித கற்குவைகளும் இருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, இதுவே சந்திரனுக்குச் சொந்தமான நீராடும் இடம். இதைச் சுற்றி, இந்தக் கானகவாசிகளான தவசிகளும், வாலகில்யர்களும், காற்றை மட்டுமே உண்ணும் பாவகர்களும் எப்போதும் இருக்கின்றனர். இவையே மூன்று சிகரங்களும், மூன்று நீரோடைகளும் ஆகும். நீ அவற்றை ஒவ்வொன்றாக வலம் வரலாம். பிறகு உனது வசதிக்கேற்ப நீராட வேண்டும்.

ஓ! மன்னா, மனிதர்களை ஆட்சி செய்த சந்தனுவும், சுனகனும், நரநாராயணர்களும் நித்தியமான பகுதிகளை இங்கிருந்துதான் அடைந்தனர். இங்கே இந்த வலிமைமிக்கத் தவசிகளுடன் தேவர்களும் மூதாதையர்களும் இருக்கின்றனர். இந்த ஆர்ச்சிக மலையில் அவர்கள் அனைவரும் தவமிருக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரா, அவர்களுக்கு நீ படையல் செய்ய வேண்டும். ஓ! மனிதர்களைப் பாதுகாப்பவனே, இங்கே தான் அவர்களும், தவசிகளும், பாலில் சமைக்கப்பட்ட சோறை {அரிசியை} உண்கிறார்கள். வற்றாத ஊற்றுக் கொண்ட யமுனை இங்கேதான் இருக்கிறது. ஓ! பாண்டுவின் மகனே, கிருஷ்ணர் {வியாசர்} இங்கேதான் தனது தவவாழ்வை மேற்கொண்டார். ஓ! எதிரிகளின் சடலங்களை இழுத்துச் செல்பவனே, இரட்டைத் தம்பிகளும் {நகுலனும் சகாதேவனும்}, பீமசேனனும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, மேலும் நாங்கள் அனைவரும் உம்முடன் இந்த இடத்திற்குச் செல்வோம்.

ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இது இந்திரனுக்குச் சொந்தமான புனித ஊற்றாகும். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, படைத்திடும் தேவனும் {தாதாவும்}, தவிர்த்திடும் தேவனும் {விதாதாவும்}, வருணனும் மேல்நோக்கி எழுந்து, பொறுமையைக் கடைப்பிடித்து, உயர்ந்த நம்பிக்கையைக் கொண்டு இங்கே வசிக்கலாயினர். இந்தச் சிறந்த மற்றும் அனுகூலமான மலை, அன்பும், நேர்மையான மனநிலையும் கொண்ட மனிதர்களுக்குத் தகுந்ததாக இருக்கிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சக்திமிக்கத் தவசிகளும் தங்கள் அறச்சடங்குகளைச் செய்ய அடிக்கடி வந்து செல்லும் இதுவே கடும் பாவங்களை அழிக்கவல்ல புனிதமான யமுனையாகும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, பெரும் வில் படைத்த மாந்தாதாவும், அற்புதமான பரிசுகளைக் கொடுக்கவல்லவனும் சகாதேவனின் மகனுமான சோமகனும் இங்கேதான் தேவர்களுக்காக வேள்விச் சடங்குகளைச் செய்தனர். 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


சியவனரால் அசைவிழந்த இந்திரன் - வனபர்வம் பகுதி 124

Chyavana paralysed Indra | Vana Parva - Section 124 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சியவனர், தனது மாமனான சர்யாதியிடம் சொல்லி ஒரு வேள்விக்கு ஏற்பாடு செய்து, சோமச்சாற்றின் பங்கை அசுவினிகளுக்குப் படைக்க முயற்சிப்பது; இந்திரன் அதற்குத் தடை சொல்வது; அதை மீறி கொடுக்க முயன்ற சியவனர் மேல் வஜ்ரத்தை இந்திரன் ஓங்க, சியவனர் இந்திரனை அசைவற்றவனாக்கியது; சியவனரால் உண்டாக்கப்பட்ட பிசாசு இந்திரனிடம் செல்வது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "சியவனர் இளமையைப் பெற்றார் என்ற செய்தி சர்யாதியை அடைந்தது. மிகவும் திருப்தி கொண்ட அவன் {சர்யாதி}, தனது படைகளுடன், பிருகு மைந்தனின் {சியவனரின்} ஆசிரமத்திற்கு வந்தான். அங்கே சியவனரும், சுகன்யாவும் தேவர்களிடம் எழுந்த இரு பிள்ளைகள் போல இருப்பதைக் கண்டான். அவனும் {சர்யாதியும்} அவனது மனைவியும் அடைந்த மகிழ்ச்சி பெரியதாக இருந்தது. அவன் மொத்த பூமியையும் வென்றுவிட்டதாகக் கருதினான். அந்தத் தவசியால் {சியவனரால்} அந்தப் பூமியின் ஆட்சியாளனும் {சர்யாதியும்} அவனது மனைவியும் மரியாதையாக வரவேற்கப்பட்டனர். பிறகு அந்த மன்னன் {சர்யாதி}, அந்தத் தவசியின் {சியவனரின்} அருகில் அமர்ந்து, மகிழ்ச்சிகரமாக விவாதித்தான்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு, அந்தப் பிருகுவின் மைந்தர் {சியவனர்} அந்த மன்னனிடம் {சர்யாதியிடம்} இன்சொல்பேசி, "ஓ! மன்னா, நான் உனக்கு ஒரு வேள்வியைச் செய்வேன். ஆகையால் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்வாயாக" என்றார். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அதன்பேரில், பூமியின் பாதுகாவலனான சர்யாதி, மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்று, சியவனரின் கோரிக்கையைப் பாராட்டினான். பிறகு வேள்வி செய்யக்கூடிய ஒரு நன்னாளில் சிறப்பாகச் சொல்லும் அளவுக்கு ஒரு வேள்விக் கோவிலை ஏற்படுத்தி அதில் விரும்பத்தக்க அனைத்து பொருட்களையும் வைத்தான். அங்கே பிருகுவின் மகனான சியவனர், மன்னனின் {சர்யாதியின்} புரோகிதராகப் பணியை ஏற்றார். அந்த இடத்தில் நடந்த அற்புதமான நிகழ்ச்சிகளை இனி சொல்கிறேன் கேள்.


