Kanika's Law | Adi Parva - Section 142 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 78)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனுக்கு நீதியை உபதேசித்த கணிகர்;
 |
Kanika's Law | Adi Parva - Section 142
Mahabharata In Tamil |
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டுவின் வீர மைந்தர்கள், பெரும் சக்தி கொண்டு பலத்தைப் பெருக்கி வருவதைக் கேள்விப்பட்ட மன்னன் திருதராஷ்டிரன் கவலையில் மூழ்கி மிகவும் பரிதாபமாக இருந்தான்.(1) அவன் {திருதராஷ்டிரன்}, அரசியலின் அறிவியலை நன்கு அறிந்தவரும், மன்னனுக்கு ஆலோசனை வழங்குவதில் நிபுணரும், அமைச்சர்களில் முதன்மையானவருமான கணிகரை அழைத்து,(2) “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {கணிகரே}, பாண்டவர்கள் தினமும் பூமியைத் தங்களது நிழலால் அதிகமாக மறைத்து வருகின்றனர். நான் அவர்களிடம் மிகுந்த பொறாமை கொண்டுள்ளேன். நான் அவர்களுடன் அமைதி காக்கவா? அல்லது போர் தொடுக்கவா? ஓ! கணிகரே, இது தொடர்பாக உமது அறிவுரை நிச்சயமாக எனக்குத் தேவை. நான் நீர் சொல்வது போல நடந்து கொள்வேன்" என்றான்".(3)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த பிராமணர்களில் சிறந்தவர் {கணிகர்}, மன்னனால் இப்படிக் கேட்கப்பட்டதும், அரசியலின் அறிவியல் ஏற்றுக்கொள்ளும் வகையில் கூர்மையான வார்த்தைகளால் பேசினார்.(4)