Menaka made provisions! | Adi Parva - Section 71 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 7)
பதிவின் சுருக்கம் : சகுந்தலையைக் கண்ட துஷ்யந்தன்; தன் பிறப்பு முதலிய வரலாற்றைச் சொன்ன சகுந்தலை; மேனகைக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
வைசம்பாயனர் சொன்னார், "அதன் பிறகு அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, குறைக்கப்பட்டிருந்த தன் பரிவாரத்தையும் ஆசிரமத்தின் வாசலில் விட்டான். தனியாகவே {ஆசிரமத்தினுள்ளே} நுழைந்த அவன், கடும் நோன்புகளைக் கொண்ட முனிவரைக் {கண்வரைக்} காணவில்லை.(1) முனிவரைக் காணாமலும், வசிப்பிடம் வெறுமையாக இருப்பதைக் கண்டும் அவன் {துஷ்யந்தன்}, “ஓ இங்கே யார் இருப்பது?” என்று உரக்கக்கேட்டான். {அந்தக் காட்டில்} அவனது குரல் எதிரொலித்தது.(2) அவனது குரலைக் கேட்டு, ஒரு துறவியின் மகளைப் போல உடுத்தியிருந்தவளும், ஸ்ரீயை (லட்சுமியைப்) போன்ற அழகுடையவளுமான ஒரு கன்னிகை {சகுந்தலை}, அந்த முனிவரின் {கண்வரின்} வசிப்பிடத்தில் இருந்து வெளியே வந்தாள்.(3) கருங்கண்களைக் கொண்ட அந்த அழகி, மன்னன் துஷ்யந்தனைக் கண்டதும், அவனுக்கு நல்வரவு கூறி மரியாதையுடன் வரவேற்றாள்.(4) அவனுக்கு {துஷ்யந்தனுக்கு} ஆசனம் கொடுத்து, கால்களைக் கழுவ நீரும், அர்க்கியமும்
[1] கொடுத்த அவள் {சகுந்தலை}, அந்த மன்னனின் உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து விசாரித்தாள்.(5)