சியவனர், தேவ மருத்துவர்களான அசுவினிகளுக்குப் படைப்பதற்காகச் சோமச்சாற்றில் ஒரு பகுதியை எடுத்து வைத்தார். அந்தத் தவசி அதைத் தெய்வீக அசுவினிகளுக்குப் படைப்பதற்கு எத்தனித்த போது, இந்திரன், "அசுவினிகளான இவர்கள் இருவருக்கும் சோமச்சாற்றின் பகுதியை அடைவதற்கு உரிமையில்லை என்பது எனது கருத்து. இவர்கள் சொர்க்கத்தில் தேவர்களுக்கு மருத்துவர்களாக இருக்கிறார்கள். இவர்களது தொழிலே, இவர்களுக்கு (சோமச்சாற்றைப் பெறுவதில்) உரிமையில்லை என்பதைப் பறைசாற்றுகிறது" என்று தனது தடையைச் சொன்னான்.

அதற்குச் சியவனர் {இந்திரனிடம்}, "வலிமைமிக்க ஆன்மாக் கொண்ட இவர்கள் இருவரும் பெரும் தொழிலைச் செய்பவர்களே! இவர்கள் அசாதாரண அழகும் அருளும் கொண்டவர்கள். ஓ! இந்திரா, இவர்கள் என்னை நித்திய இளமை கொண்டவனாக, தேவர்களுக்கு இணையானவனாக மாற்றியிருக்கிறார்கள். வடித்த சோமச்சாற்றைப் பெறும் தகுதியை நீயும் பிற தேவர்களும் ஏன் பெற வேண்டும்? இவர்கள் {அசுவினிகள்} ஏன் பெறக்கூடாது? ஓ! தேவர்களின் தலைவா, ஓ எதிரிகளின் நகரங்களை அழிப்பவனே {இந்திரா}, அசுவினிகளும் தேவர்கள் என்ற மதிப்புடையவர்கள் என்பதை நீ அறிவாயாக" என்றார். இதற்கு இந்திரன் {சியவனரிடம்}, "இவர்கள் இருவரும் குணப்படுத்தும் {சிகிச்சை} கலை பயில்கிறார்கள். ஆகையால் அவர்கள் சேவகர்களைத் தவிர வேறல்ல. நினைத்த வண்ணம் தங்கள் உருவங்களை அடைந்து, இவர்கள் மனிதர்களின் உலகில் உலவிவருகிறார்கள். இவர்கள் எப்படி உரிமையுடன் சோமச்சாற்றைக் கோரலாம்?" என்றான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "இப்படிப்பட்ட வார்த்தைகள் தேவர்கள் தலைவனால் மறுபடியும் மறுபடியும் பேசப்பட்ட போது, பிருகுவின் மகன் {சியவனர்} இந்திரனைக் கருதிப் பாராமல் {லட்சியம் செய்யாமல்}, காணிக்கை {சோமச்சாற்றை} படைக்கும் நோக்குடன் எடுத்தார். அந்தச் சோமச்சாற்றின் அற்புதமான பகுதியை அந்த இரு அசுவினிகளுக்கும் அவர் படைக்கப்போகும் நேரத்தில், அசுரன் பலனை அழித்தவன் {இந்திரன்}, இச்செயலைக் கண்டு அவரிடம் {சியவனரிடம்}, "அந்தத் தேவர்களுக்குப் படைக்கும் நோக்கோடு நீர் சோமத்தை எடுத்தீரென்றால், நிலைத்திருக்கும் அனைத்து ஆயுதங்களிலும் மேன்மையான, கொடூர வடிவிலான எனது வஜ்ராயுதத்தை நான் உம்மீது ஏவுவேன்" என்றான் {இந்திரன்}.

