The ordinance of Soma! | Anusasana-Parva-Section-36 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 36)
பதிவின் சுருக்கம் : இந்திரனிடம் சம்பாசுரன் சொன்ன பிராமண மகிமை; சம்பரனின் தந்தை மற்றும் சோமனுக்கு இடையில் இது குறித்து நடந்த உரையாடல் ஆகியவற்றைக் யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகச் சக்ரனுக்கும், சம்பரனுக்கும்[1] இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் சக்ரன் {இந்திரன்}, தலையில் சடாமுடி தரித்து உடல் முழுவதும் சாம்பலை {திருநீற்றைப்} பூசிக் கொண்டும் ஒரு தவசியின் வேடத்தை ஏற்றுக் கொண்டு, கோரமான தேரொன்றைச் செலுத்திக் கொண்டு அசுரன் சம்பரனின் முன்னிலையை அடைந்தான்.(2)
[1] சம்பரன் என்ற பெயரில் இரு அசுரர்கள் இருந்திருக்கின்றனர். முதலாமவன் கசியபருக்கும், தக்ஷனின் மகளான தனுவுக்கும் பிறந்தவனாவான். அவன் தஸ்யுக்களின் தலைவனாக ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறான். இவன் சிவனால் கொல்லப்பட்டவன். மற்றொரு சம்பரன், ஹிரண்யாக்ஷனின் மகனாகச் சொல்லப்படுகிறான். அவன் பிரத்யும்னனால் கொல்லப்பட்டவன். இங்கே சொல்லப்படுவது முதலாமவனாக இருக்க வேண்டும்.
கசியபரும், தக்ஷனின் மகள்களான அவரது 13 மனைவியரும் |
சக்ரன் {அசுரன் சம்பரனிடம்}, "ஓ! சம்பரா, எந்த ஒழுக்கத்தின் மூலம் நீ உன் குலத்தின் தலைவனானாய்? எந்தக் காரணத்தினால் மக்கள் உன்னை அனைவருக்கும் மேம்பட்டவனாகக் கருதுகிறார்கள்? இதை நீ எனக்கு உண்மையாகவும், விரிவாகவும் சொல்வாயாக" என்று கேட்டான்.(3)
சம்பரன் {சக்ரனிடம்}, "பிராமணர்களிடம் நான் ஒரு போதும் தீய உணர்வுகளை வளர்ப்பதில்லை. அவர்கள் சொல்லும் எந்தப் போதனையையும் கேள்வி கேட்காத மதிப்புடன் அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். பிராமணர்கள் சாத்திரங்களை விளக்க முற்படும்போது, பெரும் மகிழ்ச்சியோடு நான் அதைக் கேட்கிறேன்.(4) அவர்களது விளக்கங்களைக் கேட்ட பிறகு நான் ஒருபோதும் அவர்களை அலட்சியம் செய்ததில்லை. அல்லது பிராமணர்களுக்கு எதிராக எவ்வகையான குற்றமும் இழைத்ததில்லை. புத்தியுள்ள பிராமணர்களை நான் எப்போதும் வழிபடுகிறேன். அவர்களிடம் இருந்தே செய்திகளை எப்போதும் நான் நாடுகிறேன். நான் எப்போதும் அவர்களது பாதங்களை வழிபடுகிறேன்.(5) அவர்கள் நம்பிக்கையுடன் என்னை அணுகி, எப்போதும் என்னிடம் அன்புடன் பேசி, என் நலத்தை விசாரிக்கின்றனர். அவர்கள் கவனமற்றிருந்தாலும் நான் எப்போதும் விழிப்புடன் இருக்கிறேன். அவர்கள் உறங்கினாலும், நான் எப்போதும் விழிப்புடன் இருக்கிறேன்.(6)
சாத்திரங்களால் சுட்டிக்காட்டப்படும் பாதையிலும், பிராமணர்களிடமும் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், வன்மம் மற்றும் தீய ஆசைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டவனுமான நான், தேனீக்கள் தங்கள் கூட்டின் அடைகளை {தேனடைகளைத்} தேனால் நிறைப்பதைப் போல, என் ஆசான்களாக இருப்பவர்களும், என்னை ஆள்பவர்களுமான பிராமணர்கள், ஞானமெனும் அமுதத்தால் எப்போதும் என்னை நிறைக்கிறார்கள்.