Showing posts with label தௌமியர். Show all posts
Showing posts with label தௌமியர். Show all posts

Wednesday, December 04, 2019

இமய முகாம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 64

Camp at Himavat! | Aswamedha-Parva-Section-64 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 49)


பதிவின் சுருக்கம் : இமயம் நோக்கிப் புறப்பட்ட பாண்டவர்கள்; இடத்தை அடைந்து முகாமை அமைத்தது; பிராமணர்களின் தொடக்கச் சடங்குகள்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அப்போது அவர்கள் உற்சாகம் நிறைந்த இதயங்களுடனும், இணையான உற்சாகம் நிறைந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் துணையுடனும் {இமயத்தை நோக்கி} புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தங்கள் சக்கரங்களின் சடசடப்பொலியால் மொத்த பூமியையும் நிறைத்தனர்.(1) துதிபாடிகள், சூதர்கள், மாகதர்கள் மற்றும் வந்திகளால் புகழ்பாடப்படவும், தங்கள் படையின் ஆதரவுடனும் சென்ற அவர்கள் கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பல ஆதித்தியர்களைப் போலத் தெரிந்தனர்.(2) தலைக்கு மேல் பிடிக்கப்பட்ட வெண்குடையுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், இரவில் நட்சத்திரங்களின் தலைவன் முழுமையாக இருப்பதை {இரவில் முழுநிலவைப்} போன்ற அழகுடன் ஒளிர்ந்தான்.(3)

Friday, December 01, 2017

யுதிஷ்டிரனின் முடிசூட்டுவிழா! - சாந்திபர்வம் பகுதி – 40

The coronation of Yudhishthira! | Shanti-Parva-Section-40 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 40)


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் ஆணைப்படி வேள்விப்பீடத்தை அமைத்த தௌமியர்; சங்கிலிருந்த மங்கல நீரை யுதிஷ்டிரனின் தலையில் ஊற்றிய கிருஷ்ணன்; குடிமக்கள் கொடுத்த பரிசை ஏற்றுக் கொண்டு, பதிலுக்கு அவர்களைக் கௌரவித்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை வாழ்த்திய குடிமக்கள்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "துயரத்திலிருந்தும், இதயத்தின் நோயிலிருந்தும் {துன்பத்திலிருந்தும்} விடுபட்ட குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தங்கத்தாலான ஒரு சிறப்பான இருக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்தான்.(1) எதிரிகளைக் கொல்பவர்களான சாத்யகி மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும், அழகானதும், சுடர்மிக்கதும், தங்கத்தாலானதுமான மற்றொரு இருக்கையில், அவனது {யுதிஷ்டிரனின்} முகம் நோக்கி அமர்ந்தனர்.(2) பீமனும், அர்ஜுனனும், மன்னனைத் தங்களுக்கு மத்தியில் அமர்த்திக் கொண்டு, அவனுக்கு இருபுறத்திலும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய இருக்கைகள் இரண்டில் அமர்ந்தனர்.(3) தந்தத்தாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வெண்ணிறத்திலானதுமான அரசக் கட்டிலில் சகாதேவன் மற்றும் நகுலனுடன் பிருதையும் {குந்தியும்} சேர்ந்து அமர்ந்திருந்தாள்.(4) சுதர்மர்[1], விதுரன், தௌமியர், குருமன்னன் திருதராஷ்டிரன் ஆகியோர் ஒவ்வொருவரும் நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட தனித்தனி இருக்கைகளில் தனியாக அமர்ந்தனர்.(5) யுயுத்சு, சஞ்சயன், பெரும்புகழ் கொண்ட காந்தாரி ஆகியோர் அனைவரும் மன்னன் திருதராஷ்டிரன் எங்கு அமர்ந்திருந்தானோ அங்கேயே அமர்ந்திருந்தனர்.(6)

Saturday, October 25, 2014

தௌமியர் அறிவுரை! - விராட பர்வம் பகுதி 4

Dhaumya's advice! | Virata Parva - Section 4 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 4)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண






தங்களது தேர்கள், தேரோட்டிகள், சமையற்கலைஞர்கள், பெண் பணியாட்கள் ஆகியோர் எங்குச் செல்ல வேண்டும் என்று யுதிஷ்டிரன் சொன்னது; வேறு மன்னனுடைய ஆளுகையின் கீழ் வாழப்போகும் பாண்டவர்களுக்குத் தௌமியர் சொன்ன அறிவுரை...

யுதிஷ்டிரன் {தன் தம்பிகளிடம்}, “நீங்கள் ஒவ்வொருவரும் செய்யப் போகும் அலுவல்களை ஏற்கனவே நீங்கள் சொல்லிவிட்டீர்கள். எனது அறிவுக்கேற்றவாறு நான் என்ன அலுவலைச் செய்யப் போகிறேன் என்பதை நானும் சொல்லிவிட்டேன். தேரோட்டிகள், சமையற்கலைஞர்களுடன் கூடிய நமது புரோகிதர் {தௌமியர்} துருபதனின் வசிப்பிடம் {பாஞ்சாலம்} சென்று, அங்கு நமது அக்னிஹோத்ர நெருப்புகளைப் பராமரிக்கட்டும். இந்திரசேனனும் பிறரும், வெறும் தேர்களுடன் துவாராவதிக்கு {துவாரகைக்கு} விரைந்து செல்லட்டும். இதுவே எனது விருப்பம். திரௌபதியின் பெண் பணியாட்கள், நமது தேரோட்டிகள் மற்றும் சமையற்கலைஞர்களுடன் பாஞ்சாலம் செல்லட்டும். அவர்கள் அனைவரும், “எங்களைத் துவைதவனத் தடாகத்தில் விட்டுவிட்டு, பாண்டவர்கள் எங்குச் சென்றார்கள் என்பது தெரியாது" என்று சொல்லட்டும்" என்றான்.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி ஒருவருக்கொருவர் ஆலோசித்து, ஒருவருக்கொருவர் தாங்கள் என்ன அலுவலைச் {வேலையைச்} செய்யப் போகிறோம் என்று சொல்லிக்கொண்ட பாண்டவர்கள், தௌமியரின் அறிவுரையைக் கேட்டு நின்றனர். பின்வரும் வார்த்தைகளில் தனது அறிவுரையைச் சொன்னார் தௌமியர், “பாண்டுவின் மகன்களே, அந்தணர்கள், உங்கள் நண்பர்கள், தேர்கள், ஆயுதங்கள், (புனித) நெருப்புகள் ஆகியவை குறித்து நீங்கள் செய்திருக்கும் ஏற்பாடுகள் அருமை. ஆனால் ஓ! யுதிஷ்டிரா, குறிப்பாக நீயும் அர்ஜுனனும் திரௌபதியின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வதே தகும். மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்களின் குணங்களைப் பற்றி நீ நன்கு அறிவாய். உனது ஞானம் எப்படிப்பட்டதாக இருப்பினும், நீ ஏற்கனவே அறிந்ததை, உன் மீது கொண்ட பாசத்தால், நண்பர்கள் திரும்பச் சொல்வது அனுமதிக்கப்படலாம். அறம், இன்பம் மற்றும் பொருளின் அழியாத {நித்திய} நலன்களுக்கு இதுவும் அடிபணிந்ததே {உதவிகரமானதே}. எனவே, நான் உன்னிடம் சிலவற்றைப் பேசுகிறேன். அவற்றைக் குறித்துக் கொள்.

ஒரு மன்னனுடன் வசிப்பதென்பது கடினமானது. இளவரசர்களே, அனைத்து தவறுகளையும் தவிர்த்து ஓர் அரசகுடும்பத்துடன் நீங்கள் எப்படி வசிக்கலாம் என்பதைச் சொல்கிறேன். கௌரவர்களே {பாண்டவர்களே}, உங்களை அறிந்தவர்களால் கண்டுபிடிக்கப்படாதபடி இந்த வருடத்தைக் கௌரவிக்கப்பட்டோ படாமலோ அம்மன்னனின் அரண்மனையில் நீங்கள் வாழ வேண்டியிருக்கிறது. பதினான்காவது {14} வருடத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இவ்வுலகில் அனைத்து உயிரினங்களையும் பேணி பாதுகாக்கும் தெய்வத்தின் வடிவில் இருக்கும் மன்னன், மந்திரங்கள் அனைத்தையும் [1] கொண்டு சுத்திகரிக்கப்பட்ட நெருப்பைப் போன்று மேன்மைமிக்கவன். வாயிலில் அனுமதி பெற்ற பின்னரே, ஒருவன் மன்னன் முன்னிலைக்குச் செல்ல வேண்டும். அரச ரகசியங்களுடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது. அதே போல மற்றொருவர் விரும்பும் ஆசனத்தின் மீது ஆசை கொள்ளக்கூடாது.

[1] "சில வங்காள உரைகளில் சர்வமந்திரமயம் {Sarvamantramaya} என்பதற்குப் பதில் சர்வாஸ்திரமயம்{Sarvastramaya} என்று இருக்கிறது. சர்வாஸ்திரமயம் {Sarvastramaya} தவறானது என்பது தெளிவு" என்கிறார் கங்குலி.

தன்னைத் தானே {மன்னனுக்குப்} பிடித்தமானவன் என்று கருதிக்கொண்டு, (மன்னனுடைய) தேர், மூடுவண்டி, ஆசனம், வாகனம், யானை ஆகியவற்றை ஆக்கிரமிக்காதவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கத் தகுதி வாய்ந்தவனாவான். தீங்கிழைப்பவர்களின் மனங்களில், இது எச்சரிக்கையை எழுப்பும் என்று கணக்கிடப்பட்ட ஒரு தொழிலின் ஆசனத்தை ஆக்கிரமிக்காதிருப்பவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கத் தகுதி வாய்ந்தவனாவான். கேட்கப்படாத போது யாரும் (மன்னனுக்கு) ஆலோசனை வழங்கக்கூடாது. வாயாடிகள் மற்றும் அவமரியாதை செய்யும் ஆலோசகர்கள் மீது மன்னர்கள் வெறுப்படைவார்கள். ஆதலால், குறித்த காலத்தில் மன்னனுக்கு மரியாதை செலுத்தும் ஒருவன் அமைதியாகவும் மரியாதையுடனும் மன்னனின் அருகில் அமர வேண்டும். {பொய் பேசுகிறவர்களிடத்தில் அரசர்கள் அன்பு வைக்கமாட்டார்கள். பொய் சொல்லுகிற மந்திரியை அரசர்கள் அவமதிப்பார்கள்}.

ஞானமுள்ள மனிதன், மன்னனின் மனைவியிடமோ, அந்தப்புரவாசிகளிடமோ, அரச கோபத்துக்கு ஆட்பட்டவர்களிடமோ நட்பு கொள்ளக்கூடாது. மன்னன் சம்பந்தப்பட்ட சிறு காரியத்தைச் செய்தாலும், அதை மன்னனைக் கேட்டே {கேட்ட பிறகே} செய்ய வேண்டும். ஓர் அரசாங்கத்தில் இப்படி நடந்து கொள்பவனுக்குத் தீங்கு நேராது. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {யுதிஷ்டிரா}, தங்கள் மகன்களோ, பேரர்களோ, சகோதரர்களோ கூடத் தங்கள் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் நடந்து கொண்டால், மனிதர்களை ஆள்பவர்கள் {மன்னர்கள்} அவர்களை மன்னிப்பதில்லை. எனவே, ஒருவன் உயர்ந்த அலுவலை {பதவியை} அடைந்தாலும் கூட, தன்னைக் கேட்டுக் கொள்ளாத வரையிலோ, தனக்குக் கட்டளை கிடைக்காத வரையிலோ, மன்னனின் கண்ணியத்தை {dignity} கருத்தில் கொண்டு, தன்னைப் பிறவிக் குருடனாகக் கருதிக் கொள்ள வேண்டும்.

அக்னியைப் போன்றோ பிற தேவனைப் போன்றோ ஒரு மன்னனை கவனத்துடன் சேவிக்கவேண்டும்; அரசாங்கத்தின் மீது பற்றற்ற {விசுவாசமற்ற} வகையில் செயல்படும் ஒருவன், அவனால் {மன்னனால்} நிச்சயமாக அழிக்கப்படுகிறான். கோபம், கர்வம், கவனக்குறைவு ஆகியவற்றைக் கைவிட்டு, ஏகாதிபதியால் {மன்னனால்} சுட்டப்பட்ட வழியில் தொடர்ந்து செல்வதே ஒருவனுக்குத் தகும். கவனமாக அனைத்து காரியங்களையும் ஆலோசித்த பின்னரே, இலாபகரமானவை, இனிமையானவை ஆகிய இரண்டு தலைப்புகளையும் {அந்த இரண்டு தன்மை கொண்ட செய்திகளை மட்டும்} ஒருவன் மன்னனின் முன்னிலையில் முன் வைக்க வேண்டும்; ஆனால் ஒரு பொருள் இனிமையற்றதாக இருப்பினும் இலாபகரமானதாக இருந்தால், அதற்கு {மன்னனிடம்} ஏற்புடைத்தன்மை இல்லையாயினும், அதை ஒருவன் சொல்ல வேண்டும். “நான் மன்னனால் விரும்பப்படவில்லை" என்று எப்போதும் நினைத்து, ஒருவன், தனது கவனக்குறைவை களைந்து, அவனுக்கு {மன்னனுக்கு} ஏற்புடைய, பயனுடையவற்றைக் கொண்டு வருவதில் நோக்கம் கொள்ள வேண்டும்.

தனது நிலையில் {இடத்தில்} இருந்து மாறாதிருப்பவனும், மன்னனின் எதிரிகளிடம் நட்பு கொள்ளாதவனும், மன்னனுக்குத் தீங்கிழைக்காதவனும் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கும் தகுதி படைத்தவர்களாவர். {மன்னனின்} பின்புறம் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாலும், அவனுக்கு முன் புறத்தில் அமர்வது தடை செய்யப்பட்டுள்ளதாலும், ஒரு கற்ற மனிதன், மன்னனுக்கு வலது புறத்திலோ இடது புறத்திலோ அமர வேண்டும். ஒரு மன்னன் (தனது ஊழியர்களைப் பொறுத்த மட்டில்) எதிலும் ஈடுபடாத போது, ஆவலால் உந்தப்பட்டு, பிறருக்கு முன்பாக யாரும் அவனது {மன்னனின்} முன்னிலைக்கு வலிந்து முன் செல்லாதிருக்கட்டும். ஏனெனில், பாதிக்கப்பட்ட ஏழையாக இருப்பினும், இத்தகு நடத்தை மன்னிக்கக்கூடாததாக இருக்கும் [2].

[2] “இது மிகக் கடினமான சுலோகமாக உள்ளது. நீலகண்டர் சஞ்சயேத் {Sanjayet} என்ற படிப்பதைக் கைக்கொள்கிறார். வங்கப் பதிப்புகள் சஞ்சபேத் {Sanjapet} என்று சொல்கின்றன. பின்னது {Sanjapet} சரியான வாசிப்பாக இருக்குமானால், அதன் பொருள், “ஒரு மன்னனின் முன்னிலையில் என்ன நடக்கிறது என்பதை யாரும் பேசாதிருக்கட்டும். ஏனெனில், ஏழைகள் கூட இதைப் பெரும் தவறாகக் கருதுகின்றனர்" என்று எடுத்துக் கொள்ளலாம். மன்னனைக் குறித்த எதையும் காணும் ஒருவன் அதைப் பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற உணர்வு தெளிவாக உள்ளது. சக்தியற்றவர்கள் கூட, தங்களைக் குறித்த இத்தகு பகிரங்கப்படுத்தலை, தங்களுக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுகின்றனர். எனவே, இது மன்னிக்க முடியாததாகும் என்றும் கொள்ளலாம்" என்கிறார் கங்குலி.

மன்னன் தனது பொய்யுரைகள் புகார் செய்யப்பட்டால் பகைமை கொள்கிறான்; எனவே, மன்னன் உரைக்கும் எந்தப் பொய்யையும் மற்றவர்களுக்கு எந்த மனிதனும் வெளிப்படுத்துவது தகாது. தன்னைத் தானே கற்றவன் என்று நினைத்துக் கொள்பவர்களையும் மன்னர்கள் அவமதிக்கிறார்கள். “நான் வீரன், நான் புத்திசாலி" என்று எந்த மனிதனும் பெருமையாக நினைக்கலாகாது. ஆனால் மன்னனின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும் ஒருவன், மன்னனின் நற்கருணைகளையும், வாழ்வின் நல்ல காரியங்களையும் அனுபவிக்கிறான்.

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஏற்புடைய பொருட்களை அடைந்தாலும், அடைவதற்கு அரிதான செல்வத்தை அடைந்தாலும், ஒரு மனிதன் மன்னனுக்கு இனிமையானதையும், இலாபகரமானதையுமே எப்போதும் செய்ய வேண்டும். ஒருவனின் சினத்தால் தடையேற்படும் என்றும், அந்த ஒருவனின் உதவியால் பெரும் கனிகள் {பலன்கள்} கிடைக்கும் எனக் கருதப்படும்போது, ஞானிகளால் மதிக்கப்படும் எந்த மனிதன் அதில் குறும்புத்தனம் {mischief} செய்வான் {தவறிழைப்பான்}? மன்னனின் முன்னிலையில் எந்த மனிதனும் தனது உதடுகளையோ, கரங்களையோ, தொடைகளையோ அசைக்கக்கூடாது. மன்னனின் முன்னிலையில் ஒரு மனிதன் மெதுவாகவே பேசவோ, உமிழவோ {speak and spit} வேண்டும். நகைப்பிற்கிடமான பொருட்களின் முன்னிலையிலும், ஒரு மனிதன் பைத்தியக்காரனைப் போல உரத்த சிரிப்பை வெளிப்படுத்தக் கூடாது. முடிந்த வரை தன்னை அடக்கிக் கொண்டு, (காரணமற்ற) எந்த ஈர்ப்பையும் ஒருவன் ஈர்க்கக்கூடாது. தனது ஆர்வத்தைக் காட்ட ஒருவன் (அவனுக்கு {மன்னனுக்கு} முன்பாக) அடக்கமாகச் சிரிக்க வேண்டும். எப்போதும் மன்னனின் நலத்தை மனதில் கொண்டு, பாராட்டுக் கிடைக்கும்போது மகிழ்ச்சியும், அவமானம் நேரும்போது கீழ்மையும் அடையாமல் இருப்பவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கத் தகுந்தவனாவான்.

மன்னனையும் அவனது மகனையும், {தனது} ஏற்புடைய {இனிமையான} பேச்சுகளால் எப்போதும் மகிழ்விக்கும், கற்ற அரசவை உறுப்பினனே அரசகுடும்பத்துக்குப் பிடித்தமானவனாக வசிப்பதில் வெற்றிப் பெறுகிறான். அற்ப காரணத்திற்காக அரச உதவியை இழந்த {மன்னனுக்கு {அ} அரச குடும்பத்துக்கு} பிடித்தமான அரசவை உறுப்பினன், மன்னனைக் குறித்துத் தீமையாய்ப் பேசாதிருந்தால், அவன் செழிப்பை மீண்டும் அடைவான். மன்னனுக்குப் பணிவிடை செய்பவனோ, அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழ்பவனோ, அறிவு நுட்பமுடையவனாக இருந்தால், மன்னன் இருக்கும்போதும், இல்லாத போதும் அவனைப் {மன்னனைப்} பாராட்டியே பேச வேண்டும். மன்னனின் மீது பலத்தைப் பிரயோகிப்பதன் {The courtier who attempts to obtain his end by employing force on the king} மூலம், ஓர் அரசவை உறுப்பினன் தனது முடிவை எட்டினால், அவனால் நீண்ட காலம் அவனது இடத்தில் இருக்க முடியாது. மேலும், அது மரண ஆபத்தையும் ஏற்படுத்தும். தன்னார்வத்தின் காரணமாக, யாரும், மன்னனின் எதிரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது [3]. அதே போலத் திறன்களிலும், திறமை தேவைப்படும் காரியங்களிலும், மன்னனுக்கு மேலாகத் தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளக்கூடாது.

[3] “வங்கப் பதிப்புகளில், இயந்திரத்தனமாக ராஜ்னா {Rajna} என்று உரைக்கப்படுகிறது. இதை, என்னிடமுள்ள ஒரு பண்டிதரின் கையெழுத்துப் பிரதியில் இலக்கணத்தின் ஆறாம் வேற்றுமை விதியின் படி கண்ட ராஜ்னாஸ் {Rajnas} என்பதை ஏற்றுப் படிக்கிறேன்" என்கிறார் கங்குலி.

