Thursday, April 27, 2017

அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 73

Krishna provoked Arjuna! | Karna-Parva-Section-73 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பீஷ்மர் மற்றும் துரோணரின் மரணத்துக்கும், துரியோதனனுடைய அநீதிகளுக்கும் கர்ணனே காரணம் என்பதைக் கூறிய கிருஷ்ணன்; அர்ஜுனனின் சாதனைகளை விளக்கியது; கர்ணன் செய்த தீமைகளையும், அவனே துரியோதனனின் நம்பிக்கையாய் இருப்பதையும் அர்ஜுனனுக்கு எடுத்துரைத்த கிருஷ்ணன்; அபிமன்யு கொல்லப்பட்ட விதத்தைக் கூறி அர்ஜுனனின் கோபத்தைத் தூண்டியது; அபிமன்யுவின் மரணத்திற்குக் கர்ணனே காரணம் என்று சொன்னது; கௌரவச் சபையில் திரௌபதியைக் கர்ணன் அவமதித்த விதத்தைச் சொன்னது; கர்ணன் பாண்டவப் படையைக் கொன்று கொண்டிருப்பதை அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; கர்ணனைக் கொல்ல அர்ஜுனனை வற்புறுத்திய கிருஷ்ணன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா ஆன்மா கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணனைக் கொல்லும் உறுதியான நோக்கோடு (போரிடச்} சென்று கொண்டிருந்த அர்ஜுனனிடம் மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ! பாரதா {அர்ஜுனா}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுக்கு நேரும் இந்தப் பயங்கரப் படுகொலையில் இன்று பதினேழாம் நாளாகும்.(2) தொடக்கத்தில் உனக்குச் சொந்தமான படை பரந்த அளவில் இருந்தது. போரில் எதிரியுடன் மோதிய அந்தப் படையானது, ஓ! மன்னா {அர்ஜுனா}, எண்ணிக்கையில் மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.(3) கௌரவர்களும், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தொடக்கத்தில் எண்ணற்ற யானைகளையும், குதிரைகளையும் கொண்டிருந்தனர். எனினும், உன்னை எதிரியாகக் கொண்டு மோதிய அவர்கள், போரின் முகப்பில் கிட்டத்தட்ட நிர்மூலமாக்கப்பட்டுவிட்டனர்.(4) இந்தப் பூமியின் தலைவர்களும், இந்தச் சிருஞ்சயர்களும், இந்தப் பாண்டவத் துருப்புகளுடன் ஒன்று சேர்ந்து, வெல்லப்படாத உன்னையே தங்கள் தலைவனாக அடைந்து, போர்க்களத்தில் நிலைபெற்றிருக்கின்றனர்.(5) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உன்னால் பாதுகாக்கப்பட்ட பாஞ்சாலர்கள், மத்ஸ்யர்கள், காரூஷர்கள், சேதிகள் ஆகியோர் உன் எதிரிகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கின்றனர்.(6)


போரில் கூடியிருக்கும் கௌரவர்களை வெல்லக்கூடியவன் இங்கே வேறு எவன் இருக்கிறான்? மறுபுறம், உன்னால் பாதுகாக்கப்படும் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களை வெல்லவும் இங்கே வேறு எவன் இருக்கிறான்?(7) எனினும், ஒன்று சேர்ந்த தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களைக் கொண்ட மூவுலகங்களையும் போரில் நீ வெல்லத்தகுந்தவனாவாய். பிறகு கௌரவப் படையைக் குறித்து நான் என்ன சொல்ல வேண்டும்?(8) ஓ! மனிதர்களில் புலியே, ஆற்றலில் வாசவனுக்கே {இந்திரனுக்கே} ஒப்பானவனாக இருந்தாலும், உன்னைத் தவிர வேறு எவனால் மன்னன் பகதத்தனை வெற்றிக் கொள்ள முடியும்?(9) அதே போலவே, ஓ! பாவமற்றவனே, ஓ! பார்த்தா, பூமியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும், உன்னால் பாதுகாக்கப்படும் இந்தப் பரந்த படையை அவர்களால் பார்க்கக்கூட முடியாது.(10)

அதே போலவே, உன்னால் பாதுகாக்கப்பட்டதாலேயே திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டியால், துரோணர் மற்றும் பீஷ்மரைக் கொல்ல முடிந்தது.(11) உண்மையில், ஓ! பார்த்தா, சக்ரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவர்களும், பாரதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரையும் போரில் எவனால் வெல்ல முடியும்?(12) ஓ! மனிதர்களில் புலியே, அக்ஷௌஹிணிகளின் சீற்றமிகு தலைவர்களும், புறமுதுகிடாதவர்களும், வெல்லப்பட முடியாத வீரர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களும், ஒன்றாகச் சேர்ந்திருந்தவர்களுமான சந்தனுவின் மகன் பீஷ்மர், துரோணர், வைகர்த்தனன் {கர்ணன்}, கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மன்னன் துரியோதனன் ஆகியோரை இவ்வுலகில் உன்னைத் தவிர வேறு எந்த மனிதனால் வெல்ல முடியும்?(13-15)