(7) உற்சாகமிக்க இதயங்களுடன் அவர்கள் சொல்லும் எதையும், நினைவு மற்றும் புத்தியின் துணையுடன் நான் எப்போதும் ஏற்றுக் கொள்கிறேன். அவர்களிடம் நான் கொண்டுள்ள நம்பிக்கையில் எப்போதும் கவனமாக இருக்கிறேன், மேலும், அவர்களை விட எவ்வாறு தாழ்ந்திருக்கிறேன் என்பதையும் எப்போதும் நினைக்கிறேன்.(8) அவர்களது நாவின் நுனியில் வசிக்கும் அமுதத்தை எப்போதும் பருகுவதன் காரணத்தால், நட்சத்திரங்கள் அனைத்தையும் விஞ்சியிருக்கும் நிலவைப் போல நான் என் குலத்தில் உள்ள பிறர் அனைவரையும் விட மேலான நிலையை அடைந்திருக்கிறேன்.(9) பிராமணர்களின் உதடுகளில் இருந்து விழும் சாத்திர விளக்கங்களையும், உலகின் ஞானிகள் ஒவ்வொருவரின செயல்களையும் கேட்பதே உலகத்தின் அமுதமாகவும், குறிப்பிடத்தகுந்த சிறப்பாகவும் கருதப்பட வேண்டும்.(10) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலைக் கண்டும், பிராமணர்கள் சொன்ன போதனைகளின் பலத்தைப் புரிந்து கொண்டும் என் தந்தை {கசியப முனிவர்} மகிழ்ச்சியாலும், ஆச்சரியத்தாலும் நிறைந்தார்.(11) உயர் ஆன்ம பிராமணர்களின் பலத்தைக் கண்ட என் தந்தை, சந்திரமாஸிடம் {சந்திரனிடம்}, "பிராமணர்கள் எவ்வாறு வெற்றியை அடைகின்றனர்?" என்று கேட்டார்.(12)
சோமன்{சந்திரன் முனிவர் கசியபரிடம்}, "பிராமணர்கள் தவங்களின் மூலம் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றனர். வாக்கே அவர்களது பலமாக அமைகிறது. அரச வகையைச் சார்ந்தோரின் ஆற்றல் அவர்களின் கரங்களில் {தோள்களில்} இருக்கிறது. எனினும் பிராமணர்கள், வாக்கையே தங்கள் பலமாகக் கொண்டுள்ளனர்.(13) ஒரு பிராமணன், வசதியேதுமில்லாத தன் ஆசானின் இல்லத்தில் வசித்து, வேதங்களையோ, குறைந்தது பிரணவத்தையோ கற்க வேண்டும். அவன் கோபத்தில் இருந்து விடுபட்டு, உலகம் சார்ந்த பற்றுகளைத் துறந்து, அனைத்துப் பொருட்கள் மற்றும் அனைத்து உயிரினங்களிடமும் சமமான பார்வையைப் பெற்று ஒரு யதியாக வேண்டும்.(14) ஒருவன் தன் தந்தையின் வசிப்பிடத்திலேயே வேதங்கள் அனைத்திலும் திறம்பெற்று, மரியாதைக்குறிய நிலையை அடையுமளவுக்குப் பெரும் ஞானத்தை ஈட்டினாலும், பயணிக்காதவன், அல்லது வீட்டில் வளர்ந்தவன் {ஸாமான்யன்} என்றே மக்கள் அவனை நிந்திப்பார்கள்.(15) பூமியானது, போரிட விரும்பாத மன்னன், இல்லத்தைவிட்டுச் சென்று ஞானம் அடைய விரும்பாத பிராமணன் ஆகிய இருவரையும் எலிகளை விழுங்கும் ஒரு பாம்பைப் போல விழுங்குகிறது {அவர்கள் புகழின்றிப் போகிறார்கள்}.(16) செருக்கானது சிறுமதி கொண்டோரின் செழிப்பை அழிக்கிறது. {மணமாகாத} ஒரு கன்னிகை கருவுறுவதால் களங்கமடைகிறாள் {கெட்டுப் போகிறாள்}. ஒரு பிராமணன் வீட்டிலேயே இருப்பதால் நிந்திக்கத்தகுந்தவனாகிறான் {கெட்டுப் போகிறான்}" {என்றான் சோமன்}.(17)

பீஷ்மர் தொடர்ந்தார், "அந்தத் தானவ இளவரசனின் {சம்பரனின்} வாயில் இருந்து உதிர்ந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட சக்ரன், பிராமணர்களை வழிபடத் தொடங்கி, அதன் விளைவாக அவன் தேவர்களின் தலைமையிடத்தை அடைவதில் வென்றான்" {என்றார் பீஷ்மர்}.(19)
அநுசாஸனபர்வம் பகுதி – 36ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |