Saunaka's Sermon | Vana Parva - Section 1 | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
யுதிஷ்டிரன் சௌனகரிடம் சந்தேகம் கேட்பதும், அதற்கு சௌனகர் விடையளிப்பதும்.
யுதிஷ்டிரன் {சௌனகரிடம்}, "ஓ! அந்தணரே, செல்வத்தை நான் விரும்புவது, அது கிடைத்தவுடன் இன்புற்று இருக்க அல்ல. அந்தணர்களைத் தாங்கிக் கொள்ளவே நான் அதை விரும்புகிறேன். பேராசையின் காரணமாக நான் அதை விரும்பவில்லை. ஓ அந்தணரே, எங்களைப் போன்றோர் எந்த காரியத்திற்காக, இல்லற வாழ்வை மேற்கொண்டோமோ அதற்காக, எங்களைத் தொடர்பவர்களை நாங்கள் பேணி தாங்க வேண்டாமா?
அனைத்து உயிரினங்களும் (தாங்கள் சம்பாதித்த) உணவை, தங்களைச் சார்ந்தவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதைக் காண்கிறோம். அப்படியே இல்லற வாழ்வை வாழ்பவன், தனது உணவை, தங்களுக்காக சமைத்துக் கொள்ளாதிருக்கும் யதிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். நல்ல மனிதர்களின் வீடுகள் (அமர்ந்து கொள்ள) புல்லில்லாமல், (ஓய்ந்திருக்க) இடமில்லாமல், (கழுவ, தாகம் தணிக்க) நீரில்லாமல், நான்காவதாக இன்சொல் இல்லாமல் இருக்கவே கூடாது. களைப்புற்றவனுக்கு படுக்கையும், நிற்பதால் சோர்ந்தவனுக்கு ஆசனமும், தாகத்திலிருப்பவனுக்கு நீரும், பசித்திருப்பவனுக்கு உணவும் எப்போதும் கொடுக்கப்பட வேண்டும். விருந்தினர்களை இனிமையான பார்வையாலும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்தோடும், இனிமையான வார்த்தைகளாலும் வரவேற்க வேண்டும்.
வீட்டின் உரிமையாளன் விருந்தினரைக் கண்டதும், உடனே எழுந்து, அந்த விருந்தினரை நோக்கி முன்னேறி, அவருக்கு ஆசனம் கொடுத்து, அவரை வணங்க வேண்டும். இதுவே நிலைத்த அறநெறியாகும். அக்னிஹோத்ரம் செய்யாதவர்களும், காளைகளைக் {மாடுகள்} கவனிக்காதவர்களும், ரத்த தொடர்புடைய உறவினர்களைப் பேணிக் காக்காதவர்களும், விருந்தினர், நண்பர்கள், மகன்கள், மனைவியர், பணியாட்கள் ஆகியோரைப் புறக்கணிப்பவர்களும் பாவத்தால் உட்கொள்ளப்படுகின்றனர். தன் ஒருவனுக்காக மட்டுமே ஒருவன் உணவு சமைக்கக்கூடாது. தேவர்களுக்கும், பித்ருகளுக்கும், விருந்தினருக்கும் படைக்காமல் ஒருவனும் ஒரு விலங்கையும் கொல்லக்கூடாது.
தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் படைக்கப்படாத உணவை ஒருவன் உண்ணக்கூடாது. காலையிலும் மாலையிலும் உணவை (தகுதியோடு இருக்கும்) நாய்களுக்கும், சண்டாளர்களுக்கும், பறவைகளுக்கும் தரையிலிட்டு, வைஸ்வதேவ வேள்வியைச் செய்ய வேண்டும். விகாசத்தை {மீந்ததை உண்பது என்று நினைக்கிறேன்} உண்பவர்கள், அமிர்தத்தை உண்டதாகக் கருதப்படுகிறார்கள். ஒரு விருந்தினருக்கு உணவளிப்பது ஒரு வேள்விக்கு சமானமாகும், விருந்தினரைப் பார்க்கும் அவனது இனிமையான பார்வை {1}, அர்ப்பணிப்புடன் கூடிய கவனித்தல் {2}, இனிமையான பேச்சு {3}, பின்தொடர்ந்து அவன் அளிக்கும் மரியாதை {4}, அவன் கொடுக்கும் உணவு மற்றும் நீர் {5} ஆகியவையே அந்த வேள்வியின் ஐந்து தட்சணைகள் ஆகும். முன்பு எப்போதும் கண்டிராத களைத்துப் போன வழிப்போக்கனுக்கு அளவற்ற உணவைக் கொடுப்பவன் பெரும் நன்மையை அடைகிறான். இல்லற வாழ்வு வாழ்ந்து இத்தகு செயல்களைச் செய்பவன் பெரும் ஆன்மத் தகுதிகளை அடைகிறான். ஓ அந்தணரே, இதில் உமது கருத்து என்ன?" என்று கேட்டான்.
சௌனகர், "ஐயோ, இந்த உலகம் முரண்பாடுகள் நிறைந்தது. நல்லோரை அவமதிக்கவும், தீயோரை திருப்திப்படுத்தவும் செய்கிறது. ஐயோ, அறியாமையாலும், ஆசையாலும், தங்கள் புலன்களுக்கு அடிமைகளாகி, முட்டாள்கள் கூட, தங்கள் வாழ்வுக்குப் பிறகு ஏற்படப்போகும் பசியைத் திருப்திப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். புலன்களால் மயக்கப்பட்டு, புலன்களை இழந்த சாரதி, மூர்க்கமான தீய குதிரைகளால் இழுத்து செல்லப்படுவதைப் போல, மனிதர்கள், கண்களைத் திறந்து கொண்டே பாவ வழியில் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.

