Ganga told the truth! | Adi Parva - Section 99 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 35)
பதிவின் சுருக்கம் :
வசிஷ்டிரனின் சாபத்தினால் வசுக்கள் சந்தனுவுக்குப் பிள்ளைகளாகப் பிறந்ததை எடுத்துரைத்த கங்கை; தியோவசுவின் மனைவி நந்தினி என்ற பசுவை விரும்புதல்; நந்தினியைக் கவர்ந்த தியோவசு; பீஷ்மனைக் கங்கை தன்னுடன் அழைத்துச் செல்வது...
சந்தனு, "வசுக்களின் குற்றம் என்ன? ஆபவர் என்பவர் யார்? யாருடைய சாபத்தால் வசுக்கள் மனிதர்கள் மத்தியில் பிறந்தனர்?(1) இந்த உனது குழந்தை கங்காதத்தன், மனிதர்களுடன் வாழும்படி என்ன செய்தான்?(2) மூவுலகங்களின் தலைவர்களான வசுக்கள் மனிதர்களுக்கு மத்தியில் பிறக்க ஏன் சபிக்கப்பட்டனர்? ஓ ஜானுவின் மகளே, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(3)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிக் கேட்கப்பட்ட ஜானுவின் தெய்வீக மகள் கங்கை, தனது கணவனும், மனிதர்களில் காளையுமான அந்த ஏகாதிபதியிடம்,(4) "ஓ பாரதக் குலத்தில் சிறந்தவரே, வருணனால் மகனாகப் பெறப்பட்டவரே வசிஷ்டர், அந்த முனிவரே பிற்காலத்தில் ஆபவர்[1] என்று அறியப்பட்டார்.(5)
அவரது ஆசிரமம், மலைகளின் மன்னனான மேருவின் சாரலில் இருந்தது. பல பறவைகளுனும், விலங்குகளும் நிறைந்திருந்த அந்த இடம் புனிதமானதாக இருந்தது. அங்கே எல்லாக் காலங்களிலும், அந்தந்த காலங்களுக்கு ஏற்ற வகையில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.(6) ஓ பாரதக் குலத்தில் சிறந்தவரே, அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான அந்த வருணனின் மகன் {வசிஷ்டர்}, இனிய கிழங்குகளும், நீரும் நிறைந்திருந்த அந்தக் கானகத்திலேயே தவம் செய்து வந்தார்.(7) தக்ஷனுக்குச் சுரபி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள். ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அவள் உலகத்தின் நன்மைக்காகக் கசியபருடன் கூடி பசுவின் உருவில் ஒரு மகளைப் (நந்தினி) ஈன்றாள்.(8) அந்தப் பசுக்களில் முதன்மையான நந்தினி அனைத்தும் உடைய (விரும்பிய அனைத்தையும் கொடுக்கும் திறன் கொண்டவளாக) பசுவாக இருந்தாள். வருணனின் அறம்சார்ந்த மகன் {வசிஷ்டர்}, நந்தினியைத் தனது ஹோம காரியங்களுக்காக அடைந்தார்.(9)
முனிவர்களால் வழிபடப்பட்ட அந்த ஆசிரமத்திலேயே நந்தினியும் வசித்து வந்தாள். அப்படி வசித்து வரும்போது, அச்சமற்று மகிழ்ச்சியுடன் அந்தப் புனிதமான இடத்தில் அவள் உலவிக் கொண்டிருந்தாள்.(10) ஒரு நாள், ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்தக் கானகத்திற்குத் தெய்வீக முனிவர்களாலும், தேவர்களாலும் வழிபடப்படும் வசுக்கள், பிருதுவைத் தலைமையாகக் கொண்டு அங்கு வந்தனர்.(11) அந்த மலைகளுடன் கூடிய அழகான கானகத்தில் தங்கள் மனைவியருடன் உலவித் திரிந்து அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.(12) ஓ இந்திரனின் ஆற்றலைக் கொண்டவரே! அப்படி அவர்கள் உலவிக் கொண்டிருக்கையில், கொடியிடை கொண்டவளான, அந்த வசுக்களின் ஒருவனுடைய மனைவி, அந்தக் கானகத்தில் உலவிக் கொண்டிருந்த எல்லாம் வல்ல நந்தினியைக் கண்டாள்.