எப்போதும் மகிழ்ச்சியுடனும், பலத்துடனும், வீரத்துடனும், உண்மையுடனும் {சத்தியத்துடனும்}, மென்மையுடனும், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடனும், தனது தலைவனை {master – முதலாளி, எஜமான்} நிழல் போலப் பின்பற்றும் ஒருவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கும் தகுதியுடையவன் ஆவான். மன்னனின் அரசாட்சிக்குள்ளோ, வெளியிலோ செய்யச் சொல்லி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பணியை அச்சமில்லாமல் மேற்கொள்பவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிப்பதற்குத் தகுதியுடையவன் ஆவான். தனது வீடல்லாமல் வெளியே வாழும் ஒருவன், தனது அன்புக்குரியவர்களை நினைவில் கொள்ளாமல், (எதிர்கால) மகிழ்ச்சியை எதிர்பார்த்து (தற்போதை) துன்பத்தை ஏற்பவன் மட்டுமே அரசகுடும்பத்துடன் வசிப்பதற்குத் தகுயுடையவன் ஆவான்.

ஒருவன் மன்னனைப் போல உடுத்தக்கூடாது; மன்னனின் முன்னிலையில் சிரிப்பில் ஈடுபடக் கூடாது; அரச ரகசியங்களை வெளியிடக்கூடாது. இப்படிச் செயல்பட்டால் ஒருவன் அரச ஆதரவை வெல்ல {பெற} முடியும். ஒரு பணியை நடைமுறைப்படுத்த சொல்லப்படும்போது, அதைச் செய்வதற்காக ஒருவன் கையூட்டைத் {இலஞ்சத்தைத்} தொட்டால் அவன் விலங்கிடப்படவோ, கொல்லப்படவோ நேரிடலாம். மன்னன் அளிக்க விரும்பும் ஆடைகள், ஆபரணங்கள், தேர்கள் மற்றும் இன்ன பிற பொருட்களே பயன்படுத்தப்பட வேண்டும். அதனால் அரச ஆதரவை ஒருவன் வெல்லலாம். குழந்தைகளே, பாண்டுவின் மகன்களே {பாண்டவர்களே}, உங்கள் மனதைக் கட்டுப்படுத்தி, இவ்வழியில் நடந்து,  இந்த ஒரு வருடத்தைக் கழிப்பீர்களாக! பிறகு உங்கள் நாட்டை மீட்டு, நீங்கள் விரும்பியவாறு வாழலாம்" என்றார் {தௌமியர்}.

யுதிஷ்டிரன் {தௌமியரிடம்}, “உம்மால் நாங்கள் நன்கு கற்றுள்ளோம். நீர் அருளப்பட்டிரும். உம்மைத் தவிர, எங்கள் தாய் குந்தியோ, பெரும் ஞானம் கொண்ட விதுரரோ கூட எங்களுக்கு இப்படிச் சொல்ல முடியாது. இத்துயரில் இருந்து பாதுகாப்பாக வர எங்களை இயன்றவராக்குவதற்கும், எதிரிகளை நாங்கள் வெல்வதற்கும், இப்போது நாங்கள் புறப்படுவதற்கும் வேண்டிய அவசியமான அனைத்தையும் செய்வதே உமக்குத் தகும்" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி யுதிஷ்டிரன் சொன்னதும், அந்தணர்களில் சிறந்த தௌமியர், புறப்படும் வேளையில் விதிகளின் படி செய்யப்படும் சடங்கைச் செய்தார். அவர்களது நெருப்பை ஏற்றி, பாண்டவர்கள் செழிப்படையவும், வெல்லவும், மீண்டும் உலகனைத்தையும் வெல்லவும் மந்திரங்களின் மூலம் அவர் {தௌமியர்} காணிக்கை அளித்தார். பிறகு அந்த நெருப்புகளையும், துறவை செல்வமாகக் கொண்ட அந்தணர்களையும் வலம் வந்த அந்த ஆறுபேரும், *யக்ஞசேனியை {திரௌபதியை} முன்னிறுத்தி புறப்பட்டுச் சென்றனர். அந்த வீரர்கள் அப்படிப் புறப்பட்டுச் சென்ற போது, துறவிகளில் சிறந்த தௌமியர், அவர்களது புனித நெருப்புகளை எடுத்துக் கொண்டு பாஞ்சாலர்களிடத்திற்கு {பாஞ்சால நாட்டிற்கு} புறப்பட்டார். {தேரோட்டி} இந்திரசேனனும், முன்பே குறிப்பிடப்பட்ட பிறரும் யாதவர்களிடம் சென்றனர். பாண்டவர்களின் தேர்களையும், குதிரைகளையும் பார்த்துக் கொண்டு அவர்கள், மகிழ்ச்சியுடனும், தனியுரிமையுடனும் தங்கள் காலத்தைக் கடத்தினர்.

***************************************************************************
*யக்ஞசேனியை {திரௌபதியை}

 திரௌபதி = துருபதன் மகள்  
  துருபதா
D
R
U
P
A
D
A
  திரௌபதி
D
RA
U
P
A
D
I

daughter of king Drupada = Draupadi
வேறு சில பெயர்கள்:
1. கிருஷ்ணை {கருப்பி / கருப்பானவள்}
2. பாஞ்சாலி {பாஞ்சால நாட்டின் இளவரசி}
3. யக்ஞசேனி {யக்ஞசேனன் {துருபதன்} மகள்} 



மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
மஹாபாரதப் பாத்திரங்களின் பெயர்க்காரணங்கள்
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, October 17, 2014

யுதிஷ்டிரனை உற்சாகப்படுத்திய பீமன்! - வனபர்வம் பகுதி 313

Bhima encouraged Yudhishthira! | Vana Parva - Section 313 | Mahabharata In Tamil

(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)

முனிவர்களிடமும் யதிகளிடமும் விடைபெற அனுமதி கோரிய பாண்டவர்கள்; யுதிஷ்டிரன் மயங்கி விழுந்தது; தௌமியர் யுதிஷ்டிரனைத் தேற்றியது; பீமன் யுதிஷ்டிரனுக்கு உற்சாகமூட்டியது; அந்தணர்களும் முனிவர்களும் பாண்டவர்களிடம் விடைபெற்றது; தாங்கள் அப்போதிருந்த இடத்தில் இருந்து ஒரு குரோச தூரம் சென்று ஆலோசனை நடத்திய பாண்டவர்கள்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி கண்டறியப்படாமல் கழிக்கப்பட வேண்டிய {அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டிய} பதிமூன்றாவது {13} வருடத்தை மாறுவேடத்தில்  கழிக்க, நீதியின் தலைவனால் {தர்மதேவனால்} கட்டளையிடப்பட்டவர்களும், உண்மையைப் பராக்கிரமமாகக் கொண்டு நோன்புகள் நோற்கும் உயர் ஆன்மா கொண்டவர்களுமான பாண்டவர்கள், தங்களுடன் கானக வாழ்வில் ஒன்றாக வசித்த கற்றோர் மற்றும் நோன்பு நோற்கும் துறவிகள் முன்பு அமர்ந்தனர். குறித்த வகையில் பதிமூன்றாவது வருடத்தைக் கழிக்க அனுமதி கோரும் நோக்கில், கூப்பிய கரங்களுடன் அவர்களிடம் {கற்றோர் மற்றும் துறவிகளிடம்} இந்த வார்த்தைகளை அவர்கள் {பாண்டவர்கள்} பேசினர்.

அவர்கள் {பாண்டவர்கள்}, “திருதராஷ்டிரரின் மகன்கள் எங்கள் நாட்டை வஞ்சகமாக அபகரித்தனர் என்பதும், எங்களுக்கு இன்னும் பல தீங்குகளைச் செய்தனர் என்பதும் நீங்கள் நன்கு அறிந்ததே! நாங்கள் பெரும் துக்கத்துடன் பனிரெண்டு {12} வருடங்களைக் காட்டில் கழித்துவிட்டோம். கண்டறியப்படாமல் {ஆஞ்ஞாதவாசத்தில்} கழிக்க வேண்டிய பதிமூன்றாவது வருடம் மட்டுமே மீதம் இருக்கிறது. இப்போது நாங்கள் தலைமறைவாக வாழவேண்டிய அந்த ஒரு வருடத்தைக் கழிக்க நீங்கள் அனுமதிப்பதே உங்களுக்குத் தகும். செற்றம் {#} நிறைந்த எங்கள் எதிரிகளான சுயோதனன் {துரியோதனன்}, தீய மனம் கொண்ட கர்ணன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோர் எங்களைக் கண்டுபிடித்தால், குடிமக்களுக்கும், நமது நண்பர்களுக்கும் பெரும் தீங்கிழைப்பார்கள்! {அப்படி நடந்தால்} அந்தணர்களுடன் கூடிய நாங்கள் எங்கள் நாட்டில் மீண்டும் நிறுவப்படுவோமா?” என்றனர் {என்று கேட்டனர்}.

இதைச் சொன்னபிறகு, பரிசுத்த மனம் கொண்ட அறமன்னனான {தர்மராஜாவான} யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைபட்ட குரலுடன், துயரம் மேலிட மயங்கினான். அதன்பிறகு, அவனது {யுதிஷ்டிரனின்} தம்பிகளுடன் சேர்ந்த அந்தணர்கள் அவனைத் {யுதிஷ்டிரனைத்} தேற்றத் தொடங்கினர். பிறகு தௌமியர், வலிமைமிக்க {சிறந்த} பொருள் நிறைந்த இந்த வார்த்தைகளை அந்த மன்னனுக்குச் {யுதிஷ்டிரனுக்குச்} சொன்னார். அவர் {தௌமியர் - யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ கற்றவன், இழப்பைத் தாங்கிக் கொள்ள இயன்றவன், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியானவன், புலன்களை அடக்கியவன்! இப்படிப்பட்ட முத்திரை கொண்ட மனிதர்கள் பேரிடர்களில் மதிமயங்கமாட்டார்கள். உயர் ஆன்மா கொண்ட தேவர்கள் கூட எதிரிகளை வெல்வதற்காகப் பலதரப்பட்ட இடங்களில் மாறுவேடங்களில் திரிந்திருக்கிறார்கள். இந்திரன், தனது எதிரிகளை வெல்லும் பொருட்டு நிஷாத நாட்டின் கிரிபிரஸ்தத்தில் {நகரம்} உள்ள ஆசிரமத்தில் மாறுவேடத்தில் வசித்துத் தனது முடிவை அடைந்தான்.