படைவீரர்களின் எண்ணிலடங்கா படைப்பிரிவுகளும், (உன் கணைகளால்) சிதைக்கப்பட்ட அவர்களது குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகள் ஆகியவையும் (உன்னால்) அழிக்கப்பட்டிருக்கின்றன. கோபம் நிறைந்தவர்களும், கடுமையானவர்களும், பல்வேறு மாகாணங்களில் இருந்து வந்தவர்களுமான எண்ணற்ற க்ஷத்திரியர்களும் உன்னால் அழிக்கப்பட்டிருக்கின்றனர்.(16) குதிரைகள் மற்றும் யானைகளும், ஓ! பாரதா, பல்வேறு க்ஷத்திரிய இனங்களைச் சேர்ந்த கோவாசர்கள், தாசமீயர்கள், வசாதிகள், கிழக்கத்தியர்கள், வாடதானர்கள், தங்கள் கௌரவத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களான போஜர்கள் ஆகிய பெரும் எண்ணிக்கையிலான போராளிளும், ஓ! பாரதா, உன்னையும், பீமரையும் அணுகி அழிவையே அடைந்தனர்.(17,18) பயங்கரச் செயல்களைச் செய்பவர்களும், மிகக் கடுமையானவர்களும், பெரும் கோபமும், பெரும் வலிமையும் கொண்டவர்களும், போரில் திளைப்பவர்ளும், கதாயுதங்களைக் கொண்டவர்களுமான துஷாரர்கள், யவனர்கள், கசர்கள், தார்வபிசாரர்கள், தரதர்கள், சகர்கள், கமதர்கள், ரமதர்கள், தங்கணர்கள்,(19) அந்திரகர்கள், புளிந்தர்கள், கடும் ஆற்றலைக் கொண்ட கிராதர்கள், மிலேச்சர்கள், மலைவாசிகள், கடற்புறத்திலிருந்து வந்த இனங்கள்(20) ஆகிய அனைவரும் குருக்களுடன் ஒன்று சேர்ந்து, துரியோதனனுக்காகக் கோபத்துடன் போரிட்டு, உன்னைத் தவிர வேறு யாராலும் போரில் வெல்லப்பட முடியாதவர்களாக இருந்தனர்.(21)

வலிமைமிக்கவர்களும், எண்ணிக்கையில் பெருகி இருந்தவர்களும், போரில் முறையாக அணிவகுக்கப்பட்டவர்களுமான தார்தராஷ்டிரர்களைக் கண்டும், உன்னால் பாதுகாக்கப்படாமல் எந்த மனிதனால் முன்னேறிச் செல்ல இயலும்?(22) ஓ! பலமிக்கவனே, உன்னால் பாதுகாக்கப்பட்ட பாண்டவர்கள், கோபத்தால் நிறைந்து, அவர்களுக்கு மத்தியில் ஊடுருவி, பொங்கும் கடலுக்கு ஒப்பாகப் புழுதியால் மறைக்கப்பட்ட அந்தப் படையை அழித்தனர்.(23) மகதர்களின் ஆட்சியாளனான வலிமைமிக்க ஜயத்சேனனால், போரில் அபிமன்யு கொல்லப்பட்டு ஏழு நாட்கள் கடந்திருக்கின்றன.(24) அதன்பிறகு, கடுஞ்சாதனைகளைச் செய்பவையும், அந்த மன்னனை {ஜயத்சேனனைப்} பின்தொடர்பவையுமான பத்தாயிரம் யானைகளைப் பீமசேனர் தமது கதாயுதத்தால் கொன்றார்.(25) அதன்பிறகு பிற யானைகளும் நூற்றுக்கணக்கான தேர்வீரர்களும் பீமசேனரின் பல பயன்பாட்டில் அவரால் {பீமரால்} அழிக்கப்பட்டனர்.(26) இவ்வாறே, ஓ! பார்த்தா, இந்தப் பயங்கரப் போரில் தங்கள் குதிரைகள், தேர்வீரர்கள் யானைகள் ஆகியவற்றுடன் பீமசேனர் மற்றும் உன்னுடன் மோதிய கௌரவர்கள், ஓ! பாண்டுவின் மகன், இங்கிருந்து யமலோகத்திற்குச் சென்றனர்.(27)