(13) அவள் {நந்தினி}, பெரிய கண்களுடன், மடி கனத்து, மெலிதான வாலுடன், அழகான கால்களுடன், அனைத்து நற்குறிகளும் நிறைந்து, பாலும், அனைத்து செல்வங்களும் கொண்டிருந்த அந்தப் பசுவைத் தனது கணவனான தியோவுக்குக் {பிரபாசனுக்குக்} காட்டினாள்.(14-16) ஓ முதன்மையான யானைகளின் ஆற்றலைக் கொண்டவனே {ஜனமேஜயா}, அந்தப் பசுவைக் கண்ட தியோ, அதன் சிறப்புகளை ஆராய்ந்து ரசித்துத் தனது மனைவியிடம்,(17) "ஓ அழகான தொடைகளையும், கருங்கண்களையும் பெண்ணே, இந்த அழகான ஆசிரமத்திற்கு உரிமையாளரான முனிவருக்குச் சொந்தமானதே இந்தப் பசு.(18) ஓ கொடியிடையாளே, சாகப் பிறந்தவன் இதன் பாலை அருந்தினால், பத்தாயிரம் வருடங்களுக்கு இளமை மாறாமல் இருப்பான்" என்றான்.(19)
ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே, இதைக்கேட்ட களங்கமற்ற குணம் கொண்ட கொடியிடை தேவி, தனது பிரகாசமிக்கத் தலைவனிடம்,(20) "இந்த உலகத்தில் ஜிதவதி என்ற பெயரில் எனக்கு ஒரு தோழி இருக்கிறாள். அவள் பேரழகும், இளமையுமுடையவளாவாள்.(21) அவள் மனிதர்களில் தேவனாக இருக்கும் அரசமுனி உசீனரனின் மகள். அவள் மிகுந்த புத்திசாலியாகவும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவளாகவும் இருக்கிறாள்.(22) ஓ சிறப்புமிக்கவரே, அந்த எனது தோழிக்காக இந்தப் பசுவை அதன் கன்றுடன் பெற விரும்புகிறேன். எனவே, ஓ தேவர்களில் சிறந்தவரே, எனது தோழி அதன் பாலைக் குடித்து, இந்த உலகத்தில் நோய்களும், பலவீனமும் அடையாமல் இருக்க, நீர் அதை இங்கே கொண்டு வாரும்.(23,24) ஓ சிறப்புமிக்கவரே, பழியற்றவரே, எனது விருப்பத்தை நீர் நிறைவேற்ற வேண்டும். அதைத் தவிர நான் வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்றாள்.(25)
தனது மனைவியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தியோ, அவளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்க விருப்பங்கொண்டு, தனது சகோதரன் பிருது மற்றும் ஏனையோர் துணையுடன் அதைத் திருடினான்.(26) அந்தப் பசுவைக் கொண்ட முனிவரின் பெரும் ஆன்மத்தகுதிகளை மறந்த தியோ, நிச்சயமாகத் தனது தாமரைக் கண் மனைவியின் உத்தரவின் பேரிலேயே அதைச் செய்தான். அந்நேரத்தில் அவன், பசுவைத் திருடிய பாவத்திற்காக நாம் விழுந்துவிடுவோம் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.(27) மாலையில் கனிகளைச் சேகரித்துக் கொண்டு, அந்த வருணனின் மகன் தனது ஆசிரமத்திற்கு வந்த போது, பசுவையும், கன்றையும் காணவில்லை என்பதைக் கண்டார். அவர் கானகத்திற்குள் தேடத் துவங்கினார்,(28) உயர்ந்த புத்திக்கூர்மை உடைய அந்த முனிவர், தனது பசுக்களைக் காணவில்லை என்றவுடன், தனது ஆன்மிகப் பார்வையில் வசுக்கள் அவற்றைத் திருடிவிட்டனர் என்பதைக் கண்டார். அவருக்கு உடனே கோபம் மூண்டது. வசுக்களை, " இனிமையான பால் தரும், அழகான வால் கொண்ட எனது பசுவை வசுக்கள் திருடியதால், அவர்கள் உண்மையாகப் பூமியில் பிறக்கட்டும்" என்று சபித்தார்.(29-31)
ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்தச் சிறப்புவாய்ந்த முனிவர் அபர்வர் {வசிஷ்டர்} கோபத்தால் வசுக்களை அப்படிச் சபித்தார்.(32) அப்படிச் சபித்துவிட்டு, மீண்டும் தனது தவத்தில் முழு இதயத்துடன் மூழ்கினார். ஓ மன்னா! அந்தப் பெரும் சக்திவாய்ந்த, ஆன்மச் செல்வம் கொண்ட பிரம்மரிஷி கோபங்கொண்டு தங்களைச் சபித்ததை வசுக்கள் அறிந்தனர். அவர்கள் வேகமாக அந்த ஆசிரமத்திற்கு வந்து அந்த முனிவரைக் குளிர்விக்க முயன்றனர்.(33-35) ஆனால், ஓ மனிதர்களில் புலியே, அறத்தின் எல்லா விதிகளையும் அறிந்த அந்த முனிவர் ஆபர்வரின் அருளைப் பெறுவதில் அவர்கள் தோற்றனர்.(36)
அந்த அறம்சார்ந்த ஆபர்வர், "தவனுடன் {தரனுடன்} {வசுக்களில் ஒருவனின் பெயர்} கூடிய வசுக்களே, நீங்கள் என்னால் சபிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்த ஒரு வருடத்திற்குள் உங்கள் சாபத்திலிருந்து விடுபடுவீர்கள்.(37) ஆனால் யாருடைய செயலால் நீங்கள் சபிக்கப்பட்டீர்களோ, அவன் {தியோ} அவனது பாவச் செயலிற்காக, நீண்ட காலத்திற்கு உலகத்தில் வசிப்பான்.(38) நான் கோபத்துடன் உதிர்த்த வார்த்தைகளைப் பயனற்றதாக்க மாட்டேன். தியோ பூமியில் வசித்தாலும், அவன் பிள்ளைகளைப் பெற மாட்டான்.(39) இருப்பினும், அவன் அறம் சார்ந்தவனாகவும், சாத்திர அறிவுடனும் இருப்பான். அவன் தனது தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பான். பெண் துணையின் இன்பத்திலிருந்து அவன் விலகியே இருப்பான்" என்று சொன்னார்.(40)
வசுக்களிடம் இப்படிச் சொல்லிவிட்டு, அந்தப் பெருமுனிவர் சென்று விட்டார். பிறகு வசுக்கள் அனைவரும் கூடி என்னிடம் வந்தனர்.(41) ஓ மன்னா! அவர்கள், தாங்கள் பிறந்தவுடன், தங்களை நீரில் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்று வரம் தருமாறு என்னிடம் இரந்து கேட்டனர்.(42) ஓ மன்னர்களில் சிறந்தவரே, அவர்களை உலக வாழ்விலிருந்து விடுவிப்பதற்காக, நான் அவர்கள் விருப்பப்படியே நடந்தேன்.(43) ஓ மன்னர்களில் சிறந்தவரே, அந்த முனிவரின் {வசிஷ்டரின்} சாபப்படி, இந்தக் குழந்தையே (தியோ) பூமியில் சில காலத்திற்கு வாழ்வான்" என்றாள்.(44)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சொல்லிவிட்டு, அந்த தேவி {கங்காதேவி} அங்கேயே அப்போதே மறைந்து போனாள். அவள் தன்னுடன் தனது பிள்ளையையும் கூட்டிக் கொண்டு தான் விரும்பிய இடத்திற்குச் சென்றுவிட்டாள்.(45) அந்தச் சந்தனுவின் மகன் காங்கேயன் என்றும் தேவவிரதன் என்றும் இருவகையில் பெயர் சூட்டப்பட்டான். அவன் எல்லாச் சாதனைகளிலும் அவனது தந்தையை மிஞ்சினான்.(46) சந்தனு, தனது மனைவி மறைந்தவுடன், தன் தலைநகருக்குத் துயரம் நிறைந்த இதயத்துடன் சென்றான். இனி பாரதக் குலத்தைச் சார்ந்த அந்தச் சிறந்த மன்னன் சந்தனுவின் அறங்கள் பலவற்றையும், பெரும் நற்பேறுகளையும் விவரிக்கிறேன். உண்மையில், இந்த அற்புதமான வரலாறே மஹாபாரதம் என்று அழைக்கப்படுகிறது.(47,48)

[1] ஆபம் என்பது நீர்நிலைகளைக் குறிக்கும். அவற்றுக்குத் தலைவன் வருணன் என்று அழைக்கப்படுகிறான். அதன் காரணமாவே அவனுடைய மகனாகிய வசிஷ்டருக்கு ஆபவர் என்ற பெயர் ஏற்பட்டது.

ஆங்கிலத்தில் | In English |