அதிதியின் கருவறையில் பிறவியெடுக்கும் முன்னர், தைத்தியர்களை அழிக்கும்பொருட்டு, ஹயக்கிரீவன் {குதிரை கழுத்து கொண்ட} வடிவமேற்ற விஷ்ணு நீண்ட காலம் கண்டறியப்படாமல் இருந்தான். அதன்பிறகு குள்ளன் {வாமனன்} வேடத்தைத் தரித்த அவன் {விஷ்ணு}, தனது பராக்கிரமத்தால் பலியின் நாட்டை இழக்கச் செய்ததை நீ கேட்டிருக்கிறாய்! நீருக்குள் நுழைந்த ஹுதாசனன் {அக்னி}, அங்கேயே மறைந்திருந்து, தேவர்களின் காரியத்தைச் சாதித்தான் என்பதையும் நீ கேட்டிருக்கிறாய். ஓ! கடமையை அறிந்தவனே {யுதிஷ்டிரா}, பகைவரை வெல்லும் நோக்கில், சக்ரனின் {இந்திரனின்} வஜ்ராயுதத்தில் நுழைந்த ஹரி அங்கேயே மறைந்திருந்தான் என்பதையும் நீ கேட்டிருக்கிறாய்.

ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, மறுபிறப்பாளரான {பிராமணரான} அவுர்வ {ஔர்வ} முனிவர் ஒரு காலத்தில் தேவர்களின் காரியத்திற்காகத் தனது தாயின் கர்ப்பத்திலேயே மறைந்திருந்தார் என்பதை நீ கேட்டிருக்கிறாய். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, பூமியின் அனைத்து பகுதியிலும் மறைந்திருந்த, சிறந்த சக்தி கொண்ட விவஸ்வத் {சூரியன்}, முடிவில் தனது எதிரிகளை அனைவரையும் எரித்தான். தசரதனின் வசிப்பிடத்தில் மாறுவேடத்தில் வாழ்ந்த, கடுஞ்செயல்கள் புரியும் விஷ்ணு {ராமன்}, போர்க்களத்தில் பத்துக்கழுத்தனை {ராவணனைக்} கொன்றான். முன்னர், பல இடங்களில் மாறுவேடத்தில் இருந்த உயர் ஆன்மா கொண்ட மனிதர்கள் தங்கள் எதிரிகளைப் போர்க்களத்தில் இப்படியே வென்றிருக்கிறார்கள்" என்றார் {தௌமியர்}.

இப்படித் தௌமியரின் வார்த்தைகளால் தேற்றப்பட்டவனும், சாத்திரங்களால் அடையப்பட்ட தன் ஞானத்தை நம்புபவனுமான அறம்சார்ந்த யுதிஷ்டிரன், தனது சுயநினைவை மீண்டும் அடைந்தான். பிறகு, வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனான வலிமை மிக்கக் கரங்கள் கொண்டவனும், பெரும் பலம் கொண்டவனுமான பீமசேனன், மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மிகவும் உற்சாகமூட்டும் வகையில், “கடமையுணர்ச்சியுடன் செயல்படுபவனான காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்}, (அனுமதிக்காக) உமது முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பாரும். அவன் {அர்ஜுனன்} இன்னும் எத்தகு முரட்டுத்தனத்தையும் காட்டவில்லை. கடும் பராக்கிரமம் கொண்ட நகுலனும், சகாதேவனும் எதிரியை அழிப்பதற்கு முழுவதும் இயன்றவர்களாக இருப்பினும், என்னால் எப்போதும் தடுக்கப்பட்டே வந்திருக்கின்றனர்! எங்களை நீர் எதில் ஈடுபடுத்துவீரோ அதிலிருந்து நாங்கள் எப்போதும் விலக மாட்டோம்! செய்ய வேண்டியதை எங்களுக்கு நீர் சொல்லும்! விரைவில் நாங்கள் நம் எதிரிகளை வெல்வோம்!” என்றான் {பீமன்}.

பீமசேனன் இதைச் சொன்னதும், அந்தணர்கள் பாரதர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லினர். பிறகு அவர்களது {பாண்டவர்களின்} அனுமதியைப் பெற்று, அவரவர் பகுதிகளுக்குச் சென்றனர். வேதங்களை அறிந்த முனிவர்களிலும், யதிகளிலும் முதன்மையானவர்களும், பாண்டவர்களை மீண்டும் காண மிகுந்த ஆவல் கொண்டவர்களுமான அவர்கள், தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். பிறகு, கற்ற வீரர்களும், நோன்புகள் கொண்டவர்களுமான அந்த ஐந்து பாண்டவர்களும் தௌமியருடனும் கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} {அங்கிருந்து} கிளம்பினர். தனித்தனி அறிவியல்களையும் {சாத்திரங்களையும்}, மந்திரங்களையும், எப்போது அமைதி தீர்மானிக்கப்பட வேண்டும், எப்போது போர் தொடுக்கப்பட வேண்டும் என்பதையும் நன்கறிந்த மனிதர்களில் புலியான அவர்கள் {பாண்டவர்கள்} ஒவ்வொருவரும், கண்டறியப்படக்கூடாத வாழ்வுக்குள் நுழைவதற்காக, அடுத்த நாளில் ஒரு குரோச தூரம்* சென்று, ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்யும் நோக்கில் கீழே அமர்ந்தனர்.

*குரோச தூரம்- 2.0 - 2.5மைல் தூரம் (அ) கூப்பிடும் தூரம்.

*********ஆரணேயப் பர்வம் முற்றிற்று*********

*********வன பர்வம் முற்றிற்று*********

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, June 01, 2014

நகுஷன் ஞானம்! - வனபர்வம் பகுதி 180

The wisdom of Nahusha! | Vana Parva - Section 180 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனிடம் திருப்தி கொண்ட பாம்பின் உருவத்தில் இருந்த நகுஷன், பல விஷயங்களை யுதிஷ்டிரனுக்குத் தெளிவாக்குவது; நகுஷன் தனக்கு பாம்பின் உருவம் ஏற்படக் காரணமான நிகழ்ச்சியைச் சொல்வது; நகுஷன் பீமனை விட்டுவிட்டு சுய உருவம் கொண்டு சொர்க்கம் சென்றது...

யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "இவ்வுலகில் நீ வேதங்களையும், வேதாங்கங்களையும் கற்றவனாக இருக்கிறாய். (எனவே) ஒருவன் முக்தியடைய என்ன செய்ய வேண்டும்? என்பதை எனக்குச் சொல்" என்றான்.

அந்தப் பாம்பு {நகுஷன்}, "ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, சரியான காரியங்களுக்குப் பிச்சை அளிப்பது {தானம்}, அன்பான வார்த்தைகள் பேசுவது {இன்சொல்}, உண்மை சொல்வது {சத்தியம்}, எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது {அஹிம்சை} ஆகியவற்றைச் செய்யும் மனிதன் சொர்க்கம் செல்கிறான் என்பது எனது நம்பிக்கை" என்று பதிலுரைத்தான் {நகுஷன்}.

யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! பாம்பே, இரண்டில் எது உயர்ந்தது, உண்மையா? {சத்தியமா?} அல்லது பிச்சையளிப்பதா? {தானமளிப்பதா?} அன்பான நடத்தை {இன்சொல்}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை} ஆகியவற்றின் பெரிய அல்லது சிறிய முக்கியத்துவத்தையும் எனக்குச் சொல்" என்று கேட்டான்.


அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்} , "உண்மை {சத்தியம்}, பிச்சையிடுதல் {தானமளித்தல்}, அன்பான பேச்சு {இன்சொல்}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாதிருப்பது {அஹிம்சை} ஆகியவற்றின் இந்தப் பண்பு ஒப்புமையிலான சிறப்புகள், அவற்றைச் செய்யும் நோக்கத்தின் ஈர்ப்பால் (பயன்பாட்டால்) {அளவிடப்பட்டு} அறியப்படுகிறது. (சில நேரங்களில்) தானச் செயல்கள் சிலவற்றை விட, உண்மை அதிகம் பாராட்டப்படுகிறது; தானங்களில் சில, உண்மை பேசுவதை விட வரவேற்கத்தக்கதாக இருக்கின்றன. அதே போல, ஓ! பெரும் வலிமைமிக்க மன்னா, பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாமல் இருப்பது {அஹிம்சை} நல்ல பேச்சை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது, அதேபோல நேர்மாறாகவும் தெரிகிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விளைவுகளைச் சார்ந்து இருந்தாலும் அப்படியே ஆகிறது. இப்போது, உனக்குக் கேட்கவேண்டிய ஏதாவது இருந்தால், அனைத்தையும் கேள், நான் அவற்றை உனக்குத் தெளிவுபடுத்துவேன் {I shall enlighten thee}" என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}.

யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! பாம்பே, சொர்க்கத்திற்குச் செல்லும் உடலற்றவன் {உடலை விட்டவன்}, புலன்களால் உணர்வது மற்றும் புலன்களால் செய்யப்படும் மாற்றமுடியாத கனிகளை {பலன்களை} (இங்கே புவியில்) அனுபவிப்பது ஆகியவற்றை நாம் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?" என்று கேட்டான்.

அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, "தனது செயல்களால், மனித இருப்பு, சொர்க்கவாழ்வு அல்லது தாழ்ந்த விலங்காய் பிறப்பு என மூன்று {3} நிலைகளை மனிதன் அடைவது காணப்படுகிறது. இவற்றில், சோம்பலற்று, எவருக்கும் தீங்கிழைக்காது, தானம் மற்றும் பிற அறங்களைக் கொண்ட மனிதன், மனிதர்களின் உலகைவிட்டு வெளியேறிய பிறகு, சொர்க்கத்திற்குச் செல்கிறான். இதற்கு நேர்மாறாகச் செய்வதன் மூலம், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்கள் மீண்டும் மனிதனாகவோ அல்லது தாழ்ந்த விலங்குகளாகவோ பிறக்கிறார்கள்.