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கௌரவப் படையின் முகப்பானது, பாண்டவர்களால் தாக்கி வீழ்த்தப்பட்டதும், ஓ! ஐயா, பீஷ்மர், கடுங்கணைகளை ஏவினார்.(28) உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவரான அவர், சேதிகள், பாஞ்சாலர்கள், காரூஷர்கள், மத்ஸ்தர்கள் மற்றும் கைகேயர்கள் ஆகியோரைத் தம் கணைகளால் மறைத்து அவர்களைக் கொன்றார்.(29) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், நேராகச் செல்பவையும், எதிரிகள் அனைவரின் உடல்களையும் துளைக்கவல்லவையுமான கணைகள் அவரது வில்லில் இருந்து வெளிப்பட்டு ஆகாயத்தை நிறைத்தன.(30) அவர் {பீஷ்மர்}, ஒரே நேரத்தில் கணை மழைகளைப் பொழிந்து, ஆயிரக்கணக்கான தேர்வீரர்களைக் கொன்றார். மொத்தமாக அவர் ஒரு நூறாயிரம் {ஒரு லட்சம்} மனிதர்களையும் பெரும் வலிமை கொண்ட யானைகளையும் கொன்றார்.(31) புது வகையில் உள்ள பல்வேறு அசைவுகளைக் கைவிட்டுத் திரிந்து கொண்டிருந்த தீய மன்னர்களும், யானைகளும் அழியும்போது, பல குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளையும் சேர்த்து கொன்றனர். உண்மையில், போரில் பீஷ்மரால் ஏவப்பட்ட கணைகள் எண்ணற்றவையாகும்.(32) சேர்ந்தாற்போலப் பத்து நாட்களுக்குப் பாண்டவப் படைகளைக் கொன்ற பீஷ்மர், எண்ணற்ற தேர்த்தட்டுகளை வெறுமையாக்கி, எண்ணற்ற யானைகளையும், குதிரைகளையும் கொன்றார்.(33) போரில் ருத்ரன், அல்லது உபேந்திரனின் வடிவத்தை ஏற்ற அவர், பாண்டவப் படைகளைப் பீடித்து, அவர்களுக்கு மத்தியில் பேரழிவை உண்டாக்கினார்.(34) தெப்பமற்ற கடலில் மூழ்கிக் கொண்டிருந்த தீய சுயோதனனை மீட்க விரும்பிய அவர் {பீஷ்மர்}, சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் கைகேயர்களில் உள்ள பூமியின் தலைவர்கள் பலரைக் கொன்று, தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் நிறைந்திருந்த பாண்டவப் படையில் பேரழிவை உண்டாக்கினார். நன்கு ஆயுதம் தரித்தவர்களான சிருஞ்சயர்களுக்கு மத்தியில் எண்ணற்ற காலாட்படைவீரர்களும், பூமியின் பிற தலைவர்களும், போரில் அந்த வீரர் எரிக்கும் காந்தியுடன் கூடிய சூரியனுக்கு ஒப்பாகத் திரிந்து கொண்டிருந்தபோது, அவரைக் காண்பதற்கும் இயலாதவர்களாக இருந்தனர்.(35-37) இறுதியாகப் பாண்டவர்கள், தங்கள் வழிவகைகள் அனைத்தையும் கொண்டு ஒரு பெரும் முயற்சியைச் செய்து, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டவரும், இவ்வழியில் போரில் திரிந்து கொண்டிருந்தவருமான அந்தப் போர்வீரரை {பீஷ்மரை} எதிர்த்து விரைந்தனர்.(38) எனினும் உலகின் முதன்மையான போர்வீரர் என்று கருதப்படும் அவர் {பீஷ்மர்}, எந்த உதவியையும் பெறாமல், போரில் பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களை முறியடித்தார்.(39) அவரோடு மோதிய சிகண்டி, உன்னால் பாதுகாக்கப்பட்டு அந்த மனிதர்களில் புலியை {பீஷ்மரைத்} தன் நேரான கணைகளால் கொன்றான்.(40) வாசவனை {இந்திரனைத்} தன் எதிரியாக அடைந்த விருத்திரனைப் போல, மனிதர்களில் புலியான உன்னை (தமது பகைவனாக) அடைந்த அந்தப் பாட்டன் {பீஷ்மர்}, இப்போது கணைப்படுக்கையில் கிடக்கிறார்.(41)

கடுமை நிறைந்த துரோணரும் சேர்ந்தாற்போல ஐந்து நாட்களுக்காப் பகைவரின் படையைக் கொன்றார். ஊடுருவமுடியாத {பிளகப்பட முடியாத} வியூகம் ஒன்றை அமைத்து, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கொல்லச் செய்த அந்தப் பெரும் வீரரே, (சில காலத்திற்கு) ஜெயத்ரதனையும் பாதுகாத்தார். யமனைப் போலவே கடுமையான அவர், இரவு போரில் பேரழிவை உண்டாக்கினார்.(42,43) பெரும் வீரம் கொண்ட அந்தப் பரத்வாஜரின் வீரமகன் {துரோணர்}, தமது கணைகளால் எண்ணற்ற போராளிகளை எரித்தார். இறுதியாகத் திருஷ்டத்யும்னனுடன் மோதி, உயர்வான தன் முடிவை அடைந்தார்[1].(44) அந்நாளில் சூதன் மகன் {கர்ணன்} தலைமையிலான (தார்தராஷ்டிரப்) போர்வீரர்கள் அனைவரையும் நீ தடுக்காமலிருந்திருந்தால், துரோணரை எப்போதும் கொன்றிருக்க முடியாது.(45) மொத்த தார்தராஷ்டிரப் படையையும் நீயே தடுத்துவைத்திருந்தாய். இதனாலேயே, ஓ! தனஞ்சயா, பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} துரோணரைக் கொல்ல முடிந்தது.(46)

[1] “42, 43 மற்றும் 44 ஆகியவை சேர்ந்து ஒரே வாக்கியமாகும். நீண்ட சிக்கலான வடிவத்தைத் தவிர்க்கவே நான் அதை மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

உன்னைத் தவிர வேறு எந்த க்ஷத்திரியனால், போரில் ஜெயத்ரதனைப் படுகொலை செய்த அந்த அருஞ்செயலைச் செய்ய முடியும்?(47) பரந்த (கௌரவப்) படையைத் தடுத்து, துணிவுமிக்க மன்னர்கள் பலரைக் கொன்று, உன் வலிமை மற்றும் உன் ஆயுதங்களின் சக்தி ஆகியவற்றின் துணையால் நீ மன்னன் ஜெயத்ரதனைக் கொன்றாய்.(48) சிந்துக்களின் ஆட்சியாளனை (ஜெயத்ரதனைப்) படுகொலை செய்த செயலை அற்புதம் நிறைந்ததாக மன்னர்கள் அனைவரும் கருதுகின்றனர். எனினும், நீயே அதைச் செய்தாய் என்பதாலும், நீ பெரும் தேர் வீரன் என்பதாலும் நான் அவ்வாறு (அதை அற்புதம் என்று) கருதவில்லை.(49) உன்னைப் பகைவனாக அடைந்த இந்தப் பரந்த க்ஷத்திரியக் கூட்டம், ஒரு முழு நாளில் அழிவை அடைந்திருக்குமென்றாலும், அப்போதும் நான் இந்த க்ஷத்திரியர்களை உண்மையில் வலிமைநிறைந்தவர்களாகவே கருதுவேன்[2].(50) பீஷ்மரும், துரோணரும் கொல்லப்பட்ட பிறகு, ஓ! பார்த்தா, இந்தப் பயங்கரத் தார்தராஷ்டிரப் படையானது தன் வீரர்கள் அனைவரையும் இழந்துவிட்டதாகவே கருதப்பட வேண்டும்.(51) உண்மையில், அதன் முதன்மையான வீரர்கள் கொல்லப்பட்டு, குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியன அழிக்கப்பட்ட பாரதப் படையானது, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இழந்த ஆகாயத்தைப் போல இன்று தெரிகிறது.(52) ஓ! பார்த்தா, அதோ கடும் ஆற்றலைக் கொண்ட அந்தப் படை பழங்காலத்தில் சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலால் காந்தியை இழந்த அசுரப் படையைப் போல இன்று தன் காந்தியை இழந்திருக்கிறது.(53)

[2] “இங்கே என்ன பொருள் என்றால், ’ஒரு கணத்தில் நீ மூவுலகங்களையும் அழிக்கவல்லவன் என்பதால், நீ இந்த க்ஷத்திரியர்களை அழிக்க ஒரு நாளை எடுத்துக் கொண்டால், இந்த க்ஷத்திரியர்கள் உண்மையிலேயே வலிமையானவர்கள் என்றே நான் கருதுவேன்’ என்பதே ஆகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அந்தப் பெருந்திரளில் எஞ்சியிருக்கும் படையானது, இப்போது அஸ்வத்தாமன், கிருதவர்மன், கர்ணன், சல்லியன் மற்றும் கிருபர் ஆகிய ஐந்து பெரும் தேர்வீரர்களை மட்டுமே கொண்டிருக்கிறது.(54) ஓ! மனிதர்களில் புலியே, அந்த ஐந்து பெரும் தேர்வீரர்களையும் இன்று கொன்று, உன் பகைவர்கள் அனைவரையும் கொன்ற வீரனாகி, தீவுகள் மற்றும் நகரங்களுடன் கூடிய இந்தப் பூமியை மன்னர் யுதிஷ்டிரருக்கு அளிப்பாயாக.(55) அளவிலா சக்தியும் செழிப்பும் கொண்டவரும், பிருதையின் மகனுமான யுதிஷ்டிரர், நீரையும், அதற்கு மேலே ஆகாயத்தையும், அதற்குக் கீழே பாதாள உலகங்களையும் கொண்டிருக்கும் மொத்த உலகத்தையும் இன்று அடையட்டும்.(56) பழங்காலத்தில் தைத்தியர்களையும் தானவர்களையும் கொன்ற விஷ்ணுவைப் போல இந்தப் படையைக் கொன்று, (மூவுலகங்களையும்) சக்ரனுக்கு அளித்த ஹரியைப் போல, நீ இந்தப் பூமியை மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} அளிப்பாயாக.(57) விஷ்ணுவால் தானவர்கள் கொல்லப்பட்டதும் மகிழ்ந்த தேவர்களைப் போலப் பாஞ்சாலர்கள், தங்கள் பகைவர்கள் கொல்லப்பட்டு இன்று மகிழ்ச்சியை அடையட்டும்.(58)

