எழுத்தாளர் திரு. சாரு நிவேதிதா அவர்களின் வலைத்தளத்தில் முழுமஹாபாரதத்திற்கு ஓர் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
அறிமுகம் தந்து தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். மேலும், என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் வாழ்த்தினார்.
இது தவிர...
இன்று திரு.சாருநிவேதிதா அவர்களுடன் நானும் திரு.ஜெயவேலன் அவர்களும் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. நமது முழுமகாபாரதத்தில் வரும் நளன் கதை குறித்தும், இன்னும் பிற கதைகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். நீண்ட நேரம் ஒரு நண்பருடன் உரையாடிய மகிழ்ச்சி கிடைத்தது.
வீட்டிற்குத் திரும்பியதும், அவர் அந்திமழையில் எழுதியிருந்த நளன் கதையின் சுருக்கத்தைப் படித்தேன். வியந்தேன்.
அவர் கைப்பட போட்டுத் தந்த காபியின் சுவையை இன்னும் உணர்கிறேன்.
வேறு வார்த்தைகளே கிடைக்கவில்லை... நன்றி சாரு சார்.
**************************************************
கீழ்க்கண்டவை அவரது வலைத்தளத்திலிருந்து....
அற்புதமான பணி!
சமீபமாக ஏன் எதுவும் எழுதவில்லை என்று பலரும் விசாரித்தனர். படித்துக் கொண்டிருக்கிறேன். சுமார் ஆயிரம் பக்கங்கள் எழுதுவதற்கான ‘பொருள்’ கைவசம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக எழுத வேண்டும். என் வாசிப்பின் ஊடாகக் கிடைத்த அற்புதங்கள் அநேகம். அதில் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். வியாசனின் பாரதத்தை நீங்கள் முழுமையாக தமிழில் வாசிக்க வேண்டுமானால் கீழ்க்காணும் இணையதளத்தைப் பாருங்கள். இந்த மகத்தான பணியைச் செய்து வரும் அருட்செல்வப் பேரரசனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்.
http://mahabharatham.arasan.info/
உலகின் மிக அற்புதமான காதல் கதை
ஏன் எழுதவே இல்லை என்ற நண்பர்களின் கேள்விக்குப் பதில் இந்த இணைப்பில் இருக்கிறது. விழுந்து புரண்டு படித்துக் கொண்டிருக்கிறேன்.
http://andhimazhai.com/news/view/charu29.html