இந்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பிருகுவின் மகன் {சியவனர்} புன்னகையுடன் அவனைப் பார்த்தபடி, சோமச்சாற்றின் பகுதியை அசுவினிகளுக்குப் படைப்பதற்காக எடுத்தார். அப்போது சச்சியின் தலைவன் {இந்திரன்} கொடூர வடிவம் கொண்ட வஜ்ரத்தை அவர் மீது வீச எத்தனித்தான். அவன் அதை ஏவ முற்பட்ட போது, அவனது கரங்கள் பிருகுவின் மைந்தனால் {சியவனரால்} அசைவற்றனவாக மாற்றப்பட்டன. சியவனர் புனித பாடல்களை {மந்திரங்களை} உரைத்து நெருப்பில் படையலிட்டார். அவரது நோக்கம் நிறைவேறிய பிறகு, அவர் அந்தத் தேவனை {இந்திரனை} அழிக்க முற்பட்டார், பிறகு அந்தத் தவசியின் தவச்சக்தியின் விளைவாக தீய ஆவி கொண்ட பெரிய பிசாசானவன் உண்டானான். பெரும் பலமும், பெருத்த உருவமும் கொண்ட அவனது பெயர் மதன் ஆகும். 

அவனது {பிசாசான மதனின்} உடல் தேவர்களாலும் அசுரர்களாலும் அளவிடமுடியாதபடி இருந்தது. அவனது வாய்ப் பயங்கரமாகப் பெருத்த அளவிலும் கூரிய பற்களுடனும் இருந்தது. அவனது ஒரு தாடை பூமியில் இருந்தபோது, மறு தாடை சொர்க்கம் வரை நீண்டது. அவனுக்கு நான்கு கோரைப் பற்கள் {தெற்றுப் பற்கள்} இருந்தன. அவை ஒவ்வொன்றும் நூறு யோஜனை தூரமும், மற்றப் பற்கள் பத்து யோஜனை தூரமும் இருந்தன. அவை ஒவ்வொன்றும் முனை கூரிய ஈட்டி போலவும் ஒரு மாளிகையின் கோபுரம் போலவும் இருந்தன. அவனது இரு கரங்களும் இரு மலைகள் போலப் பத்தாயிரம் யோஜனை தூரம் இருந்தன. அவனது இரு கண்களும் சூரியனையும் சந்திரனையும் ஒத்திருந்தன. அவனது முகம் பிரளயத்தின் பெருந்தீ போல இருந்தது. அவனது தனது வாயை, மின்னலைப் போல இருந்த ஓய்வறியா நாவால் நக்கிக் கொண்டிருந்தான். அவனது வாய்த் திறந்திருந்தது. அவனது பார்வை பயங்கரமாக இருந்தது. அவன் இந்த மொத்த உலகத்தையுமே விழுங்கிவிடுவான் போல இருந்தது. அப்படிப்பட்ட அந்தப் பிசாசானவன் {மதன்} நூறு வேள்விகள் செய்த தேவனிடம் {இந்திரனிடம்} விரைந்தான். அவனது நோக்கம் அந்தத் தேவனை {இந்திரனை} விழுங்குவதாக இருந்தது. அந்த அசுரன் கர்ஜித்த பயங்கர ஒலி உலகத்தையே நிரப்பியது.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, March 15, 2014

இளமையைப் பெற்ற சியவனர் - வனபர்வம் பகுதி 123

Chyavana attained youth | Vana Parva - Section 123 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

குளித்துவிட்டு வந்த சுகன்யையைக் கண்ட அசுவினி தேவர்கள், அவள் அழகைக் கண்டு பாராட்டுவது; ஒரே உருவத்தில் இருக்கும் அவளது கணவர் மற்றும் தங்கள் இருவர் ஆகிய மூவரில் ஒருவரை அவள் கணவனாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால், அவளது கணவருக்கு {சியவனருக்கு} இளமையைத் திரும்ப அளிப்பதாக அசுவினிகள் கூறுவது; சுகன்யை இச்செய்தியை சியவனருக்குச் சொல்வது; சியவனர் அதற்கு இணங்குவது; அசுவினிகள் சியவனரை இளமையடையச் செய்வது; மூவரில் தனது கணவரையே சுகன்யைத் தேர்ந்தெடுப்பது; சோமச்சாற்றைப் பருகும் நிலையை அசுவினிகளுக்குக் கொடுப்பதாகச் சியவனர் உறுதியளிப்பது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு முறை தேவர்களான அசுவினி இரட்டையர்கள் சுகன்யையை, அவள் குளித்து முடித்து வெற்றுடலோடு இருக்கும்போது காண நேர்ந்தது. தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} மகளைப் போல அற்புதமான உறுப்புகள் கொண்டவளைக் {சுகன்யையைக்} கண்ட நாசத்யர்களான {மூக்கில் பிறந்தவர்களான} அசுவினிகள் அவளை {சுகன்யையை} நெருங்கி அவளிடம், "ஓ! அழகிய வடிவம் கொண்ட தொடைகளைக் கொண்டவளே, நீ யாருடைய மகள்? நீ இந்தக் கானகத்தில் என்ன செய்கிறாய்? ஓ! மங்களகரமானவளே, அற்புதமான அருள் கொண்டவளே, இவற்றை அறிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். ஆகையால் நீ எங்களுக்கு அதைச் சொல்", என்றனர்.


இதன் பேரில் அவள் {சுகன்யா} அந்தத் தேவர்களில் முதன்மையானவர்களிடம் {அசுவினிகளிடம்} நாணத்துடன், "நான் சர்யாதியின் மகளென்றும், சியவனரின் மனைவியென்றும் அறிந்து கொள்ளுங்கள்" என்றாள். இதைக்கேட்ட அசுவினிகள் புன்னகையுடன், "ஓ! நற்பேறு பெற்றவளே {சுகன்யா}, மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவருக்கு {சியவனருக்கு} உனது தந்தை {சர்யாதி} உன்னை ஏன் அளித்தான்? ஓ! மருட்சியுடைய மங்கையே, நிச்சயமாக நீ மின்னலைப் போல இந்தக் கானகத்தில் பிரகாசிக்கிறாய். ஓ! பெண்ணே, தேவர்களில் கூட இப்படி எங்கள் கண்களைக் கூசச் செய்தவளை நாங்கள் கண்டதில்லை. ஓ! மங்கையே, ஆபரணங்களற்று, மகிழ்ச்சிகரமான ஆடைகளற்று இருக்கும்போதே நீ இந்தக் கானகத்தில் மிகுந்த அழகுள்ளவளாக இருக்கிறாய். ஓ! குற்றமற்ற உறுப்புகள் கொண்டவளே, இப்படி அழுக்கும் சேறும் பூசப்பட்டவளாக இருந்தால் பிரகாசிக்க மாட்டாய். ஆனால், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பபட்டு, கண்கவர் ஆடைகளை உடுத்தினால் மிகவும் பிரகாசிப்பாய். ஓ! அற்புதமான மங்கையே, ஒளிவீசும் புன்னகை கொண்டவளே, மூப்பினால் தளர்ந்தவரும், இன்பம் உணர முடியாத நிலையை அடைந்தவரும், உன்னைப் பராமரிக்க முடியாதவருமான கணவரை {சியவனரை}, இந்தத் துயரத்திலும் நீ ஏன் சேவிக்கிறாய்? ஓ! தெய்வீக அழகு கொண்ட மங்கையே, நீ சியவனரைக் கைவிட்டு, எங்களில் ஒருவரை கணவராக ஏற்பாயாக. உனது இளமையைக் கனியற்றதாக்குவது உனக்குத் தகாது" என்றனர் {அசுவினிகள்}.

இப்படிச் சொல்லப்பட்ட சுகன்யா, அந்தத் தேவர்களிடம், "நான் என்னை எனது கணவரான சியவனருக்கு அர்ப்பணித்திருக்கிறேன். அதில் ([ஒரு மனிதரிடம் விசுவாசத்துடன் இருக்கும்] எனது நேர்மையில்) உங்கள் சந்தேகங்களை ஊக்குவிக்காதீர்கள்" என்றாள். அதற்கு அவர்கள் {அசுவினிகள்} மீண்டும் அவளிடம் {சுகன்யாவிடம்}, "நாங்கள் இருவரும் தேவ மருத்துவர்கள். நாங்கள் உனது தலைவனை இளமையும் அருளும் கொண்டவராக மாற்றுகிறோம். அதன்பிறகு, நீங்கள் எங்களில் ஒருவரை, அதாவது நாங்கள் இருவர் மற்றும் உனது கணவர் ஆகிய மூவரில் ஒருவரை உனது துணையாகத் தேர்ந்தெடு. ஓ! மங்களகரமானவளே, இதற்கு உறுதியளித்து நீ உனது கணவரை இங்கே அழைத்து வா" என்றனர்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்கள் {அசுவினிகள்} வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட அவள், பிருகுவின் மகனிடம் {சியவனரிடம்} சென்று அந்த இரண்டு தேவர்களும் {அசுவினிகளும்} சொன்னதைச் சொன்னாள். அவளது செய்தியைக் கேட்ட சியவனர், தனது மனைவியிடம் {சுகன்யாவிடம்}, "அப்படியே செய்" என்றார். தனது தலைவனின் அனுமதியைப் பெற்ற அவள் {சுகன்யா}, (அசுவினி தேவர்களிடம் சென்று) அவர்களிடம், "அப்படியே செய்யுங்கள்" என்றாள். "அப்படியே செய்யுங்கள்" என்ற அவளது வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் {அசுவினிகள்} மன்னனின் {சர்யாதியின்} மகளிடம் {சுகன்யாவிடம்}, "உனது கணவர் நீருக்குள் இறங்கட்டும்" என்றனர்.