ஓ! எனது மகனே {யுதிஷ்டிரனே}, குறிப்பாக இந்தத் தொடர்பில்தான், கோபம் மற்றும் காமம் மூலம் இயங்குபவனும், பேராசை மற்றும் துர்க்குணத்திற்குத் தன்னை அளித்தவனும், மனித நிலையில் இருந்து விழுந்து, தாழ்ந்த விலங்காக மறுபடியும் பிறக்கிறான். மேலும், தாழ்ந்த விலங்குகளும் மனித நிலைக்கு மாறுவதற்கு விதிக்கப்பட்டிருக்கின்றன; மாடு, குதிரை மற்றும் பிற விலங்குகள் தெய்வீக நிலையை அடைவதும் கவனிக்கப்பட்டுள்ளது.1 ஓ! எனது மகனே {யுதிஷ்டிரனே}, புலன் உணர்ச்சி கொண்ட ஒருவன், தனது செயல்களின் கனிகளை அறுத்து {செயல்களின் பலனைப் பெற்று}, இப்படி இந்த நிலைகளில் உடல் மாறிப் {வேறு உடலைப் பெற்று} பிறக்கிறான் {transmigrates}. ஆனால் மறுபிறப்பு பிறந்த ஞானி, நித்தியமான பரமாத்வாவில் தனது ஆன்மாவை இளைப்பாற்றுகிறான். உள்ளார்ந்த ஆவி {ஜீவாத்மா}, விதியால் கட்டப்பட்டு, தனது செயல்களின் கனிகளை அறுத்து, பிறப்புக்குப் பின் பிறப்பை அடைந்து கொண்டே இருக்கிறான். ஆனால், தனது செயல்களின் தொடர்பை இழந்த ஒருவன், பிறந்த அனைத்தினுடைய மாற்றமுடியாத விதியையும் உணர்கிறான்." என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}. 2

யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! பாம்பே, ஒலி, தொடு உணர்வு, உருவம், மணம், சுவை ஆகியவற்றை ஒரு பிரிந்த ஆவி {பிரிந்த உயிர்} எவ்வாறு உணர்ந்து அறிகிறது என்பதில் குழப்பமில்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வாயாக. ஓ! உயர்ந்த மனம் கொண்டவனே {நகுஷனே}, நீ ஏன் காரியங்களை ஒரே சமயத்தில் அறிவதில்லை? ஓ! பாம்புகளில் சிறந்தவனே, {நகுஷனே} இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பாயாக" என்று கேட்டான்.

அந்தப் பாம்பு {நகுஷன்- யுதிஷ்டிரனிடம்}, "ஓ! நீண்ட ஆயுள் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, ஆத்மா {ஆவி} என்று அழைக்கப்படும் பொருள், உடலுக்குள் குடியேறி, உணர்வு உறுப்புகளின் மூலம் வெளிப்பட்டு, காணப்படும் பொருட்களை உணர்ந்தறிகிறது. ஓ! பாரதக் குலத்தின் இளவரசனே {யுதிஷ்டிரா}, உணர்வு, மனம், புத்தி, ஆகியவை பொருட்களைக் காண்பதற்கு ஆன்மாவுக்குத் துணைபுரியும் கரணங்கள் {காரணிகள்} என்று அழைக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள். ஓ! எனது மகனே, நித்தியமான ஆவி {ஆன்மா}, மனதின் துணை கொண்டு, தனது கோளத்தை விட்டு வெளியே வந்து, புலன்கள் மூலம் செயல்பட்டு, அனைத்து உணர்வுகளையும் வாங்கிக் கொண்டு, வெற்றிகரமாக அனைத்தையும் {ஒலி, உருவம் {காட்சி}, மணம் போன்றவற்றைக்} காண்கிறது {உணர்கிறது}. ஓ! வீரமிக்கவனே {யுதிஷ்டிரனே}, உயிரினங்களின் மனமே அனைத்து உணர்வுகளுக்கும் {அறிவுக்கும்} காரணமாக இருக்கிறது. எனவே, அது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை உணர்ந்தறிய முடியாது. அந்த ஆவி {ஆன்மா}, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, புருவ மத்தியில் தனது இடத்தை அடைந்து, பலவிதமான பொருட்களை அறிய உயர்ந்த மற்றும் தாழ்ந்த அறிவாற்றலை அனுப்புகிறது. யோகிகள் அறிவார்ந்த கோட்பாட்டைச் செயல்படுத்திய பிறகு, ஆன்மாவின் செயல்கள் வெளிப்படுவதைக் காண்கின்றனர்" என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}.


யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "மனம் மற்றும் புத்தியின் {அறிவாற்றலின்} தனித்துவமான பண்பு வேறுபாட்டை எனக்குக் கூறு. இவற்றின் ஞானமே பரமாத்மாவை தியானிக்கும் மனிதனுக்குத் தலைமை கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது" என்று சொன்னான்.

அந்தப் பாம்பு {நகுஷன்- யுதிஷ்டிரனிடம்}, "மாயையின் மூலம், ஆன்மா அறிவாற்றலுக்கு அடிபணிந்து போகிறது. ஆன்மாவுக்கு அடிபணிந்ததே அறிவாற்றல் என்பது அறியப்பட்டிருந்தாலும், பிந்தையது {அறிவாற்றல்} (பிறகு) இயக்குனராகிறது. உணர்வுகளின் செயல்களாலேயே அறிவாற்றல் செயல்படுத்தப்படுகிறது. மனம் என்பது சுயம்புவாகும். புத்தி (வலி, இன்பம் ஆகிய) எந்த உணர்வையும் விளைவிப்பதில்லை, ஆனால் மனம் அதைச் செய்யும். எனது மகனே {யுதிஷ்டிரா}, இதுவே மனதுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாடாகும். நீ இந்த விஷயத்தை அறிந்தவனாக இருக்கிறாய். இதில் உனது கருத்து என்ன?" என்று கேட்டான் {நகுஷன்}.

யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! அறிவு மிக்கவனே, நீ, அறியத்தக்கது அனைத்தும் அறிந்து, நல்ல புத்திகூர்மையுடன் இருக்கிறாய். இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் நீ கேட்கிறாய்? நீ அனைத்தையும் அறிந்திருந்தாய்; அற்புதச் செயல்கள் பல செய்தாய்; மேலும் நீ சொர்க்கத்தில் வாழ்ந்தாய். அப்படியிருக்கும்போது மாயை உன்னை எப்படி ஆட்கொண்டது? இது குறித்து எனக்குப் பெருத்த சந்தேகம் இருக்கிறது" என்றான். அந்தப் பாம்பு {நகுஷன்}, செழிப்பு என்பது ஞானியையும், வீரமான மனிதனையும் கூட போதை கொள்ளச் செய்கிறது. ஆடம்பர வாழ்வு வாழ்பவர்கள் (விரைவில்) தங்கள் புத்தியை இழக்கிறார்கள். அதே போல நானும், ஓ! யுதிஷ்டிரா, செழிப்பால் ஏற்பட்ட மாய ஈர்ப்பால் ஆட்கொள்ளப்பட்டு, எனது உயர்ந்த நிலையில் இருந்து விழுந்தேன். {இப்போது} மீண்டும் எனது சுய உணர்வைப் பெற்று, உனக்கு இப்படித் தெளிவை உண்டாக்குகிறேன் ஓ! வெற்றிகரமான மன்னா {யுதிஷ்டிரா}, நீ எனக்கு நன்மையைச் செய்திருக்கிறாய். பக்திமானான உன்னுடன் விவாதித்ததில், எனது வலிநிறைந்த சாபம் சரி செய்யப்பட்டது.

பழங்காலத்தில், சொர்க்கத்தில், ஒரு தெய்வீகத் தேரில் நான்  பயணித்துக் கொண்டிருந்தபோது கர்வத்தில் களிப்படைந்து, எதையும் நினைக்காதிருந்தேன் {எவரையும் மதிக்கவில்லை}. பிரம்மமுனிவர்கள், தேவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், மற்றும் அனைத்து பிற மூவுலகவாசிகளிடமும் நான் கப்பம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, எனது கண்ணால் எந்த உயிரினத்தைப் பார்த்து, எனது பார்வையை அதில் நிலைக்க வைத்தாலும், உடனே அதன் பலத்தை நான் அழிக்கிறேன். ஆயிரக்கணக்கான பிரம்ம முனிவர்கள் {பிரம்மரிஷிகள்} எனது தேரை இழுப்பது வழக்கமாக இருந்தது. கடமையாற்றாமையே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் எனது உயர்ந்த செழிப்பில் இருந்து விழுவதற்குக் காரணமாக இருந்தது. அவர்களில் {அந்த பிரம்மரிஷிகளில்} அகஸ்தியர் ஒரு நாள் எனது வாகனத்தை இழுத்துக் கொண்டிருந்தார். எனது பாதம் அவரது உடலைத் தொட்டது; கோபம் கொண்ட அகஸ்தியர், "அழிவு உன்னை ஆட்கொள்ளட்டும், நீ பாம்பாகப் போ" என்று என்னைச் சபித்தார். ஆகையால், எனது புகழை இழந்து, அந்த அற்புதமான தேரில் இருந்து நான் கீழே விழுந்தேன். அப்படி விழுந்து கொண்டிருக்கும்போது, நான் பாம்பாக மாறி தலைகீழே விழுவதைக் கண்டேன்.

