கருடனும்!அமுதமும்!! - ₹.56.00 |
மஹாபாரதத்தின் ஆதிபர்வ உபபர்வமான ஆஸ்தீக பர்வத்தில் வரும் இந்தக் கதையைக் கேட்பவனும், படிப்பவனும், உரைப்பவனும் நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள். கருடனின் அருஞ்செயல்களை ஒப்பிப்பவன் பெறற்கரிய நற்பேறுகளைப் பெறுவான் என்று இந்தக் கதையின் முடிவில் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.
கருடன் என்றால் பெருஞ்சுமையைச் சுமப்பவன் என்பது பொருளாகும். கசியபர் மற்றும் வினதைக்குப் பிறந்த இரண்டாம் மகனுக்கு வாலகில்ய முனிவர்கள் சூட்டிய பெயரே கருடன் என்பதாகும்.
உபநிஷத்துகளில் கருடோபநிஷத்தும், புராணங்களில் கருட புராணமும், படையணிவகுப்புகளான வியூகங்களில் கருட வியூகமும் இவனைக் காரணமாகக் கொண்டே உண்டானவையாகும். வேதங்களில் இவனே சியேனன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். பெருமாள் பக்தர்களுக்கிடையில் இவன் பெரிய திருவடியாக வணங்கப்படுகிறான். "பறவைகளில் வினதையின் மகனான கருடன் நானே" என்று பகவத் கீதையின் 10:30 ஸ்லோகத்தில் கிருஷ்ணனே சொல்கிறான். கிருஷ்ணனின் கொடியில் இருப்பவனும் கருடனே. மஹாபாரதம் முழுவதும், பலத்தையும், வேகத்தையும் குறிக்கும் இடங்களிலெல்லாம், பாம்புகளை வேட்டையாடும் கருடனே உவமையாகச் சொல்லப்படுகிறான்.
கஜேந்திர மோக்ஷத்தில் ஸ்ரீஹரி இந்தக் கருட வாகனத்தில் வந்தே முதலையிடம் அகப்பட்ட யானைக்கு அருள் வழங்குகிறான். கருடன் பறக்கும் போது, அவனது சிறகுகள் வேதங்களை ஓதுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. சூரியனின் சாரதியான அருணனன் கருடனின் தமையனே. இராமாயணத்தில் வரும் சம்பாதியும், ஜடாயுவும், கருடனின் மைந்தர்களே. இந்தக் கருடன் கதையின் மூலமாகவே, தேவாசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டதும், அமுதம் உண்டானதும், தேவர்கள் அமுதத்தை அடைந்ததும் சொல்லப்படுகிறது. இன்றும் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் பண்பாடு மற்றும் அடையாளச் சின்னமாகக் கருடனே இருக்கிறான்.
இவ்வளவு பெருமைக்கும் உரிய கருடனின் கதையைத் தான் நாம் இப்போது அறியப் போகிறோம். கருடனின் தோற்றத்தையும், அமுதம் உண்டான விதத்தையும் மஹாபாரதத்தில் தரிசிப்போம் வாருங்கள்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
https://www.amazon.in/dp/B07345S4C5
Product details
- Format: Kindle Edition
- File Size: 1929 KB
- Print Length: 65 pages
- Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
- Language: Tamil
- ASIN: B07345S4C5
- Word Wise: Not Enabled
விலை: ₹ 56
***************************
மஹாபாரதத்தில் வரும் உபகதைகளில் இது இரண்டாம் புத்தகமாகும்.
வேறு சில கிண்டில் புத்தகங்களையும் https://www.amazon.com/author/arulselvaperarasan என்ற சுட்டியில் காணலாம்.
வேறு சில கிண்டில் புத்தகங்களையும் https://www.amazon.com/author/arulselvaperarasan என்ற சுட்டியில் காணலாம்.