அழகை அடைய விரும்பிய சியவனரும் விரைவாக நீருக்குள் இறங்கினார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த அசுவினி இரட்டையர்களும், அந்த நீரின் பரப்புக்குள் மூழ்கினார். அடுத்த நொடியில் அவர்கள் அனைவரும் அழகான உருவத்துடனும், இளமையுடனும், காதில் மெருகூட்டப்பட்ட குண்டலங்களுடனும் தோன்றினர். பார்வைக்கு ஒரே உருவத்தைக கொண்ட அவர்கள் அவளிடம் {சுகன்யாவிடம்}, "ஓ! நற்பேறு கொண்டவளே, எங்களில் ஒருவரை உனது துணையாகத் தேர்ந்தெடு. ஓ! அழகானவளே, உனது எண்ணத்துக்குத் திருப்தி உண்டாக்கும் ஒருவரை நீ உனது தலைவனாகத் தேர்ந்தெடு" என்றனர். அவர்க்ள அனைவரும் ஒரே தோற்றம் கொண்டிருப்பினும், அவள் ஆழ்ந்து ஆராய்ந்து, கடைசியாகத் தனது கணவரின் அடையாளத்தை உறுதி செய்து, சரியாக அவரையே {சியவனரையே} தேர்வு செய்தாள்.

பேராசைப் பட்ட அழகையும், தனது மனைவியையும் அடைந்த மிகுந்த சக்தி கொண்ட சியவனர், மிகவும் திருப்தி கொண்டு அந்த நாசத்ய {நாசியில் பிறந்த அசுவினி} தேவர்களிடம், "உங்கள் கைகளால் ஒரு முதிர்ந்தவனான நான், இளமையும் அழகும் பெற்று எனது இந்த மனைவியையும் அடைந்ததால், மிகவும் திருப்தி கொண்ட நான், நிச்சயமாக உங்களைத் தேவர்கள் தலைவன் {இந்திரன்} முன்னிலையில் சோமச் சாற்றைப் பருகுபவர்களாக ஆக்குவேன். இதை நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன்" என்றார் {சியவனர்}. இதைக் கேட்ட அந்த இரட்டையர்கள் {அசுவினிகள்} மிகுந்த மகிழ்ச்சியுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர். பிறகு சியவனரும் சுகன்யாவும் தேவர்களைப் போலத் தங்கள் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தினர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, March 14, 2014

சுகன்யாவை மணந்த சியவனர் - வனபர்வம் பகுதி 122

Chyavana married sukanya | Vana Parva - Section 122 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சியவனர் கடுந்தவம் இருப்பது; சியவனரைச்சுற்றி எறும்புப்புற்று வளர்வது; சர்யாதி தனது பணியாட்களுடனும்  நாலாயிரம் பெண்களுடனும், தனது ஒரே மகளுடனும் அங்கே வருவது; சுகன்யாவைக் கண்டு சியவனர் மயங்குவது; எறும்புப்புற்றில் தெரிந்த சியவனரின் கண்களைச் சுகன்யா முள்ளால் துளைப்பது; சியவனர் கோபம் கொள்வது; சர்யாதி சியவனரைச் சாந்தப்படுத்துவது; சுகன்யா சியவனர் திருமணம்...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பெரும் முனிவரான பிருகுவுக்குச் சியவனன் என்ற பெயரில் ஒரு மகன் பிறந்திருந்தார். மிகப்பிரகாசமானவராக அவர் {சியவனர்} அந்தத் தடாகத்தின் அருகே தவமிருக்கத் தொடங்கினார். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}! ஓ மனிதர்களின் பாதுகாவலா! பெரும் சக்தி கொண்ட அவர் {சியவனர்} வீர நிலை என்ற ஆசனத்தில் {வீராசனம்} நீண்ட காலத்திற்கு அசைவற்று அதே இடத்தில் அமர்ந்திருந்தார். கொடிகள் சூழ்ந்த அவரை {சியவனரைச்} சுற்றி எறும்புப்புற்று {கரையான்புற்று} உண்டாயிற்று. அதன் பிறகு நீண்ட காலம் கழித்து, திரளான எறும்புக் கூட்டம் அவரை மொய்த்தது. முழுதும் எறும்புகளால் மூடப்பட்ட அந்த மதிநுட்பமுடைய தவசி {சியவனர்} கிட்டத்தற்ற மண்குவியல் போலவே காணப்பட்டார். அப்படி எறும்புப்புற்றால் மூடப்பட்ட அவர் தொடர்ந்து தவம்பயின்று வந்தார்.


அதன் பிறகு, நீண்ட காலம் கடந்து, சர்யாதி என்ற பெயர் படைத்த பூமியின் ஆட்சியாளன், அந்த இனிமையான அற்புதமான தடாகத்துக்கு கேளிக்கைக்காக வந்தான். ஓ பாரதக் குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, அவனோடு சேர்ந்து அவனால் {மன்னன் சர்யாதியால்} மணம்புரியப்பட்ட நாலாயிரம் பெண்களும் அங்கே வந்தனர். மேலும், அழகான புருவம் கொண்ட அவனது {மன்னன் சர்யாதியின்} மகளான சுகன்யா என்ற பெயர் கொண்டவளும் அவனோடு வந்திருந்தாள். தேவர்கள் அணியும் ஆபரணங்கள் பூண்டிருந்த அவள் {சுகன்யா}, தனது பணிப்பெண்கள் சூழ நடந்து, பிருகுவின் மகன் {சியவனர்} அமர்ந்திருந்த அந்த எறும்புப் புற்றை அணுகினாள். பணிப்பெண்கள் சூழ இருந்த அவள் {சுகன்யா}, அழகான இயற்கைக் காட்சிகளையும், உயர்ந்த மரங்கள் நிரம்பிய வனத்தையும் கண்டு உல்லாசமாக இருக்க ஆரம்பித்தாள். இளமையின் துவக்கத்தில் இருந்த அவள் {சுகன்யா} அழகாகவும், எளிதில் காதல் கொள்ளத்தக்க வகையிலும், விளையாட்டின் மீது நாட்டம் கொண்டவளாகவும் இருந்தாள். பூத்துக்குலுங்கும் காட்டு மரங்களின் கிளைக்குச்சிகளை அவள் உடைத்துக் கொண்டிருந்தாள்.

புத்திக்கூர்மை கொண்ட பிருகுவின் மகன் {சியவனர்}, பணிப்பெண்களற்று, ஒற்றையாடையுடனும், ஆபரணங்கள் பூணப்பட்டும் இருந்த அவளை {சுகன்யாவை} நடமாடும் மின்னலெனக் கண்டார். அவளை {சுகன்யாவை} அக்கானகத்தில் தனிமையில் கண்ட மிகப் பிரகாசமுள்ள அந்தத் தவசி {சியவனர்}, ஆசையால் ஈர்க்கப்பட்டார். தவச் சக்தி கொண்ட அந்த மறுபிறப்பாள முனிவர் {சியவனர்}, மெல்லிய குரலில் அந்த மங்களகரமானவளை {சுகன்யாவை} அழைத்தார். ஆனால் அவளுக்கு அவரது குரல் கேட்கவில்லை. பிறகு, அந்த எறும்புப் புற்றில் தெரியும் அந்தப் பிருகு மகனின் {சியவனரின்} கண்களைக் கண்ட சுகன்யா ஆர்வமிகுதியால் தனது உணர்வை இழந்து, "இது என்ன?" என்று கேட்டவாறு, ஒரு முள்ளை எடுத்து அந்தக் {முனிவர் சியவனரின்} கண்களைத் துளைத்தாள். அவளால் கண்கள் துளைக்கப்பட்ட அவர் மிகுந்த வலியை உணர்ந்து கோபமடைந்தார். (கோபத்தால்) அவர் சர்யாதியின் படையில் இருந்தவர்களின் இயற்கை அழைப்புகளைத் {மலம் மற்றும் சிறுநீர் கழிதலைத்} தடை செய்தார்.

இப்படி இயற்கையின் அழைப்புகள் தடைசெய்யப்பட்ட அந்த மனிதர்கள் மிகுந்த துன்பத்தை அடைந்தனர். இந்நிலைகளைக் கண்ட மன்னன் {சர்யாதி} "முதியவரும், எப்போதும் தவத்திலிருப்பவரும், கோபம் கொண்டவருமான பிருகுவின் சிறப்புமிகுந்த மகனுக்கு {சியவனருக்கு} யார் தீங்கிழைத்தது.? அறிந்தவர்கள் விரைவாக எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். அதற்குப் படைவீரர்கள், "அம்முனிவருக்கு யாரும் தீங்கிழைத்தார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. நீர் சொல்வது போல இருந்தால், இவ்விஷயத்தை நீர்தான் விசாரித்து அறியவேண்டும்" என்றனர். அதன் பேரில் அந்தப் பூமியின் ஆட்சியாளன், (சந்தர்ப்பத்திற்கேற்ப) அச்சுறுத்தல், சமரசம் என்ற இரண்டையும் பயன்படுத்தித் தனது நண்பர்களிடம் (அச்சூழ்நிலை பற்றி) விசாரித்தான். ஆனால் அவர்களும் எதையும் அறியவில்லை.