"ஓ! வழிபடத்தகுந்தவரே {அகஸ்தியரே} இந்தச் சாபம் அணைக்கப்படட்டும். மயக்கத்தால் இப்படி மூடனாகிய ஒருவனை நீர் மன்னிப்பதே தகும்" என்று நான் அந்த அந்தணரிடம் {அகஸ்தியரிடம்} மன்றாடினேன். நான் (சொர்க்கத்தில் இருந்து) வீசி எறியப்பட்ட போது, அவர் என்னிடம் அன்பாக, "அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன் உன்னை இந்தச் சாபத்தில் இருந்து காப்பாற்றுவான். இந்தப் பயங்கரமான கர்வத்தின் பாவம் அப்போது உன்னால் அடைக்கப்படும். நீ முக்தியடைவாய்" என்றார். (அவரது) தவச் சக்தியைக் கண்டு அதிசயத்தால் தாக்கப்பட்டேன். எனவே, பரமாத்மா மற்றும் பிராமணர்களின் தன்மைகள் குறித்து உன்னிடம் கேள்வி கேட்டேன். உண்மை {சத்தியம்}, தானம், தன்னடக்கம், தவம், எவ்வுயிருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை}, அறம் நிலைத்தல் ஆகியவையே, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, எப்போதும் ஒரு மனிதன் முக்தியடைவதற்கான வழிகள். குடும்பத் தொடர்புகளால் உண்டான குலத்தால் அதை {முக்தியை} அடைய முடியாது. உனது இந்தத் தம்பியான வலிமைமிக்கப் பீமசேனன் நல்ல அதிர்ஷ்டத்தைச் சந்திப்பான். மகிழ்ச்சியானது உன்னில் நிலைத்திருக்கட்டும். நான் மீண்டும் சொர்க்கம் செல்ல வேண்டும்" என்று பதிலுரைத்தான் {நகுஷன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்தார், "இப்படிச் சொன்ன அந்த மன்னன் நகுஷன், தனது பாம்புருவை விட்டு தெய்வீக உருவம் கொண்டு மீண்டும் சொர்க்கம் சென்றான். புகழ்மிக்கவனும், பக்திமானுமான யுதிஷ்டிரனும், தௌமியர் மற்றும் தனது தம்பி பீமனுடன் தனது ஆசிரமத்திற்குச் சென்றான். பிறகு, அறம் சார்ந்த யுதிஷ்டிரன் (அங்கே) கூடியிருந்த அந்தணர்களுக்கு அனைத்தையும் விரிவாக உரைத்தான். இதைக் கேட்ட அவனது மூன்று தம்பிமாரும் {அர்ஜுனன், நகுலன், சகாதேவனும்}, அனைத்து அந்தணர்களும், புகழ்பெற்ற திரௌபதியும் கூட வெட்கினார்கள். அற்புதமான அந்த அனைத்து அந்தணர்களும், பாண்டவர்களின் நன்மையை விரும்பி, பீமனை அவனது மடத்தனத்திற்காக நிந்தித்தனர். இது போன்ற செயல்களை மீண்டும் செய்யக்கூடாது என்று அவர்கள் அவனிடம் {பீமனிடம்} கூறினர். ஆபத்தைவிட்டு அகன்ற வலிமைமிக்கப் பீமனைக் கண்ட பாண்டவர்கள் மிகவும் திருப்தி கொண்டு, அங்கே தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்."

****************** தீர்த்தயாத்ரா பர்வம் முற்றிற்று ****************** 

*****************************************************************************

1. உண்மையான மொழியில் சொல்ல வேண்டுமானால் அது தேவர்களின் நிலை. வேதகாலத்துக்குப் பிந்தைய இந்துமதத்தின் சாதாரணத் தேவர்கள், பழங்காலத்து கிரேக்க, இத்தாலிய {ரோமானிய} தேவர்களைப் போல அசாதாரண மனித வர்க்கமாக, பரமாத்மா மற்றும் பரப்பிரம்மனுக்கு எதிர் வேறுபாடு கொண்டவர்களாக இருப்பதை இங்கே சரியாகக் குறிப்பிடலாம். மரணத்திற்குப் பிறகு, ஒரு அறம் சார்ந்த மனிதன், தேவர்களாக அழைக்கப்படுபவர்களில் ஒருவராக மாற்றப்பட வேண்டியவனாவான் என்கிறார் கங்குலி↩

2. இது, ஆன்மாக்களின் மறுபிறப்பு குறித்து நன்கு அறியப்பட்ட பிரபலமான கோட்பாடாகும் என்கிறார் கங்குலி  ↩

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, May 02, 2014

தௌமியர் விளக்கம்! - வனபர்வம் பகுதி 162

The description made by Dhaumya! | Vana Parva - Section 162 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனுக்குத் தௌமியர் மந்தரம், மேரு மலைகளைக் குறிப்பிட்டுச் சொன்னதும், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதும்..

வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், "பிறகு, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, சூரியோதயத்தின் போது, தனது தினசரி வழிபாடுகளை முடித்த தௌமியர், ஆரிஷ்டஷேணருடன் இருந்த பாண்டவர்களிடம் வந்தார். ஆரிஷ்டஷேணரின் பாதங்களை வணங்கிய தௌமியர், கூப்பிய கரங்களுடன் அனைத்து அந்தணர்களையும் வணங்கினார். பிறகு யுதிஷ்டிரனின் வலது கரத்தைப் பற்றிய தௌமியர் கிழக்கை நோக்கிக் கொண்டே, "ஓ! பலம்வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இந்த மலைகளின் மன்னன் மந்தரம் பரந்து, பூமியை நிரப்பிக் கடல் வரை விரிந்திருக்கிறது. ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, வனங்களும், கானகங்களும், மலைகளும் நிறைந்த இந்தப் பகுதியை இந்திரனும், வைஸ்ரவணனும் {குபேரனும்} ஆட்சி செய்கிறார்கள். ஓ! குழந்தாய், அனைத்துக் கடமைகளையும் அறிந்த புத்திகூர்மையுள்ள முனிவர்கள், இதுவே இந்திரன் மற்றும் மன்னன் வைஸ்ரவணனின் {குபரேனின்} வசிப்பிடம் என்று சொல்கின்றனர். இருபிறப்பாளர்களும், கடமைகளை அறிந்த முனிவர்களும், சித்தர்களும், சத்யஸ்களும், தேவர்களும், இங்கிருந்தபடியே, சூரியன் உதிக்கும்போதே அவனைத் துதிக்கின்றனர்.


உயிருடன் இருக்கும் அனைத்து உயிரினங்களின் தலைவனும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனுமான மன்னன் யமன், ஆவி பிரிந்து வருபவர்கள் அடையத்தக்க இந்தத் தென்திசையை ஆள்கிறான். புனிதமானதும், காண்பதற்கு அற்புதம் வாய்ந்ததும், முதன்மையான செழிப்பு கொண்டதுமான இந்தச் சன்யமனம் {Sanyamana [சம்யமிநீ]} ஆவி பிரிந்தவர்கள் தலைவனின் {யமனின்} வசிப்பிடமாக இருக்கிறது. புத்திகூர்மையுடையவர்கள் அந்த மலைகளின் ஏகாதிபதியை அஸ்தம் (என்ற பெயரில்) என்று அழைக்கிறார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இங்கு வந்த சூரியன், எப்போதும் சத்தியத்தில் நிலைத்திருக்கிறான். இந்த மலைகளின் மன்னன் {அஸ்தகிரி} மேலும், பரந்த ஆழத்திலும் நிலைத்திருக்கும் மன்னன் வருணன், அனைத்து உயிர்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். ஓ! உயர்ந்த நற்பேறு பெற்றவனே, வடக்குப் பகுதிகளைப் பிரகாசிக்க வைத்துக் கொண்டு, பலம்வாய்ந்த மகாமேரு கிடக்கிறது. பிரம்மத்தை அறிந்தவர்களுக்குப் புகலிடமாக இருக்கும் அந்த மங்களகரமான மலையில் {மகாமேருவில்}, பிரம்மனின் சபை இருக்கிறது. அங்குதான் அசையும் மற்றும் அசையாத அனைத்தையும் படைத்தவனும் அனைத்து உயிர்களின் ஆன்மாவுமான பிரஜாபதி இருக்கிறான். பிரம்மனின் மனதில் பிறந்த ஏழு மகன்களின் {பிரம்மனின் மானசபுத்திரர்கள்} வசிப்பிடமாக மங்களகரமான ஆரோக்கியமான மகாமேரு இருக்கிறது. அந்த எழுவரில் ஏழாமவன் தக்ஷன் ஆவான். ஓ! குழந்தாய், இங்கேதான் வசிஷ்டரைத் தலைமையாகக் கொண்ட ஏழு தெய்வீக முனிவர்களும் உதித்து அஸ்தமிக்கிறார்கள்.

பெருந்தகப்பன் (பிரம்மா), தேவர்களுடன் சுயஞானத்துடன் அமரும் மேருவின் அற்புதமான, பிரகாசமான சிகரத்தைப் பார். பிரம்மனின் வசிப்பிடத்துக்கு அடுத்ததாக, உயிர்களின் படைப்புக்குத் துவக்கமும், உண்மையான தலைமைக் காரணமுமான, பிறப்பு இறப்பும் அறியா முதன்மைத் தலைவனான நாராயணனின் இடம் இருக்கிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த மங்களகரமான இடத்தில் தேவர்களும் காண முடியாத அனைத்து சக்திகளும் இருக்கின்றன. சுயப்பிரகாசத்துடன் இருக்கும் உயர் ஆன்ம விஷ்ணுவின் பகுதி, சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தை விட அதிகமாகப் பிரகாசிப்பதால் தேவர்களாலோ தானவர்களாலோ அதைக் காண இயலாது. நாராயணனுடைய அந்த இடம் மேருவுக்குக் கிழக்கே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஓ! குழந்தாய், அனைத்து உயிர்களுக்கும் தலைவனும், சுயம்புவும், அண்டத்தின் முதன்மைக்காரணமானவனும், அனைத்து உயிர்களிலும் இருப்பவனும், அங்கே அற்புதமான அருளுடன் இருக்கிறான். பிரம்ம முனிவர்களே {பிரம்மரிஷிகளே} அங்கே செல்ல முடியாது என்கிற போது பெருமுனிவர்களைக் {மகாரிஷிகளைக்} குறித்து என்ன சொல்ல?

ஓ! குருக்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, யதிக்கள் {மனதால் தியானிப்பவர்கள்} மட்டுமே அங்கே செல்ல முடியும். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, (அவ்விடத்தில்) எந்த ஜோதிகளும் பிரகாசிப்பதில்லை. அங்கே அந்தப் புத்திக்கு எட்டாத ஆன்மா கொண்டவன் {விஷ்ணு} மட்டுமே ஆழ்நிலையில் ஒளிர்கிறான். அங்கே மரியாதையுடனும், கடும் தவத்துடனும், பக்திப்பயிற்சிகளின் அறத்தால் யதிக்கள் நாராயணனான ஹரியை அடைகின்றனர். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அங்கே சென்று சுயம்புவும், தேவர்களுக்கும், உயர் ஆன்மா கொண்டவர்களுக்கும், யோக வெற்றி பெற்றவர்களுக்கும், கர்வம் மற்றும் அறியாமை அகற்றியவர்களுக்கும் நித்தியமான தேவனுமான அண்ட ஆன்மாவை {நாராயணனை} அடைந்தவர்கள், மீண்டும் உலகத்துக்குத் திரும்புவதில்லை. ஓ! உயர்ந்த நற்பேறு பெற்ற யுதிஷ்டிரா, இந்தப் பகுதி ஆதியற்றது, அழிவற்றது, முடிவுமற்றது. இது கடவுளின் சாரமுடையது.

