Showing posts with label கௌதமர். Show all posts
Showing posts with label கௌதமர். Show all posts

Saturday, November 30, 2019

குருதக்ஷிணை! - அஸ்வமேதபர்வம் பகுதி – 56

Preceptor Fee! | Aswamedha-Parva-Section-56 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 41)


பதிவின் சுருக்கம் : முதுமையைக் கண்டு வருந்திய உதங்கர்; உதங்கருக்கு இளமையைக் கொடுத்துத் தமது மகளைத் திருமணம் செய்து கொடுத்த கௌதமர்; உதங்கரிடம் அஹல்யை கேட்ட குருதக்ஷிணை...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "வலிமைகள் அனைத்திற்கும் பிறப்பிடமான விஷ்ணுவையே சபிக்க விரும்பும் அளவுக்கு உயர் ஆன்ம உதங்கர் செய்த தவங்கள் என்ன?" என்று கேட்டான்.(1)

Wednesday, June 19, 2019

புண்யலோகங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 102

Regions of Felicity! | Anusasana-Parva-Section-102 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 102)


பதிவின் சுருக்கம் : புண்ணிய உலகங்கள் அனைத்தையும் குறித்து கௌதமருக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, அறவோர் அனைவரும் மரணத்திற்குப் பிறகு ஒரே உலகத்தையே அடைவதாகச் சொல்லப்படுகிறது. ஓ! பாரதரே, அவர்களுக்கிடையிலான நிலையில் உண்மையில் வேறு இருக்கிறதா?" என்று கேட்டான்.(1)

Tuesday, September 11, 2018

கௌதமர் அகலிகை! - சாந்திபர்வம் பகுதி – 266

Gautama and Ahalya! | Shanti-Parva-Section-266 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 93)


பதிவின் சுருக்கம் : காரணங்களை ஆராய்ந்து காரியம் செய்வதற்கு உதாரணமாகச் சிரகாரினின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சிரிகாரினிடம் அவரது தாய் அஹல்யையின் தலையை வெட்ட உத்தரவிட்ட கௌதமர்; தாமதித்த சிரகாரின்; வருந்திய கௌதமர்; சிரிகாரின் அகலிகையைக் கொல்லாததைக் கண்டு மகிழ்ந்த கௌதமர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, (ஒருபுறம் பெரியோரின் கட்டளைகளும், மறுபுறம் அவற்றில் உள்ள கொடூரங்களும் இருக்கும் விளைவால்) நிறைவேற்றக் கடினமான செயல்கள் அனைத்தின் காரியத்திலும் நீரே எங்களுடைய பேராசானாக {உத்தம குருவாக} இருக்கிறீர். ஒரு செயலானது ஒருவனுடைய கடமையா? அல்லது தவிர்க்கப்பட வேண்டியதா என்பதை அவன் எவ்வாறு தீர்மானிக்க வேண்டும்? அது விரைவாகத் தீர்மானிக்கப்பட வேண்டுமா, தாமதமாகத் தீர்மானிக்கப்பட வேண்டுமா?" என்று கேட்டான்.(1)

Monday, April 02, 2018

தாய் தந்தை! - சாந்திபர்வம் பகுதி – 129

Mother and Father! | Shanti-Parva-Section-129| Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 129)


பதிவின் சுருக்கம் : பெற்றோருக்குப் பணிவிடை செய்வது ஒவ்வொருவரின் கடனை நேர் செய்வதற்குரிய இயல்பு என்று யமன் கௌதம முனிவருக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-129
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-129
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அமுதத்தைக் குடிப்பவன் போலவே, நீர் சொல்வதைக் கேட்கும் நானும் தாகம் தணியாதவனாக இருக்கிறேன். தன்னறிவைக் கொண்ட ஒருவன், தியானத்தால் ஒருபோதும் தணிவடையாததைப் போலவே, நீர் சொல்வதைக் கேட்பதால் நான் ஒருபோதும் தணிவடையவில்லை.(1) எனவே, ஓ! பாட்டா, அறநெறி குறித்து நீர் மீண்டும் உரைப்பீராக. அறநெறி குறித்த உமது உரையாடல்கள் எனும் அமுதத்தைப் பருகுவதால் என் தாகம் ஒருபோதும் தணிவடையவில்லை” என்றான்.(2)

Tuesday, June 17, 2014

அத்ரி கௌதமர் சர்ச்சை! - வனபர்வம் பகுதி 184

The dispute between Atri and Gautama! | Vana Parva - Section 184 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

மன்னன் வைனியனின் குதிரைவேள்வியில் அத்ரி முனிவருக்கும் கௌதம முனிவருக்கும் இடையில் நடந்த சர்ச்சையைச் சொல்லி மன்னனின் பெருமையை மார்க்கண்டேயர் உரைப்பது...

மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், "அந்தணர்களின் மகிமையை மீண்டும் நீங்கள் கேட்பீராக! ஒரு காலத்தில் வைனியன் {Vainya} என்ற ஒரு அரச முனி குதிரை வேள்வி செய்து கொண்டிருந்த போது, அத்ரி அவனிடம் பிச்சை கேட்பதற்குச் செல்ல விரும்பினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதன் தொடர்ச்சியாக, அற நீதி காப்பதற்காக அத்ரி செல்வத்தின் மீதான தமது ஆசையைத் துறந்தார். பெருத்த சிந்தனைக்குப் பிறகு, அந்தப் பெரும் வலிமை படைத்தவர் {அத்ரி}, கானகத்தில் வாழ விரும்பி, தனது மனைவி மற்றும் மகன்களை ஒருங்கே அழைத்து அவர்களிடம், "நாம் அனைவரும் உயர்ந்த அமைதியையும், நமது விருப்பங்களின் முழுமையையும் அடைவோமாக. எனவே, பெரும் தகுதி கொண்ட வனவாழ்க்கையை ஏற்பவர்களாக விரைந்து கானகம் செல்வோம்" என்றார். அறநோக்கங்கள் கொண்டு வாதாடிய அவரது {அத்ரியின்} மனைவி அவரிடம், "ஒப்பற்ற இளவரசனான வைனியனிடம் சென்று அவனிடம் பெரும் செல்வங்களை இரந்து கேளுங்கள்! வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசமுனி, இப்படி உம்மால் கேட்கப்பட்டதும் செல்வங்களை அளிப்பான். ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே, அங்கே சென்று, பெரும் செல்வத்தைப் பெற்றால், நீர் உமது மகன்களுக்கும், வேலைக்காரர்களுக்கும் பிரித்துக் கொடுக்கலாம். அப்படிச் செய்த பிறகு நீர் எங்கு விரும்புகிறீரோ அங்குச் செல்லலாம். இதுவே அறம் அறிந்த மனிதர்களால் இணையில்லாத உயர்ந்த அறமாக மதிக்கப்படுகிறது" என்றாள். அதற்கு அத்ரி {மனைவியிடம்}, "ஓ! அறம் சார்ந்தவளே, உயர் ஆன்ம கௌதமர் மூலம், அந்த வைனியன் ஒரு பக்தி கொண்ட இளவரசன் என்றும், உண்மையின் விளைவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன் என்றும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அங்கே என் மீது பொறாமை படும் அந்தணர்கள் இருக்கிறார்கள். இதையும் கௌதமர் எனக்குச் சொல்லியிருக்கிறார். ஆகவே நான் அங்குச் செல்ல முயலவில்லை. அங்கே, நான் நல்லது குறித்தும் பக்தியை அடையக்கூடிய வழிமுறைகள் குறித்தும், ஒருவரின் விருப்பங்கள் நிறைவேறுவது குறித்தும் ஆலோசனை வழங்க வேண்டியிருந்தால், எந்த நன்மையும் செய்யாத எந்தப் பயனும் இல்லாத வார்த்தைகளைச் சொல்லி அதை அவர்கள் மறுப்பார்கள். ஆயினும் எனது தீர்மானங்களை நான் ஏற்கிறேன் ஆகையால் நான் அங்குச் செல்வேன். பசுக்களையும் ஏராளமான செல்வங்களையும் வைனியன் எனக்கு அளிப்பான்" என்றார் {அத்ரி}.


மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், "இப்படிச் சொன்ன அந்தப் பெரும் தவத்தகுதி படைத்தவர் {முனிவர் அத்ரி}, வைனியானின் வேள்விக்கு விரைந்து, வேள்விப் பீடத்தை அடைந்து, மன்னனுக்குத் தனது மரியாதையைத் தெரிவித்து, அவனை நல்ல பொருள் பொதிந்த வார்த்தைகளால் புகழ்ந்தபடி, "நீ அருளப்பட்டிருப்பாயாக! ஓ! மன்னா, இப்பூமியை ஆள்பவர்களில் நீயே முதன்மையானவன். முனிவர்கள் உன்னைப் புகழ்கிறார்கள். மேலும், தர்ம காரியங்கள் அறிந்தவர்கள் உன் போல யாருமில்லை" என்றார் {அத்ரி}. அவரிடம் {அத்ரியிடம்}, பெரும் தவத்தகுதி படைத்த கௌதம முனிவர் ஆத்திரத்துடன், "அத்ரி, மீண்டும் இந்த முட்டாள் தனத்தைச் செய்யாதீர். உமது அறிவு நல்ல நிலையில் இல்லை. நமது இந்த உலகில், படைக்கப்பட்ட அனைத்திற்கும் தலைவனான மகேந்திரனே ஆள்பவர்களில் முதன்மையானவன் ஆவான்" என்றார். பிறகு, ஓ! பெரும் இளவரசனே {யுதிஷ்டிரா}, அத்ரி கௌதமரிடம், "அனைத்து உயிர்களின் தலைவனான இந்திரன், நமது விதிகளை ஆள்வதைப் போலவே, இந்த மன்னனும் ஆள்கிறான். நீர் தவறாகக் கருதுகிறீர். ஆன்ம உணர்வு குறைவால், அறிவிழந்திருப்பவர் நீரே" என்றார். அதற்குக் கௌதமர், "நான் தவறாகக் கருதவில்லை என்பதை நான் அறிவேன். இவ்விஷயத்தில் நீரே தவறான கருத்தில் இருக்கிறீர். மன்னன் முகம் கண்டு பேசுவதற்காக, நீர் இந்த மக்கள் மன்றத்தில் அவனை முகத்துதி செய்கிறீர். நீர் உயர்ந்த அறத்தை அறியவில்லை, அது வேண்டும் என்றும் நீர் உணரவில்லை. நீர் அறியாமையில் இருக்கும் குழந்தையைப் போல இருக்கிறீர். நீர் எப்படித்தான் வயதில் முதிர்ந்தீரோ?" என்று கேட்டார் {கௌதமர்}.

மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், "வைனியனின் வேள்வியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முனிவர்களுக்கு மத்தியில் அந்த இருவரும் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். அம்முனிவர்கள், "என்ன காரியம் அவர்களை உரத்தக்குரலில் பேச வைக்கிறது?" என்று கேட்டனர். பிறகு மிகுந்த பக்திமானான அனைத்து அறவிதிகளையும் கற்ற காசியபர் அந்தச் சர்ச்சையாளர்களை அணுகி என்ன காரியம் என்று விசாரித்தார். பிறகு, அந்தப் பெரும் முனிவர்களின் கூட்டத்திடம் கௌதமர், "ஓ! பெரும் அந்தணர்களே, எங்களுக்குள் நடக்கும் சர்ச்சை என்னவென்று கேளுங்கள். வைனியன்தான் நமது விதிகளின் ஆட்சியாளன் என்று அத்ரி சொல்கிறார்; இது குறித்து நமக்குப் பெருத்த சந்தேகம் இருக்கிறது" என்றர் {கௌதமர்}.

மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், "இதைக்கேட்ட உயர்ந்த மனம் கொண்ட முனிவர்கள் உடனே தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அறமனைத்தும் அறிந்த சனத்குமாரரிடம் சென்றனர். பெரும் தவத்தகுதி படைத்த அவர் {சனத்குமாரர்} அவர்களிடம் குறிப்புகளைக் கேட்டு, அறப் பொருள் நிறைந்த வார்த்தைகளால் பேசினார். சனத்குமாரர், "வனத்தை எரிக்க நெருப்புக்குக் காற்று துணைபுரிவது போல, ஒரு அந்தணனின் சக்தி க்ஷத்திரியனிடம் கலக்கிறது. அல்லது அந்தணர்களுடன் சேர்ந்த க்ஷத்திரியன் அவனது அனைத்து எதிரிகளையும் அழிக்கிறான். ஆட்சியாளன் சட்டமளிப்பதிலும், தனது குடிமக்களைப் பாதுகாப்பதிலும் புகழ்பெற்றவன். அவன் (படைக்கப்பட்டவைக்குப் பாதுகாப்பளனாய் இருப்பதால்) இந்திரனைப் போன்றவன், (ஆலோசகனாய் இருப்பதால்) சுக்ரனைப் போன்றவன் {ஆலோசகர்}, பிருஹஸ்பதியைப் போன்றவன். (ஆகவே அவன்), மனிதர்களின் விதிகளை ஆள்பவனாகவும் இருக்கிறான் (அழைக்கப்படுகிறான்). 'படைக்கப்பட்டவற்றைப் பாதுகாப்பவன்', "அரசன்', "சக்கரவர்த்தி', 'க்ஷத்திரியன்' (அல்லது பூமியின் காவலன்), 'பூமியின் தலைவன்', 'மனிதர்களின் தலைவன்' என்றெல்லாம் ஒரு தனி மனிதன் வழிபடப்படுகிறான் என்றால், யார்தான் அவனை வழிபடுவது சரி என்று நினைக்கமாட்டார்கள்? ஒரு மன்னனே (சமூகம் மற்றும் சட்டங்களுக்கு) தலைமைக் காரணம். 'போர்களில் அறம் சார்ந்தவன்' (ஆகையால் அமைதியை நிலைநாட்டுபவன்), 'காவல்காரன்', 'நிறைவானவன்', 'தலைவன்', 'முக்திக்கு வழிகாட்டி', 'எளிதாக வெல்பவன்', 'விஷ்ணுவைப் போன்றவன்', 'பயனுள்ள கோபம் கொண்டவன்', 'போர்க்களங்களை வெல்பவன்', 'உண்மையான தர்மத்தைப் (அன்புடன் பாதுகாத்துப்) பேணுபவன் அவனே. பாவத்திற்கு அஞ்சும் முனிவர்கள் க்ஷத்திரியர்களுக்கு (உலகியல்) வலிமையைக் கொடுக்கின்றனர். சொர்க்கத்தில் இருக்கும் தேவர்களில் சூரியன் தனது பிரகாசத்தால் இருளை விலக்குகிறான், அதே போல ஒரு மன்னனும் இவ்வுலகில் இருந்து பாவத்தை வேரோடு அழிக்கிறான். ஆகவே, புனித சாத்திரங்களின்படி பார்த்தால், அரசனின் பெருமைகள் தெரியும், மன்னனுக்கு ஆதரவாகப் பேசிய பக்கத்துக்குச் சாதகமாகப் பேசுவதற்கே நாம் கட்டுப்பட்டுள்ளோம்" என்றார் {சனத்குமாரர்}.

மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், "பிறகு அந்த ஒப்பற்ற இளவரசன் {வைனியன்}, வெற்றி பெற்ற பக்கத்தின் மீது மிகவும் திருப்தியடைந்து, தன்னைப் புகழ்ந்த அத்ரியிடம் மகிழ்ச்சியாக, "ஓ! மறுபிறப்பாள முனிவரே, நீர் என்னை இங்கே இருப்பவர்களில் பெருமையாகவும், அற்புதமான மனிதனாகவும் சொன்னீர். என்னைத் தேவர்களோடு ஒப்பிட்டீர். எனவே, நான் உமக்கும் பல்வேறு வகைப்பட்ட அபரிமிதமான செல்வங்களை அளிக்கிறேன். நீர் எங்கும் இருப்பவர் என்பது எனது எண்ணம். ஓ! நன்கு உடுத்தியவரே, நன்கு புகழப்படுபவரே, நான் உமக்குப் பத்து கோடி {Hundred Million 10,00,00,000} தங்க நாணயங்களையும், பத்துப் பாரம் {ten bharas} பொன்னையும் கொடுப்பேன்" என்றான் {வைனியன்}. பிறகு உயர்ந்த தவ அறமும், பெரும் ஆன்ம வலிமையும் கொண்ட அத்ரி, இப்படி (மன்னனால்) வரவேற்கப்பட்டு, அவன் கொடுத்த கொடைகளை உரிமை மீறாமல் பெற்றுக் கொண்டு, வீடு திரும்பினார். பிறகு அவரது செல்வங்களைத் தனது மகன்களுக்குக் கொடுத்து, தனது சுயத்தை அடக்கி, தவம் செய்யும் நோக்கோடு மகிழ்ச்சியாகக் கானகம் சென்றார்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

