Mandapala - Jarita and Labita! | Adi Parva - Section 231 | Mahabharata In Tamil
(மய தரிசன பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : மந்தபாலர் எனும் முனிவர் கடும் தவம் இருந்து, மேலுலகம் செல்வது; அவருக்கு சந்ததி இல்லாததால், சில இடங்களில் அவருக்கு அனுமதி இல்லாதிருப்பது; சந்ததியைப் பெருக்க அவர் சாரங்கப் பறவையாக மாறி ஜரிதையுடன் கூடுவது; பிறகு லபிதை என்பவளுடன் ஊர்சுற்றுவது; அக்னி காண்டவ வனத்தை எரிக்கப்போகிறான் என்பதை அறிந்து, தனது பிள்ளைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்று வேண்டுவது...
ஜனமேஜயன், "ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, அப்படி அந்தக் கானகம் எரிக்கப்பட்ட போது, சாரங்கம் என்று அழைக்கப்பட்ட பறவைகளை ஏன் அக்னி உட்கொள்ளவில்லை?(1) இது கானகத்தில் எப்போது நடந்தது? ஓ பிராமணரே! மய தானவனும், அசுவசேனனும் கொல்லப்படாதது எதற்காக என்று நீர் சொல்லிவிட்டீர். ஆனால், சாரங்கங்கள் தப்புவதற்கு என்ன காரணம் என்பதை நீர் சொல்லவில்லை.(2) ஓ பிராமணரே, அந்தப் பறவைகள் தப்பியது எனக்கு அற்புதமாகத் தோன்றுகிறது. அந்தக் கொடுமையான காட்டுத்தீயில் அவை ஏன் அழியவில்லை என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(3)