ஆறு புலன்களும் தனக்குரிய பொருளைக் காணும்போது, அந்தப் பொருளைக் குறித்து இதயத்தில் ஆசை எழுகிறது. ஒரு குறிப்பிட்ட புலனுக்கு இன்பம் தரும் பொருளை அடைந்து இன்புற இதயம் முன்னேறும் போது, ஒரு விருப்பம் ஊக்கப்படுத்தப்படுகிறது. ஆகையால் ஒரு தீர்க்கம் {தீர்க்கமான முடிவு} அங்கே பிறக்கிறது. கடைசியில் வெளிச்சம் கண்டு அசை கொண்டு நெருப்புச்சுடரில் விழும் பூச்சியைப் போல, இன்பம் நுகர் பொருட்களால் துளைக்கப்பட்ட அவன் சபலம் என்ற நெருப்பில் விழுகிறான். புலன்களின் இன்பத்தால் குருடான அவன் அறியாமை இருளில் மூழ்குகிறான். தான் இன்பம் என்று நினைக்கும் முட்டாள்தனத்தில் மூழ்கி, தன்னை அறிந்து கொள்ளாமல் இருக்கிறான். எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் சக்கரத்தைப் போல அனைத்து உயிர்களும் உலகத்தின் பல நிலைகளில் இருந்து விழுந்து, ஒரு பிறவியில் இருந்து மற்றொரு பிறவி எடுத்து, பிரம்மனின் இருப்பிடத்தில் இருந்து, புல்லின் முனை வரை, அறியாமை, செயல், ஆசை ஆகியவற்றால் நீரிலும், தலையில், காற்றிலும் சுற்றிக் கொண்டிருப்பர்.
இவையே அறிவற்றவர்களின் நடைமுறையாக இருக்கிறது. இனி, லாபம் தரும் அறம் மற்றும் சுய விடுதலையில் முனைப்புடன் இருக்கும் ஞானமுள்ளோர் வழிகளைக் கேள். வேதங்கள் செயல்பட கட்டளையிடுகின்றன. ஆனால் செயல்பாட்டை (செயல்பாட்டில் உள்ள ஆர்வத்தை) துறக்கின்றன. ஆகையால், அபிமானத்தைத் {அபிமானம் = நோக்கமற்ற நிலை} துறந்து செயல்பட வேண்டும் வேள்விகள் {1}, (வேத) கல்வி {2}, பரிசளிப்பு {3}, தவம் {4}, (பேச்சிலும் செயலிலும்) உண்மை {5}, மன்னிக்கும் தன்மை {6}, புலனடக்கம் {7}, ஆசையைத் துறத்தல் {8}, ஆகிய எட்டு கடமைகளும் உண்மையி்ன் வழியை உண்டாக்குகின்றன என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் முதல் நான்கும் பித்ருக்களின் உலகத்திற்கு பாதையை அமைக்கின்றன. இவை அபிமானம் {நோக்கமின்மை} இல்லாமல் செய்யப்பட வேண்டும். நல்லவர்களால் எப்போதும் பின்பற்றப்படும் கடைசி நான்கும், தேவர்களின் சொர்க்கத்தை அடைய வழிவகுக்கின்றன. ஆன்ம சுத்தி கொண்ட அனைவரும் இந்த எட்டு வழிகளையும் பின்பற்ற வேண்டும்.

முக்திக்காக இந்த உலகை வெல்ல நினைப்பவர்கள், நோக்கங்களைத் துறந்து, புலன்களை அடக்கி, குறிப்பிட்ட கடும் நோன்புகள் நோற்று, அர்ப்பணிப்புடன் தங்கள் ஆசானைச் சேவித்து, தங்கள் தட்சணையை நிச்சயம் கொடுத்து, விடாமுயற்சியுடன் வேதம் கற்று, செயலை இழிவாகக் கருதி கைவிட்டு, மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆசையையும் வெறுப்பையும் கைவிட்டே தேவர்கள் செழுமையை அடைந்தனர். யோக செல்வத்தின் அறத்தாலேயே ருத்திரர்கள், சத்யஸ்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள் ஆகியோர் உயிரினங்களை ஆளுகின்றனர். ஆகையால், ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ஓ பாரதா, அவர்களைப் போலவே நீயும், நோக்கம் கொண்ட செயலில் இருந்து முழுமையாக விடுபட்டு, தவச் செயல்களால் யோகத்தில் வெற்றியடைய முயற்சி செய். உனது மூதாதையர்களில் ஆண்களிடமும் பெண்களிடமும் நீ பெற்றிருந்த கடனை உனது செயல்களால் (வேள்விகளால்) உண்டாகும் வெற்றியால் தீர்த்துவிட்டாய். மறுபிறப்பாளர்களை {அந்தணர்களைச்} சேவிக்க தவத்தில் வெற்றியடை. தவ வெற்றி எனும் மகுடம் அணிந்தவர்கள், அந்த வெற்றியின் அறத்தால், தாங்கள் விரும்புவதைச் செய்ய முடியும்; ஆகையால், தவத்தைக் கைக்கொண்டு விருப்பங்களை அடை" என்றார் {சௌனகர்}.
![]() |
![]() |
![]() |