Sunday, June 23, 2013

சரத்வானை மயக்கிய ஜாலவதி! - ஆதிபர்வம் பகுதி 130

Janapadi seduced Saratwat! | Adi Parva - Section 130 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 66)

பதிவின் சுருக்கம் : கௌதமருக்குப் பிறந்த சரத்வான்; சரத்வானின் ஆயுத அறிவியல் நாட்டம்; ஜாலவதியைச் சரத்வானிடம் அனுப்பிய இந்திரன்; நாணற்கற்றையில் பிறந்த கிருபர் மற்றும் கிருபி; அவர்களை வளர்த்த சந்தனு; சந்தனுவிடம் அறிமுகம் செய்து கொண்டு கிருபருக்கு ஆயுத அறிவியலை அளித்த சரத்வான்; பாரத இளவரசர்களுக்குக் குருவான கிருபர்...

ஜனமேஜயன், "ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, கிருபரின் பிறப்புக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. நாணல் கற்றையிலிருந்து அவர் எவ்வாறு உண்டானார்? ஆயுதங்களை எவ்வாறு அவர் அடைந்தார்?" என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா! பெரும் முனிவர் கௌதமருக்கு சரத்வான் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தார். அந்தச் சரத்வான் பிறக்கும்போதே (கைகளில்) கணைகளுடன் {அம்புகளுடன்} பிறந்தார்.(2) ஓ எதிரிகளை அழிப்பவனே, கௌதமரின் மகன் மற்ற அறிவியல்களில் {வேத கல்வியில்} நாட்டம் கொள்ளாமல் ஆயுதங்களின் அறிவியலில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.(3) மாணவப் பருவத்தில் வேத ஞானத்தை அடையும் பிராமணர்களைப் போல, கடும் தவத்தால் அந்தச் சரத்வான் ஆயுதங்களை அடைந்தார்.(4) கௌதமர் (கௌதமரின் மகனான {சரத்வான்}, ஆயுத அறிவியலில் நாட்டம் கொண்டதாலும், தமது கடும் தவங்களாலும் இந்திரனைப் பெரிதும் அச்சமடையச் செய்தார்.(5)

Saturday, May 25, 2013

அங்க வங்க கலிங்க தேசங்கள் பிறந்த கதை! | ஆதிபர்வம் - பகுதி 104

The birth of Anga, Vanga and Kalinga Nations! | Adi Parva - Section 104 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 40)

பதிவின் சுருக்கம் : அரசபரம்பரையின் தொடர்ச்சிக்கு பீஷ்மர் சொன்ன வழிமுறைகள்; உதத்யர், பிருஹஸ்பதி மற்றும் மமதை குறித்த கதையைச் சொன்ன பீஷ்மர்; குருடராகப் பிறந்த தீர்க்கதமஸ்; ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்ற விதியைக் கொண்டு வந்த தீர்க்கதமஸ்; மன்னன் பலியும், தீர்க்கதமஸும்...

பிருஹஸ்பதி
பீஷ்மர், "பழங்காலத்தில், ஜமதக்னியின் மகன் ராமர் (பரசுராமர்) தனது தந்தை கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்து, ஹைஹய மன்னனைத் தனது கோடரியால் கொன்றார்.(1) அர்ஜுனனின் (ஹைஹய மன்னன் {கார்த்தவீரியார்ஜுனனின்}) ஆயிரம் கரங்களை வெட்டி இந்த உலகத்தில் பெரும் சாதனையைச் செய்தார்.(2) இவற்றிலெல்லாம் மனநிறைவு கொள்ளாமல், உலகத்தை வெற்றிக் கொள்ளத் தனது தேரில் ஏறி பெரும் ஆயுதங்கள் ஏந்தி க்ஷத்திரியர்களை அழித்தொழித்தார்.(3) அந்தப் பிருகு பரம்பரையின் கொழுந்து {பரசுராமர்}, தனது வேகமான கணைகள் மூலம் க்ஷத்திரியக் குலத்தை இருபத்தோரு முறை அழித்தொழித்தார்.(4) அந்தப் பெரும் முனிவரால் பூமி க்ஷத்திரியர்களற்று இருந்தபோது, பல இடங்களிலிருந்து வந்த க்ஷத்திரியப் பெண்டிர், வேதமறிந்த பிராமணர்கள் மூலம் தங்கள் வாரிசுகளைப் பெற்றனர்.(5)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்