ஓ! குருக்களின் மகனே {யுதிஷ்டிரா}, சூரியனும் சந்திரனும் ஒவ்வொரு நாளும் எதிர் திசையில் மேருவைச் சுற்றி வருகின்றன. ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, ஓ! பலம்பொருந்திய ஏகாதிபதியே, அனைத்து ஒளிக் கோள்களும் இதே போல இந்த மலைகளின் மன்னனை {மேருவைச்} சுற்றி வருகின்றன. இப்படியே இருளை அகற்றும் வழிபடத்தகுந்த சூரியன், மற்றக் கோள்களை இழுத்துக் கொண்டு இதை (மலையை) வலம் வருகிறான். பிறகு நிலைத்து, மாலை வேளையைக் கடந்த நாளை உண்டாக்கும் சூரியன், வடதிசையை நோக்கிப் பயணிக்கிறான். பிறகு மீண்டும் மேருவை நெருங்கும் தெய்வீகமான சூரியன் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்ய விரும்பி கிழக்கு நோக்கி பயணிக்கிறான். இதே போலத் தெய்வீகமான சந்திரனும் மற்ற நட்சத்திரங்களுடன் கூடி இந்த மலையை வலம் வருகிறான். மாதத்தைப் பல பகுதிகளாகப் பிரிக்கும் அவனது {சந்திரனின்} வருகையால் பர்வ சந்திகள் பிரிகின்றன. இப்படியே தடையில்லாமல் பெரும் மேருவை வலம் வந்து அனைத்து உயிரினங்களுக்கும் உணவளித்த பிறகு, சந்திரன் மீண்டும் மந்தரத்திற்குச் செல்கிறான். இதே வழியில், இருளை அழிப்பவனான தெய்வீக சூரியன், தடங்கலற்ற பாதையில் நகர்ந்து, அண்டத்தின் அசைவுகளுக்குக் காரணமாகிறான். பனியை உண்டாக்க விரும்பும்போது, அவன் தெற்கே சென்று, அனைத்து உயிரினங்களுக்கும் குளிர்காலத்தைக் கொடுக்கிறான்.

பிறகு சூரியன், தெற்கில் இருந்து திரும்பி, தனது கதிர்களைக் கொண்டு அசையும் மற்றும் அசையாத அனைத்து உயிர்களிடம் இருந்தும் சக்தியை உறிஞ்சுகிறான். அதன் காரணமாக, மனிதர்களுக்கு வியர்வை, சோர்வு, மயக்கம் மற்றும் களைப்பு ஆகியவை ஏற்படுகின்றன. அனைத்து உயிர்களும் உறக்க {மயக்க/ களைப்பு} உணர்ச்சிக்கு ஆட்படுகின்றன. பிறகு, அறியப்படாத பகுதிகளில் இருந்து மீண்டு வரும் அந்தத் தெய்வீகமாகப் பிரகாசிப்பவன் {சூரியன்} மழையைப் பொழிய வைத்து, உயிரினங்களை மீள வைக்கிறான். மழை, காற்று, வெப்பம், ஆகிய வசதிகளால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைப் பேணிப் பாதுகாக்கும் பலம்வாய்ந்த சூரியன் மீண்டும் தனது பழைய வழியைக் கைக்கொள்கிறான். ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, இப்படி உலவும் சூரியன் காலச்சக்கரத்தைத் தங்குதடையின்றிச் சுழற்றி, படைத்த பொருட்களிடம் ஆதிக்கம் செலுத்துகிறான். ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா} அவனின் {சூரியனின்} வழி தடையற்றது; அவன் {சூரியன்} ஒரு போதும் ஓய்வதில்லை. அனைத்து உயிர்களின் சக்தியை உறிஞ்சி மீண்டும் அவற்றுக்குத் திரும்ப அளிக்கிறான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நேரத்தை பகல், இரவு, காலம் {விநாடி}, கஷ்த்தம் {நாழிகை} ஆகியவாறு பிரிக்கும் அந்தத் தலைவனான சூரியன், அனைத்து உயிர்களின் உயிரையும், அசைவையும் நிர்ணயிக்கிறான்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

Saturday, February 08, 2014

வடக்கு திசையின் புண்ணிய இடங்கள்!! - வனபர்வம் பகுதி 90

Sacred spots of the Northern quarter! | Vana Parva - Section 90| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

வடக்கு திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.

தௌமியர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இனி நான் வடக்கே இருக்கும் தீர்த்தங்களையும், புனிதமான இடங்களையும் விவரிக்கிறேன். ஓ மேன்மையானவனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். ஓ வீரனே, இந்த உரையைக் கேட்பவன் பயபக்தியுடைய மனதை அடைகிறான். அது ஒருவனுக்கு நன்மைக்கான வழிகோலுகிறது. அந்தப் பகுதியில்தான் எளியவர்களும் அடையக்கூடிய கரைகள் கொண்டதும், தீர்த்தங்கள் நிறைந்ததுமான, பெரும்புனிதம் வாய்ந்த சரஸ்வதி நதி இருக்கிறது. ஓ பாண்டுவின் மகனே, அங்குதான் பெரும் பலன்களையும், செழிப்பையும் கொடுப்பவையான, கடலை நோக்கி கட்டுக்கடுங்காமல் பாயும் யமுனையும், பிலாக்ஷவதரணம் என்ற தீர்த்தமும் இருக்கின்றன.


சாரஸ்வத வேள்வியைச் செய்யும் மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்} வேள்வியின் முடிவில் அங்குதான் நீராடுவார்கள். ஓ பாவங்களற்றவனே, அங்கே நன்கு அறியப்பட்டு, பெரும் பலன்களைக் கொடுக்கும் தெய்வீக தீர்த்தமான அக்னிசிரஸ் இருக்கிறது. மன்னன் சகாதேவன் {ஸ்ரீஞ்சயனின் மகன்}, அங்கே ஒரு சாம்யத்தை {அளவு கோல்} வீசி எறிந்து, அந்தச் சாம்யம் எவ்வளவு தூரம் சென்றதோ, அவ்வளவு தூரமுள்ள இடத்தில் {சாம்யாக்ஷேபம் எனும்} வேள்வியைச் செய்தான். ஓ யுதிஷ்டிரா, இதனால்தான் இந்திரன் சகாதேவனைப் புகழும் வரிகளைப் பாடினான். "யமுனையில் சகாதேவன், அந்தணர்களுக்கு நூறாயிரம் பரிசுகளுடன் வேள்வி நெருப்பை வணங்கினான்" என்ற அந்த வரிகளை இன்னும் இந்த உலகில் மறுபிறப்பாளர்களால் {அந்தணர்களால்} உரைக்கப்படுகிறது.

அங்கேதான், சிறப்பிமிக்க மன்னனான ஏகாதிபத்தியம் கொண்ட பரதன், முப்பத்தைந்து {நூற்று நாற்பத்தெட்டு என்றும் சொல்லப்படுகிறது} குதிரை வேள்விகளைச் செய்தான். ஓ குழந்தாய், பழங்காலத்தின் சரபங்கர் மறுபிறப்பாளர்களின் {அந்தணர்களின்} முழு விருப்பங்களையும் அங்கேதான் ஈடேற்றுவார். அங்கேதான் பெரும் பலனைத் தரக்கூடிய கொண்டாடப்படும் அவரது ஆசிரமம் இருக்கிறது. ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, ஓ பெரும் மன்னா, பழங்காலத்தில் வாலகில்யர்கள் வேள்வி நடத்திய அந்தப் பகுதியில் தான் தேவர்களால் வழிபடப்படும் சரஸ்வதி நதி ஓடுகிறது. ஓ யுதிஷ்டிரா, அந்தப் பகுதியில் தான் பெரும் பலனைக் கொடுக்கவல்ல திருஷ்டத்வதி நதி ஓடுகிறது.

ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, நியக்கிரோதர், பாஞ்சால்யர், தால்பியகோஷர், தால்பியர் ஆகியோரின் புனிதமான ஆசிரமங்கள் அங்கே இருக்கின்றன. அற்புதமான நோன்புகள் நோற்று, பெரும் சக்தியுடன் மூவுலகங்களாலும் கொண்டாடப்படும் சிறப்பு மிக்க ஆனந்தயசசின் ஆசிரமமும் அங்கே இருக்கிறது. ஓ மனிதர்களின் தலைவா, வேத அறிவில் சொல்லப்பட்டுள்ளவர்களும், வேதங்களையும், வேதச்சடங்குகளையும் அறிந்த சிறப்புமிக்க ஏதாவர்ணம் {நிறமுள்ள}, அவவர்ணம் {நிறமற்ற} என்போர் பலன்கொடுக்கும் வேள்விகளை அங்கே செய்துள்ளனர். ஓ பாரதக் குலத்தின் தலைவா, பழங்காலத்தில் வருணன், இந்திரன் ஆகியோருடன் கூடிய தேவர்கள் தவச்சடங்குகளைப் பயின்ற விசாகயூபம் அங்கேதான் இருக்கிறது. ஆகையால் அந்த இடம் மேம்பட்ட வகையில் புனிதமானதாகும்.

பெரிதும் அருளப்பட்ட ஜமதக்னி பெருமுனிவர் வேள்விகளைச் செய்த பலாசகம் அங்கேதான் இருக்கிறது. முக்கியமான ஆறுகள் அனைத்தும், தங்கள் தங்கள் சுய உருவை எடுத்து முனிவர்கள் சூழ அங்கே இருக்கின்றனர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவரின் {ஜமதக்னியின்} துவக்கத்தைக் கண்ட விபவசு {அக்னி தேவன்}, "சிறப்புமிக்க ஜமதக்னி தேவர்களுக்காக வேள்வி செய்து கொண்டிருக்கும்போது அவரிடம் வந்த ஆறு, அந்தணர்களுக்குத் தேனைத் தானமாகக் கொடுத்து திருப்தி செய்தது" என்ற சுலோகத்தைப் பாடினான். ஓ யுதிஷ்டிரா, கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் அடிக்கடி வந்து போகும் இடமும், வேடர்கள் மற்றும் கின்னரர்களின் வசிப்பிடமுமான மலைகளில் முதன்மையான அந்த மலையைப் பிளந்து விரைந்து செல்லும் கங்கை அம்மலையை வெட்டும் இடமே கங்காத்துவாரம் என்றழைக்கப்படுகிறது.

