Kacha refused Devayani! | Adi Parva - Section 77 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 13)
பதிவின் சுருக்கம் : கசனை விரும்பிய தேவயானி; தேவயானிக்கும் கசனுக்கும் நடந்த உரையாடல்; தேவயானி கசனுக்கு அளித்த சாபம்...
வைசம்பாயனர் சொன்னார், "கசன், தனது விரதத்தின் காலம் முடிந்தவுடன் தனது குருவிடம் அனுமதி பெற்றுத் தேவலோகத்திற்குத் திரும்ப முடிவு செய்தபோது, தேவயானி அவனிடம்,(1) "ஓ அங்கீரஸ முனிவரின் பேரனே, நடத்தையால், பிறப்பால், கல்வியால், தவத்தால், பணிவால், நீர் மிகவும் பிரகாசிக்கிறீர்.(2) எப்படி அங்கீரஸ முனிவர் மதிப்புடனும், மரியாதையுடனும் எனது தந்தையால் நினைக்கப்படுகிறாரோ, அப்படியே நானும் உமது தந்தையை மதித்து வழிபடுகிறேன்.(3) ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, இதை அறிந்து, நான் சொல்வதைக் கேளும். உமது பிரம்மச்சர்ய விரதக் காலத்தில் நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதை நினைத்துப் பாரும்.(4) இப்போது உமது விரதம் முடிந்து விட்டது. இனி உமது அன்பையும், பாசத்தையும் என்னுள் நிலைத்திருக்க வைப்பீராக. உரிய மந்திரங்களுடன் எனது கரத்தை ஏற்றுக் கொள்வீராக" என்றாள்.(5)

