விஸ்வகர்மா : தேவலோக தச்சனாவான். கதன் எனும் அசுரனின் எலும்பிலிருந்து கதாயுதத்தை இவன் செய்தான் என்றும், சிவனுக்காக திரிசூலமும், திருமாலுக்காக சக்ராயுதமும், முருகனுக்காக வேலும், குபேரனுக்காக சிவிகையும் விஸ்வகர்மா உருவாக்கித் தந்ததாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. இவனது மகளான சமுக்யா தேவியை சூரியனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். சிவனுக்கு பிங்களம், திருமாலுக்கு சாரங்கம், இந்திரனுக்கு ததீசி முனிவரின் முதுகெலும்பிலிருந்து வஜ்ராயுதம் ஆகியவற்றைச் செய்து தந்தவன் இவனே. சிவ பார்வதி திருமணத்திற்காக கடலுக்கு நடுவே இலங்கையை அமைத்தான் என்றும், கிருஷ்ணனுக்கு துவாரகையை அமைத்தான் என்றும் சொல்லப்படுகிறது.
மஹாபாரதத்தில் விஸ்வகர்மா வரும் இடங்கள்.
Mbh.2.1.12
Mbh.2.8.336
Mbh.2.8.354
Mbh.2.9.365
Mbh.3.3.196
Mbh.3.114.5891
Mbh.3.160.8144
Mbh.4.9.352
Mbh.4.66.2588
Mbh.13.158.13142
Mbh.13.160.13411
பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:viswakarma