மனிதர்களில் முதன்மையான உன் ஆசான் துரோணரின் மீது கொண்ட மதிப்பால் அஸ்வத்தாமரிடம் நீ இரக்கம் கொண்டாயெனினும், ஆசானுக்கு உரிய மதிப்புடன் நீ கிருபரிடம் பரிவு கொண்டாயெனினும்,(59) கிருதவர்மனை அணுகி, தாய்வழி சொந்தங்களின் மீது கொண்ட மதிப்பால் இன்று நீ அவனை யமலோகம் அனுப்பவில்லையெனினும்,(60) ஓ! தாமரைக் கண்ணா {அர்ஜுனா}, உன் தாயாரின் சகோதரரான மத்ரர்களின் ஆட்சியாளர் சல்லியரை அணுகி, இரக்கத்தால் அவரை நீ கொல்லவில்லையெனினும்,(61) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பாண்டு மகன்களின் மீது கடும் வெறுப்பைக் கொண்டவனும், பாவம் நிறைந்த இதயம் கொண்ட இழிந்தவனுமான கர்ணனைக் கூரிய கணைகளால் வேகமாக இன்று கொல்வாயாக.(62) இதுவே உன் உன்னதக் கடமையாகும். இதில் முறையற்றதென ஏதுமில்லை. நாம் அஃதை அங்கீகரிக்கிறோம், அதில் எந்தக் களங்கமும் இல்லை.(63)

ஓ! மங்கா புகழ் கொண்டோனே, ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இரவில் உன் தாயாரை, அவளது பிள்ளைகள் {பிள்ளைகளான உங்கள்} அனைவரோடு சேர்த்து எரிக்கும் முயற்சிக்கும், பகடையாட்டத்தின் விளைவால் சுயோதனன் உங்களிடம் நடந்து கொண்ட நடத்தைக்கும் தீய ஆன்மா கொண்ட கர்ணனே அடிவேராக இருக்கிறான்.(64) சுயோதனன், கர்ணன் மூலமான விடுதலையையே எப்போதும் எதிர்பார்த்திருக்கிறான். சினத்தால் நிறைந்த அவன் {துரியோதனன்}, (அந்த ஆதரவின் விளைவாலேயே) என்னையும் பீடிக்க முயல்கிறான்.(65) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, போரில் பார்த்தர்கள் அனைவரையும் ஐயமில்லாமல் கர்ணன் கொல்வான் என்பது திருதராஷ்டிரருடைய அரசமகனின் {துரியோதனனின்} உறுதியான நம்பிக்கையாகும்.(66) உன் வலிமையை முற்றாக அறிந்தவனாக இருப்பினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, கர்ணன் மீது கொண்ட நம்பிக்கையின் விளைவாலேயே உன்னோடு போர்தொடுத்தான்.(67) “ஒன்றாகக் கூடியிருக்கும் பார்த்தர்கள் அனைவரையும், வலிமைமிக்கத் தேர்வீரனும், தாசார்ஹ குலத்தைச் சேர்ந்தவனுமான வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} நான் வெல்வேன்” என்றே கர்ணன் எப்போதும் சொல்லி வருகிறான். திருதராஷ்டிரரின் தீய மகனை மிதமிஞ்சித் தூண்டும் தீய கர்ணன் எப்போதும் (குரு) சபையில் {இவ்வாறே} முழங்குகிறான். ஓ! பாரதா, அவனை இன்று கொல்வயாக.(69) குற்றவாளியாகத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} உங்களுக்கு இழைத்த தீங்குகள் அனைத்திலும் தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்த அறிவைக் கொண்டவனுமான கர்ணனே அவற்றின் தலைவனாக இருக்கிறான்.(70)

காளையைப் போன்ற கண்களைக் கொண்ட சுபத்ரையின் வீர மகன் {அபிமன்யு}, தார்தராஷ்டிரப் படையைச் சேர்ந்தவர்களும், கொடூர இதயங்களைக் கொண்டவர்களுமான ஆறு வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கொல்லப்படுவதை நான் கண்டேன்.(71) துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் மற்றும் பிற வீரர்களைக் கொண்ட அந்த மனிதர்களில் காளைகளைக் கலங்கடித்த அவன் {அபிமன்யு}, யானைகளைத் தங்கள் பாகர்களை இழக்கச் செய்தான், வலிமைமிக்கத் தேர்வீரர்களைத் தங்கள் தேர்களை இழக்கும்படியும் செய்தான்.(72) காளையின் திமில்களைப் போன்ற கழுத்தைக் கொண்டவனும், குருக்கள் மற்றும் விருஷ்ணிகளின் புகழைப் பரப்பியவனுமான அபிமன்யு, குதிரைகளைத் தங்கள் சாரதிகளையும், காலாட்படை வீரர்களைத் தங்கள் ஆயுதங்களையும், உயிரையும் இழக்கச் செய்தான்.(73) (கௌரவப்) படைப்பிரிவுகளை முறியடித்து, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைப் பீடித்த அவன் {அபிமன்யு} எண்ணற்ற மனிதர்களையும், குதிரைகள் மற்றும் யானைகளையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(74)