ஓ மன்னா, பிரம்ம முனிவர்கள் அடிக்கடி வந்து செல்லும் அந்த இடத்தை, கனகலத்தைப் போன்ற புனிதமான தீர்த்தமென்று சனத்குமாரர் சொல்கிறார். அங்கே பெரும் முனிவர்கள் வந்து செல்லும் இடமும் புரூரவர்கள் பிறந்த இடமும், பிருகு தவம் பயின்ற இடமும்மான புரு என்ற மலை இருக்கிறது. ஒ மன்னா, அதன் காரணமாகவே அந்தப் பெரும் சிகரம் பிருகுதுங்கம் என்று அழைக்கப்படுகிறது. அந்தச் சிகரத்திற்கு அருகிலேயே புனிதமானதும் அகன்றதும், மூன்று உலகங்களிலும் புகழப்பட்டதுமான பதரி என்ற ஆசிரமம் இருக்கிறது. ஓ பரதக் குலத்தின் காளையே, நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் ஆகிய அனைத்துமான நாராயணன் என்று அழைக்கப்படும், நித்தியமானவனும், ஆண்மக்களில் சிறந்தவனும், அனைத்துச் சிறப்புகளும் கொண்டவனுமான தலைவன் விஷ்ணுவின் ஆசிரமமே பதரி. அந்தப் பதரிக்கு அருகே பாயும் கங்கையின் குளிர்ந்த ஊற்று முன்பொரு காலத்தில் வெப்பமாக இருந்தது. அதன் கரைகள் அனைத்தும் தங்க மண்ணால் விரிக்கப்பட்டிருந்தது. அங்கே மிகுந்த பிரகாசமிக்கத் தேவர்களும், பெரும் நற்பேறு பெற்ற முனிவர்களும் தெய்வீகமான தலைவன் நாராயணனை அணுகி எப்போதும் வழிபட்டு வருகிறார்கள்.

தீர்த்தங்கள், புனிதமான இடங்கள் ஆகிய அனைத்தையும் கொண்ட முழு அண்டமும், தலைமை ஆன்மாவான தெய்வீகமான நித்தியமான நாராயணனிடமே வசிக்கின்றன. அவனே தலைமையான பிரம்மா, அவனே தீர்த்தம், அவனே தவப்பயன், அவனே முதன்மையானவன், அவனே தேவர்களில் முதன்மையானவன். மேலும் அவனே அனைத்து உயிர்களின் பெரும் தலைவனும் ஆவான். அவன் நித்தியமானவன், பெரும் படைப்பாளி அவனே, அவனே அருளின் உயர்ந்த நிலை. சாத்திரங்கள் அறிந்த கற்றவர்கள் அவனை அறிவதாலேயே பெரும் மகிழ்ச்சியை அடைகின்றனர். அந்தப் பகுதியில் தெய்வீக முனிவர்களும், சித்தர்களும், அனைத்து முனிவர்களும், பெரும் யோகி மற்றும் ஆதி தெய்வமுமான மதுவைக் கொன்றவனுடன் {மதுசூதனனான கிருஷ்ணனுடன்} அங்கேயே வசிக்கின்றனர். அந்தப் பகுதியே அனைத்து புனிதமான இடங்களிலும் முதன்மையானது என்பதில் உனது இதயம் சந்தேகம் கொள்ளாது இருக்கட்டும்.

ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இவையே நான் உரைத்தபடி பூமியிலுள்ள புனிதமான இடங்களும் தீர்த்தங்களும் ஆகும். ஓ மனிதர்களில் சிறந்தவா, வசுக்கள், சத்யஸ்கள், ஆதித்தியர்கள், மருதர்கள், அசுவினிகள் மற்றும் தேவர்களைப் போன்ற சிறப்பு மிக்க முனிவர்கள் ஆகியோர் இவை அனைத்துக்கும் {முன்பு சொன்ன அனைத்து தீர்த்தங்களுக்கும் புனிதமான இடங்களுக்கும்} அடிக்கடி பயணிக்கின்றனர். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அந்தணர்கள் மற்றும் தவசிகளுடன் மற்றும் உனது அருள் நிறைந்த தம்பிகளுடனும் அங்கெல்லாம் பயணிக்கப்போகும் நீ துயரத்திலிருந்து விடுபடுவாய்!" என்றார் {தௌமியர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, February 07, 2014

மேற்கு திசையின் புண்ணிய இடங்கள்!! - வனபர்வம் பகுதி 89

Sacred spots of the western quarter! | Vana Parva - Section 89| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

மேற்கு திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.

தௌமியர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இப்போது மேற்கு திசையில் இருக்கும் ஆனர்த்தர்களின் நாட்டில் {அவந்தி நாட்டில்} இருக்கும் பலன்களைத் தரக்கூடிய இடங்களை விவரிக்கப் போகிறேன். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அங்கு, பிரயங்கு மரங்களும் {காட்டுக்குமிழ் மரங்களும்}, மாமரங்களும் நிறைந்து பருமனான வஞ்சி மரங்களால் {Cane = பிரம்பு} வரிசையாக மாலை போன்று அலங்கரிக்கப்பட்டு மேற்கு முகமாக ஓடும் புனிதமான நதியான நர்மதை ஓடுகிறது. ஓ குரு குலத்தவரில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அனைத்து தீர்த்தங்களும், புனிதமான இடங்களும், ஆறுகளும், கானகங்களும், மூன்று உலகத்திலுமுள்ள மலைகளில் முதன்மையான மலைகளும், பெருந்தகப்பனுடன் {பிரம்மனுடன்} கூடிய தேவர்களும், சித்தர்கள், முனிவர்கள், சாரணர்களும் நர்மதையின் புனிதமான நீரில் நீராட அங்கு அடிக்கடி வருகின்றனர்.

விஸ்ரவஸ் முனிவரின் புனிதமான ஆசிரமமும், மனிதர்களை வாகனமாகக் கொண்ட கருவூலத் தலைவனான குபேரன் பிறந்த இடமும் அங்கே இருக்கிறது என்று நாம் கேள்விப்படுகிறோம். பசுமையான மரங்களும், கனிகளும், மலர்களும் எப்போதும் நிறைந்திருக்கும் மலைகளில் முதன்மையானதும், புனிதமானதும், மங்களகரமானதுமான வைடூரியச் சிகரம் அங்கே தான் இருக்கிறது. ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா} அந்த மலையின் உச்சியில், தேவர்களும், கந்தர்வர்களும் ஓய்ந்திருக்கும், முற்றும் மலர்ந்த தாமரைகளால் நிறைந்திருக்கும் புனிதமான குளம் ஒன்று இருக்கிறது. ஓ பலம்பொருந்திய ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தெய்வீக முனிவர்கள் அடிக்கடி வந்து செல்லும் சொர்க்கத்தைப் போல இருக்கும் அந்தப் புனிதமான மலையில் பல அற்புதங்களைக் காணலாம்.

ஓ எதிரி நகரங்களை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, அங்கே விஸ்வாமித்திரம் என்ற ஒரு நதி ஓடுகிறது. பல புனிதமான தீர்த்தங்களைக் கொண்ட அந்நதி அதே பெயர் கொண்ட அரச முனிக்குச் {விஸ்வாமித்திரருக்குச்} சொந்தமானது. அந்த ஆற்றின் கரையில் தான் நகுஷனின் மகனான யயாதி {சொர்க்கத்தில் இருந்து விழுந்தான்} அறம்சார்ந்தவர்களுக்கு மத்தியில் விழுந்து மீண்டும் நேர்மையானவர்களுக்குச் சொந்தமான நித்தியமான உலகங்களை மீண்டும் அடைந்தான். அங்கே நன்கு அறியப்பட்ட புண்ணியம் என்ற தடாகமும், மைநாகம் என்ற மலையும், அளவற்ற கனிகளும் கிழங்குகளும் நிறைந்த அசிதம் என்ற மலையும் இருக்கிறது. கக்ஷசேனரின் புனிதமான ஆசிரமம் அங்குதான் இருக்கிறது. ஓ யுதிஷ்டிரா, அனைத்து நாட்டிலும் புகழ்வாய்ந்த சியவனரின் ஆசிரமமும் அங்குதான் இருக்கிறது. ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா} அந்த இடத்தில், ஓ மேன்மையானவனே, மனிதன் கடும் தவச்சடங்குங்களின்றிக் கூட (ஆன்ம) வெற்றியை அடைகிறான்.

ஓ பலம் பொருந்திய மன்னா {யுதிஷ்டிரா}, பறவைகளும் மான்களும் வசிக்கும் ஜம்புமார்க்கம் என்ற பகுதி அங்கு இருக்கிறது. ஓ புலன்களைக் கட்டுப்படுத்தியவர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் துறவிகள் வந்து செல்லும் இடமாகவும் அஃது இருக்கிறது. அதற்கு அடுத்ததாகத் துறவிகள் எப்போதும் நிறைந்திருக்கும் புனிதமான கேதுமாலை, மேதியை, கங்காதுவாரம், மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்} வசிக்கும் நன்கு அறியப்பட்ட சைந்தவ வனம் ஆகியன இருக்கின்றன. வைகானசர்கள், சித்தர்கள் மற்றும் முனிவர்களுக்குப் பிடித்தமான வசிப்பிடமும், பெருந்தகப்பனுக்கு {பிரம்மனுக்கு} உரிய கொண்டாடப்படும் குளமுமான புஷ்கரை அங்குதான் இருக்கிறது. ஓ குருக்களின் தலைவா, அறம்சார்ந்த மனிதர்களில் முதல்வா {யுதிஷ்டிரா}, பாதுகாப்பை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்ட படைப்பாளி {பிரம்மன்}, "சுத்தமான ஆன்மாவைக் கொண்ட ஒரு மனிதன் புஷ்கரைக்குக் கற்பனையிலேனும் புனிதப் பயணம் மேற்கொண்டானேயானால், அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் மீண்டு, சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பான்" என்ற இந்த வரிகளைப் புஷ்கரையில் பாடினான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்