The ordinance of Soma! | Anusasana-Parva-Section-36 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 36)
பதிவின் சுருக்கம் : இந்திரனிடம் சம்பாசுரன் சொன்ன பிராமண மகிமை; சம்பரனின் தந்தை மற்றும் சோமனுக்கு இடையில் இது குறித்து நடந்த உரையாடல் ஆகியவற்றைக் யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகச் சக்ரனுக்கும், சம்பரனுக்கும்[1] இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் சக்ரன் {இந்திரன்}, தலையில் சடாமுடி தரித்து உடல் முழுவதும் சாம்பலை {திருநீற்றைப்} பூசிக் கொண்டும் ஒரு தவசியின் வேடத்தை ஏற்றுக் கொண்டு, கோரமான தேரொன்றைச் செலுத்திக் கொண்டு அசுரன் சம்பரனின் முன்னிலையை அடைந்தான்.(2)