ஓ! நண்பா {அர்ஜுனா}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளால் பகைவரின் படையை எரித்துக் கொண்டே அவ்வாறு முன்னேறிச் சென்ற போது, அந்தச் சந்தர்ப்பத்திலும் கூட, தீய ஆன்மா கொண்ட கர்ணன், அந்த வீரனிடம் பகைமை பாராட்டினான் என்று நினைக்கும் போதே என் அங்கமெல்லாம் எரிகின்றன. நான் உண்மையின் பெயரால் இதை உனக்கு உறுதி கூறுகிறேன். ஓ! பார்த்தா, அந்தப் போரில் அபிமன்யுவின் முகத்திற்கு நேரே நிற்க முடியாமல், சுபத்ரை மகனின் கணைகளால் சிதைக்கப்பட்டு, சுய நினைவை இழந்து, குருதியில் குளித்த கர்ணன், சினத்தால் எரிந்து அழ்ந்த பெருமூச்சுகளை விட்டான். இறுதியாக, கணைகளால் பீடிக்கப்பட்ட அவன் {கர்ணன்}, களத்தில் புறமுதுகிட நினைத்தான்.(75-77) தப்பி ஓடும் ஆவல் கொண்டு, உயிரில் நம்பிக்கையிழந்த அவன் போரில் சற்று நேரம், தான் அடைந்த காயங்களால் களைப்படைந்தவனாக, முற்றிலும் மலைப்படைந்தவனாக நின்றான்.(78) இறுதியாக, அந்த நேரத்திற்குத் தகுந்தாற்போல, “கர்ணா, அபிமன்யுவின் வில்லை அறுப்பாயாக” என்ற துரோணரின் கொடூர வார்த்தைகளை அந்தப் போரில் கேட்டான்.(79) முறையற்ற போர் வழிமுறைகளை நன்கறிந்தவர்களான ஐந்து பெருந்தேர் வீரர்கள், அவனால் {கர்ணனால்} அந்தப்போரில் வில்லற்றவனாகச் செய்யப்பட்ட அந்த வீரனை {அபிமன்யுவைத்} தங்கள் கணைமாரியால் கொன்றனர்.(80) அந்த வீரனின் படுகொலையால் ஒவ்வொருவரின் இதயத்திற்குள்ளும் துயரம் நுழைந்தது. தீய ஆன்மா கொண்ட கர்ணன் மற்றும் சுயோதனன் மட்டுமே மகிழ்ச்சியாகச் சிரித்தனர்.(81)

(குரு) சபையில், பாண்டவர்கள் மற்றும் குருக்களின் முகத்திற்கு நேராகக் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} கடுமையாகவும், கசப்பாகவும் பேசிய கர்ணனின் கொடூர வார்த்தைகளை நினைவுகூர்வாயாக.(82) “ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, பாண்டவர்கள் இறந்துவிட்டனர். அவர்கள் நித்தியமான நரகத்திற்குள் மூழ்கிவிட்டார்கள். ஓ! பருத்த பிட்டங்களைக் கொண்டவளே, ஓ! இனிமையாகப் பேசுபவளே, இப்போது வேறு தலைவர்களைத் தேர்ந்தெடுப்பாயாக.(83) ஓ! நெளிந்த இமைமயிர் கொண்டவளே, திருதராஷ்டிரரின் வசிப்பிடத்திற்குள் ஒரு பணிப்பெண்ணாக இப்போது நுழைவாயாக, இனிமேல் உனக்குக் கணவர்கள் இல்லை.(84) ஓ! கிருஷ்ணையே, இன்று பாண்டவர்கள் உனக்கு எந்தச் சேவையும் செய்ய மாட்டார்கள். ஓ! பாஞ்சால இளவரசியே, அடிமைகளின் மனைவி நீ, ஓ! அழகிய பெண்ணே, நீயே கூட அடிமையே.(85) இன்று துரியோதனன் மட்டுமே பூமியில் ஒரே மன்னனாகக் கருதப்படுகிறான். உலகம் முழுவதிலும் உள்ள மற்ற மன்னர்கள் அனைவரும் அவனுடைய {துரியோதனனின்} ஆட்சி நிர்வாகத்தையே பராமரித்து வருகின்றனர்.(86) ஓ! இனியவளே, பாண்டவர்கள் அனைவரும் சமமாக விழுந்து கிடக்கின்றனர் என்பதை இப்போது பார். திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} சக்தியில் மூழ்கிப் போன அவர்கள், இப்போது அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.(87) இவர்கள் அனைவரும் எள்ளுப் பதர்களே, இவர்கள் அனைவரும் நரகத்தில் மூழ்கிவிட்டவர்களே என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் மன்னர்களுக்கு மன்னனான இந்தக் கௌரவனிடம் (துரியோதனனிடம்) பணியாளாகவே பணிசெய்ய முடியும்” என்றான்{கர்ணன்}.(88) ஓ! பாரதா {அர்ஜுனா}, பாவம் நிறைந்தவனும், தீய இதயம் கொண்டவனும், இழிந்தவனுமான கர்ணன், அந்தச் சந்தர்ப்பத்தில் நீ கேட்டுக் கொண்டிருக்கும்போதே பேசிய இழிந்த பேச்சு இதுவே.(89)

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், உன்னால் ஏவப்படுகையில் உயிரையே எடுக்கவல்லவையுமான கணைகள், அந்த இழிந்தவன் உங்களுக்குச் செய்த பிற தீங்குகள் அனைத்தையும், அந்த (நெருப்பு) வார்த்தைகளையும் அணைக்கட்டும். உன் கணைகள் அந்தத் தீங்குகள் அனைத்தையும் தணித்து, அந்தப் பொல்லாதவனின் உயிரையும் அணைக்கட்டும்.(90,91) அந்தத் தீய ஆன்மா கொண்ட கர்ணன், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட பயங்கரக் கணைகளின் தீண்டலை உணர்ந்து, பீஷ்மர் மற்றும் துரோணரின் வார்த்தைகளை இன்று நினைத்துப் பார்க்கட்டும்.(92) எதிரிகளைக் கொல்பவையும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டவையுமான துணிக்கோல் கணைகள் உன்னால் ஏவப்பட்டு, அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்து, அவனது குருதியைக் குடிக்கட்டும்.(93) பெரும் வேகம் கொண்டவையும், சீற்றமும், வலிமையும் மிக்கவையுமான கணைகள் உன் கரங்களால் ஏவப்பட்டு, கர்ணனின் முக்கிய அங்கங்களை ஊடுருவி, இன்று அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பட்டும்.(94)

இன்று உன் கணைகளால் பீடிக்கப்பட்டு, தன் தேரில் இருந்து கீழே விழும் கர்ணனைக் கண்டு, உற்சாகத்தை இழந்து, கவலையில் நிறைந்து, பூமியின் மன்னர்கள் அனைவரும் துன்பத்துடன் ஓலமிடட்டும்.(95) இன்று குருதியில் மூழ்கி, தன் பிடியிலுள்ள ஆயுதங்கள் தளர்ந்து, பூமியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடக்கும் கர்ணனை அவனது சொந்தங்கள் மகிழ்சியற்ற முகங்களுடன் காணட்டும்.(96) யானை கட்டும் கயிரைப் பொறியாகக் கொண்டதும், உயரமானதுமான அதிரதன் மகனின் {கர்ணனின்} கொடிமரம், உன் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} வெட்டப்பட்டு, படபடத்துக் கொண்டே பூமியில் விழட்டும். (97) சல்லியன், (தான் செலுத்துவதும்) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேரானது, அதன் போர்வீரனையும், குதிரைகளையும் இழந்து உன் நூற்றுக்கணக்கான கணைகளால் துண்டுகளாக வெட்டப்படுவதைக் கண்டு, அச்சத்தால் அதைக் கைவிட்டுவிட்டு ஓடட்டும்.(98) உன் எதிரியான சுயோதனன், உன்னால் கொல்லப்படும் அதிரதன் மகனைக் {கர்ணனைக்} கண்டு, அரசு மற்றும் உயிரில் நம்பிக்கையிழக்கட்டும்.(99)

ஓ! பார்த்தா, சக்தியில் இந்திரனுக்கு இணையானவனும், அல்லது ஒருவேளை சங்கரனே ஆனவனுமான கர்ணன், தன் கணைகளால் அதோ உன் துருப்புகளைக் கொன்று வருகிறான்.(100) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, அங்கே கர்ணனின் கூரிய கணைகளால் கொல்லப்பட்டாலும், பாண்டவர்களின் காரியத்தை நிறைவேற்றவே பாஞ்சாலர்கள் விரைகின்றனர்.(101) ஓ! பார்த்தா, பாஞ்சாலர்கள், திரௌபதியின் (ஐந்து) மகன்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி, திருஷ்டத்யும்னனின் மகன்கள், நகுலனின் மகன் சதானீகன், நகுலன், சகாதேவன், துர்முகன், ஜனமேஜயன், சுதர்மன், சாத்யகி ஆகியோரைக் கர்ணன் விஞ்சி நிற்கிறான்.(102-103) ஓ! எதிரிகளை எரிப்பவனே, உன் கூட்டாளிகளான அந்தப் பாஞ்சாலர்கள் அந்தப் பயங்கரப் போரில் கர்ணனால் தாக்கப்படும்போதும் உண்டாகும் உரத்த ஆரவாரம் கேட்கப்படுகிறது.(104) பாஞ்சாலர்கள் ஒருபோதும் அஞ்சவில்லை, அல்லது அவர்கள் போர்க்களத்தில் இருந்து புறமுதுகிடவும் இல்லை. அந்த வலிமைமிக்க வில்லாளிகள், இந்தப் பெரும்போரில் ஏற்படப்போகும் மரணத்தைத் துச்சமாக மதிக்கின்றனர்.(105)

தனியாகவே பாண்டவப் படையைத் தன் கணைமேகங்களால் சூழ்ந்து கொண்ட பீஷ்மருடன் மோதியும் அந்தப் பாஞ்சாலர்கள் அவரிடம் இருந்து தங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளவில்லை {புறமுதுகிடவில்லை}.(106) மேலும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, தங்கள் பெரும் எதிரியும், வில்தரித்தோர் அனைவரின் ஆசானும், வெல்லப்படமுடியாதவரும், ஆயுதங்களின் சுடர்மிக்க நெருப்பும், போரில் தன் எதிரிகளை எப்போதும் எரிப்பவருமான துரோணரைப் பலவந்தமாக வெல்லத் துரிதமாகச் செயல்படவே எப்போதும் அவர்கள் {பாஞ்சாலர்கள்} முயன்றனர். அதிரதன் மகனை {கர்ணனை} அஞ்சி அவர்கள் ஒருபோதும் போரில் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டதில்லை {புறமுதுகிட்டதில்லை}.(107,108) எனினும் அந்த வீரக் கர்ணன், சுடர்மிக்க நெருப்பை நோக்கி வரும் பூச்சி கூட்டங்களின் உயிரை எடுக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், தன்னை எதிர்த்து விரைபவர்களுமான அந்தப் பாஞ்சால வீரர்களின் உயிர்களைத் தன் கணைகளால் எடுக்கிறான்,(109) இந்தப் போரில் அந்த ராதையின் மகன், தங்கள் கூட்டாளிகளுக்காகத் தங்கள் உயிரை விடத் தீர்மானித்தவர்களும், வீரர்களும், தன்னை எதிர்த்து வருபவர்களுமான பாஞ்சாலர்களை நூற்றுக்கணக்கில் அழிக்கிறான்.(110) ஓ! பாரதா, படகற்ற பெருங்கடலான கர்ணனில் மூழ்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெரும் வில்லாளிகளை, அந்தத் துணிச்சல்மிக்க வீரர்களைக் காக்க நீ அவர்களின் படகாவதே உனக்குத் தகும்.(111)

தவசிகளில் முதன்மையானவரும், பிருகு குலத்தவருமான ராமரிடம் {பரசுராமரிடம்} அவன் பெற்ற அந்த ஆயுதத்தின் {பார்க்கவ ஆயுதத்தின்} கோர வடிவம் வெளிக்காட்டப்படுகிறது.(112) சீற்றமிக்கதும், சக்தியால் சுடர்விடுவதும், பயங்கர வடிவத்தைக் கொண்டதுமான அவ்வாயுதம், நம் பரந்த படையைச் சூழ்ந்து கொண்டு, துருப்புக்ள அனைத்தையும் எரிக்கிறது.(113) கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகள், வண்டுக்கூட்டங்களைப் போலப் போரில் அடர்த்தியாகச் சென்று உன் துருப்புகளை எரிக்கின்றன.(114) ஓ! பாரதா, ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைக்காதவர்களால் தடுக்கப்பட முடியாத கர்ணனின் அவ்வாயுதத்தோடு போரில் மோதும் அந்தப் பாஞ்சாலர்கள், அதோ அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(115) ஓ! பார்த்தா, தணிக்கப்பட முடியாத கோபத்தைக் கொண்டவரான பீமர், அனைத்துப் பக்கங்களிலும் சிருஞ்சயர்களால் சூழப்பட்டு, கர்ணனிடம் போரிட்டு, பின்னவனின் {கர்ணனின்} கூரிய கணைகளால் பீடிக்கப்படுகிறார்.(116) புறக்கணிக்கப்பட்ட நோயின் கிருமி உடலுக்குள் நுழைவதைப் போல, ஓ! பாரதா, கர்ணன் புறக்கணிக்கப்பட்டால், அவன் பாண்டவர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாஞ்சாலர்களை அழித்துவிடுவான்.(117)

போரில் ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} மோதி, வீட்டுக்கு பாதுகாப்பாகவும், நலமாகவும் திரும்பி வருவதற்கு, உன்னைத் தவிர வேறு எந்தப் போர்வீரனையும் யுதிஷ்டிரரின் படையில் நான் காணவில்லை.(118) ஓ! மனிதர்களில் காளையே, ஓ! பார்த்தா, உன் சபதத்துக்குத் தக்கபடி செயல்பட்டு, உன் கூரிய கணைகளால் கர்ணனை இன்று கொன்று பெரும்புகழை வெல்வாயாக.(119) ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, கர்ணனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டுள்ள கௌரவர்களைப் போரில் வெல்ல நீ மட்டுமே தகுந்தவன், வேறு எவனும் இல்லை என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(120) வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனைக் கொல்லும் இந்த அருஞ்செயலைச் செய்து, ஓ! பார்த்தா, உன் நோக்கத்தை அடைந்து, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு மகிழ்ச்சியாக இருப்பாயாக” என்றான் {கிருஷ்ணன்}”.(121)
-----------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி - 73ல் உள்ள சுலோகங்கள் : 121

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்