இயற்கை அழைப்புகள் தடைசெய்யப்பட்டதால் துயரப்பட்ட படையினரைக் கண்டும், தனது தந்தையின் துயரத்தைக் கண்டும், சுகன்யா தனது தந்தையிடம், "நான் கானகத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, ஒரு எறும்புப்புற்றில் ஒளிரும் பொருள் ஒன்றைக் கண்டேன். அதை மின்மினிப் பூச்சி என்றெண்ணி அதை நெருங்கித் (முள்ளால்) துளைத்தேன்" என்றாள்.  இதைக் கேட்ட சர்யாதி உடனே அந்த எறும்புப்புற்றுக்கு வந்து வயதிலும், தவத்திலும் முதிர்ந்த பிருகுவின் மகனைக் {சியவனரைக்} கண்டான். பிறகு அந்தப் பூமியின் அதிபதி கூப்பிய கரங்களோடு (அத்தவசியைக்) கண்டு, "சிறுபிள்ளைத்தனமாக அறியாமையில் எனது மகள் {சுகன்யா} செய்த இந்தச் செயலை மன்னிப்பதே உமக்குத் தகும்" என்றான். பிருகுவின் மகனான சியவனர், "என்னை அவமதித்த இவள், கர்வம் நிறைந்து எனது கண்களைத் துளைத்தாள். ஓ மன்னா {சர்யாதி}, அழகுடன் கூடிய இவள் {சுகன்யா}, அறியாமையிலும், சபலத்தாலும் தனது உணர்வுகளை இழந்தாள். உனது மகள் எனது மணமகளாக வேண்டும். அந்த ஒரு நிபந்தனையால் மட்டுமே உன்னை மன்னிப்பேன் என்று நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன்" என்றார் {சியவனர்}.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்தத் தவசியின் {சியவனரின்} வார்த்தைகளைக் கேட்ட சர்யாதி, சற்றும் நேரமும் பொறுக்காமல், தனது மகளை அந்த உயர் ஆன்ம சியவனருக்கு அளித்தான். அந்த மங்கையின் கரத்தைப் பெற்ற அந்தப் புனிதமானவர் {முனிவர் சியவனர்} மன்னனிடம் {சர்யாதியிடம்} திருப்தி கொண்டார். அந்த முனிவரின் அருளை வென்ற அந்த மன்னன் {சர்யாதி} தனது படைகளுடன் நகரத்துக்குத் திரும்பினான். களங்கமற்ற சுகன்யாவும் அந்தத் தவசியை {சியவனரை} கணவராக அடைந்து, அவரது தவப்பயிற்சியின்போதும், விதிகளைக் கடைப்பிடிக்கும்போதும் அவரை நன்றாகப் பராமரித்தாள். அந்த அழகிய முகம் கொண்டவள் {சுகன்யா}, கபடமற்றவளாக இருந்து விருந்தினர்களுக்கும், புனித நெருப்புக்கும் பணிவிடை செய்து சியவனரை வழிபட்டு வந்தாள்."


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Thursday, March 13, 2014

கயன் செய்த வேள்விகள் - வனபர்வம் பகுதி 121

The sacrifices preformed by Gaya | Vana Parva - Section 121 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கயன் செய்த வேள்விகள்; பயோஷ்ணி ஆறின் பெருமை; நர்மதை ஆறு; நீலரத்தின மலை; சியவனர் கோபம்...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நிருகன் {மன்னன் கயன்} இங்கே வேள்வி செய்த போது, அவன் சோமச் சாறைக் கொடுத்து எதிரிகளின் நகரங்களை அழிக்கும் இந்திரனைத் திருப்தி செய்தான். இதனால் இந்திரன் புத்துணர்ச்சி பெற்று மிகவும் திருப்தி கொண்டான். இங்கே தேவர்களோடு சேர்ந்த இந்திரனும், அனைத்து உயிரினங்களின் பாதுகாவலர்களும், புரோகிதர்களுக்குப் பெரும் அளவில் பரிசுகள் கொடுத்து அந்த வேள்வியைக் கொண்டாடினர். இங்கே உலகத்தின் தலைவனான மன்னன் அமிர்தராயசன் {கயன்} ஏழு குதிரை வேள்விகளைச் செய்தபோது, சோமச் சாறால் இடியைத் {வஜரத்தை} தாங்கும் இந்திரனைத் திருப்தி செய்தான். மற்ற வேள்விகளில் மரத்தாலும் மண்ணாலும் செய்யப்பட்ட இன்றியமையாத பொருட்கள் அனைத்தும், அவனால் செய்யப்பட்ட ஏழு வேள்விகளிலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. ஏழு குச்சி கட்டுகள், வேள்வி வளையங்கள், இடங்கள், அகப்பைகள், பாத்திரங்கள், கரண்டிகள் ஆகியன அவனால் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொரு வேள்வி குச்சியின் மேலும், ஏழு வளையங்கள் பொருத்தப்பட்டிருந்தன.


ஓ! யுதிஷ்டிரா, இந்திரனுடன் கூடிய தேவர்கள் சேர்ந்து அவனது புனித சடங்குக்குத் தேவையான வேள்விக் குச்சிகளைப் பளபளக்கும் தங்கத்தில் செய்தார்கள். பூமியின் பாதுகாவலனான கயன் நடத்திய அந்தச் சிறப்பு வாய்ந்த வேள்விகளிலெல்லாம், சோமச்சாற்றைக் குடித்து இந்திரன் திருப்தியடைந்தான். அந்த வேள்விகளை நடத்திய புரோகிதர்களும் அவர்களுக்குக் கிடைத்த பணிக்கொடையில் திருப்தி கொண்டார்கள். சொல்லொணா செல்வத்தைப் பெற்ற அந்தப் புரோகிதர்கள் அவற்றை எண்ணிப் பார்த்தனர். பூமியின் மண் துகள்கள் போல, வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல, மழையில் விழும் துளிகள் போல, அவை எவராலும் எண்ண முடியாதவையாக இருந்தன. கயன் கொடுத்த செல்வங்கள் எண்ணிக்கையில் அடக்க முடியாதவையாக இருந்தன. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏழு வேள்விகளில் அவற்றை நடத்திய புரோகிதர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றில் மேற்சொன்னவையைக் கூட எண்ணிவிடலாம். ஆனால், அவனால் அளிப்பட்ட பணிக்கொடைகளின் நிறைவை யாராலும் எண்ணிக்கையில் அடக்க முடியாது.

