நாகர்களும்! ஆஸ்தீகரும்!! - ₹.75.00 |
காண்டவ வனத்தை அர்ஜுனன் எரித்ததில் இருந்தே தொடங்குகிறது, பாம்புகளுக்கும், பாண்டவர்களுக்குமான தொடர்பு. அக்னியின் வேண்டுகோளுக்கிணங்க அர்ஜுனன் காண்டவ வனத்தை எரிக்கிறான். அவ்வாறு எரித்ததில் தக்ஷகனின் மனைவி இறக்கிறாள். அவனது மகன் அஸ்வசேனன் தப்பிக்கிறான். எனினும், அவனும் கர்ணனின் அஸ்திரத்தில் புகுந்து அர்ஜுனனைத் தாக்கச் செல்கையில், அர்ஜுனனால் கொல்லப்படுகிறான்.
இறந்து கிடந்த பாம்பு ஒன்றை முனிவர் சமீகரின் மேல் இட்டதால் அவரது மகனான சிருங்கியின் மூலம் அர்ஜுனனின் பேரனான பரீக்ஷித்துக்குச் சாபம் கிடைக்கிறது. சிருங்கியின் சாபத்தைக் காரணமாகக் கொண்டு பரீக்ஷித்தைத் தக்ஷன் கொல்கிறான். தக்ஷகனால் ஏமாற்றப்பட்ட உதங்கர் என்றொரு முனிவர் ஜனமேஜயனுக்குப் பரிக்ஷித் கொல்லப்பட்ட விதத்தைச் சொல்லி மீண்டும் பழைய பகையைத் தொடரச் செய்கிறார். பரீக்ஷித் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க நினைத்த ஜனமேஜயன், பாம்பினத்தையே அழித்தொழிப்பதற்காகப் பாம்பு வேள்வியைச் செய்கிறான். இப்படி ஒட்டுமொத்தமாகப் பாம்புகள் அழிய வேண்டிய காரணம் என்ன என்பதற்கு, பாம்புகளின் தாய் கத்ரு, பாம்புகளுக்கு இட்ட சாபமே காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்தக் காரணங்களைவிட, இந்த நாக வேள்வியின் இடைவேளைகளில்தான் உலகத்திற்கு மஹாபாரதம் சொல்லப்பட வேண்டும் என்ற விதியே பெரிய காரணமாக இருந்திருக்க வேண்டும்.
இவ்வாறு தாயிடம் சாபம் பெற்ற பாம்புகள் ஜரத்காருவின் மகன் ஆஸ்தீகரால் எவ்வாறு மீட்கப்படுகின்றன என்பதையே மஹாபாரத ஆதிபர்வத்தின் உபபர்வமான ஆஸ்தீகபர்வத்தில் வரும் இந்தக் கதை எடுத்துரைக்கிறது. பாம்புகளுக்குக் கிடைத்த சாபத்தையும், அழிவிலிருந்து அவை எவ்வாறு மீட்கப்பட்டன என்பதையும் மஹாபாரதத்தில் உள்ளவாறே அறிவோம் வாருங்கள்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
https://www.amazon.in/dp/B073CYVHZK
Product details
- Format: Kindle Edition
- File Size: 2398 KB
- Print Length: 126 pages
- Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
- Language: Tamil
- ASIN: B073CYVHZK
- Word Wise: Not Enabled
விலை: ₹ 75
***************************
மஹாபாரதத்தில் வரும் உபகதைகளில் இது மூன்றாம் புத்தகமாகும்.
வேறு சில கிண்டில் புத்தகங்களையும் https://www.amazon.com/author/arulselvaperarasan என்ற சுட்டியில் காணலாம்.