தேவதச்சனால் {விஸ்வகர்மாவால்} கல்வித் தேவதையின் {சரஸ்வதியின்} உருவம் தங்கத்தில் பொறிக்கப்பட்டு, அனைத்துத் திக்குகளில் இருந்தும் வந்திருந்த புரோகித சாதி உறுப்பினர்களுக்குக் {அந்தணர்களுக்கு} பரிசாகக் கொடுக்கப்பட்டன. ஓ! மனிதர்களின் பாதுகாவலனே {யுதிஷ்டிரா}, அந்த உயரான்ம கயன் தனது வேள்விச் சடங்குகளைச் செய்த போது, பல இடங்களில் வேள்வித்தூண்கள் நாட்டப்பட்டதால், பூமியின் பரப்பில் சிறிது இடமே எஞ்சியிருந்தது. ஓ பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அந்தப் புனிதச் செயலால் அவன் {கயன்} இந்திரலோகத்தை அடைந்தான். இந்தப் பயோஷ்ணி ஆறில் நீராடும் எவரும் கயன் அடைந்த உலகங்களை அடைகிறார்கள். ஆகையால், ஓ! மன்னர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஓ! தடுமாற்றம் இல்லாத இளவரசே! நீயும் உனது தம்பிகளும் இந்த நதியில் நீராட வேண்டும். ஓ! பூமியின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அப்போதுதான் நீ இந்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவாய்" என்றார் {லோமசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {ஜனமேஜயனே}, யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன், அந்தப் பயோஷ்ணி ஆறில் நீராடினான். பிறகு ஓ! பாவமற்ற இளவரசே {ஜனமேஜயா}, அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் சேர்ந்து நீலரத்தின மலைக்கும், பெரும் ஆறான நர்மதைக்கும் பயணப்பட்டான். அருளப்பட்ட தவசியான லோமசர் அவனிடம் மகிழ்ச்சிகரமான பல புண்ணிய இடங்களையும், தேவர்களின் புனிதக் கோவில்களையும் சொன்னார். பிறகு அவன் தனது தம்பிகளுடன் அந்த இடங்களுக்குத் தனது விருப்பப்படியும், வசதிக்குத்தக்கவாறும் பயணப்பட்டான் பல இடங்களில் அந்தணர்கள் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இருந்து ஆயிரக்கணக்கான பரிசுகளைப் பெற்றனர்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}! நீலரத்தின மலையை அடைந்து, நர்மதையாற்றில் மூழ்குபவன் தேவர்களும் மன்னர்களும் வசிக்கும் உலகங்களை அடைவான். ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே! {யுதிஷ்டிர}னே இந்தக் காலம் திரேதா யுகத்துக்கும், கலியுகத்துக்கு இடைப்பட்ட காலமாகும். ஓ! குந்தியின் மகேன {யுதிஷ்டிரா}, இதுவே ஒரு மனிதன் தனது பாவங்களைத் தொலைக்கும் காலமாகும். ஓ மரியாதைக்குரிய ஐயா {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில்தான், சர்யாதி வேள்விச்சடங்குகளைச் செய்த போது, இரு தேவ மருத்துவர்களுடன் {அசுவின் தேவர்களுடன்} காணும் உருவத்தில் இந்திரன் வந்து, சோமச்சாற்றைப் பருகினான். கடும் தவமிருந்த பிருகுவின் மகன் {சியவனர்}, இந்திரன் மீது கோபம் கொண்டு, அவனை அசைவற நிற்கச் செய்து, இந்த இடத்தில் தான் சுகன்யா என்ற இளவரசியை மனைவியாக அடைந்தார்."

யுதிஷ்டிரன் {லோமசரிடம்}, "பகாசுரனைத் தண்டித்தவனான ஆறு குணங்களைக் கொண்டவன் {இந்திரன்}, சியவனரால் எப்படி அசைவற்று நிற்க வைக்கப்பட்டான்? எக்காரணத்திற்காக அந்தப் பெரும் பலம் வாய்ந்த தவசியானவர் {சியவனர்}, இந்திரன் மீது கோபம் கொண்டார்? ஓ அந்தணரே {லோமசரே}, அவர் தான் தேவ மருத்துவர்களைச் சோமச்சாற்றைக் குடிக்கும் தகுதிக்கு உயர்த்தியவரா? இவை அனைத்தையும், சரியாக அது நடந்த படியே மதிப்பிற்குரிய நீர் மறுபடி எனக்குச் சொல்ல வேண்டும்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன் லோமசரிடம்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top